Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மைத்திரிபால சிறிசேனவையும் அரசாங்கம் சிறையில் அடைக்கக் கூடும் என்பதால் அவர் இப்போதே தனது உடலைத் தெம்பாக்கிக் கொள்வது நல்லது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசாங்கம் மாற்றுக் கொள்கையாளர்களை பழிவாங்க முயற்சிக்கின்றது. மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு முற்று முழுதாக அகற்றப்பட்டுள்ளது. தற்போது மைத்திரிபாலவுடன் குரோத உணர்வுடன் செயற்படுகின்றனர். எவ்வாறு மைத்திரிபாலவிற்கு எதிராக வழக்குத் தொடர்வது என யோசிக்கின்றார்கள்.எவ்வாறு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பி வைப்பது என்பது பற்றி திட்டமிடுகின்றார்கள். சில வேளைகளில் நான் சிறையில் தூங்கிய அதே மேசையில் மைத்திரிபாலவும் தூங்க நேரிடலாம். எனவே இப்போதே உடற்பயிற்சி செய்து உடலை தெம்படையச் செய்த…

    • 3 replies
    • 754 views
  2. மலைநாட்டில் காணி - வீட்டு உரிமையையும், நுவரேலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபை ஆட்சியுரிமையையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் பேரம் பேசி கேட்டு வாங்கி கொடுக்க முடியாதவர்கள்தான், இந்த முறையும் அவருக்காக மலைநாட்டு மக்களிடம் வந்து வாக்கு கேட்கிறார்கள். இதென்ன மலைநாட்டு கூத்து? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடத்திய, மலையக சிந்தனையாளர் எம். வாமதேவனின் "மலையகம்-சமத்துவ அபிவிருத்தியை நோக்கி" என்ற நூல் வெளியீட்டு விழாவில் கருத்துரை வழங்கிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, மலையக மண் பெற்றெடுத்துள்ள அறிவுஜீவி வாமதேவன். அவர் ஆய்வாளர். எழுத்தாளர். அத்துடன் சமூக பற்றாளர். இவர்கள் போன்றவர்…

  3. மஹிந்தவை சந்திக்க அழைத்து செல்லப்பட்ட 47 சிவில் பாதுகாப்பு தமிழ்யுவதிகள் மீது பாலியல் துன்புறுத்தல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்காக மஹிந்தவை சந்திக்கவென வடக்கிலிருந்து அழைத்து செல்லப்பட்ட 47 தமிழ் யுவதிகள் மிகிந்தலை இராணுவ முகாமினை அண்மித்த பகுதியொன்றில் வைத்து பாலியல் ரீதியினில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. இராணுவத்தினால் உருவாக்கப்பட்டு வன்னியில் செயற்படும் சிவில் பாதுகாப்புபடைப் பிரிவில் கடமையாற்றுகின்ற குறித்ததொரு மாவட்டத்தைச்சேர்ந்த 47 தமிழ் யுவதிகளை கடந்த 22 ஆம் திகதி மிகிந்தலை என்ற இடத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சந்திக்க ஏற்பாடாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டே சிவில் பாதுகாப்பு படைப்பிரி…

  4. தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடி வீர காவியமான போராளிகள் போற்றப்பட வேண்டியவர்கள். எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம்பிடித்திருக்கும் மாவீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவோம், இராணுவம் தடுத்தாலும் நாம் பூசிப்போம்.என வடக்கு மாகாண சபை உறுப்பினரான திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மரணித்த போராளிகளை நினைவுகூரும் தினமான மாவீரர் தினம் வரும் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தத் தினத்தை தமிழர்கள் எவரும் அனுஷ்டிக்கக் கூடாது என இராணுவம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே திருமதி அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்: நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அரச…

  5. தெற்கு முற்போக்கு சக்திகளுடன் சேரத் தயாராகிறது கூட்டமைப்பு news இன அடக்குமுறைக்கும் சர்வாதிகாரப்போக்கிற்கும் எதிராக எழுச்சி மிக்க சக்திகளோடு இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் நிதி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வடக்குக்கு யாழ்தேவி அனுப்பப்பட்டுள்ளது, அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றெல்லாம் பல்வேறு புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம இங்கு பேசினார். வடக்குக்கு யாழ்தேவி மட்டுமல்ல, வீத…

  6. கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் ரஸ்யப் போர்க்கப்பல்! [Tuesday 2014-11-25 07:00] ரஷ்ய கடற்படையின் “யாரோஸ்லோவ்முட்ரி” என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது நல்லெண்ண விஜயமாக கொழும்பு வந்துள்ள இந்தக் கப்பல், 126.6 மீற்றர் நீளமுடையது. நாசகாரி கப்பலான யாரோஸ்லோவ்முட்ரி 4489 தொன் எடையை கொண்டது. இதில் 210 கடற்படை வீரர்கள் உள்ளனர். இந்தக் கப்பல் எதிர்வரும் 28ம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும். ரஷ்ய கடற்படையின் “யாரோஸ்லோவ்முட்ரி” என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது நல்லெண்ண விஜயமாக கொழும்பு வந்துள்ள இந்தக் கப்பல், 126.6 மீற்றர் நீளமுடையது. நாசகாரி கப்பலான யாரோஸ்லோவ்முட்ரி 4489 தொன் எடையை கொண்டது. இதில் 210 கடற்ப…

  7. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து பிரிட்டனில் விவாதம் 25 நவம்பர் 2014 இலங்கையில் மிகச்சிறந்த முறையில் தேர்தல்களை கண்காணிப்பது எவ்வாறு என்பது குறித்து பிரிட்டனும் ஏனைய நாடுகளும் ஆராய்ந்துவருவதாக பிரிட்டனின் பிரபுக்கள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம், உட்பட பல விடயங்கள் குறித்து பிரிட்டனின் பிரபுக்கள் சபை நேற்று விவாதித்துள்ளது. இந்த விவாதத்தின் போது பிரபுக்கள் சபை உறுப்பினர்; எழுப்பபட்ட கேள்வி;க்கு பதிலளித்துள்ள சபையின் அமைச்சரவை பேச்சாளர்,இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பினால் உருவாக கூடிய தாக்கங்கள் குறித்து நாங்கள் ஆராய்ந்துவருகின்றோம், ஐரோப்…

  8. நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் 18வது சார்க் மாநாடு நாளை ஆரம்பமாகவுள்ளது. இருநாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய எட்டு உறுப்பு நாடுகளினதும், தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை 9.30 மணியளவில் காத்மண்டு வந்தடைவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் 3 மணியளவில் காத்மண்டு விமான நிலையத்தை வந்தடைவார். காத்மண்டு விமான நிலையத்தின் ஊடாக, நாளொன்றுக்கு 300 விமானங்கள் பயணங்களை மேற்கொள்ளும் நிலையில், சார்க் மாநாட்டுத் தலைவர்களின் வருகையால் அனைத்துலக விமான சேவை அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் அ…

  9. திருகோணமலை குச்சவெளி சலப்பையாறு பகுதியில் யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, சந்தேகநபரான 16 வயது சிறுவன் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். http://www.pathivu.com/news/35612/57//d,article_full.aspx

  10. யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை மாவட்டம் தெஹியத்தகண்டி பிரதேசத்தை சேர்ந்த தசங்க ரட்ணாயக்க (வயது 27) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்தினுள் பொலிஸ் தங்குமிட விடுதியில் தனது அறையை உட்பக்கமாக பூட்டிவிட்டே குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. யாழ்.நீதவான் பொ.சிவகுமார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். http://www.pathivu.com/news/35611/57//d,article_full.aspx

  11. யாழ். மாவட்டத்தில் இதுவரை எயிட்ஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் என சுமார் 70 பேர் வரையில் இனம்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் இந்த ஆண்டு மாத்திரம் இனம் காணப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் தெரிவித்ததாவது, யாழ். மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது 14 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3பேர் சிறுவர்களாகவும் உள்ளனர். எனினும் ஆரம்பக் கட்ட பரிசோதனையில் மாத்திரமே எயிட்ஸ் நோய் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனினும் முழுமையான அறிக்கை கிடைத்த பின்னரே முழுமையான தகவலை வெளியிட முடியும். எயிட்ஸ் நோய் தொற்றுள்ள பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கே தொற்று ஏற…

    • 3 replies
    • 634 views
  12. நாவாந்துறையில் இன்றும் தொடர்ந்த மோதல்! – இராணுவம், பொலிஸ் குவிப்பு. [Monday 2014-11-24 19:00] உதைபந்தாட்ட போட்டியில் நேற்று ஏற்பட்ட கைகலப்பையடுத்து, நாவாந்துறை பகுதியின் பாதுகாப்பு பலப்படத்தப்பட்டு, பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று மாலை இடம்பெற்ற மைலோ கிண்ண இறுதிப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஷ் அணி, நவிண்டில் கலைமதி அணியை வென்று சம்பியனாகியது. வெற்றிக்கிண்ணத்துடன் நாவாந்துறைக்கு வீதி ஊர்வலமாகச் சென்ற சென்.மேரிஷ் அணியினர், சென்.நீக்கிலஸ் மைதான வழியாக செல்லும்போது, இரு அணிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.இது கைகலப்பாக மாறியதில் நாவாந்துறையில் பதற்றம் நிலவியது. இதைத…

  13. பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஜனாதிபதி தேர்தலில், எங்கள் தேசிய முன்னணியின் கீழ் அலைபேசி சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 'ம' பிரிவுக்கு பதிலாகவே பதிவு செய்யப்படவுள்ளது. இதேவேளை, பொது எதிரணியின் சின்னமாக அலைபேசியை எதிரணியில் இருக்கின்ற பலர் விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. http://seithy.com/breifNews.php?newsID=121382&category=TamilNews&language=tamil

  14. ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ள மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து, வட மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'தாய் நாட்டின் தீர்ப்பு மஹிந்த' என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், மூன்றாவது முறையாக மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார். இந்நிலையிலேயே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து வாழ்த்து கூறும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://seithy.com/breifNews.php?newsID=121411&category=TamilNews&language=tamil

  15. மஹிந்தவை சந்திக்க அழைத்து செல்லப்பட்ட 47 சிவில் பாதுகாப்பு தமிழ்யுவதிகள் மீது பாலியல் துன்புறுத்தல்: 24 நவம்பர் 2014 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்காக மஹிந்தவை சந்திக்கவென வடக்கிலிருந்து அழைத்து செல்லப்பட்ட 47 தமிழ் யுவதிகள் மிகிந்தலை இராணுவ முகாமினை அண்மித்த பகுதியொன்றில் வைத்து பாலியல் ரீதியினில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. இராணுவத்தினால் உருவாக்கப்பட்டு வன்னியில் செயற்படும் சிவில் பாதுகாப்புபடைப் பிரிவில் கடமையாற்றுகின்ற குறித்ததொரு மாவட்டத்தைச்சேர்ந்த 47 தமிழ் யுவதிகளை கடந்த 22 ஆம் திகதி மிகிந்தலை என்ற இடத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சந்திக்க ஏற்பாடாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டே சிவில் பாதுகாப்பு பட…

  16. வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்:-24 நவம்பர் 2014 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் 2015ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சற்றுமுன்னர் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 152 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் பெறப்பட்டதாக அத தெரண பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஐதேக, ததேகூ, ஜேவிபி போன்ற கட்சிகள் வாக்களித்த நிலையில் ஆதரவாக ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் வாக்களித்தன. பொது வேட்பாளருடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய எவரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதன்படி வரவு செலவுத் திட்டம் மேலதிக 95 வாக்குகளால் நிறைவேற்றப்பட்…

  17. மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கட்சி மாறலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அவர் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தூய்மையான அரசியல்வாதியென வர்ணித்துள்ளார்.அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்களும், ஜனாதிபதியும் மைத்திரிபாலவை கடுமையாக சாடி வரும் நிலையில் அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளமை கட்சி தாவல்குறித்து ஊகங்களை உண்டுபண்ணியுள்ளது. மைத்திரியும், ராஜிதவும் முன்னுதாரணமான அரசியல்வாதிகள்,எனது தந்தை இறந்தவேளை அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர்.இந்த இருவரும் அரசாங்கத்திடமிருந்து பிரிந்து சென்றுள்ளனர் இனி அவர்கள் திரும்பிவரமாட்டார்கள்,என அவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஸ்தாபிக்கப்பட்டபோது,பின்பற்றப்பட…

  18. பொலன்னறுவை மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதாதைகள்முற்றாக சேதப்படுத்தி கழற்றியெறியப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நண்பகல் பொலன்னறுவை சோமாவதிய விகாரைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரும் பொலிசாரும் பொலன்னறுவையில் நிலைகொண்டுள்ளனர். எனினும் இவர்களைக் கண்டு அஞ்சாமல் சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஆதரவாளர்கள் பகிரங்கமாக களமிறங்கி ஜனாதிபதியின் பதாதைகளை அகற்றியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக அறிந்தவுடன் பொலன்னறுவைக்கான தனது விஜயத்தை ரத்து்ச் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வரவு செலவுத்திட்ட வாக்களிப்பின் பின்னர் அங்கு விஜயம்…

  19. பிரதான கோடீஸ்வரரும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் சகோதரருமான டட்லி சிறிசேனவை இரகசியப் பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொலன்னறுவை மாவட்டத்திற்கு இன்று காலை விரைந்திருந்த இரகசியப்பொலிசார், டட்லி சிறிசேனவை கைது செய்து கொழும்புக்கு அழைத்து வந்து கொண்டிருப்பதாகவும் குறித்த தகவல் தெரிவிக்கின்றது. அரலிய ரக சம்பா அரிசி ஆலை உரிமையாளரான இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் வரை அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக இருந்தார். இவர் நினைத்த நேரத்தில் இலங்கை முழுவதும் அரிசியின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை ராஜபக்ஷவினர் இவருக்கு வழங்கியிருந்தனர். இதற்கு அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து மாதமொன்றுக்கு 200 கோடி ரூபா கப்பமாக ராஜபக்ஷவினருக்கு வழங்கப்பட்ட…

  20. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஜனநாயகத்துக்கு வாக்களிப்போம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். மைத்திரிபாலவிற்கு ஆதரவளிப்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் - ஜே.வி.பி - எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பது குறித்து இன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளதாக ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதனை இன்றைய தினம் தீர்மானிக்க உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரி…

  21. -எம்.றொசாந்த் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் ஆர். இராசகுமாரன் ஆகியோரை எச்சரிக்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'இவர்கள் புலிகளை உருவாக்குகின்றனர்', 'இவர்களை சுடுவோம்', 'மாவீரர் தினம் கொண்டாட விடமாட்டோம்' ஆகிய வாசகங்களுடன் இந்த சுவரொட்டிகள்; ஒட்டப்பட்டுள்ளன. 'சுடுவோம்' என்ற தலைப்பிட்டு, நிவாஸ், தமிழ்ச்செல்வன், ஐங்கரன், பிரிட்டோ ஆகிய 4 மாணவர்களின் பெயர்களும், ஆசிரியர் சங்கத்தலைவரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. http://origintamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/134598-2014-11-24-06-55-18.html

  22. இந்த அரசாங்கத்தில் இருந்து செய்ய முடியாதவற்றை செய்வதற்காகவே பொது வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளேன். சகல மக்களின் ஆதரவும் எனக்கு உண்டு என தெரிவித்த மைத்திரிபால சிறிசேன இன்று தொடக்கம் எனது மக்கள் பணி ஆரம்பிக்கின்றது எனவும் குறிப்பிட்டார். பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன நேற்று கோட்டை நாக விகாரையின் விகாரதிபதி மாதுளுவாவே சோபித தேரரை சந்தித்து ஆசி பெற்றிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்; நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழிப்பது அதிகாரப் பகிர்வினூடாக ஜனநாயகத்தின் பாதையில் நாட்டை கொண்டு செல்வது என்ற கோட்பாட்டினை ஆரம்பித்தவர் மாதுளுவாவே சோபித தேர…

  23. -எம்.றொசாந்த் மைலோ கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியின் போது, இரு அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பு காரணமாக, யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியின் பாதுகாப்பு பலப்படத்தப்பட்டு, பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்று நாவாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை இடம்பெற்ற மைலோ கிண்ண இறுதிப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஷ் அணி, நவிண்டில் கலைமதி அணியை வென்று சம்பியனாகியது. வெற்றிக்கிண்ணத்துடன் நாவாந்துறைக்கு வீதி ஊர்வலமாகச் சென்ற சென்.மேரிஷ் அணியினர், சென்.நீக்கிலஸ் மைதான வழியாக செல்லும்போது, இரு அணிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாறியதில் நாவாந்துறையில் பதற்றம் நில…

  24. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக கிரான் பாலத்தினூடான தரைவழி போக்குவரத்து இரண்டு நாட்களாக தடைப்பட்டுள்ளது. இதனால், கிரான் தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பேருளாவெளி, கோராவெளி, புலாக்காடு, முறுத்தாணை, குலாவாடி போன்ற கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பாலத்தின் மேலாக படகு சேவையை கிரான் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவும், இராணுவமும் இணைந்து நடத்தி வருகின்றன. இதேவேளை சந்தனமடு ஆற்று நீர் மட்டம் உயர்வடைந்ததினால் சித்தாண்டியை அண்மித்த வயல்வெளி பிரதேசம் முற்றாக வெள்ளநீர் நிரம்பிக் காணப்படுகிறது. http://malarum.com/article/tam/2014/11/24/7018/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%…

  25. மகிந்த சகோதரர்களின் வாழ்வா சாவா போராட்டத்தில் மில்லியன்: - பில்லியன் டொலர்கள் புரளும் தேர்தல் களம்: 23 நவம்பர் 2014 இலங்கையின் தேர்தல் வரலாற்றில் என்றுமே புரளாத அளவுக்கு மில்லியன்களும் - பில்லியன்களும் இம்முறை பாராளுமன்ற தலைகளுக்கும் கட்சித் தலைகளுக்கும் பேசப்படுவதாக கொழும்பிலும் பரவலாக ஊடகங்களிலும் பேசப்படுகிறது. பாராளுமன்ற தலைகளுக்கும் பெரும்பான்மைக் கட்சிகளின் தலைகள் மற்றும் செயலாளர்களுக்கும் டீல் பேசும் பொறுப்பை டீல் மன்னன் டிரான் அலஸ் பொறுப்பேற்று இருப்பதாகவும் மலையகக் கட்சிகளின் தலைகளுக்கு டீல் பேசும் பொறுப்பை பத்திரிகை ஒன்றின் முக்கியஸ்த்தர் எடுத்திருப்பதாகவும் கொழும்பின் முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் மைத்திரிபால சிரிசேனவுக்கு பதில் ஐக்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.