ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
விசாரணைக்குழு மூலம் ஏமாற்ற முனைந்தால் அது பெரும் அநீதி – பாக்கியசோதி சரவணமுத்து! “காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு மூவரடங்கிய சர்வதேச நிபுணர்கள் குழாமை நியமித்து தனது ஏமாற்று வித்தையை இதன் மூலம் நிறைவேற்றிக்கொள்வதற்கு மஹிந்த அரசு எத்தனிக்குமானால், அது பெரும் அநீதியாக அமையும்.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து. காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் மூவரடங்கிய விசாரணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு மூவரடங்கிய சர்வதேச நிபுணர்கள் குழுவை நியமித்துள்ள ஜனாதிபதி மஹிந்த, குறித்த ஆணைக்குழுவுக்குரிய பணிகளையும் விரிவுபடுத்தியுள்ளார். போர்க்காலத…
-
- 0 replies
- 405 views
-
-
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது கெடுபிடி; கனடா உன்னிப்பாக கவனம்! பொது விவகாரங்களில் பங்கேற்றல், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியனவற்றை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என கனேடிய வெளிவிவகார அமைச்சின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான கெடுபிடிகள் தொடர்பில் கனடா உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தொண்டு நிறுவனங்கள் ஊடகங்களுடன் தொடர்புகளைப் பேணக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிதப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் சிவில் அமைப்புக்கள் முக்கிய பங்களிப்பினை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். வலுவூட்டப்பட்ட சிவில் சமூகக் கட்டம…
-
- 0 replies
- 411 views
-
-
13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கிறதாம் இந்தியா! சிறிலங்காவில் 13வது திருத்தச்சட்டத்தை விரைவாகவும், முழுமையாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு, இந்தியா நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, இந்தியாவின் துணை வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். சார்க் நாடுகளுடனான இருதரப்பு உறவுகள் குறித்த இந்திய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து, இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “சிறிலங்காவுடனான உறவுகளை இந்திய பெரிதும் மதிக்கிறது. இண்மையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட எல்லாப் பரப்புகளிலும்,…
-
- 0 replies
- 573 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நெற்காணிகளை மண் இட்டு நிரப்பி மேட்டுக் காணிகளாக மாற்றுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.தயாரூபன் இன்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் ஏராளமான வயல் நிலங்கள் தினமும் சட்ட விரோதமான முறையில் மண் போட்டு நிரப்பி மேட்டுக்காணிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் நெற்செய்கை காணிகளின் அளவு குறைவடைந்து வருவதுடன் நெல் உற்பத்தியும் பாதிக்கும் அபாய நிலை காணப்படுகின்றது. ஆகவே, இந்த விடயம் தொடர்பாக கடுமையாக நடவடிக்கைகளை எதிர்காலங்களில் மேற்கொள்ளவுள்ளோம். அந்த வகையில், இவ்வாறு மேட்டுக் க…
-
- 0 replies
- 387 views
-
-
-எம்.றொசாந்த் வடக்கிலே சிறுவர்கள் கூட சுதந்திரமாக வாழ முடியாத நிலை காணப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார். யாழ். காரைநகர் ஊரிப் பகுதியில் கடற்படை சிப்பாய் ஒருவரால் 11 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையினை எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை (18) காரைநகர் பிரதேச செயலகம் முன்றலில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்இ கடந்த 60 வருடங்களாக இந்த மண்ணிலே சிங்கள அரசு எதனை செய்து வந்ததோ அதனையே இன்றும் செய்து வருகின்றது. யுத்தம் முடிவடைந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட போத…
-
- 0 replies
- 302 views
-
-
பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்ற மாத்தளையைச் சேர்ந்த யுவதி ஒருவர் இரண்டு வருட ஒப்பந்த காலம் உட்பட ஐந்து வருடங்கள் கடந்தும் நாடு திரும்பவில்லை. அத்துடன் இவர்பற்றிய தகவலும் இல்லாதிருப்பதாக யுவதியின் தாயார் மேரி நவஜீவனம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மாத்தளை பிட்டகந்த பெரியசெல்வகந்தை பிரிவைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிரபாஜினி என்ற 34 வயது நிரம்பிய யுவதியே இவ்வாறு டுபாய் நாட்டுக்குச் சென்று தகவல் இல்லாதுள்ளவராவார். தனது மகளின் தகவல்களைப் பெற்றுத்தருமாறும் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறும் சம்பந்தப்பட்ட முகவர் நிலையம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள …
-
- 0 replies
- 258 views
-
-
தமிழினஅழிப்பாளி மகிந்த ராஜபக்சவின் வருகை எதிராக அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் ! [Friday 2014-07-18 18:00] ஐக்கிய இராச்சியத்தின் (ஸ்கொட்லாந்து) glasgow நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாயத்தின் விளையாட்டுப் போட்டியினை - 2014, தலைமைதாங்கி தொடங்கிவைக்க வருகை தரவுள்ள சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. பொதுநலவாய அமைப்பின தற்போதைய தலைமைதாங்கும் நாடாக சிறிலங்கா உள்ள நிலையில், அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக இவ்விளையாட்டுப் போட்டியினை தலைமைதாங்கி தொடங்கி வைக்க இருக்கின்றார். இந்நிலையில் சிறிலங்கா அரசுத் தலைவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து gla…
-
- 0 replies
- 304 views
-
-
காரைநகரில் 11 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகத்தினில் ஆஜர் படுத்தப்பட்ட கடற்படை சிப்பாய்களை இன்று சிறுவர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடற்படை சீருடையினில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட ஏழு கடற்படை சிப்பாய்களுள் சந்தேக நபரை அடையாளம் காட்ட பாதிக்கப்பட்ட சிறுமி தவறியிருந்தார்.அதையடுத்தே கடற்படை சிப்பாய்களை விடுவிக்க சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடற்படையினரால் பாடசாலை சிறுமிகள் இருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகித்து குறித்த கடற்படை முகாம்களைச் சேர்ந்த 7 பேர் இன்று காலை ஊர்காவற்றுறை காவல்துறையினரால் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர். முன்னதாக குறித்த பாலிய…
-
- 0 replies
- 467 views
-
-
உலக மக்களின் குரலுக்கும் நான் செவி கொடுக்க மாட்டேன் என்று அடம்பிடித்து நிற்கிற ஒரு மிகப்பெரிய வேட்டை நரியாக, நாயாக அவன் வருகிறான். அவனை இந்த முறையும் தமிழீழ மக்கள் ஓட ஓட விரட்ட வேண்டும். அந்த மண்ணில் அவன் காலை மிதிக்காதபடி அவனைத் துரத்துகிற அளவு, அந்த உணர்வோடு அந்த மண்ணை விட்டு விரட்டியாக வேண்டும். ஆகவே தமிழீழ மக்களே ஆயிரக் கணக்கில் திரண்டு மகிந்த ராஜபக்சவை அனது மண்ணுக்கு திருப்பி அனுப்புவதில், தமிழீழ மக்களின் கொந்தழிப்பை அவனுக்கு எடுத்துக் காட்டுவதில், உலகத்திற்கும் எடுத்துக் காட்டுவதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் காட்டுங்கள். http://www.pathivu.com/news/32541/57//d,article_full.aspx
-
- 2 replies
- 643 views
-
-
-எம்.றொசாந்த் சர்வதேச ஒத்துழைப்புடனேயே தமிழர்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் இன்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார். யாழ். காரைநகர் ஊரிப் பகுதியில் கடற்படை சிப்பாய் ஒருவரால் 11 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை (18) காரைநகர் பிரதேச செயலகம் முன்றலில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அராஜகத்திற்கு எதிரான எதிர்ப்புக்களை தமிழர்கள் 1956ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே வெளிப்படுத்தி வருகின்றார்கள். தமிழர்கள் இந்த நாட்டிலே வாழ வேண்டுமா? என்…
-
- 0 replies
- 361 views
-
-
யாழ்ப்பாணம், காரைநகர், ஊரி கிராமத்தில் இரண்டு சிறுமிகளை வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கடற்படை வீரர்கள் ஏழு பேரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த கிராமத்தைச் சேர்ந்த 11 வயது மற்றும் 9 வயது சிறுமிகளே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வல்லுறவு மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு இன்று மாலை அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டனர். இந்நிலையில், இவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒரு…
-
- 0 replies
- 573 views
-
-
அனைத்துலக அழுத்தங்களினால், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பொதுமக்களின் மரணங்கள் மற்றும் மனிதாபிமானச் மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான, உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இதற்கென, போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விசாரிக்கும் வகையில், காணாமற்போனோர் குறித்து விசாரித்து வந்த நீதிபதி மக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழுவின் விசாரணைப் பரப்பு விரிவாக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் கடந்த 15ம் நாள் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பிலேயே, இந்த உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனினும், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும், ஆணைக்குழுவ…
-
- 1 reply
- 580 views
-
-
பிரித்தானிய பிரஜை குர்ஹாம் சாக்கீயை படுகொலை செய்த குற்றவாளியான தங்காலை பிரதேச சபைத் தலைவர் சம்பத் விதாண பத்திரணவிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குராம் சேய்க் படு கொலை தொடர்பான வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் இடம்பெற்ற போதே கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் ரோஹினி வல்கமவினால் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு நத்தார் பண்டிகையன்று குர்ஹாம் செய்க் தங்காலை ஹோட்டல் ஒன்றில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகி கொல்லப்பட்டதுடன், அவரது ரஸ்ய காதலி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார். இந்த சம்பவங்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் கொழும்பு உயர் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் ஆளும் கட்சியின் தங்காலை பிரதேச சபைத் தலைவர் சம்பத் வி…
-
- 1 reply
- 321 views
-
-
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்தி வரும் ஐ.நா விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர், ருபேர்ட் கொல்வில்லிடம், விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விபரம் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தது. “ஐ.நா விசாரணைக் குழுவின் இணைப்பாளராக சன்ட்ரா பெய்டாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணைக் குழுவின் இணைப்பாளரின் விபரத்தை அறிவிப்பதே முக்கியமானது என்று நாம் கருதுகிறோம். எந்தவொரு குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாகவும் பணியாற்றும், அதிகாரிகள் குழு பற்றிய விபரங்களை ஐ.நா மனித உரிமை ஆணை…
-
- 0 replies
- 315 views
-
-
மத்திய ஆபிரிக்க குடியரசில், ஐ.நா அமைதிப்படையின் ரோந்துப் பணிக்காக, சிறிலங்கா விமானப்படை உலங்கு வானூர்திகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்நாட்டுப் போரை கட்டுப்படுத்துவதற்காக, ஆபிரிக்க, பிரெஞ்சுப் படைகள் தங்கியுள்ளன. இவற்றுக்கு உதவியாக, 2500 ஐ.நா அமைதிப்படையினர் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். பங்களாதேஸ், பாகிஸ்தான், மொறாக்கோ ஆகிய நாடுகள், இதற்கென மூன்று பற்றாலியன் படையினரை அனுப்பிவைக்க இணங்கியுள்ளன. இந்தோனேசியாவும், கம்போடியாவும், ஐ.நா அமைதிப்படைக்கான பொறியலாளர்களை அனுப்பி வைக்கவுள்ளன. இந்தநிலையில், சிறிலங்கா அரசாங்கம் விமானப்படை உலங்கு வானூர்திகளை அனுப்பவைக்க இணங்கியுள்ளது. கிராமப்புறங்களில் ரோந்துப் பணிக்காக, அங்கு அதிகளவில் உலங்கு வானூர்த…
-
- 0 replies
- 427 views
-
-
பிரித்தானிய பிரஜை குர்ஹாம் சாக்கீ கொலை வழக்குத் தொடர்பில் அளிக்கப்பட்ட தீர்ப்பு திருப்தி அளிப்பதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை;கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் இதனைத் தெரிவித்துள்ளார். நீதிமன்றத் தீர்ப்பானது சாக்கீயின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆறதல் அளிக்கும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பில் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். குர்ஹாம் சாக்கீ கொலை தொடர்பில் அளிக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்ட மா அதிபர் திணைக்களம் தொழில்சார் தன்மை மற்றும் நேர்மைத் தன்மை ஆகியனவற்றுடன் செயற்பட்டுள்ளதாகவும் அதற்காக நன்றி பாராட்டுவதாகவும் அவர்…
-
- 1 reply
- 318 views
-
-
எல்லா வான் தாக்குதல்களையும் தானே நடத்தியதாக, ஒப்புக் கொண்டுள்ளாராம் குசாந்தன்! [Friday 2014-07-18 10:00] விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எல்லா வான் தாக்குதல்களையும், அண்மையில் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட குசாந்தன் என்ற புலி உறுப்பினரே மேற்கொண்டதாக, திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு, கட்டுநாயக்க, கொலன்னாவ, கெரவலபிட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களை குசாந்தன் வழிநடத்தியுள்ளார். பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 2007ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் வான்படையின் இரண்டாம் நிலைத் தலைவராக தம்மை, புலிகளின் தலைவர் பிரபாகரன் நியமித்தார் என விசாரணைகளின் போது கு…
-
- 1 reply
- 666 views
-
-
புலம்பெயர் தமிழர்களின் உதவியை பெறுவதற்கான பொறிமுறையை வட மாகாணசபை உருவாக்க வேண்டும்! - மாவை சேனாதிராசா [Friday 2014-07-18 09:00] வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யவென புலம்பெயர் நாடுகளில் இருக்கும் பலர் எமக்கு பணத்தை அனுப்ப முன்வந்துள்ள போதும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே மாகாண சபை அதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டிய கடப்பாடு உண்டு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். மண்டைதீவு பிரதேச வைத்தியசாலையின் திறப்பு விழா நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், யுத்த காலத்தில் மருத்துவர் பற்றாக்குறை மிக ம…
-
- 0 replies
- 1.2k views
-
-
புகலிடம் கோரிச் சென்ற 153 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நோக்கம் இல்லையென உயர் நீதிமன்றத்துக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து வந்த இவர்களின் படகு, ஜுலை மாதம் 07ஆம் திகதி இடைமறிக்கப்பட்டதிலிருந்து அவுஸ்திரேலியாவின் குடிவரவு வலயத்துக்கு வெளியே புகலிடம் கோருவோர் ஆழ்கடலில் தடுத்துவைக்கப்பட்டனர். புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நோக்கம் பொதுநலவாயத்துக்கும் இல்லையென அரசாங்கப் பிரதிநிதியான ஸ் ரீபன் டொனஹு தெரிவித்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்னர் எழுத்து மூலமான அறிவித்தல் இன்றி படகில் உள்ள எவரும் பிறிதாரு நாட்டுக்கு அனுப்பப்படமாட்டார்கள் என ஒத்துக்கொண்டதற்கேற்ப அரசாங்கம் நடக்குமென வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத…
-
- 0 replies
- 290 views
-
-
இன்று காசா என்ற 18 கிலோ மீற்றர் அதிகபட்ச நீளம் கொண்ட 360 சதுர கிலோ மீற்றர் பரப்பு கொண்ட குறுகிய நிலபரப்புக்குள் பாலஸ்தீனத்து அப்பாவி பெண்களும், குழந்தைகளும், வயோதிபர்களும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் கொல்லப்படுகிறார்கள். 20,000 பேர் வரை இடம்பெயர்ந்தும் சுமார் 300 பேர் கொல்லப்பட்டும் உள்ளார்கள். நம் நாட்டில் நடந்த இறுதி யுத்தத்தில் இதைவிட பெருந்தொகையானோர் கொல்லப்பட்டார்கள். நம் நாட்டில் நடந்த அந்த யுத்தத்தை கைதட்டி ஆதரித்தவர்கள் இங்கிருக்கின்றார்கள். நமது நாட்டிலே எங்கள் மக்கள் கொல்லப்படும்போது அதை கண்டு காணாமல் இருந்து விட்டு, உலகத்தின் ஒரு மூலையில் எங்கோ கொல்லப்படும் மக்களுக்காக மட்டும் குரல் எழுப்பி முற்போக்குவாதியாக என்னை காட்டிக்கொள்ள என்னால் முடியாது. இதைவிட கு…
-
- 1 reply
- 255 views
-
-
இந்தியாவில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 இலங்கை அகதிகள் வசிப்பதாக மக்களவையில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கொடுக்குன்னில் சுரேஷ் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவில் அகதிகளாக ஆப்கானைச் சேர்ந்த 10,340 பேர், மியான்மரை சேர்ந்த 4,621பேர், இலங்கையைச் சேர்ந்த 1,02,241பேர், நாடு இல்லாதவர்களாக திபெத்தியர்கள் உட்பட 1,01,148பேர் உள்ளனர். அகதிகள் என கூறப்படும் வெளிநாட்டினரை கையாளுவதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு 2011 டிசெம்பர் 29ஆம் திகதி மத்திய அரசு ஒரு வழக்கமான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியி…
-
- 0 replies
- 261 views
-
-
தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்துடன் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பேசுவது அர்த்தமற்றதென்பது எமது நிலைப்பாடு. எனினும் தற்போது எம்முடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு செல்வது தொடர்பில் அரசாங்கம் தீர்மானித்திருப்பது முற்போக்கான நடவடிக்கையாகும் என தெரிவிக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எமக்கு நேரடி அழைப்பு வரும் பட்சத்தில் பேச்சுவார்த்தை தொடர்பில் பரிசீலிப்போம் எனவும் குறிப்பிட்டது. தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் ஆராய்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் கூட்டமைப்பிடம் வினவிய போதே…
-
- 1 reply
- 419 views
-
-
ஞானசார தேரருக்கு வழங்கிய வீசாவை ரத்து செய்தது அவுஸ்ரேலியா! [Friday 2014-07-18 10:00] அவுஸ்திரேலியா அரசாங்கம் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரின் வீசாவை அதிரடியாக ரத்துச் செய்துள்ளது. சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான ஞானசார தேரர் இந்த மாத இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இதன்போது அவர் அவுஸ்திரேலியாவில் சமய நிகழ்வுகளில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அவுஸ்திரேலியாவில் உள்ள பௌத்தர்கள் பலரும், ஞானசார தேரரின் வருகை அங்கு வாழும் சமூகங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடும் என்று வெளியிட்ட அச்சத்தின் அடிப்படையில் அவரின் வீசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியா தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 1 reply
- 242 views
-
-
சிவில் சமூகங்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது! - இலங்கை அரசிடம் கனடா வலியுறுத்தல். [Friday 2014-07-18 10:00] கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம், பொதுவிடயங்களில் மக்கள் பங்கேற்றல் போன்ற விடயங்களுக்கு இலங்கை அதிகாரிகள், மதிப்பளிக்க வேண்டும் என்று கனடா கோரியுள்ளது. கனேடிய வெளியுறவுறையின் நாடாளுமன்ற செயலாளர் தீபக் ஒபரோய் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையில் அரசசார்பற்ற அமைப்புக்கள் ஊடகவியலாளர்களுடன் கொண்டுள்ள உறவுகளை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து தாம் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசசார்பற்ற அமைப்புக்களை பிரச்சினைகளுக்கு உட்படுத்துவது ஜனநாயக பண்புகள் அல்ல. ஒரு நாட்டின் ஜனநாயக மீட்சிக்கு சிவில் சமூகங்களின்…
-
- 0 replies
- 136 views
-
-
எஸ்.பாக்கியநாதன் மட்டக்களப்பு மாநகர சபையினால் சிரமதானமும் கண்ணகையம்மன் வீதியும் செப்பனிடும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றன. பிரசித்தி பெற்ற அமிர்தகழி மாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாவதை முன்னிட்டு அதன் வளாகம், தீர்த்தக்குளம், மலசல கூடங்கள், பார்வீதி மற்றும் ஆலய வீதி என்பன துப்பரவு செய்யப்பட்டதாக மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார். ஆலயத்திற்கு வருகை தரும் அடியார்களின் நலன் கருதி மிகவும் மோசமான நிiயில் ஆலயத்திற்கு அருகிலுள்ள 200 மீற்றர் நீளமான கண்ணகையம்மன் வீதி மாநகரசபையின் வரிப்பணத்திலிருந்து ரூபாய் ஒரு மில்லியன் செலவில் திருத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இப்பணிகளில் மாநகர சபையின் நிர்வாக …
-
- 4 replies
- 393 views
-