ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. தம்மை சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக, முல்லேரியா – கொட்டிக்காவத்தை பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்ஆராச்சி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் கடந்த தேர்தலின் போது புதிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் சுதந்திரகட்சியில் இருந்து மகிந்தராஜபக்ஷவினால் நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் குறித்த மனுவில் பிரதி வாதியாக சேர்க்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 26ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/36887/57//d,article_full.…
-
- 1 reply
- 654 views
-
-
மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிவந்த மற்றுமொரு சுதந்திர கட்சிக் குழுவினர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்தனர். ஜனாதிபதியின் வீட்டிற்கு வருகை தந்த இவர்கள் தங்களது ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்கவுள்ளதாகவும் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டனர். சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான சஜித் வாஸ் குணவர்த்தன, டியு குணசேகர, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, உதித் லொக்குபண்டார ஆகியோரே தற்போது ஜனாதிபதியுடன் இணைந்துள்ளனர். ஜனாதிபதியின் இல்லத்திற்கு வருகை தந்த இவர்கள் ஊடகவியலாளர்களை வரவழைத்து தங்களது முடிவுகைள அறிவித்தனர். - See more at: http://www.canadamirror.com/canada/36660.html#sthash.iBmrWY0H.dpuf
-
- 1 reply
- 628 views
-
-
தங்களது வாக்குப்பலத்தைப் பிரயோகிப்பதற்காக எந்தவித தயக்கமுமின்றி வாக்களித்த லட்சக்கணக்கணக்கான வாக்காளர்களை கனடா பாராட்டும் அதேவேளை, இலங்கையின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மைத்திரிபாலா சிறிசேன அவர்களையும் கனடா வரவேற்கிறது என, சிறீலங்காவின் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதையிட்டு கனடிய அரசின் சார்பில் வெளியிட்ட செய்தியிலே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயாட் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், இந்தத் தேர்தலின் போது பிரதான பாத்திரத்தை வகித்த சிறீலங்காவின் சிவில் சமூகம் மற்றும் சிவில் சமூகம்சார் தேர்தல் கண்காணிப்பாளர்களின் பங்கை கனடா மதிப்பதாகவும், அத்தோடு இலங்கையின் வாக்காளர்கள் தங்களின் அபிலாசைகளை சுதந்திரமாக வெளியிட காத்திரமான பங்குவகித்த தேர்தல் ஆணையரின…
-
- 0 replies
- 484 views
-
-
நாளை காலை இலங்கை வருகிறார் பாப்பரசர்! [Monday 2015-01-12 07:00] இலங்கைக்கு நாளை விஜயம் செய்யவுள்ள புனித பாப்பரசர் பிரான்ஸிஸின் விஜயத்தையொட்டி விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில பாதைகள் முற்றதாக மூடப்படவுள்ளதுடன் போக்குவரத்துக்காக அதிவேக நெடுஞ்சாலையை இந்த இரண்டுநாட்களுக்கு கட்டணமின்றி பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகபேச்சாளரும் சிரேஷ்ட் பொலிஷ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார். இலங்கைக்கு நாளை விஜயம் செய்யவுள்ள புனித பாப்பரசர் பிரான்ஸிஸின் விஜயத்தையொட்டி விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில பாதைகள் முற்றதாக மூடப்படவுள்ளதுடன் போக்குவரத்துக்காக அதிவேக நெடுஞ்சாலையை இந்த இரண்டுநாட்களுக்கு கட்டணமின்றி பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகபே…
-
- 4 replies
- 649 views
-
-
சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியுற்றதானது சீனாவின் நகர்வுகளுக்கு இடையூறா? JAN 12, 2015 | 7:59by நித்தியபாரதிin கட்டுரைகள் அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியுற்றதானது இந்திய மாக்கடலில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது தொடர்பான சீன அதிபரின் நகர்வுகளுக்கு இடையூறாக உள்ளது. இவ்வாறு Bloomberg என்னும் ஊடகத்தில் Natalie Obiko Pearson எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. பத்தாண்டு காலமாக சிறிலங்காவை ஆட்சி செய்த போது சீனாவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணிய மகிந்த ராஜபக்ச தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, மகிந்த …
-
- 0 replies
- 448 views
-
-
அதிபரின் பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டார் மைத்திரி JAN 12, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபரான மைத்திரிபால சிறிசேன, இன்று தனது கடமைகளை முறைப்படி ஏற்றுக் கொண்டார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று மதியம் நடந்த நிகழ்வில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த கட்சிகளின் தலைவர்களும், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், மதகுருமாரும் பங்கேற்றனர். கடந்த 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, மைத்திரிபால சிறிசேன, கடந்த 9ம் நாள் சுதந்திர சதுக்கத்தில் நடந்த நிகழ்வில், நீதியரசர் சிறீபவன் முன்னிலையில் பதவியேற்றுக் …
-
- 0 replies
- 391 views
-
-
பிரதம நீதியரசர் மொகான் பீரிசுக்கு 48 மணிநேர காலக்கெடு JAN 12, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், சட்டவிரோதமான முறையில் பதவியில் அமர்த்தப்பட்ட சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிசை பதவி விலகக் கோரி இன்று உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சுமார் 500 இற்கும் அதிகமான சட்டத்தரணிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தினால், சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் இன்று உயர்நீதிமன்றத்துக்கு வரவில்லை. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பழிவாங்கப்பட்டு, பதவி நீக்கப்பட்ட சிராணி பண்டாரநாயக்கவை மீண்டும், பிரதம நீதியரசராக நியமிக்க வ…
-
- 0 replies
- 558 views
-
-
தீர்மானத்துக்கு முரணான கருத்து வெளியிட்டமை மற்றும் தீர்மானத்துக்கு முரணான முறையில் பிரசாரம் மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், தமிழரசுக்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவாகரன் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், சனிக்கிழமை (10) தெரிவித்தார். இது தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும்…
-
- 38 replies
- 3k views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி மூலம் தமிழ் மக்கள் தங்கள் சொந்த பிரதேசங்களில் நிம்மதியாக வாழும் சூழல் பிறக்கும் எனவும் அதேவேளை அவர்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு ஓர் நிரந்தர தீர்வு கிடைக்கும் எனவும் நாம் பூரணமாக நம்புகிறோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் தமது முழுமையான ஒத்துழைப்பை நல்க தயாராகவிருந்தது. எனினும் அவர் எமது ஒத்துழைப்பை பெற்று எமது பிரச்சினைகளைத் தீர்க்கத் தயாராக இருக்கவில்லை. இதன் காரணமாகவே அதிருப்தி கொண்ட தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்துக்கான பரிபூரண ஆதரவை நடைபெற்ற தேர்தலில் புதிய ஜனாதிபதிக்கு வழங்கி…
-
- 9 replies
- 660 views
-
-
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்சவும் (வயது 70) சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் (வயது 70) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படலாம் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் இன்று திங்கட்கிழமை உரையாற்றவிருக்கின்றார். அவர், தலைமையில் சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் அவரை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்து, நாடாளுமன்றத்துக்கு கொண்டு வருவதற்கான யோசனையும் முன்வைக்கப்படவிருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர…
-
- 3 replies
- 780 views
-
-
“ஈழம் ” தான் தன்னை தோற்கடித்தது என்னுடைய மக்கள் என்னை தோற்கடிக்கவில்லை ஆகவே நான் தோல்வியை சந்தித்ததாக எண்ணவில்லை – மகிந்த ராஜபக்ச “ஈழம் ” தான் தன்னை தோற்கடித்தது என்னுடைய மக்கள் என்னை தோற்கடிக்கவில்லை ஆகவே நான் தோல்வியை சந்தித்ததாக எண்ணவில்லை என முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சொந்த ஊரான மெதமுல்லவில் கருத்து தேர்தலில் தோல்வியடைந்தால் நான் அமைதியான முறையில் வெளியேறுவேன் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளரிடம் உறுதியளித்திருந்தேன். இதற்கு அமையவே நான் நல்லாட்சிக்காக அதிகாரத்தை அமைதியான முறையில் கையளித்து விட்டுச் சென்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய செயற்குழு கூட்…
-
- 4 replies
- 918 views
-
-
மகிந்த எதிர்கட்சி தலைவர் ஆவதில் சட்டச் சிக்கல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதில் சட்டச் சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.ம.சு. கூட்டமைப்பு சார்பாக 2011ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தேசியப் பட்டியலில் மகிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படாததே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் உரிமைபெற்று எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெறுவதில் சட்டச்சிக்கல் உருவாகுவதற்கு காரணமாகும். இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வாவே எதிர்க்கட்சித் தலைவராக நியிமக்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேட உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர். எவ்வாறாயினும், மகிந்த ராஜபக்சவை நாடாளுமன…
-
- 0 replies
- 764 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்று நண்பகல் முக்கிய பேச்சு நடத்துகிறார் மைத்திரி! [Monday 2015-01-12 07:00] தமிழ் பேசும் மக்களின் வாக்குகளினால் அமோக வெற்றியீட்டி புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று முதன்முதலாக சந்திக்கவுள்ளார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். புதிய ஜனாதிபதியின் அழைப்புக்கிணங்க இந்தச் சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ள இந…
-
- 0 replies
- 454 views
-
-
டக்ளஸ்தேவானந்தா, கருனா , ஆறுமுகன் தொண்டமான் அரசில் இணைய மைத்திரி விரும்பவில்லையாம் ! [Monday 2015-01-12 12:00] ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான மூன்று எம்.பிக்கள் இ.தொ.கவின் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முத்து சிவலிங்கம், விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) போன்றோரை புதிய அரசுக்குள் சேர்த்துக் கொள்வதில்லை என புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருக்கிறார் என அறிய வருகின்றது. எனினும் அரசுக்கு வெளியில் இருந்து அவர்கள் வழங்கக் கூடிய ஆதரவை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் புதிய பிரதமர் தீர்மானித்திருக்கிறார் என கொழும்பு அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டக்ளஸ் அரசுக்குள் நுழைவதற்கு விஜயகலா எம்பியும் கூட்டமைப்பும் கடும் எதிர்ப்…
-
- 0 replies
- 653 views
-
-
ரூ.9,000 கோடி ஊழல் புகாரில் சிக்கினார் மகிந்த! - அதிபர் மைத்திபால சிறிசேனா பகிரங்கமாக குற்றச்சாட்டு ! [Monday 2015-01-12 12:00] 9,000 கோடி மதிப்பிலான கொழும்பு செயற்கை துறைமுகம் திட்டத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷே ஊழல் புரிந்திருப்பதாக இலங்கை அதிபர் மைத்திபால சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை தோற்கடித்த அவர் கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ராஜபக்ஷே ஆட்சியில் மக்கள் நலத்திடங்களில் ஊழல் நடைபெற்றிருப்பதாக அப்போது குற்றம் சாட்டிய அவர் சீனாவுடன் போடப்பட்ட அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடைபெற்றிருப்பதாக புகார் கூறினார். இவற்றில் ராஜபக்ஷேவும் அவரது குடும்பத்தினரும் …
-
- 0 replies
- 686 views
-
-
வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு ஓய்வு பெற்ற சிவில் அதிகாரியும், ரணிலின் முன்னைய அரசில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியவருமான ஒஸ்ரின் பெர்னாண்டோவை நியமிப்பது குறித்து புதிய அரசுத் தலைமை பரிசீலித்து வருவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தன. இந்தப் பதவிக்கு முன்னாள் வெளிவிவகார செயலாளரும், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினராகக் கடமையாற்றியவருமான பள்ளியக்கார நியமிக்கப்பட்டுவிட்டார் என சில ஊடகங்களில் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அத்தகைய இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவேயில்லை என அரச உயர் வட்டாரங்கள் 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தன. "அவரது (பள்ளியக்காரவின்) பெயரும் பரிசீலனையில் இருந்தது. அவ்வாற…
-
- 1 reply
- 739 views
-
-
ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கி இணைவோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கினால் ஐ.தே.கட்சியில் விலகுவேன்: ஹரின் [ திங்கட்கிழமை, 12 சனவரி 2015, 08:00.55 AM GMT ] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து தற்போது இணைந்து வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டால் 24 மணிநேரத்தில் ஐ.தே.கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து விலக போவதாக ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜின்வாஸ் குணவர்தன, விநாயகமூர்த்தி முரளிதரன், உதித்த லொக்குபண்டார, அனுர விதானகமகே ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டால் விலக போ…
-
- 0 replies
- 546 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐ.நா மேற்கொண்டுள் முயற்சிகளுக்கான தனது ஆதரவை அமெரிக்காவும் மேற்குலகும் கைவிடக்கூடாது என புளும்பேர்க் என்ற பிரபல செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது ராஜபக்ச அரசாங்கத்தின் தோல்விக்கு பின்னர் இலங்கை சீனாவின் உறவை நிராகரித்த இன்னொரு சிறிய ஆசிய நாடாக மாறும் அறிகுறி தென்படுகின்றது. ஏற்கனவே மியன்மார் இவ்வாறு செயற்பட்டடிருந்தது. எனினும் அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் இலங்கையின் தனித்தன்மையை புரிந்துகொண்டாலே அவர்களால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த முடியும். சீனாவின் இடத்தை நிரப்புவதற்குஅமெரி;க்காவும் ஏனைய நாடுகளும் விரும்பினால் அவை தம்மால் சீனா போன்று பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்…
-
- 0 replies
- 314 views
-
-
வடக்கு வாழ் மக்கள் யாழ்தேவி ரயிலையும் ரயில் பாதையையும் அமைத்துத் தருமாறு கோரவில்லை எனவும், அவர்கள் அரசியல் அதிகாரத்தை கோரி நின்றதாகவும் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரவித்துள்ளார். கடந்த 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வியைத் தழுவியமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்குமாறு பல தடவைகள் தாம் கோரியதாகத் தெரிவித்துள்ளார். ஏதாவது ஓர் அடிப்படையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தமது கோரிக்கைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் உள்ளிட்ட பல்வேறு முக்…
-
- 0 replies
- 512 views
-
-
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் - நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க "குற்றச் செயல்கள் நிரூபிக்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படும்" - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்: கொழும்பு:- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் நீலப்படையணி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாமல், யோசித மற்றும் ரோஹித ஆகிய மூன்று சகோதரர்களின் நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நீலப்படையணி, இளைஞர்களுக்கான…
-
- 0 replies
- 515 views
-
-
யாழ்.தென்மராட்சி பகுதியில் விவசாய பயிர்களையும், வீடுகளிலுள்ள பொருட்களையும் சேதம் செய்து வரும் குரங்குகளை கட்டுப்படுத்த விவசாய திணைக்களம் மற்றும் வனவிலங்குகள் திணைக்களம் ஆகியன இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. குடிமனைகளுக்குள் நுழையும் குரங்குகள் மா, பப்பாசி, ஜம்பு உள்ளிட்ட பழ மரங்களிலுள்ள பழங்களை உண்டும், பயிர் நிலங்களிலுள்ள பயிர்களை சேதப்படுத்தியும், வீடுகளின் கூரைகளையும் உடைக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் விவசாய திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்தனர். பொதுமக்களின் முறைப்பாட்டையடுத்து குரங்குகளை பிடித்து அவற்றை பெருங்காடுகளில் விடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்கு பொதுமக்களின் உதவியை விவசாய திணைக்களம் கோரியிருந்தது. கண்டி வீதி ஜயாகடையடி மீ…
-
- 3 replies
- 550 views
-
-
பிடியாணை பிடிக்கப்பட்டிருந்த ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் பண்டாரவளை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தரான செந்தில் தொண்டமான், தபால்காரர் பெரியசாமி ஞானசேகரனை கடந்த 3ஆம் திகதி தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே பண்டாரவளை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. http://www.malarum.com/article/tam/2015/01/12/8055/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8…
-
- 0 replies
- 322 views
-
-
யுத்தக் குற்றம் தொடர்பான ஐநாவின் விசாரணைக்கான ஆதரவை அமெரிக்காவும் மேற்குலகும் கைவிடக் கூடாது: 12 ஜனவரி 2015 இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐ.நா மேற்கொண்டுள் முயற்சிகளுக்கான தனது ஆதரவை அமெரிக்காவும் மேற்குலகும் கைவிடக்கூடாது என புளும்பேர்க் என்ற பிரபல செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது ராஜபக்ச அரசாங்கத்தின் தோல்விக்கு பின்னர் இலங்கை சீனாவின் உறவை நிராகரித்த இன்னொரு சிறிய ஆசிய நாடாக மாறும் அறிகுறி தென்படுகின்றது. ஏற்கனவே மியன்மார் இவ்வாறு செயற்பட்டடிருந்தது. எனினும் அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் இலங்கையின் தனித்தன்மையை புரிந்துகொண்டாலே அவர்களால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த முடியும். சீனாவின் இடத்தை…
-
- 0 replies
- 548 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு பொது எதிரணியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாணத்துக்காக எச்.எம்.ஜி.எஸ் பளிஹகாரவை நியமித்துள்ளார். http://www.jaffnamuslim.com/2015/01/blog-post_427.html
-
- 30 replies
- 3.1k views
-
-
தென்மராட்சி வலயப் பாடசாலை ஒன்றில் உயர் தரம் கற்கும் மாணவர்கள் இருவர் உரிய ஆவணங்கள் இன்றி மதுபோதையில் மோட்டார் சைக்களில் செலுத்தியதால் நீதிமன்றால் தண்டிக்கப்பட்டனர். சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:- தென்மராட்சிப் பகுதியில் நேற்று தலைக்கவசம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு மாணவர்களைப் போக்குவரத்துப் பொலிஸார் மறித்து ஆவணங்களைப் பரிசோதிப்பதற்காகக் கேட்டுள்ளனர். அவர்களிடம் ஆவணங்கள் இல்லாதாதால் பொலிஸார் இருவரையும் தடுத்துவைத்து விசாரித்தபோது, மதுபோதையில் இருந்த அவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டுள்ளனர். இதையடுத்து மாணவர்கள் இருவரும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்னர். விசாரணை செய்த நீதிவான் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த மாணவன…
-
- 3 replies
- 479 views
-