ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
புலம்பெயர் தமிழ் அமைப்புகளைத் தடை செய்த முடிவு புத்திசாலித்தனமற்றது! - ராஜீவ விஜேசிங்க கூறுகிறார். [sunday, 2014-04-13 10:34:23] புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் புத்திசாதூரியமானதல்ல என்று ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்வதனால் ஏற்படக் கூடிய எதிர்விளைவுகளை கருத்திற் கொள்ளாது அரசாங்கம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எமது நாட்டின் தீர்மானம் நிறைவேற்றும் அதிகாரமுடையோரிடம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பிலான ஆர்வம் வெகு வரையறுக்கப்பட்டுள்ள அளவிலேயே காணப்படுவதாக தாம் உணர்வதாகத் தெரிவித்துள்ளார். ப…
-
- 1 reply
- 325 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி உள்ளிட்ட மூவர் இன்று அதிகாலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். முல்லைதீவு பொலிஸார் இவர்கள் மூவரையும் கைது செய்ததன் பின்னர் இவர்கள் மூவரும் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போதே பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவரும் உயிரிழந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இதே வேளை சில ஊடகங்களில் இதன் போது இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளமைக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் இராணுவ வீரர் பயிற்சியின் போதே உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakes…
-
- 27 replies
- 4.5k views
-
-
வடக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் போர் முடிவுக்கு வந்த போதிலும், அங்கு படையினரை தொடர்ந்தும் நிலைநிறுத்தியுள்ளது நியாயமானது என்பதை, வவுனியாவில் நடந்துள்ள மோதல் உறுதிப்படுத்தியுள்ளது என்று சிறிலங்கா அதிபரின் மனிதஉரிமைகள் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவரும் அமைச்சருமான மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று பௌத்த பீடாதிபதிகளைச் சந்தித்து, வவுனியா மோதல் மற்றும் ஜெனிவா கூட்டத்தொடர் குறித்து விளக்கமளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். வவுனியா சம்பவம் குறித்து கொழும்பில் உள்ள இராஜந்திர வட்டாரங்களுக்கு நான் விளக்கமளிக்கவுள்ளேன். வடக்கில் விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய முனைவதாகவும் அதனைத் தடுக்க அங்கு படையினரை நிறுத்த வேண்டியுள்ளதாகவும் ஐ.நா மனிதஉரிமைகள் ப…
-
- 0 replies
- 296 views
-
-
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து, நடத்தப்படும் அனைத்துலக விசாரணைகளின் மீது தமக்கு நம்பிக்கையில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. கண்டியில், நேற்று பௌத்த பீடாதிபதிகளை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மகிந்த சமரசிங்க, அனைத்துலக விசாரணை நம்பகத்தன்மை கொண்டதாகவோ, சுதந்திரமானதாகவோ இருக்காது என்று சிறிலங்கா அரசாங்கம் உணர்கிறது. ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது. அதற்குப் பதிலாக போர் தொடர்பான விடயங்களைக் கையாண்டு கவனிப்பதற்கு உள்நாட்டுப் பொறிமுறையை முன்னெடுக்கும். நல்லிணக்கம் பற்றிய விடயத்தை உள்நாட்டு நடைமுறைகளின் மூலம் கவனிப்பதே பொருத்தமானது என்ப…
-
- 0 replies
- 340 views
-
-
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுடன் 2009 ஆம் ஆண்டு மேற்கொண்ட உடன்பாட்டை இலங்கை அரசு மதிக்கவேண்டும் என்றும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஐ.நா. பேச்சாளர் எரிகனேகோ தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர் காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஐ.நா. பொதுச் செயலருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கையெழுத்திட்ட கூட்டறிக்கையை இலங்கை அரசு மதித்து நடக்க வேண்டிய கட்டுப்பாடு இன்னமும் உள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் ஆக்கபூர்வமான பேச்சுக்களை நட…
-
- 0 replies
- 505 views
-
-
கல்முனை விபத்தில் மூவர் பலி:16 பேர் காயம் ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014 06:15 எஸ்.எம்.எம். றம்ஸான்,எஸ்.எல்.அப்;துல் அஸீஸ் கல்முனைக்குடி முகைதீன் ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள வளைவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் பலியானதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்னர். கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த அதி சொகுசு பஸ் வண்டியொன்றும் வவுனியா செல்வதற்காக கல்முனை நகரை நோக்கி பயணித்த அசோக்லேலண்ட் பஸ் வண்டியொன்றும்; நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மரணித்தவர்களின் ஜனாசாக்களும் வைத்தியசாலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. மரணித்தவர்களில் ஆண் ஒருவரும் …
-
- 1 reply
- 335 views
-
-
பிரித்தானியாவின் அறிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல – அரசாங்கம் பிரித்தானியாவின் அறிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அரசாங்கம் அறிவித்துள்ளது. மனித உரிமை நிலைமைகள் மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கையை பிரித்தானியா மீண்டும் இணைத்துள்ளது.மனித உரிமை நிலைமைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய நாடுகளின் வரிசையில் இலங்கையை பிரித்தானியா இணைத்தமைக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக கருதினால் அவர்கள், மனித உரிமை ஆணைக்கழுவில் முறைப்பாடு செய்ய முடியும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு முழு அளவிலான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இலங்கையில் மனித …
-
- 0 replies
- 543 views
-
-
முற்போக்கு தமிழ் தேசியகட்சி என்ற பெயரில் புதியகட்சி ஒன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்: அரச ஆதரவு மற்றும் தீவிர எதிர்ப்பு அரசியல் போக்கின் மத்தியில் நடுநிலை வகிக்கும் வகையில் செயற்படப்போவதாக கூறி; முற்போக்கு தமிழ் தேசிய கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இக்கட்சியின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று யாழிலுள்ள விடுதியொன்றில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் ஆரம்பம் தொடர்பாக ஊடகவியிலாளர் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது. இதன்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாயகமாக அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் கருத்து வெளியிடுகையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களுக்காகவே முற்போக்கு த…
-
- 0 replies
- 485 views
-
-
சீனப்பாம்பு இலங்கையினை விழுங்கிக் கொண்டிருக்கின்றது: பிரதமர் வி.உருத்திரகுமாரன் [sunday, 2014-04-13 06:16:20] இந்தியா, இலங்கை விவகாரத்தில் தவறான வெளியுறவுக் கொள்கையினை பின்பற்றி வருகின்றது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் மரபார்ந்த சிந்தனையில் மூழ்கிக்கிடக்கின்றனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து வெளிவரும் குங்கும் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில், இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் செயற்பாடுகளை எப்படிப்பார்கின்றீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்திருந்த பதிலிபதிலிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். சீனப்பாம்பு இலங்கையினை விழுங்கிக் கொண்டிருக்கின்றது என்பதனை எவ்வாறு கையாள்வது என்பதனை இவர்களால் சரிவர மதிப…
-
- 0 replies
- 393 views
-
-
இலங்கை விவகாரங்களை கையாளும் தென்னாபிரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ரம்போசாவைத் ஜோகன்ஸ்பேர்க்கில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழு சந்தித்து கலந்துரையாடியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தலைமையில் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சுரேஷ்பிரேமச்சந்திரன் செல்வம்அடைக்கநாதன் ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக் குழுவே இந்தப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது. இதேவேளை தென்னாபிரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ரம்போசா விரைவில் இலங்கைக்கு உத்தியோக பூர்வ வியாயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதால் அதன் போதும் மீண்டும் பேச்சுக்களில் ஈடுபட தீர்மாத்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. …
-
- 1 reply
- 598 views
-
-
எட்டு மில்லியன் ரூபா செலவில் யாழிற்கு புதிதாக அவசர தீயணைப்பு பாதுகாப்பு வாகனம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12மணியளவில் யாழ் மாநகர சபையில் வைத்து பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் யாழ் மாநகர சபைக்கு இந்த வாகனம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா,யாழ் மாநகர ஆணையாளர் பிரணவநாதன் மற்றும் யாழ் மாநகர சபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். http://www.onlineuthayan.com/News_More.php?id=253092867912533868
-
- 3 replies
- 533 views
-
-
ஏ.எச்.ஏ. ஹுஸைன் வடமாகாண சபையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அனந்தி சசிதரனின் சுயரூபம் உங்களுக்கு தெரியுமா? என்ற தலைப்பில் கிழக்கில் சில இடங்களில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வட தமிழ் அமைப்பினரால் உரிமை கோரப்பட்டுள்ள அந்த துண்டுபிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருகோணமலை மாவட்ட எல்.ரீ.ரீ.ஈ அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரனின் மனைவிதான் அனந்தி. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தலைமை லிகிதராகக் கடமையாற்றிய இவர் தற்போது அரசியலுக்குள் புகுந்து குறுகிய காலத்திற்குள் சர்வதேசத்தைத் தன்பக்கம் திருப்புவதற்காக புலிகள் வலையப்பின் திட்டத்திற்கு அமைவாக செயற்படுவதை நீங்கள் அறிவீர்களா ? இவர் வெளிநாட்டு புலி ஆதரவு அமைப்…
-
- 40 replies
- 3.4k views
-
-
கஜீபனின் சடலத்தை தாய், மனைவி, மாமனார் அடையாளம் காட்டினர்! - பொலிசாரே அடக்கம் செய்ய முடிவு. [saturday, 2014-04-12 18:53:53] வவுனியா நெடுங்கேணி பிரசேத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி என அழைக்கப்படுகின்ற செல்வநாயகம் கஜீபனின் உடலை, பூஸா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அவருடைய தாயார் செல்வநாயகம் இராசமலர், அவருடைய மனைவி கஜீவன் சர்மிளா ஆகியோருடன், அவருடைய மாமனாராகிய செகராசசிங்கம் பாலகுருபரன் ஆகியோர் அடையாளம் காட்டியுள்ளனர்.நெடுங்கேணி வெடிவைத்தகல் பகுதியில் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லபட்ட கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூன்று பேருடைய சடலங்களும் நேற்று வியாழக்கிழமை மாலை அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தன. …
-
- 1 reply
- 599 views
-
-
வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களே இங்குள்ள இளைஞர்களைப் பலிக்கடாவாக்குகின்றனர்! – பொலிஸ் பொறுப்பதிகாரி குற்றச்சாட்டு. [saturday, 2014-04-12 19:03:34] வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களே யுத்தத்தை விரும்புகின்றனர். அதற்காக இங்குள்ள இளைஞர், யுவதிகளைப் பலிக்கடாவாக்குகின்றனர் என்று கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கே.எதிரிசிங்க தெரிவித்துள்ளார். கொடிகாமம் வடக்கு கிராம அலுவலர் பிரிவு சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றும் போது, 30 வருடங்களுக்கு முன்னர் சகோதரர்களாக ஒன்றுபட்டு நாட்டில் சுதந்திரமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் குடும்பங்கள் கொடிய யு…
-
- 1 reply
- 345 views
-
-
கொடுத்து வாங்கும் பண்பை செயற்படுத்தினால் நாடு சுபீட்சமடையும்! – வடமாகாண முதல்வரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி. [saturday, 2014-04-12 19:33:14] எமது அரசியல்வாதிகள் 'கொடுத்து வாங்கும்' பண்பை செயற்படுத்துவார்களேயானால் இந்த நாடு சுபீட்சமடையும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும், இந்தச் சித்திரைப் புத்தாண்டு வேளைதான் தமிழர்களும் சிங்களவர்களும் எங்களது பொதுவான பாரம்பரியத்தை நினைபடுத்தும் விதத்தில் ஒன்றுகூடிக் கொண்டாடும் நேரமாகும். ஆனால், துரதிஷ்டவசமாக, இரண்டு சமூகங்களையும் சேர்ந்த அரசியல்வாதிகள் அத்தகைய பொதுத் தன்மையை வலியுறுத்துவதை விடுத்து வேற்றுமைகளைப் …
-
- 0 replies
- 319 views
-
-
அநுராதபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூன்று பேருடைய சடலங்களும் அரச செலவில் அனுராதபுரம் விஜயபுர பொது மயானத்தில் இன்று சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கின்றார். இந்த மூவரும் பதவியா பகுதிக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் உயிரிழந்ததையடுத்து, இந்தச் சடலங்கள் மீதான மரண விசாரணையை கெப்பிட்டிகொல்லாவ நீதவான் நடத்தினார் என்றும், அவருடைய உத்தரவுக்கமைய அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார் என்றும் காவல்துறை பேச்சாளர் கூறினார். நீதவானுடைய உத்தரவுக்கமைய இந்தச் சடலங்கள் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட போதிலும், இறந்தவர்களை அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்க…
-
- 0 replies
- 782 views
-
-
மத்தல விமான நிலையத்துக்கு எரிபொருள் எடுத்துச் சென்ற பவுசர் எரிந்து நாசம்! [saturday, 2014-04-12 19:25:47] கொலன்னாவவில் இருந்து மத்தல விமான நிலையத்துக்கு 33 ஆயிரம் லீற்றர் எரிபொருள் கொண்டு சென்ற பவுசர் ஒன்று இன்று அதிகாலை ஒரு மணியளவில் விபத்துக்குள்ளாகி எரிந்து சாம்பலானது. சூரியவெவ – மீகஹபுர பிரதேசத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த பவுசர் தீப்பற்றிக் கொண்டது என்று கூறப்பட்டது. இந்தத் தீவிபத்தை அடுத்து அங்கு விரைந்து வந்த வீரவில விமானப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்துக்குப் பயன்படுத்தப்படும் எரி…
-
- 0 replies
- 379 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் 1990 இல் மன்னார் மாவட்டத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அனாதரவற்ற முஸ்லிம்களுக்கு பொது பலசேனாவால் இன்று நெருக்கு வாரங்கள் ஏற்பட்டுள்ளன. மிருகங்களிற்கு கொடுக்கப்படும் சலுகைகள் கூட முஸ்லிம்களுக்கு கிடையாதா? இப்படியான ஒரு சோதனை நிலைமையே அகதி முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது.அந்த வகையில் முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமான நாடு இது. இந்த நாட்டை அழகான முறையில் கொண்டு செல்லும் ஜனாதிபதியின் பெயரை நாசப்படுத்தும் செயல்களையும், துரோக செயல்களையும் செய்கின்ற பேரினவாதிகளின் முற்போக்கு செயல்களையும் அடாவடி தனத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவி…
-
- 2 replies
- 566 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்து நேற்றையதினம் கோபி உள்ளிட்ட மூன்று பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையக செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எனினும் ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டெபன் டுஜாரிக் இதற்கான பதில்கள் எதனையும் வழங்கவில்லை. எவ்வாறாயினும் இலங்கை தாம் பொறுப்புக் கூற வேண்டியங்கள் விடயங்களில் இருந்து விலக முடியாது என்று பொது செயலாளர் பான் கீ மூன் முன்னதாக தெரிவித்திருந்த கருத்தை மீண்டும் அவரது பேச்சாளர் வலியுறுத்தினார். இதேவேளை அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் தூதரகத்துக்கு முன்னால் நேற்றையதினம் சர்வதேச மன்னிப்பு சபையினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளத…
-
- 3 replies
- 834 views
-
-
கோபி, அப்பன், தேவியன் கொல்லப்பட்ட விபரங்களை மூடிமறைப்பது ஏன்? – கேள்வி எழுப்புகிறார் சிவாஜிலிங்கம். [saturday, 2014-04-12 08:32:57] முல்லைத்தீவு நெடுங்கேணி பகுதியில் விடுதலைப்புலிகள் மூவர் நேற்று அதிகாலை மோதலொன்றில் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது ஓர் நாடகமே என வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களது சடலங்கள் பதவியா அரசினர் வைத்தியசாலையில் படையினரால் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. அருகாக முல்லைத்தீவு அரசினர் வைத்தியசாலையோ கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலையோ இருக்கின்ற நிலையில் எதற்காக சடலங்களை பதவியாவிற்கு எடுத்து செல்ல வேண்டியிருந்ததெனவும் அவர் கேள்வி …
-
- 1 reply
- 580 views
-
-
சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் வேறு வழிகளில் சிக்கல்கள் வரும் என்கிறார் தயான் ஜயதிலக! [saturday, 2014-04-12 08:35:13] சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டால் இலங்கைக்கு பாதக விளைவுகள் ஏற்படக் கூடுமென முன்னாள் ராஜதந்திரி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டால், சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடரப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்காவிட்டால், வேறும் வழிகளில் இலங்கை மீது மேற்குலக நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடுமென அவர் குறிப்பிட்ட…
-
- 1 reply
- 367 views
-
-
ஏப் 12, 2014 புலம் பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழர்களினால் கட்டமைக்கப்பட்டு அந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களினால் ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு இயங்கும் தமிழர் அமைப்புக்களை சிறீலங்காவின் இனவாத சிங்கள அரசு தடைசெய்துள்ளது. தாயகத்தில் தங்கள் சொந்த மண்ணில் இருந்து தூக்கி வீசப்பட்ட தமிழர்கள் தமக்கு அடக்கலம் கொடுத்த நாடுகளில் அந்த நாடுகளின் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவாக தமிழர் அமைப்புக்களை நிறுவி தமிழர் நலன்சார்ந்தும் தாயாக உறவுகளின் நலன்சார்ந்தும் பல செயல்திட்டங்களை நடத்திவருகின்றனர். குறிப்பாக பல சமூக செயல்பாடுகளை முன்னெடுப்பதோடு மட்டுமல்லாது தமிழர் தாம் வாழும் நாடுகளுக்கு பெருமைசேர்க்கு முகமாகவும் பல பணிகளையும் செய்துவருகின்றனர். இவ்வாறா…
-
- 2 replies
- 404 views
-
-
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் 2009ம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று ஐ.நா பெண் பேச்சாளர் எரி கனேகோ தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு மே மாதம் ஐ.நா பொதுச்செயலருடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கையெழுத்திட்ட கூட்டறிக்கையை, சிறிலங்கா அரசாங்கம் மதித்து நடக்க வேண்டிய கடப்பாடு இன்னமும் உள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்துடன். ஆக்கபூர்வமான பேச்சுக்களை நடத்தி சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிறிலங்காவில் இடம்பெற்ற அனைத்துலக மனிதஉரி…
-
- 2 replies
- 483 views
-
-
சவேந்திர சில்வாவுக்கு எதிராக நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம்! - ஜன்னலின் திரையை இழுத்து மூடிக்கொண்டாராம்! [saturday, 2014-04-12 17:28:30] நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்துக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. சர்வதேச மன்னிப்பு சபையின் இளைஞர் பிரிவினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்டமை உட்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன்போது சவேந்திர சில்வா, தமது அலுவலக அறையின் ஜன்னல் கண்ணாடியின் மூலம் ஆர்ப்பாட்டத்தை அவதானித்த பின்னர் ஜன்னலின் திரையை மூடிக்கொண்டமையை இன்னர்சிட…
-
- 1 reply
- 333 views
-
-
கொல்லப்பட்ட தேவியன் புலிகளின் விமானி? சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014 02:43 இராணுவத்துடன் வவுனியா, நெடுங்கேணியில் வைத்து இடம்பெற்ற மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட தேவியன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராதா படையணியின் முக்கிய விமானி ஆவார் என்று இந்திய செய்தி தெரிவிக்கின்றது. விடுதலைப் புலிகளின் இரண்டு விமானங்கள் இலங்கை இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்திய போது அதை செலுத்தியவர்களில் ஒருவர்தான் தேவியன் என்று கூறப்படுகிறது. குறிப்பாக விடுதலைப் புலிகளால் பேரழிவுக்குட்படுத்தப்பட்ட அனுராதபுரம் விமானப் படை தளம் மீதும் கொலன்னாவை பெற்றோலிய கிடங்கு மீதும் விடுதலைப் புலிகள் நடத்திய விமான தாக்குதலில் விமானியாக செயல்பட்டவர்தான் இந்த தேவியன் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப…
-
- 6 replies
- 1.2k views
-