ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
டயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம் திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014 19:41 -தியாகு டயகம மேற்கு இரண்டாம் பிரிவிலுள்ள லயன் குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த அனர்த்தம் இன்று திங்கட்கிழமை(10) மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர். பொதுமக்களும் இலங்கை மின்சார சபையின் ஊழியர்களும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் இந்த விபத்தில் இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/13273…
-
- 0 replies
- 473 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில், ஆதரவாகவும், எதிராகவும் 38 எழுத்துமூல விளக்கங்கள் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுள்ளன. இந்த விடயம் தொடர்பில், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் கே ஸ்ரீபவன், சந்ரா ஏக்கநாயக்க, பிரியநாத் டெப், ஈவா வனசுந்தர, ரோஹினி மாறசிங்க, புவனேக அலவிஹார, சரத் டி அப்றூ, சிசிர டி அப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஆராயப்பட்டு வருகின்றது. தற்போது நீதியரசர்கள் குழாம் இந்த விடயம் தொடர்பில் இறுதிக்கட்டமாக அவர்களின் தீர்மானம்…
-
- 0 replies
- 385 views
-
-
இலங்கை வடக்கு மாகாண முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வடக்கு மாகாணத்தில் மத்திய அரசும், மாநில அரசும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக ஒதுக்கப்படும் நிதி எங்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. முதலமைச்சர் நிதி மற்ற மாகாணங்களுக்கு வழங்கப்படுகிறது. வடக்கு மாகாணத்திற்கு வழங்கப்படவில்லை. நாங்கள் வளர்ச்சி அடைந்துவிடக் கூடாது என்பதையே தற்போதைய இலங்கை அரசு விரும்புகிறது. வடக்கு மாகாண முதலமைச்சரின் ஒப்புதலுடன் தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால் நடைமுறையில் அவ்வாறு நியமிக்கப்படவில்லை. போருக்குப் பிறகு தமிழகர்களுக்கு நிறைய பிரத்யேக தேவைகள் உள்ளன. அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத…
-
- 0 replies
- 451 views
-
-
மன்னார் மாவட்டத்தில் சிங்கி இறால் உற்பத்தி செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மன்னார் மாவட்ட நீர் வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரி பா.நிருபராஜ் திங்கட்கிழமை (10) தெரிவித்தார். அழிந்து செல்கின்ற மீன் இனங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு, அவற்றை செயற்கையாக இனவிருத்தி செய்வது தொடர்பாகவே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த உற்;பத்திகள் சட்டரீதியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் கடலட்டை, நண்டு போன்ற மீன் இனங்களின் இனவிருத்தி தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/132676-2014-11-10-08-57-21.html
-
- 1 reply
- 512 views
-
-
18ஆம் திருத்தத்தை ஆதரித்தது தவறென, ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்னதேரர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டமை நல்ல முன்மாதிரி என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், இன்று(10) தெரிவித்தார். பிட்டகோட்டை சொலிஸ் ஹோட்டலில் நடைபெற்ற பொது எதிரணி ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நான் ஒரு தமிழ் கட்சியின் பிரதிநிதியாக கலந்துகொள்வதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஒரு தமிழ் கட்சி என்பதைவிட, தமிழர்களையும் உள்ளடக்கிய இலங்கை மக்களின் பிரதிநிதியாகவே நான் இங்கே கலந்து கொள்கின்றேன் என்று நினைக்கின்றேன். ஒரே குடும்பத்தின் அங்கத்தவர்களாக நாம் வாழவேண்டிய காலம் வந்துவிட்டது. சோபித தேரரின் …
-
- 0 replies
- 447 views
-
-
-எஸ்.கார்த்திகேசு திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், டெங்கு நுளம்பு குடம்பிகள் பெருகுவதை தடுக்கும் நோக்குடன் தம்பிலுவில் கனகநகர் கிராமத்திலுள்ள கிணறுகளில் இன்று(10) மீன் குஞ்சுகள் இடப்பட்டன. இந்நிகழ்வு திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.உதயசூரியா தலைமையில், தம்பிலுவில் தாய், சேய் சுகாதார நிலையத்தில் இடம்பெற்றது. இதன்போது திருக்கோவில் பிரதேசத்தில் இருக்கும் சுமார் எட்டாயிரம் தொடக்கம் ஒன்பதாயிரம் வரையான கிணறுகளுக்கு மேற்படி நுளம்பு குடம்பிகளை உண்ணும் மீன் குஞ்சுகளை விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இன்று அதன் ஆரம்பநிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் வி.புவி…
-
- 0 replies
- 488 views
-
-
வடமாகாண இனப்பரம்பலையே மாற்றியமைத்துப் பெரும்பான்மையினரை உள்நுழைத்து, கிழக்கு மாகாணம்போல பெரும்பான்மையினரை வடக்கிலும் பெருவாரியாகக் குடியிருத்த இராணுவம் மூலமாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசாங்கம் மனமுவந்து எமக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா பாடசாலையில் கே.ஜி.கண்ணபிரான் நினைவு நிகழ்வில் உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது இலங்கையில் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் சார்பாக 1987 ஆம் ஆ…
-
- 0 replies
- 353 views
-
-
கடந்த 10 வருடங்களில் மஹிந்த அரசு எங்கோ இருந்த இலங்கையை எங்கோ கொண்டு சென்றுவிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட இணைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் யாழ் மாவட்ட ஒன்றுகூடல் நேற்று காலை 10 மணியளவில் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் கருத்து தெரிவித்த அவர், சாதாரண மக்களையும் அபிவிருத்தி சென்றடைந்துள்ளது. எங்களுடைய பிரதேச மக்கள் ஜனாதிபதி செய்த அபிவிருத்திகளை சாதாரணமாக விடக்கூடாது. வடமாகாண மக்கள் வாக்களிக்காவிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெல்வார். அவருக்கு தென்பகுதி மக்களின் வாக்குகளே போதும்.…
-
- 0 replies
- 384 views
-
-
மாவீரர் நாள் எதிர்வரும் 27ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு பகல் என்றில்லாது முக்கிய வீதிகள், கோயில்கள், பல்கலைக்கழகம், பாடசாலைகள் போன்ற இடங்களில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிலைகொண்டுள்ளனர். இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகளால் அச்சத்துடன் நடமாடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் யாழ்.பல்கலைக்கழக வாளாக சூழலில் நவம்பர் முதாலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே இராணுவத்தின் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிலைகொண்டும் உள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்திற்கு சென்று வரும் மாணவர்கள் மத்தியில் அச்ச நிலையினை உருவாக்கியுள்ளது. அத்துடன் யபழ்.பல்கலையில் கல்வி கற்று வெளியேறிய …
-
- 0 replies
- 346 views
-
-
உலகின் சுபீட்சமான நாடுகளின் வரிசையில் இலங்கை பின்னடைந்துள்ளது. உலகின் சுபீட்சமான நாடுகளின் வரிசையில் இலங்கை 62ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மக்களின் நலன்புரி மற்றும் சொத்துக்கள் அடிப்படையில் இந்த சுபீட்சம் தொடர்பான சுட்டி அளவீடு செய்யப்படுகின்றது. இந்த மதிப்பீட்டில் 142 நாடுகள் பங்கேற்றுள்ளன. உலகின் சுபீட்சமான நாடாக நோர்வே, சுவிட்சர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இத்தை வகிக்கின்றன. 2013ம் ஆண்டில் சுபீட்சமான நாடுகளில் வரிசையில் இலங்கை 60ம் இத்தை வகித்த போதிலும் தற்போது 62ம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, உலகில் அதிகளவு திருமணம் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகிப்பதா…
-
- 0 replies
- 343 views
-
-
கண்டி போகம்பரை சிறைச்சாலையில் இருந்த தூக்குமேடையில் இருந்த பெறுமதியான மரங்கள் மாயமாகியுள்ளதாக சிறைச்சாலைகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதப்படுத்தப்பட்ட தேக்கு மரங்கள் மற்றும் கட்டடங்களின் கூரையிலிருந்த மரங்கள், யன்னல்கள் மற்றும் கதவுகள் உள்ளிட்ட கோடிக்கணக்கு பெறுமதியான தளபாடங்களே மாயமாகிவிட்டதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. போம்பரை சிறைச்சாலையிலிருந்த 1800 கைதிகள், பல்லேகலை தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் சிறைச்சாலையிருந்த இடத்தை அபிவிருத்தி செய்வதற்காக அவ்விடம் கடந்த ஜூன் 20ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/132644-2014-11-10-06-01-23.html
-
- 0 replies
- 409 views
-
-
ஒருவர் இரண்டு தடவை மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்;கலாம் என்று கூறும் அரசியலமைப்பின் கீழ் இரண்டுதடவை ஜனாதிபதி பதவிக்கு வந்த ஜனாதிபதி, பின்னர் கொண்டுவரப்பட்ட 18ஆவது திருத்தத்தின் கீழ் மூன்றாம் தடவையும் ஜனாதிபதியாகலாமா என்ற சர்ச்சைக்கு ஒரு எளிய விளக்கம். ஒரு வாடிக்கையாளர், இரண்டு வருட உத்தரவாதத்துடன் கார் மின்கலமொன்றின் (பற்றரி) வாங்குகிறார். இந்த இரண்டு வருடம் முடியும் முன்னரே விற்பனையாளர், இதேவகை மின்கலத்துக்கு மூன்று வருட உத்தரவாதத்தை அறிவித்து விற்கிறார். பொருளை வாங்கியபோது இரண்டு வருட உத்தரவாதத்துடனான வியாபார நிபந்தனைகளை ஏற்று கையொப்பமிட்ட வாடிக்கையாளர் தான் ஒப்பமிடாத புதிய மூன்று வருட உத்தரவாதத்தை கேட்பது எவ்வளவு தூரம் நியாமானது? இனி, வாடிக்கையாளருக்கு பதிலாக ஜனாதிப…
-
- 0 replies
- 406 views
-
-
இலங்கை வடக்கு மாகாண முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வடக்கு மாகாணத்தில் மத்திய அரசும், மாநில அரசும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக ஒதுக்கப்படும் நிதி எங்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. முதலமைச்சர் நிதி மற்ற மாகாணங்களுக்கு வழங்கப்படுகிறது. வடக்கு மாகாணத்திற்கு வழங்கப்படவில்லை. நாங்கள் வளர்ச்சி அடைந்துவிடக் கூடாது என்பதையே தற்போதைய இலங்கை அரசு விரும்புகிறது. வடக்கு மாகாண முதலமைச்சரின் ஒப்புதலுடன் தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால் நடைமுறையில் அவ்வாறு நியமிக்கப்படவில்லை. போருக்குப் பிறகு தமிழகர்களுக்கு நிறைய பிரத்யேக தேவைகள் உள்ளன. அரசு பல்வேறு திட்ட…
-
- 0 replies
- 285 views
-
-
(உலகளாவிய உழைக்கும் மக்களில் மிகவும் மோசமான முறையில் சுரண்டப்படும் மக்கள் இலங்கைத் தோட்டங்களில் பல நூற்றாண்டுகளாக மாடாய் உழைத்து ஓடாய்ப் போன மலையகத் தமிழ் மக்களே. சொந்த நிலம், வீடு, தரமான பள்ளிக் கூடங்கள், சிறப்பான மருத்துவமனைகள், குடிதண்ணீர் எதுவுமின்றி இந்த மக்கள் முன்னர் அந்நிய வெள்ளைக்கார முதலாளிகளாலும் பின்னர் இன்றைய அரசாலும் சுரண்டப்படுகிறார்கள். மலையக மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் மலையக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இவர்களது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கத் தவறிவிட்டன. அறுபதுகளில் தமிழரசுக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் கழகம் என்ற பெயரில் ஒரு தொழிற் சங்கத்தைத் தொடக்கி மலையகத்தில் இயக்கிக் கொண்டிருந்தது. கொழும்பில் பணியில் இருந்த நான் வார இறுதியில் அட்டன…
-
- 5 replies
- 1.9k views
-
-
தம்புள்ள - குருநாகல் வீதியில் பொலிஸ் அதிகாரி போல் நடித்த பிக்கு ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி சம்பவத்தில் கைதானவரது கைப்பையில் அவரது காவியுடைகய் காணப்பட்டதுடன் அவர் காற்சட்டை,சேர்ட் அணிந்த நிலையில் வாகன சாரதிகள் சிலருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தான் பானந்துறை குற்றப் புலனாய்வுப் பொலிஸ் பொறுப்பதிகாரி என்றும் தெரிவித்துள்ளார். மேற்படி சந்தேக நபரின் நடமாட்டம் தொடர்பாக கலேவல பொலிசாருக்குக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் கைதாகி உள்ளார். இவர் பானந்துறைப் பிரதேசத்திலுள்ள பௌத்த மத குரு என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. http://www.virakesari.lk/articles/2014/11/09/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E…
-
- 2 replies
- 343 views
-
-
யாழ்.குடாநாட்டில் படை முகாம்களை அமைப்பதற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களது காணிகளை சுவீகரிப்பதற்கேதுவாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அளவீட்டுப்பணிகள் மீண்டும் எதிர்வரும் 11ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கென காவல்துறையின் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவும் நில அளவை திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது. இது வரை குடாநாட்டின் பல பகுதிகளிலும் முப்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்க ஏதுவாக நில அளவை பணிகள் மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெற்றிருந்தது. எனினும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளது கடுமையான எதிர்ப்புக்களையடுத்து பல தடவைகள் இம்முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இது வரைகாலமும் யாழ…
-
- 0 replies
- 396 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் இளமைக்காலப் படங்களை நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது புதல்வர்களான நாமலையும் யோஷிதவையும் தூக்கி வைத்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் சிராந்தி ராஜபக்சவுடன் சிறுவனான நாமல் ராஜபக்ச இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=120349&category=TamilNews&language=tamil
-
- 8 replies
- 3k views
-
-
காரைநகரில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈபிடிபி ஆதரவாளர்கள் சிலர் ஈடுபட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது. எனினும் சந்தேக நபரை கைது செய்ய இலங்கை காவல்துறை பின்னடிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. காரைநகரில் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்ற மாணவி ஒருவரை சிறுவன் ஒருவன் தன்னுடைய கைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் மாணவியின் தந்தை அந்த சிறுவனைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். சிறுவனைப் காவல்துறையினர் விசாரணை செய்த போது அவர் கஞ்சா பாவிப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த சிறுவனை விசாரணை செய்ததில் அவனுக்கு சிற்றுந்து சாரதி ஒருவர் பணத்துக்காக கஞ்சா விற்பனை செய்கின்றமை தெரிய வந்தது. ஆனால் அந்த சிந்துந்து சாரதியோ அப்பகுதியில் உள்ள ஈ…
-
- 19 replies
- 1.6k views
-
-
குளோபல்தமிழ்;செய்தியாளர்:- தமிழீழ விடுதலைப் புலிகளினால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக வன்முறைகளிலும் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக தமிழக அரசாங்கமும் இந்திய மத்திய அரசாங்கமும் நீதிமன்றில் அறிவித்துள்ளன. இந்த நடவடிக்கைகளானது இந்தியாவின் பௌதீக ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி புதுடெல்லி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பிலான விசாரணைகளின் போது இவ்வாறு அரசாங்கம் தமது பக்க நியாயத்தை அறிவித்துள்ளது. 1992ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளை இ…
-
- 5 replies
- 971 views
-
-
ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார் – வடக்கின் முதலமைச்சராகவும் கடமையாற்றியிருப்பார் - ஆனந்தசங்கரி:- 09 நவம்பர் 2014 ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு ஊடகங்கள் தமது செய்தியை கொண்டு சேர்க்க தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக பாரியளவில் உயிர்ச் சேதங்கள் எற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் தமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்திருந்தால் பிரபாகரன் சில வேளைகளில் வடக்…
-
- 0 replies
- 700 views
-
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பெண் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. http://tamil.dailymirror.lk/--main/132486-2014-11-08-12-59-01.html
-
- 1 reply
- 426 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்குமிடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்றாம் திகதி இரவு மொரட்டுவை பகுதியில் வைத்து இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகவும் அந்த சந்திப்பின்போது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் தற்போதுள்ள அமைச்சுக்களில் சிலவற்றை மாற்றியமைத்தல் மற்றும் மங்களவின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து பேசப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. அத்தகவல்கள் மூலம் மேலும் தெரிய வருவதாவது, ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்து…
-
- 0 replies
- 263 views
-
-
மாவீரர் நாள் எதிர்வரும் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ்.குடாநாட்டில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு பகல் என்றில்லாது முக்கிய வீதிகள், கோயில்கள், பல்கலைக்கழகம், பாடசாலைகள் போன்ற இடங்களில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிலை கொண்டும் உள்ளனர். இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகளால் அச்சத்துடன் நடமாடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் யாழ்.பல்கலைக்கழக வாளாக சூழலில் நவம்பர் முதாலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே இராணுவத்தின் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிலைகொண்டும் உள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்திற்கு சென்று வரும் மாணவர்கள் மத்தியில் அச்ச நிலையினை உருவாக்கியுள்ளது. அத்துடன் யபழ்.பல்கலையில் கல்வி கற்ற…
-
- 0 replies
- 267 views
-
-
இந்தக்குற்றச்சாட்டு தொடர்பில் எந்தவொரு விசாரணைக்கும் தாம் தயார். எனினும் ஏன் இந்தப்பிரச்சினை தற்போது எழுந்துள்ளது என்று ஹரிஹரன் கேள்வி எழுப்பியுள்ளார். கருணா அம்மான் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு தளபதியாக இருந்தபோதே 300 முல்லிம்கள் காத்தான்குடியிலும், ஏறாவூரிலும் கொல்லப்பட்டனர். 600 பொதுமக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்டமைக்கும் கருணாவே தலைமை தாங்கினார். எனவே அது தொடர்பான விசாரணைகளுக்கு கருணா ஒத்துழைப்பு வழங்குவார் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாக ஹரிஹரன் குறிப்பிட்டுள்ளார். கருணா தற்போது கூறியுள்ள இந்தக்குற்றச்சாட்டு பெரும்பாலும் அரசியலுடன் தொடர்புடையது என்றே தாம் கருதுவதாக ஹரிஹரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கருண…
-
- 2 replies
- 546 views
-
-
சிறீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் குரல் கொடுத்து வந்த இன்னர் சிட்டி பிரஸ் ஊடகத்தை தடை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கியநாடுகளின் தணிக்கைப் பிரிவின் தலைவர் ஜியம்போலா பியோலி இதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கியம்போலா பியோலிக்கும், சிறிலங்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதி பாலித்த கோஹன்னவுக்கும் இடையில் நிதி சார்ந்த உறவுகள் இருப்பதாக முன்பிருந்தே தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறிலங்காவின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்திருந்த காணொளியை ஐக்கிய நாடுகள் சபையின் ஊடக மையத்தில் காட்சிபடுத்து, பியோலி அனுமதி வழங்க மறுத்திருந்தார். எனினும…
-
- 0 replies
- 260 views
-