Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய தேசியக் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக 94 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 151 வாக்குகளும் பெறப்பட்டன. பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் வாக்களித்தன. எதிராக அரசாங்கத்தில் கூட்டு சேர்ந்துள்ள தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய தவிர்ந்த ஏனைய கட்சிகள் வாக்களித்தன. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=313313032021784996#sthash.Uqvp2gHl.dpuf

  2. இலங்கை அரசியல் யாப்பிற்கமைய தனிநாட்டு உருவாக்கத்துக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவளிக்கவோ, உதவி புரியவோ மாட்டோமென சத்தியப்பிரமாணம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மீண்டும் தமிழ் இளைஞர்களின் கழுத்துகளில் சயனைட் குப்பிகளை மாட்டிவிடவே முயற்சிக்கின்றனர். கடந்த 18 ஆம் திகதி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட யுத்தத்தில் உயிரிழந்தோருக்கான நினைவஞ்சலி நிகழ்வுகள் இதனையே எடுத்துக் காட்டுகின்றன என தேசிய சுதந்திர முன்னணி செயலாளர் அறிவித்துள்ளார். கடந்த 18 ஆம் திகதி யுத்தத்தில் உயிர் நீத்தோரை நினைவுகூர்ந்து வட மாகாணத்தில் சில நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் …

  3. யாழ்.பல்கலைக்கழகத்தினை தன்னிச்சையாக இழுத்து மூடிய நிர்வாகத்தின் செயற்பாட்டை கண்டித்தும் மாணவ தலைவர்கள் மற்றும் பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களிற்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தலை கண்டித்தும் நாளை முதல் பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னராக விசேட இடமொன்றில் இன்று நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் மாணவ பிரதிநிதிகள் அவ்வறிவிப்பை விடுத்தனர். நாளை முதல் அடுத்து வரும் இரண்டு தினங்களிற்கு இப்பகிஸ்கரிப்பு தொடருமென தெரிவித்த அவர்கள் விரிவுரைகள் எதிர்வரும் 26 ம் திகதி திங்கட்கிழமையே நடைபெறுமெனவும் தெரிவித்தனர். குறித்த இரண்டு நாட்களும் எந்தவொரு மாணவனும் விரிவுரைகள் எதில…

  4. இலங்கையின் தற்போதைய நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக மீண்டும் ஒருஐமுறை இலங்கை வருமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முனுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுத்துள்ளார். சீனாவின் சங்காய் நகரில் நடைபெறும் ஆசிய நாடுகளிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இந்தச் சந்திப்பை மேற்கொண்டார். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கையில் இடம்பெற்றுள்ள அபிவிருத்திகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதி விளக்கினார். இலங்கைக்கு மற்றொரு விஜயத்தை மேற்கொண்டு இந்த அபிவிருத்திகளைப் பார்வையிடுமாறும் ஜனாதிபதி இதன் போது கோரிக்கை விடுத்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைம…

  5. காங்கேசன்துறை வீதி - கொக்குவில், பூநாறி மரத்தடியில் இன்று செவ்வாய் இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். இவர்களின் ஒருவரின் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகத் தெரியவருகிறது. 6 மோட்டர் சைக்கிள்களில் வந்த இளைஞர் குழுவினர், வீதியில் ஓட்டோவில் சென்றுகொண்டிருந்தவர்களை இழுத்து விழுத்தி தாறுமாறாக வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். கொக்குவில் - பெற்பதி வீதியைச் சேர்ந்த செந்தீசன் (வயது 24), பூநாறிமரத்தடியைச்; சேர்ந்த திலீப் ஆகியோரே வாள்வெட்டில் காயமடைந்தவர்களாவர். ஓட்டோவைச் செலுத்தி வந்த இளைஞர் வெட்டுக் காயத்துடன் தப்பியோடிய நிலையில் ஓட்டோவுக்குள் இருந்த இளைஞரை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழுவினர் சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளனர். பின்னர் அவர்கள் தப்ப…

  6. வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் புதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமை சட்டத்தரணியும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினருமான யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார். இந்த புதிய ஆதாரங்கள் சர்வதேச சுயாதீன விசாரணைகளின் இன்றியமையா தன்மையை மேலும் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் என்ற அமைப்பினால் வெள்ளைக் கொடிச் சம்பவம் பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுளளதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக, சிவிலியன் மற்றும் காவல்துறை முக்கிய தலைவர்கள் சரணடைந்த போது கொலை செய்யப்பட்டதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலைமையானது பாரியளவிலான சர்வதேச மனிதாபிமான சட்ட மீற…

    • 2 replies
    • 1.2k views
  7. முல்லைத்தீவு, மல்லாவி, யோகபுரத்திலுள்ள உஷாலினியின் வீட்டுக்கு புலனாய்வு பிரிவினர் என்று தங்களை அடையாளப்படுத்திய சிலர் நேற்று(20) சென்றுள்ளனர். இசைப்பிரியாவுடன் இருந்த மற்றுமொரு பெண் தொடர்பில் ஊடகங்களின் வெளியான புகைப்படத்தை காண்பித்து வீட்டிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புலனாய்வு பிரிவினருடன் இராணுவத்தினரும் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/111216-2014-05-20-15-36-22.html

    • 1 reply
    • 684 views
  8. மோடிக்கும் பாடம்எடுக்கத் தயாராகிறார் மகிந்த ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார் கெஹலிய இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு இலங்கை ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டு;ள்ளார். நரேந்திர மோடி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் கெஹலிய தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் வலுவாகவே காணப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/a…

  9. காணாமற் போனோர் பற்றிய ஆணைக்குழுவுக்கு இனி இணையம் மூலமும் முறையிடலாம் மே 21, 2014 காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆனைக்குழு, மக்களின் முறைப்பாடுகளை ஏற்கவும், அவை தொடர்பான தகவல்களை மக்களுக்குத் தந்து, தனது சேவையை வழங்கவும் வசதியாக உத்தியோகபூர்வமான இணையத்தளம் ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளது. பொதுமக்கள் www.pcicmp.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக உலகின் எந்தப் பாகத்தில் இருந்தும் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பங்கள், முறைப்பாடுகளைச் செய்ய முடியம். அது போல அவை தொடர்பில் ஆணைக்குழு பல்வேறு நிலைகளில் எடுத்துள்ள தொடர் நடவடிக்கைகளையும் அறிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 18 ஆயிரத்து 590 விண்ணப்பங்களை ஆணைக்குழு பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. அவற்றில் சுமார் 5 ஆயிர…

  10. கனடாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் அண்மைக்காலமாக விரிசல் நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங் (Shelley Whiting)அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது எனவும், இந்த நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் வைட்டிங் தெரிவித்திருந்தார். எனினும், கனேடிய உயர்ஸ்தானிகரின் இந்த கூற்றுக்கு இலங்கை அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சு நேரடியாகவே அதிருப்தியை வெளியிட்டுள்ளது. யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடர்பிலான நிகழ்வுகளை கனேடி…

    • 0 replies
    • 691 views
  11. யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர். இராசகுமாரனை கொழும்பு – பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு தலைமையகமான 4ஆம் மாடிக்கு நாளை புதன்கிழமை விசாரணைக்கு வருமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இன்று இரவே கொழும்பு புறப்பட்டுச் சென்றுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நெருங்கிய நிலையில் 5 நாட்கள் தடீரென மூடப்பட்ட யாழ்ப்பாணப் பல்கைலைக்கழகம் நாளை கல்விச் செயற்பாடுகளுக்காகத் திறக்கப்படுகிறது. இந்நிலையில் முள்ளிவாய்க்காலில் பலியான மக்களுக்கு நாளை பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் சங்கத்தினரும் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததனர் எனவும் தெரியவருகிறது. இந்நிலையிலேயே யாழ்.இராணுவ சிவில் தலைமைக் காரி…

    • 0 replies
    • 559 views
  12. வடமாகாணக் கல்விக்கு 310 மில்லியன் ரூபா நிதி; வழங்கியது உலகவங்கி news வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்கென உலகவங்கி 310 மில்லியன் ரூபா நிதி வழங்கியுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித் துள்ளார். வடக்கு மாகாணத்தில் கல்வி அபிவிருத்திகென ஆண்டுதோறும் உலக வங்கி நிதி ஒதுக்கி வருகின்றது. பாடசாலைகளுக்கான கட்டடம் அமைத்தல் மாணவர்களின் கல்வித் தேவைகக்கான கணினி மற்றும் உபகரண கொள்வனவு அதிபர் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல் போன்றவற்றுக்கு அந்த நிதி பயன்படுத்தப்படும். உலக வங்கியின் ரி.எஸ்.ஈ.பி. திட்டத்தில் இந்த நிதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அபிவிருத்தி நிதியாக 310 மில்லியன் ரூபா நிதி வடக்கு மாகாணத்துக்கு …

    • 4 replies
    • 592 views
  13. இனக்கொலையாளியும் அரசபயங்கரவாதியுமான மகிந்த ராஜபக்ச தலைமையில் முள்ளிவாய்க்கால் அழிப்பு நாள் வெற்றி நாளாகக் கொண்டாடப்பட்டது. முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை சாட்சிகளை முடிமறைத்துக் கொலைசெய்து அழித்துவிட்ட நாளைக் கொண்டாடும் கோரத்தை வெற்றி என்கிறது இலங்கை அரச பாசிசம். உலகின் அதிகார மையங்கள் அனைத்தும் இணைந்து அதிபயங்கரக் கொலையாளிகளான ராஜபக்ச குடும்பத்தை உருவாக்கிய இந்த நாள் மனித குலம் தோல்வியடைந்த நாள். இதே வேளை கொல்லப்பட்ட உறவினர்களுக்குக் கூட அஞ்சலிசெலுத்தும் அடிப்படை உரிமையை மறுக்கும் இலங்கை அரச பாசிஸ்டுக்கள் வடக்கையும் கிழக்கையும் இராணுவக்களைகளை விதைத்திருந்தனர். ஒவ்வொரு மூலையிலும் இராணுவமும் அரச படைகளும் ஒரு போரின் முன்னறிவைப்பைப் போ…

    • 4 replies
    • 1.5k views
  14. மாவனல்லவில் முஸ்லீம் கடைகளின் தீவைப்பு - விசாரனைகளை விரைவுப்படுத்தும் படி ரிஷாட் வேண்டுகோள்! 19 மே 2014 மாவனல்ல சந்தியில் அமைந்துள்ள முஸ்லீம் கடையொன்று தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரனைகளை விரைவுப்படுத்தும் படி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாவனல்ல பொலிசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தினை நேரடியாக சென்று பார்வையிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஸ்தல விசாரணைகளினை மேற்கொண்டு வரும் பொலிஸாரிமே இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மாவனல்ல குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் சூத்திரதாரிகளினை கண்டறியும் பொருட்டு விசாரணைகள் முடுக்கி விடப…

  15. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கவும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி பூரணமாக நிறைவேற்றப்படுவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் மக்களை விழிப்பூட்டுவதற்குமான கூட்டங்கள் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பிலும் 31ஆம் திகதி சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்திலும் அக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த முக்கிய கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைமப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்தி…

    • 0 replies
    • 318 views
  16. மன்னார், தாராபுரம் கிராமத்திலுள்ள தம்பதிக்கு 15,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பிறந்து 15 நாட்களேயான ஆண் சிசுவொன்றை செவ்வாய்க்கிழமை (20) காலை மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார். அத்துடன், குறித்த தம்பதியை கைதுசெய்ததாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பிரிவு மற்றும் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் தாராபுரம் கிராமத்திற்குச் சென்று இச்சிசுவை மீட்டுள்ளனர். இக்குழந்தை கடந்த 04 நாட்களுக்கு முன்னர் 15,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன், இச்சிசுவின் தாய் வவுனியா, செ…

    • 0 replies
    • 320 views
  17. ரத்தம், கண் தான சேவையை ஆத்மார்த்தமாக செய்யும் அகதி- ‘‘ஒருவருக்கு ரத்தம் கொடுக்க பத்துபேர் பறந்தோடி வரணும்’’ விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஜீவன் உரையாற்றுகிறார் ‘அம்மாவுக்கு காலில் குண்டடிபட்டு ஆபத்தான நிலையில் அகதியாக தமிழகம் வந்த எங்களை அரவணைத்துக் காப்பாற்றியது தமிழ் மக்கள். அந்த அன்புக்கு கைமாறு செய்யவே ரத்த, கண் தான சேவை செய்ய ஆரம்பிச்சேன்’’ - நன்றிப் பெருக்குடன் சொல்கிறார் ஜீவன். இலங்கை முல்லைத் தீவு மாவட்டம் மல்லாவி கிராமத்தைச் சேர்ந்தது ஜீவன் குடும்பம். 1990-ல் ராணுவத் தாக்குதலில் ஜீவன் அம்மாவின் காலில் குண்டடிபட்டது. அதற்குமேல் அங்கிருக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் ஜீவனின் குடும்பம் அகதியாக தமிழகம் வந்தது. மதுரை அருகே உச்சப்பட்டி அகதிகள் முகாமில் இவர்களுக…

    • 0 replies
    • 381 views
  18. பௌர்ணமி காலங்களில் அமைச்சர் விமல் வீரவன்சவின் புத்தி பேதலித்து விடும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவை, எஸ்.பி; போன்றவர்கள் தேவையற்ற வகையில் போற்றி வருவதாகவும், பீ.பி. ஜயசுந்தர சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டியவர் எனவும் விமல் வீரவன்ச அண்மையில் குறிப்பிட்டிருந்தார். ஒரு சில நபர்களுக்கு பௌர்ணமி காலங்களில் புத்தி பேதலிப்பது வழமையானதே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிலருக்கு இவ்வாறு குறித்த காலங்களில் சிந்தனை ஆற்றல் இருக்காது எனவும் அவ்வாறான தருணங்களில் வெளியிடப்படும் கருத்துக்களை பெரிதுபடுத்தக்…

  19. நல்லிணக்கத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் - கனடா நல்லிணக்க முனைப்புக்களுக்கே இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டுமென கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார். மாத்தறையில் அண்மையில் நடைபெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் கனேடிய பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை என அவர் தெரிவித்துள்hளர். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களையும் கனடா பகிஷ்கரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை விடவும் நல்லிணக்க முனைப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சர்வதே அழுத்தங்களுக்கு அடி பணிந்து யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை நிறுத்தப் போவதில்லை எனவும், ஆண்டு தோ…

  20. யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் விசாரணைக்காக பலாலிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படவிருந்த நிலையில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி உதயபெரேராவின் பணிப்பின் பேரில் அவர் தீடீர் விசாரணைக்காக பலாலி பாதுகாப்பு கட்டளைத் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே பல்கலைக்கழக ஆசிரிய சங்க ஏற்பாட்டில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே யாழ்ப்பாணத்தின் இரு இளம் ஊடகவியலாளர்களதும் பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலரதும் பெயர்கள் குறிப்பிட்டு மீண்டும் கொலை அ…

  21. பாகிஸ்த்தான் தீவிரவாதிகளுக்கும் சவால் விடுகிறார் மகிந்த -இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானில் விளையாட வேண்டும் - இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானில் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு சென்று அங்கு போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகள் விடயங்களை கட்டுப்படுத்த அனுமதியளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதி மாம்னூன் ஹூசெய்னை சீனாவில் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கட் அணி இந்த ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி பாகிஸ்தானுக்கு கிரிக்கட் சுற்றுலா மேற்கொண்டிருந்த இ…

  22. புலி பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்து நிகழ்வு நடத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த 18ம் திகதி மன்னார், முள்ளிவாய்கால், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் நினைவுகூரல் நிகழ்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்ததாக முன்னணி குறிப்பிட்டுள்ளது. இதில் ததேகூ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் உள்ளிட்ட வட மாகாண சபை உறுப்பினர்களும் பங்கேற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் யாப்பை மீறி பிரிவினைவாதத்தை வளர்க்கும் செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபடுவதுடன் இரகசிய ஆயுத குழு செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. http://globaltamilnews…

  23. புலிகளின் பாடல்களை கைப்பேசியில் வைத்திருந்தவர் கைது செவ்வாய்க்கிழமை, 20 மே 2014 10:29 மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த நபர் ஒருவரை வெல்லாவெளி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை(18) கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். இவரது கையடக்கத்தொலைபேசி மற்றும் பென்ரைவ் என்பவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இவரது கையடக்கத் தொலைபேசியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்கள் இருந்ததாகவும் தெரிய வருகின்றது. கைதுசெய்யப்பட்ட நபர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக மட்டக்களப்பு பொலிஸார…

    • 1 reply
    • 477 views
  24. ரா­ணுவ வெற்றி விழா நிகழ்வில் ஜன­நா­யகம் பற்றி பேசிய ஜனா­தி­பதிஇ வடக்கில் தமிழ் மக்­க­ளுக்கு உரி­மைகள் இல்­லை­யென்பதை நிரூ­பித்­து­விட்டார். வடக்கில் நினை­வு­கூரல் நிகழ்­விற்கு தடை விதித்­தமை தவ­றான செயற்­பா­டா­கு­மென ஐக்­கிய தேசியக் கட்சி தெரி­வித்­தது. அழைப்பு விடுக்­கா­மை­யி­னா­லேயே நாம் யுத்த வெற்றி விழாவில் கலந்­து­கொள்­ள­வில்லை எனவும் அக்­கட்சி தெரி­வித்­தது. யுத்த வெற்றி விழா நிகழ்வில் எதிர்க்­கட்சி பங்­கேற்­காமை மற்றும் வடக்கில் மே 18 நிகழ்­வு­க­ளுக்கு தடை விதித்­தமை தொடர்பில் வின­வி­ய­போதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக் ஷ்மன் கிரி­யெல்ல மேற்­கண்­டாறு தெரி­வித் தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், இரா­ணுவ வெற்றி விழ…

  25. வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பான 42 பக்க அறிக்கை நவநீதம்பிள்ளையிடம் கையளிப்பு! - தயாரித்தவரை அடையாளம் கண்டதாம் புலனாய்வுப் பிரிவு. [Tuesday, 2014-05-20 09:43:33] போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பாக, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் விசேட அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையர் உள்ளிட்ட புலம்பெயர் புலி ஆதரவாளர்களினால் இந்த 42 பக்கங்களைக் கொண்ட அறிக்கை நேற்று நவநீதம்பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை கையளித்த இலங்கையருக்கு சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மேஜர் ஜெனரல்களான சவேந்திரா சி…

    • 3 replies
    • 848 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.