ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
13 Nov, 2025 | 07:06 PM முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் வியாழக்கிழமை (13) முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கான திடீர் வருகையின்போது அவரை அப்பகுதி பொதுமக்கள் வரவேற்று, பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து, கவிஞர் யோ. புரட்சி அவர்கள் தன்னுடைய “ஆயிரம் கவிதைகள்” நூலை தொல். திருமாவளவன் அவர்களிடம் கையளித்தார். பின்னர் திருமாவளவன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சென்றடைந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கான பொதுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். முள்ளி…
-
- 0 replies
- 106 views
-
-
13 Nov, 2025 | 03:21 PM தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார். 34 வருடங்களாக அரச சேவையில் பணியாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2025 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதியுடன் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தனது கடமையின் போது உதவிய முன்னாள் அமைச்சர்கள், அரசாங்க ஊழியர்கள், அமைச்சர்கள், பிரதம அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நன்றியை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/230252
-
- 0 replies
- 91 views
- 1 follower
-
-
2025 உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வார தேசிய நிகழ்வு நாளை ஆரம்பம் Published By: Digital Desk 1 13 Nov, 2025 | 01:29 PM 2025ஆம் ஆண்டுக்கான உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வார தேசியநிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (14) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. "நமது நிகழ்காலத்தைப் பாதுகாக்கவும், நமது எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்" என்ற தலைப்பில் தேசிய நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பு மையத்தால் இந்த தேசிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பின் போக்கைக் குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050 ஆம் ஆண்டளவில் நுண்ணுயிர் எதி…
-
- 0 replies
- 89 views
- 1 follower
-
-
13 Nov, 2025 | 12:47 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் பதிலளித்ததாவது, மின்சார கட்டணத்திற்கான பட்டியல்கள் இலங்கை மின்சார சபையினூடாக விநியோகிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த உள்ளூராட்சி நிறுவனங்கள் அதனை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. வீதி விளக்குக…
-
- 0 replies
- 81 views
- 1 follower
-
-
இலங்கையில் அதிகரிக்கும் தெருநாய்கள்! நாட்டில் வருடாந்தம் 250,000க்கும் அதிகமானோர் நாய்க் கடிக்கு ஆளாவதாக விலங்கு நலச்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக பெருகி வருவதால் குறித்த சம்பவங்களும் அதிகரித்து பதிவாவதாக அந்த சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் சம்பா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையை கட்டுப்படுத்த, நாய்களை கருத்தடை செய்யும் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட வேண்டும் என கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் தெரிவித்துள்ளார். அங்கு கருத்து தெரிவித்த விலங்குகள் நலச் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் கிஹான் தினுஷ்க கூறியதாவது: இலங்கையில் 20 முதல் 30 இ…
-
- 1 reply
- 146 views
- 1 follower
-
-
யாழ். பல்கலை நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி adminNovember 13, 2025 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக குரல் கொடுத்தேன். ஆனால் நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை. இது தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் முரணானது என நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதில் அரச தரப்பு எம்.பி ஒருவர், தனது அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவும், தன்னுடைய அனுமதியுடனுமே நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து , நாடாளுமன்ற உறுப…
-
- 1 reply
- 144 views
-
-
யாழ். மக்கள் எம்மை அன்புடன் வரவேற்றனர் – தர்ம யாத்திரை வந்த பிக்குகள் தெரிவிப்பு! adminNovember 13, 2025 யாழ்ப்பாணத்திற்கு நாங்கள் வந்து வித்தியசமான அனுபவங்களை பெற்றுக்கொண்டுள்ளோம். யாழ்ப்பாண மக்கள் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தனர் என கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் 170ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட பிக்குகள் தெரிவித்துள்ளனர் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த பிக்குகள் முன்னதாக யாழ் . பொது நூலத்திற்கு சென்று நூலகத்தை பார்வையிட்டதுடன் , நூலகர்களுடன் கலந்துரையாடி புத்தகங்களையும் அன்பளிப்பு செய்தனர். தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலை கழகத்திற்கும் , யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கும் நூல்களை பகிர்…
-
- 1 reply
- 185 views
-
-
வருகைப் பதிவேடு தாதியர்களை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக அல்ல adminNovember 12, 2025 வருகைப் பதிவேடு வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எந்த ஒரு பணியாளர்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இல்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் மாகாண நிர்வாகத்திற்குட்பட வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் தாதியர்களின் 24 மணி நேர பகிஸ்கரிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் 55 பிரதேச வைத்தியசாலைகளிலும் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 20க்குஉட்பட்டதாக இருக்கின்றது. ஆரம்ப மருத்துவ சுகாதாரப் பிரிவுகளிலும் மொத்த பணியாளர்களின் எண்ணிக்க…
-
- 0 replies
- 86 views
-
-
13 Nov, 2025 | 12:42 PM நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகளில் காணப்படுகின்ற பாதீனிச் செடிகளினை வேரோடு அகற்றுகின்ற பணியினை நல்லூர் பிரதேச சபை செவ்வாய்க்கிழமை (11) முதல் முன்னெடுத்து வருகின்றது. குறித்த செயற்றிட்டத்தினை வினைத்திறனாக தொடந்து முன்னெடுக்கும் வகையில் ஒரு பிரத்தியேக அணி உருவாக்கப்பட்டு அவர்கள் வீதியோரங்களில் காணப்படுகின்ற பாதீனியச் செடிகளினை உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அழித்து வருகின்றார்கள். நல்லூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இச் செயற்றிட்டம் தொடர்பில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் கருத்து தெரிவிக்கையில் வீதிகளில் காணப்படும் பாதீனிய செடிகளினை அழிக்கும் செயற்பாட்டினை எமது பணியாளர்கள் செய்து வருகின்றார்கள். இச் சம நேரத்…
-
- 2 replies
- 147 views
- 1 follower
-
-
யாழ். காணி விடுவிப்பு; நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடல்! யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் காணப்படும் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோர் இந்த கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கினர். தேசிய நல்லிணக்கச் செயல்முறையின் ஒரு பிரதான அங்கமாக காணப்படும் நிலம் தொடர்பான பிரச்சினைகளைத…
-
- 0 replies
- 79 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்! பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்செகுலரத்ன, குழுவின் அறிக்கை, பரிந்துரைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது குறித்து மதிப்பாய்வு செய்வதற்கும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை முன்மொழிவதற்கும் இந்தக் குழு அமைக்கப்பட்டதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு ஏப்ரல் 13 அன்று அறிவித்தது. பரந்த, உள்ளடக்கிய சீர்திருத்த செயல்முறையை உறுதி செய்வதற்காக, சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து உள…
-
- 0 replies
- 76 views
-
-
13 Nov, 2025 | 12:26 PM மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தக் குற்றம், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி . எம். மிஹால் முன்னிலையில் நேற்று புதன்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் நீண்ட விசாரணைகளின் பின்னர், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டார். எதிரி தரப்பிற்கு சார்பாக சட்டத்தரணி தினேஷன் ஆஜராகியிருந்தார். வழக்குத்தொடருநர் தரப்பிற்காக, அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆ…
-
- 0 replies
- 73 views
- 1 follower
-
-
13 Nov, 2025 | 11:36 AM மன்னாரில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தக் குற்றம், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு, நேற்று புதன்கிழமை (12) மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம். மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கில், வழக்குத்தொடருநர் தரப்பிற்காக அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார். எதிரி தரப்பிற்காக ஜனாதிபதி சட்டத்தரணி யு. ஆர். டி சில்வா ஆஜராகியிருந்தார். வழக்கு விசாரணையின் முடிவில், வழக்குத் தொடுநர் தரப்பி…
-
- 0 replies
- 72 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 1 13 Nov, 2025 | 08:43 AM இலங்கை, இந்திய கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படைகளுக்கு இடையிலான 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு சந்திப்பு கடந்த 11ஆம் திகதி, காங்கேசன்துறைக்கு வடக்கே உள்ள இந்தோ - இலங்கை கடல்சார் எல்லைக் கோட்டில் INS சுகன்யா கப்பலில் நடைபெற்றது. இரு நாடுகளின் கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படையினர் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பகிரப்பட்ட கடல்சார் சவால்களை எதிர்கொள்ள செயற்படுத்தக்கூடிய கூட்டு உத்திகளை ஆராய்வதும், உறவுகளை வலுப்படுத்துவதும் வருடாந்திர IMBL கூட்டத்தின் நோக்கமாக காணப்படுகிறது. வடக்கு கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் இலங்கை குழுவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதி…
-
- 0 replies
- 61 views
- 1 follower
-
-
வடக்கில் போதைப்பொருள் வியாபாரம் ; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் ; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர் 12 Nov, 2025 | 04:24 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனூடான பிரச்சினையின் பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் இருப்பதாக கூறுவதில் உண்மை இருக்கின்றது. இது மாபியாக்களுடன் தொடர்புபட்டுள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைந்துள்ளனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப…
-
-
- 3 replies
- 280 views
- 1 follower
-
-
12 Nov, 2025 | 11:55 AM கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், துணியால் கண்களை கட்டிக்கொண்டு வீதியில் நடந்துச் சென்று பார்வைக் குறைபாடுள்ளவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த விழிப்புணர்வு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பார்வைக் குறைபாடுள்ள இலங்கையின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவும் கலந்துகொண்டார். இதன்போது, கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், துணியால் கண்களை கட்டிக்கொண்டு வீதியில் நடந்துச் சென்றார். “நான் துணியால் கண்களை கட்டிக்கொண்டுள்ளேன், கண்பார்வை இல்லாமல் நடப்பது எப்படியிருக்கும் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன்," என கொழும்பு மேயர் வ்…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
12 Nov, 2025 | 04:18 PM (எம்.நியூட்டன்) தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடக்க விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் கௌரவ விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார். தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் தம்பிராசா யுகேஸ் தலைமையில் நடைபெறவுள்ள இத்தொடக்க நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா கலந்துகொள்கிற…
-
- 2 replies
- 200 views
- 1 follower
-
-
Nov 12, 2025 - 10:35 AM விதை நெல் உற்பத்தி செய்யும் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு காப்புறுதித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தக் காப்புறுதித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. விதை நெற்செய்கைக்கு வெள்ளம், வறட்சி, நோய்கள், பூச்சித் தாக்குதல்கள், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் காட்டு யானைகளினால் ஏற்படும் சேதங்களுக்கு இந்தத் திட்டம் காப்பீடு வழங்குகிறது. ஒரு ஏக்கர் செய்கைக்காக ஒரு போகத்திற்கு ரூ. 13,600/- தவணை செலுத்துவதன் ஊடாக ஒரு ஏக்கருக்கு ரூ. 180,000/- இழப்பீடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை கூறுகிறது. இந்…
-
- 1 reply
- 161 views
- 1 follower
-
-
Nov 12, 2025 - 07:04 AM அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 150 ரூபாவுக்கும் அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த நேற்று (11) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். இதன் விளைவாக, சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோகிராம் ரூபா 200 வரையிலும், உருளைக்கிழங்கின் விலை ஒரு கிலோகிராம் ரூபா 300 வரையிலும் உயரும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் பயிரிடும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைத்து அமைச்சர் இந்தக் கொள்வனவு விலைத் திட்டத்தை வெளியிட்டார். https://adaderanatamil.lk/news/cmhvbu92101jao…
-
-
- 1 reply
- 165 views
- 1 follower
-
-
ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் கைது! Nov 12, 2025 - 11:15 AM ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராமம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது இருவரும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmhvku4bc01jlo29n3kszllx7
-
- 6 replies
- 493 views
- 1 follower
-
-
தலாவ பஸ் விபத்து-பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்! பாடசாலை மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்து, சுமார் 40 இற்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் காயங்களை ஏற்படுத்திய தலாவை, ஜயகங்க பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பஸ்ஸின் சாரதி, எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தம்புத்தேகம நீதவான் கயாத்திரி ஹெட்டியாரச்சி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு தம்புத்தேகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, விபத்துச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் …
-
- 0 replies
- 134 views
-
-
விசேட சோதனையில் பெருந்தொகை போதைப்பொருளுடன் அறுவர் கைது! கிரிந்த பிரதேசத்தில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தெற்கு மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 300 கிலோகிராம்களுக்கும் அதிகமான ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் போதைப்பொருள் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1452577
-
- 0 replies
- 119 views
-
-
11 Nov, 2025 | 02:52 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஏழைகளுக்கு வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் தான் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும், நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாற…
-
- 0 replies
- 89 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் வடக்கில் நாளை தாதியர் வேலைநிறுத்த போராட்டம்! வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேரம் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படல் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்தல் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவுக்கு எதிராக, குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது. வேலைநிறுத்தம் நாளை 12ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பித்து, நாளை மறுநாள் 13ஆம் திகதி காலை 7 மணிக்கு முடிவடையவுள்ளது. இது தொடர்பில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்ட அறிக்க…
-
- 0 replies
- 143 views
-
-
யாழ்ப்பாணம் 5 மணி நேரம் முன் வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு தயாரில்லை - யாழ். மாநகரின் முதல்வர்! முறையான முன்னறிவிப்போ, தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என சுட்டிக்காட்டிய முதல்வர் மதிவதனி, சதிகளின் பின்னணிகள் மூலம் போராட்டத்தில் இறங்கியுள்ள இவர்கள், வேண்டுமானால் தன்னை எழுத்துமூலமான ஆவணத்துடன் நேரடியாக வந்து சந்தித்தால் அது தொடர்பில் பரீசலிக்கலாம் என்றும் தெரிவித்தார். பொறியியலாளரது கட்டுப்பட்டிலிருந்து தம்மை விடுவித்து பிராந்திய சுகாதார சேவை அதிகாரியின் கீழ் செயற்பட அனுமதிக்குமறு கோரி யாழ். மாநகர சுகாதார சிற்றூழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போரட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்தனர். யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (11) இட…
-
- 0 replies
- 165 views
-