ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் நேற்று முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து தீபமேற்றும் நிகழ்வொன்றை நடத்தியுள்ளார். இதன்போது, நேற்று தொடக்கம் எதிர்வரும் ஒருவாரத்திற்கு உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்கான காலமாகவும் அவர் அறிவித்துள்ளார். ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இது குறித்து அவர் தகவல் தெரிவிக்கையில்; “உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களுக்காக தீபமேற்றப்படுவதாக நேற்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று பேரை சந்திக்க கிடைத்தது. இதன்போது, தமது உறவினர்களும் யுத்தத்தில் உயிரிழந்தமை க…
-
- 2 replies
- 550 views
-
-
மலையகத்திலுள்ள மூன்று கட்சிகள் இணைந்து கூட்டணியொன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. வடக்கு, கிழக்கில் அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் போன்று தெற்கிலும் ஒரு தமிழ்க் கூட்டமைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த புதிய கூட்டணி குறித்து பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தேசிய தொழிலாளர் சங்கம் ஆகிய கட்சிகள் இணைந்தே இந்தக் கூட்டணியை அமைக்க பேச்சு நடத்தி வருகின்றன. இதுகுறித்து மனோ கணேசனிடம் கேட்டபோது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் மேல், ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் இந்தக் கூட்டணி ஊடாக தமது பணிகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்த…
-
- 4 replies
- 561 views
-
-
மல்லாகத்தில் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார். இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர் குழு மாணவனின் வீட்டுக்குள் நுழைந்தே அவரை வெட்டிக் காயப்படுத்தியது. இந்த சம்பவத்தில் மல்லாகம் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் க.பிரசன்னா (வயது 19) என்பவரே தலையில் பலத்த காயமடைந்தார். இதேவேளை மல்லாகம், சுன்னாகம் பகுதியில் தொடர்ச்சியாக தினமும் இளைஞர் குழுக்கள் மோதல்களில் ஈடுபடுகின்றன. இதனால் இப்பகுதியில் அச்ச நிலை காணப்படுகின்றது.தவிர மோதல்களைக் கட்டுப்படுத்துவதில் சுன்னாகம் பொலிஸார் போதுமனாளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் இதனாலேயே இவ்வாறான மோதல்கள் அதிகரிக்கின்றன என்றும் மக்கள் தெரிவித்தனர் http://www.…
-
- 20 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்காலில் எங்கள் உடன்பிறப்புக்களை, எங்கள் புதல்வர்களை, புதல்விகளை, தாய்மாரை, கர்ப்பிணித்தாய்மாரை, முதியோரை, நோயுற்றோரை, பசித்திருந்தோரை, நடக்க முடியாது இளைத்திருந்தோரை சிங்கள கொலை இயந்திர இராணுவம் ஈவிரக்கமின்றி சுமாராக ஒன்றரை லட்சம் மக்களை கொன்று குவித்தது. சுமாராக பத்தாண்டு கால வியட்நாம் யுத்தத்தின் போது மொத்தம் முப்பது லட்சம் வியட்நாமிய மக்கள் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். அதன்போது மொத்தம் 58 ஆயிரம் அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். அக்காலத்தில் வியட்நாமிய ஜனத்தொகையின் படி சுமாராக 6 வீத மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் (1975 ஆண்டு கணக்கின் படி அன்றைய வியட்நாமிய ஜனத்தொகை சுமாராக 5 கோடியே 25 இலட்சம் ஆகும்). ஆனால் முள்ளி;வாய்க்காலில் ஒரு வருட காலத்தில் ச…
-
- 0 replies
- 365 views
-
-
இனஅழிப்பு நினைவேந்தல் நிகழ்வினை முள்ளிவாய்க்காலில் மே 18ம் திகதி நடத்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா ஆகியோர் திட்டமிட்டு இலங்கை காவல்துறையிடம் அனுமதி கேட்டிருப்பதாக தெரியவருகின்றது. எனினும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லையெனவும் அனுமதிக்காக அவர்கள் காத்திருப்பதாகவும் தெரியவருகின்றது. அதேபோன்று வடமாகாணசபையினிலும் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுக்க முதலமைச்சர் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளினில் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் யாழ்.மாவட்டத்திற்கான நிகழ்வு எதிர்வரும் 15ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்.முற்றவெளியினில் இடம்பெறவுள்ளதாக ஏ…
-
- 0 replies
- 324 views
-
-
இலங்கையில் உயர் மட்ட வரிசையில் உள்ள நபர் ஒருவரை கொலை செய்வதற்கு தீவிரமான சூழ்ச்சிகள் மேற்கொண்டிருப்பதாக சர்வதேச புலனாய்வு சேவை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. சர்வதேச புலனாய்வு பிரிவின் தகவல்களுக்கு அமைய கடந்த அரசாங்கத்தில் பல மோசடிகளுடன் தொடர்புபட்ட நபர்கள் இச்சூழ்ச்சியின் பின்னணியில் இருப்பதாக சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. ஊழல் மோசடியில் தொடர்புபட்ட பாதுகாப்பு பிரிவு மற்றும் நபர்களின் நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இந்த சூழ்ச்சித் திட்டத்தினை மேற்கொண்டிருப்பதாக சர்வதேச புலனாய்வு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இப்புலனாய்வு பிரிவின் ஆய்வுக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு 100% பாதுகாப்பு பிரச்சினை உள்…
-
- 3 replies
- 1k views
-
-
போர் வெற்றி கொள்ளப்பட்டதை நினைவு கூரும் வகையில், போர்வீரர்கள் ஞாபகார்த்த அணிவகுப்பு எதிர்வரும் 19ம் நாள் மாத்தறையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை கடற்கரை வீதியில் வரும் 19ம் நாள் காலை 8 மணியளவில் இந்த அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இந்த அணிவகுப்பில், சிறிலங்காவின் முப்படைகளும் பங்கேற்கவுள்ளவுடன், ஆயுதப்படைகளின் பிரதம தளபதியான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்கும், பொதுமக்கள் மற்றும், அழைப்பாளர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகளை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், போர் வெற்றி நாளாக இதுவரை கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் இதனை,…
-
- 0 replies
- 295 views
-
-
ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் ஐந்து கோரிக்கையை முன் வைத்து மே18,19,20.ஆகிய மூன்று நாள்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடை பெறும். 1. பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். 2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளி…
-
- 0 replies
- 284 views
-
-
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்வதென கடந்தவாரம் திட்டமிடப்பட்டிருந்தது. நுகேகொடவில் உள்ள பெப்பிலியானவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக்நிகழ்விற்கு பிரதமரும், ஜனாதிபதியும் அழைக்கப்பட்டிருந்தனர். ஜனாதிபதி வெசாக்கூடுகளை பார்வையிட்ட பின்னர் மக்களுடன் உரையாற்றி விட்டு அருகிலுள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரை நோக்கி சென்றார். அதன் கதவை திறந்து உள்ளே அமர்ந்த அவர் பாதுகாப்பு பிரிவினரின் வருகைக்காக காத்திருந்தார். சிறிது நிமிடங்களுக்கு பின்னர் அங்கு வந்த பிரதமர் சேர் இது என்னுடைய வாகனம், உங்களுடைய கார் அங்குள்ளது என தெரிவிக்க ஜனாதிபதி சிறிது நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தார். அதன் பின்னரே அது தனக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வ…
-
- 1 reply
- 281 views
-
-
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சம்பூர்அனல் மின் நிலையத்தையோ அல்லது திருகோணமலை துறைமுகத்தையோ பாதிக்காது என கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உத்தேச சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்திற்கு மீள்குடியேற்றத்தின் மூலம் பாதிப்பு ஏற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மீள்குடியேற்றத் திட்டங்களினால் திருகோணமாலை துறைமுகத்திற்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்படாது எனவும் சில தரப்பினர் தேவையற்ற பொய்களை பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனல் மின் நிலையத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அனல் மின் திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவு…
-
- 0 replies
- 232 views
-
-
"சர்வதேசத்தால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கையை முழு உலகமும் மதிக்கும் நிலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுவந்துள்ளார்'' - என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன புகழாரம் சூட்டியுள்ளார். தற்போது இந்த நாட்டில் மன்னன் இல்லை. மக்களை மதிக்கும் மக்கள் தலைவரே இருக்கின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை அரச தாதியர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "அரச தாதியர் சங்கம் பலமானதொரு தொழிற்சங்கமாகத் திகழ்கின்றது. ஊழல், மோசடி மிக்க ஆட்சியை விரட்டியடிக்கும…
-
- 0 replies
- 256 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆறு வருடங்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு கொடிய சித்திரவதைகளை அனுபவித்த முன்னாள் விடுதலைப்புலிப் போராளி ஒருவர் விடுதலையான இரண்டாம் நாளே விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது. கிளிநொச்சியின் பூநகரியில் நேற்று முன்தினம் (10) நடந்த விபத்தில் வேலரசன் என்றழைக்கப்படும் பீலிக்ஸ் என்ற போராளியே உயிரிழந்துள்ளார். பூநகரி வலைப்பாட்டை சேர்ந்த இவர் பூநகரியில் நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். யுத்தத்தின் முடிவில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட இவர், பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு கொடூரமான சித்திரவதைகளிற்கு முகம் கொடுத்து வந்தார். இறுதியாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்த…
-
- 15 replies
- 1.9k views
-
-
மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்துக்கு வருகைதந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் விடைபெற்றுச் செல்லும்போது அங்கு ஒலிபரப்பப்பட்ட பாடல் அனைவரையும் வெகுவாக உணர்ச்சிமேலிடச்செய்தது. வந்தாறுமூலையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வினை முடித்துவிட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேடையில் இருந்து விடைபெற்றுச்செல்லும்போது தோல்வி நிலையென இருந்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா என்னும் பாடல் ஒலிக்கச் செய்யப்பட்டது. அவ்வேளை அவ்விடத்தில் கூடியிருந்த பலரும் உணர்ச்சி வசப்பட்டார்கள். தமிழ் இனம் தோல்வியை தழுவி, விடுதலைப்போராட்டம் சிதைக்கப்பட்டு, தமிழீழ மண்ணை பறிகொடுத்து, இன்று மற்றவர்களின் அடிமைத்தனத்திற்கும், கூட்டிக்கொடுப்பிற்கும் இரையாகிப்போயிருக்கு…
-
- 12 replies
- 904 views
-
-
அனைத்துலக வெளியீட்டுப் பிரிவின் வெளியீடான "இது இனப்படுகொலையா? இல்லையா?" ஆவணப்படம் நாளை சென்னையில் வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பாக இயக்குனர் கௌதமன் விடுத்துள்ள அழைப்புக் கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது, "இது இனப்படுகொலையா? இல்லையா?" சென்னையில் நாளை வெளியாகும் கௌதமனின் புதிய ஆவணப்படம் இலங்கையில் தமிழினம் படும் அவலங்கள் குறித்து இதுவரை பத்திற்கும் மேற்பட்ட ஆவணப் படங்களை இயக்கிய இயக்குனர் கௌதமன் அவர்களின் படைப்பாக்கத்தில் "இது இனப்படுகொலையா? இல்லையா?" என்கிற புதிய ஆவணப்படம் சென்னையில் நாளை வெளியிட்டு வைக்கப்பட உள்ளது. உலகத் தமிழர் பேரமைப்பின் ஏற்பாட்டில் நாளை 13.05.2015 புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில் (கமலா திரையரங்கம் …
-
- 0 replies
- 467 views
-
-
இறுதிப்போரில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது உறவினர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி, கீரிமலையில் பிதிர்க்கடன் செய்வதற்கான ஒழுங்குளை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பினில் அவர் தெரிவிக்கையினில் இறுதிப்போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 2,000பேர் பிதிர்க்கடன்களைச் செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு கீரிமலையில் பிதிர்க்கடன் நிறைவேற்றல் நடைபெறும். அதன் பின்னர் நகுலேஸ்வரத்தில் யாகம் நடைபெறவுள்ளது.பதிவு இணைய செய்தி கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்காக விசேட பஸ் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் சார்ந்த நி…
-
- 0 replies
- 565 views
-
-
புதிய அரசாங்கத்தின் கீழும் தமிழ் மக்களின் நிலைமையில் எந்த மாற்றங்களும் இல்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் பதவி ஏற்று 100 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகளில் கூட தமிழ் மக்களை குடியேற்றுவற்கு இராணுவத்தினர் பல்வேறு வழிகளில் தடையாக இருக்கின்றனர். குடியேற்றத்துக்கு அப்பால், அரசியல் கைதிகளை விடுவித்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இன்னும்யாரும் விடுவிக்கப்படவில்லை. எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன என்று அவர் கூறியுள்ளார். http://www.pathi…
-
- 0 replies
- 372 views
-
-
யாழ்.பல்கலைகழகத்தினுள் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட இடத்தில் மாணவர்களால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை கேள்வியற்ற இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் பல்கலைகழகத்தினை சூழ்ந்துள்ளனர். அத்துடன் சில புலனாய்வாளர்களும் பல்கலைகழக வளாகத்தினுள் ஊடுருவி நடமாடி திரிவதனால், மாணவர்கள் மத்தியில் பதட்டமான நிலை காணப்படுவதாக பல்கலைகழகத்தினுள் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/news/39989/57//d,article_full.aspx
-
- 0 replies
- 1.4k views
-
-
‘முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ ஆறாம் வருட நினைவேந்தலும், எழுச்சியும்! - வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அழைப்பு [Tuesday 2015-05-12 19:00] காலம்: 18.05.2015 திங்கள் கிழமை, காலை 10.00 மணிக்கு இடம்: வவுனியா நகரசபை மண்டபம் கூட்டுப்படை பலம் - கூட்டுச்சதியை பிரயோகித்து, ‘ஒன்றரைக்கிலோமீற்றர்கள்’ நீரேந்து நிலப்பரப்புக்குள் ‘ஐந்தரை இலட்சம்’ மக்களை முடக்கி, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களுடனும், மனிதகுலப்படுகொலைகளுடனும், மனித உரிமை மீறல்களுடனும் சிறீலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட வன்முறைப்போரில் ‘ஒன்றரை இலட்சம் உறவுகள்’ கொல்லப்பட்டுள்ளார்கள். ‘2009 மே 18 படுகொலைகள்’ தமிழ் தேசிய இனத்தின் ஆத்மாவில் விழுத்தப்பட்ட மிகப்பெரிய வடுவாகும். ஈழத…
-
- 0 replies
- 406 views
-
-
ஜெயலலிதா அம்மையாரின் விடுதலையால் ஈழமக்கள் மகிழ்ச்சி.! [Tuesday 2015-05-12 19:00] சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களுர் நீதிமன்றால் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சகல வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டதால் தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அம்மையாரின் விடுதலை தொடர்பாக ஈழத்தமிழ் மக்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளதுடன் மீண்டும் பதவியேற்கவிருக்கும் மாண்புமிகு ஜெயலலிதா ஜெயராம் அவர்களிடம் தங்கள் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக எம் ஈழத் தமிழ் இனமும் நாமும் மகிழ்ச்சியில் அம்மா...! ஈழத்தமிழர்கள் மகிழ்கின்ற நாளொன்றை பெங்க@ர் நீதி மன்றால் நீங்கள் விடுதலை செய்யப்பட்ட செய்தி தந்தி…
-
- 0 replies
- 622 views
-
-
இறுதிப்போரில் இறந்தவர்களுக்கு 18ம் திகதி கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்த ஏற்பாடு! [Tuesday 2015-05-12 19:00] இறுதிப்போரில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது உறவினர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி, கீரிமலையில் பிதிர்க்கடன் செய்வதற்கான ஒழுங்குளை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் தொடர்ந்து கூறியதாவது, இறுதிப்போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 2,000பேர் பிதிர்க்கடன்களைச் செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு கீரிமலையில் பிதிர்க்கடன் நிறைவேற்றல் நடைபெறும். அதன் பின்னர் நகுலேஸ…
-
- 0 replies
- 452 views
-
-
ஜெயேந்திரருடன், மைத்திரி விரைவில் ஆலோசனை. கொழும்பு: இலங்கையில் மத ஒற்றுமைக்காக காஞ்சி சங்கராச்சாரியாருடன் ஆலோசனை நடத்த அதிபர் சிறிசேனா திட்டமிட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்றார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். அதை தொடர்ந்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களுடனும், அண்டை நாடான இந்தியாவுடன் நல்லுறவையும் வளர்த்து வருகிறார். இலங்கையில் மெஜாரிட்டியாக வாழும் சிங்களர்கள் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர். தமிழர்கள் இந்துக்களாக உள்ளனர். எனவே, இரு சமுதாயத்தினரையும் ஒற்றுமைப்படுத்த காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்…
-
- 7 replies
- 828 views
-
-
மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மலேசிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான MH 179 என்ற விமானம் அவசரமாக தரையிறங்கியது மர்மமாகவே இருக்கின்றது என்று செய்தி வெளியாகியுள்ளன. விமானம் புறப்பட்டு சில மணி நேரங்களில் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு விமானம் திரும்பியுள்ளது. மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த விமானம் மலாக்கா நீரிணைக்கு மேலாக இரண்டு மணிநேரம் வட்டமிட்டதன் பின்னரே கோலாலம்பூரில் தரையிறங்கியுள்ளது. விமானத்தில் கூடுதலாக எரிபொருட்கள் இருந்த நிலையில், அது தரையிறக்கப்பட்டமை ஆபத்தானது என்றும் மலாக்கா நீரிணைக்கு மேலாக விமானத்தை வட்டமடிக்கவேண்டிய நிலைமை விமானிக்கு ஏற்பட்டது என்றும் மலேசியா ஊடகங்கள் தெரிவித்தன. அதன் பிரகாரம் நேற்றிரவு 11.30க்கு புறப்பட்ட…
-
- 12 replies
- 1k views
-
-
தென்னிலங்கை வாழ் தமிழர் தொடர்பில் தேர்தல்முறை கொள்கை ஆவணம் நாளை கையளிப்பு: - மனோ கணேசன் [Tuesday 2015-05-12 07:00] மலையகம், கொழும்பு உட்பட தென்னிலங்கை மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் கொள்கை வழிக்காட்டல் நிலைப்பாடுகள் அடங்கிய ஆவணம் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். மத்திய மாகாணம், மேல் மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வடமேல் மாகாணம் ஆகிய மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் இந்த கொள்கை வழிக்காட்டல் ஆவணத்தை தன்னுடன், தொழிலாளர் தேசிய முன்னணி தலைவர் பழனி தி…
-
- 0 replies
- 550 views
-
-
மிக் விமானக் கொள்வனவில் கோத்தபாய கொடுத்த போலி லண்டன் முகவரி! - விசாரணையில் அம்பலம். 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மிக் 27 விமானக் கொள்வனவின் போது லண்டனில் உள்ளதாக கூறப்பட்டு வழங்கப்பட்ட முகவரி பொய்யானது என்று சர்வதேச பொலிஸான இன்டர்போல் அறிவித்துள்ளது. இன்டர்போலின் அறிவித்தலின்படி மிக் விமான கொள்வனவின் போது லண்டனில் உள்ள பெலிமிஸா ஹோல்டிங் லிமிடெட் என்ற நிறுவனத்தின் ஊடாகவே பணம் கொடுக்கப்பட்டதாக முந்திய அரசாங்கம் தெரிவித்திருந்தது. எனினும் அவ்வாறான ஒரு நிறுவனம் லண்டனில் மாத்திரமல்ல. பிரித்தானியாவில் இல்லை என்று இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை லண்டனில் உள்ளதாக கூறப்படும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய முகவரியும் பொய…
-
- 0 replies
- 618 views
-
-
இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்ற பகுதியான முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை நினைவுகூறும் முதல் நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் கிராமத்தில் கப்பலடி என்ற இடத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த நினைவு நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள் ரவிகரன், சிவாஜிலிங்கம், பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் மேரிகமலா குணசீலன், வலிவடக்கு பிரதேச சபை உப தலைவர் சஜீவன், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் கோ.கருணானந்த ராசா, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பொ.சிவஞான சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு இரு பொதுச் சுடர்களை ஏற்ற…
-
- 1 reply
- 426 views
-