Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 16 AUG, 2024 | 11:26 AM (இராஜதுரை ஹஷான்) பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இயலுமை காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கி, தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு அமைய ஊழியர் படையின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு முதலிரு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சாதகமான நிலையில் உள்ளதாகவும் 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டு வரை முதன்மை பணவீக்கம் குறைவானதாக பேணப்படும் என்றும் இலங்கை…

  2. Published By: VISHNU 16 AUG, 2024 | 12:15 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் தேசிய உற்பத்தி ஆகியவற்றை எம்மால் மாத்திரமே பாதுகாக்க முடியும். தேர்தலில் நிச்சயம் வெற்றிப் பெறுவோம். கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்படுவதால் எவரும் எமக்கு சவாலல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் வியாழக்கிழமை (15) வேட்புமனுவை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது. நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் தேசிய உற்பத்திகளை எம்மால் மாத்…

  3. தோ்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை – அமைச்சர் கீதா வருத்தம்! ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பெண்களின் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் கூட பெண்களுக்கு உரிய இடமும் சமமான இடமும் வழங்கப்பட வேண்டும் என கட்சித் தலைவர்கள் பெருமையுடன் கூறினாலும் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாட்டில் பெண் உரிமைகள் தொடர்…

  4. தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்கவில்லை – விக்கினேஸ்வரன் கவலை! தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் பா.அரியேத்திரனுக்கு அனைத்து தமிழர்களும் வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்காமல் இருப்பது கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற வேட்புமனு கையளிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ள…

  5. Published By: Vishnu 15 Aug, 2024 | 07:13 PM ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி 14ஆம் திகதி புதன்கிழமையும் யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. புதன்கிழமை (14) பிற்பகல் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இந்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யா…

  6. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமிழ் மக்கள் கூட்டணியினுடைய தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆதரவு தெரிவித்துள்ளார். எனினும் ரணிலை நாம் நிராகரித்தோம் என ரெலோ, புளொட் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவை தெரிவித்துள்ளன. முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்த கட்சிகள் மேலும் தெரிவித்தாவது, “ரணிலுக்கு தமிழ் மக்கள் கூட்டணியினுடைய தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆதரவு தெரிவித்துள்ளதன் அடிப்படையில் பொது ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு நீங்களும் இணங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் எம்மிடம் கோரிக்கை விடுத்தார். நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனின் கட்சி ஒரு தனிக்கட்சி. அவர் யாரை ஆதரிப்பது என்பது அவருடைய த…

  7. 15 AUG, 2024 | 02:35 PM யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோவிலை அண்மித்து அமைந்துள்ள மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நடத்தப்பட்டது. வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள், யாழ். மாநகர சபை ஆணையாளர், உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மடம் அறக்கட்டளையின் பொறுப்பாளர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண இராசதானி காலத்துக்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. எனினும…

  8. யாழில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம். இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது. இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து இந்திய ஐனாதிபதியின் உரையை துணைத்தூதுவர் சாய் முரளி வாசித்தார். இந் நிகழ்வில் துணைத்தூதரக அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395807

  9. சூடு பிடித்துள்ள தேர்தல் களம்! 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் முற்பகல் 11 மணியுடன் நிறைவிற்கு வந்துள்ளது. இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.00 மணிக்கு வேட்பு மனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பமானது இதன்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குறிக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது பாதுகாப்பு கடமைகளில் அதிகளவான பொலிஸார் ஈடுப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. மேலும், வேட்புமனு தாக்கல் தொடர்பாக ஆட்சேபனைகளை தெரிவிக்க காலை 9…

  10. மியன்மாரில் 20 இலங்கையர்கள் மீட்பு! மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சுமார் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் 8 பேர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டதுடன் மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் மேலும் 28 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1395736

  11. பொது வேட்பாளரை ஒருவரை முன்னிறுத்தியிருக்கும் நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 13வது திருத்தச் சட்டம் பற்றி பேச்சு நடத்தியிருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், பொதுவேட்பாளர் என்பது என்னைப் பொறுத்தவரை திட்டமிட்ட நாடகம். பொதுவேட்பாளர்களை முன்னிறுத்திய சிவில் அமைப்புக்களும், கட்சி சார்ந்தவர்களும் கடந்த 15 வருடங்களாக ஓற்றையாட்சிக்குள் 13ம் திருத்தச் சட்டத்தை திணிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு முழுமையாக உறுதுணையாக செயற்பட்டவர்கள். குறிப்பாக விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன்,…

  12. வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு சுயநிர்ணய உரிமைக்கான உரிமையுள்ளது - இந்த விடயத்தில் ஏனைய கட்சிகளை போல ஐக்கிய சோசலிச கட்சி தடுமாறவில்லை - சிறிதுங்க Published By: RAJEEBAN 15 AUG, 2024 | 11:34 AM வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் சமூகத்தினருக்கு சுயநிர்ணய உரிமைக்கான உரிமையுள்ளது என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என தெரிவித்துள்ள ஐக்கிய சோசலிச கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சிறிதுங்க ஜெயசூரிய இந்த விடயத்தில் கட்சி ஒருபோதும் ஏனைய கட்சிகளை போல தடுமாறியதில்லை என தெரிவித்துள்ளார். தேர்தல்களின் போது சிறுபான்மை இனத்தவர்களிடமிருந்து வாக்குகளை பெறுவதற்காக கருவியாக 13 வது திருத்தம் பயன்படுத்தப்படுகின்றது. பார்வைய…

  13. ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி ஷான் ரணசூரிய உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பை ஜனாதிபதி வேண்டுமென்றே மீறியுள்ளமையினால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என குறிப்பிட்டுள்ள மனுதாரர், எனவே இடைகால தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/307921

  14. Published By: Vishnu 14 Aug, 2024 | 06:13 PM (நா.தனுஜா) இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது எனத் தீர்மானிப்பதற்கு முன்னர், அதிகாரப்பகிர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் அதற்கு அப்பால் செல்வது குறித்து சகல வேட்பாளர்களுடனும் பேரம் பேசுவது சிறந்த அணுகுமுறை எனவும், இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே அவற்றைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்…

  15. 14 Aug, 2024 | 05:41 PM தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான எண்ணத்தை மாற்றி தோல்வி அடைந்த ரணில் விக்ரம் சிங்கவை வெல்ல வைக்கும் முயற்சியாக அமைவதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டினார். இன்று புதன்கிழமை (14) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் தமிழ் மக்களின் எதிர்பார்த்த கோரிக்கை அவர் ஊடாக பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. இந்…

    • 2 replies
    • 240 views
  16. ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 13 ஆகஸ்ட் 2024 இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தமிழர்கள் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை பொது வேட்பாளராக அறிவித்துள்ளன. ஆனால், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி, அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் யாரை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்? வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்…

  17. 11 AUG, 2024 | 09:59 AM ஆர்.ராம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11) வவுனியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் முதலாவது விடயமாக தமிழ் பொதுவேட்பாளராக பெயரிடப்பட்டுள்ள அரியநேத்திரனின் விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அவர் மீது நடவடிக்கைகளை எடுப்பதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. எவ்வாறாயினும், அரியநேத்திரனும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, தான் தமிழ் அரசுக் கட்…

  18. மீண்டும் இவ்வருடம் பிரம்மாண்டமாகவும் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடனும் யாழ் ஐடி ஹப்(Yarl IT Hub) இன் YGC புத்தாக்க திருவிழாவாக நடைபெற உள்ளது ! ஆகஸ்ட் மாதம் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் முயற்சியாண்மை என அனைத்தும் ஒரே இடத்தில் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டம் - YGC புத்தாக்க திருவிழா. YGC புத்தாக்க திருவிழாவில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் Pitching போட்டி, ரோபோட்டிக் போட்டி (Robotic Competition), வலையமைப்பு நிகழ்வுகள் (networking events), மாஸ்டர் கிளாஸ்கள் (master classes), கண்காட்சிகள் (mini expo), சந்திப்புகள் (ecosystem meetups), …

  19. நாகப்பட்டினம்: வேதாரண்யம் மீனவர்கள் நால்வரை இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் கடுமையாகத் தாக்கி விரட்டி அடித்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராசப்பன் மகன் சந்திரகாசன் (70) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறுகாட்டுத் துறையில் இருந்து புஷ்பவனத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (70), ராஜேஷ் (26), பன்னீர்செல்வம் (50), வேல்முருகன் (36) ஆகிய நான்கு மீனவர்களும் நேற்று (ஆக.13) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு கிழக்கே 15 கடல்மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இரவு 10.30 மணியளவில் இரண்டு படகுகளில் அங்குவந்த இலங்க…

  20. யானை, கை போன்று தமிழ்க்கட்சிகளின் சின்னங்களும் காணாமற்போகும் நிலைவரும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு எச்சரிக்கை தென்னிலங்கையின் பழம்பெரும் அரசியல் கட்சிகள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் காணாமற்போனது போல, தமிழர் பரப்பிலும் கட்சிகளின் சின்னங்கள் காணாமற்போகும் நிலைவரும். ஆதலால், தூயதமிழ்த் தேசியவாதிகளும், இளையோரும் புதிய அரசியல் கூட்டமைப்பாக உருவெடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் உள்ளதாவது: தென்னிலங்கையின் பழம்பெரும் கட்சிகளின் சின்னங்களான யானையும், கையும் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் காணாமற்போயுள்ளன. அதுபோன்று தமிழர் பரப்பிலும் சின்…

  21. ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தயோகபூர்வ இல்லத்தில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த அறிவிப்பினை ஊடகங்கள் முன்பாக வெளியிட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பசில் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை தனிப்பட்ட காரணங்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக…

  22. 14 Aug, 2024 | 10:47 AM ராஜபக்ச பரம்பரையின் அடுத்த முடிக்குரிய வாரிசு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வித்தியாசமான சவால் ஒன்றை எதிர்கொள்கின்றார். நாமல் ராஜபக்ச வாக்குசீட்டில் இன்னொருமொரு நாமல் ராஜபக்சவை எதிர்கொள்கின்றார். செவ்வாய்கிழமை மாலை வரை 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம்செலுத்தியுள்ள நிலையில் இலங்கையின் வாக்காளர்கள் முன்னொருபோதும் இல்லாத நீளமான வாக்குசீட்டினை எதிர்கொள்கின்றனர். இந்த வாக்குசீட்டில் இரண்டு நாமல்கள் காணப்படுவது வாக்குசீட்டினை குழப்பம் மிகுந்ததாக மாற்றியுள்ளது.ஆகக்குறைந்தது நாமல் ராஜபக்ச விசுவாசிகளுக்காவது. ஒரே பெயருடைய வேட்பாளர்களை நிறுத்துவது என்பது கடந்தகாலங்களில் ராஜபக்சாக்கள் பயன்படு…

  23. (எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தமது அரசாங்கம் ஆட்சியமைத்தால் கிழக்கிற்கு மத ரீதியான ஆளுநர் ஒருவரைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்த அரசாங்கம் எவ்வாறானதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாமும் ஜனாதிபதியும் 100 நாள் வேலைத்திட்டத்துக்கமைய செயற்பட்டு வருகின்றோம். எனவே புதிதாக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு ஒன்றும் இல்லை. 18ஆம் திகதி கொட்டகலையில் எமது தேசிய சபை கூடி ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதைத் தீர்மானிக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அதற்கமைய அட…

  24. Published By: DIGITAL DESK 3 14 AUG, 2024 | 02:02 PM யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 03 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) இரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதை அடுத்து, கடற்கரையில் இருந்த மீன் வாடி மற்றும் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அதில் வாடிகள் சில எரிந்த நிலையில், மூன்று படகுகள் தீக்கிரையாகியுள்ளன. படகுகள் மற்றும் வாடிகளுக்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து, ஊரவர்கள் ஒன்று கூடி, தீயினை அனைத்ததுடன், சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவித்தனர். மோதலில் ஈடுபட்ட இர…

  25. Published By: DIGITAL DESK 3 14 AUG, 2024 | 03:00 PM இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள் நிறைவடைவது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆகஸ்ட் 16ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. இதேவேளை, மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/191090

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.