ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143555 topics in this forum
-
பொது மக்களின் பொக்கிஷங்களை அரச தலைவர் சூறையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தங்கங்களை கொள்ளையடித்த, சொந்த நோக்கில் செலவு செய்த குற்றச் சாட்டினை ஜனாதிபதிக்கு முன் வைக்கின்றோம் என தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் அமைப்பில் தனக்கிருக்கும் அதிகாரத்தினை தவிர்த்து விட்டு இந்த குற்றச்சாட்டிற்கு ஜனாதிபதி முகம் கொடுக்க வேண்டும் எனவும் சவால் விடுத்துள்ளது. அதிகாரத்தினை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனே இக்குற்றச்சாட்டினை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும்…
-
- 0 replies
- 551 views
-
-
மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பறங்கியாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொண்டு உடனடியாக தனக்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார் என மாந்தை கிழக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தயனந்தன் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளிப்பதற்கு கடந்த திங்கட்கிழமை வடமாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினையும் தலைமை தாங்கி நடத்தினார். இதன்போது வடமாகாணத்தில் உள்ள யாழ்., கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களில் மு…
-
- 0 replies
- 314 views
-
-
மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட அல்-கொய்தாவின் சந்தேகநபரென கூறப்படும் இலங்கை பிரஜையான மொஹமட் உசையின் மொஹமட் சுலைமான், நேற்று புதன்கிழமை இரவு நாடு கடத்தப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே இவர் நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட குற்றஞ்சாட்டின் பேரிலேயே அவர், மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக அவர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். இந்தியாவில் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இலங்கையரான ஷாகீர் உசைன் வழங்கிய தகவ…
-
- 0 replies
- 350 views
-
-
மன்னார் மாவட்ட முசலி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் ஒழுங்கான வசிப்பிடம் இன்றி அங்குள்ள மரங்களின் கீழ் குடிசைகள் அமைத்து மழைகாலத்தில் மழைநீர் உட்செல்லும் அளவு பாதிக்கப்பட்டும் நிரந்தரமாக அங்கு வாழ்ந்து வருகின்ற மக்களின் அவல நிலையினை தனது களப்பயணம் மூலம் நேரில் கண்டறிந்தார் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன். தனது அமைச்சின் கீழ் வருகின்ற கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தினூடாக சுமார் 81 குடும்பங்களுக்கு தமது அத்தியாவசிய தேவைக்கான தற்க்காலிக வீடுகள் அமைப்பதற்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 50,000 வீதம் வழங்கும் திட்டத்தை எதிர்வரும் வாரம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க உள்ளதாகவும், அத்தோட…
-
- 0 replies
- 459 views
-
-
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன என ஜே.விபி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான மைத்திரிபால சிறிசேனா தேர்தலை தற்போதைக்கு நடத்த வேண்டாமென ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு வாக்குறுதியளித்தது போல அரசாங்கம் அரசமைப்பில் மாற்றங்களை மேற்கொண்ட பின்னரே தேர்தலை சந்திக்க வேண்டும் என சிறிசேனா கருதுகிறார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமயவும் அடுத்த வருடம் தேர்தலை நடத்துவது குறித்து அதிருப்தி கொண்டுள்ளது. அதன் நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படைய…
-
- 0 replies
- 468 views
-
-
களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதான மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தொடங்கொட பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர்கள் அதனை ஒளிப்பதிவு செய்து விற்பனை செய்துள்ளனர். மாணவி தனது காதலுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை காட்டி மாணவியை அச்சுறுத்தியுள்ள இளைஞர்கள் சிலர், அவரை தமது நண்பர்களுடன் இணைந்து விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று இந்த குற்றச் செயலை புரிந்துள்ளதுடன் அதனை ஒளிப்பதிவு செய்துள்ளனர். மாணவியின் தாய் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதுடன், தந்தை பாடசாலை வான் சாரதியாக பணியாற்றி வருகிறார். மாணவி, தனது பாட்டியுடன் வசித்த…
-
- 4 replies
- 456 views
-
-
வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் தொண்டைமானாறில் வடமாகாண நீரியல் ஆய்வுமையம் (NORTHERN PROVINCIAL HYDROLOGICAL RESEARCH CENTRE) திறந்து வைக்கப்பட்டுள்ளது. செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அருகாமையில் தொண்டைமானாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் அமைந்துள்ள இந்த நீரியல் ஆய்வுமையத்தை வடக்கின் முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை சம்பிரதாய பூர்வமாகத் திறந்துவைத்துள்ளார். வடக்கின் நீர்வள இருப்பின் மதிப்பீடு, நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், சிக்கன நீர்ப்பயன்பாடு, நீரின் தரம், கடல்நீரைக் குடிநீராக்கல், மாசகற்றல் போன்ற தண்ணீருடன் தொடர்பான பல்வேறு ஆய்வ…
-
- 0 replies
- 378 views
-
-
கடந்த வருடம் நடைபெற்ற க. பொ. த. (உயர்தரப்) பரீட்சையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களும் தோற்றி இருந்தனர். இவர்களில் 132 பேர் பல்கலைக்கழங்களுக்குத் தெரிவாகும் வாய்ப்புள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார். தற்போதைக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 12,081 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களில் 650 பேர் சிவில் பாதுகாப்புப் படையணியில் இணைந்து பணிபுரிவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் ஜகத் விஜேதிலக்க மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamil.srilankamirror.com/news/2644-132
-
- 11 replies
- 745 views
-
-
ஊடகஅறிக்கை போர் முடிவடைந்து சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ளது எனக் கூறிக்கொள்ளும் இலங்கை அரசாங்கம் சந்தேகத்தின், பேரில் கைது செய்யப்பட்டு வருடக்கணக்கினில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகள் ஏதுமின்றி விடுதலை செய்யவேண்டும் எனப்பல முறை வடமாகாணசபையில் பிரேரணை நிறைவேற்றியும் எந்தவொரு முன்னேற்றமும் காணப்பட்டிருக்கவில்லை. 1983ல் இருந்து இன்றுவரை சிறையில் தமிழ் இளைஞர்கள் மட்டும் படுகொலை செய்யபட்டும், துன்புறுத்தப்பட்டும் வருவது அனைவரும் அறிந்ததொன்றே. சிறையில் திடீர் திடீரென தமிழ் அரசியல் கைதிகள் மரணமடைவதும் அதற்காக அரச தரப்பினில் நியாயங்கள் கூறப்படுவதும் உண்மைகள் மறைக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்ற விடயமே. இலங்கை தமிழரசுக்கட்சி மாநாட்டி…
-
- 0 replies
- 383 views
-
-
பலர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற பெயரை தருமாறு கோரியுள்ளமையால் ஜனவரிக்குள் பதிவு செய்ய ஆவண செய்யுமாறு தேர்தல் ஆணையாளர் செய்தியொன்றை தெரிவித்துள்ளார் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று அவரது வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தேர்தல் ஆணையாளரும் பலர் இப் பெயரை கேட்பதனால் நீங்கள் உங்கள் செயற்பாட்டை செய்யாது விட்டால் கூட்டமைப்பின் பெயரை யாருக்கும் கொடுக்க வேண்டும் என்ற செய்தியை கூறியுள்ளார்.ஆகவே நாம் அவ் விடயத்தில் துரிதமாக செயற்பட வேண்டும். ஆகவே தமிழ் தேசியக்கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக்கட்சி , டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகியன பதிவு செய்வதில…
-
- 0 replies
- 367 views
-
-
நாங்கள் வைக்கோல் பட்டடைதான் அதை கொழுத்தியதாலேயே இன்று நீங்கள் சர்வதேசத்தின் பிடியில்! நாட்டின் பொறுப்பு வாய்ந்த ஜனாதிபதி, எங்கள் கோரிக்கைகளை ஆராயாது வடக்குமாகாண சபையை வைக்கோல் பட்டடை நாய் என்று விமர்சித்துள்ளார். நாங்கள் வைக்கோல் பட்டடை நாய்கள்தான். எங்கள் வைக்கோல் பட்டடையின் ஒரு பகுதியை ஜனாதிபதியின் ஒரு சகோதரர் தீ வைத்துப் பொசுக்கியதால் தான் ஜெனிவாவில் விசாரணை நடக்கின்றது. மற்றைய சகோதரர் வைக்கோல் பட்டடையைப் பராமரிப்போம் பத்தும், இருபதும், முப்பதும் தாருங்கள் என்று கேட்டு வருகின்றார். இந்நிலையில் நாங்கள் நாயாக இருந்து வைக்கோல் பட்டடையின் நலம் காக்காது விட்டால் நமக்காக அவரா அல்லது அவரின் குடும்பத்தாரா நன்மை செய்யப் போகின்றார்கள்? நாயாக உழைக்கப் போகின்றார்கள்? இவ்…
-
- 0 replies
- 544 views
-
-
இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களின் வழக்குத் தீர்ப்பை ஒத்திவைத்தது ஆஸி. நீதிமன்று! இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பை ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கென்பரா உயர் நீதிமன்றில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 157 இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் நடுக் கடலில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை மற்றும் இந்தியாவுக்கு அவர்களை நாடு கடத்த எடுக்கப்பட்ட முயற்சி ஆகியனவற்றுக்கு எதிராகவே நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணைகள் நேற்று செவ்வாய்க்கிழமையும் இன்று புதன்கிழைமையும் நடைபெற்றன. வழக்கினை விசாரணை செய்த உயர் நீதிமன்றம்…
-
- 0 replies
- 258 views
-
-
இலங்கைப் பயணத்தை ஒத்திவைத்தார் மோடி? இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இந்திய ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் உரிய முறையில் பிரதமர் மோடி தெரியப்படுத்தியுள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. இலங்கையில் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த திட்டமிட்டுவருவதை அடுத்தே அவர் தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் தனது விஜயம் தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதாலேயே இந்த முடிவை தான் எடுத்தார் என்றும், எனினும் தேர்தல் முடிவடைந்ததும் த…
-
- 0 replies
- 332 views
-
-
கல்முனை பொலிஸ் நிலையம் முன்பாகப் பதற்றம்! கல்முனை பொலிஸ் நிலையம் முன்பாக இன்று புதன்கிழமை இரவு ஏற்பட்ட பதற்ற நிலை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலையீட்டால் தணிக்கப்பட்டது . கல்முனை முருகன் கோவில் அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் யுவதி ஒருவரும் தகாதமுறையில் நடந்துகொண்டனர் என்ற குற்றச்சாட்டில் பொது மக்களால் குறித்த இருவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டனர். இந்த நிலையில் சம்பவத்தை விசாரிக்க சென்ற பொலிஸாரை இளைஞர்கள் தாக்கினார்கள் என்ற குற்ற சாட்டில் இரு தமிழ் இளைஞர்களும் கல்முனை முருகன் கோயில் பூசகரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டனர். இதனை எதிர்த்து கல்முனை தமிழ் இளைஞர்கள் பொலிஸ் நிலையம் முன்பாக திரண்டு கைது செய்தவர்களை விடுவிக்குமாறு கோ…
-
- 0 replies
- 408 views
-
-
தமிழர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள் என்று ஜனாதிபதி எண்ணக்கூடாது! செல்வம் எம்.பி. காட்டம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்களால் தெரிவு செயய்ப்பட்ட அமைப்பாகவும் மக்கள் பிரதிநிதிகளை கொண்ட அமைப்பாகவே உள்ளது. இந்த நிலையில் கூட்டமைப்போ தமிழ் மக்களோ எடுப்பார் கைப்பிள்ளையாக ஜனாதிபதி எண்ணக்கூடாது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவும் தமிழ் மக்கள் சார்பாகவும் நாம் அவரது உரையை வன்மையாக கண்டிக்கின்றோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கமும் ஜனாதிபதியும் தமிழ் மக்களையு…
-
- 0 replies
- 357 views
-
-
யாழ். இந்து மாணவன் கொலை; இரு சந்தேக நபர்கள் கைது! யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவன் ஒருவரை இணுவிலில் அவரது வீட்டில் வைத்துக் கோடரியால் கொத்திக் கொலை செய்தமை தொடர்பில் ஒன்றரை வருடங்களின் பின்னர் இரு சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து வாள்கள், கத்திகள் என்பனவும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது எனவும் தெரியவருகின்றது. இந்த சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது:- இணுவில் பகுதியில் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வீடு ஒன்றில் புகுந்த ஆயுததாரிகள் வீட்டிலிருந்த தந்தையையும் மகனையும் தாக்கிவிட்டு அங்கிருந்த பெறுமதிவாய்ந்த பொருள்களை கொள்ளையடிதத்துச் சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக…
-
- 0 replies
- 411 views
-
-
-எம்.றொசாந்த் 24 வருடங்களுக்கு பின்னர் முதலாவது தபால் ரயில் இன்று புதன்கிழமை (15) காலை 7.25 மணிக்கு யாழ்.புகையிரத நிலையத்தை வந்தடைந்தது. முதலாவது தபால் ரயிலை வரவேற்கும் விதத்தில் வரவேற்பு நிகழ்வு மற்றும் தபால் ஊர்வலம் என்பவற்றை யாழ்.பிரதம தபால் நிலையத்தினர் நடத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தபால் ரயிலில் வந்த தபால் பொதிகளை பொறுப்பேற்ற இலங்கை தபால்மா அதிபர் ரோஹண அபேவர்த்தன, அவற்றை தபால் பொதி சுமப்பவரிடம் கையளித்தார். இதனையடுத்து, பாரம்பரிய தபால் காவும் முறையான, வண்டிலில் தபால் கொண்டு செல்லும் முறையில் தபால் பொதி சுமப்பவர் யாழ்.புகையிரத நிலையத்தில் இருந்து தபால் பொதிகளை யாழ்.பிரதம தபால் நிலையத்திற்கு கொண்டு சென்றார். இனிவரும் காலங்களில் பாரம்பரிய முறையன்றி, வாகனத…
-
- 1 reply
- 418 views
-
-
பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரைக்குமான யாழ்தேவி புகையிரத சேவை 24 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எனினும், இந்த யாழ்தேவியுடன் இணைந்த சேவையாக 60களில் இணைத்து கொள்ளப்பட்ட உத்தர தேவி, மறக்கப்பட்டுவிட்டதா இன்றேல் யாழ்தேவிக்கு இணைந்ததாக உத்தர தேவியும் சேவையில் இணைத்துகொள்ளப்படுமா என்று கேள்வி எழும்பியுள்ளது. இது தொடர்பில் அறிவதற்காக ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கு முயன்ற போதிலும் அம்முயற்சி கைகூடவில்லை. யாழ்தேவி புகையிரத சேவையை யாழ்ப்பாணம் வரையிலும் ஈடுபடுத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளமையினால் உத்தரதேவி தொடர்பிலான தகவல்களை தம்மால்…
-
- 0 replies
- 573 views
-
-
எப்ப இலங்கை வாறாய்? நீ தப்பித் தவறி இலங்கை வந்திடாதை - Rahu Kathiravelu முகநூலில் மிரட்டல்:- People enforced to part take in the Yarldevi train reception:- 14 Oct 14 13:08 (GMT) EPDP told the students to call the president uncle or Mama - -Reporter for Global Tamil News- மேற்குறித்த செய்தி நேற்று (14 Oct 14 13:08) வெளியாகி இருந்தது. இந்தச் செய்தியும் வழமைபோல் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு இருந்தது. அந்தப் பகிர்வொன்றின் கீள் கனடா ரொரன்றோவை வசிப்பிடமாக் கொண்டதாகவும் தனது பெயர் Rahu Kathiraveluஎன்பதாகவும் முகநூலில் பலரை தனது நட்பு வட்டத்துள் வைத்திருக்கும் இவர் அநாகரீகமான முறையில் மிரட்டி இருக்கிறார். தனது முகநூலில் இலங்கை அரச சார்பு செய்த…
-
- 0 replies
- 723 views
-
-
மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையரை நாடுகடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அல்கெய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் மொஹமட் ஹுசைன் என்ற நபரே இவ்வாறு நாடுகடத்தப்படவுள்ளார். தமிழ் நாட்டிலுள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடாத்த முயற்சித்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய அரசாங்கம் இவரை தன்னிடம் ஒப்படைக்குமாறு மலேசியாவிடம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது. இருப்பினும், அக்கோரிக்கையைப் புறக்கணித்த மலேசிய அரசாங்கம் இவரை இலங்கைக்கு நாடுகடத்த தீர்மானித்துள்ளது. இலங்கைப் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடன் அழைத்துவரப்படும் இவரை விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர்…
-
- 0 replies
- 224 views
-
-
வெளிநாட்டவர் வட மாகாணத்துக்கு செல்லவேண்டுமாயின் அதற்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் யாழ். விஜயத்தையொட்டி வெளிநாட்டவர்கள், வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டிருப்பவர்கள் இலங்கையின் வடபகுதிக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் எந்தவித உண்மைகளும் இல்லை. இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற நீண்ட கால யுத்தம் நிறைவுக்கு வந்தையடுத்து தற்போது வடக்கு பகுதியில் சுமூகமான நிலை ஏற்பட்ட…
-
- 0 replies
- 282 views
-
-
யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவையில் பயணித்தோருக்கு மாற்றுபாதைக்கான அனுமதி சீட்டே வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட யாழ்தேவி சேவையில் பயணிப்போருக்கான அனுமதி சீட்டு இன்னும் அச்சடிக்கப்படவில்லை. கடந்த 24 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு விநிநோக்கிக்கப்பட்ட அனுமதி சீட்டுகளின் ஒரு தொகுதி வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் இருந்துள்ளது. குறித்த அனுமதிச் சீட்டுக்களை நேற்று யாழ்ப்பாணத்தை நோக்கி வந்த பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மூன்றாம் வகுப்புக்கான கட்டணமாக இன்றைக்கு 24 வருடங்களுக்கு முன்னர் ரூ.52.60 அறவிடப்பட்டுள்ளது. இன்றைய கட்டண விபரங்களின் பிரகாரம் 320 ரூபாவாகும். இதே…
-
- 0 replies
- 278 views
-
-
"மு.அ. டக்ளஸ் தேவானந்தா என்றால் முதுகெலும்பில்லாத அமைச்சர் என்று நான் சொல்ல வரவில்லை. முக்கிய அமைச்சர் டக்களஸ் தேவானந்தா என்றே கூறுகின்றேன். இந்த அரசும் - அரசுடன் சேர்ந்திருக்கின்ற மேற்படி மு.அமைச்சரும் - தமிழர்களின் உரிமைகளை மறைத்தும் - மறுத்தும்தான் - கதைப்பார்கள்." - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். வடக்கு மாகாணத்துக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து வலம் வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சியில் பேசியபோது மு.விக்னேஸ்வரன் என்று விளித்திருந்தார். அத்துடன் மு.விக்னேஸ்வரன் என்றால் முட்டாள் விக்னேஸ்வரன் என்று அர்த்தமல்ல முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்பதே என்றும் வியாக்கியானம் செய்திரு…
-
- 2 replies
- 728 views
-
-
தமிழீழ கோரிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை ரத்து செய்யத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே சுமந்திரன், ஈழக் கோரிக்கையை முன்வைக்கவில்லை என தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் அதிகாரம் பகிரப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globalt…
-
- 4 replies
- 418 views
-
-
இலங்கையின் இணைய பாதுகாப்பு குறித்து தொடர்பில் சீனாவுடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை செய்துகொண்டுள்ளது. இலங்கை தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது. சீனாவின் இணையத்தள துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான அவசர வினையாற்றல் குழுவினர் சீனா அரசாங்கம் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் இணையத்தளப் பயன்பாடு, பாதுகாப்பு, இணையத்தளப் பாவனையைக் கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பணிகளில் சீனாவின் உதவியைப் பெற்றுக் கொள்ள இலங்கை எதிர்பார்த்துள்ளது. மேலும் இலங்கை அரசின் முக்கிய இணையத்தளங்களை சைபர் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பையும் சீனா ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் தேர்ந…
-
- 1 reply
- 345 views
-