ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி ; 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே வடக்கு மாகாணம் உள்ளது - வடக்கு ஆளுநர் 11 Mar, 2026 | 07:18 PM (எம்.நியூட்டன்) இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பானது தற்போது 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே காணப்படுகிறது. எதிர்வரும் சில ஆண்டுகளில் இப்பங்களிப்பை ஆகக்குறைந்தது 10 சதவீதமாக உயர்த்துவதற்கான இலக்கை நோக்கி நாம் தற்போது தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கியுள்ளோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'வடக்கு மாகாண தொழில்முனைவோர் விருதுகள் - 2025' வழங்கும் விழா, மன்றத்தின் தலைவர் கு.வசீகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (10) கொக்குவிலு…
-
-
- 1 reply
- 172 views
- 1 follower
-
-
இலங்கையில் மிரட்டும் எலி காய்ச்சல்: 1,800 பேர் பாதிப்பு! Mar 12, 2026 - 10:20 AM இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,800 எலி காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா இதனை தெரிவித்தார். “இலங்கையில் இரண்டாவதாக அதிகளவில் பதிவாகும் தொற்றுநோய் எலி காய்ச்சல் ஆகும். ஆண்டுதோறும் சுமார் 13,000 நோயாளர்கள் தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிக்கையிடப்படுகின்றனர். இது இதைவிட அதிகமாகவும் இருக்கக்கூடும். கடந்த சில ஆண்டுகளாக 100 முதல் 200 மரணங்கள் வரை பதிவாகின. 2024 ஆம் ஆண்டில் 300 மரணங்கள் பதிவாகின. 2025 ஆ…
-
- 0 replies
- 97 views
- 1 follower
-
-
நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு! adminMarch 11, 2026 வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார். வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபாய் நிதியில் “எக்கோ ரூரிசம்” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உரிய முறையிலான திட்டமிடல் இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. அத்துடன் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பாவனை இன்றி அழிந்து போயுள்ளன என குறித்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் குறித்த திட்டத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன எனவும…
-
- 7 replies
- 324 views
- 1 follower
-
-
வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு! adminMarch 12, 2026 யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் , மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகஸ்தரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். வடமராட்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை (11.03.26) நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கரவெட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக நேற்றைய தினம் மாலை கரவெட்டியில் உள்ள தனது வீட்டில், தனது இரண்டு பிள்ளைகளையும் ஒரு அறையில் பூட்டி வைத்து , மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு, மனைவியை கத்தியால் குத்த முனைந்த வேளை , மனைவி, கணவனை கீழே தள்ளி விழுத்தி விட்டு ,…
-
-
- 7 replies
- 545 views
-
-
புற்றுநோயால் அரசியல் கைதியின் சகோதரி மரணம்! --- --- --- *சாகும் போதாவது, தலைமாட்டில் இருக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் மன்றாட்டமாக கேட்டிருந்தார் --- --- --- கிழக்கு மாகாணம் திருகோணமலை தோப்பூர்-மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்ற அரசியல் கைதியின் சகோதரியான சுப்பிரமணியம் கமலாதேவி, புற்றுநோயினால், இன்று வியாழக்கிழமை உயிரிழந்தார். சிவகுமார் என்ற அரசியல் 31 வருடங்கள் தொடர்சியாக கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த சிவகுமாரின் சகோதரியான, கமலாதேவி தான் இறப்பதற்கு முன்னர், தனது சகோதரனை பார்க்க வேண்டும் என கேட்டிருக்கிறார். தான் உயிரிழக்கும்போது தனது சகோதரன், தன் தலைமாட்டில் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் உருக்கமாக கோரியிருக்கிறார…
-
-
- 3 replies
- 235 views
- 1 follower
-
-
யாழில் நயினாதீவு பகுதியில் ஐயர்களுக்கிடையில் நடந்த சண்டை ஒரு ஐயர் வாள் வெட்டில் பலி..! யாழ்ப்பாணம் நயினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்த நிலையில் ஒரு குருக்கள் உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று (9) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நயினாதிவு வீரகத்தி வினாயகர் ஆலய பூசகருக்கும் நாவலப்பிட்டியிலிருந்து தொழில் நிமிர்த்தம் தொழில் நிமித்தம் யினாதீவுக்கு சென்றிருந்த குருக்களுக்குமிடையில் ஏற்பட்ட தொழில் தகராறே வாள்வெட்டுவரை சென்று கொலையில் முடிந்துள்ளது. நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருகரது வாள் வெட்டிலேயே நாவலப்பிட்டியிலிருந்து சென்ற பூசாரி பலியாகியுள்ளார். உயிரிழந்தவர் நாவலப்பிட்டியாச் சேர்ந்த 40 வயதான கிருஷ்ணகுமார் எனு…
-
- 3 replies
- 338 views
-
-
பெண்களின் ‘ஊதியமற்ற’ உழைப்பு பொருளாதாரத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மணிலாவில் தெரிவிப்பு Published By: Digital Desk 3 11 Mar, 2026 | 12:58 PM பெண்கள் குடும்பத்திற்காக ஆற்றுகின்ற, எனினும் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத ‘ஊதியமற்ற’ வீட்டுப் பணிகள், குடும்பத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன என்பதைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார். பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைமையகத்தில் இன்று (மார்ச் 10) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் முதன்மை உரை நிகழ்த்திய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். பெண்களின் பணிகளை உரிய முறையில் இனங்கண்டு அதனை அங்கீகரிப்ப…
-
- 0 replies
- 97 views
- 1 follower
-
-
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை Mar 11, 2026 - 11:38 AM வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர் நுசித் குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: தொழிற்சங்கங்கள் முன்வைத்த 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதில் 59 கோரிக்கைகள் ஆரம்பக் கட்டத்திலேயே நிர்வாகத்தினால் வழங்கப்பட்டன. எஞ்சிய 5 கோரிக்கைகளில் 3 விடயங்கள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட்டது. தற்போத…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: நால்வர் கைது: இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு! யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் ஆயுதங்கள் தாங்கிய குழுவினரால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் இன்று(11) அதிகாலை 1.00 மணிக்கும் 2.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளன. சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு வீட்டின் மீதும்,கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 வீடுகள் மீதும் குறித்த ஆயுதக் குழுவினர் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிலுள்ள மீசாலை மேற்கு, வங்களா வீதியிலுள்ள வீடொன்றில் புகுந்த ஆயுதக்குழுவினர் வீட்டிலிருந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், கொடிகாமம் பொலிஸ் பிரி…
-
- 0 replies
- 144 views
-
-
மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும் தொடர்ச்சியான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பு - ஜனாதிபதி Published By: Vishnu 11 Mar, 2026 | 06:31 AM மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக அரசாங்கம் தற்போது தேசியக் கொள்கை ஒன்றை உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். உரிய தரத்துடனான புதிய பஸ்களைச் சேவையில் இணைப்பதற்கும், பழைய பஸ்களைப் படிப்படியாக போக்குவரத்து கட்டமைப்பிலிருந்து நீக்குவதற்குமான திட்டங்களை அரசாங்கம் தற்போது தயாரித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது ஒரே தடவைய…
-
- 0 replies
- 84 views
- 1 follower
-
-
லிட்ரோ எரிவாயு விலை ரூ.300 ஆல் உயர்த்தப்பட்டது Published By: Vishnu 10 Mar, 2026 | 10:30 PM இன்று 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.300 ஆல் அதிகரிக்கப்படும், மேலும் அதன் புதிய விலை ரூ.3990 ஆக இருக்கும். https://www.virakesari.lk/article/240666
-
- 1 reply
- 137 views
- 1 follower
-
-
கொழும்பில் கூடும் 300-க்கும் மேற்பட்ட சர்வதேச தோல் நோய் நிபுணர்கள் Mar 10, 2026 - 06:52 PM வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த 2வது சர்வதேச நிபுணத்துவ மாநாடு நாளை (11) முதல் மார்ச் 14 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை தோல் நோயியல் மற்றும் அழகியல் மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் தலைவரும், இந்த சர்வதேச மாநாட்டின் தலைவருமான தோல் நோய் விசேட வைத்திய நிபுணர் நயனா மதரசிங்க, இந்த மாநாடு முழு உலகினதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு நிகழ்வாக அமையும் எனக் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாட்டில் தோல் நோயியல் துறையைச் சேர்ந்த 342 வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்ட…
-
- 1 reply
- 139 views
- 1 follower
-
-
விலையேற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்குக - அரசாங்கத்திடம் மனோ கணேசன் கோரிக்கை 10 Mar, 2026 | 05:28 PM (க.சிவலிங்கமூர்த்தி) மத்திய கிழக்கு போர்ச் சூழல் தீவிரமடைவதற்கு முன்னரே இலங்கையில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பாரிய விலை உயர்வுகள் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைத்துள்ளதாகவும் விலையேற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். வெ்வாய்க்கிழமை (10) ஊடகங்களுக்குக…
-
- 0 replies
- 81 views
- 1 follower
-
-
84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு! காலி தேசிய வைத்தியசாலையில் இரண்டு நடமாடும் குளிர்பதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலி தலைமை நீதிவான் சமீர தொடங்கொட இன்று (11) காலை காலி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். காலி துறைமுக பொலிஸார் காலி தலைமை நீதிவான் நீதிமன்றத்திற்கு விடுத்த கோரிக்கையை அடுத்து நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மார்ச் 4 அன்று இலங்கை கடல் எல்லைக்கு அருகே, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா மீது தாக்குதல் நடத்திய அதை மூழ்கடித்தது. இந்தியா நடத்திய…
-
- 2 replies
- 243 views
- 1 follower
-
-
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு! இன்று (11) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பே இந்த தீர்மானத்துக்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1467902
-
- 0 replies
- 92 views
-
-
யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி இருக்க வேண்டும், ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவு 192 பைந்த் ஆகும். இது எமது இரத்த வங்கியைப் பொறுத்த வரையில் மிகவும் ஆபத்தான நிலையாகும், இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை விநியோகிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். இரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்…
-
- 1 reply
- 122 views
- 1 follower
-
-
யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் - துணைவேந்தர் , பதிவாளரிடம் 3 மணி நேர விசாரணை adminMarch 10, 2026 சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியேற்றியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பணித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் இன நல்லிணக்கப் பிரிவுக்குப் பொறுப்பான பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்தது. குறித்த விசாரணை அறிக்கையானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணைகளின் அடிப்படையில் கறுப்பு கொடியேற்றிய சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாக 2 மாணவி…
-
- 0 replies
- 105 views
-
-
புத்துயிர் பெறவுள்ள கிட்டு பூங்கா adminMarch 10, 2026 யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவை புனரமைப்பு செய்யும் முகமாக , பூங்காவை துப்புரவு செய்யும் பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதியான கேணல் கிட்டு என அழைக்கப்படும் சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் உள்ளிட்ட புலிகளின் 10 போராளிகள் பயணித்த கப்பலை சர்வதேச கடற்பரப்பினுள் இந்திய கடற்படையினர் வழிமறித்து சரணடைய கோரிய நிலையில் ,16.01.1993 அன்று கப்பலுடன் வெடித்து சிதறி வீரகாவியமானார்கள். இந்நிலையில் கேணல் கிட்டுவின் நினைவாக யாழ்பாணத்தில் முத்திரை சந்தி பகுதியில் 1994ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ” கிட்டு பூங்கா” திறந்து வைக்கப்பட்டது. யுத்தம் தீவிரமடைந்து 1995 ஒக்டோபர் 30ஆ…
-
- 0 replies
- 117 views
-
-
மின்சார சபை ஊழியர்களை உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தல் 11 Mar, 2026 | 10:27 AM நாட்டின் தேசிய மின்சார பரிமாற்ற அமைப்பைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு பணிக்கு வரத் தவறினால் அது கடும் ஒழுக்காற்று குற்றமாகக் கருதப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேஷனல் டிரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்வீஸ் புரொவைடர் (பிரைவேட்) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என். எஸ். வெத்தசிங்க வெளியிட்ட அறிவிப்பில், நாட்டின் மின்சார பரிமாற்ற அமைப்பின் தொடர்ச்சியான செயல்பாட்டை எந்தவித தடையும் இன்றி பராமரிப்பது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் இலங்கை மின்சார…
-
- 1 reply
- 113 views
- 1 follower
-
-
மணல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மணல் விலை அதிகரிப்பு - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் 10 Mar, 2026 | 04:53 PM மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது என தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்திடமிருந்து போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (10) …
-
- 1 reply
- 168 views
- 1 follower
-
-
குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் மார்ச் 30 ஆரம்பம் - சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவிப்பு 10 Mar, 2026 | 02:20 PM குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளை இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்துள்ளார். 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திங்கட்கிழமை (9) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நீதவான் ரி.பிரதீபனால் எடுத்…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா தம்பதியினர் கைது! 10 Mar, 2026 | 05:16 PM கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குப் பெருந்தொகையான 'குஷ்' போதைப்பொருளைக் கடத்தி வந்த கனடா நாட்டுத் தம்பதியினர் சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கனடாவின் அல்பர்ட்டா பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கணவன் மற்றும் 29 வயதுடைய மனைவி என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 23 பொதிகளில் அடைக்கப்பட்டு இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 கோடி ரூபா பெறுமதியான 32 கிலோகிராம் 159 கிராம் எடையுடைய 'குஷ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் சர்வதேச சந்தைப் பெறுமதி சுமார் 32 கோடியே 15 இலட்சத்த…
-
-
- 2 replies
- 276 views
- 1 follower
-
-
அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! Published By: Digital Desk 1 10 Mar, 2026 | 11:36 AM மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனை தெரிவித்துள்ளார். இதற்கான கையெழுத்துகளைச் சேகரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தேவையான கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டவுடன், அடுத்த வாரம் சபாநாயகரிடம் இந்தத் தீர்மானம் கையளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/240606
-
- 0 replies
- 101 views
- 1 follower
-
-
"பெண்களின் தலைமைத்துவம் - செழிப்பான தேசத்தின் பெருமை": மாத்தறையில் பிரம்மாண்டமான மகளிர் தின விழா! Published By: Digital Desk 1 10 Mar, 2026 | 10:27 AM "பெண்களின் தலைமைத்துவம் - செழிப்பான தேசத்தின் பெருமை" எனும் தொனிப்பொருளின் கீழ், பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் மண்டபத்தில் ற தேசிய மகளிர் தினக் கொண்டாட்டம் நேற்று முன்தினம் (08) நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள இலங்கை மகளிர் பணியகம் ஆகியவற்றினால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வருடத்தின் மகளிர் தினமானது "பெண்களின் தலைமைத்துவம் - செழிப்பான தேசத்தின் பெருமை" என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்த…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
ஐரோப்பிய சேவைக்காக புதிய மாற்றுப் பாதையை கையாளும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்! மத்திய கிழக்கு வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், அதன் ஐரோப்பிய இடங்களுக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் அசர்பைஜான் வழியாக மாற்று வழியை ஏற்றுக்கொண்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுடன் தொடங்கிய விரிவடையும் மோதல் காரணமாக மத்திய கிழக்கில் வான்வெளி பெரும்பாலும் மூடப்பட்டே உள்ளது. ஈரான் இப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது, இதனால் இப்பகுதிக்கு செல்லும் மற்றும் இப்பகுதி வழியாக விமான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக பாதை மாற்றத்தின் காரணமாக லண்டனுக்கு விமானப் பயணம் ஒன்றரை மணி நேரம் அதிகரித்துள்ளதாக …
-
- 0 replies
- 158 views
-