Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி தேர்தல் குறித்து பேச புதுடெல்லியிலிருந்து அழைப்பு வரவில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மலையக தமிழ் கட்சிகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், இந்தச் செய்தியில் உண்மை கிடையாது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தல் குறித்து பேச எமக்கு எவ்வித அழைப்பினையும் இந்திய அரசாங்கம் விடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=121750&category=TamilNews&language=tamil

  2. எதிரணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது பிரச்சார கூட்டம் பொலன்னறுவை நகரில் சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வெள்ளை புறா பறக்கவிடப்பட்டது பொலன்னறுவை நகரில் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் நடைப்பெறும் இடத்திற்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேன தனது சின்னமான வெள்ளை புறாவை பறக்கவிட்டமை குறிப்பிடத்தக்கது. நான்கு நிற பலூன்கள் பறக்கவிடப்பட்டன நீளம் , பச்சை ,சிகப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நான்கு நிறங்களில் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் கூட்டம் ஆரம்பமாகியதும் பறக்கவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. திஸ்ஸ அத்தனாயக்க நாட்டிற்கு எதிராக ஆட்சி செய்யும் கொள்ளையர்களை நாம் வீட்டிற்கு அன…

  3. யாழ்.பல்கலைக்கழக வரலாற்றில் முதற்தடவையாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மலையக மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு...... யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனிப்பாரற்று காணப்படும். எம் உறவுகளான மலையக தமிழ் மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்த வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன். வரலாற்றில் முதற் தடவையாக க.பொ.த சாதரண தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு கடந்த வாரங்களில் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் ஹட்டன் வலயத்திற்குட்பட்ட மிகவும் பின் தங்கிய தமிழ் பாடசாலைகளான டிக்கொயா தமிழ் மகா வித்தியாலயம்,கணபதி தமிழ் மகா வித்தியாலயம்,டன்கில்ட் தமிழ் வித்தியாலயம்,மற்றும் கார்பக்ஸ் தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றை சேர்ந்த நூற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்களை ஒன்றினைத்…

  4. வடக்கில் இருந்து இராணுவமும், புத்தர் சிலைகளும் அகற்றப்படாதிருக்க தாம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக்கூறியுள்ளார். வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றினால் தமக்கு ஆதரவளிப்பதாக சிலர் கூறுகின்றனர். தற்போதே வடமாகாணத்தில் உள்ள புத்தர் சிலைகளை முற்றாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சிலர் அறிவித்துள்ளனர். ஹேக்கில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இராணுவ வீரர்களை நிறுத்தவும் முயற்சிக்கப்படுகிறது. இவை எதுவும் நடைபெறாதிருக்க தாம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/35702/57//d,article_full.aspx

  5. சாவகச்சேரி கச்சாய் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் நஞ்சருந்திய நிலையில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் பாலாவி தெற்கைச் சேர்ந்த அழகரத்தினம் நித்தியமலர் (வயது-23) என்ற யுவதியும்,கெற்பேலியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான செல்லையா தெய்வேந்திரன் (வயது -45 )என்பவரையும் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குறித்த யுவதி உயிரிழந்துள்ளார். மேலும் இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, இவர்கள் இருவரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமற் போயிருந்த நிலையில் இன்று கச்சாய்ப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இவர்களைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த ஆலய…

    • 17 replies
    • 1.2k views
  6. பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான டட்லி சிறிசேனவின் அரிசிலொறி மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலநறுவையிலிருந்து மரதஹமுல்லவுக்கு அரலிய அரிசியை ஏற்றிச்சென்ற லொறியின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த லொறியின் சாரதி மற்றும் நடத்துனரை அச்சுறுத்திய இனந்தெரியாத நபர்கள், இனிமேல் மரதஹமுல்லவுக்கு அரிசி ஏற்றிக்கொண்டுவரக்கூடாது என்று எச்சரித்ததாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரலிய அரிசியின் உரிமையாளர் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான டட்லி சிறிசேன என்பது குறிப்பிடத்தக்கதாகும். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/13…

  7. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருக்கும் இடையில் அலரிமாளிகையில் நேற்று மாலை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகமும் எம்.பியுமான ஹசன் அலி மற்றும் கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் ஆகியோரும் பங்கேற்றனர். ஜனாதிபதியுடன், அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, பசில் ராஜபக்ஷமற்றும் டலஸ் அழகபெரும ஆகியோரும் பங்கேற்றனர். இந்த சந்திப்பின் போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13…

  8. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை நிச்சயிப்பதில் வடக்கு மாகாண வாக்குகள் முக்கியத்துவம் பெறுமென அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள சுமார் ஏழு இலட்சம் வாக்காளர்களைக் கவரும் பணியில் அரச தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷவும், பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் மும்முரமாக ஈடுபடுவார்கள் என அரசியல் அவதானிகள் ஊகம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் அவர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக வடக்கு மாகாணம் விளங்குமெனக் கூறப்படுகின்றது. 2005ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது விடுதலைப் புலிகள் இயக்கம் மக்கள் வாக்களிப்பதற்குத் தடைவிதித்தது. அந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ 48 லட்…

  9. இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் மீண்டும் விவாதம் இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் மீண்டும் விவாதம் நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் மாதத்தில் இந்த விவாதம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு மாத கால இடைவெளியில் நடைபெறவுள்ள இரண்டாவது விவாதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் குறித்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி விவாதம் நடைபெறவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமை, ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கடந்த வாரம் விவாதம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்தல் கண்காணிப்பு முறைமை குறித்தும் இந்தப் ப…

  10. மூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். மூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன் என்று சரத் என் சில்வா முன்னர் கூறியிருந்தார். தற்போது அவர் தனது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார். “உயர்நீதிமன்றத்தின் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மூன்றாவது தடவையும் மகிந்த ராஜபக்சவினால், போட்டியிட முடியும் என்ற அதன் கருத்து சட்டவிரோதமானது. அதே நீதிமன்றத்திடம் முறையீடு செய்து பயனில்லை …

  11. இலங்கையில் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைதிரிபால சிறிசேனவின் பக்கமும் இந்திய அரசின் கவனம் திரும்பியுள்ளது. இதற்கமைய இலங்கைக்கு நாளை மறுதினம் திங்கட்கிழமை விஜயம் செய்யவுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடுவார் என இந்தியாவின் முன்னணி நாளிதழான இந்து செய்தி வெளியிட்டுள்ளது. காலியில் நடைபெறவுள்ள சர்வதேச கடல் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட…

  12. மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்துக்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல… எனது தேச விடுதலையின் ஆன்மிக அறைகூவலாகவே மாவீரர்களது மரணங்கள் திகழ்கின்றன. சத்தியத்துக்காக சாகத் துணிந்துவிட்டால், ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும். எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது லட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின், அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு!’ இப்படிச் சொன்னவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்! நவம்பர் 26ம் தேதி பிரபாகரனுக்கு 60வது பிறந்தநாள். அதாவது அவருக்கு இ…

  13. - பொ.சோபிகா பருத்தித்துறை திக்கம் பகுதி கடற்கரை வீதியில் உள்ள கடற்கரை அணைக்கட்டுக்கள், கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக தற்போது உடைப்பெடுத்துள்ளன. கடற்கரை அணைக்கட்டுக்கள் உடைந்ததன் காரணமாக அப்பகுதி போக்குவரத்துக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடல் நீர் அருகில் உள்ள கிராமங்களுக்குள் உட்செல்வதற்கு வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். http://tamil.dailymirror.lk/--main/135074-2014-11-29-09-01-45.html

  14. யாழ்ப்பாண இளைஞர்களை திருத்துவதற்காகவே தான் மாவீரர் தின சுவரொட்டிகளைத் தயாரித்ததாக பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட புத்தூர் சந்திப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். மாவீரர் தின சுவரொட்டிகளை தயாரித்தார் என்ற சந்தேகத்தில் கடந்த 26 ஆம் திகதி மீசாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அவர் தான் மாவீரர் தின சுவரொட்டிகளை தயாரித்தமையை ஏற்றுக்கொண்டார் எனக் கூறிய விமலசேன, குறித்த இளைஞன் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்த விடயங்கள் குறித்தும் தெரிவித்தார். அண்மைக்காலமாக இளம் சமூகத்தினர் மத்தியில் கலாசார சீர்கேடுகள் அதி…

  15. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விடவும், இம்முறை மிக இலகுவாக வெற்றி பெறுவார் என ஜனாதிபதியின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ மூன்று தடவைகள் அல்ல நான்கு தடைவைகள் இலங்கையை ஆட்சி செய்வார் எனவும் அவர் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஷவே அடுத்த ஆட்சியை அமைப்பார். பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால பொலன்நறுவை தொகுதியை மாத்திரமல்ல, பொலன்நறுவை மாவட்டத்திலோ, வடமத்திய மாகாணத்திலோ எந்த தொகுதியிலும் வெற்றி பெறமாட்டார் எனவும் சுமணதாச அபேகுணவர்தன கூறியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=121725&category=TamilNews&language=tamil

  16. கொழும்பு, சினமன் கார்டன் ஹோட்டலில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றில் வைத்து தாக்கப்பட்டார்கள் என்று கூறப்படும் சுவீஸ் நாட்டைச் சேர்ந்த ஜோடியொன்று, மிரிஹானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். சினமன் கார்டன் ஹோட்டலில் உள்ள இரவுவிடுதிக்கு சென்றிருந்த போது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாம் தாக்கப்பட்டதாக, அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம்முறைப்பாட்டை பதிவு செய்துகொண்ட பொலிஸார், படுகாயமடைந்திருந்த குறித்த ஜோடிகளை களுபோவில வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/135121-2014-11-29-12-19-01.html

  17. பின்னால் உள்ள மிகுதிப் பேர் தானா சேர்ந்த கூட்டம்? யுத்தத்தை முடிவுறுத்தவே கோதபாய ராஜபக்ஸவை அழைத்து வந்தேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மக்களும் பண்டாரநாயக்கக்களுமே பெசில் ராஜபக்ஸ மற்றும் சமால் ராஜபக்ஸ ஆகியோரை அரசியலில் களமிறக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். 1977ம் ஆண்டு முதல் முதலாக சிறிமாவோ பண்டாரநாயக்க, பெசில் ராஜபக்ஸவிற்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். சிரிமவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் பெசில் ராஜபக்ஸவை உள்ளடக்கியதாகத் தெரிவித்துள்ளார். சிரிமாவோ பண்டாரநாயக்கவே, சமால் ராஜபக்ஸ பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முதலில் வாய்ப்பு …

  18. இந்நாடு இன்று ஒரு ஜனாதிபதி தேர்தலை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உடன்பிறப்புகளும் அவர்களது அமைப்புகளும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். அவர்கள் மட்டுமல்ல உள்நாட்டிலே செயற்படும் தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களும் மிகவும் சாணக்கியத்துடன் பணியாற்றிட வேண்டுமென முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற "இன்றைய அரசியல் நிலைமைகள்' தொடர்பான ஜனநாயக இளைஞர் இணைய வாராந்த கலந்துரையாடலின் போது ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இங்கு மனோ கணேசன் தொடர்ந்து கூறியதாவது; இன்று நாங்கள் கத்தியின் மீது நடக்கின்றோம். நடக்கவும் வேண்டும். கால், கைகளை வெட்டிக்கொள்ளவும் கூடாது. இது கஷ்டமான காரியம்தான். இதிலுள்ள கஷ்டம் இந்…

  19. யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால், 1545 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது நலன்புரி முகாம்களில் தங்கவிடப்பட்டுள்ளதாக பதிவு செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் தாழ்நில பிரதேசங்கள் மழை வெள்ள நீரில் மூழ்கியதில் வலிமேற்கு பிரதேச சபைக்கும் பிரதேச செயலகத்து நிர்வாக எல்லைக்குள் வரும் வட்டுக்கோட்டை தெற்கு முதலிகோவிலடி கிராமத்தின் தொலைவில் உள்ள வயலையும் குளங்களையும் கொண்ட இன்பசோலை குக்கிராமத்தில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து தாண்டவமாடியதில் அன்றாடம் தினக்கூலி வேலைகளுக்கு செல்லும் சுமார் 12குடும்பங்கள் வீடுகளுக்குள் வாழமுடியாது அயலில் உள்ள உறவினர் வீடுகளில் பொழுதை க…

  20. -எம்.றொசாந்த் யாழ்.நகரை அண்டியுள்ள பொம்மைவெளி பிரதேச மக்கள் வெள்ளப் பாதிப்பில் இருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி கொட்டும் மழைக்கும் மத்தியில் சனிக்கிழமை (29) வீதிமறியல் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். யாழ்.நகரையும் காரைநகர் பிரதேசத்தையும் இணைக்கும் பிரதான வீதியை பொம்மைவெளி சந்தியில் மறித்து சனிக்கிழமை (29) காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வார்ப்பாட்டம் காரணமாக வீதியில் போக்குவரத்து தடைப்பட்டதால், பொலிஸார் வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடி மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். அதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் மூவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கும் பொருட்டு அவரது கட்சி அலுவலகத்துக்கு சென்றவேளை, அவரை சந்திக்க முடியவில்ல…

  21. சொந்தக் காணி வழங்குமாறு வலியுறுத்தி வீதியினை மறித்து போராட்டம் நடத்திய பொம்மைவெளி பிரதேச மக்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். சொந்தக் காணி வழங்குமாறு வலியுறுத்தி குறித்த பிரதேச மக்கள் பொம்மைவெளி சந்தியில் இன்று காலை வீதியினை மறித்து, தகரக்கொட்டகைகளை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்ம் நடத்தப்பட்ட இடத்திற்கு வந்த ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலரை அமைச்சருடன் கதைப்பதற்கு தமது அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். போராட்டக்கரர்களில் சிலர் அவர்களை நம்பி அங்கு சென்றிருந்தனர். இருப்பினும் அமைச்சர் அவர்களை சந்திக்கவில்லை. மாறாக மாலை உங்கள் பிரதேசத்திற்கு அமைச்சர் வந்து சந்திப்பார் என அலுவலகத்தில் இருந்தவர்கள் கூறியு…

  22. வல்வெட்டித்துறை ஆதி கோயிலடி கடற்பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் கரையொதுங்கியுள்ளனர் என யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி தெரிவித்தார். வல்வெட்டித்துறை ஆதி கோயிலடி கடற்பரப்பில் இன்று காரை மீனவர்களுடன் படகொன்றும் கரையொதுங்கியுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்திக்கு ஆதிகோயிலடி கடற்றொழில் சங்கத்தின் செயலரால் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த உதவிப் பணிப்பாளர் குறித்த 5 மீனவர்களையும் மீட்டுள்ளார். இது தொடர்பில் தெரிவிக்கையில் , தென்னிலங்கை மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் அதிகரித்த காற்றினால் படகு உடைந்த நிலையில் இன்று காலை ஆ…

  23. யாழ்.இளைஞர்களை திருத்துவதற்காகவே தான் மாவீரர் தின சுவரொட்டிகளைத் தயாரித்ததாக பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட புத்தூர் சந்திப் பகுதியினைச் சேர்ந்த இளைஞர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக யாழ். மாவட்ட விரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். மாவீரர் தின சுவரொட்டிகளை தயாரித்தார் என்ற சந்தேகத்தில் கடந்த 26 ஆம் திகதி மீசாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அவர் தான் மாவீரர் தின சுவரொட்டிகளை தயாரித்தமையை ஏற்றுக்கொண்டார் எனக் கூறிய விமலசேன, குறித்த இளைஞன் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்த விடயங்கள் குறித்தும் தெரிவித்தார். அந்த விடயங்கள் வருமாறு: அண்மைக்காலமாக இளம் சமூகத்தினர் மத்தியில் கலாசார சீர…

  24. வவுனியாவில் தமிழீழ இரகசிய ஊடக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் தின நிகழ்வானது இரகசிய ஊடக அமைப்பின் தலைமை செயலகத்தில் நடைபெற்றது மாவீரர்களின் பெற்றோர்கள்,உறவினர்கள்,முன்னாள் போராளிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொன்ன்டனர் இதன்போது பொது சுடரினை இரண்டு மாவீரர்களின் சகோரதரும் போராளியுமான இளங்கோ அவர்கள் ஏற்றிவைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஏற்றிவைத்தனர் அதனைத்தொடர்ந்து இங்கு கருத்து தெரிவித்த போராளி இளங்கோ அவர்கள் குறிப்பிடு கையில் இன்றைய நாள் எமது விடுதலைப்போராட்டத்துக்கு வித்திட்ட மாவீரச் செல்வங்களை நினைவு கூறும் புனிதமான நாள் 2009ஆம்ஆண்டிலிருந்து இன்றுவரை நாம் எமது மாவீரர்களின் நினைவு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.