Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். மாவட்டத்தின் வெங்காய அறுவடை தற்சமயம் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதால் நாட்டின் பல பாகங்களிலும் சின்னவெங்காயம் தாராளமாகவும் சாதாரண விலையிலும் கிடைக்கத் தொடங்கியுள்ளது. கோப்பாய், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு, இளவாலை போன்ற யாழ். மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வெங்காய அறுவடை இடம்பெற்றுள்ளது. யாழ். மாவட்டத்தில் இம்முறை 440 ஹெக்டேயரில் வெங்காய அறுவடை இடம்பெற்றுள்ளதாக விவசாயத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அறுவடை செய்யப்பட்ட யாழ்.வெங்காயம் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கும் கொண்டுவரப்பட்டு நாட்டின் பல பாகங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுவருகின்றன. தனிமவுசு கொண்ட மக்களால் பெரிதும் விருப்பப்படும் யாழ். வெங்காயம் தற்சமயம் நியாய நிலையிலும் தாராளமாகவும் விற…

  2. மன்னார் பிரதேசத்தில் சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் எனக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, நடத்தப்பட்ட விசாரணைகளில் இராணுவ சிப்பாய் ஒருவர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் எனத் தகவல் கிடைத்திருப்பதாக பொலிஸ்பேச்சாளர் அஜித் ரோகண பி.பி.சி. தமிழோசைக்குத் தெரிவித்தார் இந்தச் சம்பவம் இம்மாதத்தின் முற்பகுதியில் நடைபெற்றது என்றும், நான்கு நாள்களுக்கு பிறகே இதுபற்றி தங்களிடம் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். பதினான்கு வயதுடைய பாதிக்கப்பட்ட சிறுமி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என மருத்துவ பரிசோதனை நடத்திய சட்டவைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் பொலிஸார் கூறுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சாட்சிய…

  3. ஐ.நா குழு முன் சாட்சியமளிக்க முன்வரவேண்டும்! - கஜேந்திரகுமார் அழைப்பு [Tuesday 2014-08-19 18:00] ஐ.நா மனித உரிமை விசாரணைக்குழுவின் போர்க்குற்ற விசாரணைக்கு மக்கள் முன்வந்து சாட்சியங்களை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சாட்சியங்களை அளிக்க முன் வருவோர் ஸ்கைப் ஊடாக வழங்க முடியும். இதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். தமிழ் மக்களுடைய முழு ஒத்துழைப்பையும் தாம் எதிர்பார்ப்பதாகவும் விசாரணைக்கு ஒவ்வொருவரும் தமது சாட்சியங்களை வழங்குவதன் …

  4. குளோபல் தமிழ் விடேச செய்தியாளர் வழங்கும் அதிர்ச்சி ரிப்போர்ட் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து இராணுவத்திடம் சரணடைந்து இலங்கை அரசின் தடுப்பு முகாங்களில் வருடக் கணக்கில் புனர்வு அளிக்கப்பட்டு அதற்கான சான்றுகளுடன் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை இலங்கை அரச படைகள் தொடர்ந்தும் தொந்தரவு கொடுத்துவருகின்றன. விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளது வீடுகளுக்கு இராணுவத்தினர் அடிக்கடி செல்வதுடன் அவர்களை அங்கு விசாரணை செய்வதுடன் தமது முகாமிற்கும் அழைத்துச் செல்லுகின்றனர். இந்த நடவடிக்கைகளால் தமது மனநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி கனகபுரத்தை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் போராளி ஒருவர் கூறுகின்றார். இதேவேளை விடுதலைப் புலிகள் இயக்கத்தி…

    • 3 replies
    • 574 views
  5. தலைமன்னார் கடற்கரையில் ஆறு கோடி ரூபா பெறுமதியான 12 கிலோ தங்கக் கட்டிகள்! - பொலிசாரிடம் சிக்கின. [Tuesday 2014-08-19 18:00] தமிழகத்துக்குக் கடத்தப்படவிருந்த ஆறு கோடி ரூபா பெறுமதியான - சுமார் 12 கிலா எடையுள்ள தங்க கட்டிகளை தலைமன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தங்கத்தைக் கடத்த முற்பட்டதான சந்தேகத்தின் போரில் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்கு தலைமன்னார் கிராமத்தில் கஞ்சா கடத்தப்படவுள்ளதாகக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய நேற்றிரவு பொலிஸ் குழுவொன்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில் தலைமன்னார் கிராமத்தின் கடற்கரை பகுதிக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமா…

  6. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் போன்ற சண்டியர்கள் பதுங்கியிருந்தார்களா என பொதுமக்கள் அமைச்சர் மேர்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். படையினர் யுத்தம் செய்த காலத்தில் கலபொடத்தே ஞானசார தேரர் பற்றி கேள்விபட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னரே அனைத்து சண்டியர்களும் வெளியே இறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பணம் சம்பாதிக்கவும், அதிகாரத்தை பெருக்கிக் கொள்ளவுமே சிலர் காவி உடை அணிந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். காவி உடை மற்றும் பௌத்த மதம் போன்றவற்றைப் பயன்படுத்தி இயக்கங்களை உருவாக்காது வேறும் எவ்வாறான பெயர்களைப் பயன்படுத்திக்கொண்டாலும் பரவாயில்லை என அவர் …

  7. இனந்தெரியாத கும்பலினால் தாக்கப்பட்ட பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் சாந்திகுமார் சுதர்சனை அவரது குடும்பத்தினர் சந்திப்பதற்கோ, சட்ட உதவிகளை பெறுவதற்கோ அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. “அவர் எவ்வாறான நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து எங்களுக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை, எங்களது சட்டத்தரணிகள் அவரை சந்திக்கவுமில்லை, எந்த வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்” என பல்கலைக்கழக மாணவர் சம்மேளன ஏற்பாட்டாளர் நஜித் இன்டிகா தெரிவித்துள்ளார். சுதர்சனின் குடும்பத்தவர்களின் தொலைபேசி அழைப்புகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கண்காணிப்பதாக நாங்கள் அறிந்துள்ளோம் இதனால் …

  8. பெற்றோருக்கு ஆலோசனை - மகிந்த சகோதர ஆட்சிக் கொடூரங்களின் உச்சம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவரது தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஜந்தாவது நாளாக நீடிக்கின்ற நிலையில் அவர்கள் உடல் சோர்விற்கு உள்ளாகியுள்ளனர். திட்டமிட்ட வகையில் சிங்கள கைதிகளுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஜெயராஜ் அன்ரன் சாம்சன், ராகவன் சுரேஸ் மற்றும் கோபாலகிருஸ்ணன் கோபி ஆகிய மூன்று அரசியல் கைதிகளே உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். தம்மை தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவிற்கு மாற்றக் கோரியே அவர் இப்போராட்டத்தினில் குதித்துள்ளனர். தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிங்கள தண்டனை கைதிகள் பகுதியில் தொடர்ச்சியான சித்திரவதைகள…

  9. சீனாவுடன் சிறிலங்கா கட்டியெழுப்பும், நெருக்கமான உறவைக் கண்காணிப்பதற்காகவே, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு, கேணல் குரிந்தர் எஸ் கிளேயர் என்ற இந்திய இராணுவ அதிகாரி, பிரதி பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் முதல்முறையாக பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் அண்மையில் நியமிக்கப்பட்டதற்கான பதில் நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது. இந்த நியமனத்தை, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர், கப்டன் பிரகாஸ் கோபாலன், உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பு அலகு விரிவாக்கப்பட்டதற்கான காரணம் குறித்து வினவப்பட்டதற்கு, இதுகுறித்து கருத்து வெள…

  10. புலிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கி ஓடியவர் தான் சரத் பொன்சேகா! - போட்டு உடைக்கிறார் எஸ்.பி.திஸாநாயக்க. [Tuesday 2014-08-19 09:00] விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பின்வாங்கியிருந்தார் என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர், விடுதலைப் புலிகளுடனான 30 ஆண்டு கால போரினால் பாரியளவு அழிவுகள் ஏற்பட்டன. புலிகளிடமிருந்து நாட்டை மீட்டு எடுப்பதற்கு ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதி முயற்சித்தார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சித்தார்.ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவும் முயற்சி எடுத…

  11. சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் சந்திரகுமார் சுதர்சனை பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் விடுதலை செய்யாவிட்டால், அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோம் என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஊடகவிலாளர் சந்திப்பு நேற்று மருதானை சி.எஸ்.ஆர். மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு, சங்கத்தின் ஏற்பாட்டாளரான நஜித் இந்திக்க கருத்து வெளியிடுகையில், கடந்த 9 ஆம் திகதி சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் வைத்து தாக்கப்பட்ட சுதர்சன் என்ற மாணவன், தன்னைத் தானேத் தாக்கிக் கொண்டதாகக் கூறி பயங்கரவாத தடுப்புப் பொலிஸார் அம்மாணவனைக் கைது செய்தது. இந்தச் சம்பவத்திற்கான வ…

  12. புலிகளை ஒடுக்க மலேசியா உதவி – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- வெளிநாடுகளில் இலங்கையர்களுக்கு அடைக்கலம் வழங்கும்போது அவதானமாக இருக்குமாறு ஐ.நா அமைப்புகளை இலங்கை அரசாங்கம் எச்சரித்துள்ளது. ஜனீவாவிற்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் விடுதலைப்புலி சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மலேசியா உதவியுள்ளதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்ட சிலர் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலமாக அவர்களுக்கு ஐ.நா அடைக்கலம் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் கட்டமைப்புகள் தொடர்ந்தும் வெளிநாடுகளில் இயங்க…

  13. -நவரத்தினம் கபில்நாத் முல்லைத்தீவு, வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதி வீட்டுக் காணியொன்றில் நேற்று திங்கட்கிழமை (18), மர்மப்பொருளொன்று வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது வீட்டை துப்பரவு செய்து விட்டு அக்குப்பைகளுக்கு தீயிட்டபோதே இந்த மர்மப் பொருள் வெடித்துள்ளது. சம்பவத்தில் வேலு செந்தில்நாதன் என்ற குடும்பஸ்தரே காயமடைந்துள்ளார். உடலில் பல இடங்களிலும் காயமடைந்துள்ள இவர் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த வவுனியா பொலிஸார், இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். http://tamil.dailymirr…

  14. -எம்.எஸ்.எம்.நூர்தீன் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால், காத்தான்குடியில் 'இன நல்லிணக்க குழு'வொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கீழ் செயற்படும் வகையில் இந்த இன நல்லிணக்க குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஸ்ஸெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் நழீமி தெரிவித்தார். இந்த இன நல்லிணக்க குழுவின் தலைவராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் நியமிக்கப்பட்டுள்ளார். 15 பேரைக் கொண்ட இந்த நல்லிணக்க குழு, மட்டக்களப்பு மாவட்டத்திலும் காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்துள்ள பிரதேசங்களின் இன நல்லிணக்கத்தையும் இன ஐக்கியத்தைய…

  15. தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கத்தி மற்றும் புலிப்பார்வை ஆகிய இரு தமிழ் திரைப்படங்களையும் வெளியிடக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுவான்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.ரமேஷ் இம்மானுவேல் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'எதிர்வரும் தீபாவளி தினத்தில் கத்தி மற்றும் புலிப்பார்வை ஆகிய இரு திரைப்படங்கள் வெளியிடப்பட உள்ளன. இந்த திரைப்படங்கள் தமிழ்க் கலாசாரம், இலங்கைப் போர் தொடர்பான தமிழர் உணர்வுகளை மோசமாக சித்தரித்துக் காட்டியிருப்பதாக தெரியவந்துள்ளது. கத்தி திரைப்படத்தை தயாரித்துள்ள ஐங்கரன் இன்டர்நெஷனல் நிறுவனத்துக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மறைமுகமாக நிதியுதவ…

  16. ஐ.நா விசாரணையாளர்களை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தி சேவைகளின் ஊடகவியலாளர்களை அலரிமாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/122918-2014-08-19-07-30-07.html

  17. -எம்.எம்.அனாம் வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து ஆழ்கடலுக்கு ஞாயிற்றுக்கிழமை (17) மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு இன்று திங்கட்கிழமை (18) 950 கிலோ கிராம் எடையுள்ள கொடிச்சுறா ஒன்று பிடிபட்டுள்ளது. வாழைச்சேனையைச் சேர்ந்த என்.எம்.சம்சுதீன் என்பவரின் படகில் சென்ற மீனவர்களே இம்மீனை ஆழ்கடலில் இருந்து கரைக்கு கட்டி இழுத்து வந்துள்ளனர். இந்த மீன் கருவாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய மீன் என்றும் படகு உரிமையாளர் என்.எம்.சம்சுதீன் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/--main/122824-2014-08-18-14-32-59.html

  18. இலங்கை வருவதற்கு ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவுக்கு விஸா வழங்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை காலை அலரி மாளிகையில் வெளிநாட்டு ஊடகவியலாளர் குழு ஒன்றைச் சந்தித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- நாங்கள் அவர்களை நாட்டிற்குள் அனுமதிக்கப் போவதில்லை. நவநீதம்பிள்ளை பக்கச்சார்பாகச் செயற்படுகிறார். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகிறது என்றே தெரிகிறது. எப்படியிருப்பினும் இலங்கைக்குள் வந்து அவர்கள் விசாரணை நடத்துவதற்கான விஸா அனுமதியை நாம் வழங்கப்போவதில்லை. என்றும் தெரிவித்தார். அத்துடன் - பொலிஸ் அதிகாரங்களை எந்த சூழ்நிலையிலும் மாகாணங்க…

  19. யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி கலாசாரம் போய் தற்போது கத்திக் கலாசாரம் மேலோங்கி விட்டதாக யாழ். அமெரிக்க மிசன் தலைவர் அருட்பணி ஈரோக் புனிதராஜ் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற சர்வமத சகவாழ்வுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், யாழ்.மாவட்டத்தில் அதிகம் மது விற்பனையாவதால் அனைவரும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இளைஞர்களுக்கு வன்முறை தூண்டப்பட்டு வருகின்றது. இதனால் துப்பாக்கி கலாசாரம் போய் கத்தி கலாசாரம் வந்துவிட்டது.ஆகவே புத்தியை பாவிப்பதற்கு பதிலாக இளைஞர்கள் கத்தியை பாவிக்கின்றனர் எனவே இந்த நாட்டின் அவலத்தை மாற்றியமைக்க வேண்டியது மதத்தலைவர்களுக்கான முக்கிய கடமை என அவர் தெரிவித்தார். http://online…

  20. இலங்கையின் பல பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளை கவரும் இடங்கள் இருக்கின்றன. இவற்றில் தமிழர் வரலாற்றுடனும் அவர்களின் கலாசாரத்துடனும் இணைந்த சுற்றுலா மையமாக விளங்கும் ஓர் இடமே கன்னியா வெந்நீரூற்று. இது திருகோணமலை மாவட்டத்தின் கன்னியா கிராம அலுவலர் பிரிவில் உள்ளது. புராதன மன்னராட்சிக் காலத்துக்குரிய இந்த புனித இடம் தமிழ் மக்களின் சமூக, சமய நம்பிக்கைகளுடனும் அனுட்டானங்களுடனும் நெருங்கிய தொடர்பை கொண்டது என வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இன்று அதன் நிலை...? சிவபெருமானின் தெற்கு உறைவிடமான திருகோணமலை கோணேஸ்வரர் கோயிலுக்கு சிவபக்தனாகிய பத்துத் தலை இராவணன் சென்றான். அங்குள்ள லிங்கத்தில் மனதைப் பறிகொடுத்த அவன் அந்த லிங்கத்தை அப்பாறையிலிருந்து வெட்டி எடுத்து தனது தாயாரி…

  21. வவுனியாவில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றின் சாரதி தொடர்ச்சியாக தொலைபேசியில் உரையாடியவாறு நீண்டதூரம் பஸ்ஸைச் செலுத்தினார் என்று அதில் பயணித்தவர்கள் தெரிவித்தனர். "தாம் அவரை தொலைபேசியில் உரையாடியவாறு வாகனத்தைச் செலுத்தவேண்டாம் என்று கேட்டபோதும் குறித்த சாரதி எமது கோரிக்கையை செவிமடுக்கவில்லை" என்றும் பயணிகள் விசனம் தெரிவித்தனர். "நாம் இவ்வாறு தான் செல்வோம், கஷ்டம் என்றால் வேறு பஸ்ஸில் செல்லுங்கள்" என்று கூறிய சாரதி சிலரை பஸ்ஸிலிருந்து இறக்கியும் விட்டார் என்று அவர்கள் குற்றம்சாட்டினர் http://malarum.com/article/tam/2014/08/19/4682/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0…

  22. இலங்கை அரசினது அழைப்பின் பேரினில் இராணுவ கருத்தரங்கில் கலந்து கொள்ள வருகை தரும் சுப்பிரமணியம் சுவாமி தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது. அவரதும் குழுவினரதும் யாழ்.விஜயத்தின் போது பயணம் செய்யவுள்ள இடங்கள் மற்றும் சந்திக்கவுள்ள பிரமுகர்கள் பெயர் விபரங்கள் பட்டியல்படுத்தப்பட்டு முன்னேற்பாட்டு நடவடிக்கைகளினை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டுவருகின்றது. அவரது யாழ்ப்பாணத்திற்கான பயண நாட்கள் பற்றிய தகவல்கள் ஏதும் இன்னமும் வெளியாகவில்லையாயினும் 21ஆம் திகதிக்கு பின்னதாக அது இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பயணத…

  23. 'சரசர... சரசர... என ஏதோ சத்தம் கேட்டது. அறையில் குளிரூட்டியும் உச்ச நிலையில் செயற்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் அந்த 'சர...சர...' சத்தத்தை தெளிவாக கேட்க முடிந்தது. வெளியில் மழை பெய்கிறதோ என எண்ணி நான் குளிரூட்டியின் செயற்பாட்டு வேகத்தை குறைத்து விட்டு கட்டிலில் மறுபுறம் புரண்டு படுக்க முற்பட்டேன். அப்போது மெதுவாக திறக்கப்பட்ட எனது அறை கதவின் ஊடாக 'டோர்ச்' ஒன்றினால் ஒளிபாய்ச்சப்பட்டது. யாரோ ஒருவன் எமது அறையின் வெளிப்பக்கமாக இருந்து ஒளிபாய்ச்சுவதை மிகத் தெளிவாக அவதானிக்க முடிந்தது. உடனே நான் கூச்சலிட ஆரம்பித்தேன். திருடன்... திருடன்... என நான் போட்ட கூச்சலில் அருகில் படுத்திருந்த கணவரும் பிள்ளையும் திடுக்கிட்டு எழ கொள்ளைக்காக வந்திருந்தவன் ஜன்னல் கதவை திறந்துகொண்டு மின்னலா…

  24. -எஸ். பாக்கியநாதன் மட்டக்களப்பு நகரில் நீண்ட காலமாக மக்களின் பாவனைக்கு இல்லாமல் இருந்த வாவியை அண்டிய யாட் வீதிப் பிரதேசத்தை, நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் பொழுது போக்கும் இடமாக மாற்றும் நிர்மாணப் பணிகள் முடிவுறும் நிலைக்கு வந்துள்ளன. பொருளாதார அபிவிருத்தியமைச்சின் வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் கீழ் 4 மில்லியன் ரூபாய் செலவில், மக்களின் வேண்டுகோளுக்;கிணங்க அரச அதிபர் பி.எஸ். ஏம். சாள்ஸ்சின் முன்மொழிவினால் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தெரிவித்தார். வாவிக்கரையை அண்டிய இப்பிரதேசத்தில் இருக்கைகளுடன் கூடிய 3 பொழுது போக்கு கூடாரங்களுடன் பச்சைப் புல் தரையுடன் கூடிய தோட்டங்களும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக திட்டமி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.