Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES 22 செப்டெம்பர் 2024, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தேர்தலில் வென்றுள்ளார். அவர் இந்தத் தேர்தலில் 57,40,179 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதன்படி, இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார பதவியேற்பார் என பிபிசி சிங்கள சேவை தெரிவிக்கிறது. இலங்கை தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இந்தத் தேர்தலில்தான் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. தான் அதிபராவது குறித்து அநுர குமார தெரிவித்துள்ள செய்தியில், “நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவு இறுதியில் இன்று நனவாகியுள்ளது. இந்தக் கனவு நனவாக உழைத்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முயற்சிகள் இன்று பலித்துள்ளது.” …

  2. Published By: RAJEEBAN 23 SEP, 2024 | 11:22 AM சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நீதிவழங்கவேண்டும் என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிகாரத்தில் உள்ளவர்களிற்கு எதிராக உண்மையை பேசியமைக்காக நியாயமற்ற விதத்தில் பறிக்கப்பட்ட எனது தந்தையின் உயிருக்காக நீதியை பெற்றுக்கொள்வது குறித்து நானும் எனது குடும்பமும் உறுதியாக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். அதிகாரத்தின் முன்னால் உண்மைய பேசியமைக்காக 15 வருடங்களிற்கு முன்னர் நியாயமற்ற விதத்தில் பறிக்கப்பட்ட எங்களின் தந்தைக்கு உயிருக்கு நீதியை பெற்றுக்கொள்வது குறித்து நானும் எனது கு…

  3. எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை; ஓய்வை அறிவித்த மைத்திரி இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, புதிய ஜனாதிபதிக்கு பல பாரிய சவால்கள் உள்ளதாகவும், எதிர்காலத்தில் மூன்று தேர்தல்கள் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக சுமார் நான்காயிரம் கோடி செலவிடப்படவுள்ளதாகவும், அவ்வாறான நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/309806

  4. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் திடீரென இராணுவத்தினர் வீதி தடையொன்றை அமைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் இன்று (21) நடைபெற்று முடிந்துள்ள நிலையில் முடிவுகள் வெளியாகி கொண்டு இருக்கும் சூழ்நிலையில் முல்லைதீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இராணுவத்தினரின் வீதி தடை ஒன்றை அமைத்துள்ளனர். வீதி தடை இந்தநிலையில், இன்று இரவு குறித்த வீதி தடை பகுதியில் இராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. கடந்த காலங்களில் கொரோனா மற்றும் குண்டுவெடிப்பு காலங்களில் புதுக் குடியிருப்பு நகர் பகுதியில் இராணுவத்தினர் வீதி தடை அமைத்து கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுத்திருந்த நிலையில் நீண்ட காலமாக அகற்றப்பட்டு மக்களி…

  5. 22 SEP, 2024 | 09:18 PM நாடாளுமன்ற தேர்தல் மிக விரைவில் இடம்பெறவேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் நாடாளுமன்ற தேர்தல் எப்போது இடம்பெறவேண்டும் என்பது போன்ற விடயங்களை அவர் வெளியிடவில்லை. https://www.virakesari.lk/article/194555

  6. 21 Sep, 2024 | 06:08 PM நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் 75 வீதம் முதல் 80 வீதம் வரையிலான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்களின் சதவீதம் கீழே, நுவரெலியா 80% மொனராகலை 77% பொலன்னறுவை 78% இரத்தினபுரி 75% கம்பஹா 80% கொழும்பு 75% - 80% அம்பாறை 70% கிளிநொச்சி 68% புத்தளம…

  7. தமிழரசுக்கட்சி ஆதரித்த சஜித் பிரேமதாச; வட, கிழக்கின் சகல தேர்தல் மாவட்டங்களிலும் முதலிடம் - 5 தேர்தல் மாவட்டங்களில் சஜித்துக்கு மொத்தமாக 676,681 வாக்குகள் Published By: VISHNU 23 SEP, 2024 | 04:57 AM (நா.தனுஜா) இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வட, கிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களிலும்; மொத்தமாக 676,681 எனும் அதிகூடிய வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது எனும் விடயத்தில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்திர…

  8. ஒரு தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் சம்பந்தப்பட்ட பிரபல்யமான ஒரு நகைச்சுவை உண்டு. வாக்களித்துவிட்டு வருகின்ற ஒருவரை மறிந்து, ‘நீ யாருக்கு வாக்களித்தாய்’ என்று வடிவேல் கேட்பார். 'உங்களிடம் வாங்கின காசுக்கு தென்னை மரச்சின்னத்தில் ஒரு குத்து.. அவனிடம் வாங்கின காசுக்கு ஏணி சின்னத்தில ஒரு குத்து..’ என்று அவர் பதிலளிப்பார். இன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மாவை சேனாதிராஜா வாக்களித்துவிட்டு திரும்பிவருகின்றபோது ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்டபோது, கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு பதிலைத்தான் வழங்கி இருகின்றார். 'தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தின்படி சஜித்துக்கு ஒரு வாக்கையும், சங்குச் சின்னத்துக்கு இரண்டாவது வாக்கையும், ரணில் விக்ரமசிங்கவுக்கு மற்றொரு வா…

  9. 21 SEP, 2024 | 05:58 PM அமைதியான முறையில் அதிகார மாற்றம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பொதுமக்கள் அமைதியை பேணவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயக ரீதியில் மக்களால் அவரின் பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழிவிடுவார் என எதிர்பார்க்கின்றேன் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். அதிகாரமாற்றத்தின் போது ஜனாதிபதி எந்த பிரச்சினையையும் உருவாக்குவார் என எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/194304

  10. ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ரீதியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாரிய வித்தியாசத்தில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். இந்திலையில் அடுத்த ஜனாதிபதியாக தமது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. பதவிப் பிரமாணம் இந்நிலையில் திட்டமிட்ட வகையில் அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, செயற்குழு உறுப்பினர் சமந்த வித்யாரத்ன இதனை தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் தோல்வி காலி…

  11. Published By: VISHNU 22 SEP, 2024 | 06:37 PM (நா.தனுஜா) அநுரகுமார திஸாநாயக்கவினதும், தேசிய மக்கள் சக்தியினதும் இந்த பிரம்மிக்கவைக்கும் வெற்றி நாட்டின் அரசியல் பரப்பை முழுமையாக மாற்றியமைத்திருக்கின்றது. இது நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவருக்கு வாக்களித்த மக்களுக்குக் கிடைத்த பரிசாகும் எனத் தெரிவித்திருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் தானே ஜனாதிபதி என்பதை அவர் உணர்ந்து செயற்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தியிருக்கின்றார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட…

  12. தமிழ் தேசியத்திற்காக ஓரணியில் திரள வேண்டும் என்பதை மக்கள் புகட்டியுள்ளனர் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளரும் ஊடக பேச்சாளருமான க. துளசி தெரிவித்தார். தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளருக்கு கிடைத்த வாக்கு தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த தேர்தல்களில் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதை பறைசாற்றுவதோடு தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வை ஜனாதிபதியாக தெரிவு செய்கின்றவர் வழங்க வேண்டும் என்பதை கூறுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி வெற்றி அளித்திருக்கின்றது. தமிழ் தேசிய வெற்றிக்காக ஒன்றுதிரள வேண்டும் என்பதை வெளிப்படுத்துவதற்கு தமிழ் மக்கள் ஒரு குறுகிய நாளில் ஒன்று திரண்டு சங்கு …

  13. புதிய இணைப்பு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகக் கருதப்படும் சில உள்ளடக்கங்களை நீக்குமாறு, தேர்தல் ஆணையகம் விடுத்த கோரிக்கையை சமூக ஊடக தளங்கள் நிராகரித்துள்ளன. தேர்தல் சட்டத்தை மீறிய 201 இடுகைகளை நீக்க, தேர்தல் ஆணையகம் கோரிக்கைகளை முன்வைத்தபோதும் Meta, YouTube, TikTok மற்றும் Google ஆகியவை அந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டன. சுமார் 937 கேள்விக்குரிய இடுகைகள் தேர்தலுக்கு முன்னர், குறித்த தளங்களில் இடுகையிடப்பட்டிருந்தன எனினும், தேர்தல் சட்டங்களை மீறியதாக கூறி 872 பதிவுகள் சர்வதேச சமூக ஊடக நிறுவனங்களால் நீக்கப்பட்டன. முதலாம் இணைப்பு அமைதியான நேரத்தில் சமூக ஊடகங்கள் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுவது தொடர்பாக கண்காணிப்பு நிறுவனங்களிடமிருந்து பல முறைப்…

  14. தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நாட்டின் சாத்தியக்கூறுகளால் தான் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/309755

  15. இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் வெளியான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க, முன்னதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார். முகநூல் பதிவு அந்த பதிவில், "அவர்கள் எங்களை புதைக்க முயற்சித்தார்கள், நாங்கள் விதைகள் என்று அவர்களுக்கு தெரியாது." என பதிவிட்டுள்ளார். இந்த முகநூல் பதிவினை அநுரகுமாரவின் ஆதரவாளர்கள், தற்போது அதிகம் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். https://tamilwin.com/article/anurakumara-facebook-post-viral…

  16. 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதியை கலைக்கும் உத்தரவு அதன் பிரகாரம் தற்போதைக்கு அவர் தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதியை கலைக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரகாரம் பெரும்பாலும் நாளை அல்லது மறுநாள் அவரது பணியாட்தொகுதியினர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் சுமார் இருநூறு பேரளவிலான அலுவலகப் பணியாட் தொகுதியினர் கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்ப…

  17. Published By: DIGITAL DESK 3 22 SEP, 2024 | 10:17 AM நாளை 23ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194415

  18. 21 SEP, 2024 | 09:55 PM இன்று சனிக்கிழமை (21) இரவு 10.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அல்லது வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் தங்களது ஆவணங்கள், விமான பயணச் சீட்டுகளை தம்வசம் வைத்திருத்தல் அவசியமாகும். மேலும், தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் அலுவலக அனுமதிப்பத்திரம் மற்றும் ஊழியர் அடையா…

  19. 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அதன்படி 09/21 அன்று மாலை 02.25 மணியளவில் முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்தியன் ஏர்லைன்ஸின் ஏஐ-272 விமானத்தில் இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டார். மேலும், 09/21 இரவு 11.15 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய் எயார் ஏசியா விமானம் FD-141 இல் தாய்லாந்தின் பாங்கொக்கிற்கு புறப்பட்டார். அதன் பிரகாரம் முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளிவர முன்னதாகவே சமந்த பத்ர தேரர் தென் கொரியாவை நோக்கிப் பய…

  20. இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சமூக ஊடகபதிவில் தெரிவித்துள்ளார் . அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இன, மத வெறிகளைத் தூண்டாமல் சிறப்பாக வெற்றி பெற்ற #அனுரவிற்கு எமது வாழ்த்துக்கள். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனையை ஏற்று, மற்றைய வேட்பாளர்களை நிராகரித்து #சஜித்துக்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் ஒரு வித்தியாசத்தைக் காண்பித்த வட கிழக்கு தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகள் https://www.virakesari.lk/article/194390

    • 2 replies
    • 306 views
  21. 45 தமிழக மீனவர்களுக்கு 10 கோடி ரூபா அபராதம் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 நாட்டுப்படகு மீனவர்கள், 10 விசைப்படகு மீனவர்கள் என 45 தமிழக மீனவர்களுக்கு மொத்தம் 10 கோடி ரூபா அபராதம் விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதியன்று கைது செய்தனர். அவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் முற்படுத்தியபோது நீளமான ஒரு நாட்டுப் படகிலிருந்த 12 மீனவர்களுக்கு தலா ரூ. 35 இலட்சம் அபராதமும், மற்ற மூன்று நாட்டுப் படகிலிருந்த 23 மீனவர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் அபராதமும் விதித்…

  22. புதிய இணைப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சற்று முன்னர் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் தற்போதைக்கு கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுமார் 200க்கும் அதிகமான விமானப்படையினர் தற்போதைக்கு விமான நிலையத்தை அண்டிய பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமானநிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் இணைப்பு எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி ந…

  23. ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, அரசாங்கம் செப்டம்பர் 23 ஆம் திகதியை (திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள சிறப்பு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார். விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் இதுவேளை, எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று (21) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்த…

  24. ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு! ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பொதுமக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தினத்தில் வன்முறைகள் மற்றும் சட்டமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. https://athavannews.com/2024/1400368

  25. அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச இன்று (20) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 03.05 இற்கு Emirates விமானமான EK-649 இல் துபாய் நோக்கி புறப்பட்டதாக விமான நிலைய தவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள “கோல்ட் ரூட்” முனையத்தை பயன்படுத்துவதற்கும் அவர் 206 அமெரிக்க டொலர்களை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், பசில் ராஜபக்ச துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.