Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். போலியான கடவுச்சீட்டுக்கள் ஊடாக பயணித்தமை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளவும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தனரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கபடுகிறது. முல்லைத்தீவு விஸ்வமடுவை சேர்ந்த பாலச்சந்திரன் தவபாலன் அனுஷன் (வயது 20), மன்னார் முருங்னை சேர்ந்த செபஸ்தியன் பிள்ளை ரொபட் (வயது 43) ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் செபஸ்தியன் பிள்ளை ரொபட் என்பவர் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால்…

  2. இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசியலமைப்பில் உள்ள குறைந்தபட்ச அதிகாரங்களும் சட்டத்திற்கு முரணாக பறிக்கப்படுகின்றன. இதனை ஒழுங்குபடுத்திக் கூறினால் தமிழ்த்தேசிய கோட்பாடு எதற்காக உருவானது என்ற கேள்விக்கு இயல்பாகவே பதில் கிடைக்கும். இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஒத்த அல்லது இந்திய மாநில அதிகாரங்களையும் விட குறைவான அரசியல் தீர்;வு ஒன்றையே அன்று இந்திரா காந்தி தீர்மானித்திருந்தார் -அ.நிக்ஸன்- இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இந்தியாவின் தலையீடு உள்ளது. குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று இந்திய பிரதமரை சந்திப்பது அல்லது இந்திய வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடுவது பின்னர் அந்த சந்திப்பு தொடர்பாக அதீத நம…

  3. இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள வீட்டின் உரிமையாளரது இறுதிக்கிரியைகளை நடத்த அனுமதிக்குமாறு கோரி சடலத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் அடித்து விரட்டியுள்ளனர். இச்சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு நகரில் நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள தனியார் ஒருவரின் ஆதனத்தினையும் அவர் குடியிருந்த வீட்டையும் இராணுவத்தினர் கையகப்படுத்தி முகாம் அமைத்துள்ளனர். இந்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளரான க.சிங்கரத்தினம் என்ற முதியவர் அந்த வீட்டினையும் ஆதனத்தினையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு இராணுவத்தினரிடம் தொடர்ச்சியாக கோரியிருக்…

  4. வறுமை காரணமாக தமது வாழ்ந்த வீட்டை ஈடுவைத்த குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வரும் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினரது செயற்பாட்டால் இரண்டு பிள்ளைகள் மற்றும் பெற்றோருடன் நடு வீதிக்கு வரும் நிலை சத்தியராணி என்னும் குடும்பப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது. குறித்த பெண் வடமாகாணசபை உறுப்பினரான கனகரத்தினம் விந்தனிடம் ரூபா 6லட்சம் ரூபாவிற்கு ஒன்றரை வருட காலப் பகுதிக்குள் மீட்பதாக ஈடுவைத்திருந்தார். மீட்பதற்குரிய காலம் தாமதித்தபடியால் தற்போது அவ் வீட்டை மீட்கும் பொருட்டு அவரிடம் நாடிய அந்தப் பெண்ணிடம் 18லட்சம் ரூபா பணத்தை தந்தால் தான் வீட்டை திரும்பத் தருவேன் என்றும் இல்லையேல் இம்மாதம் 5ம் திகதிக்குள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அச்சுறுத்தியுள்ளார். இவரது அச்சுறுத்தலால்…

  5. சிறீலங்கா தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவிருப்பதாக ஐக்கிய நாடுகளின் புதிய மனித உரிமைகள் ஆணையாளர் செயீட் ராட் செயிட் அல் ஹசேன் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையாளராக பொறுப்பேற்றதன் பின்னர் அவர் விடுத்துள்ள தமது முதலாவது அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் மனித உரிமை செயற்பட்டாளர்களுக்கு எதிராக நிலைமைகள் அதிகரித்துள்ளன. இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. சிறீலங்காவின் மறுசீரமைப்பு மற்றும் நீதியின் நலன் தொடர்பில் நடத்தப்படுகின்ற சர்வதேச விசாரணைகளுக்கு சிறீலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விசாரணை குறித்து வாய்மூல அறிக்கை ஒன்று நாளைய தினம் ஆரம்பமாகின்ற 27 வது…

  6. கணவன் இருக்கும் போதே வீட்டிற்குள் அத்துமீறி இராணுவம் நுழையும் இன்றைய நிலையில் கணவன் இல்லாத வீடுகளில் எவ்வாறு நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்? என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் வவுனியாவில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிந்தும் கடந்த 5 வருடங்களாக எமது உறவுகளைத் தேடிக்கொண்டு இருக்கின்றோம். நானும் இந்த வலியை உணர்ந்தவள் என்ற ரீதியில் இங்கு அனைவர் சார்பாகவும் பேசுகின்றேன். இவ்வாறு நாங்கள் பேசுவதனால் எங்களுக்கும் பல அச்சுறுத்தல்கள் உள்ளன. இருந்தாலும் தினமும் பயந்து முடங்க…

  7. சம்பந்தன், மனோ, அசாத் சாலி புதிய கூட்டணி! [sunday 2014-09-07 08:00] சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஆகியன இணைந்து கூட்டணி ஒன்றை ஏற்படுத்த தீர்மானித்துள்ளன. நாட்டில் இருக்கு வலுவான எதிர்க்கட்சி ஒன்றின் தேவையை பூர்த்தி செய்யவும் சிறுபான்மை இனங்களின் கோரிக்கையை வென்றெடுக்க வலுவான கூட்டணி ஒன்றின் தேவையை நிறைவேற்றும் வகையிலும் இந்த கூட்டணி ஏற்படுத்தப்படுவதாகவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். இந்த கூட்டணியில் சிறுபான்மை இன மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் பல கட்சிகள் இணைத்து கொள்ளப்பட உள்ளன. சிறுபான்மை கட…

  8. தேர்தல் வன்முறைகள் தொடர்ந்தும் இடம்பெற்றால் ஊவா மாகாண சபை தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்? 07 செப்டம்பர் 2014 தேர்தல் வன்முறைகள் தொடர்ந்தும் இடம்பெற்றால் ஊவா மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். முகமட் தெரிவித்துள்ளார். தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்குகின்ற போதிலும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன. ஊவாவில்தேர்தல் வன்முறைகள் மிகவேகமாக அதிகரித்துள்ளன, இதனால் அங்கு சுதந்திரமான நீதியான தேர்தலுக்கான வாய்ப்பில்லை, தேர்தலை நடத்தமுடியாது என்ற ஒரு நிலைமை வருமானால் தான் தேர்தலை ஒத்திவைப்பதற்கான நடவடிக்கைகையை எடுப்பேன் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எமக்கு தெரிவித்தார். தேர்தலை குறிப்பிட்ட தி…

  9. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுவது சட்டரீதியானதா? ஆராயப்பட உள்ளது:- 07செப்டம்பர் 2014 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுவது சட்டரீதியானதா என்பது குறித்து ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிபுணர் குழுவொன்றை நியமிக்கவுள்ளது. முன்னாள் பிரதம நீதயரசர் சரத் என் சில்வா கடந்த வாரம் ஜனாதிபதி மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட முடியாது என கருத்துவெளியிட்டுள்ளதை தொடர்ந்தே நிபுணர் குழுவொன்றை இது பற்றி ஆரயாய்வதற்காக நியமிக்க எண்ணியதாக சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுவது என்றால் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு ப…

  10. தியாக தீபம் திலீபனின் 27ஆவது நினைவு தினம் தமிழ் நாட்டிலும் , புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்களால் இன்று பெரும் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது . பாரதப் படைகளுக்கெதிராக நீராகாரம் கூட அருந்தாது 12 நாள்கள் உண்ணா நோன் பிருந்து தனது உயிரைத் தியாகம் செய்தார். தான் நேசித்த தமிழ் மக்கள் விடுதலை பெற்று நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்பதற்காகத் தன்னை வருத்தி இன்னுயிரைத் தியாகம் செய்த திலீபனின் நினைவோடு உலகளாவிய ரீதியில் அடையாள உண்ணாநோன்பு போராட்டம் நடைபெற உள்ளது . 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம் திகதி இந்திய அமைதிப் படையினரிடம் 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 12 நாள்கள் உண்ணா நோன்பிருந்த திலீபனின் கோரிக்கைகளைப் பாரததேசம…

  11. புலம் பெயர் தமிழ் மக்கள் ஆகிய நாம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின படுகொலைகளின் வலிகளை மறக்கவில்லை. மறக்கவும் மாட்டோம் .எமது தார்மீகக் கோபம் அணையாத நெருப்பாகவே இருந்து வருகிறது.ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்தும் ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் எமது சுதந்திர தாகத்துடன் தமிழீழ பாதையில் நீதி கோரி நீண்ட பயணம் செய்கின்றோம் . அவ் வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா சபையின் மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை இனவாத அரசுக்கு பல்வேறு பக்கங்கள் ஊடாகவும் பாரிய அழுத்தங்கள் எழும்புகின்றன.ஐநா மனிதவுரிமை அலுவலகம் விசாரணைக்குழுவின் ஊடாக தமிழின அழிப்புக்கு சாட்சிகள் சேகரிக்க ஆரம்பித்துள்ளது . இலங்கையின் வெளியுறவு தொடர்பு சொந்த நலன்களின் அடிப்படையில் தொடர்ந்தாலு…

  12. இலங்கையின் பயங்கரவாத தடுப்பு விசாரணை திணைக்களத்துக்கு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடம் இருந்து நேரடி பணிப்புரைகள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் வன்னியில் இறுதிப்போரின் போது மக்களுடன் இருந்து தமிழ் கத்தோலிக்க பாதிரிமாரை கண்காணிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. இவர்கள். ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு கண்கண்ட சாட்சிகளாக மாறக்கூடும் என்ற அடிப்படையிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே பாதிரியார் ஏ அன்டன் ஸ்டீபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள ஆயர் இல்லத்தில் வைத்து இறுதிப்போரின் முக்கிய சாட்சிகள் சர்வதேச விசாரணைகளுக்கு சாட்சியமளிக்கலாம் என்ற சந்தேகத்திலேயே அவர் விசாரிக்கப்பட்டுள…

  13. யாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைக் குழுவின் இரகசிய காரியாலயமொன்று இயங்கி வருவதாக சிங்கள ஊடகமொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைக் குழுவுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், வடக்கு மக்களின் சாட்சியங்களை திரட்டும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு இரகசிய காரியாலயமொன்று அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிகவும் இரகசியமான முறையில் இந்த இணைப்புக் காரியாலயம் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது…

  14. இன்று தி.வேல்முருகன் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள செக்கர்ஸ் ஓட்டலில் 130 தமிழ் அமைப்புகள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து அவசரக் கலந்தாய்வுக் கூட்டம் காலை 10 மணியில் இருந்து இரவு 7 மணி வரை நடை பெற்றது. இதில் தமிழீழப் பிரசனை மற்றும் தமிழக பிரசனை தொடர்பாக பேசப்பட்டது. இக் கலந்தாய்வுக் கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டம் மற்றும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. இதில் முதற் காட்ட போராட்டமாக ஒரு லட்சம் மக்கள் ஒன்றிணைந்து தியாகி லெப் கேணல் தீலிபன் அவர்களின் வீரசாவடைந்த நாளில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதே நாளில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அனைத்து நாடுகளிலும் அடையாள உண்ணா நோன்பு போராட்டம் ஏற்பாடு செய்கிறார்கள் அதற்கு இப் போராட்டம் வலுசேர்க்கும…

  15. வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர்களின் இருப்பபையே இல்லாதொழிக்கும் தனது அடக்குமுறை நடவடிக்கைகளை இலங்கை அரசு நிறுத்திக் கொள்வதற்கு காலக்கெடு விதிக்கவிருக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி. அடுத்த மூன்று மாதத்துக்குள் - அதாவது இந்த ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதிக்குள் - அடக்கு முறை நடவடிக்கைகளை நிறுத்தி, நிலைமையைச் சீர்செய்வதற்கு இலங்கை அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறுமானால் - அடக்குமுறை நடவடிக்கைகள் தொடருமானால் - தைத் திங்கள் முதலாம் திகதி தொடக்கம் தமிழர் தாயகம் எங்கும் அஹிம்சைப் போராட்டம் தொடர்ந்து கட்டவிழும். அந்தப் போராட்டத்துக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் முழு ஆதரவு தரவேண்டும். - இவ்வாறு அறிவிக்கவிருக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி. அக்கட்சியின் 15…

  16. மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு சென்றுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அகசி இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் வடமாகாண சபை செயற்படுவதற்கு அரசாங்கம் தடையாவுள்ளமை போன்ற பல்வேறு விடயங்கள் உரையாடப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். அதேவேளை வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜப்பான் நேரடியாக உதவியளிக்க வேண்டும் என கோரவுள்ளதாகவும் மகஜர் ஒன்று கையளிக்கப்படும் என்றும் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை யசூசி அகாசி யாழ்ப்பாணம் செல்வதற்கு கோரியபோதும் அரசாங்கம் அனுமதி வழங்…

  17. கூட்டமைப்பை பலப்படுத்துமாறு "மலேப்பாம்பு" வேண்டுகோள் - வடமாகாணத்தில் துண்டுப்பிரசுரங்கள்! [saturday 2014-09-06 19:00] கூட்டமைப்பை பலப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து, வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழரசுக்கட்சியின் 15வது மாநாடு வவுனியாவில் நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் ஒருவரால், தமிழரசுக்கட்சியை பலப்படுத்துவதை விடுத்து விட்டு, தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்துமாறு வலியுறுத்தி வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, பரந்தன், கிளிநொச்சி, வவுனியா நகரப்பகுதிகளில் இன்று (06.09.2014 அன்று) துண்டுப்பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன. தந்தை செல்வா …

    • 0 replies
    • 634 views
  18. -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிறுநீலா சேணை கிராமம் உட்பட அதனை அண்டிய கிராமங்களிலும் பாரிய வரட்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில், மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக நீலாசேணை விவசாய அமைப்பின் செயலாளர் ஆர்.கிங்ஸ்லி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக குடி நீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எமது கிராமங்களில், கிணறுகளிலுள்ள நீர் வற்றிவருகின்றது. மேலும் ஒரு சில கிணறுகளில் காணப்படுகின்ற நீர் உவர் நீராக காணப்படுகின்றது. நீர் தட்டுப்பாட்டினால் விவசாயம் மற்றும் வீட்டுத் தோட்டச் செய்கையும் பாதிப்ப…

  19. புதுடில்லியில் கடந்த மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்த சமயம், புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான செய்தி ஒன்றை இந்தியப் பிரதமர் கோடி காட்டியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தத் தகவலை நேற்று திங்கட்கிழமை 'மலரும்' இணையத்துக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது வெளியிட்டார். புதுடில்லி மற்றும் தமிழக விஜயங்களை முடித்துக் கொண்டு இரா.சம்பந்தன் எம்.பி. நேற்றுமுன்தினம் ஞாயிறு மாலை கொழும்பு திரும்பினார். அடுத்த நாள் திங்கட்கிழமை அவர் 'மலரும்' இணையத்தின் ஆசிரியரும் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளருமான என்.வித்தியாதரனுடன் தமது புதுடில்லிப் பேச்சுக்கள் குறித்து மனம் திறந்து உரையாடினார். புதுடில்லியில் பேச்சின் ம…

  20. மாவை சேனாதி ராஜா அவர்கள் தமிழரசு கட்சியின் தலைவராக நியமனம்.... நீண்ட நாட்களாக கட்சியினரதும் கட்சி தொண்டர்கலதும் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கு........ மாவை அவர்களை தலைமைப்பதவிக்கு கொண்டுவர வேண்டும் என்று பல விவாதங்களில் யாழ்களத்தின் ஊடாக சுண்டல் வலியுறுத்தியதும் நினைவிருக்கலாம்..... நியானி: தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.

  21. சர்வதேச விசாரணைக்கு சாட்சியமளியுங்கள்- அமெரிக்காவின் விருப்பம் இது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகல மக்களும் சர்வதேச விசாரணைக்குழுவிடம் தமது சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கு முன்வரவேண்டும் என அமெரிக்காவின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் அன்று மான் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.நகரிலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று காலை வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலரை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இக்கோரிக்கையினை விடுத்துள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உதயன் ஒன்லையினிடம் தெரிவித்தார். இச்சந்திப்பு தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கின் தற்போது நிலை தொடர்பாக அவரிடம் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது. குறிப்பாக வடக்கு கிழக்கில் தொடரும் இரா…

  22. ஜப்பானிய பிரதமரின் இலங்கை விஜயம் மிகவும் முக்கியமானது – ஜனாதிபதி:- ஜப்பானிய பிரதமர் ஸின்சோ அபேயின் இலங்கை விஜயம் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூசி அக்காசியை அலரி மாளிகையில் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 24 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக ஜப்பானிய பிரதமர் ஒருவர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து ஜனாதிபதிக்கும் அக்காசிக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் நிலக்கண்…

  23. வடக்கில் இராணுவத்தின் உள்ளீடல்கள் சூட்சுமமான முறையில் அதிகரித்துள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்:- இராணுவம் வெளிப்படையாக வடக்கில் இராணுவத்தின் உள்ளீடல்கள் சூட்சுமமான முறையில் அதிகரித்துள்ளது. இயங்குவதை குறைத்துக் கொண்டு, புலனாய்வு ரீதியில் அங்களுடைய ஆதிக்கத்தினை பரவலாக நிலைநாட்டுகின்றார்கள் என்று யாழ்.வருகைதந்த ஜேர்மனிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜஸ்ரின் மொகாடிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டிக்காட்டியுள்ளார். வடமாகாண சபையினை கொண்டு நடத்த முடியாமல் அரசாங்கத்தினால் திட்டமிட்டு போடப்படும் முட்டுக்கட்டைகளை இனியும் எங்களால் பொறுமையாக பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. வடபுலத்தில் அரசாங்கத்தினால் நடைபெறும் விடையங்கள், மற்றும் அரசாங்கத்தினால் போட…

  24. வட மாகாணசபைக்கே அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மாகாணசபைகளில் வட மாகாணசபைக்கே அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒப்பீட்டளவில் ஏனைய மாகாண சபைகளுக்கு குறைந்தளவு நிதியே ஒதுக்கீடுசெய்யப்பட்;டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வட மாகாணசபையின் நடவடிக்கைகளுக்கு ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபை சட்டத்தின் கீழ் முதலமைச்சருக்கு தனியாக நிதியம் ஒன்றை ஆரம்பிக்க முடியாது எனவும், இது சட்டவிரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial…

  25. காரைதீவு பிரதான முச்சந்தியிலுள்ள விபுலானந்த சதுக்கத்தின் அருகாமையிலுள்ள அரசடிச்சந்திக்காணியில் சாய்ந்தமருது முஸ்லிம்கள் கருங்கற்களைக் குவித்ததையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் பதட்டம் நிலவியது. பள்ளிவாசல்காணிக்கு எல்லைபோடுவதற்காக கற்களைக்கொட்டியதாக அவர்கள் தெரிவித்தபோதிலும் அதற்கான ஆதாரம் எதுவுமில்லை இவ்விடத்தில் எதுவும் கட்டமுடியாது என தமிழர் தரப்பினரும் ஏட்டிக்குப்போட்டியாக நின்றதால் பதட்டம் நிலவியது.சம்மாந்துறைப்பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து அமைதிகாத்தனர். பின்பு காரைதீவு பிரதேசசெயலகத்தில் சமரசக்கூட்டம் இடம்பெற்றது. http://virakesari.lk/articles/2014/09/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.