ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
அரச ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு 25 ,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்! “எதிர்வரும் ஆண்டு முதல் அரச பணியாளர்களின் மாதாந்த கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக” நிதிராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் தேர்தல் பிரசார பணிகள் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டில் பொருளாதார மீட்சிக்கான பயணத்தின் போது அனைத்து தரப்பினரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார். அப்போது அவர்கள் முன்னிலையாகவில்லை.ஆனால் ஜனாதிபதி பாதகம் ஏற்படாதவாறு பொருளாதார அபிவிருத்தி ந…
-
-
- 15 replies
- 716 views
- 1 follower
-
-
வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை! வர்த்தமானி வெளியீடு! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக 109 ரூபாய் செலவழிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக செலவு செய்வது சட்டவிரோத செயல் என்றும் இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1396461
-
- 1 reply
- 115 views
-
-
நான் சிலிண்டரைத் தெரிவு செய்தமைக்கு காரணம் இதுதான்! ”Ask Ranil” நிகழ்ச்சியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமூக வலைத்தளங்கள் ஊடாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் வழங்கியிருந்தார். அந்தவகையில் ” இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிலிண்டர் சின்னத்தை தெரிவு செய்துள்ளீர்கள் ‘யானை’ இல்லாமல் ‘சிலிண்டர்’ தெரிவு செய்யப்பட்டதன் காரணம் என்ன?” என ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க ”இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்தேன். கட்சி சாராமல் செயற்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதற்கேற்ப அரசியல் ரீதியாக புதிதாக சிந்திக்க வேண்டும். பல குழுக்க…
-
- 0 replies
- 84 views
-
-
பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவைகள் அழைப்பு! கடந்த 2018 ஆம் ஆண்டு 52 நாள் ஆட்சி கவிழப்பு சூழ்ச்சியின்போது பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவை அழைப்பு விடுத்த போதும் அதனை நிராகரித்திருந்தாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று மாலை மீரிகம நகரில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் சந்தர்ப்பவாத அரசியலை பின்பற்றுவதில்லை. 2018 ஆம் ஆண்டு 52 நாள் சூழ்ச்சியின் போது பிரதமர் பதவ…
-
- 0 replies
- 113 views
-
-
19 AUG, 2024 | 08:12 PM அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான 'USS Spruance' என்ற கப்பல் இன்று திங்கட்கிழமை (19) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்த கப்பலானது விநியோகம் மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 160 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் சுமார் 338 பணியாளர்கள் கடமை புரிகின்றனர். Commander Thomas Adams இந்த கப்பலின் கட்டளை அதிகாரியாவார். இந்த கப்பலானது நாளை செவ்வாய்க்கிழமை (20) கொழும்பு துறைமுகத்தை விட்டு மீண்டும் புறப்படவுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 318 views
- 1 follower
-
-
19 AUG, 2024 | 12:45 PM கொழும்பு - புத்தளம் வீதியில் மஹவெவ நகருக்கு அருகில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று திங்கட்கிழமை (19) தெரிவித்துள்ளது. மஹாவெவ தனிவெல்ல தேவாலயத்திலிருந்து மஹாவெவ நகரம் வரையிலான பகுதிகளில் நீர் நிரம்பிக் காணப்படுகின்றது. சில பகுதிகளில் மூன்று அடிக்கு மேல் நீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளியாபிட்டிய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மஹாவெவ லுனு ஓயா மற்றும் ஹெமில்டன் கால்வாயில் நீர் நிரம்பி வழிவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா லந்தர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றதுடன் அவரின் முதலாவது தேர்தல் பேரணி கம்பஹா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது. இதன்போது வெடிகுண்டு தாக்கப்பட்ட காரையும் அவர் தனது பேரணிக்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது . Tamilmirror Online || வெடிகுண்டு தாக்கப்பட்ட காருடன் வந்த பொன்சேகா
-
-
- 6 replies
- 615 views
-
-
அர்ஜுனன் மகேந்திரனை சட்டத்தின் முன் நிறுத்துவேன்! -அநுர நான் தேர்தலில் வெற்றிபெற்றால், மத்திய வங்கியில் நிதி மோசடி செய்துவிட்டு சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ள அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் ”என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதியளித்துள்ளார். கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அனுராதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது ரணில் விக்கிரமசிங்க என்னை அவமதித்து பேசினார். அநுர இதற்கு பதிலளியுங்கள் என ரணில் கூறும் பொழுது அவரது வார்த்தை தவறியதை அனைவர…
-
- 3 replies
- 408 views
-
-
வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் வடக்கில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே மேற்கொண்ட ஆய்வொன்று திடுக்கிடும்படியான முடிவுகளை தந்துள்ளன. வடக்கில் உள்ள பாடசாலைகளில் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடையே கற்றலில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு அமைந்துள்ளது. மாணவர்கள் கணித பாடத்தில் எதிர்கொள்ளும் சவால்களை ஆய்வின் ஒரு பகுதியாக கொண்டு பெறப்பட்ட முடிவுகள் இதுவரை சுட்டிக்காட்டப்படாதவையாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சிறந்த அடைவு மட்டத்தினை மாணவர்கள் பெற்றுக்கொள்வதில் கற்பித்தலில் மட்டும் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் அது சாத்தியமில்லை என்பது இந்த ஆய்வின் மூலம்…
-
-
- 6 replies
- 768 views
- 1 follower
-
-
மக்களின், குறிப்பாக கத்தோலிக்க சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையை அம்பலப்படுத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்திற்கு விஜயம் செய்த பிரேமதாச, கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் கொழும்பு பேராயர் உதவி ஆயர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டபோது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தில் உண்மையை வெளிக்கொணர ஒரு தெளிவான திட்டம் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்ட சஜித், ஏற்கனவே நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் ந…
-
- 2 replies
- 428 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 19 AUG, 2024 | 10:28 AM யாழ்ப்பாண கடலில் சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். புத்தளம் பகுதியைச் சேர்ந்த சேவுதாதின் முகமதுதாவீன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கடற்பகுதியில் சிலிண்டரை பயன்படுத்தி சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த வேளை, நெஞ்சு வலிப்பதாக கூறி, கடலின் மேல் பகுதிக்கு வந்துள்ளார். அதனை அடுத்து சக தொழிலாளிகள் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளார்.…
-
-
- 5 replies
- 377 views
- 1 follower
-
-
அரியநேத்திரனுக்கு இரண்டு வார அவகாசம்; கட்சிக் கூட்டங்களில் பங்கேற்கவும் தடை பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேத்திரனுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்றையதினம் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதான வேட்பாளர்களுடன் போச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எமது அடிப்படை நிலைப்பாடு வடக்கு – கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஆகும்…
-
- 3 replies
- 529 views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்போம்! தான் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நான்காவது வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ருவன்வெல்ல தெஹியோவிட்ட பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டை அடி பாதாளத்துக்குள் தள்ளிய ராஜபக்ஷாகளுக்கு பிரதான பாதுகாவலராக இந்த நாட்டின் ஜனாதிபதி இருந்து வருகிறார். நான் இந்த ஜனாதிபதி கதிரைக்கு மக்களின் வாக்குகளால…
-
- 2 replies
- 183 views
- 1 follower
-
-
விமல் தரப்பினர் நல்லூர் கந்தனை வழிபட்டனர் Freelancer / 2024 ஓகஸ்ட் 18 , பி.ப. 08:59 - 0 ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட தரப்பினர் யாழ்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் தற்போது திருவிழா இடம்பெற்று வரும் நிலையில், அவர்கள் நேற்று அங்கு சென்றுள்ளனர். இதேவேளை, சர்வஜன அதிகார கூட்டணியின் முதலாவது அங்குரார்ப்பண தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/விமல்-தரப்பினர்-நல்லூர்-கந்தனை-வழிபட்டனர…
-
-
- 9 replies
- 944 views
-
-
Published By: VISHNU 18 AUG, 2024 | 06:11 PM மட்டக்களப்பு நகரில் இயங்கிவரும் பிரபல உணவகம் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி கழிவு நீரை வெளியில் திறந்துவிட்ட மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உணவகத்தை எதிர்வரும் 22ம் திகதிவரை தற்காலிகமாக மூடுமாறு ஞாயிற்றுக்கிழமை (18) உத்தரவு பிறப்பித்ததையடுத்து உடன் பொது சுகாதார பரிசோதகர்கள் உணவகத்தை மூடி சீல் வைத்தனர். குறித்த பிரபல உணவகத்தின் கழிவு நீர் வெளியேறி வீதிகளிலும் வடிகான்களிலும் தேங்கி நிற்பதுடன் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முற…
-
- 1 reply
- 278 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 18 AUG, 2024 | 11:04 AM (நா.தனுஜா) சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் திகதியன்று வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திலிருந்து டிப்போ சந்தி வரை விசேட கவனயீர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், கடந்த கால மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை. அதேவேளை நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என…
-
-
- 13 replies
- 637 views
- 1 follower
-
-
18 AUG, 2024 | 03:03 PM யாழ்ப்பாணத்தில் மனவளர்ச்சி குன்றிய யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சிறிய தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகவீனம் காரணமாக இந்த யுவதியை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தவேளையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் யுவதி கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தபோது தாயின் சகோதரியினது கணவர் (சித்தப்பா) மற்றும் இரு இளைஞர்கள் என மூன்று பேர் இணைந்து யுவதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளா…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை? – பிரதான வேட்பாளா்கள் கோாிக்கை! ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை 1000 ரூபா வரை வழங்கப்பட வேண்டுமென பிரதான வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இது தொடர்பான முன்மொழிவுகள் குறித்த இறுதித் தீர்மானம் எதிர்காலத்தில் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும்; அவர் கூறியுள்ளார். தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, வேட்புமனுக்கள் பெறப்பட்ட 5 நாட்களுக்குள் ஒரு வாக்காளருக்குச் செலவிடப்படும் அங்கீகரிக்கப்பட்ட தொகை வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் எனவும், அது குறித்து முடிவெடுப்பதற்காக வேட்பாளர்களுக்கும் தேர…
-
- 0 replies
- 165 views
-
-
18 AUG, 2024 | 10:37 AM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலாண்மை மற்றும் வளங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலாளர் ரிச்சர்ட் ஆர் வெர்மா இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு அமெரிக்காவின் அர்ப்பணிப்பை அவர் மீள வலியுறுத்தியுள்ளார். வலுவான விசாரணை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். …
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
அண்மையில் திருத்தப்பட்ட கடற்றொழில் விதிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாலும், இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாலும், அண்மைய மாதங்களில் இலங்கை கடலுக்குள் இந்திய மீன்பிடிக்கும் இழுவை படகுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதை வடக்கின் கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர். அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டமை, இரண்டாவது தடவையாக குற்றமிழைத்தவர்களுக்கு பாரிய தண்டனைகள் மற்றும் சிறைத்தண்டனைகளை வழங்கியமை என்பன இதற்கான காரணமாக இருக்கலாம் என்று ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா கருத்து தெரிவித்த…
-
-
- 1 reply
- 443 views
- 1 follower
-
-
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் கடத்தல் - சிறுவனை மீட்டு கடத்தியவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் 17 AUG, 2024 | 05:59 PM வீடொன்றில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுவனை கடத்தல்காரர் ஒருவர் கடத்தி, காட்டுக்குள் கொண்டு சென்றதையடுத்து, சிறுவனை மீட்டு, கடத்திய நபரை பிரதேச மக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று சனிக்கிழமை (17) அதிகாலை மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இடம்பெற்றது. இதனால் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதாகவும் கைதான நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வாகரை 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 5 வயது ச…
-
- 0 replies
- 418 views
- 1 follower
-
-
இலங்கை இராஜதந்திரி ஹிமாலி அருணதிலகவுக்கு எதிரான அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத் தீர்ப்பு - வெளிவிவகார அமைச்சு 18 AUG, 2024 | 06:58 AM (நா.தனுஜா) இலங்கை இராஜதந்திரி ஹிமாலி அருணதிலக அவுஸ்திரேலியாவுக்கான பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய காலப்பகுதியில் அந்நாட்டு நியாய ஊழியச் சட்டத்தை மீறி செயற்பட்டிருக்கிறார் எனவும், அதற்காக அக்காலப்பகுதியில் அவரது வீட்டுப்பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பிரியங்கா தனரத்னவுக்கு அவர் 543,000 டொலர்களைச் செலுத்தவேண்டும் எனவும் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. இருப்பினும் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, அப்பணிப்பெண்ணுக்கு அமைச்சின் ஊடாக அன…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
17 AUG, 2024 | 04:32 PM கடலுடன் கலக்கின்ற நீரை குளத்திற்கு வழங்கி மக்களுடைய விவசாயத்திற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பங்காற்ற உதவுமாறு தென்னமரவடி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமாக இருக்கின்ற தென்னமரவடி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் பல பூர்த்தி செய்யப்படாத நிலையில் அக்கிராமத்தில் வாழ்ந்து வருவதாகவும், வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி மற்றும் விசாயத்தை பல சவால்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றார்கள். தென்னமரவடி கிராமத்தில் விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டுவரும் மக்கள் விவசாயத்திற்கான நீர் இன்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இந்நில…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
17 AUG, 2024 | 06:13 PM நாட்டில் எச்.ஐ.வி தொற்று நூற்றுக்கு முன்னூறு வீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், அதன்படி, நாடளாவிய ரீதியில் இதுவரை 3,500 எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 52க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காணப்படுகின்றனர். அடையாளம் காணப்பட்ட எச்.ஐ.வி தொற்று நோயாளர்களில் நூற்றுக்கு 81 வீதமானோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவான எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் அடையாளம் கா…
-
- 1 reply
- 203 views
- 1 follower
-
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்! August 17, 2024 இலங்கையில் 9-ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக போட்டியிடுகின்றார். இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்ப் பொதுவேட்பாளர் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் நாளை காலை 9 மணிக்கு தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு வணக்கம் செலுத்துவார். அதன் பின் ஊடகச் சந்திப்பு…
-
-
- 82 replies
- 7.3k views
- 2 followers
-