Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஏறத்தாழ 25 ஆண்டுகளாக, வன்முறை எனும் பேரலைக்கு அஞ்சிய மக்களை காக்கும் பொருட்டு, எதிர்வன்முறை எனும் அணை கட்டி மாண்டவர்களுக்காக, நினைவேந்திய மகத்தான நாள் இன்று . 1958ல் இருந்து சுமார் 25 ஆண்டுகளான 1983 கருப்பு ஜூலை வரை அரச வன்முறை தமிழின எதிர்ப்பு எனும் விசத் தாண்டவம் ஆடியபோது எதிர் வன்முறையே அஞ்சி நடுங்கும் மக்களை காக்கும் என கண்டு போர்க்களம் போன இளைஞர்கள் இவர்கள். களத்து மேடுகளில் துப்பாக்கி கொண்டல்ல உயிரின் வலி கொண்டு கடூழியம் புரிந்தார்கள். அசைக்கவியலாத ஒரு பேர் அணையை,எந்த அலைகளாலும் அச்சுறுத்தவியலாத காலமற்ற அணையை தம் சனங்களுக்கான காப்பாக்கி விட வேண்டும் என உழைத்தார்கள். பேருழைப்பு, பெரு வலி, பெரிய தியாகம் புரிந்தார்கள். அணையின் ஒவ்வொரு பிடி மண் இடுக்கிலும் ஒவ்வொரு உயிர…

  2. தாய் நாட்டுக்காக போராடி மண்ணில் விதையான ஈழத்தமிழ் இனத்தின் வீர வேங்கைகளான மாவீரர்களின் நாள் இன்று. ஈழ விடுதலை வரலாறு மாவீரர்களின் இரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. தமிழீழத்தின் விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களுடன் இணைந்து போரிட்டு உயிர் தியாகம் செய்த ஏனைய போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் மாவீரர் நாளாகும். நவம்பர் 27ம் திகதி மாவீரர் நாள் என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1989ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நாள் மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களுடன் ஒப்பிடத்தக்கது. மாவீரர்…

  3. உன்னத இலட்சியத்திற்காக தமது உயிரை அர்ப்பணித்த உத்தமர்களின் நினைவுகளை தமிழ் மக்களது மனங்களில் இருந்து அழித்துவிட ஒட்டுமொத்த இலங்கையே அணி திரண்டு வந்தாலும் முடியாத காரியம் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எமது இன விடுதலைப் போராட்டத்திற்காக தங்களுடைய உயரிய உயிரையே அர்ப்பணித்த மாவீரர்களுடைய தினம் எப்போதும் மக்கள் மனங்களில் நீங்காத இடம்பிடித்துள்ளது. அவர்களது மன உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் ஒருபோதும் முடியாது. அன்று தொட்டு இன்றும் உணர்வு பூர்வமாக அனைத்து தமிழ் மக்களும் கொள்கை வேறுபாடு இன்றி புனிதமான மாவீரர் தினத்தை கடைப்பிடித்து வருகின்றார்கள். இந்தநிலையில் ஒட்டுமொத்த இலங்கையும் அணி திரண்டு தமிழ் மக்களது மன உணர்வுகளை கட்டுப்படு…

  4. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசம் இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தை தடுத்து நிறுத்தி பிரபாகரனை பாதுகாக்கவே முயற்சித்தது. அவர்களுடைய முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தமையால் ஐ.நாடுகள் சபைகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடாக தீர்மானத்தை கொண்டுவந்தார்கள். அந்தத் தீர்மானமும் பெரியளவில் கைக்கொடுக்காத நிலையில் தற்போது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அதேவேளை அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தகர்த்தியுள்ளமையானது இலங்கையில் மீண்டும் தமிழீழத்தை உருவாக்கும் முயற்சியென்றே கூறவேண்டும் என ஆளுங்கட்சி குறைக்கூறி வருகின்றது. இதனை எஸ்.பி.திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று தெரிவித்திருந்தார். இந்தியா இலங்கையில் ஈழத்தை உருவாக்கி …

  5. இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்காவிடின் பொருளாதார தடைகளை விதிக்கும் யோசனையை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். பிரிட்டன் பொதுச்சபையின் வெளிவிவகார குழுவே இந்த யோசனையை முன்வைத்துள்ளது. இந்த விடயம் குறித்து மேலும் அறிய வருவதாவது: சர்வதேச விசாரணைகள் ஆரம்பமாகி சில மாதங்களாகி விட்டன. ஆனபோதிலும் இலங்கை அரசாங்கம் இதற்கு பல முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் ஏற்படுத்த முயல்கிறது. அத்துடன் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்கவும் மறுக்கிறது. இதற்காக இலங்கையின் மீது பொருளாதார தடைகள் உட்பட சகல சாத்தியப்பாடுகளையும் பிரிட்டன் பரிசீலிக்கவேண்டும் என வெளிவிவகாரக் குழு சிபாரிசு செய்துள்ளது. இலங்கை அரசாங்கம் சர்வதேச விசார…

  6. கொழும்புக்கு அவசரமாக அழைக்கப்பட்டார் உதய பெரேரா; யாழ். தளபதியாக ஜகத் அல்விஷ்?! யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நம்பிக்கையான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சுமார் ஒரு மணி நேர கால அவகாசத்தில் அவர் கொழும்பிற்கு விமானப்படை விமான மூலம் அழைக்கப்பட்டுள்ளார். இடமாற்றத்திற்கான காரணமேதும் தெரியாத போதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது நம்பிக்கைக்கு உரியவவரான அவர் கிளிநொச்சியில் இருந்தே யாழ்ப்பாணத்திற்கான இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். முன்னாள் போராளிகளை கொண்ட சிவில் பாதுகாப்பு படையினை தோற்றுவித்தவர் என்ற வகையில் அவர் அனைத்து தரப்பிடையேயும் கவனம் பெற்றிருந்தார். …

  7. கொழும்பில் இன்று துவங்குகிறது 18 நாடுகளின் பாதுகாப்பு பிரதானிகளின் மாநாடு! [Thursday 2014-11-27 07:00] தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் பங்கேற்கும் இரண்டு நாடு மாநாடு, இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாடுகளை சேர்ந்த பாதுகாப்புப் படை பிரதானிகள் கலந்து கொள்ளவுள்ளதாக இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்து தகவல் வெளியிட்ட அவர், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் பங்கேற்கும் இரண்டு நாடு மாநாடு, இன்று கொழும…

  8. ‘டொலருக்கு எதிராக யென்னின் பெறுமதியில் வீழ்ச்சி – சிறிலங்காவுக்கு ஆபத்தை உண்டுபண்ணும்’ NOV 26, 2014 | 12:21by நித்தியபாரதிin சிறப்பு செய்திகள் டொலருக்கு எதிராக யப்பான் நாணயமான யென் [Yen] வீழ்ச்சியடைந்துள்ளதானது ஆசியாவின் நாணய ஒழுங்கில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார். யென்னின் பெறுமதி வீழ்ச்சியடைவதன் மூலம் சிறிலங்காவால் யென் நாணயப் பெறுமதியில் வழங்கப்பட வேண்டிய கடன்களை மீள வழங்குதல் மற்றும் யப்பானிய உற்பத்திப் பொருட்களை மலிவான விலையில் இறக்குமதி செய்தல் போன்ற குறுகிய கால நலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஆனால் டொலருக்கு எதிராக யென்னின் பெறுமதியில் வீழ்ச்சியேற்பட்டு…

  9. போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மீட்பதற்கு அமெரிக்கா முயற்சி செய்ததாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றும் இந்த முயற்சிக்கு அமெரிக்காவும் ஏனைய சில நாடுகளும் தமது எல்லாப் பலத்தையும் பயன்படுத்தின. ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. ஐ.நா ஊடாகவும், நோர்வே மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களின் ஊடாகவும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அந்த அழுத்தங்களுக்கு அடிபணியாமல் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால்…

  10. பயங்கரவாதம் இலங்கையில் அடிப்படை நிலைப்பாட்டுக்கு இன்னுமே சவாலானதாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேபாளம் காத்மண்டுவில் நடைபெற்று கொண்டிருக்கின்ற 18ஆவது சார்க் மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/134776-2014-11-26-05-01-43.html

  11. எதிரணியின் புதிய ஆட்சியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள்: சஜித் எதிரணியின் புதிய ஆட்சியில் சர்வதேச ரீதியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள். எனவே, இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முடியுமென்ற புலிகளின் கனவு ஒரு போதும் நிறைவேறப் போவதில்லையென்பதை ஐ.தே. கட்சியின் பிரதித் தலைவராக உறுதியளிக்கின்றேன் என சஜித் பிரேமதாஸ எம்.பி. தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான நிதியமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் வெற்றி நிச்சயிக்க…

  12. கடந்த 9 வருட கால ஆட்சியில் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான வெளிப்படையான மக்கள் எதிர்ப்பு - பௌத்த துறவிகள் - மற்றும் மதகுமாரின் எதிர்ப்பு இந்த அளவில் உருப்பெற்றதை நான் அவதானிக்கவில்லை.... http://www.bbc.co.uk/sinhala/sri_lanka/2014/11/141125_colombo_disappeared_protest http://www.bbc.co.uk/sinhala/sri_lanka/2014/11/141125_colombo_disappeared_protest BBC Sinhala - සංදේශය අඩුම ගානේ ජාත්‍යන්තරයේ තියන මිනී මරණ රටක්, අතුරුදහන් කරන රටක්, පොලිසියේදී මිනී මරණ රටක්, නීතිය කඩා වැටිච්ච රටක්, මිනිස්සුන්ට කතා කරන බැරි රටක්. ඒ අපේ රටට විරුද්ධව තියන දේ නැති කරන්න නම් යහපාලනය සහිත ක්‍රමයක් හදන්න වෙනවා - බ්‍රිටෝ ප්‍රනාන්දු

  13. 4000 ற்கும் மேற்பட்ட இலங்கை சட்டத்தரணிகளை உள்ளடக்கியலோயர்ஸ் கலக்டிவ்(lawyers collective) என்ற அமைப்புஎதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவைஆதரிக்கவுள்ளதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் லால்விஜயநாயக்க தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனா கலந்துகொள்ளவுள்ள பிரச்சாரகூட்டங்களில் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நிறைவேற்றுஅதிகார ஜனாதிபதி முறையை நீக்க வேண்டியதன்அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றுவார்கள் என அவர்தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் பிரச்சாரங்களின் போதுபழிவாங்கப்படுவோரிற்கு எதிராக இந்த அமைப்பைசேர்ந்தவர்கள் ஆஜாரவர்கள், முன்னாள் பிரதம நீதியரசரின்பதவிநீக்கத்தை எதிர்த்து ஆரம்பித்த பிரச்சாரத்தையே நாங்கள்முன்னெடுக்கிறோம், சட்டத்தின் ஆட்சியையும், நீதித்துறைiயின்சுத…

  14. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இப் பகுதியில் கடும் மழையுடன் கடல் கொந்தளிப்பும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தொடச்சியாக பெய்துவரும் அடை மழையால் நீர் நிலைகள் அனைத்தின் நீர் மட்டங்களும் அதிகரித்து காணப்படுகின்றது. http://virakesari.lk/articles/2014/11/26/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8…

  15. பட்டித்திடல், மணற்சேனை, கிளிவெட்டி ஆகிய நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள சம்பூர் மக்கள்;, தற்போது பெய்கின்ற மழையால் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார். மழைநீர் வழிந்தோட முடியாதவாறும் சேறும் சகதியாகவும் அவர்களின் நலன்புரி நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளும்; நடைபாதைகளும் காணப்படுகின்றன. இதனால், இந்த மக்கள் குறிப்பாக, குழந்தைகள் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்தப் பிரச்சினைகளை உடனடியாக கவனித்து நலன்புரி நிலையங்களையும் சூழலையும் சுத்தமாக பேணுவதற்குரிய நிதியொத…

  16. இறக்குவானை டெல்வின் டீ பிரிவில் தமிழர்கள் மீது மூன்று முஸ்லிம் இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றறுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 16 வயது தழிழ் சிறுமியை முஸ்லிம் இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தின் பின்னணியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள இறக்குவானை பொலிசார் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இறக்குவானை டெல்வின் டீ பிரிவில்நேற்று இரவு கடைக்கு சென்ற தமிழ் இளைஞர் ஒருவர் மீது மூன்று முஸ்லிம் இளைஞர்கள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இவரை பாதுகாக்க சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் தமிழ் இளைஞர் ஒருவரும்…

  17. மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மன்னிப்பு அளித்தமைக்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதிக்கு நன்றிதெரிவித்துள்ளார். நேபாளத்தில் நடைபெறும் சார்க் உச்சிமாநாட்டின்போது இலங்கை ஜனாதிபதியை சந்தித்தவேளையே மோடி நன்றி தெரிவித்ததாக இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் அக்பர்டீன் டுவிட்டர்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்கனை மன்னித்து விடுதலைசெய்து திருப்பியனுப்பியதற்காக மோடி நன்றிதெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113923/language/ta-IN/article.aspx

  18. நெடுந்தீவில், நேற்று வீதிகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்ட கார்த்திகைப் பூக்களால் கடற்படையினர் பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகரித்தனர். அத்துடன் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மாவீரர் வாரம் ஆரம்பமாகிய நிலையில் விடுதலைப் புலிகளால் தேசிய மலராகப் பிரகடனப்படுத்தப்பட்ட கார்த்திகைப் பூக்கள் நேற்று மதியம் நெடுந்தீவின் முதலாம்,இரண்டாம் வட்டாரப் பகுதிகளின் வீதிகள், பொது இடங்களில் பரவலாக வைக்கப்பட்டன. இவை போத்தல்களில் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அங்கு வந்த கடற்படையினர் அவற்றை எடுத்துச் சென்றனர். அத்துடன் அப்பகுதிகளில் பாதுகாப்புக் கெடுபிடிகளையும் அதிகரித்துள்ளனர். ரோந்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. http://seithy.com/…

  19. மாவீரர் தின சுவரொட்டியுடன் மீசாலை புத்தூர் சந்தி மற்றும் மிருசுவில் பகுதிகளில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நேற்று பகல் மிருசுவில் பகுதியில் வைத்து இருவரைக் கைது செய்த கொடிகாமம் பொலிஸார் மாலை புத்தூர் சந்திப் பகுதியில் மேலும் ஒருவரை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர் என்றும் தெரியவருகின்றது. மேலும் இவர்களிடமிருந்து மாவீரர் தின சுவரொட்டிகள் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், வட மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சயந்தனின் தனிப்பட்ட மெய்பாதுகாவலர் என கருதப்படும் வீரசிங்கம் சுலக்ஷன் என்று கூறப்படுகிறது. இது தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் சயந்தனிடம் வினவிய…

  20. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 60 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், யாழ்ப்பாணத்தில் இராணுவ ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் குடாநாட்டின் ஆலயங்கள், தேவாலயங்கள் என்பனவும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. யாழ். நகரப்பகுதியில் இன்று காலை விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்துடன் வெளியான உதயன் பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்த மூவர் இராணுவத்தினரால் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று வெதுப்பகத்தில் உணவுப் பொருட்கள் வாங்கச் செல்பவர்களையும் இராணுவத்தினர் அவர்கள் என்ன வாங்கிச் செல்கின்றனர் எனவும் சோதனையிட்டுள்ளனர். http://seithy.com/breifNews.ph…

  21. இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக் கழகத்தில் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. தடைகள் போடுவதால் அடங்கிப் போவோம் என நினைத்தாயா புலிப்படை திரட்டி உன்னை அழிப்போம் நாம். தமிழ் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 60 வது பிறந்த தின நிகழ்வு இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களினால் காலை அகவணக்கத்தின் ஆரம்பத்துடன் கொண்டாடப்பட்டதோடு தலைவர் பிரபாகரனின் தமிழ் தேசிய வாசகங்களும் அங்காங்கே ஒட்டி தமது உணர்வை தெரியப்படுத்தினர். ஆனாலும் இன்று அதன் பிற்பாடு இன்றிலிருந்து எதிர்வரும் 01.12.2014 வரை பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் உள்நுழைய தடை செய்யப்பட்டிருப்பதோடு பல்கலைக்கழக விடுதிகளில் இருந்து இன்று ம…

  22. பல்கலைக்கழகத்திற்கு திடீர் மூடுவிழா; விடுதியை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை news யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 1ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி விடுதிகளில் உள்ள மாணவர்களையும் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினத்தினை நாளைய தினம் பல்கலைக்கழகத்திலே அல்லது விடுதிகளிலே மாணவர்கள் கொண்டாடலாம் என்ற அச்சத்திலே இந்த திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றஞ்…

  23. இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன். இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்திலேயே ஹுசைன் இதனை குறிப்பிட்டுள்ளார். விசாரணைகள் தொடர்பான குறிப்பிடத்தக்க விடயங்கள் குறித்து பேசுவதற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். விசாரணைகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கும் திகதி முடிவடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், அந்த ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் மூடப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் நடத்தும் விசாரணைகளின்போது பக்கச்சார்பின்ம…

  24. மாவீரர் தினமான நாளை வியாழக்கிழமை இலங்கை இராணுவத்தின் கபடி அணிக்கும் இந்திய இராணுவத்தின் கபடி அணிக்கும் இடையில் காட்சி ஆட்டம் ஒன்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா கலந்துகொள்கிறார். http://malarum.com/article/tam/2014/11/26/7071/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.