ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
வெசாக் தினத்தில் ஒவ்வொரு வருடமும் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் வெசாக் கண்காட்சியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வெசாக் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப் பட்டணமும் தர்ம எழுச்சியும் என்ற தொனிப்பொருளில் இந்த வருடத்துக்கான வெசாக் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. வெசாக் பந்தலை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, வட மாகாண பொலிஸ் மா அதிபர் பெரேரா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். பிரித் ஓதலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சகல மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர். பொதுமக்களும் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர். http://www.malarum.com/article/tam/2015/05/03/9903/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E…
-
- 0 replies
- 435 views
-
-
மன்னார் பிரதேச வெண்மையாக்கல் உரிமையாளர் சங்கத்தினரை சங்க மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(03) காலை சந்தித்த வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்தார். குறித்த சந்திப்பின் போது அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் செயல்ப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. அவர்களது அத்தியாவசிய பிரச்சினைகளை முதலில் இனம் கண்டு அதனை முடிந்த அளவுக்கு உடன் சீர் செய்து தருவதாகவும் சங்கத்தின் ஒற்றுமையை கட்டி எழுப்புங்கள் அபிவிருத்திகளை நான் கொண்டுவருகிறேன் எனவும் அவர்களுக்கு அமைச்சர் உறுதி வழங்கினார். அதனை தொடர்ந்து கடந்த தொழிலாளர் தினத்தையெட்டி சங்க உறுப்பினர்களுக்கு சாரம் மற்றும் சேலை என்பவற்றை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் வழங்கி வைத்தமை குறிப…
-
- 0 replies
- 317 views
-
-
ஜோன் கெரியை தமிழ்தேசிய கூட்டமைப்பும் சந்தித்தது!! இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பு சந்தித்துள்ளது.இச்சந்திப்பில், இனப்பிரச்சனை தீர்வு மற்றும் மனிதஉரிமைமீறல் குறித்த விசாரணைகளில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று காலை 9 மணியளவில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடந்தது. இதில் கூட்டமைப்ப சார்பில் அதன் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு முதல்வர் சி.வீ.விக்னேஸ்வரன், ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண…
-
- 11 replies
- 905 views
-
-
மஹிந்த எவ்வாறு போர்க்குற்றவாளியோ இன அழிப்பாளனோ அதே போன்றே சந்திரிகாவும் போர்க்குற்றவாளியும் இன அழிப்பாளியுமாவார். மஹிந்தவை தண்டிக்க எவ்வாறு பாடுபடுகின்றோமோ அதே போன்றே சந்திரிகாவும் தண்டிக்கப்படவேண்டியவர்.அவ்வாறானவரினை அழைத்து தந்தை செல்வாவிற்கு நினைவு தினம் நடத்துவதை தந்தை செல்வாவின் ஆவி கூட மன்னிக்காதென குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழரசுக்கட்சியின் இளைஞரணி செயலாளர் வி.எஸ்.சிவகரன்.பதிவு இணைய செய்திகள் தமிழரசுக்கட்சியின் துணைதலைவர் பேராசிரியர் க.சிற்றம்பலத்தினால் எழுதப்பட்ட தடம் பதித்த தமிழ் தேசியம் நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றிய இளைஞரணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் மேலும் தெரிவிக்கையினில் இலங்கையினில் இருந்த ஜனாதிபதிகளுள் கூடிய அளவு இராணுவ நடடிக்கைகளினை மேற்கொண்டு சாதனை புரிந…
-
- 3 replies
- 1k views
-
-
வெசாக்கை முன்னிட்டு யாழ். சிறையிலிருந்து எண்மர் விடுதலை வெசாக்தினத்தை முன்னிட்டு சிறுகுற்றம், தண்டப்பணம் கட்டத்தவறிய கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து மேற்குறித்த குற்றங்களில் ஈடுபட்டவர்களில் எண்மர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர். http://onlineuthayan.com/News_More.php?id=297234013403600233
-
- 4 replies
- 486 views
-
-
இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும்': 105 வயது முதியவர் நம்பிக்கை இலங்கையின் இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் என்று தான் நம்புவதாக 105 வயது முதியவர் ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வேலாயுதம் சதாசிவம்வவுனியா குருமண்காட்டில் வசித்து வரும் வேலாயுதம் சதாசிவம் ஓய்வு பெற்ற மூத்த அரசு அதிகாரியாவார். நாட்டில் பல தசாப்தங்களாக நிலவிய அரசியல் பிரச்சனைகள் குறித்து தான் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தற்போது ஆட்சியிலுள்ள புதிய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதை கவனிக்கக் கூடியதாக உள்ளதாகவும் அவர் கூறுகிறார். பல தசாப்தங்கள் நீடித்த இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு அடுத்த 5 …
-
- 1 reply
- 692 views
-
-
வவுனியா – பேயாடிகூழாங்குளம் பகுதி மக்கள், பொது காணியை தமது கிராமத்தின் தேவைக்காக மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். வவுனியா ஏ9 வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பேயாடிகூழாங்குளம் கிராமத்திற்கு சொந்தமான பொது காணி, கலாசார அமைப்பொன்றுக்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். பிரதேச செயலாளர் பொதுமக்களின் கோரிக்கைக்கு மாறாகவே இந்த காணியை வழங்கியுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமது கிராமத்திற்கு சொந்தமான இந்த காணியை கலாசார அமைப்புக்கு வழங்கியுள்ளமையால், தமது கிராமத்திற்கு பொது கட்டிடங்கள் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த கிராமத்திற்கு பொதுகட்டி…
-
- 0 replies
- 414 views
-
-
ஒரே கல்லில் வடிக்கப்பட்ட இந்த சிலையை அமைக்க சுமார் 12 ஆண்டுகள் எடுத்துள்ளன சென்னையைச் சேர்ந்த சிற்பி (ஸ்தபதி) ஒருவர் வடிவமைத்து ஒரே கல்லில் 67.5 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை இலங்கையின் குருநாகல் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. ரம்பொடகல மகாவிகாரையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புத்தர் சிலைதான் உலகிலேயே மிகப்பெரிய ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சமாதி நிலை புத்தர் சிலை. இந்த சிலையை இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரைநீக்கம் செய்துவைத்தார். இந்தச் சிலையை, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஸ்தபதியான எம். முத்தைய்யா வடிவமைத்து உருவாக்கியிருக்கிறார். ரம்பபொடகலவில் உள்ள ஒரு மலைக்குன்றை தேர்வுசெய்து, அதில் புத்தர் சிலையை வடிக்கும் பணிகள் 2002ஆம் ஆண…
-
- 7 replies
- 1.5k views
-
-
அமெரிக்க செல்ல கோத்தபாயவுக்கு அச்சமாம்! - இரட்டைக் குடியுரிமையை கைவிடுகிறார். [sunday 2015-05-03 07:00] முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிடத் தீர்மானித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ஸ அமெரிக்க - இலங்கை இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவராவார்.அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்தநிலையில் மீண்டும் அமெரிக்காவில் குடியேறப் போவதில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது கோத்தபாய ராஜபக்ச போட்டியிட உள்ளார். எனினும் எந்த கட்சியில் போட்டியிடுவார் என்பது குறிப்பிடப்படவில்லை. …
-
- 3 replies
- 419 views
-
-
ஒன்றுபட்டு உரிமையை வெல்லுவோம்…! என்ற தொனிப்பொருளில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட மே தின பேரணி இன்று வெள்ளிக்கிழமை மாலை எழுச்சியுடன் நடைபெற்றது. சிவன் கோயில் முன்றலில் ஆரம்பமாகிய பேரணி திருகோணமலை கடற்கரை பிரதான வீதியூடாக வெலிக்கடை தியாகிகள் அரங்கைச் சென்றடைந்தது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற மே தின பேரணி மே (01) மாலை 3.00 மணியளவில் ஆரம்பமானது. இப்பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், பா.அரியேந்திரன், பொன்.செல்வராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை அமைச்சர் துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களாக நாகே…
-
- 13 replies
- 915 views
-
-
யாழில் பாரிய வெடிபொருட்கள் மீட்பு; செயலிழக்க செய்ய வீதிகளுக்கு பூட்டு யாழ்.நகரப்பகுதியில் மீட்கப்பட்டுள்ள பாரிய வெடிபொருட்கள் இன்று செயலிழக்கச்செய்யப்படவுள்ளதால் மணிக்கூட்டு வீதி, விக்டோரியா வீதி, வைத்தியசாலை பின்வீதி என்பன மூடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில் உள்ள ஞானம்ஸ் விடுதியின் பின்பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட வெடிபொருளை இன்று செயலிழக்கச் செய்யும் பணியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குறித்த வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதனால் அப்பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் குறித்த பகுதியில் உள்ள அனைத்து …
-
- 2 replies
- 614 views
-
-
-
20வது திருத்தம் சிறுபான்மையினரைப் பாதித்தால் போராட்டத்தில் குதிக்கத் தயாராகும் கட்சிகள்! [sunday 2015-05-03 07:00] தேர்தல் முறை மறுசீரமைப்பு தொடர்பான உத்தேச 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், சிறுபான்மை சமூகங்களைப் பாதிக்காத வகையில் அமைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென தமிழ், முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளன. இதற்கான முன் நடவடிக்கைகளை குறிப்பாக முஸ்லிம் மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எடுத்து வருகின்றன. இதன் முதற் கட்டமாக அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துத் தம்மால் தயாரிக்கப்பட்ட ஒர…
-
- 2 replies
- 279 views
-
-
திரும்பினார் ஜோன் கெரி இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, இன்று பயனமாகியுள்ளார். இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த ஜோன் கெரி நேற்றையதினம் ஜனாதிபதி உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரைச் சந்தித்திருந்தார். இன்றையதினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் , வடக்கு முதல்வர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். அதன்பின்னர் கென்யாவுக்கு பயணமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=882374013803822068
-
- 0 replies
- 404 views
-
-
அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க புத்தீஜிவிகள் குழு உதயம்! [sunday 2015-05-03 07:00] தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் அழுத்தம் கொடுப்பதற்காக புத்திஜீவிகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களின் குரல் என்கிற அமைப்பு கொழும்பில் கடந்த வாரம் உதயம் ஆகி உள்ளது. நாடு பூராவும் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்வியியலாளர்கள் இவ்வமைப்பில் உள்வாங்கப்பட்டு வருகின்றனர். அமைப்பின் தலைவராக ருகுணு பல்கலைக்கழக பேராசிரியர் ரஞ்சித் சேனாரட்ணவும், செயலாளராக சப்ரகமுவ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மஹிந்த பத்திரணவும், தேசிய அமைப்பாளராக பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நந்தன விஜேசிங்கவும் தெரிவாகி உள்ளார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள…
-
- 0 replies
- 359 views
-
-
பொதுத்தேர்தல் நடத்த திறைசேரியிடம் 300 கோடி ரூபா கேட்கிறது தேர்தல் திணைக்களம்! [sunday 2015-05-03 07:00] பொதுத்தேர்தலை நடத்த 300 கோடி ரூபா பணம் தேவைப்படுவதாகவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்குமாறு தேர்தல் திணைக்களம் திறைசேரியிடம் கோரியுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் அவசரமாக தேர்தலை நடத்தினால் சுமார் 300 கோடி ரூபா பணம் தேர்தல் செலவுகளுக்கு தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுத் தேர்தலை நடத்த தயார். இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது செய்யப்பட்ட மொத்த செலவு விபரங்கள் எதிர்வரும் 15ம் திகதி அளவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் திணைக்கள அதிகாரி…
-
- 0 replies
- 292 views
-
-
வரும் 19ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது 20ம் திருத்தச் சட்டமூலம்! [sunday 2015-05-03 07:00] தேர்தல் முறைமை மாற்றம் குறித்த 20ம் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 19ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 255 ஆக உயர்த்தப்பட உள்ளது.விருப்பு வாக்கு முறைமை இல்லாதொழிக்கப்பட உள்ளது. தொகுதிவாரி மற்றும் விகிதாசார அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தொகுதிவாரி, தேசிய விகிதாசாரம், மாவட்ட விகிதாசாரம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட உளளதாக பேச்சாளர், கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்து…
-
- 0 replies
- 223 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும்! - சுமந்திரன் தகவல் [sunday 2015-05-03 07:00] தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்று விரைவில் முன்வைக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.திருகோணமலையில் நடைபெற்ற மேதின கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். அரசியல் கைதிகள் தொடர்பான பட்டியல் ஒன்று தற்போது தயாரிக்கப்படுகிறது.அதன்அடிப்படையில் அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டு விரைவில் அவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுவார்கள் என்று சுமந்திரன் கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=1313…
-
- 0 replies
- 209 views
-
-
இலங்கையில் அதிகாரப்பகிர்வு அவசியம்! - ஜோன் கெரி யுத்தக் குற்றங்கள் குறித்த எந்தவொரு முறையான விசாரணைகளுக்கும் இலங்கைக்கு உதவத் தயாராகவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட எந்தவொரு நாட்டிலும் மனித உரிமைகள் குறித்த மிகவும் நேர்த்தியான பதிவுகள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருநாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் தற்போது அதிகாரப் பகிர்வு அவசியம் என சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்கா அதற்குத் தேவையான உதவிகளை வழங்கும் எனவும் தெரிவித்தார். அத்துடன் …
-
- 0 replies
- 259 views
-
-
பொதுத்தேர்தலுக்கு முன்னரே ஓய்வு பெறுகிறார் தேர்தல் ஆணையாளர்! [saturday 2015-05-02 20:00] தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எதிர்வரும் ஜுன் மாதம் 6ஆம் திகதியுடன் 60 வயதை பூர்த்தி செய்வதோடு, அவரது பதவியில் இருந்தும் ஓய்வுபெறவுள்ளார். அவர் தொடர்ந்தும் அப்பதவியில் நீடிக்க விரும்பினால் முன்னரே அதற்கான கோரிக்கையை முன்வைத்திருக்க வேண்டும். எனினும், அவர் இதுவரை அவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 19ஆம் திருத்தச் சட்டத்திற்கமைய சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு ஆரம்பிக்கப்படவுள்ளது. சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்ட பின…
-
- 0 replies
- 145 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் விடயத்தில், பிளவு ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே தடையாக இருப்பதாக சுரேஸ் பிரேமசந்திரன் கூறியுள்ளார். மேலும் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் இடம்பெற்றிருந்த போது, அதற்கும் இலங்கை தமிழரசு கட்சி பங்குபற்றி இருக்கவில்லை என்று குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/news/39750/57//d,article_full.aspx
-
- 2 replies
- 498 views
-
-
'தமிழ் மக்களாகிய நாங்கள் 35 வருடகால போராட்ட வரலாற்றில் எங்களின் கல்வியை இழந்துள்ளோம். இதை வளர்த்தெடுக்கவேண்டிய கட்டாயத் தேவை எமக்கு உண்டு. இதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் என்று கிழக்கு மாகாணசபையின் உபதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு, குருமண்;வெளி றொபின் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த கலாசார விழா, குருமண்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எமது மாணவச் சமூகம் பல்கலைக்கழகம் செல்வதை மையமாகக் கொண்ட கற்றலுக்கு கொடுக்கும் முன்னுரிமை, தொழில்நுட்பத்துறை சார்ந்த கல்விக்கு கொடுப்பதில்லை. இதனால், பல்கலைக்க…
-
- 0 replies
- 281 views
-
-
இலங்கையின் புதிய தேர்தல் முறை நியுசிலாந்தின் தேர்தல் நடைமுறைகளில் காணப்படும் சாதகமான சில அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது ; மே 13 ம் திகதி அமைச்சரவை, தேர்தல் சீர்திருத்தங்களை முன்வைக்கும் அரசமைப்பிற்கான 20 வது திருத்தம் குறித்து ஆராயவுள்ளது. கடந்த புதன்கிழைம இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இது குறித்து ஆராயப்பட்டதாகவும்,ஜனாதிபதி 20 திருத்தத்தின் வரைபை அமைச்சர்களிடம் கையளித்து அது குறித்து அவதானமாக ஆராயுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் இது தொடர்பாக சகல அரசியல்கட்சிகளுடனும் இணக்கப்பாட்டிற்கு வருமாறு மைத்தரிபால சிறிசேன கேட்டுக்கொண்டதாகவும்.தெரியவருகின்றது. குறிப்பிட்ட வ…
-
- 0 replies
- 254 views
-
-
இலங்கையில் காணப்பட்ட நீண்டகால சிவில் யுத்தம் நிறைவுக்கு வந்த அதேவேளை, இலங்கை சர்வதேச அரங்கில் தனிமைப் படுத்தப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் இடம் பெற்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று ஜனா திபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் சர்வதேச உறவுகள் முன்னேற்றம் அடைந்துள்ளன என அமெரிக்க இராஜாங்க செய லாளர் ஜோன் கெரி தெரிவித்தார். ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட எந்தவொரு நாட்டிலும் மனித உரிமைகள் குறித்து முறையானதும் நேர்த்தியானதுமான பதிவு கள் இல்லை. எனவே, யுத்தக் குற்றங்கள் குறித்த எந்தவொரு முறையான விசாரணைகளுக்கும் இலங்கைக்கு அமெரிக்கா உதவத் தயாராகவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இலங்கைக்கு இர…
-
- 0 replies
- 275 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் கசிப்பு உட்பட சட்டவிரோத மதுபான உற்பத்திகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவ்வருடத்தில் கடந்த 3 மாதங்களில் மாத்திரம் 105 சட்டவிரோத மதுபான வழக்குகளும், 15 கஞ்சா வழக்குகளும், பதிவு செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் தொடர்பில் கஞ்சா மட்டுமே காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில், 2012ஆம் ஆண்டு 316 சட்டவிரோத மதுபான வழக்குகளும், 16 கஞ்சா வழக்குகளும், 2013ஆம் ஆண்டு 468 சட்டவிரோத மதுபான வழக்குகளும், 50 கஞ்சா வழக்குகளும், 2014ஆம் ஆண்டு 499 சட்டவிரோத மதுபான வழக்குகளும், 64 கஞ்சா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றச் செயல்களில் சம்பந்தப்படும்; குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதி…
-
- 0 replies
- 232 views
-