Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் பேச்சு:- (வழக்கு விசாரணையில் முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை) ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின்போது தனக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று முன்னாள் சிபிஐ அதிகாரியான ரகோத்தமன் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர் பாக மூத்த பத்திரிகையாளர் ஃபராஸ் அகமது எழுதிய ‘அசாசினேஷன் ஆஃப் ராஜீவ் காந்தி - அன் இன்சைடு ஜாப்?’ என்ற ஆங்கில புத்தகம், கடந்த ஆகஸ்டில் டெல்லியில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ விசாரணை அதிகாரி ரகோத்தமன் பங்கேற்றார். அவர் பேசியதாவது: ராஜீ…

    • 8 replies
    • 1.1k views
  2. 1.11.2014-எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் அரசுத் தரப்பு வேட்பாளரான சனாதிபதி மகிந்தவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஆழமாகப் பரிசீலிக்கத் தயார் என அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தங்களை இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்துச் செயற்படவில்லை என்றும், இம்முறையாவது தங்களை ஆதரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்றும் அரசின் சிரேஷ்ட அமைச்சரும் சனாதிபதி மகிந்தவின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் கோரிக்கை விடுத்தார் என்று கொழும்பில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில…

  3. -சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படாமல் தரிசு நிலக்காடுகளாக காணப்பட்ட 1697.5 ஏக்கர் நிலம், உலக உணவு ஸ்தபானத்தின் நிதியுதவியுடன் துப்புரவு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்த காலத்தில் பயிர் செய்கைக்கு உட்படுத்தப்படாமல் நீண்ட காலமாக தரிசு நிலக்காடுகளாக காணப்பட்ட வயல் நிலங்களை, மீள் செய்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் அவற்றை துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள 122.5 ஏக்கர் நிலம், பாண்டியன்குளம் கமநல நிலையத்தின் கீழுள்ள 128.5 ஏக்கர் நிலம், கொக்கு தொடுவாய் கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள 291 ஏக்கர் நிலம், ஒட்டிசுட்டான்…

  4. தமிழில் குளோபல்தமிழ்ச்செய்திகள் புனர்வாழ்வு பிரதி அமைச்சர் கருணாஅம்மான் இந்திய அமைதி காக்கும் படையினரிடம் மன்னிப்பு கோர வேண்டுமென இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்த காலத்தில் கருணா இழைத்த குற்றச் செயல்களுக்காக அவர் இந்திய அமைதி காக்கும் படையினரிடம் மன்னிப்பு கோர வேண்டுமென தெரிவித்துள்ளார். 1987 முதல் 1990ம் ஆண்டு வரையில் இந்திய அமைதி காக்கும் படையின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளராக ஹரிஹரன் கடமையாற்றியுள்ளார். கருணா அம்மான் புலிகளின் கிழக்கு இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் சிறுவர்கள் பெண்கள் உளிட்ட பல்வேறு தரப்பினரை படுகொலை செய்துள்ளத…

  5. மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் - உச்ச நீதிமன்றம். மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்தவிதத் தடையும் இன்றி மூன்றாவது முறையாகவும் போட்டியிடலாம் என உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ கேட்டிருந்த ஆலோசனைக்கான தமது பதிலை இலங்கை உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் தனிப்பட்ட முறையில் மஹிந்தவிற்கு அனுப்பிவைத்திருந்தது. 18 ஆவது அரசியல் யாப்பிற்கமைய மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது முறையாகவும் போட்டியிடலாம் என உச்ச நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது. …

  6. யாழில் தடை நீக்கிய 32 ஐஸ்கிறீம்கள் விபரம் யாழ் மாவட்டத்தில் உள்ள ஐஸ்கிறீம், யூஸ் உற்பத்தி நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்த சுகாதாரத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக பல தரப்பட்ட விமர்சனங்களும் நிலவுகின்றன. இவ் விடயம் தொடர்பாக சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் நிலத்தடியில் உள்ள சுண்ணாம்புப் பாறையில் உள்ள வெடிப்புக்கள் காரணமாக பெரும்பாலான கிணறுகள் மாசுபட்ட நிலையிலே உள்ளன. இதனால் யாழ் மாவட்டத்தில் நீர், உணவு மூலம் பரவும் நோய்களான வயிற்றோட்டம், வயிற்றுளைவு, நெருப்புக்காய்ச்சல் போன்ற நோய்களின் பரம்பல் கடந்த பல வருடங்களாக அதிகமாகக் காணப்படுகின்றது. உதாரணமாக நெருப்புக் காய்ச்சலினால் பாதிக்கப்பட…

  7. மஹிந்தவின் அரசியல் எதிர்காலம் இன்று முடிவாகும்! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடைவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து இன்று தெரியவரும். மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியுமா? மற்றும் இரண்டாம் தவணைக்காகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளில் போட்டியிட முடியுமா என்பது குறித்து ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்த நிலையில் இன்று உயர் நீதிமன்றம் சட்ட விளக்கம் அளிக்க உள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான பத்து பேர் அடங்கிய நீதியரசர்கள் குழு இது குறித்து ஆராய்ந்துள்ளனர். இந்தநிலையில் இன்று பிற்பகல் 2.30 அளவில் நீதியரசர்கள் மீண்டும் கூடி இந்த விடயங்கள் குறித்து ஆராயவுள்ளனர். நீதியரசர்களுக்கு இடையில் நடைபெற…

  8. ஆளும் கட்சியோ அல்லது எதிர் கட்சியோ தமது நிபந்தனைகளுக்கு உடன்பட மறுக்கும் பட்சத்தில் தமது அமைப்பு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கும் என பொதுபலசேனா அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவ்வமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இதனைக் தெரிவித்தார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=785863629611217183#sthash.3v68gOT8.dpuf

  9. தமிழக மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ராஜபக்‌ஷவுடன் தொலைபேசியில் பேசியதாக பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணிய சாமி தெரிவித்திருக்கும் தகவலை, உறுதிப்படுத்தவோ, நிராகரிக்கவோ இந்திய வெளியுறவு அமைச்சு மறுத்துள்ளது. இது குறித்து இப்போதைக்கு எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் சயத் அக்பருத்தின் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் ஞாயிறன்று தொலைபேசியில் பேசியதாக பாஜகவின் சுப்ரமணிய சுவாமி தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு துறைய…

  10. வடமராட்சி கிழக்கின் வெற்றிலைக்கேணி பகுதியில் இலங்கை கடற்படையினரிற்கான பாரிய தளமொன்று அமைப்பதற்கேதுவாக நில அளவைப்பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது வரை காலமும் இத்தகைய நில ஆக்கிரமிப்பு தொடர்பிலான நில அளவைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்த தமிழ் அரசியல் தலைமைகள் ஓய்வு நிலைக்கு சென்றிருந்த நிலையிலேயே அப்பகுதி கிராம அலுவலரது எதிர்ப்பினையும் தாண்டி இன்று நில அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய நில ஆக்கிரமிப்பு போராட்டங்களில் முன்னின்று செயற்படும் வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இருதய சத்திரசிகிச்சைக்காக கொழும்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் எவரும் நில அளவை இடம்பெறும் இடங்களிற்…

  11. தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எழுத்து மூலம் ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றியம் தளர்த்தியமை தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தாம் இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்க உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்யுமாறு ஐக்கியநாடுகள் உயர் பிரதிநிதி பெட்ரிக்கா மொஹாரினிவிடம் ரணில் விக்ரமசிங்க எழுத்து மூலம் கோரியுள்hளர். எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்து முடக்கம் தற்காலிக அடிப்படையில் தொடர்ச்சியாக அமுலி…

  12. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணியுடன் கைகோர்த்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முன்வரவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி, அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அரசுக்குத் தேவையென அரசு தெரிவித்திருக்கின்ற நிலையில் வடக்கின் வாக்குகளை வென்றெடுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டம் குறித்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தகவல் வெளியிடுகையில், "பௌத்த சிங்கள வாக்குகளை எதிர்பார்த்து தேர்தலில் குதிப்பது முட்டாள்தனமான செயல். பௌத்த சிங்கள வாக்குகள் இரு தரப்பினருக்குமே (அரசு, எதிர்க்கட்சி) கிடைக்கும். ஆனால், சிறுபான்மை மக்களின் வாக்குகள் எவரேனும் ஒரு தரப்பினையே பிரதிநிதித்துவப்படுத்தும். அதன் காரணத்தினாலேயே அரசு வடக…

  13. ஜனாதிபதித் தேர்தலில்,மஹிந்த ராஜபக்‌ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஆழமாகப் பரிசீலிக்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தங்களை இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்துச் செயற்படவில்லை என்றும் இம்முறையாவது தங்களை ஆதரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வரவேண்டும் என்றும் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்திருந்தார். இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன், நாங்கள் இதுவரை அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட முன்வரவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்படுவது தவறானது. எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்காக அரசுடன் ஒத்துழைத்துச் …

  14. தடுமாறுகிறது மு.கா! ஆளுங்கட்சிக்கு ஆதரவில்லையாம்! அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுவரும் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை ஆளும் கூட்டணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்துவரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுவரும் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் மீண்டும் தானே போட்டியிடப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் இந்த நிலைப்பாடும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலியே அ…

  15. இரண்டாயிரம் வருட பாரம்பரியம் உள்ள ஈழத் தமிழ் இலக்கியங்கள் ஈழ தேசத்தின் தனித்துவமான வரலாற்றை பறைசாற்றும் சாட்சியங்கள் என்று தெரிவித்த ஈழ கவிஞர் தீபச்செல்வன் இன எழுச்சி சார்ந்த ஈழ இலக்கியம் எங்களை ஒடுக்குபவர்களுக்கு எதிரான ஆயுதம் என்றும் குறிப்பிட்டார். நியூ டெல்லியில் அண்மையில் நடைபெற்ற சமன்வய்: இந்திய தேசிய மொழிகளின் விழாவில் கலந்து கொண்டுபேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். குறித்த விழாவில் இந்திய மாநிலங்களிலிருந்தும் முக்கிய எழுத்தாளர்கள் கலந்துகொண்டதுடன் ஈழம், பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கலந்து கொண்டனர். Transnation: Poetry and the Idea of Nation என்ற தலைப்பில் இடம்பெற்ற நிறைவுநாள் முதல் அமர்வில் டெல்லியை சேர்ந்த கவிஞர் அசாட் சைடி நேபாளத்தை சேர்…

  16. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் சயிட் அல் ஹ_செய்னின் இலங்கை குறித்த நிலைப்பாடு சரியானதே என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என அல் ஹ_செய்ன் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு சரியானதே என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற அல் ஹ_செய்னின் கருத்து சரியானதே அவர் தெரிவித்துள்ளார். விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் …

  17. உணர்ச்சிபூர்வமான எமது பேச்சுக்களை வைத்து, எமக்குப் பயங்கரவாத பூச்சைப் பூசி வடக்கு மாகாண சபையை மத்திய அரசாங்கம் கலைக்கவும் தயங்காது என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா பாடசாலையில் கே.ஜி.கண்ணபிரான் நினைவு நிகழ்வில் உரையாற்றினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது- 1987ம் ஆண்டின் இலங்கை - இந்திய உடன்படிக்கையில் பாரதம் கையெழுத்திட்டது. 13வது திருத்தச் சட்டம் என்பது இந்தியாவால் தமிழர் சார்பில் எடுத்துரைத்த விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் கையளித்த ஒரு முழுமையற்ற தீர்வாவணம். உடன்படிக்கையை எக்காரணம் கொண்டும் விரைவில் முடி…

  18. தூர கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, சார்க் மற்றும் கல்ஃப் பிராந்திய நாடுகளுக்கும், பிரதான உள்ளக நகரங்களுக்கிடையிலான இணைப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய விமான சேவை அமைந்துள்ளது. இந்தியாவின் முன்னணி சர்வதேச விமான சேவை வழங்குநரான ஜெட் எயார்வேய்ஸ், கொழும்பு - மும்பை இடையிலான இரண்டாவது விமான சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதிகளவான கோரிக்கையை தொடர்ந்து, இம் மாதம் 5ஆம் திகதியிலிருந்து இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மும்பை நகருக்கும் தூர கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் கல்ஃவ் நாடுகளுக்கு இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போயிங் 737 விமானத்தின் மூலம், ஜெட் எயார்வேய்ஸ் வாடிக்கையாளர்கள் தற்போது, ஒரே நாளில் கொழும்பு - மும்பை நகருக்கிடையில் தமது பயணத்த…

  19. ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மணவாளன்பட்டமுறிப்பு, கரிப்பட்டமுறிப்பு ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் காணிகளை வனலாகா திணைக்கள அதிகாரிகள் கையகப்படுத்தும் நோக்கில் எல்லையிட்ட வேளை அந்த முயற்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த காணிகளுக்கு சொந்தக்காரர்கள், தமது காணிகளை வனலாகா திணைக்களத்தினர் கையகப்படுத்திவருகின்றனர் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற அவர், வனலாகா அதிகாரிகளுடக் கலந்துரையாடி, தமிழ் மக்களது பூர்வீக காணிகள் என்பதை எடுத்து விளக்கினார். இதனை அறிந்துகொண்ட வன லாகா அதிகாரிகள் பொது மக்களது காணிகளை விடுத்து அதற்கு மேலதிகமாகவுள்ள…

  20. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வட மாகாணத்தின் வாக்குகளை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும் என தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணியுடன் கைகோர்த்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது. கூட்டமைப்பின் ஆதரவு அரசாங்கத்திற்கு தேவையென அரசாங்கம் தெரிவித்திருக்கின்ற நிலையில் வடக்கின் வாக்குகளை வென்றெடுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டம் என்னவென வினவிய போதே அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பௌத்த சிங்கள வாக்குகளை எதிர்பார்த்து தேர்தலில் குதிப்பது முட்டாள் …

  21. மரண தண்டனை பெற்ற இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு? இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்க இலங்கை அரசு இணங்கியுள்ளதாக பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதியும் பேசிக்கொண்டதற்கிணங்க இவர்களை இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீனவர் விவகாரம் குறித்து இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் என்றும் சுவாமி தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கை நீதிமன்றில் மரண தண்டனை பெற்றுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும் இ…

  22. வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் அடிப்படையற்றவை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்களில் உண்மை இல்லை என்பதால் அவற்றை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என சுட்டிக்காட்டினார். வடக்கில் இராணுவத்தினர் குற்றம் இழைப்பதாக கூறுவதில் உண்மையில்லை எனவும் சில குற்றச்சாட்டுக்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இவ்வாறு முன்வைக்கப்படுகின்றன. இதனால் வடக்கு முதலமைச்சரின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=714783626411358898

  23. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு ஆதரவு வழங்குவதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் தனது நேர்மையை வெளிக்காட்டுவதற்காக கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக் ஷ தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை எந்த வழியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு எந்தவொரு உதவியையும் செய்யவில்லை. அரசியல் ரீதியாகவோ இராஜதந்திர ரீதியாகவோ கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு இதுவரை உதவியதில்லை. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தே…

  24. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு, நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு முன்னெடுத்து வரும் போராட்டத்துக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆதரவு தெரிவித்துள்ளார். நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு இன்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்புக்கு, முன்னாள் ஜனாதிபதி அனுப்பியிருந்த விசேட செய்தியிலேயே இதனைக் கூறியுள்ளார். நிறைவேற்று அதிகார முறை என்பது அந்த அதிகாரங்களை கையாளும் நபருக்கு அமைய நன்மையானதாக அல்லது தீமையானதாக மாறக் கூடும் எனவும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார். அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரை தெரிவு செய்யும் அதேவேளை அந்த தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்த எதிர்க்கட்சிகள் போராட வேண்டும் எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.