Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் தமிழின படுகொலையை நடத்திய சிறிலங்கா அரச படையை சேர்ந்த 6ஆயிரம் அரச பயங்கரவாதிகளின் பெயர் பட்டியல் ஒன்றை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் அவர்களின் படங்களுடன் வெளியிட்டுள்ளது. பாரிய கொடூர இனப்படுகொலையை 2005 இலிருந்து 2009 வரை சம்பூரிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை அரங்கேற்றி அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்துவரும் சிறிலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதிகளை சர்வதேச மட்டத்தில் அம்பலப்படுத்தும் வகையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக பிரித்தானிய தமிழர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு இனப்படுகொலைச் சூத்திரதாரி மகிந்த ராஜபக்சவின் பணிப்பில் கோத்தபாயவின் நேரடி நெறிப்படுத்தலிலும், சிறிலங்காவின் முப்படைகளினது தளபதிகளினது வழிநடத்தலிலும் 6ஆய…

  2. பயங்கரவாத அமைப்பு பட்டியலில் பொதுபல சேனா அமைப்பின் பெயர் இணைக்கப்பட்டுள்ளமைக்கு பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த செயல் நகைப்புக்குரியது, தமது அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பெயரிடுவதற்கு முன்னர் தங்களிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யப்படாதததால் ஜனநாயகப் பிரச்சினை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மியன்மார் விரத்து தேரருடன் பொதுபல சேனா தேரர் சந்தித்து படம் எடுத்துக் கொண்டதால் தம்மை பயங்கரவாத அமைப்பு என்று கூற முடியாது எனவும் அப்படியாயின் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த நோர்வே பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் . …

  3. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தலைவராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மீது சர்வதேச பொலிஸாரான இன்டர்போலினால் விடுக்கப்பட்டிருந்த அபாய அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியர்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார். 2009ஆம் ஆண்டின் பின்னர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதாலேயே கே.பி மீதான அபாய அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/107188-2014-04-17-12-00-41.html

  4. தென்னாபிரிக்காவை களட்டிவிட்ட சிங்களம். தென் ஆபிரிக்காவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், நாடாளுமன்ற தெரிவுக்குழு மூலமே தீர்வும், பேச்சு வார்த்தையும் அமையும் என சிங்கள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இதன்மூலம் தென்னாபிரிக்காவை வழமை போன்று களட்டிவிட்டுளது சிறிலங்கா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சின் போது தலைமை தாங்கியவரும், கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவுக்குச் சென்ற அரசதரப்புக் குழுவுக்கு தலைமை தாங்கியவருமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவே மேற்படி தென்னாபிரிக்காவின் பங்களிப்பினை தேவை அற்றது எனக் கூறியுள்ளார். இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் தலையிட்டது. அதற்கமைய தென்னாபிரி…

    • 2 replies
    • 940 views
  5. சிறிலங்காவில் நடந்த போரில் இந்தியப் படைகள் பங்கேற்றது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை இந்திய உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சட்டவாளர் ராம்சங்கர் சமர்ப்பித்த இந்தப் பொது நலன் மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தாரரின் கோரிக்கை நீதிமன்ற வரம்புக்குள் வராது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். சிறிலங்காப் படைகளுக்கு உதவியாக இந்தியப் படைகளும் போரில் பங்கெடுத்ததாகவும், இதுகுறித்து உயர்நிதீமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. http://www.puthinappalakai.com/view.php?20140417110346

  6. சிறிலங்கா அரசாங்கத்துடன் விரிவாக இராணுவ உறவுகளை மீளவும் ஏற்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்கா விருப்பம் கொண்டுள்ளதாக, தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். 'தெற்காசியாவில் அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கை: செழிப்பு மற்றும் பாதுகாப்புக்கான ஒரு பார்வை' என்ற தொனிப்பொருளில், ஹவார்ட் பல்கலைக்கழகத்தின், கென்னடி அரசாட்சிப் பாடசாலையில் நிகழ்த்திய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வொசிங்டனின் கொள்கை வகுப்பாளர்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் கென்னடி அரசாட்சிப் பாடசாலையின், மாணவர்கள் மத்தியில், நேற்று பிற்பகல் 4.30 மணயளவில் உரையாற்றிய நிஷா பிஸ்வால், தெற்காசிய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் க…

  7. பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் எனக்கூறி 16 நிறுவனங்களையும் 424 தனியாட்களையும் இலங்கை அரசாங்கம் 2014 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் திகதி பெயர் குறிப்பிட்டதன் பின்னர் பிரித்தானியா ஏப்ரல் 17 இல் அதன் இலங்கைக்கான பயண எச்சரிக்கையை புதுப்பித்தது. பிரித்தானிய தமிழ் அரங்கம் மற்றும் உலக தமிழ் அரங்கம் ஆகியவை உட்பட 16 நிறுவனங்களையும் 424 தனியாட்களையும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவை என இலங்கை அரசாங்கம் மார்ச் 21 2014இல் பட்டியலிட்டுள்ளது. வடக்க மாவட்டங்களை யாழ்ப்பானம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியாவுக்கு போவதற்கு ஊடக குழுவினரை தவிர வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டிதில்லை இராணுவ நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. நீங்கள் பாதுகாப்பு பட…

  8. - சுமித்தி தங்கராசா யாழ்.குருநகர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து திங்கட்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்ட குருநகரைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (22) என்ற யுவதியின் பூதவுடலை யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக வைத்து யுவதியின் உறவினர்கள் இன்று (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுவதியின் மரணத்திற்கு ஆயர் இல்லத்திலுள்ள குருமார்களில் இருவரே காரணம் எனக்கூறி உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். இது குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யுவதியின் உறவினர்கள் குறிப்பிடுகையில், ஆயர் இல்லத்தில் மறைக்கல்வி படிப்பதற்காகச் ஜெரோமி சென்ற போது யாழ். ஆயர் இல்லத்தில் இருக்கும் குருமார்களில் இருவர் தங்களைக் காதலிக்குமாறு ஜெரோமியிடம் வற்புறுத்திய…

    • 8 replies
    • 1k views
  9. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவனை கண்ட இடத்தில் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினூடாக (இன்டர்போல்) 'அபாய அறிவிப்பு' விடுக்க இலங்கை முயற்சித்து வருகின்றது. இவர் தற்போது நோர்வேயில் மறைந்திருப்பதாக இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலை அடுத்தே இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க நெடியவன் முயற்சித்து வருவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுங்கேணியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மூவரும் நெடியவனின் ஆலோசனைக்கமையவே செயற்பட்டு வந்துள்ளனர் என்றும் இலங்கை புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது. தாக்குதல் அ…

    • 2 replies
    • 707 views
  10. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயணம் செய்த உலங்கு வானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. வரக்காப்பொல பிரதேசத்தில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 5 .15 மணியளவில் குறித்த உலங்கு வானூர்தி தரையிறக்கப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாகவே அவசரமாக இந்த உலங்கு வானூர்தி தரையிறக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி உலங்கு வானூர்தியிலிருந்து தரையிறங்கிய போது கடுமையான மழையும் பெய்துள்ளது. பாதுகாப்புப் பிரிவினர் ஜனாதிபதியை மோட்டார் வண்டியூடாக அழைத்துச் சென்றுள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=107676&category=TamilNews&language=tamil

  11. சட்டவிரோதமாக போருக்கு உதவவில்லை இந்தியா! - இராணுவப் பேச்சாளர் கூறுகிறார். [Thursday, 2014-04-17 08:28:57] இலங்கை இராணுவத்துக்கு இந்தியா சட்ட விரோதமான உதவிகள் எதனையும் வழங்கவில்லை என்று, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்திய இராணுவ துருப்பினர் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009ம் ஆண்டு காலப்பகுதியில் போரிட்டதாக தெரிவித்து இந்திய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த அவர், இறுதி யுத்தத்தின் போது இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியதாகவும், எனினும் அவை சட்ட விரோதமான உதவிகள் இல்லை. இந்தியாவினால் ஆயுதங்கள், பயிற்சிகள், புலனாய்வுத் தகவல்கள் போன்றன வழங்கப்பட்டன என…

  12. "நான் சொன்னதைப்போல ஜெனீவா முடிய மூன்றுபேருக்கு வெடி விழுந்தது" கருணா:- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் முதற் பதிவேற்றம்:- 04-2014 - 15:27 'நான் சொன்னதைப்போல ஜெனீவா முடிந்த பின்னர் இரண்டு ஒரு பேருக்கு வெடி விழுந்துள்ளது' என கருணா எனப்படும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிழக்கில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, 'தமிழ் கட்சிகள் மக்களை உசுப்பேத்தி வேடிக்கை பார்த்து திரும்பவும் எங்கேயும் வெடி கொண்டு போகும் முயற்சிகளில்தான் ஈடுபடுகின்றன என்று தெரிவித்த அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பே மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க முனைகிறது' எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தான் வெளிப்படையாக ஒரு விடயத்தை கூறுவதாக தெரிவித்த அமைச்சர் கருணா …

  13. ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் வொஷ்டோக் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையிலேயே இலங்கைக்கு நான்காம் இடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அண்மைக் காலப்பகுதியில் சிரியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் கடத்தல், ஊடகவியலாளர் படுகொலைகள், சித்திரவதைகள் அதிகரித்துக் காணப்படுவதால் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் சிரியா பிரதான இடத்தை வகிப்பதாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இயங்கும் ஊடகவியலாளர் பாதுகாப்பு பேரவை சுட்…

  14. பஸில் அமெரிக்காவுக்கு இரகசியப் பயணம்! – ஐ.நாவுடன் சமரசத்துக்கு முயற்சியா? [Thursday, 2014-04-17 08:08:39] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரும் அமைச்சருமான பஸில் ராஜபக்‌ஷ அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. புதுவருடத்தை ஒட்டி, தங்காலையில் உள்ள தமது பாரம்பரிய இல்லத்தில் குடும்பத்தினருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பிரதாயபூர்வ நிகழ்ச்சிகளில் பங்குபற்றினார். அந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கலந்து கொண்ட போதும் பஸில் ராஜபக்‌ஷ கலந்து கொள்ளவில்லை. அவர் அமெரிக்காவில் குடும்பதினருடன் புதுவருடத்தைக் கொண்டாடச் சென்றிருக்கின்றார் என்று கூறப்பட்டது. ஆனாலும் அவரின் அமெரிக்க விஜயத்தின் பின்ன…

  15. இலங்கை மீது அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்! - பிரிட்டிஷ் தொழில்கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட் கூறுகிறார். [Thursday, 2014-04-17 08:23:18] இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளும், மனித உரிமைகளும் மதிக்கப்படுகின்றமையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசு மீது பிரிட்டிஷ் அரசும் ஏனைய தரப்புக்களும் அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும் என பிரிட்டிஷ் தொழில்கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட் தெரிவித்திருக்கின்றார். இலங்கையிலும், பிரிட்டனிலும் உள்ள தமிழர்களுக்கு அவர்களின் மரபு ரீதியான புதுவருடத்தை ஒட்டித் தாம் விடுத்த வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். இலங்கையின் யுத்தத்தின் போது இரண்டு தரப்புகளினாலும் புரியப்பட்டவை எனக் கூறப்படும் யுத்தக்…

  16. மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தோற்றுவிக்கும் தேவை தமிழ்மக்களுக்கு இல்லை! - என்கிறார் சுமந்திரன். [Thursday, 2014-04-17 08:26:25] மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றை தோற்றுவிக்கும் எந்த தேவையும் தமிழ் மக்களுக்கு இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டை பிரிக்கும் எந்த தேவையும் தமிழ் மக்களுக்கு கிடையாது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக கூட்டமைப்பு தொடர்ந்தும் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=107688&category=TamilNe…

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டம் சனியன்று யாழ்ப்பாணத்தில்! [Thursday, 2014-04-17 08:20:58] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சரின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் அமர்வு, தென்னாபிரிக்காவில் தமிழ்க் கூட்டமைப்பினர் மேற்கொண்ட விஜயம் ஆகியவற்றின் பின்னர் எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை, நாட்டில் மீண்டும் புலிகள் இயக்கம் எழுச்சி கொண்டுள்ளதாகத் தெரிவித்து அரசு முன்னெடுத்து வரும் இராணுவக் கெடுபிடிகள…

  18. - சுப்பிரமணியம் பாஸ்கரன் ஏ–9 வீதியில் கிளிநொச்சி, திருமுருகண்டியில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்த இராணுவ வாகனமொன்று புதன்கிழமை (17) காலை 11.30 மணியளவில குடைசாய்ந்ததில் அதில் பயணித்த 13 இராணுவ வீரர்கள் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். அவ்விடத்திலுள்ள வளைவில் இராணுவ வாகனத்தை; திரும்பும் வேளையில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து குடைசாய்ந்ததிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை இராணுவப்பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/107146--13-.html

  19. கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து பறந்துசென்ற நான்கு மெக்கோ கிளிகளில் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனைய இரண்டு கிளிகளையும் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காணாமல் போன கிளிகள் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியானவை எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மாளிகையில் வளர்க்கப்பட்டு வந்த மெக்கோ ரக கிளிகளில் நான்று நேற்றைய தினம் அங்கிருந்து பறந்துசென்றிருந்தன. இவற்கை கண்டுபிடிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இரு கிளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/107106-2014-04-17-04-53-29.html

  20. சிறிலங்கா அரசாங்கத்துடன் விரிவாக இராணுவ உறவுகளை மீளவும் ஏற்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்கா விருப்பம் கொண்டுள்ளதாக, தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். 'தெற்காசியாவில் அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கை: செழிப்பு மற்றும் பாதுகாப்புக்கான ஒரு பார்வை' என்ற தொனிப்பொருளில், ஹவார்ட் பல்கலைக்கழகத்தின், கென்னடி அரசாட்சிப் பாடசாலையில் நிகழ்த்திய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வொசிங்டனின் கொள்கை வகுப்பாளர்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் கென்னடி அரசாட்சிப் பாடசாலையின், மாணவர்கள் மத்தியில், நேற்று பிற்பகல் 4.30 மணயளவில் உரையாற்றிய நிஷா பிஸ்வால், தெற்காசிய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் க…

  21. புலி ஆதரவு அமைப்புக்களுக்கு சில நாடுகள் உதவிகளை வழங்கி வருகின்றன – கோதபாய 17 ஏப்ரல் 2014 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களுக்கு சில நாடுகள் உதவிகளை வழங்கி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாதம் இல்லாத போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத வலையமைப்பு உலக அளவில் தொடர்ந்தும் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மலேஷியாவின் புத்ரஜயாவில் இடம்பெற்ற 14ம் ஆசிய பாதுகாப்புச் சேவை கண்காட்சியில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை சில நாடுகள் கண்டு கொள்வதி;ல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு வலையமைப்புக்கள் தொடர்ச்சியாக…

  22. ஐ.நா விசாரணைக்கு முன் சாட்சியமளிக்க படைஅதிகாரிகளும் தயாராகின்றனர்! - மகிந்த அரசுக்குப் பிடித்தது கலக்கம். [Thursday, 2014-04-17 07:53:21] ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் ஏற்பாட்டில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்ற விசாரணையின் போது பிரதான சாட்சியங்கள் தமிழர் தரப்பிலிருந்து மட்டுமன்றி, படைத் தரப்பிலிருந்தே வலுவாக முன் வைக்கப்படவுள்ளதான அதிர்ச்சித் தகவல் அரசுத் தலைமைக்குக் கிட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அரசுத் தலைமை அதிர்ச்சியில் உறைந்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் சில தகவல் வெளியிட்டன. யுத்தக் காலத்தில் படைகளில் மிக உயர்ந்த தரத்தில் பணியாற்றிய அதிகாரிகள் சிலர் யுத்தம் முடிவுற்ற காலத்தில் அரசுத் …

  23. யுவதியைக் கொன்று கிணற்றில் வீசிய சிவில் பாதுகாப்புடை அதிகாரி வன்னியில் கைது! [Thursday, 2014-04-17 07:55:34] கிளிநொச்சி, புன்னைநீராவி பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக சிவில் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மூலம் புலனாகிய சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். மாத்தளை பகுதியைச் சேர்ந்த 28 வயதான யுவதி ஒருவர் கடந்த 13 ஆம் திகதி கொலை செய்யப்பட்டு புன்னை நீராவி பகுதியிலுள்ள கிணறொன்றில் வீசப்பட்டிருந்தார். குறித்தயுவதி சிவில் பாதுகாப்பு படையினனுடன் காதல் கொண்டு கர்ப்பமாகியுள்ளதை தொடர்ந்து, குற…

  24. கடும்போக்குவாதம் நாட்டை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தும் - பைசர் முஸ்தபா கடும்போக்குவாதம் நாட்டை சர்வதேச ரீதிpல் தனிமைப்படுத்தும் என முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நாடடில் மத முரண்பாடுகளை தூண்டும் வகையில் எவரேனும் செயற்பட்டால் அது நாட்டை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த வழியமைக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி சரியான தீர்மானம் எடுப்பார் என்பதில் நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்நாட்டு சர்வதேச முஸ்லிம்களின் நண்பன் என அவர் குறிப்பிட்டுள்ளார். பலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி தைரியமாக ஆதரவளித்திருந்தார் என அவர் சுட்…

  25. ஜனாதிபதி மாளிகையிலிருந்த மெக்கோ கிளிகளை காணவில்லை புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014 16:16 கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வளர்க்கப்பட்டு வந்த மெக்கோ ரக கிளிகள் நான்கு, அங்கிருந்து பறந்து சென்றுவிட்டதாக ஜனாதிபதி மாளிகையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். இவ்வாறு பறந்து சென்ற கிளிகளில் இரண்டு சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கலவைகளைக் கொண்டவை எனவும் ஏனைய இரண்டும் நீலம் மற்றும் மஞ்சள் நிறக் கலவைகளைக் கொண்டவை எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த கிளிகள் தொடர்பில் தகவல் அறிந்தால், 0777 – 535377 என தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு பேச்சாளர் மேலும் கூறினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/107062-2014-04-16-10-48-06.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.