ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
யாழ்ப்பாணப் பொலிஸார் என்றும் இல்லாதவாறு இன்று தங்களுடைய கடமைகளை சரியாக செய்தமையினைக் காணக்கூடியதாக இருந்தது. யாழ். நகரில் போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பொலிஸார் எவ்வித தேவையற்ற தலையீடுகளிலும் ஈடுபடவில்லை. மாறாக என்றும் இல்லாதவாறு பொறுப்புடன் வாகன போக்குவரத்தை ஒழுங்கமைத்தும் மக்களது போராட்டத்திற்கு இடையூறு ஏற்படாத வகையிலும் தங்களுடைய பணியை மேற்கொண்டனர். எனினும் கடந்த காலங்களில் தமிழ் கட்சிகளின் போராட்டம் எனின் போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கோருவதும் , போராட்டக்காரர்களை சுதந்திரமாக செயற்பட அனுமதி மறுப்பதும் பொலிஸாரது வேலையாக இருந்து வந்தது. மேலும் பேரணிகளுக்கு தடை விதிப்பது என அவர்களது ஜனநாயக போராட்டமும…
-
- 3 replies
- 614 views
-
-
காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி இன்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.. யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உறவுகள் காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா?உலகே உனக்கு கண்ணில்லையா?போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கண்ணீர் மல்க தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். மேலும் இந்தப் போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன், தமிழ்த்தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் காணாமற் போன உறவுகள் ஆகியோர் கலந்து கொண்டனர். http://onlineuthayan.com/News_More.php?id=771653884622288062
-
- 0 replies
- 351 views
-
-
அமெரிக்க பரப்புரை நிறுவனங்களை நட்டாற்றில் கைவிட்ட மகிந்த ஆட்சி FEB 21, 2015 | 11:43by கார்வண்ணன்in செய்திகள் அமெரிக்காவில் சிறிலங்காவின் நன்மதிப்பை உயர்த்துவதற்கு பரப்புரை நிறுவனங்களுடன் முன்னைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகள் புதிய அரசாங்கத்தினால் முறித்துக் கொள்ளப்பட்டுள்ளன. போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சிறிலங்கா வோசிங்டனில் நண்பர்களை வளைத்துப் போடுவதற்காக, பத்தாயிரக்கணக்கான டொலர்களை மாதம் தோறும், இந்த பரப்புரை நிறுவனங்களுக்கு முன்னைய அரசாங்கம் செலுத்தி வந்தது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்தே, அமெரிக்க பரப்புரை நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்ப…
-
- 0 replies
- 361 views
-
-
சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது என்றும் புலிகளே அவரைக் கொன்றிருக்கலாம் என மறைமுகமாகவும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிரபாகரனின் இளைய மகன் தொடர்பில், இராணுவத் தளபதி என்ற வகையில் தனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்றும் அவரது சடலம் கிடைத்தது என்றுகூட தனக்கு அறிக்கை கிடைக்கவில்லை என்றும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்டபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். பாலச்சந்திரன் என்பவர் பிரபாகரனின் இளைய மகன். அவர் ஆயுதம் ஏந்திய பெரியவர் அல்லர். ஒரு சிறு பிள்ளை என்பது பார்த்தவு…
-
- 5 replies
- 773 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜெனிவா ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் வெளியிடப்படவுள்ளது. எனினும், சாட்சியாளர்கள் தொடர்பான தகவல்களை 2035 ஆம் ஆண்டு வரை வெளியிடக் கூடாது ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு தடைவிதித்துள்ளது. அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்களை விசாரணைக்குழு உறைக்குள் இட்டு சீல் வைத்துள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்க்குற்ற விசாரணைக்குழுவின் முன் சாட்சியாளர்கள் சாட்சியமளித்துள்ளதுடன் 4 ஆயிரம் எழுத்து மூலமான சாட்சியங்கள் முவைக்கப்பட்டிருந்தன. இதனைத் தவிர இரண்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் 5 இலங்கை ஊடகவியலாளர்கள் எழுத்துமூலமான சாட்சிங்களை முன…
-
- 1 reply
- 454 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தாயான ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கோரி, அவரது மகள் விபூசிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.தற்போது மகாதேவா ஆச்சிரமத்தில் பராமரிக்கப்பட்டுவரும் சிறுமி விபூசிகா, தனது தாய் கைது செய்யப்பட்டமைக்கான விபரம் முழுவதையும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=126954&category=TamilNews&language=tamil
-
- 7 replies
- 722 views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மற்றுமொரு தமிழர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து அபுதாபிக்கு சென்ற இவர் அங்கிருந்து இத்தாலிக்கு போலிக் கடவுச்சீட்டின் மூலம் செல்ல முயற்சித்த போது அந்நாட்டு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு இன்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், கட்டுநாயக்க சர்…
-
- 0 replies
- 664 views
-
-
16000 இலங்கை அகதிச் சிறுவாகள் நாடற்றவர்களாக இந்தியாவில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சிறுவர் சிறுமியருக்கு எந்தவொரு நாட்டினதும் குடியுரிமை கிடையாது என சுட்டிக்காட்டப்படுகிறது. இந்திய அகதி முகாம்களில் பிறந்த சிறுவர் சிறுமியர் பிறந்து ஒராண்டு காலத்திற்குள், இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கடந்த மூன்று தசாப்த காலத்தில் 24000 சிறுவர் சிறுமியர்கள் பிறந்துள்ள போதிலும், 8000 சிறுவர் சிறுமியர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய சிறுவர் சிறுமியர்கள் பற்றிய விபரங்களை பதிந்து அவர்களுக்கான குடியுரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என ஈழ அகதி புனர்வாழ்வு அமைப்பு கோரியுள்ளது. முன்ன…
-
- 2 replies
- 438 views
-
-
சீனாவுக்கு நிலத்தை சொந்தமாக வழங்க முடியாது – சிறிலங்கா FEB 20, 2015 | 11:25by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் 1.5 பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரில், சீனாவுக்கு ஒரு பகுதி நிலத்தை சொந்தமாக வழங்கும் முன்னைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டு விதி மீளாய்வு செய்யப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்த நிலப்பகுதியை சீனா தனது கடற்படை செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தக் கூடும் என்ற கவலை காரணமாகவே இந்த உடன்பாட்டு விதி குறித்து மீளாய்வு செய்யப்படுவதாக சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 1.5 பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும், கொழும்புத் துறைநகரத்தில் 108 ஹெக்ரெயர் நிலப்பரப்பை சீனாவின் தொடர்பாட…
-
- 3 replies
- 615 views
-
-
ஜோதிடர் சுமணதாஸ அபேகுணவர்த்தனவின் ஆருடத்தை நம்பி ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டாம் என்று தாம் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை தெரிவித்ததாக இலங்கையின் முன்னணி பேராசிரியர் கார்லோ பொன்சேகா தெரிவித்துள்ளார். தாம் மஹிந்தவை சந்திக்க முடியவில்லை என்றபோதிலும் முன்னாள் அமைச்சர் டியு குணசேகரவின் மூலம் அவரிடம் இந்த விடயத்தை வலியுறுத்தியுதாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஜோதிடத்தை வைத்துக் கொண்டு அல்ல, விஞ்ஞானத்தின் அடிப்படையில் ஏனைய விடயங்களை கருத்திற்கொண்டே இந்த ஆலோசனையை மஹிந்தவிடம் தாம் தெரிவித்தாக அவர் தெரிவித்துள்ளார். வளர்ந்துவரும் மனித இனத்துக்கு இன்றும் மூடநம்பிக்கை பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே மாலித் ஜெயதிலக்க என்ற ஆய்வாளர், சிங்கள பௌத்தர்களின்…
-
- 0 replies
- 359 views
-
-
கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் கீழ் இவ்வாறு இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=126950&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 316 views
-
-
முல்லைத்தீவு மாவட்டதில் உள்ள உடையார்கட்டு பாடசாலையை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்திற்காக ஜப்பான் அமெரிக்க டொலர் 215,866 ஐ வழங்கியுள்ளது. ஜப்பான் அரசாங்கம் அமெரிக்கன் டொலர் 215,866 (28 மில்லியன் இலங்கை ரூபாயை) 'முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு பாடசாலை கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்திற்கான' உதவித் தொகையாக, தனது தூதரகத்தின் அடிமட்ட மனித பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது. 'முல்லைத்தீவு மாவட்டதில் உள்ள உடையார்கட்டு பாடசாலையை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டமானது' சர்வதேச சேவ் த சில்ரன் நிறுவனத்தினால்; ,மாவட்டத்தின் பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும். பொருத்தமான சூழ்நிலையில் கல்வியைப் பெறுவதன் ஊடாக சிறுவர் உரிமையை யதார்த்தமா…
-
- 1 reply
- 821 views
-
-
தெற்கில் மஹிந்த கும்பலினது ஊழல் மோசடிகள் அம்பலத்திற்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எடுபிடிகளது ஊழல்களும் அம்பலமாகத்தொடங்கியுள்ளது. அவ்வகையில் கூட்டமைப்பு சார்பு பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் பூ.சஞ்சீவனின் பல மில்லியன் ஊழல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது. தனது பிரதேச சபையில் தற்காலிகமாகப் பணியாற்றி வந்திருந்த ஏழைத் தொழிலாளர்களிற்கு நிரந்தர வேலைகளை வழங்குவதாகக்கூறி சஞ்சீவனினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களே தற்போது அம்பலத்திற்கு வரத்தொடங்கியுள்ளது. நிரந்தர பணி நியமனம் வழங்குவதாக உறுதியளித்து பலரிடமும் இருந்து இரண்டு இலட்சம் முதல் ஜந்து இலட்சம் வரை இலஞ்சப்பெறப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி தலைவர் மாவ…
-
- 9 replies
- 1.3k views
-
-
முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் முன்னின்று நுகேகொடை அங்காடிக்கு எதிரே நடத்திய கூட்டம், இனவாதத்தை தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்த நினைக்கும் ஒரு மிகப்பழைய முயற்சியாகும். இந்த கூட்டத்தை கண்டு தமிழ் பேசும் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை. இந்த நாட்டை மீண்டும் வரலாற்றை நோக்கி திருப்பி அழைத்து போகும் இந்த முயற்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பையும், சுதந்திர கட்சியையும் பிளவுபடுத்துவதிலேயே போய் முடியும். தங்களை தாங்களே பிளவுபடுத்திக்கொண்டு பலவீனப்படும் வேலையை இவர்களே செய்துகொள்கிறார்கள். இது இந்த நாட்டில் வாழும் ஜனநாயக சக்திகளுக்கு சாதகமானது. எனவே முடிந்து போன காட்டாட்சி மீண்டும் தலையெடுத்து விடுமோ என்று ந…
-
- 1 reply
- 434 views
-
-
காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி இன்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது. யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உறவுகள் காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா?உலகே உனக்கு கண்ணில்லையா?போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கண்ணீர் மல்க தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். மேலும் இந்தப் போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன், தமிழ்த்தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் காணாமற் போன உறவுகள் ஆகியோர் கலந்து கொண்டனர். http://www.pathivu.com/news/37990/57//d,article_full.aspx
-
- 0 replies
- 1.1k views
-
-
உலக நடப்புக்கள் எதுவும் அறியப்படாத வகையில் திருகோணமலை கடற்படை முகாமில் 35 குடும்பங்களும் அதேமுகாமில் கோத்தா முகாம் என்றழைக்கப்படுகின்ற பிறிதொரு முகாமில் 700 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று சபையில் தகவல் வெளியிட்டது. அத்துடன் திருகோணமலை கடற்படை முகாம் தொடர்பான இந்த சந்தேகங்கள் தொடர்பிலும் அங்கு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? சித்தரவதைகள் இடம்பெற்றனவா அவர்கள் இருக்கின்றனரா? இல்லாது செய்யப்பட்டு விட்டனரா என்பது தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சு உடனடியாக கவனம் செலுத்தி அங்கு சென்று ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தியது. மேலும், காணாமல் போனோரை கண்டுபிடிப்பதற்கென நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினர் எத்தகைய தகவல்களை திரட்டியுள்ளனர் எ…
-
- 4 replies
- 929 views
-
-
ஏமாற்றத்துடன் ஓய்வுபெறுகிறார் தயா ரத்நாயக்க – இராணுவத் தளபதி நியமனத்தில் கயிறிழுப்பு FEB 21, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவுக்கு புதிய அரசாங்கம் சேவை நீடிப்பு வழங்க மறுத்துள்ள நிலையில், அவர் இன்றுடன் ஓய்வுபெற்றுச் செல்கிறார். சிறிலங்கா இராணுவத்தின் 20வது தளபதியாக இருப்பவர் லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க. 2013ம் ஆண்டு, இராணுவத் தலைமையில் மாற்றம் செய்யப்பட்ட போது, சேவை மூப்பு வரிசையில், முதல் நிலையில் இருந்த மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவை ஒதுக்கி விட்டு, அவரை விட இளையவரான லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார். இதையடுத்தே ரஷ்யாவுக்கான துணைத் தூதுவர் பதவி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவு…
-
- 1 reply
- 1.6k views
-
-
அனைத்துலகத்தைப் பகைத்துக் கொள்ள முடியாது என்பதால் தான் உள்ளக விசாரணை – மங்கள சமரவீர FEB 21, 2015 | 2:15by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அனைத்துலக சமூகத்தைப் பகைத்துக் கொண்டு நாம் செயற்பட முடியாது என்பதால், அவர்களின் இணக்கப்பாட்டுடன், உள்ளகப் பொறிமுறையின் ஊடாக போர்க்குற்ற வவிசாரணைகளை முன்னெடுப்போம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணை தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் எழுதிய கடிதத்தை நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிலங்கா டி சில்வா விடுத்த கோரிக்கைக்குப் பதிலளித்து நேற்று உரையாற்றிய போதே மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டார். 2009 ஆம்…
-
- 0 replies
- 351 views
-
-
பிரபாகரனின் செவ்வியை அனுமதித்த ரணிலுக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு FEB 21, 2015 | 2:01by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியை மறுபிரசுரம் செய்த புரொன்ட்லைன் சஞ்சிகையை, சிறிலங்காவில் விற்பனைக்கு அனுமதிக்க உத்தரவிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, சிங்கள அடிப்படைவாத அமைப்பான சிங்கள ராவய காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளது. புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் 1987ம் ஆண்டு வழங்கியிருந்த செவ்வியை புரொன்ட்லைன் சஞ்சிகை, பெப்ரவரி 06ம் நாள் வெளியான தனது 30 வது ஆண்டு நிறைவு இதழில் மறுபிரசுரம் செய்திருந்தது. இந்த இதழ்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர். இவற்றை விடு…
-
- 0 replies
- 293 views
-
-
வாவி முகாமைத்துவத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வாவியின் எல்லையை பேணும் நோக்கோடு தென்னைமரங்களை நடுவதற்காக பயனாளிகளுக்கு தென்னைமரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (20) திமிலைதீவில் இடம்பெற்றது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தினால் குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் செலவில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டத்திற்காக 400 தென்னைமரங்கள் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு நடுவதற்காக வழங்கப்பட்டன. வாவியில் மீன் இனங்கள் அழிவடைந்து வருவதனால் 370 கி.மீ. நீளமான வாவிக்கரையை பாதுகாக்கும் நோக்கோடு கண்ணா மற்றும் தென்னைமரங்களை வைத்து எல்லையிடும்; திட…
-
- 1 reply
- 396 views
-
-
மகிந்த ராஜபக்ச என்ற வீரனின் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது. தற்போது ஏற்பட்டுள்ளது சிறிய இடைவெளி மாத்திரமே. இவ்வாறு கூறியுள்ளார் விமல் வீரவன்ச. நுகேகொடையில் நடந்துவரும் மகிந்த ஆதரவு கூட்டத்தில் உரையாற்றய போதே இதனை தெரிவித்தார். “1815இல் கண்டி மன்னன் ராஜசிங்கனை தோற்கடிப்பதற்கு இறுதியில் வெள்ளையர்கள் கைக்கொண்டது பிரச்சார உத்தி. மன்னனை பற்றி அவதூறு பரப்பி மக்களை நம்ப வைத்தனர். அதுபோலத்தான் கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவை பற்றி இல்லாத பொல்லாததை சொல்லி, மக்களை நம்ப வைத்தனர். இந்த சூழ்ச்சியை உடைத்தெறிந்து மகிந்தவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவோம். இங்கு பல சுதந்திரக்கட்சிக்காரர்கள் வந்துள்ளனர். ஏனையவர்களையும் ஒன்று திரட்டுவது சிரமமான விடயமல்ல. மகிந்தவிற்கு தற்பொது நா…
-
- 23 replies
- 2.2k views
-
-
மார்ச் 2ம் நாள் ஜெனிவா செல்கிறார் மங்கள சமரவீர FEB 20, 2015 | 10:02by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வரும் 2ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லவுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வு வரும் 2ம் நாள் தொடக்கம், 27ம் நாள் வரை இடம்பெறவுள்ளது. வரும் மார்ச் 2ம் நாள், பேரவையில் உயர்மட்டப் பிரதிநிதிகளின் அமர்வு நடைபெறவுள்ளது. இதில் 65 நாடுகளில் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உயர்நிலைப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கே, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள…
-
- 2 replies
- 369 views
-
-
'நாம் நண்பர்கள்' அமைப்பினூடாக வலி.தென்மேற்கு சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த ஒரு தொகுதியினருக்கு கோழி வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவிகள் வியாழக்கிழமை (19) வழங்கப்பட்டன. அன்றாட வாழ்க்கைக்காக கஷ்டப்படுபவர்கள் என வலி.தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தரினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் ஒரு தொகுதியினருக்கே இவ்வாறு கோழி வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. கடற்தொழிலின் போது காலில் நங்கூரம் தாக்கி கால் முறிவடைந்து நடக்க முடியாதிருக்கும் கல்வி கற்கும் நான்கு பிள்ளைகளை கொண்ட வாழ்வாதாரம் எதுவுமின்றி அல்லல்படும் குடும்ப தலைவரை கொண்ட குடும்பம் ஒன்றிற்கும், மாற்றுவலுவுள்ள மகளைக் கொண்ட கணவனை இழந்த தாய் ஒருவருக்கும், கணவனை இழந்த இரு பெண்பிள்…
-
- 0 replies
- 255 views
-
-
சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா – அதிபர் செயலகம் அறிவிப்பு FEB 20, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சிறிலங்காவின் தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க வரும், 21ம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார். இதையடுத்தே, சிறிலங்காவின் 21வது இராணுவத் தளபதியாக, மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் இவருக்கான நியமனக் கடிதம் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் கையளிக்கப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா வர…
-
- 1 reply
- 1.6k views
-
-
கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் 28 தமிழ் இளைஞர்களை உயர் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட கும்பல் ஒன்று படுகொலை செய்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த உயர் கடற்படை அதிகாரிகள் குழுவில் முன்னாள் கடற்படைப் பேச்சாளர் ஒருவரும் உள்ளடங்குவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. கடத்தல்கள் மற்றும் கொலைகளுடன் தொடர்புடைய மூன்று உயர் கடற்படை அதிகாரிகளில் ஒருவர் தற்போது வெளிநாட்டில் பயிற்சி நெறியொன்றில் கலந்து கொண்டுள்ளதாகவும், விரைவில் அவர் இலங்கைக்கு அழைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை மற்றும் கொழும்பில் அமைந்துள்ள இரண்டு கடற்படை முகாம்களில் இந்த இளைஞர்கள் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்…
-
- 1 reply
- 636 views
-