Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தே வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று செத்சிரிபாயவின் புதிய கட்டிடத்தில் உள்ள மகளிர் விவகார அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்ற வைபவத்திலே இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு, கிழக்கு உட்பட ஏனைய பிரதேசங்களிலும் துன்பப்பட்ட தமிழ் பேசும் பெண்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சேவையாற்றுவேன். இந்த பிரதியமைச்சுப் பொறுப்பை தனக்கு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் ஐ.தே.கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்க…

  2. சிறுபான்மை தமிழ் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனவரியில் இடம்பெற்ற தேர்தல் மாற்றத்திற்கான, நல்லிணக்கத்திற்கான தேர்தல். வடக்கில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு மட்டுமின்றி, சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களை கூட்டவுள்ளது. முன்னைய அரசு சீனா அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் ட உடன்படிக்கைகள் குறித்து தற்போதைய அமைச்சர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆனாலும் எல்லை அடிப்படையில் சீனாவுடனான உறவுகள் தொடரும். கடந்த அரசின் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்துவதில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் காணப்பட்ட வர…

    • 7 replies
    • 864 views
  3. யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் முகப்பு பகுதியில் மீண்டும் இராணுவக் குடியிருப்பு என அடையாளப்படுத்தும் பெயர் பலகையால் வலி,வடக்கு மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறித்த பெயர் பலகை முன்னரும் ஒருதடவை அமைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து சிறிது காலம் அகற்றப்பட்டிருந்த பெயர்ப் பலகை தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தின் வாயிலில் வளைவு அமைக்கப்பட்டு அதன்மேல் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. புதிதாக ஆட்சியினை கைப்பற்றியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலமையிலான அரசு வடமாகாணத்தில் படையினரினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமிழ் மக்களுடைய நிலங்களை விடுவிப்பதாக வாக்குறுதி வழங்கியிருக்கும் நிலையில், வலி,வடக்கு…

  4. கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் காரணங்கள் நியாயமானது என்ற போதிலும், மாகாணசபை விடயங்களில் தான்ன் தலையிட விரும்பவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் ஆட்சியமைப்பது தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகர சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்திருந்தனர்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஜனாதிபதியுடனான சந்திப்பினை மேற்கொண்டிருந்ததுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமது ப…

  5. மோடியின் கொழும்பு வருகையை அடுத்து சீனா செல்கிறார் மைத்திரி JAN 24, 2015 | 1:50by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தையடுத்து, சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா அதிபராகப் பதவியேற்ற பின்னர், தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார். அடுத்தமாதம் 11ம் நாளுக்கும் 15ம் நாளுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், அவர் புதுடெல்லிக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தக் காலப் பகுதிக்குள், சிறிலங்கா அதிபரின் பயணத்தை ஒழுங்கு செய்யுமாறு இந்தியத் தரப்புக்கு, சிறிலங்கா அரசாங்கத்தினால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில், க…

  6. மகிந்த சொல்வது பொய் – சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் JAN 24, 2015 | 1:21by கார்வண்ணன்in செய்திகள் தனது வீட்டை சிறிலங்கா காவல்துறையினர் சோதனையிட்டதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பொய்க் குற்றச்சாட்டுக் கூறுவதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள தனது வீட்டை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூறிய குற்றச்சாட்டு பொய்யானது. தங்காலையில் உள்ள அவரது வீட்டில் தேடுதல் நடத்தப்படவில்லை. கார்ல்டன் தோட்டம் மற்றும் மண்டபம் என்பன வீரகெட்டியவில் தான் உள்ளன. அங்கு கடல் விமானம் மற்றும் லம்போகினி கார் என்பன மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபருக்கு கிடைத்த தகவலை அ…

  7. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா – சிறிலங்கா பேச்சு JAN 24, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் முன்னைய ஆட்சிக்காலத்தில் சீர்குலைந்திருந்த அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை, மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து, கொழும்பில் நேற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா பிரதமரின் செயலகத்தில் இடம்பெற்ற இந்தப் பேச்சுக்களில், அமெரிக்கத் தூதரகத்தின் பதில் தூதுவரும், இராஜதந்திர விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியுமான, அன்ட்ரூ மான், சிறிலங்காவின் கொள்கை நடைமுறைப்படுத்தல், பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் பேச்சுக்களின் போது இருதரப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப…

  8. பிரதம நீதியரசர் மொகான் பீரிசிடம் சிஐடியினர் விசாரணை JAN 24, 2015 | 0:29by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடந்த கடந்த 8ம் நாள் இரவு இராணுவத்தின் உதவியுடன் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு இடம்பெற்ற சதித்திட்டம் தொடர்பாக, பிரதம நீதியரசர் மொகான் பீரிசிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த சதித்திட்டம் தொடர்பாக செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டில், அந்த நேரத்தில் அலரி மாளிகையில், பிரதம நீதியரசர் மொகான் பீரிசும் இருந்ததாகவும், அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. கடந்த 9ம் திகதி அதிகாலை 5 மணியளவில் அலரி மாளிகைக்கு ரணில் விக்கிரமசிங்க சென்ற போது, அங்கு மொகான் பீரிஸ் நின்றிருந்தார். இ…

  9. காலியில் மேலும் மூன்று ஆயுதக் களஞ்சியங்கள் – மேஜர் சேனாதிபதி நாட்டை விட்டு வெளியேத் தடை JAN 24, 2015 | 0:15by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் காலி துறைமுகத்தில் ஆயுதக் கப்பல் ஒன்று தரித்து நின்றது தொடர்பாக, அந்தக் கப்பலுக்குச் சொந்தமான தனியார் பாதுகாப்புச் சேவை நிறுவனத்தின் தலைவரான மேஜர் நிசங்க சேனாதிபதி நாட்டை விட்டு வெளியேத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவன்ற் கார்டே கடல் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவரான, மேஜர் நிசங்க சேனாதிபதி, காலித் துறைமுகத்தில் பிடிபட்ட ஆயுதக் கப்பல் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை வெளிநாடு செல்வதற்கு, கொழும்பு பிரதம நீதிவான் நேற்று தடைவிதித்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்றே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பி…

  10. கொழும்பில் இராணுவம் குவிக்கப்பட்டது உண்மையே – தேர்தல் ஆணையாளர் JAN 23, 2015 | 19:10by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்பில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அருகில் சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது உண்மையே என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தேர்தல் நாளன்று இராணுவத்தைப் பயன்படுத்தி ஆட்சியைத் தக்க வைக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அது குறித்துக் கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச எனது செயலகத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. 2010ம் ஆண்டில் தான் அவர் இங்கு இறுதியாக வந்தார். ச…

  11. மகிந்தவின் தோல்விக்கு பசில் ராஜபக்சவே காரணம் – விமல் வீரவன்ச குற்றச்சாட்டு JAN 23, 2015 | 9:49 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அதிபர் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு அவரது சகோதரர் பசில் ராஜபக்சவே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச. மகிந்த ராஜபக்சவை விமல் வீரவன்சவே அழித்துக் கொண்டிருப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியது குறித்து பி.பி.சி சிங்களக்குக் கருத்து வெளியிட்ட அவர், பசில் ராஜபக்ச, எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை தடுப்பதற்கு மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் மகிந்த ராஜபக்ச குடும்ப ஆ…

  12. விரைவில் உள்நாட்டு விசாரணைக் குழு – அமைச்சர் ராஜித தகவல் JAN 23, 2015 | 9:28by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த உள்நாட்டு விசாரணைக் குழுவொன்று விரைவில் அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை சீன செய்தி நிறுவனமான சின்ஹுவாவிடம் வெளியிட்டுள்ளார் சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன. இந்த உள்நாட்டு விசாரணைக்குழுவை நியமிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடனும், ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைக் குழு பொருத்தமான நிபுணர்களை கொண்டதாக இருக்கும் என்றும் விரைவில் இது நியமிக்கப்படும் என்றும் அவர் ம…

  13. வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பாதுகாப்புக் செயலர் ஆலோசனை JAN 23, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்கவை இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் நேற்று தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. புதிய பாதுகாப்பு செயலராகப் பதவியேற்ற பின்னர், வெளிநாட்டுத் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பஸ்நாயக்க நடத்தியுள்ள முதல் சந்திப்பு இதுவாகும். அவுஸ்ரேலிய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஜாசன் சீயர்ஸ், பங்களாதேஸ் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் ஸா அஸ்லாம் பர்வேஸ், சீனத் தூதரகத்தில் உள்ள இராணுவ,கடற்படை, வான…

  14. லண்டன்: ராஜபக்சேவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் தங்களது வாக்குகளைப் பயன்படுத்தினர். சிறிசேன அரசால் தமிழ் மக்களுக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சிறிசேன அரசை நம்பவும் முடியாது என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கையின் புதிய அரசாங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களான பாலகுமாரன், புதுவை இரத்தினதுரை, யோகி மற்றும் திலகர் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும். வன்னி, முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இவர்கள் அனைவரும் இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவை தோற்கட…

    • 41 replies
    • 2.6k views
  15. ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 53 வாகனங்கள் பிட்டகோட்டே, ஸ்ரீஜயவர்த்தனபுர வாகன சாலையிலிருந்து மிரிஹான பொலிஸாரினால் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி வாகன சாலையிலிருந்து பல்வேறு வகைகளைச் சேர்ந்த 53 வாகனங்கள் தரித்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமானது என்று பாதுகாப்பு காவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=125182&category=TamilNews&language=tamil

  16. மாமியார் வீட்டில் அடைக்கலம் தேடியுள்ள கோத்தா – ‘சதித்திட்டம்’ குறித்து விபரிக்கிறார் JAN 22, 2015 | 0:49by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் அலரி மாளிகையை எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிடவுள்ளதாக கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்தே,அதிபர் தேர்தல் நாளன்று இரவு தாம், அலரி மாளிகைக்குச் சென்றதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த 9ம் நாள் அதிகாலை அலரிமாளிகையில் சதிப்புரட்சிக்குத் திட்டமிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தேர்தல் முடிவுகளையடுத்து, காலையில் அலரி மாளிகையை முற்றுகையிட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்தே அதிகாலையில் அலரி மாளிகைக்குச் சென்ற…

  17. கூட்டமைப்பிற்கு நன்றி கூறிய பிரதியமைச்சர் விஜயகலா மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை செத்சிரிபாயவின் புதிய கட்டிடத்தில் உள்ள மகளிர் விகார அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் போது உரையாற்றிய பிரதியமைச்சர், எமது அமைச்சின் ஊடாக வட கிழக்கு உற்பட ஏனைய பிரதேசங்களிலும் துண்பப்பட்ட தமிழ் பேசும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு சேவையாற்றவுள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாது அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பிரதேசங்களிற்கு அமைச்சின் ஊடாக ஆகக் கூடிய நிதியைப் பெற்று கொடுப்பேன். மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக ஆதரவளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நான் நன்றி தெரிவிப்பதோடு எனது பிரதியமைச்சர் பொற…

  18. கிளிநொச்சியில் மோதிக் கொண்ட பேருந்து ஊழியர்கள் இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி சாலை ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி இராமநாதபுரம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இ.போ.ச ஊழியகளுக்கும், தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இந்தக் கைகலப்பை தொடர்ந்து அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=625093827623195608#sthash.A5KZDXmE.dpuf

  19. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஸவே இன்னமும் திகழ்வதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் தலைவராக மஹிந்த ராஜபக்ஸவே பதவி வகிப்பதாகவே தம்மிடம் ஆவணங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்ட போதிலும் இதுவரையில் அது குறித்த உத்தியோகபூர்வ ஆவணங்கள் தேர்தல் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சுமார் பத்து நாட்ளுக்கு முன்னதாக மஹிந்த ராஜபக்ஸ சுதந்திரக் கட்சியின் தலைவர் எனவும், அனுர பிரியதர்சன யாபா பொதுச் செயலாளர் எனவும் கடிதமொன்று கிடைக்கப்பெற்றது என அவர் தெரிவித்துள்…

  20. :: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- முன்னைய அரசாங்கத்தின் தோல்விக்கு பின்னர் மீள ஓப்படைக்கப்படாத 50 ற்கும் மேற்பட்ட வாகனங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் குண்டுதுளைக்காத வாகனங்களும் உள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 53 வாகனங்கள் கொழும்பின் வெற்றுக் காணி ஒன்றிலிருந்து மீடகப்பட்டு உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 128 வாகனங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் காணமற் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 53 வாகனங்களும் எவ்வாறு அந்த இடத்திற்கு வந்தன என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றோம் எனவும் பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார். பல வாகனஙகள சேதமடைந்துள்ளன, சில அவசரஅவசரமாக கைவிடப்பட்டுள்ளன போல தோன்றுகின்றது, அவற்றினுள்…

  21. தமிழர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாண ஆளுனராக கே.சீ.லோகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். தென் மாகாண ஆளுனரான ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர், முன்னாள் அமைச்சருமான ஹேமகுமார நாணயக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார். வட மேல் மாகாண ஆளுனராக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் முன்னாள் அமை;சருமான அமரா பியசீலி ரட்நாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115855/language/ta-IN/article.aspx

  22. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்துதான் ஆட்சியமைக்க வேண்டும். அதில் சிங்கள மக்களும் நிச்சயம் உள்வாங்கப்பட வேண்டும். ஆனால் தமிழர்களை முஸ்லிம்களோ முஸ்லிம்களை தமிழர்களோ விட்டுவிட்டு கிழக்கில் நிர்வாகத்தை அமைப்பது நியாயமற்ற செயல் என்பதே எமது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உயைாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சுமந்திரன் எம்.பி. தொடர்ந்தும் உரையா…

  23. தமிழரின் கலாசாரம் திட்டமிட்ட அடிப்படையில் சீரழிக்கப்படுகிறது! - அத்துரலிய ரத்தின தேரர். [Wednesday 2015-01-21 09:00] மதுவால் தமிழரின் கலாசாரம் திட்டமிட்ட அடிப்படையில் சீரழிக்கப்படுவதாகவும், இந்து சமயம் இழிவுபடுத்தப்படுவதாகவும், குற்றம்சாட்டியுள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அத்துரலிய ரத்தின தேரர். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். அவர்களும் மதிக்கப்பட வேண்டும். வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். http://www.seithy.com/breifNews.php?newsID=125035&ca…

    • 14 replies
    • 867 views
  24. இவ்வளவு எளிமையான, சாதாரண வாழ்க்கையை வாழும் ஜனாதிபதி ஒருவரை தான் வாழ்க்கையில் சந்தித்ததில்லை எனவும், ஜனாதிபதி மீது தமக்கு புதுமையான அன்பும், கௌரவமும் ஏற்பட்டதாக புனித பாப்பரசர் பிரான்ஸ் தன்னிடம் கூறியதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற விசேட சந்திப்பொன்றிலேயே கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனைத் தெரிவித்துள்ளார். பாப்பரசரை வரவேற்பதற்காக நடத்தப்பட்ட விழாக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி செலுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இலங்கைக்கு பயணித்ததில் தாம் பெர…

  25. இலங்கை இராணுவத்தின் 133 உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புதிய இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். 28 பிரிகேடியர்கள், 33 கேர்ணல்கள், 54 லெப்டினன் கேணல்கள், 18 மேஜர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இராணுவ நியதிகளுக்கு அமைய ஓராண்டுக்கு இரண்டு தடவைகள் இடமாற்றங்கள் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த நியதியின் அடிப்படையில் இராணுவத்தினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே இடத்தில் இரண்டு ஆண்டுகள் கடமையாற்றியவர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதியின் பரிந்துரைக்கு அமைய இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 16ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன. h…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.