ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் நூற்றி ஏழுபதாவது ஆண்டை கொண்டாடும் முகமாக நடைபெறும் கல்லூரியின் சர்வதேச பழைய மாணவர்கள் ஒன்று கூடும் முதல் நாள் நிகழ்வாக கல்லூரி வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் புனித ஹென்றியரசர் சிலையை கல்லூரியின் பிரான்ஸ் நாட்டு பழைய மாணவர் சங்கத் தலைவர் எ.ஆர்.ரி.அன்ரன் மற்றும் கிளிநொச்சி பங்குத் தந்தையும் பழைய மாணவனுமான அருட்தந்தை ஜோர்ஜ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தார்கள். இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூயின் அதிபர் ஜே.எ.ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்லூயின் பழைய மாணவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். - http://malarum.com/article/tam/2014/07/19/3782/%E0%AE%AA%E0%AF%81%E0%…
-
- 0 replies
- 313 views
-
-
இலங்கையில் சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் நோக்குடன் இணையதளங்கள் ஊடாக அணுகும் நபர்களை கண்காணித்து கைதுசெய்யும் (cyberwatch unit) கண்காணிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை சிறார் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திவருகின்றது. இதன் மூலம் இந்த ஆண்டில் இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இப்படியான சுமார் 2500 பேரின் இணையதள செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்துவருவதாக இலங்கையின் சிறார் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திஸாநாயக்க பிபிசியிடம் கூறினார். ´பேஸ்புக் போன்ற இணையதளங்கள் ஊடாக சிறார்களை அணுகி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயல்வோர் தொடர்பில் ஆராய்ந்துபார்த்து இந்த சைபர்வா்ட்ச் யுனிட் மூலம் கைது செய்துவருகின்றோம்´ என்றார் அனோமா திஸாநாயக்க. ´இன்னும் 30 பேருடன் நெருங்கிய தொடர்…
-
- 0 replies
- 454 views
-
-
"தேசிய கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றச் சென்ற யாழ் அணி மீது மகிந்தவின் அம்பாந்தோட்டையில் தாக்குதல்" 'தமிழ் நாய்களே வெளியே செல்லுங்கள் என்ற கோசங்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டதன' தேசிய இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய கிரிக்கெட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றச் சென்ற யாழ்ப்பாணத்து அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முதலாவதாக இன்று காலை நடைபெற்றிருந்த காலிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் அணி அம்பாந்தோட்டை அணியினை வெற்றி கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து கம்பஹா அணியுடன் அரையிறுதி போட்டி ஆரம்பமாகியிருந்த நிலையில் யாழ்ப்பாண அணி வெற்றிபெறுமென்ற அச்சத்தில் போட்டியை பார்வையிட்டுக் கொண்டிருந்த கம்பஹா அணியின் ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ள…
-
- 4 replies
- 693 views
-
-
இலங்கையில் உள்ள ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி, போரில் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்கள் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றில் வட மாகாணசபையை புறக்கணித்து செயற்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக வழியில் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாணசபையின் செயற்பாடுகளை திட்டமிட்ட முறையில் அரசாங்க தரப்பினர் முடக்கி வருகின்ற சூழ்நிலையில், ஐநா பிரதிநிதியும் தம்மை புறக்கணித்திருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் பொன்விழாவையொட்டி சனிக்கிழமை இடம்பெற்ற மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். வடமாகாண சபைக்கும் அரசுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்துச் செல்வதைக் குறித்துக்காட்டுவதாக அவருடைய இந்த உரை அமைந்த…
-
- 0 replies
- 503 views
-
-
படுத்திருக்கும் யானை பலமற்ற யானை என்று தப்புக்கணக்கு போடக்கூடாது - சி.வி. அரசாங்க அதிகாரிகள் சிலர் நரிவேலை செய்து வருகின்றார்கள். ஆனால் அவர்களை அடையாளம் கண்டு வருகின்றோம். ஆவன செய்வோம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகராட்சி மன்ற, பொன்விழா நகர மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போவேர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய உரை, சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத் திறப்பு விழாவில் பங்கேற்பதில் மனமகிழ்ச்சி அடைகின்றேன். இம் மண்டபமானது உள்ளூராட்சி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டில் அமைக்கப்பட்டது…
-
- 0 replies
- 592 views
-
-
உலகத் தமிழர்களின் தலைநகராகத் திகழும் லண்டன் மாநகரத்தில் வாழும் தமிழ் உணர்வாளர்களே, இளையோரே, அன்புச் சகோதரிகளே தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து உங்கள் சகோதன் புகழேந்தி இந்த வேண்டுகோளை உங்களுக்கு விடுக்கின்றேன்.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=B8iHuz5u0Uo எந்தக் கறுப்பு யூலையில் 23 அன்று என்னுடைய இனம் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டதோ, குறி வைத்து தாக்கப்பட்டதோ, வீடுகளின் முகப்புகள், முதல் நாளே குறிவைத்து, தமிழன் வீடு இது என்று குறித்து வைத்துத் தாக்கினார்ளோ, எப்படிக் கொன்று அழித்தார்களோ, எங்களுடைய சகோதரிகளை எந்த யூலை 23இல் தகாத முறையில் படாது படுத்தினார்களோ? அந்த யூலை 23 இல் ஸ்கொட்லாந்துக்கு மனித மிருகம் ராஜபக்ச மீண்டும் வருவதாகச் செய்திகள…
-
- 0 replies
- 391 views
-
-
தோளில் போட்டிருந்த துப்பட்டா(ஷோல்) மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்கிவிபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த தந்தையும் மகளும் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் சாவகச்சேரி மீசாலை ஐயா கடையடியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கலாசாலை வீதியைச் சேர்ந்த வல்லிபுரம் மகாலிங்கம் (வயது 61), மகாலிங்கம் கீர்த்தனா (வயது 25) ஆகிய இருவருமே காயமடைந்தவர்களாவர். http://malarum.com/
-
- 2 replies
- 585 views
-
-
மக்கள் விசனம் கவனீயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை:- மக்கள் விசனம் கவனீயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை:- கிளிநொச்சி தொண்டமான் நகர் வயிரவர் கோயில்காணி கரைச்சி பிரதேசசெயலகத்தால் மீண்டும் தாரைவார்ப்பு- கிளிநொச்சி தொண்டமான் நகர் உதிரவேங்கை வயிரவர் ஆலயத்துக்கு சொந்தமான காணியை கடந்த ஆண்டு தென்னிலங்கையை சேர்ந்த தனியார் கம்பனி ஒன்றுக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேசசெயலகம் கையளிக்க முற்பட்டு இருந்தது. இந்த நிலையில் தொண்டமான்நகர் மக்கள் மற்றும் பா.உறுப்பினர் ச.சிறீதரன் பிரதேசசபை உறுப்பினர்கள் தலையிட்டு சட்ட நடவடிக்கையை மேற்கொண்டதன் அடிப்படையில் கடந்த ஆண்டு கிளிநொச்சி நீதிமன்றால் காணி கோயிலுக்கு சொந்தமானதாக தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இந்த பிரச்சனை முட…
-
- 0 replies
- 446 views
-
-
சாவகச்சேரி பிரதேசசபையின் உள்ளூராட்சி வார வேலைத்திட்ட சமூக பங்காற்றுகை நிகழ்வுகள்! [saturday 2014-07-19 10:00] சாவகச்சேரி பிரதேசசபையால் நடத்தப்பட்ட உள்ளூராட்சி வார வேலைத்திட்டத்தில் பல்வேறு சமூக பங்காற்றுகை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்வுகள் சாவகச்சேரி பிரதேச சபை தலைவர் சிற்றம்பலம் துரைராஜா தலைமையில் நடைபெற்றன. இதில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜாவும் சிறப்பு விருந்தினர்களாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், கௌரவ விருந்தினராக கொடிகாமம் வர்த்தக சங்கத் தலைவர் ம.சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் பிரதேச சபை உபதலைவர், உறுப்பினர்கள்…
-
- 0 replies
- 364 views
-
-
மாணவியின் தலையில் சக மாணவர்களைக் கொண்டு குட்டுப் போட்ட அதிபருக்கு பிணை! [saturday 2014-07-19 10:00] பத்து வயது பாடசாலை மாணவி ஒருவரை சக வகுப்பு மாணவர்கள் மூலம் தலையில் குட்டவைத்த சம்பவம் தொடர்பாக கைதான தியபெதும நாமல் ஓயா ஆரம்பப்பாடசாலை அதிபர் ஐயாயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் கல்வி பயிலும் வகுப்பறையை சுத்தம் செய்யாததற்கு தண்டனையாக மாணவி வாந்தி எடுக்கும் வரை சக மாணவர்களைக் கொண்டு அதிபர் தலையில் குட்டவைத்ததாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. சம்பவ தினம் சிறுமி பாடசாலைக்கு தாமதமாக வந்ததால் வகுப்பை சுத்தம் செய்ய முடியாமல் போயுள்ளது. அதிபரின் அழுத்தம் காரணமாக குறித்த மாணவியின் தலையில் சக மாணவர்கள் குட…
-
- 0 replies
- 332 views
-
-
காரைநகர் சிறுமிகள் மீதான சிறிலங்கா படையினரின் பாலியல்வன்முறைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் ! [saturday 2014-07-19 10:00] சிறிலங்கா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழத் தாயகத்தின் யாழ்ப்பாணம் காரைநகர் ஊரிக் கிராமத்தில் சிறிலங்கா கடற்படையினரால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட இரு சிறுமிகள் விவகாரம் தொடர்பில் வன்மையான கண்டனத்தினைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இது தொடர்பில் ஐ.நா சபை உட்பட அனைத்துலக மையங்களின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது. மானுடத்திற்கு புறம்பான வகையில், சர்வதேச ரீதியில் சிறுவர் நலன் தொடர்பாக வரையப்பட்டிருக்கும் அத்தனை அடிப்படை மனித உரிமைகளையும் சிறிலங்கா கடற்படையினர் மீறியுள்ளனர் என தெரிவித்துள்ள நா…
-
- 0 replies
- 237 views
-
-
குடிவரவுத் தகவல்களை இலங்கையுடன் தொடர்ந்து பரிமாறுமாம் கனடா! [saturday 2014-07-19 09:00] இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுடன் குடிவரவு தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நடவடிக்கையை கனடா தொடர்ந்தும் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. கனடாவில் சட்டரீதியான கடமைகளின் கீழ் இந்த நடவடிக்கை அவசியமானது என கனேடிய குடிவரவுத்துறையின் செயலாளர் அலக்சீஸ் பௌலிக் தெரிவித்துள்ளார். கனடா இலங்கையுடன் பயங்கரவாத தடுப்பு தகவல்களை பரிமாறிக் கொள்வதாக அந்த நாட்டின் தேசிய நாளிதழ் ஒன்று அண்மையில் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. இது தொடர்பான தெளிவை வழங்கிய குடிவரவு அமைச்சின் செயலாளர் கனேடிய பிரஜாவுரிமையை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் முகமாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதா…
-
- 0 replies
- 220 views
-
-
-கி.பகவான், வி.விஜயவாசகன் சுற்றில் இருப்போர் மனங்குளிர ஒன்றைக் கூறுவது பின்னர் அதற்கு நேர்மாறாக நடப்பது ஜனாதிபதிக்குக் கைவந்த கலையாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சனிக்கிழமை (19) தெரிவித்தார். சாவகச்சேரி நகர சபையினால் 77 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பொன்விழாக் கலாச்சார மண்டபத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எனக்குத் தருகிறேன் என்று ஜனவரி 2ஆம் திகதி கூறியவற்றில் ஒன்றை, அதாவது பிரதம செயலாளரை உடனே மாற்றுகின்றேன் என்பதை, தொடர்ந்து ஜனவரி 19ஆம் திகதி வரையில் அதாவது தெல்லிப்பளை புற்றுநோய்க் கட்டிடத் திறப்பு விழா மட்டும் இந்தா தருகின்றேன், அந்தா தருகின்றேன் என்று கூறியிருந்…
-
- 1 reply
- 354 views
-
-
வடமாகாணத்தின் ஆளுனராக, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நியமிக்க வேண்டும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. முதலமைச்சர் பதவியை விட, சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆளுனர் பதவி பொறுத்தமாக இருக்கும் என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. வடமாகாணத்தின் ஆளுனராக இராணுவ பின்னணி கொண்ட ஜீ.ஏ.சந்திரசிறி பதவி வகிக்கின்றமை தொடர்பில் ஏற்கனவே உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிருப்திகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், அவரது பதவிக் காலம் நீடிக்கப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையாக எதிர்ப்பதுடன், சர்வதேச நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் சரியான மீளமைப்பு கொள்கையை பின்பற்றுமாக இருந்தால், வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனை வடக்க…
-
- 0 replies
- 422 views
-
-
ஐக்கிய இலங்கை என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப கட்சி கொள்கை அளவில் மட்டும் ஏற்றக்கொள்வது போதுமானதல்ல என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.பிளவுபடாத ஐக்கிய இலங்கை என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதாக அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் கூட்டணி கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியும் நீதிமன்றில் அறிவித்திருந்தது.இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போது ஜாதிக ஹெல உறுமய இதனைக் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டினை தமிழ்த் Nதுசியக் கூட்டமைப்ம் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் கொள்கை அளவில் மட்டும் ஏற்றுக்கொள்வது போதுமானதல்ல என தெரிவித்துள்ளது. தமி;ழ்த்; தேசியக் கூட்டமைப்பும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்பை ஆதரிக்காத வகையிலேயே நடந…
-
- 0 replies
- 434 views
-
-
(ஆவணப் படம்) மோடி ஆட்சியின் கீழ் இந்தியா எனும் கலந்துரையாடலில் பங்கெடுப்பதற்காக சுப்ரமணியம் சுவாமி உட்பட 5பாரதிய ஜனதா பிரமுகர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். எதிhவரும் திங்கட்கிழமை பண்டாராநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலிற்காக சுப்ரமணியம் சுவாமியுடன்,அமைச்சர் ரவி பிரசாத்தும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எனினும் இக்குழுவினர் இந்த விஜயத்தின் போது அரசியல் தலைவர்களை சந்திப்பார்களா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109568/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 306 views
-
-
விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்லுமாறு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பொது முகாமைத்துவ அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விருப்பம் இல்லாமல் எவரும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை என அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. காலில் இழுப்போரும், சர்வதேச சமூகத்திடம் கோள் சொல்பவர்களும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் பதவி விலக்குவதற்கு முன்னதாக தாங்களாகவே பதவிகளை ராஜினாமா செய்து கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.globaltamilnew…
-
- 0 replies
- 509 views
-
-
- கி.பகவான், வி.வி. ஜயவாசகன் சாவகச்சேரி நகர சபையினால் 77 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பொன்விழா கலாச்சார மண்டபம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று சனிக்கிழமை (19) திறந்து வைக்கப்பட்டது. உள்ளூராட்சி உட்கட்மைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கடன் நிதி 57 மில்லியன் ரூபாய் செலவில், மேற்படி மண்டபத்தின் கட்டடப் பணிகள் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எனினும், நிதி பற்றாக்குறையினால ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்ட 57 மில்லியன் ரூபாய் செலவு வரையில் கட்டடப் பணிகளை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, சாவகச்சேரி நகர சபையின் இருப்பு நிதி 20 மில்லியன் ரூபாவினைக் கொண்டு கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இவ்வருடம் ஏப்ரல் மாதம் பணிகள் பூர்த்தியடைந்தன. …
-
- 0 replies
- 192 views
-
-
சிறிலங்கா விவகாரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்கா இணைந்து செயற்பட முடியும் என்று அமெரிக்க முன்னேற்றத்துக்கான தேசிய பாதுகாப்பு மற்றும் அனைத்துலக கொள்கை நிலையத்தின் உதவித் தலைவரான விக்ரம் ஜே சிங் தெரிவித்துள்ளார். முன்னர், தெற்கு மற்றும் தென்கிழக்காசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவிப் பாதுகாப்புச் செயலராகப் பணியாற்றிய இவர், நரேந்திர மோடி அரசாங்கத்துடனான அமெரிக்காவின் உறவு குறித்து பிரிஐயிடம் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “பிராந்திய விவகாரங்களில் நரேந்திர மோடியுடன் அமெரிக்கா இணைந்து செயற்பட முடியும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் உறுதிப்பாட்டு விவகாரங்களில் மட்டுமன்றி, சிறிலங்கா, நேபாளம், பங்களாதேஸ், மாலைதீவு ஆகிய நா…
-
- 0 replies
- 197 views
-
-
கொய்யாத்தோட்டம் பழைய பூங்கா வீதி சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 19வயதுடைய அன்ரன் செலஸ்ரா என்ற இளம்பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு 10 மணியளவில் உயிரிழந்ததாக இளம்பெண்ணின் கணவர் பொலிஸாரிற்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்துக்கு இன்று காலை சென்று விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதிவான் மு.திருநாவுக்கரசு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார் . மேலும் இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கடந்த 6…
-
- 0 replies
- 237 views
-
-
பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கியிருந்த வீசா அனுமதியை அவுஸ்திரேலியாவும் இரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள பௌத்த மத நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஞானசார தேரர் அங்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும், அங்கு வாழும் சமூகங்களுக்கிடையே அவரின் வருகை பிரிவினையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தினாலேயே அவருக்கு வழங்கப்பட்டிருந்த வீசாவினை அவுஸ்திரேலியா இரத்து செய்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இதனிடையே, ஞானசார தேரரின் வருகையை அவுஸ்திரேலியாவில் வாழும் பெருமளவு பௌத்தர்களும் விரும்பவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஞானசார தேரருக்கு வழங்கியிருந்த வீசா அனு…
-
- 1 reply
- 371 views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து இரகசிய விசாரணை நடத்தப்படுவதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா விசாரணைக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விபரங்களை வெளியிடுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் மறுத்திருந்தார். இதுகுறித்துக் கருத்து வெளியிடுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், ஜி.எல்.பீரிஸ், விசாரணையை மேற்கொள்பவர்கள் யார் என்று தெரியாமல் எவ்வாறு அந்த விசாரணை மீது நம்பிக்கை வைக்க முடியும்? இந்த அநாமதேயமான விசாரணைக்குழு, ஒரு வேளை, கங்காரு நீதிமன்றத்தை விடவும் மோசமானதாக இருக்கலாம். எனவே சிறிலங்கா அரசாங்கம் இதனைப் புறக்கணிக்கும். குறைந்த…
-
- 1 reply
- 481 views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்நாட்டின் மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அண்மையில் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக் கடற்பரப்பைச் சென்றடைந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேரை அந்நாட்டு அதிகாரிகள் கடலில் தடுத்து வைத்துள்ளனர். இந்நிலையிலேயே குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள் அவுஸ்திரேலிய அரசாங்கததின் சார்பில் சட்டத்தரணி டொனாகி கியுசி. அந்நாட்டு மேல் நீதிமன்றில் நேற்று தெரிவித்துள்ளார். குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகலிடக் கோரிக்கையாளர் ஆர்வலர்கள் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்க…
-
- 1 reply
- 464 views
-
-
கிளிநொச்சி கடும்வரட்சி நாளாந்தம் 3 இலட்சத்து 71 ஆயிரத்து 850 லீற்றர் (371,850) குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிளிநொச்சியில் தொடர்ச்சியாக நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்;டில் பிரதேச செயலகங்கள் ஊடாகவும்,மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மூலமும் பல கிராமங்களுக்கும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் தொடர்ச்சியாக கிணறுகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து செல்வதனால் மக்களுக்கான குடிநீர் தேவையும் அதிகரித்து செல்கிறது. கிளிநொச்சியில் நிலவும் வழமைக்கு மாறான வரட்சி காரணமாக பெரும் குட…
-
- 9 replies
- 795 views
-
-
இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்சல் அருப் ராஹா, மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த இந்திய விமானப்படைத் தளபதி, நேற்றுமாலை அலரி மாளிகைக்குச் சென்று மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் இருநாட்டு விமானப்படைகளுக்கும் இடையிலான பயிற்சி, மற்றும் கூட்டு வான் ஒத்திகைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவில் தாம் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புகள் பயன்மிக்கதாக அமைந்தது என்று, சிறிலங்கா அதிபரிடம், இந்திய விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில், இந்தியத் தூதுவர் வைகே. சின்ஹா மற்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், உள்ளிட்…
-
- 0 replies
- 387 views
-