ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142802 topics in this forum
-
மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியா கொலை வழக்கு! புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் விசாரணைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் – புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் மேன்முறையீட்டு மனுக்கள், 5 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டது. இந்த வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பிரதிவாதி சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, இந்த பிரதிவாதிகள் 08…
-
- 0 replies
- 204 views
-
-
1500 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்! பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு உடன்படிக்கையை மீள கைச்சாத்திட பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் தெரிவித்தார் அடிப்படை சம்பளமாக 1350 ரூபாவுடன் 1500 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் அத்துடன் 1700 ரூபா சம்பளத்திற்கான அழுத்தத்தை பிரயோகித்ததை அடுத்தே, 1500 ரூபா சம்பள அதிகரிப்புக்கான இணக்கப்பாட்டிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் வந்துள்ளதாகவும் இலங்கை தொ…
-
- 0 replies
- 189 views
-
-
30 JUL, 2024 | 07:01 PM கடந்த 2023ஆம் ஆண்டில் 9,436 சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரி கீத் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். இணையவழி பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக காலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதிகளவான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளன. அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 1,124 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 907 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 548 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதனால், கொவிட் -19 தொற்றின் போது கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து காணப்படுவதாக குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் எனவும் கை சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் குறிப்பாக பொது போக்குவரத்து மற்றும் சமூக கூட்டங்களின் ப…
-
- 1 reply
- 476 views
- 1 follower
-
-
தேசபந்து தென்னகோனுக்கு ஆதரவாக தேரர் குழுவொன்று பேரணி! தேசபந்து தென்னகோனை மீண்டும் பொலிஸ் மா அதிபர் பதவியில் அமர்த்துமாறு கோரி அகலக்கட சிறிசுமண தேரர் முக்கியஸ்தர்கள் குழுவொன்று கொழும்பில் இன்று பேரணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பமாகி கோட்டை போதி வரை சென்றதுடன் இந்த பாதயாத்திரையில் வெளிநாட்டு தேரர்களும் கலந்துகொண்டிருந்தனர் இந்தக் குழுவினர் போதி கோட்டைக்கு அருகில் சென்று சமயச் சடங்குகளை நடத்தியதுடன், பொலிஸ் மா அதிபருக்கு அவர் பதவிக்காலத்தில் பணியாற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர் அத்துடன் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்காக பொலிஸ் மா அதிபரினால் முன்ன…
-
-
- 1 reply
- 402 views
-
-
Published By: DIGITAL DESK 3 30 JUL, 2024 | 04:36 PM போதிய உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு இன்மையினால் நாட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் அதிக எடை மற்றும் உடல் பருமன் விகிதம் வேகமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற மருத்துவ முகாம் ஒன்றில் உரையாற்றிய அவர், நாட்டில் சுமார் 48 சதவீதமான பெண்கள் அதிக எடையுடனும், 33.3 சதவீதமான ஆண்கள் தங்கள் ஆரோக்கியமான எடையை விட அதிக எடையுடனும் உள்ளார்கள். சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகமாக உட்கொள்ளும் போது உடற்பயிற்சி செயற்பாடு குறைவாக உள்ளது. அத்துடன், அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 30 JUL, 2024 | 11:41 AM மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை (28) இடம் பெற்றுள்ளது. மரணமடைந்த இளம் தாய் 27 வயதுடையவர் எனவும் இவர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர் எனவும் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், இறந்த இளம் தாய்க்கு முதலாவது ஆண் குழந்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 09 ம் திகதி பிறந்துள்ளது. 11 ஆம் திகதி மருத்துவமனையில் இருந்து தாய் சேய் நலமாக வெளியேறியுள்ளார்கள். …
-
-
- 33 replies
- 2.7k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி நிதியாக தலா ஐந்து கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஆளும் கட்சி அமைப்பாளரான விஜயகலா மகேஸ்வரனிற்கு (Vijayakala Maheswaran) 19 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 5 கோடி ரூபா நிதி தற்போது 6 நாடாளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, த.சித்தார்த்தன், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி நிதிகளுக்கான நிதி நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.விக்னேஸ்வரனுக்கான நிதி இதுவரை அனுமதிக்கப்படவில்லை.…
-
- 2 replies
- 465 views
-
-
யாழில். காணி மோசடி – நில அளவையாளர் உள்ளிட்ட மூவர் கைது! adminJuly 30, 2024 காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நில அளவையாளர் உள்ளிட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. வெளிநாடொன்றில் வசிக்கும் தம்பதியினர், மருதங்கேணி பகுதியில் உள்ள தமது காணி ஒன்றிக்கு ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு அற்றோணி தத்துவத்தை வழங்கியுள்ளார். குறித்த நபர் தனக்கு அற்றோணி தத்துவம் ஊடாக கிடைக்கப்பெற்ற காணியை சூழ உள்ள காணிகளையும் அடாத்தாக கையகப்படுத்தி நில அளவையாளர் ஊடாக காணி வரைபடத்தினை கீறி அற்றோணி தத்துவ காணியை பிறிதொரு நபருக்கு மோசடியாக விற்பனை செய்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவ…
-
-
- 1 reply
- 397 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் – காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு! வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பெருந்திருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டுதல் வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு காளாஞ்சியும்,பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. நல்லூர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டில் மூலம் கல்வியங்காட்டில் உள்ள கொடிச்சீலை வழங…
-
- 4 replies
- 640 views
- 1 follower
-
-
29 JUL, 2024 | 06:22 PM ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் வேட்பாளரை களமிறக்க தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானமிக்க கூட்டம் கொழும்பு – விஜயராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இடம்பெற்றது. கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார். ஸ்ரீல…
-
-
- 59 replies
- 4.3k views
- 3 followers
-
-
Published By: DIGITAL DESK 7 29 JUL, 2024 | 04:59 PM நாங்கள் மீட்பு பெறவேண்டும். மீட்பு பெறவேண்டுமானால் முதலில் ஊழல் மிக்க, அழிவுமிக்க, தூரநோக்கற்ற ஆளும் கும்பலை விரட்டியடிக்க வேண்டும். எல்லாத்துறையிலும் வளமிக்க நாடொன்றை உருவாக்குவதே எமது நோக்கமாகும் : அநுர குமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி ஒன்றியத்தின் மாத்தறை மாவட்ட கருத்தரங்கு கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாத்தறை பர்ள் பெலஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இங்கு மேலும் உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க, நாங்கள் நீண்ட காலமாக வாக்குகளை அளித்திருக்கிறோம். வாக்குகளை அளிக்கும்போது அரசாங்கமொன்றை அமைக்கும்போது பிரஜைகளிடம் நிலவிய எதிர்பார்ப்புகள் ஈடேறிய…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 29 JUL, 2024 | 02:21 PM தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஸ்டியை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) கிளிநொச்சியில் நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எனினும், எதிர்வரும் மாதம் 10 ,11ஆம் திகதிகளில் மத்திய குழு கூடி பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது தேர்தல் வி…
-
- 4 replies
- 337 views
- 1 follower
-
-
29 JUL, 2024 | 12:27 PM மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் சூரிய மின் உற்பத்தியை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (29) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். நாவற்காடு கிராமத்தில் கடந்த 2022 ஒக்டோபர் மாதம் திறக்கப்பட்டு இயங்கி வரும் சூரிய சக்தி மின் உற்பத்தி (சோலார் பவர்) நிலையம் மேலும் பல மடங்கு விஸ்தரிக்கப்படவிருப்பதாக கூறி சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அண்டிய கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த சூரிய மின் உற்பத்தியை விஸ்தரித்தால் தமது விவசாய நிலங்களுக்கும், குடியிருப்புக்களுக்கும் கிரா…
-
- 1 reply
- 346 views
- 1 follower
-
-
Published By: VISHNU 29 JUL, 2024 | 01:40 AM வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகளில் (டிப்போக்களில்) கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (28) முதற் கட்டமாக 29 பேருக்கான நியமனக் கடிதங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வைத்தியசலையின் முன்னேற்ற செயற்பாடுகள் குறித்தும் ஆராய்வுக…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
முறையான உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் மூலம் குறித்த அபராதத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் காலங்களில் உரிமம் பெறாத வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் விதிக்கப்படும் எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/306962
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
Published By: VISHNU 28 JUL, 2024 | 11:43 PM தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள பொதுக் கட்டமைப்பு சில முக்கிய தீர்மானங்களை ஞாயிற்றுக்கிழமை (28) எடுத்துள்ளது. தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டம் யாழ் நகரிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற போதே பொதுக் கட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து முக்கிய சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இச் சந்திப்பு தொடர்பாக சிவில் சமூகப் பிரதிநிதியும் பொதுக் கட்டமைப்பின் உறுப்பினருமான அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். இதன் போது அவர் தெரிவித்ததாவது.. தமிழ்த் தேசிய அர…
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
அமலநாயகிக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு! மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகியை பயங்கரவாத தடுப்பு பிரிவில் இன்று முன்நிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின், அலுவலகத்திற்கு இன்று காலை 10.00மணிக்கு சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவிக்கு இவ்வாறு புலனாய்வுப் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமது உரிமைக்காக போராடுவோரை …
-
- 0 replies
- 213 views
-
-
Published By: DIGITAL DESK 7 28 JUL, 2024 | 08:28 PM கிளிநொச்சி இரணை மடுக்குளத்தின் கீழ் உள்ள புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்புக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 750ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப் பரப்பில் மாவட்ட பயிர்செய்கை குழுவின் தீர்மானங்களை மீறி மேலதிக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கமக்கார அமைப்பின் சிபார்சுகளின் படி சிறுபோகத்துக்கான அரச மானியங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி இரணை மடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோக நெற்செய்கைக்கு தீர்மானிக்கப்பட்ட அளவுகளின் படி புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்புக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள ஆயிரத்து 707 ஏக்கர் நீர்வரி காணிகளில் 530 ஏக்கர் காணி தவிர்ந்த ஏனைய ஆயிரத்த…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
ஜனாதிபதி வேட்பாளர் - இறுதி முடிவை கூறிய மகிந்த! ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானம் நாளை (29) எடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கேள்வி - வேட்பாளரின் நிலை எப்படி உள்ளது? பதில் - திங்கட்கிழமை முடிவு செய்வோம். திங்கட்கிழமை வரை காத்திருங்கள். கேள்வி - தம்மிக்க பெரேராவை உங்களுடன் இருப்பதை பார்த்தோமே? பதில் - ஒன்றாகவே அமர்ந்திருந்தோம். அவர் எமது எம்.பி. அல்லவா! கேள்வி - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி காலியில் அறிவித்துள்ளாரே? பதில்…
-
- 1 reply
- 485 views
-
-
சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளுள் இலங்கை : ஃபோர்ப்ஸ் நாளிதழ் அறிக்கை ! By kugen சுற்றுலா செல்வதற்கான சிறந்த முதல் மூன்று நாடுகளுள் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் நாளிதழின்படி, 2024ஆம் ஆண்டில் கோடைக் காலத்தில் சுற்றுலா செல்வதற்காக கிரீஸ் , மொரிஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உலகின் சிறந்த சுற்றுலா நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன. இலங்கை மேடு பள்ளங்களுடன் மற்றும் கண்கவர் கடற்கரைகளுடன் காணப்படக்கூடிய தீவாக உள்ளதுடன் ஒப்பீட்டளவில் பாலி நாட்டைப் போன்ற ஈர்ப்பைக் கொண்டது. இதேவேளை, சுற்றுலாப் பயணிகளுக்காக அதிசொகுசு ரீதியிலான வசதிகள் இலங்கையினுள் காணப்படுகிறது. இயற்கை அழகை கண்டுகளிக்கும் விதத்தில் 22 தேசிய பூங்காக்கள் உள்ளதாகவும் ஃபோர்…
-
-
- 2 replies
- 409 views
-
-
ஒற்றுமையின்மையால் எமது மக்களையும் மண்ணையும் நாம் இழந்துவிடக்கூடாது தமிழர்கள் பூர்வீகமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்தார்கள் என்கிற வரலாற்றை சிதைக்கும் வகையில் இன்றைக்கு தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருகிறது. எமது ஒற்றுமை இன்மை காரணமாக எமது மக்களையும் மண்ணையும் நாங்கள் இழந்துவிடக்கூடாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ கட்சியின் தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, முன்னாள் போராளி ஜெகன் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் 41வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (27) மாலை 6 மணியளவில் மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் அலுவலகத்தில் இடம…
-
- 0 replies
- 383 views
-
-
யாழ். சிறையில் 74 தமிழக மீனவர்கள்! 28 JUL, 2024 | 11:17 AM இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 74 தமிழக கடற்றொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு காலகட்டங்களில் கைதாகி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இவர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 64 பேரின் வழக்குகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (30) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த ஜூலை முதலாம் திகதி 25 கடற்தொழிலாளர்களும், ஜூலை 16ஆம் திகதி 04 கடற்றொழிலாளர்களும…
-
- 1 reply
- 168 views
- 1 follower
-
-
27 JUL, 2024 | 08:35 PM (நா.தனுஜா) தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேசுவதற்குத் தாமும் தயாராக இருப்பதாக தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நிறைவேற்றதிகாரமுடைய 9 ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் எனவும், ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதித்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் நேற்று முன்தினம் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு தமிழ்மக்கள் ச…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
மண்ணெண்ணை மற்றும் டீசல்களில் ஓடும் வாகனங்கள் குறித்து விசாரணை பொது போக்குவரத்தில் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் லொறிகளில் 30 சதவீதம் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணை பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மண்ணெண்ணை மற்றும் டீசல்களில் ஓடும் வாகனங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புகைப்பரிசோதனையின் போது மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை அடையாளம் காண முடியாது எனவும், வாசனையை வைத்தே வாகனங்களை அடையாளம் காண முடியும் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பயணிகள் போக்குவரத்து குறிப்பாக பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் உரிமையாளர்கள் மண்ணெண்ணெய் மற்றும் டீசலுக்கு இரண்டு எண்ணெய் தாங்கிகள…
-
- 0 replies
- 346 views
- 1 follower
-