ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143555 topics in this forum
-
இலங்கை நாடாளுமன்றத்தில், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நான் சென்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்துக்கு என்ன சொல்ல போகிறார்கள் என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.http://www.pathivu.com/news/34358/57//d,article_full.aspx
-
- 1 reply
- 648 views
-
-
தெற்கு கடற்பரப்பில் இருந்து கடலுக்குச் சென்ற சுமார் 31 படகுகள் ஆழ்கடலில் சுழற்காற்றுக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. குறித்த படகுகளில் 180ற்கும் அதிகமான மீனவர்கள் உள்ளதாக, சுழல் காற்றில் சிக்குண்டுள்ள மீனவர்களுடன் தொடர்புகளை வைத்துள்ள தென் பகுதி மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இதையடுத்து, குறித்த படகுகள் மியன்மாரை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். http://www.pathivu.com/news/34378/57/180-31/d,article_full.aspx
-
- 0 replies
- 343 views
-
-
வடக்கில் சிறீலங்கா அரச படைகளால் நடத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களினால் சிறுவர்கள் உடல் உள ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமது தாய் தந்தையரை தாக்குதல்களுக்கு பலிகொடுத்து திக்கற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். புத்தகப்பைகளுக்கு பதிலாக அவர்கள் தமது உடல்களில் எறிகணைத்துண்டுகளையும், குண்டுகளையும் தாங்கியவாறே பாடசாலைக்குப்போகின்றனர் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார். சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம், மன்னார் நானாட்டான் கல்விக்கோட்டத்துக்கு உட்பட்ட நறுவிலிக்குளம் றோமன்கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில், பாடசாலையின் முதல்வர் ஆசைப்பிள்ளை தலைமையில் கடந்த 03.10.2014 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக…
-
- 0 replies
- 696 views
-
-
சிறிலங்காவுக்கும், அமெரிக்காவுக்கு இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே மகிந்தராஜபக்ஷவுக்கும், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோன்கெரியை சந்தித்த ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு மென்மைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். எனினும் இந்த கூற்று பொய்யானது என்றும், அமெரிக்காவின் சிறிலங்கா தொடர்பான கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் அமெரிக்கா அறிவித்திருந்தது. இதனை அட…
-
- 0 replies
- 637 views
-
-
அரசியல் தீர்வு நோக்கில் கூட்டிணையும் போது தமிழ் தரப்புகள் அவதானமாக இருக்க வேண்டும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று எச்சரித்துள்ளது. சிறிலங்காவின் தேசிய ஒற்றுமை முக்கியமானது. தேசிய ஒற்றுமையுடன், சம உரிமைக்காக தமிழ் பிரதிநிதிகள், ஏனைய சக்திகளுடன் ஒன்றிணைந்து போராட வேண்டும். ஆனால் ஒன்றிணையும் தரப்புக்கள் குறித்து தமிழ் தரப்புக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு நிரந்த பிரச்சினையாக மாறக்கூடிய அபாயங்களும் இருப்பதாக அந்த ஊடகம் எச்சரித்துள்ளது. http://www.pathivu.com/news/34377/57//d,article_full.aspx
-
- 0 replies
- 351 views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் எதிர்வரும் 10ஆம் திகதி வவுனியா நீதிமன்றம் முன்பாக அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளனர் என்று வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவைச் சேர்ந்த கி.தேவராசா தெரிவிக்கையில், கிளிநொச்சி தர்மபுரப்பகுதியில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பிரயோகித்து ஜெயக்குமாரிக்கும் விடுதலை புலிகளுக்கும் தொடர்பு உண்டு என்பதை வலியுறுத்தி இராணுவத்தினரால் கைது செய்பட்ட ஜெயக்குமாரி 200 நாட்களுக்கு மேலான நிலையில் இன்னமும் விடுதலை சைய்யப்படவில்லை. கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைதுசெய்யப்பட்ட ஜெயக்கும…
-
- 0 replies
- 308 views
-
-
தென்னிலங்கை மீனவர்கள் இழுவைப்படகினை பயன்படுத்துவதுடன் தடை செய்யப்பட்ட உபகரணங்களையும் பயன்படுத்துகின்றனர். அதற்கும் மேலான கொக்குளாய் நாயாறு கடல் பகுதிகளில் இராணுவத்தின் உதவியுடன் மீன்பிடிக்கின்றனர். இதனைக் கேட்க திராணியில்லாத நீரியல் வளத்துறையினர் எமது தொழிலாளர்களை மட்டும் ஏன் தடுத்து வருகின்றனர் என்று வடக்கு மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வல்வெட்டித்துறை கிழக்கு கடற்றொழில் சங்கத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தடைசெய்யப்பட்டுள்ள இழுவைப்படகு மீன்பிடியினை மீண்டும் அனுமதிக்கக் கோரி இன்று உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் …
-
- 0 replies
- 259 views
-
-
சர்வதேச ஆசிரியர் தினமான இன்று ஆசிரியர்களின் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் கவனயீனமாக இருப்பதனைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் யாழ்.நகரில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. ஏமாற்றாதே ஏமாற்றாதே ஆசிரியர் ஆதிபர்களை ஏமாற்றாதே, வழங்ஞ வழங்கு அதிபர்களின் பதவி உயர்வுகளை வழங்கு, நிறுத்து நிறுத்து நியமனங்களில் அரசியல் தலையீட்டை நிறுத்து, பாடசாலைகளில் படையினரின் தலையீட்டை நிறுத்து போன்ற 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை குறித்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியன தங்கள் முழுமையான ஆதரவினை வழங்கின. - See more at: http://onlineuth…
-
- 0 replies
- 260 views
-
-
பெருமளவிலான மக்களின் காணிகளை படையினர் கைப்பற்றியுள்ளனர் என மன்னார் மறைமாவட்ட பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். அண்மையில் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனை சந்தித்த போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு பேராயர் கருத்து வெளியிட்டுள்ளார். இராணுவத்தினர் காணிகளை கைப்பற்றியுள்ளதனால் பெரும் எண்ணிக்கையிலான மன்னார் மாவட்ட மக்கள் காணிகளின்றி வாழ்வதாகத் தெரிவித்துள்ளார். வேறும் நோக்கங்களுக்காக காணிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் 4000 ஏக்கர் காடு அழிக்கப்பட்டு 1000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வீடு உள்ளவர்களுக்கே வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய வீட்டுத் திட்டத்திலும் வீடுகள் …
-
- 0 replies
- 396 views
-
-
அண்மையில் அருளினியன் பக்கங்களில் சிங்களத் திரைப்பட நெறியாளர் பிரசன்ன விதானகே அவர்களுடனான ஒரு நேர்காணல் வெளியாகி இருந்தது. அதனை வாசித்த பின் என்னுள் எழுந்த உணர்வலைகளைப் பகிரவேண்டும் எனத் தோன்றுகிறது. நேர்காணல் முழுவதும் மிகவும் முற்போக்கான கருத்துகளைக் கூறிச் செல்கிற பிரசன்ன அவர்களிடம் கீழ்வரும் கேள்வி கேட்கப்படும் போது அதற்கு அவர் கீழ்வருமாறு பதில் அளிக்கிறார். இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்ததை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இறுதிப் போரின் இறுதி நாட்களில் நடைபெற்றஉயிரிழப்புகள் பற்றிய சரியான தரவுகள் யாரிடமும்இல்லாத நிலையில் இது சம்பந்தமாகக் கருத்துக் கூறவிரும்பவில்லை. இந்தக்கேள்வியையும் பதிலையும் முகப்புத்தகத்தில் என் நிலைத்தகவலில் பதிவு செய்தும் இருந்தேன். பல நண்ப…
-
- 0 replies
- 375 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க முனைகிறார் எனக் குற்றம்சாட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் மனைவி சர்மிளா வெளிநாடு செல்வதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். சுவிற்சர்லாந்துக்கு செல்வதற்காக கோபியின் மனைவி சர்மிளா நேற்று ஞாயிற்றுக்கிழமை உரிய ஆவணங்களுடன் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு சென்றார் என்றும் அங்கு வைத்தே அதிகாரிகள் சுவிஸுக்கு செல்ல விடாமல் அவரைத் தடுத்து நிறுத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவரிடம் சுவிஸ் செல்வதற்கான நுழைவிசைவு (விஸா) இருந்த போதிலும் அவரது கணவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதனாலேயே அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. சர்மிளாவை விமான நிலையத்திலேயே சிற…
-
- 0 replies
- 512 views
-
-
சந்திரிகாவுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் பச்சைக்கொடி! [sunday 2014-10-05 08:00] ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க போட்டியிட்டால், அவருக்கு ஆதரவளிக்கத் தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பச்சைக்கொடி காண்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் இரண்டு தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களின் ஆதரவினை பெற்றுக் கொள்ளக் கூடிய பொது வேட்பாளராக சந்திரிகா அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முயற்சிகளில் ரணில் விக்ரமசிங்கவைப் போன்றே சந்திரிகாவும் ஆர்வம் காட்டி வருவதாக…
-
- 3 replies
- 681 views
-
-
யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் கடமையாற்றும் 2000 உத்தியோகத்தர்களுக்கு 13 ஆம் திகதி 50 ஆயிரம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யவுள்ளார் மகிந்த. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள நிகழ்வில் வைத்து இவை வழங்கப்படவுள்ளன. இதற்காக பெண்களுக்கு பிளெஸ்ஸர் மோட்டார் சைக்கிளும் ஆண்களுக்கு டிஸ்கவர் - 125 மோட்டார் சைக்கிள்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளன. நேற்று 350 டிஸ்கவர் மோட்டார் சைக்கிள்கள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளது. இன்று 1000 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுவரப்படவுள்ளது. பெண்களுக்கான பிளசர் மோட்டார் சைக்கிள்கள் நாவற்குழி உணவுக்களஞ்சிய சாலையில் கொண்டுவந்து இறக்கப்பட்டு மோட்டார் சைக்கள்களுக்கான உதி…
-
- 0 replies
- 1.9k views
-
-
காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாட்டை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு பாதுகாப்பு படையினரிடமும் விசாரணைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சில தினங்களில் பாதுகாப்பு படையினரிடம் விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார். ஆணைக்குழுவிற்கு இதுவரை 19, 471 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் 5000 முறைப்பாடுகள் பாதுகாப்பு தரப்பினராலும் 14, 471 முறைப்பாடுகள் பொது மக்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் அமர்வுகளை நடத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாவது முறையாக விசாரணைகளை …
-
- 0 replies
- 174 views
-
-
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் சகோதரரான தியாகராஜா துவாரகேஸ்வரன் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் செட்டித்தெரு வீதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ். பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பஸ் சேவையில் ஈடுபடும் பஸ்ஸின் வழித்தடலினை பொலிஸார் பார்வையிட்ட போது, ஏற்பட்ட தகராறில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் யாழ். பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இவர் தற்போது, யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.http://www.pathivu.com/news/3436…
-
- 0 replies
- 351 views
-
-
ஆக்கிரமிப்புக்குள்ளாகி பறிபோய் கொண்டிருக்;கும் மணலாறு பற்றி மணிக்கொருதடவை அறிக்கை விடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் பெரும்பாலும் அங்கு எட்டிப்பார்ப்பதென்பதில்லையென்பது அனைவரும் அறிந்ததொன்றே. சுமார் 400 குடும்பங்கள் 30 வருடங்களின் பின்னர் மீளக்குடியமர்ந்துள்ள போதும் அந்த மக்களிற்கு ஏதும் கிட்டியிருக்கவில்லை. அம்மக்களிற்கென கொக்கிளாய் பகுதியிலுள்ள அரசினர் வைத்தியசாலை ஒன்று அமைந்திருந்த போதும் வடமாகாண சுகாதார அமைச்சரிற்கு அவ்வாறு வைத்தியசாலை இருப்பது தெரிந்திருக்கவில்லையென்பது பரிதாபகரமானது. அவ்வைத்தியசாலை காணியினில் பெரும் பகுதியினை சத்தமின்றி சிங்கள விகாரை அமைப்பிற்கென பிக்கு ஒருவர் ஆக்கிரமித்து வேலியிட்டுள்ளார். ஆனால் அது பற்றியும் மாகாண சுகாதார அமைச்சு …
-
- 0 replies
- 257 views
-
-
கடந்த 2014.10.04 ஆம் திகதி கோப்பாய் தொகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளைக்குழுவை தெரிவு செய்யும் நிகழ்வு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீர்வேலி பணிமனையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் பதியப்பட வேண்டுமெனவும், அதுவே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளதெனவும் தெரிவித்தார். அதை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டனர். அவரது முழுமையான உரை… சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வடமாகாண சபை முதலமைச்சரிடம் கேட்…
-
- 0 replies
- 192 views
-
-
அகதிகளின் வருகையை தடுப்பதற்கான விளம்பரங்களுக்காக மாத்திரம், அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒரு வருட காலப்பகுதியில் 23 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா போன்ற நாடுகளில் இருந்து படகுகள் மூலம் பல அகதிகள் அவுஸ்திரேலியா செல்கின்றனர். அவர்களின் வருகையை தடுக்கும் நோக்கில், அகதிகளை எச்சரிக்கும் வகையிலான விளம்பரங்கள் பல ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 2013 – 2014ம் ஆண்டுகளில் 23 மில்லியன் டொலர்களை செலவிட்டிருக்கிறது. அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 205 views
-
-
அடுத்த ஆண்டு முதல் இரட்டை பிரஜாவுரிமை news இரட்டை பிரஜாவுரிமை, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய சட்டத்தொகுதியின் கீழ் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கு இத்தாலியில் உள்ள இலங்கை பிரஜைகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இரண்டை பிரஜாவுரிமை இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டது. அதேபோல, இலங்கையின் வங்கியொன்றை இத்தாலியிலும் மிலான் நகரில் இலங்கைக்கான துணை தூதரகத்தை நிறுவப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, இலங்கை பிரஜைகள் 1,200 பேர் கலந்துகொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 06 அக்டோப…
-
- 0 replies
- 362 views
-
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் ஜனாதிபதிக்கு தனியான ஆசனப்பகுதி! – அதிநவீன வசதிகளுடன் தயாரானது [Monday 2014-10-06 08:00] ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கொள்வனவு செய்துள்ள புதிய விமானம் ஒன்றில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக அதிநவீன வசதிகளைக் கொண்ட ஆசனப் பகுதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக, சண்டெ ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலமே ஜனாதிபதி குழுவினர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளனர். இந்த விசேட ஆசனப் பகுதியை எயார்பஸ் கோப்பரேட் ஜெட் சென்டர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டு பயணங்களுக்காகவே இந்த புதிய விமானம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் இரண்டு டபிள் முக்கியஸ்தர்களின் இருக்கைகள் மற்றும் இரண்டு கிளப்-நான்கு முக்கியஸ்தர்…
-
- 0 replies
- 178 views
-
-
தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுதேர்தலில் போட்டியிடுவுன்- அனந்தி சசிதரன் (நேர்காணல்) October 05 20:382014 Print This ArticleShare it With Friends
-
- 0 replies
- 177 views
-
-
http://www.intertam.net/
-
- 0 replies
- 376 views
-
-
பொத்துவில் கூனப்பன்கோணிக்கு அருகாமையிலுள்ள ஊற்றுச்சேனை பிரதேசத்தில் மேட்;டுநிலப் பயிர் செய்கைக் காணிகளை வெள்ளிக்கிழமை (03) திகதி துப்பரவு செய்து கொண்டிருந்த போது இராணுவத்தினர் சென்று தடுத்து நிறுத்தி, சனிக்கிழமை முகாமுக்;கு வருமாறு கூறி அவர்களின் உபகரணங்களை பறித்தெடுத்துச் சென்றமை, இராணுவ ரீதியான நடவடிக்கையை அரசு முன்னெடுக்கின்றது என்பதை உணர்த்திக் காட்டுகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன் தெரிவித்தார். மேற்குறித்த சம்பவத்தைக் கண்டித்து, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கில் தமிழ் மக்கள் ஆண்டாண்டு காலமாக மேட்டுந…
-
- 0 replies
- 619 views
-
-
யாழ். கச்சாய் கெற்பேலி பகுதியில், இராணுவ டிரக்ட் வாகனம் முச்சக்கரவண்டியுடன் இன்று (05) மாலை மோதியதில், முச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்தாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியில் பயணித்த 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கச்சாய் வடக்கை சேர்ந்த குமாரசாமி திவாகரன் (வயது 28) என்ற இளைஞன் உயிரிழந்தார். அத்துடன் கொடிகாமத்தை சேர்ந்தவர்களான நடராசா நிரூசன் (வயது 21), உதயகுமார் இதயநுகன் (வயது 21), கச்சாய் பகுதியை சேர்ந்தவர்களான சிவகுமார் வின்சன் (வயது 19), சின்னத்துரை தபேந்திரன் (வயது 23) ஆகிய நால்வரும் படுகாயமடைந்தவர்களாவர். பிறந்ததின வீட்டொன்றுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த வேளை…
-
- 0 replies
- 701 views
-
-
வவுனியா போராட்டத்தில் ஈடுபட்ட பல கைதிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர் ( கோப்புப் படம்) இலங்கையில் 2012-ம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களின்போது கொல்லப்பட்ட மரியதாஸ் தில்ருக்ஷன் எனும் கைதியின் மரணம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கை ஏற்கக்கூடாது என்று அரச தரப்பினால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை நீதிமன்றம் நிராகரித்தது. மரியதாஸ் தில்ருக்ஷனின் பெற்றோர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை விசாரிப்பதற்கு, பிரியசாத் டெப் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு அனுமதி அளித்தது. மனு அழைக்கப்பட்டபோது ஆட்சேபனைகளை முன்வைத்த அரசதரப்பு வழக்குரைஞர், சிறைச்சாலை கலவரத்தை முறியடிப்பதற்கு ம…
-
- 0 replies
- 402 views
-