Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய ஜனாதிபதியின் தலைமையில் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமென்ற முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எமது மாகாணத்திற்கு வருகை தந்துள்ள உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். தேசிய பிரச்சினைக்கு மூளையின் மூலமன்றி இதயத்திலிருந்தே தீர்வு காண முடியும். மனங்களில் மாற்றமேற்பட்டு சிந்தனை மாற்றம் ஏற்படுதல் இதற்குமிக அவசியமாகும். பெளத்த மதத்தின் முக்கியமான பெரியார்கள் வாழ்ந்த பொலன்னறுவையில் வாழும் உங்களுக்கு அன்றை மதப்பெரியார்களைப் …

  2. கட்டாரில் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை 01/03/2015) இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். கோவில் போரதீவை சேர்ந்த ச.துவாரகன்,பெரியநீலாவணையை சேர்ந்த ச.சுகந்தன் ஆகியோரே மரணமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் பயணித்துக்கொண்டிருந்த காரும் லொறியொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://seithy.com/breifNews.php?newsID=127612&category=TamilNews&language=tamil

  3. -பொ.சோபிகா, யோ.வித்தியா அநுராதபுரம், பொலநறுவை ஆகிய இடங்களில் நாங்கள் உரையாற்றும் போது சிங்களத்தில் உரையாற்றுவது போன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாணத்தில் தமிழில் உரையாற்ற வேண்டும். நல்லிணக்கம் என்பது அதனூடாகவே ஏற்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். http://www.tamilmirror.lk/140929

    • 10 replies
    • 992 views
  4. முன்னாள் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் ஏழு நட்சத்திர மாளிகை அமைத்ததைப் போல தனது பெயரில் பாலஸ்தீனத்தில் தொழிற்பயிற்சி நிறுவனத்தை அமைப்பதற்கு 13 கோடி ரூபா செலவு செய்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அநுரகுமார திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு கூறினார். யாழ்ப்பாணத்தில் 57 அறைகளுடன் ஏழு நட்சத்திர மாளிகையொன்றை அமைப்பதற்கு முன்னைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. விசேட விருந்தினருக்கான மூன்று விடுதிகளை உள்ளடக்கியதாகவும், கடலிலிருந்து 100 அடி தூரத்தில் இந்த மாளிகை அமைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் மாத்திரமன்றி ப…

    • 2 replies
    • 494 views
  5. சில நாடுகள் இலங்கையின் மீது அதிகாரம் செலுத்த முயற்சிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சுமத்தியுள்ளார். சில பொருளாதார உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு அதன் ஊடாக இலங்கையில் அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 1948ம் ஆண்டு இலங்கைக்கு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. மீண்டும் இவ்வாறு வெளிநாட்டு சக்திகள் நாட்டை ஆட்சி செய்ய இடமளிக்கப்பட முடியாது. இலங்கை இவ்வாறான விடயங்கள் குறித்து மிகவும் உன்னிப்பாக அவதானம் செலுத்தும். சில பெரிய நாடுகள் சிறிய நாடுகளின் விவகாரங்களில் முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு தலையீடு செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அபிவிருத்தி உதவிகள் என்ற போர்வையில் இந்த தலையீடுகள் இடம்பெற்று வருகின்றன. அபிவிரு…

    • 2 replies
    • 435 views
  6. அனைத்துலக அரங்கில் வெளிப்படைத்தன்மை பற்றிப்பேசும் இலங்கை அரசாங்கம், ஐ.நா விசாரணையாளர்களை நாட்டிற்குள் உள்நுழைய மறுப்பது ஏன் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் கேள்வியெழுப்பியுள்ளார். அனைத்துலகத்தினை தவறாக திசைதிருப்பும் முனைப்பில் இலங்கை ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கையின் வெளிவிவகாரதுறை அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை தொடர்பில் கருத்துரைக்கும் பொழுதே ஜெனீவாவில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழின அழிப்பி…

  7. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். http://www.tamilmirror.lk/140930

    • 4 replies
    • 605 views
  8. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும் கடற்படையின் லெப்டினன் பதவிநிலை வகிப்பவருமான யோஷித்த ராஜபக்ஷ, பொலிஸ் குற்றவியல் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக இன்று காலை 8.40க்குச் சென்றார். இதன்போது, யோஷித்தவின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவும் சென்றிருந்தனர். வாக்குமூலத்தை வழங்கிவிட்டு, அவ்விருவரும் இன்று முற்பகல் 10.40க்கு பொலிஸ் குற்றவியல் பிரிவிலிருந்து வெளியே வந்தனர். இதன்போது, அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, 'யோஷித்த குற்றமற்றவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம். நாம் குற்றமற்றவர்கள். அதனாலேயே, பொலிஸ் அழைப்பு கிடைத்தவுடன் வந்தோம்' என்றார். …

  9. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செய்கின்ற செயற்பாடுகளை ஏற்றுக் கொள்வதாகவும் அதனை அங்கீகரிப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா, குருமன்காடு, லக்சுமி திருமண மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத் தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் தெரிவித்ததாவது:- இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசியல் சூழ்நிலையின் நிலைமையை ஆராய்ந்து தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் சில தீ…

  10. கண்டி தலதா மாளிகையின் வாளாகத்தில் நிகழ்வுகள் நடைபெறும் இடத்திலிருந்த நாட்டின் தேசிய கொடியை பலாத்காரமாக அகற்றிவிட்டு சிங்கள கொடி ஏற்றியமை குறித்து கண்டி பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள மகுள் மதுவ யில் ஏற்றப்பட்டு இருந்த இலங்கையின் தேசியக் கொடியை கீழிறக்கி அங்கு (சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவ அடையாளங்களை நீக்கிய) சிங்கள கொடி என அழைக்கப்படும் ஒரு கொடியை பறக்கவிட ஒரு கும்பல் முயற்சி செய்ததால் அங்கு பதட்ட நிலை தோன்றியுள்ளது. இது தொடர்பில் கண்டி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறிப்பிட்ட கும்பலின் செயலை தடுத்து நிறுத்திய போது இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளது. நேற்று தலதா…

  11. Ad by NoMore Ads | Close செப்ரெம்பருக்குப் பின்னரும் அறிக்கையைத் தாமதிக்கக் கூடாது – பிரித்தானியா வலியுறுத்தல் MAR 03, 2015 | 0:46by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதை செப்ரெம்பர் மாதத்துக்குப் பின்னரும், தாமதிக்கக் கூடாது என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. ஜெனிவாவில் நேற்று ஆரம்பமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வில், உரையாற்றிய பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனெலி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, சமர்ப்பித்திருக்க வேண்டிய சிறிலங்கா குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதையு…

  12. ஐ.நா உயர் பிரதிநிதி ரணிலுடன் சந்திப்பு – விசாரணையை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினார் MAR 04, 2015 | 1:26by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அலரி மாளிகையில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பரஸ்பரம் கரிசனை கொண்டுள்ள பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தனது சிறிலங்கா பயணத்தின் போது, கண்டறிந்த விடயங்களை உள்ளடக்கியதாக இந்தச் சந்திப்பில், ஐ.நாவின் நிலைப்பாடுகளை சிறிலங்கா பிரதமரிடம் ஜெப்ரி பெல்ட்மன் எடுத்துக் கூறியுள்…

    • 0 replies
    • 313 views
  13. இரவில் கண்மூடுகிறது மகிந்தவின் மாத்தல விமான நிலையம் MAR 04, 2015 | 1:09by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், அம்பாந்தோட்டையில் தனது பெயரில் அமைக்கப்பட்ட, மாத்தல அனைத்துலக விமான நிலையம் இரவு நேரத்தில் மூடப்படவுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட, சிறிலங்காவின் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அரசாங்கத்துக்கு வருமானத்தை அளிக்காததால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். “மாத்தல விமான நிலையத்தை இரவு நேரத்தில் மூடுவது குறித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம். இந்த விமான நிலையத்தின் பராமரிப்புக்காக அரசாங்கம் 250 மில்லியன் ரூபாவைச் செலவிட வேண்டியுள்ளது. வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்தே, …

    • 0 replies
    • 572 views
  14. Ad by NoMore Ads | Close தமிழர்களை திருப்திப்படுத்தும் போர்க்குற்ற விசாரணையே அவசியம் – ஐ.நா உயர் பிரதிநிதி MAR 04, 2015 | 0:58by கார்வண்ணன்in செய்திகள் அனைத்துலகத் தரம்வாய்ந்த உள்நாட்டு விசாரணையை சிறிலங்கா அரசாங்க துரிதமாக நடத்த வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார். நான்கு நாள் சிறிலங்கா பயணத்தின் முடிவில் கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னைய ஆட்சியாளர்கள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் விரைவாக உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்க வேண்டும். இந்த உள்நாட்டு விசாரணைகளை மிக விரைவாக மேற்கொள்ளப்ப…

    • 0 replies
    • 369 views
  15. இரகசிய தடுப்பு முகாம்கள் தொடர்பிலான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் சில பகுதிகளில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இரகசிய தடுப்பு முகாம்கள் காணப்படுவதாக அண்மையில் ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், இவ்வாறான எந்தவிதமான தடுப்பு முகாம்கள் இயங்கவில்லை என பிரதமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நாட்டில் தற்போது எவ்விதமான இரகசிய தடுப்பு முகாம்களும் இயங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பிலான பட்டியலொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள் உயிரிழந்து விட்டதாகவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகவோ கருதப்பட வேண்…

  16. சிறிலங்காவின் வேண்டுகோளின் பேரில், இரண்டு நாடுகளும் ஏற்றுக் கொண்டதற்கமையவே, சிறிலங்காவுக்கு கடன்களை சீனா வழங்கியுள்ளதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு சீனா வழங்கிய 5 பில்லியன் டொலர் கடன்கள் குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த சனிக்கிழமை கவலை தெரிவித்திருந்தார். இதுகுறித்து சீனாவுடன் பேச்சு நடத்த சிறிலங்கா நிதியமைச்சர் விரைவில் பீஜிங் வருவார் என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து பீஜிங்கில் இன்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சன்யிங், “சிறிலங்காவின் அபிவிருத்தியை ஊக்குவிக்க உதவும் வகையில், பரஸ்பரம் நன்மையளிக்கும் கொள்கைகளுக்கு அமையவே கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறிலங்காவின் வேண்டுகோளுக்கு அமைய, கலந்து…

  17. சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் ஏமாற்றப்படுவதையோ அல்லது உதாசீனப்படுத்தப்படுத்தப்படுவதையோ அனுமதிக்க முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் தெரிவித்தார். ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான 28வது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொ டரில் கலந்துரையாடப்பட்டு பரிந்துரைக்கப்படும் விடயங்களை உலக நாடுகளின் பிரதிநிதிகள் கவனத்தில் எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தச் செய்வதன் மூலமே உண்மையான பலன் கிடைக்கும். மனித உரிமைகள் சில நாடுகளால் அலட்சியம் செய்யப்படுவதுடன், தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகின்றன. உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சில தவிர்க்கமுடியாத சூழ்நில…

  18. அதிகாரப்பகிர்வு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 13ம் திகதி இந்திய பிரதமர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். இதன் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் பிரதமர் சந்திக்க உள்ளது. 1987ம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு அமைய அதிகாரம் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இந்திநலையில் காணி காவல்துறை அதிகாரங்கள் மற்றும் 13ம் திருத்தச் சட்டம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். http://seithy.com/bre…

  19. இலங்­கையில் தமிழ் மக்கள் மீது நடத்­தப்­பட்­டது இனப்­ப­டு­கொ­லை­யே­யாகும் என்று யாழ்.சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவிச் செய­லாளர் ஜெப்ரி பெல்ட்­ட­னிடம் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­தி­ருக்­கின்றார். இலங்கை அர­சுக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் சுமு­க­மான உறவு நில­வ ­வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்பாகும் என்றும் வலியுறுத்திய அவர்,வடமாகாண சபையில் நிறை­ வேற்­றப்­பட்ட இன அழிப்பு தொடர்­பான பிரே­ர­ணை­யுடன் ஆவ­ணங்­க­ளையும் ஐ.நா.உதவிச் செயலாளரிடம் கைய­ளித்துள்ளார். இலங்­கைக்­கான விஜயத்தை மேற் ­கொண்டு யாழ்ப்­பாணம் வருகை தந்த ஐக்­கிய நாடு­களின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவிச்செயலாளர் ஜெப்ரி பெ…

  20. இலங்கையில் ஒரு கிளர்சிச் சதி இடம்பெற்றிருக்கின்றது. இதன் பின்னணியில் ரோ (இந்தியாவின் புலனாய்வுப் பிரிவு) இருந்துள்ளது” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சீற்றத்துடன் தெரிவித்திருக்கின்றார். “கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களும், வடபகுதி மக்களும் சர்வதேச சக்திகளால் தவறாக நடத்தப்பட்டுள்ளார்கள்” எனவும் பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கிலத் தினசரியான ‘டோன்’ பத்திரிகைக்கு மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். தங்காலையிலுள்ள தன்னுடைய கால்டன் இல்லத்தில் வைத்து டோன் பத்திரிகையாளருக்கு மகிந்த பேட்டியளித்தார். “இப்போதும் நீங்கள் ஜோதிடத்தை நம்புகின்றீர்களா?” எனக் கேட்கப்பட்டபோது, “இப்போது நான் நம்பவில்லை” எனக் கூறி பலமாகச் சிரித்தார். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போரா…

    • 8 replies
    • 1.2k views
  21. கிழக்கு மாகாண சபையில் புதிய அமைச்சுப் பொறுப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வில் புதிய அமைச்சர்களாக நால்வர் பதவியேற்றுக் கொண்டனர். கிழக்கு மாகாண கல்வியமைச்சராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபானியும், சுகாதார அமைச்சராக ஸ்ரீ ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூரும் நியமிக்கப்பட்டுள்ளனர் விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக துரைராஜசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். வீதி அபிவிருத்தி அமைச்சராக ஆரியவத்தமி கலப்பதி நியமிக்கப்பட்டுள்ளார் http://www.tamilmirror.lk/140934#sthash.ioawVSia.dpuf

    • 3 replies
    • 448 views
  22. இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்த்துவைப்பார் என்று தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மிக நெருக்கமாக நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.அதேபோன்று தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவும் செயற்படுவார். இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்கான கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக இந்தியா ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டு நாமல், தனது டுவிட்டர் பக்கத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கலந…

  23. கோத்தபாய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து இளைஞர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என்பதனை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடற்படை அதிகாரிகளால் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களை கடத்திச் சென்று திருகோணமலை கோத்தபாய முகாமில் தடுத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, புலனாய்வு பிரிவினருக்கு நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். புலனாய்வு பிரிவின் கூட்டு கொள்ளை விசாரணைப் பிரிவினால் நீதிமன்றில் சாட்சியமளித்த போது தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவொன்றின் விசாரணைகளின் போது இளைஞர்கள் காணாமல் போன வி…

  24. வடக்கு மக்களின் பேராதரவுடன் நான் இன்று ஜனாதிபதியாகி உங்கள் முன்வந்துள்ளேன். வடக்கில் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்கான எனது உறுதிமொழிகளை நம்பியே மக்கள் வாக்களித்தார்கள். எனவே மக்கள் விருப்பத்தை நான் ஏற்படுத்துவேன். வடக்கு, கிழக்கு, தெற்கு மக்களை மனங்களால் ஒன்றிணைப்பதே எனது நோக்கம். எனவே அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அதன்மூலம் நாம் அனைவரும் இந்த நாட்டில் பயம், சந்தேகம் இன்றி ஒற்றுமையாக வாழமுடியும். இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும்…

    • 0 replies
    • 231 views
  25. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக விசாரணைக்கான பொறிமுறையை அமைப்பதற்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம். எனவே சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகமும் புலம்பெயர் அமைப்புக்களும் எம்மீது நம்பிக்கை வைக்கவேண்டும். எங்களுக்கு உதவுவதுடன் எமது கரங்களை பலப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். உள்ளக விசாரணை பொறிமுறையை அமைப்பது தொடர்பில் தென்னாபிரிக்காவுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி அனுபவங்களை பெற்றுவருகின்றோம். ஜனவரி எட்டாம் திகதி தேர்தல் தற்போது மனித உரிமைகளை பாதுகாக்கவும் நல்லிணக்கத்தை அடையவும் பாரிய சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தை அரசாங்கம்…

    • 1 reply
    • 235 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.