Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புங்குடுதீவினில் பாடசாலை மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்த காமுகர்கள் நீதியின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வழங்க வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சார்பில் இன்று கொட்டும் மழையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. http://www.pathivu.com/news/40083/57//d,article_full.aspx

    • 0 replies
    • 503 views
  2. மக்கள் மீளக்குடியமர அனுமதி மறுக்கப்பட்டுள்ள வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தினரால் நடத்தப்படும் தல்செவன விடுதியில் சமூகவிரோத செயல்கள் தாராளமாக நடப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வகையினில் சமூகவிரோத செயல்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் இராணுவமும் செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் நடந்த, மனிதஉரிமைகள் பாதுகாப்பாளர்களிற்கான பாதுகாப்பு வழிகாட்டி தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட சிவில் சமூகத்தினரால் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.பதிவு இணைய செய்தி வலி.வடக்கிலுள்ள காங்கேசன்துறையில் தல்செவன என்ற இந்த விடுதி இராணுவத்தினரால் நடத்தப்படுகிறது. குறைந்தவிலையில் இருந்து அதிக விலை வரை …

    • 0 replies
    • 789 views
  3. கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவதில் இருந்து கடந்த தினம் இறுதி நேரத்தில் தப்பியுள்ளார். அவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு விசாரணக்காக சென்றிருந்தால் கைது செய்யப்பட்டிருப்பார். இதன்காரணமாகவே அவர் அதற்கு சமுகமளித்திருக்கவில்லை. மாறாக அவர் நீதின்றத்தில் அடிப்படை மனிதஉரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்து, கைது செய்யப்படுவதில் இருந்து இடைக்கால தடை உத்தரவை பெற்றுள்ளார். இதன் பின்னணியில் ரணில் விக்ரமசிங்கவும், சட்டமா அதிபர் திணைக்களமும் செயற்பட்டுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்படவிருந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவே அதனை தடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/40073/5…

    • 0 replies
    • 356 views
  4. தமிழ்த்தேசிய அரசியல் மிக முக்கிய காலகட்டத்தினூடாக நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதற்குச் சான்றாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் தமிழரசுக்கட்சியின் சார்பில் கலந்துகொள்ளும் திரு மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் அவர்களுக்குமிடையில் நாளை, வெள்ளிக்கிழமை (MAY 16 2015) இலங்கை நேரம் மாலை 4.00 மணிக்கு விவாதம் இடம் பெற இருக்கின்றது. தமிழ்த்தேசிய அரசில் வரலாற்றில் தமிழருக்கான இரு தேசியக் கட்சிகள் என்ற சமநிலையில் இடம்பெற இருக்கின்ற முதல் விவாதம் இதுவாகும். அரசியல் முக்கியத்துவம் பெறவிருக்கும் இந்த விவாதத்தினைக் கீழ்க்காணும் இணைய இணைப்பு வழியாக நேரஞ்சலாகக் காணலாம். https://livestream.com/accounts/1729214/events/3998122 Sri Lanka…

  5. கடந்த அரசாங்கத்தில் இருந்த முக்கியஸ்தர்கள் சேர் சேர் என்று கூறியே மஹிந்த ராஜபக்ஷவை கவிழ்த்துவிட்டனர். ஆனால் நான் பல இடங்களில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குரல் கொடுத்துள்ளேன் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், கடந்த அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் புகழ்பாடியே பலர் செயற்பட்டனர். அவரும் அந்த புகழ்ச்சிக்கு மயங்கி இருந்தார். சூரியன் உதித்ததும் உங்களால்தான் சேர், சூரியன் மறைவதும் உங்களால்தான் சேர் , அனைத்தும் உங்களினால்தான் நடக்குது சேர் …

    • 0 replies
    • 465 views
  6. முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்சவின் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2015/05/15/%E0%AE%B7%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88

    • 0 replies
    • 176 views
  7. யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களுக்கே தற்போது அவர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (14) கொழும்பில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். விடுதலைப் புலிகளில் கொல்லப்பட்ட உறுப்பினர்களை வடக்கில் மாகாண அரசியல் வாதிகள் குழுவொன்று நினைவுகூரப்படுவதாக ஊடகவியலாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பியிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். சிறு பிரிவினைவாத குழுவைத் தவிர தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் இன்று ஜனநாயகத்தை மதிப்பதுடன் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். புலம்பெயர் …

  8. வடமாகாணத்தில் உள்ள அதிக அளவிலான் பெண்களின் தலைமையிலான குடும்பங்களின் வறுமை இன்னும் தீர்க்கப்படாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் செயற்படுகின்ற தன்னார்வ நிறுவனங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. வடக்கில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பெண்களின் தலைமையில் இயங்குவதாக முதன்முறையாக அண்மையில் அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் நிறைவடைகின்றன. ஆனாலும் அவர்களின் பிரச்சினை அவ்வாறே இருக்கிறது. இந்த நிலையில் புதிய அரசாங்கமேனும் இவ்வாறான குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. http://www.pathivu.com/news/40040/57//d,article_full.aspx

  9. நல்லூரில் இன்று மீன் மழை! [Thursday 2015-05-14 19:00] நல்லூர் பகுதியில் இன்று காலை பெய்த மழையுடன் மீன்கள் பல விழுந்துள்ளன. கடந்த சில நாள்களாக குடாநாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இன்று காலை வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதி - பருத்தித்துறை வீதியில் பெய்த மழையுடன் பல மீன்களும் விழுந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. மழையுடன் விழுந்த மீன்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வாளிகளில் எடுத்துச் சென்றனர். கடந்த பருவமழை காலத்தின் போது வீரமாகாளி அம்மன் கோயில் பகுதியில் பெய்த மழையுடன் மீன்கள் விழுந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=132079&category=TamilNews&language=tamil

    • 5 replies
    • 2.5k views
  10. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட மே 18ஐ நாட்டைப் பிரிவினைவாதத்திலிருந்து காத்த தினமாக அனுசரிப்பது என புதிய அரசாங்கம் அறிவித்திருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. கடந்த அரசாங்கம், விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த மே 18ம் தேதியை, யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடி வந்தது. இந்நிலையில் புதிய அரசின் இந்த அறிவிப்பானது சிறப்பானது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிடுகின்றார். இதேவேளை, போர் முடிவுக்கு வந்த மே 18ம் தேதியை, யுத்த வெற்றி தினமாக கொண்டாடாமல், நாட்டைப் பிரிவினைவாதத்திலிருந்து காத்த தினமாக அனுசரிப்பது என்று அறிவித்திருப்பதைப் பற்றி தமிழர்கள் தரப்பில் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இந்நிலையிலேயே, தம…

  11. போரில் உயிரிழந்த படைவீரர்களை நினைவு கூர்ந்து விளக்கு ஏற்றுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார். எதிர்வரும் 18ம் திகதி நாட்டின் அனைத்து மக்களும் போரில் உயிரிழந்த படைவீரர்களை நினைவு கூர்ந்து விளக்கு ஏற்ற வேண்டுமென அவர் கோரியுள்ளார். தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை ஏற்றி படைவீரர்களை நினைவுபடுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனக்கும் வழக்குத் தொடர முயற்சிக்கப்படுகின்றது. டுபாயில் அமைந்துள்ள மெரியோட் ஹோட்டல் எனக்கு சொந்தமானதல்ல. அதைப் பிடித்துக் கொண்டு எனக்கு எதிராக வழக்குத் தொடர முயற்சிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். பெலவத்தையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://www.tamil.srilankamirror.com/news/item/…

    • 0 replies
    • 270 views
  12. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தில் உலகத்தமிழராய்ச்சி நினைவுதூபி முன்பாகா கொட்டும் மழையின் மத்தியில் நினைவு சுடர் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. http://www.pathivu.com/news/40077/57//d,article_full.aspx

    • 0 replies
    • 486 views
  13. மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு சீனா அரசாங்கம் நிதியுதவிகளை வழங்க ஆரம்பித்துள்ளதாக கொழும்பின் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன முன்னைய அரசாங்கத்துடன் பல மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சீனா அரசாங்கம், மகிந்தராஜபக்சவை மீண்டும் கொண்டுவருவது குறித்து தீவிர ஆர்வம் காட்டிவருகின்றது.இதன் ஒரு பகுதியாக இரு சேற்றை வாரியிறைக்கும் பத்திரிகைகளுக்கு அது நிதிவழங்குகின்றது, இவற்றின் ஆலோசகராக விமல்வீரவன்ச விளங்குகின்றார். விஸ்தரா, தேவ்சந்தா என்ற இரு டபிளொய்ட் பத்திரிகைகளுக்கே சீனா நிதி வழங்குகின்றது, இதில் விஸ்தரா அரசாங்கத்தின் மீது சேற்றை வாரியிறைக்கும் நோக்கத்துடன் செயற்படுகின்றது. மற்றையது ஜோ…

    • 0 replies
    • 303 views
  14. முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தாக்கல் செய்த அடிப்­படை உரிமை மீறல் வழக்கு மீதான நீதி­மன்றத் தீர்ப்­பினால் எங்­கு­செல்­வ­தென தெரி­யா­துள்ளேன். இந்த வழக்கு தொடர்பில் எம்­மிடம் பதில் இருந்தும் அதனை கூறு­வ­தற்கு நீதி­மன்றம் சந்­தர்ப்பம் வழங்­க­வில்லை என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆதங்கம் வெளி­யிட்­டுள்ளார். உயர் நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பின் பிர­காரம் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கு எதி­ராக அர­சியல் பழ­வாங்கல் இடம்­பெற்­றுள்­ளதா அல்­லது நீதித்­துறை பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதா என்ற கேள்­விக்­கான பதிலை அறிந்து கொள்­வ­தற்கு ஆர்­வ­மாக உள்­ள­தா­கவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பிட்டார். இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் இடம்­பெற்ற வெகு­சன ஊட­கங்கள் சீ…

    • 1 reply
    • 1.1k views
  15. சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக (Chief of Staff) மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. தற்போது, முல்லைத்தீவு படைத் தலைமையகத் தளபதியாகப் பணியாற்றும் அவர், சிறிலங்கா இராணுவத்தின் 46வது தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கடந்த மே 07ம் நாள் ஓய்வு பெற்ற நிலையில், இவர் இந்தப் பதவிக்கு அதே நாளில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளார். இது சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு அடுத்த நிலையில் உள்ள பதவியாகும். மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் விடுதலைப் புலிகளுக்கு எதிரானபோரின் போது, 57வது டிவிசனுக்குத் தலைமை தாங்கியவர். இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்…

  16. "எதிர்கால சந்ததியினருக்கு சமாதானமும் சுபீட்சமும் கூடிய இலங்கையை உருவாக்கும் நோக்குடன் போர் காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி சர்வதேச சமூகம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும்.'' - இவ்வாறு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். வரலாறு முக்கியமானதென்றபோதிலும் எதிர்காலம் மிகவும் அத்தியாவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலமாக வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தமிழர் வாழ்வில் மிகவும் துயர்நிறைந்த 2009ஆம் ஆண்டு மே மாத காலப் பகுதியைப் பற்றி தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட சொல்ஹெய்ம், "மிகவும் கொடூரமான - பெருந்துயரத்த…

    • 0 replies
    • 251 views
  17. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி தானே கடிதமெழுதி அதனை பத்திரிகைகளிற்கு அனுப்பி சாதனை புரிந்துவருபவர் என்பது தெரிந்ததே.அவரது வழியினில் முன்னதாக ஆனந்த சங்கரி இதே பாணி கடிதங்களை எழுதி உரிய இடங்களிற்கு அனுப்பி வைத்தாரோ ஊடகங்களிற்கு அனுப்பி வைப்பதில் முன்னின்றார். தற்போது இப்பாணியினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் புறப்பட்டுள்ளார்.முன்னதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த இலங்கை காவல்துறையிடம் அனுமதி கோரி காத்திருக்;கும் அவர் தற்போது புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அவசர கடிதம் ஒன்றினை அவர் அனுப்பி வைத்துள்ளார். யாழ்ப்பாணம் புங்குடுதீவு 4ம் வட்டாரத்தில் நேற்று புதன்கிழமை பாழடைந்த வீடொன்றில் புங்குடுதீவு மகா வித்தி…

    • 0 replies
    • 692 views
  18. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் நினைவு நாள் இன்று பருத்தித்துறை முனை பகுதியில் வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.அவருடன் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் சஜீவன்,சதீஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.அமைதியாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வினை அவதானித்த வீதியால் பயணித்த பொதுமக்கள் பலரும் தாமும் இணைந்து அஞ்சலி செலுத்தினர். இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் யாழ்.மாவட்டத்திற்கான நிகழ்வு நாளை 15ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்.முற்றவெளியினில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தலைவரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.அன்று காலை தமிழாராய்ச்சி மாநாட்டினில் உயிரிழந்தவர்கள் நினைவு தூப…

    • 0 replies
    • 463 views
  19. இனஅழிப்பு நினைவேந்தலை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே-18ஆம் திகதி திங்கட்கிழமை மாபெரும் ஒருங்கிணைப்பாய் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் கொத்துக் கொத்தாக எம் உறவுகள் கொன்று குவிக்கப்பட்ட இறுதிப்போரின் ஆறாத ரணங்களைச் சுமந்ததாக மீண்டும் எம் கண் முன்னே விரிந்துள்ளது இந்த வலி சுமந்த வாரம். இழப்புக்களையும் ஈவுகளையுமே நிலையாகப் பெற்ற எம் இனத்தை ஒரே வட்டத்துக்குள் அடக்கி, தொடர்கிறது அடக்குமுறை நெருப்பு. எம் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநியாயம் இன்றளவும் நியாயப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் தான் ஆண்டுதோ…

    • 0 replies
    • 389 views
  20. கிழக்கின் மட்டக்களபபினிலும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்கள் முளைவிடத்தொடங்கியுள்ளது.அவ்வகையினில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அயல் கிராமங்களில் உள்ள சில முஸ்லிம்கள் சட்டவிரோதமாக கைப்பற்றி வருவதை கண்டித்து அப்பகுதி மக்கள் கவனயீப்புப் போராட்டமொன்றை கடந்த இரண்டு நாட்களாக நடத்தியுள்ளனர். நேற்று புதன்கிழமை இரண்டாவது தடவையாக கோறளைப்பற்று பிரதேச செயலக அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மீறாவோடை மக்கள் கவணயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் 62 தமிழ் குடும்பங்களுக்கு குடியிருப்புக் காணிக்குறிய காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட போதிலும் அதில் தங்களை குடியேறி இர…

    • 0 replies
    • 335 views
  21. எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு பின்னர் அமைக்­கப்­ப­டு­கின்ற பாரா­ளு­மன்­றத்­தி­லேயே வடக்கு, கிழக்கு பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். மேலும் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு பின்னர் நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். அதற்­கான வேலைத்­திட்­டங்­களை அடுத்த பாரா­ளு­மன்­றத்தில் முன்­னெ­டுப்போம் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார். வடக்கு, கிழக்கு பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணும் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமை­ய­வுள்­ளன என்றும் அதற்கு எவ்­வா­றான அணு­கு­மு­றையை அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் என்றும் வின­வி­ய­தற்கு பதி­…

    • 10 replies
    • 1.3k views
  22. தலைவர் பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப்போராட்டம் தற்போது சம்பந்தன் ஐயாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். திருகோணமலையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்….. லர் தற்போது ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக கூறுகின்றனர் ஆனால் நான் அதை ஒருபோதும் எற்றுக்கொண்டதில்லை என்னை பொறுத்தவரை அகிம்சை போராட்டத்தின் வெற்றியே ஆயுதப்போராட்டமாக மாறியது தற்போது ஆயுதப்போராட்டத்தின் வெற்றிதான் இராஜதந்திரப் போராட்டமாக மற்றமடைந்துள்ளது. அதாவது பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டுவந்த ஆயுதப்போராட்டம் தற்போது சம்பந்தன் ஐயாவிடம் ஒப்படைக்கப…

  23. மக்களுக்காக இராணுவத்தை வெளியேற்ற முடியாது என்கிறார்; அமைச்சின் செயலர் இராணுவத்தினரை வெளியேற்ற முடியாது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை தெரிவித்துள்ளார். தற்போது விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பெரும்பாலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களே உள்ளனர் இந் நிலையில் அப் பகுதிகளில் இராணுவத்தினரது முகாம்கள் அதிகளவில் இருப்பதால் அக் குடும்பங்கள் அச்சமின்றி குடியமர முடியுமா? என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இராணுவத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது அவர்களோடு தான் இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் ஏனைய பிரதேசங்களிலும் மக்கள் இராணுவத்தினருடன் தானே இருக்கிறார்கள் இதற்கு நாம் எதையும் செய்ய …

    • 16 replies
    • 1.5k views
  24. யுத்தத்தில் உயிரிழந்த மக்களே வடக்கில் நினைவு கூரப்படுகின்றனர்! - ராஜித சேனாரத்ன [Thursday 2015-05-14 20:00] யுத்தத்தில் உயிரிழந்த மக்களே வடக்கில் நினைவு கூரப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனினும் ஊடகங்களில் செய்தி வெளியிடும் போது அவை திரிபுபடுத்தப்பட்டே வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுடன் இணைந்திருப்பதால் பிரிவினைவாதத்திற்கு இடமளிக்காது என்ற நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் 19ம் திகதி இராணுவ வீரர்கள் நினைவுகூரப்படுவர் என அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, எவன்காட் சம்பவத்தை மூடிமறைக்க முயன்ற சிலர் தனக்கு மாதாந்தம் 20 மில்லியன் லஞ்சம் வழங…

  25. இலங்கைக்கு குதிரைகளை அன்பளிப்பு செய்தது இந்தியா இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆறு குதிரைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்திய அரசால் பயிற்சியளிக்கப்பட்ட இந்தக் குதிரைகள் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவைப் பேணும் வகையிலேயே இந்தக் குதிரைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஒருங்கமைப்புத் தலைவர் பிரகாஷ் கோபாலன் இலங்கை இராணுவத்தினரிடம் இன்று இந்த குதிரைகளைக் கையளித்தார். குதிரைகளை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்றதுடன், இதன்போது குதிரைகள் பயிற்சியளிக்கப்பட்டதற்கான சான்றிதழ்களும், பிறப்புச் சான்றிதழ்களும் இலங்கை இராணு…

    • 7 replies
    • 763 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.