ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் சென்று, குத்திக் குதறப்பட்ட இந்தியத் தமிழர்களின் துயரக் கதை. இந்தியர்கள், இலங்கையர்கள் இரு தரப்பினராலும் பேச மறுக்கப்படும் கதை. தமிழக வரலாற்றில் கொடூரமான காலகட்டம் 1835-40. நிலப்பிரபுத்துவ முறை, சாதிக் கொடுமைகள், கோரப் பஞ்சம், துரத்தும் வறுமை... பல்லாயிரக் கணக்கானோர் பசியால் செத்த காலகட்டம். ஆங்கிலேயர்கள் சூழலைத் தனதாக்கிக்கொண்டார்கள். இந்தியாவையும் இலங்கையையும் ஆண்ட அவர்கள், இலங்கையில் தங்களுடைய ஆட்கள் நடத்திய காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்களுக்கு ஏழைத் தமிழர்களைக் குறிவைத்தனர். கங்காணிகள் மூலம் நடத்தப…
-
- 1 reply
- 558 views
-
-
இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்களான சனத் ஜெயசூரியா ,சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ,உபுல் சந்தன ஆகியோர் அடங்கிய அணியினர் இன்று யாழ்.வருகை தந்து யாழ்ப்பாணத்தில் அமையப்பெற்ற முதல் புற்தரை மைதானத்தை ஆரம்பித்து வைத்தனர். இந்த நிகழ்வு இன்று காலை 10மணியளவில் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் அதிபர் ஜெறோ செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை வருகை தந்து யாழில் அமையப்பெற்ற முதல் புற்தரை மைதானத்தை ஆரம்பித்து வைத்தார். மேலும் வடக்கு கிழக்கு இணைந்த 23வயதுப்பிரிவு அணிக்கும்,தேசிய அணியின் முன்னாள் வீரர்களுக்கும் இடையில் நட்பு ரீதியிலான 12 ஓவர்கள் கொண்ட ஆட்டம் இடம்பெற்றது. இதில் நாணயச்சுழற்சி…
-
- 31 replies
- 2.6k views
-
-
திருக்கேதீஸ்வரத்திற்கான பரீட்சார்த்த ரயில் சேவை இன்று ஆரம்பமாகியுள்ளது. மடு ரயில் நிலையத்திலிருந்து மன்னார், திருக்கேதீஸ்வரம் ரயில் நிலையம் வரையிலான பரீட்சார்த்த ரயில் சேவை இன்று காலை 10 மணியளவில் மடு ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பித்து 10.30 மணிக்கு திருக்கேதீஸ்வரம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. மடுவில் இருந்து தலைமன்னார் ரயில் நிலையம் வரை 63 கிலோ மீற்றர் தூரம் கொண்டது. எனினும் தற்போது திருக்கேதீஸ்வரம் வரைக்குமான 26 கிலோ மீற்றர் தூரத்துக்கான சேவையே இன்று இடம்பெற்றுள்ளது. ஆரம்ப நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், புகையிரத திணைக்கள அதிகாரிகள், மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிக…
-
- 1 reply
- 429 views
-
-
பதுளைமாவட்டம் , பண்டாரவளை, கொஸ்லாந்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களை வழங்குமுகமாக,நிவாரணப்பொருட்களைக்கையளிக்குமாறு வடமாகாணசபை கோரியிருந்தது. இதனையடுத்து வடமாகாண சபை உறுப்பினரும், வடமாகாண முதலமைச்சருக்கு சுற்றுலா தொடர்பான இணைப்பாளருமான பா.கஜதீபனின் ஏற்பாட்டில், வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட உலருணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் என்பன சேகரிக்கும் நடவடிக்கை இன்று 31.10.2014 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிமுதல் யாழ்.மாவட்டத்திலுள்ள சுற்றுலா விடுதிகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் இடம்பெற்றது. இச்செயற்பாட்டை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தொடக்கி வைத்தார். பி.ப 5.30 மணியளவில் முடிவடைந்த இச்செ…
-
- 0 replies
- 285 views
-
-
பதுளை மாவட்டம், கொஸ்லந்த, மீரியபெத்த பிரதேசத்தில் நடந்த இயற்கை அனர்த்தங்களால் இடர்பட்டு, இழப்புகளை சந்தித்த மலையக மக்களின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் என ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெவித்துள்ளார். இது குறித்து உடனடி மீட்பு பணிகளில் ஈடுபடுமாறும், தேவையான நிவாரணங்களை வழங்குமாறும் உத்தரவிட்டிருப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்றும் பார்வையிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, ஜனாதிபதியின் பணிப்புரைகளில் எந்தவித காலதாமதத்துக்கும் இடம்கொடுக்காமல் அதிகாரிகள் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். உறவுகளை இழந்து தவிக்கும…
-
- 0 replies
- 316 views
-
-
பாரிய கல்... வெள்ளிக்கிழமை, 31 ஒக்டோபர் 2014 18:07 0 COMMENTS -ரஞ்சித் ராஜபக்ஷ பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கியூ தோட்டப்பகுதியில் 55இற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 300 பேர் தோட்ட ஆலயத்தில் தற்காலிகமாக தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவித்தார். இத்தோட்டத்தில் பாரிய கல்லொன்று கீழே விழும் அபாயத்தில் இருப்பதனால் இதனை அறிந்த தோட்ட தொழிலாளிகள் இது தொடர்பில் தோட்ட நிர்வாகததுக்கு தெரிவித்ததன் பின் தோட்ட நிர்வாகத்தின் ஆலோசனைக்கு அமைய இவர்கள்; தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மக்களுக்கு அத்தியவசிய பொருட்களையும் உணவு வகைகளையும் நிவாரண உதவிகளையும்…
-
- 0 replies
- 395 views
-
-
அந்த முகாமிலிருந்து வரும் சத்தங்கள் காதையடைக்கின்றன, ஆனாலும் அந்த சத்தத்தின் மத்தியிலும் பரமேஸ்வரி அதிர்ச்சியால் உறைந்து போய் அமர்ந்திருக்கின்றார்- இலங்கையின் மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாக பதியப்பட்டுவிட்ட அந்த மண்சரிவில் ஒரு நொடிக்குள் தனது குடும்பத்தில் நால்வரை இழந்;தவர் பரமேஸ்வரி.... ஆனால் அந்த அனர்த்தம் எவ்வாறு நடைபெற்றது என்பதை என்பதை விவரிக்க தொடங்க அவரது மௌனம் கலைகிறது, செவ்வாய்கிழமை காலை எப்படி மலைகளின் மேலிருந்த மரங்கள் அசுரத்தனமாக ஆடத்தொடங்கின என்பதை அவர் தெரிவித்தார்-, ''நான் எனது குடும்பத்தினரை பார்த்து கத்தினேன், வெளியே ஓடும்படி கதறினேன்,உள்ளே ஓடி எனது பேரக்குழந்தையை கையிலெடுத்தேன், நாங்கள் வெளியே வந்த அந்த தருணத்தில் மரங்களும், பாறைகளும், எங்கள…
-
- 0 replies
- 396 views
-
-
போருக்குப் பின்னர் இலங்கை பல விடயங்களில் முன்னேற்றம் காணவில்லை! – ஐ.நா மனித உரிமைகள் குழு அறிக்கை. [Friday 2014-10-31 07:00] இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் பல முன்னேற்றங்க்ள ஏற்பட்டுள்ள போதிலும், பல விடயங்களில் முன்னேற்றம் காணப்படவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான ஐந்தாவது மீளாய்வு அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் 18வது அரசியலமைப்பு சரத்தின் மூலம் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்பட்டு நீதித்துறையின் நியமனங்கள் யாவும் ஜனாதிபதியின் வசம் சென்றுள்ளன. 2013 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதம நீதியரசர் மீது கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணையை நோக்கும் போது இலங்கையின் நீதித்த…
-
- 1 reply
- 592 views
-
-
போதைப் பொருள் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கை உயர் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இந்தியாவின் திஹார் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக பாரதீய ஜனா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சாமி தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் மீதான மரண தண்டனை குறித்து தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்திர் கருத்து தெரிவித்துள்ள சாமி, '2010ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இரு தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழர்களை திஹார் சிறைக்கு மாற்றி, அங்கு கொண்டு சென்ற பின்னர் இந்திய உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இதுதொ…
-
- 1 reply
- 343 views
-
-
வடபகுதி மக்களின் தேவைகள் தொடர்பான கருத்துக் கணிப்பு ஒன்று தற்போது தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த கணிப்பின் மூலம் பெறப்படும் அறிக்கை மக்களுக்குப் பயனளிக்கும் என்றும் இலங்கைக்கான யப்பான் தூதுவர் நொபுகிடோ கோபு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட அவர், நேற்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அந்தச் சந்திப்பின் போது, ஜப்பானியத் தூதுவர், அரசாங்கம் கூறுவது போல, இராணுவம் குறைக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு வடமாகாண முதலமைச்சர், அவ்வாறு பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. அவ்வாறு இராணுவத்தினை குறைப்பது உண்மையாக இருந்தால், எதற்காக மேலும் மேலும் காணிகளை இராணுவ முகாம்களை அ…
-
- 0 replies
- 260 views
-
-
ஐரோப்பிய யூனியன் எத்தகைய தீர்மானங்களை எடுத்தாலும் புலிகள் மீண்டும் தலைதூக்க அரசாங்கமும் படையினரும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோமரங்கடவெல பிரதேச சபைக் கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நான்கு வருட ங்களுக்கு முன்பு இப்பிரதேசத்தின் நிலைமையை நான் புதிதாகக் கூறத் தேவையில்லை. 2009 ற்கு முன் இருளடைந்த யுகமொன்றே நாட்டில் இருந்தது. .தற்போது நிலைமை முழுமையாக மாறியுள்ளது. எங்கும் எவரும் பயம் சந்தேகமின்றி பயணிக்கக்கூடிய வாழக்கூடிய சூழல் நாட்டில் தற்போது உருவாக்கப் பட்டுள்ளது. நாட்டின் ஜனாதிபதி இப்பிரதேசத்திற்கு இது போன்ற இரவு வேளையிலும் வந்துபோக முடிகின்றது. இந்த நிலைமையை உணர்ந்தோ அல்லது உணராதோ …
-
- 0 replies
- 305 views
-
-
150 மில்லியன் ரூபா வரை வாராந்தம் பணப்பரிசுகளை வழங்கும் புதிய லொத்தர் சீட்டான, மஹாபொல லொட்டோ, நாடு முழுவதும் முன்னெடுக்கும் லொட்டோ விழிப்புணர்வு செயற்திட்டத்தின் மற்றுமொரு அங்கத்தை இலங்கையின் வடக்கு கிழக்கு நகரங்களில் முன்னெடுத்திருந்தது. 'உங்கள் அதிர்ஷ்ட இலக்கங்களை தெரிவு செய்யுங்கள்" எனும் வகையில் லொட்டோ கொள்கை மற்றும் தொழில்நுட்பம் என்பன யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மஹாபொல லொட்டோவைச் சேர்ந்த பிரதிநிதிகள் வெற்றிகரமாக சகல பார்வையாளர்களுடனும் தொடர்பாடல்களை பேணியிருந்தனர். இதில் குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள், வாகனங்களில் பயணிப்பவர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி…
-
- 0 replies
- 440 views
-
-
-எஸ்.கார்த்திகேசு 'இன்று ஒவ்வொறு வீடுகளிலும் பெற்றோர்கள் தமது பொழுது போக்காக தொலைக்காட்சி சீரியல் மோகத்தில் ஈடுபடுவதால் குழந்தைகளின் கல்வி, ஒழுக்கம் என்பன மழுங்கடிக்கப்பட்டு வருவதாக தமிழத் தேசிய கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேச தவிசாளர் வி.புவிதராஜன் தெரிவிக்கின்றார். தேசிய வாசிப்பு வாரத்தினையொட்டி 30ஆம் திகதி தம்பிலுவில் புதிய பிரதேச சபை கட்டத்தில் இடம்பெற்ற வாசிப்பு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தனது கருத்தை தெரிவித்திருந்தார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், 'இன்று தேடலுடன் கூடிய போட்டிகள் நிறைந்த வாழ்கை முறைகள் உலகில் காணப்படுகின்றன. நாம் இழந்தவற்றை கல…
-
- 0 replies
- 359 views
-
-
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கனடா ஆதரவளித்து வருவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக கனேடிய உயர்ஸ்தானிகர் ஸெல்லி வைட்டிங் தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் தாயார் கனடா செல்ல எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக இலங்கை ஊடகங்களில் தகவல்வெளியிடப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை மீளவும் ஒருங்கிணைக்க முயற்சித்த கஜீபனின் தாயாரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் தடுத்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் உறவினர்களை இலங்கையிலிருந்து வெளியேற்று வேறும் நாடுகளில் தங்க வைக்க ராஜதந்திர ரீதியான நடவடி…
-
- 0 replies
- 388 views
-
-
-யோ.வித்தியா எமது நாட்டில் 30 வருட காலமாக மக்கள் நிம்மதியாக வாழவில்லை, இன்றும் அவர்கள் நிம்மதியாக இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வியாழக்கிழமை (30) தெரிவித்தார். உலக உளநல நாளையொட்டி வடக்கு மாகாண சுகாதார சுதேசிய வைத்தியத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் 'சித்தம் அழகியார்' என்னும் சிறப்பு நிகழ்வு யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைக்கைதிகள் சிறையில் பல வருடகாலம் இருக்கின்றதால் அவர்களது மனநிலை பாதிப்படைந்துள்ளது. யுத்தத்தின் போது ஏற்பட்ட இழப்புக்களை கண்டு அவர்கள் இன்றுவரை மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள். அவ…
-
- 0 replies
- 353 views
-
-
நிபந்தனை அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுத் திட்டம் காண்பது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் ஜனாதிபதி மூன்று தடவைகள் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் யுத்தத்தின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது ஜனாதிபி, 13ம் திருத்த்ச சட்டத்தை அமுல்படுத்துவதாகவும், விரிவான பேச்சுவார்த்…
-
- 0 replies
- 292 views
-
-
(அக்டோபர் 30உடன் யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்து 19வருடங்கள் ஆகின்றன. ஈழத் தமிழர்களின் வாழ்வில்மறக்க முடியாத அந்த இடப்பெயர்வு அவலத்தை பற்றியஇந்தப் பதிவை குளோபல் தமிழ் செய்திகள் மீள் பிரசுரம்செய்யப்படுகிறது) அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போதுசாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்துயாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலைநடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்தநடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைவெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும்செய்திகள். யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பதுபலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள்பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலை…
-
- 0 replies
- 553 views
-
-
வடக்கு மாகாணத்திற்கான பயணக் கட்டுப்பாடுகளை தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையாகவே நோக்க வேண்டுமென மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். வெளிநாட்டவர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வடக்கிற்கு பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள வரையறைகள் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பிட்ட ஒரு நபரின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டால் அந்த நபர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தை விடவும் அதிகளவான படையினர் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நடவடிக்கைகளினால் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலை மைய…
-
- 0 replies
- 349 views
-
-
ஐரோப்பாவில் தடைநீக்கப்பட்டாலும் புலிகளைத் தலையெடுக்க விடமாட்டோம்! – ஜனாதிபதி மஹிந்த சூளுரை. [Friday 2014-10-31 07:00] ஐரோப்பிய யூனியன் எத்தகைய தீர்மானங்களை எடுத்தாலும் புலிகள் மீண்டும் தலைதூக்க அரசாங்கமும் படையினரும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோமரங்கடவெல பிரதேச சபைக் கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நான்கு வருட ங்களுக்கு முன்பு இப்பிரதேசத்தின் நிலைமையை நான் புதிதாகக் கூறத் தேவையில்லை. 2009 ற்கு முன் இருளடைந்த யுகமொன்றே நாட்டில் இருந்தது. .தற்போது நிலைமை முழுமையாக மாறியுள்ளது. எங்கும் எவரும் பயம் சந்தேகமின்றி பயணிக்கக்கூடிய வாழக்கூடிய சூழல் நாட்டில் தற்போது உருவாக்கப் பட்டுள்ளது. நாட்டின் ஜனாதிப…
-
- 0 replies
- 244 views
-
-
-பொ.சோபிகா, எம்.றொசாந்த் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளைக்கு சொந்தமான காணியை, அதேயிடத்தைச் சேர்ந்த ஒருவர் உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'வல்வெட்டித்துறை நகரசபைக்கு பொது விளையாட்டு மைதானம் தேவையென்ற நோக்குடன் 2000ஆம் ஆண்டு திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 238 பரப்பளவு காணி மைதானத்திற்கு தேவையென்ற ரீதியில் திட்டம் வகுக்கப்பட்ட…
-
- 1 reply
- 636 views
-
-
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தான் மேற்கோள் ஒன்றை காட்டி உரையாற்றியதால் தன்னை பெண்ணியலாளர்கள் பின்னி எடுத்து விட்டார்கள் என்று முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இன்றைய தினம் மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற உளநல தினத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், ஆணுக்கும் பொருந்தும் ஒரு கருத்தை பெண்ணை முன்வைத்துப் பேசியது எவ்வளவு தூரம் தவறு என்று கூறி என்னை அவர்கள் வைத போதுதான் எனக்கு புரிந்தது. தான் வலியுறுத்த எடுத்த மேற்கோள் என்னை ஆபத்தில் மாட்டி விட்டது.மேற்கோள் மேற்கோளுடன் நிற்க வேண்டும். கூறிய கருத்தே முக்கியம்.மேற்கோளின் ஊடாக நான் கூறிய கருத்தை அடைந்து விட்டிர்களானால் கரடி துரத…
-
- 0 replies
- 478 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிய வழக்கில் சிறிலங்கா அரசாங்கத்தினால் எதுவும் செய்யமுடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இதனை இன்று நாடாளுமன்றத்தில் வைத்து கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் சிறிலங்கா அரசாங்கத்தினால் தலையீடு செய்ய முடியாது. http://www.pathivu.com/news/34983/57//d,article_full.aspx
-
- 0 replies
- 312 views
-
-
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டால் மாத்திரமே நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைய முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று இதனை நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்தார். இது தொடாபில் இன்று நாடாளுமன்றத்தில் விசேட தனிப்பிரேரணை ஒன்றை முன்வைத்தார். அரசாங்கத்துடன் நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கிறது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் அரசாங்கம் வெளியிட்ட மூன்று அறிக்கைகளின் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தைகள் அமையும். குறிப்பாக ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனும், சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்…
-
- 0 replies
- 563 views
-
-
வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் கடந்த சனிக்கிழமை உரையாற்றிய ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் கவிதை பாடினார். வரவு - செலவுத் திட்டத்தைப் பாராட்டி அவர் பாடிய கவிதை வருமாறு, ஆகித்தான் போயினர் அப்செட் பார்த்தேதான் எங்களது பட்ஜெட் ஆச்சரியம் பூச்சொரியும் பட்ஜெட் எங்கள் தாய்நாட்டை இமயத்தில் ஏற்றும் யார் தருவார் இதுபோல அள்ளி மக்கள் மகிழ்ந்திடுவர் பெருமைகளைச் செல்லி கருங்கல்லில் நீர் பொழிந்தெடுத்த எங்கள் ஜனாதிபதி கடுமையாய் அதற்கு உழைத்தார் பொதுமக்கள் நலனைத்தான் நினைத்தார் மக்கள் மனங்களிலே என்றும் நிலைத்தார் உழைக்கின்ற வர்க்கத்தை உயர்த்த எண்ணித்தான் கணக்குகள் வகுத்தார் இருபத்து ஐயாயிரம் ரூபா வழங்கி இதயங்கள் மகிழந்திடச்…
-
- 3 replies
- 752 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. வட மாகாணசபையைச் சேர்ந்த 28 உறுப்பினர்களும், கிழக்கு மாகாண சபையைச் சேர்ந்த 5 உறுப்பினர்களும் இவ்வாறு கடிதம் அனுப்பி வைத்திருந்தனர் என தெரிவித்து மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தேசமாமக தேசிய அமைப்பு என்ற அமைப்பினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இலங்கை அரசாங்கப் படையினரை குற்றம் சுமத்தி குறித்த மாகாணசபை உறுப்பினர்கள் நவனீதம்பிள்ளைக்கு கடிதமொன்றை அனுப்ப…
-
- 0 replies
- 218 views
-