Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு, மேற்குலக நாடுகள் சதி செய்வதாகவும், அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏ இதுபோன்ற வேலைகளைச் செய்வது வழக்கமே என்றும் அமெரிக்கா மீது நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது சிறிலங்கா அரசாங்கம். கொழும்பில் நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், உரையாற்றிய, அமைச்சர்கள், டிலான் பெரேரா மற்றும், மகிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோர், நாட்டைக் குழப்பவும், கட்சிகளை உடைப்பதற்கும், மேற்குலக நாடுகள் சதி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர். “சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பலம்வாய்ந்த தனிப்பெரும் கட்சியாக உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு மேற்குலக சக்திகள் தம்மைப் பயன்படுத்துகின்றன என்பதைக் கூட, புரிந்துகொள்ளும் …

  2. யாழ்.மாவட்டத்தில் பாதீனியங்கள் உள்ள காணி உரிமையாளர்களது மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். இன்று கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையில் 2015 ஆம் ஆண்டுக்கான விவாசய அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து பாதீனியச் செடிகளை முற்றும் முழுதாக அழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் காணிகளின் பாதீனியச் செடிகள் காணப்படின் குறித்த காணி உரிமையாளர்கள் விவசாயத் திணைக்களங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.அவ்வாறு தெரிவிக்காமல் விவசாயத் திணைக்களங்களது சோதனை நடவடிக்கையின் போது காணிகளில் பாதீனியச் செடிக…

  3. ஐ.நா.விசாரணைக்கான சாட்சியப் படிவங்களை சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வரும், ஆழ்வாப்பிள்ளை விஜேந்திரகுமாரின் (சண்மாஸ்டர்) மனைவி, பிள்ளைகள் இருவர் என மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை இவர்கள் மூவரும் இந்தியாவுக்கு செல்வதற்காக விமான நிலையத்துக்குச் சென்றவேளை கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சண் மாஸ்டரின் மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தனது கணவர் இந்தியாவில் உள்ளார் என்றும் அவரிடமே தாம் செல்லவிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=122974&category=TamilNew…

  4. சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளின் போது, உயர் பெறுமான இலக்குகளை (High Value Target) படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான, அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இரகசிய அறிக்கை ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஜுலை மாதம் 7ம் நாள் இடப்பட்டுள்ள 21 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏயின்,நாடுகடந்த விவகாரங்களுக்கான பிரிவினால் ‘கிளர்ச்சி முறியடிப்பில் மிகச்சிறந்த நடைமுறைகள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில்,(2001- ஜூன்2009), அல்ஜீரியாவில் (1954-1962), கொலம்பியாவில் (2002-ஜூன் 2009), ஈராக்கில் (2004- ஜூன் 2009), இஸ்ரேலில் (1972 தொடக்கம்1990களின் நடுப்பகுதி, …

  5. மைத்திரியுடன் நேரடி விவாதம் நடத்த மகிந்த மறுப்பு DEC 19, 2014 | 11:27by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அதிபரை பகிரங்கமான நேரடி விவாதத்துக்கு வருமாறு எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன விடுத்த சவாலை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, நேரடி விவாதத்தில் பங்கேற்கமாட்டார் என்று சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவை, ஜனநாயகம், நல்லாட்சி தொடர்பாக, எதிர்வரும் ஜனவரி 1ம் நாள் பகிரங்க நேரடி விவாதத்துக்கு வருமாறு, மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்திருந்தார். இதுகுறித்து லங்கா புவத்திடம் தகவல் வெளியிட்ட கெஹலிய ரம்புக்வெல, “இது உண்மையில் ஒரு நகைச்சுவை.சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவ…

  6. மைத்திரியின் தேர்தல் அறிக்கை – தமிழில் கூட இல்லை DEC 19, 2014 | 12:05by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை கூட தமிழில் வெளியிடப்படவில்லை என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் தமிழர் பிரச்சிக்கான தீர்வு குறித்த எந்தக் கருத்துக்களும் முன்வைக்கப்படாத அதேவேளை, தேர்தல் அறிக்கை கூடத் தமிழில் வெளியிடப்படவில்லை. 64 பக்கங்களைக் கொண்ட இந்த தேர்தல் அறிக்கை, சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், தம…

  7. வடக்கில் இடம்பெறும் சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்கள் மக்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் அறிவிக்காமல், மீள்குடியேற்ற அமைச்சுக்கும் தெரியாமல் மிகவும் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க குற்றம்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "நான் அதிகமாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பணியாற்றியுள்ளேன். வவுனியா தெற்கு பிரதேச சபைப் பகுதிக்குச் சென்றபோது, அங்குள்ள மிகவும் நல்ல இளைஞர் ஒருவர், "ஏன் வெளியிலிருந்து கொண்டுவந்து இங்கு குடியேற்றுகின்றீர்கள்'' என்று கேட்டார். இது குறித்து மீள…

  8. அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் வாய் கழிவுநீர் சாக்கடை என்றும் அதனால் தான், சிறைச்சாலைச் சோற்றை ருசி பார்த்தார் என்றும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். வாயினால், சிறை தண்டனை அனுபவித்தும் அவர் திருந்தவில்லை எனவும் அவர் கூறினார். மகிந்த ராஜபக்ஷவை வெற்றி பெற செய்வதற்காக பெண்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்ட பெண் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஊடகவியலாளர் தொடர்ந்தும் அமைச்சர் திஸாநாயக்க குறித்து கேள்விகளை எழுப்பிய போது,அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உட்பட ஏனைய பிரதிநிதிகள் சிரமங்களை எதிர்நோக்கினர். எனினும் முன்னாள் ஜனாதிபதி ச…

  9. முஸ்லிம் காங்கிரசின் மசுவு கூடிக் கொண்டேயிருப்பதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கண்டியில் நடந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கியதன் பின்னர் ஆற்றிய முடிவுரையில் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவுப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து நான் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். ஏனென்றால் எமது மவுசு கூடிக்கொண்டே போகிறது. இன்னும் கொஞ்சம் நாளைக்கு இவ்வாறு நீடிக்குமானால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்தச் சந்தர்ப்ப…

  10. சந்திரிகாவின் காலத்தில் தான் 11,500 படையினர் கொல்லப்பட்டனர் – பௌத்த பிக்கு பதிலடி DEC 19, 2014 | 1:27by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஒட்டுமொத்த போரிலும் கொல்லப்பட்ட 23 ஆயிரம் படையினரின் பாதிப் பேர், முன்னாள் அதிபர் சந்திரிகாவின் காலத்தில் தான், உயிரிழந்தனர் என்று, சிறிசம்புத்தலோக விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் இத்தட்டேமலியே இந்திரசார தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் இத்தட்டேமலியே இந்திரசார தேரர், நேற்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். அங்கு அவர், தாமே போரின் 75 வீதத்தை முடித்து வைத்ததாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க உரிமை கோரியது குறித்து கருத்து வெளியிடுகையில், “போரில் 23ஆயிரம…

  11. விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இன்னமும் ஓயவில்லை – ஜனாதிபதி 16 டிசம்பர் 2014 தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இன்னமும் ஓயவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச ரீதியில் புலிகளின் அச்சுறுத்தல் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.பாணந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்காரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தனியான பாராளுமன்றமொன்றை அமைத்துள்ளதாகவும், அவர்கள் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இவ்வாறான நபர்கள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அ…

  12. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பசில் ராஜபக்ச செயற்படுத்தி வந்த சகல பொறுப்புகளும் கோத்தபாய ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமான சகல விடயங்களையும் பொறுப்புடன் செயல்படுத்தி வந்த பசில் ராஜபக்ச, கட்சி மாறிய திஸ்ஸ அத்தநாயக்காவிற்கு சுகாதார அமைச்சை கொடுப்பதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். அவரது எதிர்ப்பையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, திஸ்ஸ அத்தநாயக்காவை சுகாதார அமைச்சராக்கியதால், தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் பொறுப்பை பசில் ராஜபக்சவிடமிருந்து எடுத்து கோத்தாபாய ராஜபக்சவிற்கு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தல் …

  13. -கனகராசா சரவணன் திருக்கோவில் பிரதேசத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரம் இடம்பெறவிருக்கும் மைதானத்தில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இருவரை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகத்துக்கிடமான முறையில் நேற்று வியாழக்கிழமை இரவு நடமாடிய இருவரையே கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். ஆளும்கட்சி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புஸ்பகுமாரின் (இனியபாரதி) ஏற்பாட்டில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நாளை சனிக்கிழமை தேர்தல் பிரசாரம் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் 22, 23 வயதுகளையுடைய திருக்கோவில் ப…

  14. நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளியேன் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனமான 100 நாட்களில் புதிய நாடு, கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் தற்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/pirasitta-seithi/136164-2014-12-19-04-47-56.html

  15. வட மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதி ஆணைக்குழுவிடம் 149.95 கோடி ரூபாவைக் கேட்டோம். ஆனால் 27.2 கோடி ரூபா மட்டுமே கிடைத்துள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டை விட 2015 ஆம் ஆண்டு எங்களுக்கு சவால் மிகுந்த ஆண்டாக அமையப்போகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு சில விசேட தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அதிக நிதியைக் கேட்டோம். ஆனால் நிதி ஆணைக்குழு அதனை எமக்கு வழங்க மறுத்து விட்டது. இதனால் சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. வீதி அபிவிருத்திக்காக நாம் கேட்டதோ 77 கோடி ரூபா ஆனால் எமக்கு தரப்பட்டதோ 7.4 கோடி ரூபாவே. நாம் கேட்டதில் 10 இல் ஒரு பங்கு கூட இல்லை. வீடமைப்புக்காக ஒரு கோடி …

  16. பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான எதிரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் வெற்றுக் காகிதத்தில் கையொப்பமிட்டுள்ளது. அப்படியானால் மைத்திரிபால சிறிசேன வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கவும் வடக்கிற்கு பொலிஸ் அதிகாரத்தை பெற்றுத்தரவும் இணங்கியுள்ளாரா? என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழத்தைக் கைப்பற்றுவதற்கான கனவு இன்னமும் கைவிடப்படவில்லை. அதனை பெற்றுக்கொள்வதற்கான வடிவங்கள்தான் வேறுபட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டு மென்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான குறிக்கோளாகும். இதற்கான அழுத்தத்தை புலி டயஸ்போரா கூட்டமைப்பிற்கு வழங்கி வருவது, விடுதலைப் புலிகள் ஆதரவாளரான சுரேன…

  17. பொன்சேகாவின் மருமகனுக்கு பிணை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலஹரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இவர், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சரணடைந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 4 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டிலும் இவரை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அய்ரங்கனி பெரேரா இன்று உத்தரவிட்டுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் வழக்கு நடைபெறும் வரை இவர் வௌிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தனுன திலஹரத்ன பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும். அத்துடன் இந்த வழக்கு எதிர்…

  18. எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு! யாழில் அதிர்ச்சி! கொலை செய்யப்பட்டு எரிக்கட்டிருக்கலாமென கருதப்படும் இளம்பெண் ஒருவரது எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் முள்ளிவெளிப்பகுதியில் நேற்று எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் நான்கு, ஐந்து நாட்களின் முன்னர் நடந்திருக்கலாமென ஊகிக்கப்படுகின்றது. எலும்புக்கூடு இன்னும் ஈரலிப்பாக உள்ளது. அத்துடன், சடலத்தை எரிக்க பயன்படுத்தப்பட்ட தென்னம்பொச்சுகளும் பழுதடையாமல் உள்ளன. முள்ளிச்சந்திக்கும் யார்க்கரு சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. எலும்புகளும், மண்டையோடும் வேறுவேறாக காணப்பட்டன. அவற்றில் ஈரத்தன்மை காணப்படுகின்றது. எலும்புக்கூடு மீட்கப்பட்ட ப…

  19. விமான விபத்தில் உயிர்தப்பிய விமானப்படைச் சிப்பாயும் மரணம்! ஹோகந்தர வடக்கு ஹொரஹேன பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற விமான விபத்தில் கடும் எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த விமானப்படை சிப்பாய் உயிரிழந்துள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிப்பாய் நேற்று இரவு உயிரிழந்ததாக தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்தார். எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. ஜி.கே.என்.சத்துரங்க என்ற விமானப்படை சிப்பாயே உயிரிழந்துள்ளார். இந்த விமான விபத்தில் விமானி, உதவி விமானி உள்ளிட்ட நால்வர் …

  20. தற்போதைய அரசாங்கம் தன்னாலான அனைத்துப் பிரிவுகளிலும் தமது பிரசாரப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. சட்டரீதியாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் தனது பிரசாரங்களை முன்னெடுத்து வருவதுடன் தற்போது மத, இன உணர்வுகளைப் பாதிக்கும் வகையிலும் இந்தப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தமிழர்களின் வாக்குகள் தற்போதைய அரசாங்கத்திற்கு கிடைக்காது என்பதால் மகிந்த ராஜபக்விற்கு வாக்களிக்க வலியுத்தி ஏராளமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு கோரி விநியோகிக்கப்படும், துண்டுப் பிரசுரங்கள், தேர்தல் அட்டைகள் உடனடியாக எறியப்படுவதால் தமிழர்கள் இதனை தன்னுடன் வைத்துக்கொள்ளும் வகையில் தற்போது இந்துக்களின் கடவுளின் படங்களையும…

  21. "தேர்தலை பகிஷ்கரிக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்" ஜனாதிபதித் தேர்தலில் தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள் அவர்களாகவே தீர்மானிக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஒவ்வொரு தமிழரும் மிகக் கவனமாக பரிசீலித்து, வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை நன்கு ஆராய்ந்து யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்கவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் விட்ட தவறை மீண்டும் மேற்கொள்ளாது, தேர்தலை பகிஷ்கரிக்கும் எண்ணத்தையும் கைவிட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியின் கையொப்பத்துடன் வெள…

  22. ஜனாதிபதி தேர்தலை ரத்து செய்வதற்கு தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாகாநந்த கொடித்துவக்கு என்பரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகிந்தராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதித்து உச்ச நீதிமன்றம் வழங்கி இருந்த சட்ட விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை ஜனாதிபதி பதியில் இருந்து கொண்டு, ஜனாதிபதியின் பதவி காலத்தை நீடிப்பு செய்ததால், அதன் அனுகூலத்தை மகிந்தவினால் அனுபவிக்க முடியாது. இதனால் இந்த தேர்தலை இடைநிறுத்த வேண்டும் என்று அவர் தமது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். http://ww…

  23. சிறிலங்கா அதிபர் தேர்தல் தனியொரு குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டுமா? DEC 18, 2014 | 9:18by நித்தியபாரதிin கட்டுரைகள் சிறிலங்கா அதிபர் ராஜபக்ச ஜனவரி 08 தேர்தலில் வெற்றி பெற்றால், சிறிலங்காவானது மேலும் பொருளாதாரத் தேசியவாதம் மற்றும் சீனாவில் தங்கியிருக்க வேண்டிய பொருளாதாரத்துடன் இணைந்த அதிகாரத்துவம், சிங்கள-பௌத்த பேரினவாதம் மற்றும் இனவாதம் போன்றவற்றைக் கொண்ட ஒரு நாடாக மாறும். இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட The Wall Street Journal ஊடகத்தில் Razeen Sally எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த மாதம் அதிபர் தேர்தலை முற்கூட்டி நடாத்தவுள்ளதாக அறிவித்ததானது இவர் மூன்றாவது தடவை…

  24. ‘பாப்பரசர் எம்முடன் பிரார்த்தனை செய்ய வேண்டும் – முள்ளிவாய்க்கால் மக்களின் வேண்டுதல் DEC 18, 2014 | 5:31 by கார்வண்ணன்in செய்திகள் பாப்பரசர் எமது இடத்துக்கு வந்து, எம்முடன் இணைந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும், உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என்றும், வடக்கிலுள்ள தமிழர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர். ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தியாளர், பாப்பரசரின் 78வது பிறந்த நாளன்று முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்று அங்குள்ள பொதுமக்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர்கள் இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளனர். சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் அதிபர தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஜனவரி 13ம் நாள் தொடக்கம், 15ம் நாள் வரை பாப்பரசர் சிறிலங்காவில் பயணம…

  25. தமிழ்மக்கள் தங்களின் அரசியல்தீர்வு குறித்தான விருப்பினை வெளிப்படுத்துவதற்கு பொதுசன வாக்கெடுப்பொன்றினை நடத்துமாறு இலங்கையில் எவரும் கோரவில்லை என சிறிலங்காவின் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்து மக்கள் தங்களின் விருப்பினை வெளிப்படுத்துவதற்கான ஒர் வாய்ப்பாக அமைந்த பொதுசன வாக்கெடுப்பு மாதிரி, இலங்கையின் வடகிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு நடத்துவீர்களா என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர் உசா சிறீஸ்கநத்ராஜா அவர்கள் ருவிற்றரில் கேள்வியொன்றினைத் தொடுத்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் பொழுதே மேற்குறித்த கூற்றினை சிறிலங்காவின் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். சுதந்திரமாக கருத்தினை வெளி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.