ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
சப்பிரகமுவ பல்கலைக்கழக மாணவனின் பரிதாப நிலை:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காணமடைந்த சப்பிரகமுவ பல்கலைக்கழக மாணவனிடம் அந்த காயங்களை அவர் சுயமாகவே ஏற்படுத்திக் கொண்டதாக மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினர் மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாணவன் தாக்கப்பட்டதாலேயே காயம் ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சி இடமபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNE…
-
- 0 replies
- 250 views
-
-
பொலிஸ், இராணுவம், புலனாய்வுத் துறையினரின் நெருக்குதல்களை தாங்ங முடியவில்லை சத்தியசங்கர் சாந்தன்:- புனர்வாழ்வு பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டு, சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒருவர் தனக்கு தொடர்ச்சியாகத் தொல்லை ஏற்படுத்தப்பட்டு வருவதுடன் உயிரச்சுறுத்தல் விடுக்கப்;பட்டிருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் முறையிட்டுள்ளார். வவுனியா ஒமந்தை, கள்ளிக்குளத்தைச் சேர்ந்த சத்தியசங்கர் சாந்தன் என்பவரே இவ்வாறு முறையிட்டுள்ளார். அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது: கள்ளிக்குளம் சிதம்பரத்தில் வசிக்கும் சத்தியசங்கர் சாந்தன் ஆகிய நான் இத்தால் தங்களுக்குத் தெரியப்படுத்துவது யாதெனில், நான் விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுத…
-
- 0 replies
- 400 views
-
-
சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த மாதம் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தைப் பிற்போடுமாறு, இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியட்னாமுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதால், சீன அதிபரின் பயணத்தைப் பிற்போடுமாறு இந்தியா கோரியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், அடுத்த மாதம், சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். வரும், செப்ரெம்பர் 14ம்,15ம் நாள்களில் சீன அதிபர் இந்தியாவில் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர், சிறிலங்கா, மற்றும் பாகிஸ்தானுக்குச் செல்வார் என்றும் சீனத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சிறிலங்கா, பாகிஸ்தான் பயணங்களை முடித்துக் கொண்டு, வரும் செப்ரெம்பர் 1…
-
- 0 replies
- 291 views
-
-
தாம் கேட்கும் போதெல்லாம் இந்தியாவிடம் இருந்து உதவிகள் கிடைப்பதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், வெளிநாடுகளுடனான சிறிலங்கா இராணுவத்தின் உறவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சிறிலங்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான உறவின் ஒரு பகுதியாகவே, சிறிலங்காப் படையினரில் 80 வீதமானவர்களுக்கு இந்தியா பயிற்சிகளை வழங்குகிறது. நாம் இந்திய இராணுவத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம். இந்தியா மிகவும் உதவியாக உள்ளது. எமது படையினருக்கான மேலதிக வெளிநாட்டுப் பயிற்சித் தேவைகளை நிறைவேற்றுகிறது. பாகிஸ்தானும் கூட, சிறிலங்கா இராணுவத்துக்குப் பயிற்சி வசதிகளை வழங்கி…
-
- 0 replies
- 200 views
-
-
ஊடகங்கள் பக்கச் சார்பான செய்திகளை வெளியிடுவதுடன் ஏனையவற்றை இருட்டடிப்பு செய்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டுகின்றார். யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக ஊடகவியலாளர்களை அறிவூட்டும் கருத்தரங்கு ஒன்று யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் ஊடகங்கள் பக்கச் சார்பாக செயற்பட்டதனால் கடந்த காலங்களில் மக்கள் கசப்பான நிலையை எதிர்கொண்டதாகவும் எனவே அவ்வாறான நிலை மீண்டும் எழுந்துவிடக் கூடாதாம் என ஊடகவியலாளர்களிடம் முதலைக் கண்ணீர் வடித்தார். http://onlineuthayan.com/News_More.php?id=760973319411503571
-
- 0 replies
- 278 views
-
-
அவுஸ்த்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான பன்டெர்பேர்க் எனும் ஆழ்கடல் ரோந்துக் கப்பலொன்று இன்று பிறிஸ்பேனில் தீயில் எரிந்து அழிந்தது. சுமார் 15 மில்லியன் டாலர் பெறுமதியான இந்தக் கப்பல் திருத்த வேலைகளுக்காக பிறிஸ்பேன் கடற்படக் கட்டுமானத் துறையில் நிறுத்திவைக்கப்படிருந்தபோது திடீரென்று தீப்பற்றிக்கொண்டது. தீயினை அணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும்கூட கப்பலைக் காப்பாற்ற முடியவில்லை. கப்பலில் பரவிய தீ, கட்டுமானத்துறையின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. ஆக, சிங்களவனுக்குக் கப்பல் கொடுத்து மகிழ்ந்த ஆஸிகளுக்கு இன்னொரு கப்பலும் போய்விட்டது. இனி நடுக்கடல் ஆள்கடத்தல் நாடகங்களுக்கு இன்னொரு கப்பலைத் தேடவேண்டியிருக்கும்.
-
- 0 replies
- 354 views
-
-
காணமல் போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதியின் ஆணைக்குழு முன் இன்று சாட்சியமளித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட சிறப்பு தளபதிகளில் ஒருவரான அந்தோனி இராயப்பு (ஜான்) அவர்களின் மனைவி இராயப்பு மிரேனியா தனது சாட்சியத்தை சற்று முன் மடு பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளார். அவர் தனது சாட்சியத்தில் யுத்தம் நடைபெற்ற வேளையில் முல்லைத்தீவு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைச் சரணடையுமாறும் அவ்வாறு சரணடைந்தால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் இராணுவத்தினரால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதயைடுத்து 2009ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 18ஆம் திகதி அப்பகுதியிலுள்ள அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் (மைக்கல்) தலைமையில் அவர்களின் உதவியுடன் 40 விடுதலை…
-
- 2 replies
- 530 views
-
-
தமிழ் பெண் இராணுவத்தினரின் அணிவகுப்பை பார்வையிட்டார் கிளிநொச்சி அரச அதிபர். [Monday 2014-08-11 10:00] இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள் தமது பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் வைபவம் கிளிநொச்சி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் இராணுவப் பெண்கள் அணியின் (தமிழ் பெண்கள்) அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=114707&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 501 views
-
-
இலங்கையில் எயிட்ஸ் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! [Monday 2014-08-11 10:00] வருடத்தில் முதல் 6 மாத காலப்பகுதியில் எயிட்ஸ் நோயாளர்களின் அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய பாலிய மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 20 சதவீத அதிகரிப்பாக தற்போது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1989ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலப்பகுதியில் எயிட்ஸ் தொற்றாளர்கள் 1950 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 320 பேர் இறந்துள்ளனர். தற்போது சுமார் 1500 பேர் வரையில் எச் ஐ வி தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் 1500 தொடக்கம் 3000 பேர் வரையில் எச் ஐ வி தொற்று…
-
- 0 replies
- 238 views
-
-
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் படைமுகாம்களால் பெண்கள், சிறுவர்களுக்கே பாதிப்பு! - விஜயகலா மகேஸ்வரன் குற்றச்சாட்டு. [Monday 2014-08-11 10:00] யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் இதனால் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். "அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளமை வருத்தமளிக்கிறது. அண்மையில் காரை நகரில் இரண்டு சிறுமிகள் கடற்படைச் சிப்பாய்களினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கப்பட வேண்டியது.குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். யாழ்ப்பாண குடாநாட்டின் மூலை முடுக்கு எங்கிலும் இராணுவ முக…
-
- 0 replies
- 279 views
-
-
இலங்கையின் அரசியல், ஆட்சிச் சூழல் மீண்டும் கொதிநிலையில் இருக்கிறது. ஐக்கிய நாடுகளின் இலங்கை மீதான விசாரணை, அந்த விசாரணைகளுக்கு சாட்சியங்களையும், ஆதாரங்களையும் சேகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பகிரங்க அறிவிப்பு என்ற விடயங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை அதிகளவில் கோபம் கொள்ள வைத்திருக்கிறது. அதன் வெளிப்பாடு கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வார்த்தைகளினூடாகவே வெளிப்பட்டிருக்கிறது. அது, “இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரசாங்கம் இதய சுத்தியுடனேயே செயற்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண வருமாறு அரசாங்கம் தொடர்ச்சியாகப் பல தடவைகள் தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வருகின்றது. ஆனால், அவர்கள் (த.தே.கூ) இதுபற்றி அலட்டிக்…
-
- 0 replies
- 428 views
-
-
இனவாதத்தை தூண்டினாரா? விசாரிக்கவே மாணவன் கைது என்கிறார் பேச்சாளர் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் விடுதியின் கழிப்பறையில் கடந்த ஞாயிறன்று (03 ஆம் திகதி )அதிகாலை அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டுஇ இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சந்திரகுமார் சுதர்சனை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண கேசரியிடம் குறிப்பிட்டார். குறித்த மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளிலேயே மேலதிக விசாரணையின் பொருட்டு அம்மாணவன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டத…
-
- 1 reply
- 327 views
-
-
பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியளிப்போர் என்று சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட பட்டியலில் இருந்து மூன்று பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியளிப்போர் என்று, பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்கிய 424 பேரின் பட்டியல் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம், கடந்த மார்ச் 20ம் நாள் வர்த்தமானியில் வெளியிட்டிருந்தது. இந்தப் பட்டியலில், இருந்து, துரை எனப்படும் கருணாநிதி துரைரத்தினம், சுதர்சன் கைலாயநாதன், தனுஸ்கோடி பிறேமினி ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலிலேயே இவர்கள், மூவரும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக க…
-
- 0 replies
- 448 views
-
-
தமிழர்கள் எதிர்பார்க்கும் தீர்வு ஒருபோதும் கிடைக்காது! - அடித்துச் சொல்கிறார் கோத்தபாய [sunday 2014-08-10 18:00] வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ற அரசியல் தீர்வை வழங்க அரசாங்கம் தயாராக இல்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிரச தொலைக்காட்சிக்கு நேற்றிரவு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு-கிழக்கில் வாழும் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்தத் தீர்வு அனைவருக்கும் ஏற்புடையதான தீர்வாகவே இருக்கும். எனவே அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். வடக்கு-கிழக்கில் வாழும் மக்களில் ஒருசிலர் விடுதலைப் புலிகளின் கோரிக்கையை முன்வைத…
-
- 1 reply
- 429 views
-
-
எனக்கு இந்த ஆணைக் குழுவில் நம்பிக்கையில்லை. இது அரசாங்கத்தின் வற்புறுத்தலின் பெயரில் நடைபெறும் கண்துடைப்பு வேலையே. எனவே இத்தகைய ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு நான் விரும்பவில்லை. பதிலாக ஓர் அறிக்கையை மாத்திரம் உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். - இவ்வாறு காணாமற்போனோர் தொடர்பான விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்திருக்கிறார் மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப். ஆணைக் குழுவின் ஆறாவது அமர்வு மன்னாரில் இன்று மூன்றாவது நாளாக மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெறுகிறது. இதன்போது ஆயருக்கும் சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று முற்பகல் 10.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜேசப் ஆண்டகையும் மன்னார் மறை மாவட்ட குரு…
-
- 3 replies
- 833 views
-
-
ஜனாதிபதி ஒன்றுபடுத்திய நாட்டை மீண்டும் பிளவுபடுத்த ரணில் முயற்சி கிராமப்புற ஆதரவாளர்கள்; ஐ.தே.கவில் அதிருப்தி எம். ஏ. அமீனுல்லா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒன்று படுத்திய இந்நாட்டை மீண்டும் இரண்டாகப் பிரிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முயல்வதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார். இந்த வகையில் தற்போது வடக்கில் தமிழ் மக்களுடைய வாக்குகளை கவரும் வகையில் பல பிரயத்தனங்களை ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கண்டி - வெலிகொல்ல பிரதேசத்தில் கடந்த திங்களன்று ஆசிரியர் சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க மேலும் அங்கு கூறுகையில் :- வடபுல தமிழ் மக்கள் மத்தியில் வா…
-
- 0 replies
- 271 views
-
-
திருமலையில் பெண் சிப்பாய் தனக்குத்தானே சுட்டு தற்கொலை! இராணுவ பெண் சிப்பாய் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று திருகோணமலை 22 ஆம் படைப்பிரிவு இராணுவ முகாமில் கடந்த 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, காலி மாவட்டத்தின் அகங்கம பிரதேசத்தை சேர்ந்த நமிதா டிசானி (வயது 29) என்பவர் கடந்த 8 வருட காலமாக இராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி மாலை 4 மணியளவில் துப்பாக்கியால் தனது வயிற்றுப்பகுதியில் சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளதாக தொரியவருகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் தி.திருச் செந…
-
- 0 replies
- 329 views
-
-
“பாரதூரமான விளைவுகள் ஏற்படும்” – மஹிந்தவின் மிரட்டலுக்கு சம்பந்தன் பதில்! இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதை கூட்டமைப்பு மறுத்துள்ளது. அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை அரசே முறித்துக் கொண்டது என்றும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர். “இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கூட்டமைப்பினரே இழுத்தடிக்கின்றனர், தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, அதனை தனது பலவீனம் என்று எவரும் கருதினால், பாரதூரமான விளைவுகள் ஏற்படும்” என்று ஜனாதிபதி அண்மையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது தெரிவித்தக…
-
- 0 replies
- 366 views
-
-
மஹிந்த குடும்பத்தைப் பாதுகாக்கும் குழுவில் இந்தியர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார்!? காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு, புதிதாக நியமிக்கப்படவுள்ள மூவரில், இந்திய மனித உரிமை செயற்பாட்டாளராக அவ்டாஸ் கௌஷலும் இடம்பெறவுள்ளார். இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது. காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு வெளிநாட்டு நிபுணர்கள் மூவரைக் கொண்ட ஆலோசனைக் குழுவை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஏற்கனவே நியமித்துள்ளார். இந்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஆறாக அதிகரிக்கவுள்ளதாக, கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகையில், ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது சிறிலங்கா அதிபர் தெரிவித்த…
-
- 0 replies
- 345 views
-
-
தடைசெய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர் பட்டியலில் இருந்து மூவருக்கு விலக்களிப்பு!? பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியளிப்போர் என்று சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட பட்டியலில் இருந்து மூன்று பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியளிப்போர் என்று, பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்கிய 424 பேரின் பட்டியல் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம், கடந்த மார்ச் 20ம் நாள் வர்த்தமானியில் வெளியிட்டிருந்தது. இந்தப் பட்டியலில், இருந்து, துரை எனப்படும் கருணாநிதி துரைரத்தினம், சுதர்சன் கைலாயநாதன், தனுஸ்கோடி பிறேமினி ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலிலேயே இவர்கள், ம…
-
- 0 replies
- 296 views
-
-
ஓய்வூதியர்கள் பெற்ற ஞானம் - நிலாந்தன் ஒரு பிராந்திய பேரரசின் புவிசார் அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒரு சிறிய மக்கள் கூட்டம் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. முன்னாள் இந்திய வெளியூறவு அமைச்சர் நட்வர்சிங் அண்மையில் வெளியிட்டிருக்கும் நூல் சர்ச்சைகளைக் கிளம்பியுள்ளது. ஒரு வாழ்க்கை போதாது என்ற தலைப்பிலான அந்த நூலில் சிறிலங்காவின் அவலம் என்ற ஓர் அத்தியாயம் உண்டு. அதில் ஈழப் போர் தொடர்பில் அப்போதிருந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி எடுத்த முடிவுகளைக் குறித்து நட்வர்சிங் கடுமையாக விமர்ச்சித்திருக்கிறார். ராஜீவ் காந்தி தகுதியான ஆலோசகர்களை தனக்கருகில் வைத்துக்கொள்ளவில்லை என்றும், விடுதலைப்புலிகளைக் குறித்து சரியான மதிப்பீடு இந்தியப் படைத்துறையிடம் இருக்கவில்லை என்றும் மு…
-
- 0 replies
- 352 views
-
-
வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவின் 6ஆவது விசாரணை அமர்வு மன்னார் மாவட்டத்தில் கடந்த 3தினங்களாக நடைபெற்று வருகின்றது. அதன்படி 8,9 ஆம் திகதிகளில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திலும், 10 ஆம் திகதியான இன்று மன்னார் பிரதேச செயலகத்திலும் நாளை 11 ஆம் திகதி மடு பிரதேச செயலகத்திலும் இடம்பெறவுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய 3ஆவது அமர்வு மாலை 6.30 மணிவரை நடைபெற்றது. எனினும் சாட்சியப்பதிவுக்காக ஆணைக்குழுவினால் 60 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் 47 பேர் வருகை தந்து தமது உறவுகள் குறித்து உருக்கமாக சாட்சியம் அளித்தனர். இதேவேளை தமது உறவுகளை காணவில்…
-
- 0 replies
- 314 views
-
-
ஐ.நா விசாரணைக் குழுவைச் சந்திக்கிறார் நிஷா பிஸ்வால்! [sunday 2014-08-10 18:00] தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால், இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணைக் குழுவை சந்திக்கவுள்ளார். இலங்கையில் நடந்த மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு பிரதிநிதிகளுக்கும் பிஸ்வாலுக்கும் இடையிலான சந்திப்பு இந்த வாரத்தில் நடைபெறவுள்ளதாக இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் ஐ.நா விசாரணைக்குழு கடந்த வாரம் லண்டனில் கூடி ஆராய்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் , அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் இந்தக் குழு இணைந்து செயற்படத் திட்டமிட்டுள்ளது. விசாரணைக…
-
- 0 replies
- 410 views
-
-
இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதை கூட்டமைப்பு மறுத்துள்ளது. அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை அரசே முறித்துக் கொண்டது என்றும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பிபிசி தமிழோசையிடம் கூறினார் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர். "இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கூட்டமைப்பினரே இழுத்தடிக்கின்றனர், தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, அதனை தனது பலவீனம் என்று எவரும் கருதினால், பாரதூரமான விளைவுகள் ஏற்படும்" என்று ஜனாதிபதி அண்மையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது தெரிவித்தக் கருத்துக்கள், அரச சார்பு ஊடகம் ஒன்றில் வெளியாயின. இதையட…
-
- 0 replies
- 597 views
-
-
ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து தனது மகள் காணாமல் போயுள்ளதாக இலுப்பைக்கடவையினைச் சேர்ந்த பூலபாலசிங்கம் ரஞ்சிதமலர் என்ற தாய் நேற்று (9) சனிக்கிழமை, மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கையில், 'எனது மகளான பூலபாலசிங்கம் நிரஞ்சினிக்கு அப்போது 18 வயதாகும். உயர்தரம் படித்துக்கொண்டிருந்த போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த போது கடந்த 19-03௨009 அன்று ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் காணாமல் போனார். தற்போது எனது மகள் எங்கே இருக்கின்றாள் என்ற விடயம் எனக்க…
-
- 1 reply
- 498 views
-