ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு தயாராக வேண்டுமென்ற எண்ணத்திலா இலங்கையரசாங்கம் புலம்பெயர் தமிழர் களுக்கு தடையை விதித்துள்ளது. இந்நாட்டில் அரசியல் தீர்வொன்றை நோக்கியே நாம் எல்லோரும் ஜனநாயக வழியில் போராடி வருகிறோம். இதை இலங்கை அரசாங்கம் உணர வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பா.அரியநேத்திரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர். புலிகள் உட்பட 16 அமைப்புகளுக்கு தடை மேற்படி அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என பட்டியல் படுத்தி 424 புலம்பெயர் தமிழர்களுக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பில் தமது கருத்தைத் தெரிவித்த போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் முக்கிய உறுப்பினரும…
-
- 0 replies
- 326 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன் கடும் வரட்சியான காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழிருக்கும் 9 முக்கிய குளங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைவடைந்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.விகிர்தன் இன்று (03) தெரிவித்தார். வரட்சி காரணமாக இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 14 அடி 5 அங்குலமாக குறைந்துள்ளதுடன் கல்மடுக் குளத்தில் 6 அடி 7 அங்குலமும், அக்கராயன் குளத்தில் 5 அடி 1 அங்குலமும் கனகாம்பிகைக் குளத்தில் 4 அடி 9 அங்குலமாக நீர்மட்டம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வன்னேரிக் குளத்தில் 5 அடி 4 அங்குலமும், புதுமுறிப்புக் குளத்தில் 6 அடி 1 அங்குலமும், பிரமந்தனாறுக் குளத்தில் 4 அடி 3 அங்குலமும், குடமுறுப்பாட்டுக் குளத்தில் …
-
- 2 replies
- 513 views
-
-
ஐ.நா விசாரணைக்குழுவுக்கு வீசா வழங்குமா இலங்கை அரசு? – பிரதி வெளிவிவகார அமைச்சர் பதில். [sunday, 2014-04-06 10:21:04] ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவுக்கு இலங்கைக்குள் வருவதற்கு வீசா வழங்குவது குறித்து இன்னும் அரசாங்கம் முடிவெடுக்கவில்லை என்று வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவிதுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணைக் குழுவுக்கு வீசா வழங்குவதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மனித உரிமைகள் விசாரணைக் குழு தொடர்பாக இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் வீசா வழங்குவது குறித்து எதுவும் கூற முடியாதென்றும் அவர் தெரிவித்தார். http://seithy.co…
-
- 1 reply
- 396 views
-
-
ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீளப்பெற ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசுகிறது இலங்கை! [sunday, 2014-04-06 10:17:00] ஐந்து வருடங்களுக்கு பின்னர், ஜிஎஸ்பி வரிச்சலுகை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. மனிதஉரிமை மீறல்களை காரணம் காட்டி இலங்கைக்கான ஜிஎஸ்பி வரிசலுகைகளை ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியம் மீளப்பெற்றிருந்தது. எனினும் தற்போது வலுவான நல்லிணக்கம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் இலங்கையுடன் வரிச்சலுகை தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதர் டேவிட் டட்லி தெரிவித்துள்ளார். இரண்டு தரப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் கடந்த டிசம்பர் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.…
-
- 1 reply
- 335 views
-
-
தேவ அச்சுதன் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையினையும் எழுவான் கரையினையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மண்முனைத்துறை பாலத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 19ஆம்திகதி திறந்துவைக்கவுள்ளார் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சீன அரசாங்கத்திடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் மண்முனைத்துறைப்பாலத்துக்கான நிதியை சீன அரசாங்கம் வழங்கியிருந்தது. இதேவேளை இந்த பாலத்தினை திறக்கப்பட்டதன் பின்னர் இரு பகுதிகளிலும் பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்படவேண்டும் என படுவான்கரை பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரு கரைகளுக்கு இடையிலான போக்குவரத்து இலக…
-
- 0 replies
- 273 views
-
-
நயினாதீவு நாகதீப விகாரையில் அமைக்கப்பட்ட தொல்பொருட்காட்சிச்சாலை 03 ஏப்பிரல் 2014 அன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது . வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயநத் கொழம்பகே ஆகியோர் இக்கட்டத் தொகுதியினை திறந்து வைத்தார்கள். விகாராதிபதி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. சமயத் தலைவர்கள், கடற்படை உயர் அதிகாரிகள், பல்வேறு மதங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொண்டார்கள். http://www.jvpnews.com/srilanka/64528.html
-
- 0 replies
- 403 views
-
-
வில்பத்து வன விலங்குகள் சரணாலயம் மற்றும் வில்பத்து வனப்பாதுகாப்பு பிரதேசங்களில் அத்து மீறி குடியேறியிருப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு வன வள பாதுகாப்பு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. அப்படி வெளியேறா விட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வில்பத்து வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் வனவள பாதுகாப்பு பிரதேசத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து திணைக்கள அதிகாரிகள் இக்குடும்பங்கள் வில்பத்து வனவிலங்கு சரணாலயத்துக்கு சொந்தமான இடத்திலா அல்லது அதற்கு வெளியிலா குடியேறியுள்ளனர் என்பதைக் கண்டறிய கடந்த வாரம் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். …
-
- 0 replies
- 339 views
-
-
ஜெனிவாவில் 4 நிமிடங்களில் மாறிய இந்திய நிலைப்பாடு – காரணம் யார்? [saturday, 2014-04-05 16:23:21] ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறோம். நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை என்று சொன்ன இந்திய அதிகாரி, இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான் தீர்மானம் கொண்டு வந்த போது, நான்கு நிமிடங்களில் எப்படி தன்னுடைய முடிவை மாற்றினார் என்று பசுமைத் தாயகம் அமைப்பு வழக்கறிஞர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார். ஜெனீவாவில் நடந்த ஐ.நா. கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் பங்கேற்ற வழக்கறிஞர் பாலு தெரிவித்ததாவது- இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வந்த போது, 'இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறோம். நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை’ என்று சொன்…
-
- 2 replies
- 548 views
-
-
சிறிலங்கா அரசின் தடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை: புலம்பெயர் அமைப்புக்கள் முடிவு [saturday, 2014-04-05 19:52:31] சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழர் அமைப்புக்கள் மீதான தடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. இலங்கை அரசாங்கத்தினால் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், நாடு கடந்த தமிழீழ இராச்சியம் உள்ளிட்ட பதினாறு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாக புலம்பெயர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தமது அமைப்…
-
- 4 replies
- 702 views
-
-
யாழ் படை தளபதிக்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சு! ஏப் 6, 2014 வலிகாமம் வடக்கில் பாடசாலைகள், ஆலங்கள், வீடுகள் என்பவை அழிக்கப்பட்ட சம்மபவங்கள் தொடர்பாக கூட்டமைப்பு இன்று யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதியைச் சந்தித்துப் பேசவுள்ளது. வலி.வடக்கு மக்களுடைய மீள்குடியேற்றம் மற்றும் அப்பகுதிகளில் இருந்த பாடசாலைகள், ஆலங்கள், மக்களுடைய வீடுகள் என்பவை இடித்து அழிக்கப்பட்ட சம்மபவங்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதியைச் சந்தித்துப் பேசவுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணியளவில் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் அமைந்துள்ள பலாலி படைத்தலமையகத்திலேயே மேற்படிச் சந்திப்பு நடைபெறவுள்ளது.இச் சந்திப்பில் யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதி உதயப்ப…
-
- 0 replies
- 645 views
-
-
தென்னாபிரிக்காவின் நடவடிக்கைகளைப் பொறுத்தே எமது அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்! - சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். [saturday, 2014-04-05 16:29:54] இலங்கை அரசைக் காப்பாற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னாபிரிக்காவுக்குச் செல்லவில்லை. வடக்கு கிழக்கின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக, தென்னாபிரிக்காவுக்கு தெரியப்படுத்தும் விதமாகவே எமது பயணம் அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் தென்னா பிரிக்கப் பயணம் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நாம் ஒரு போதும் இலங்கை அரச…
-
- 1 reply
- 485 views
-
-
பயிற்சியின் போது பெண் சிப்பாய்களைத் துன்புறுத்திய நான்கு இராணுவ அதிகாரிகள் கைது! [saturday, 2014-04-05 16:36:29] பெண் இராணுவ சிப்பாய்களை துன்புறுத்திய நான்கு இராணுவ அதிகாரிகள் கைது செய்ய ப்பட்டுள்ளனர். பயிற்சி பெற்றுக் கொண்ட பெண் இராணுவச் சிப்பாய்களை உயர் அதிகாரிகள் துன்புறுத்தும் காட்சிகள் அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு இராணுவ அதிகாரிகளை இராவ பொலிஸார் கைது செய்துள்ளனர், நான்கு இராணுவ அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழ் பெண் இராணுவச் சிப்பாய்களே இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளானதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், இந்த சம்பவம் 2012ம் ஆண்டில் இடம்பெற்றத…
-
- 2 replies
- 450 views
-
-
யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்கள்! - நேற்று ஒரே நாளில் 3 பேர் காயம். [saturday, 2014-04-05 16:07:20] வாள்வெட்டுச் சம்பவங்களில் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக குடாநாட்டில் அதிகரித்துள்ளது. நேற்றும் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். நாயன்மார் வீதியில் நேற்று இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவரும், முன்பள்ளியில் பயிலும் சிறுமியும் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே இடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தியாகராஜா (வயது 62) என்பவரும், அவரது பேர்த்தியான வசந்தகுமார் மனுசா (வயது 4) என்ற சி…
-
- 1 reply
- 255 views
-
-
-நா.நவரத்தினராசா,சுமித்தி தங்கராசா தமிழ் - சிங்கள புத்தாண்டையொட்டி யாழ்.மாவட்ட செயலகம், யாழ் மாவட்ட படைகளின் தலைமையகம் மற்றும் பொலிஸ் தலைமையகம் ஆகியன இணைந்து யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்றது இந்நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி உதயபெரேரா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன ஆகியோர் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/105916-2014-04-05-10-28-55.html
-
- 0 replies
- 241 views
-
-
புலிகளுக்கு உயிரூட்ட முயற்சியா? – இலங்கை அரசின் குற்றச்சாட்டை மறுக்கிறார் அருட்தந்தை இம்மானுவேல். [saturday, 2014-04-05 16:15:16] அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியமையானது அவர்களின் பிராந்திய நலன் மற்றும் தேவையை அடிப்படையாக கொண்டது என உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட் தந்தை இம்மானுவேல் தெரிவித்துள்ளார். அதனை விடுத்து இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. எவ்வாறாயினும் இந்த தீர்மானம் ஊடாக தமிழ் மக்களுக்கு நிவாரணம் ஒன்று கிடைக்கும் என்பது இரகசியமானதல்ல. உலக தமிழர் பேரவை உட்பட புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்களை தடைசெய்யப்பட…
-
- 0 replies
- 294 views
-
-
பொலிஸ் பாதுகாப்பு கோருகின்றனர் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்! [saturday, 2014-04-05 08:00:43] வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலருக்கு தொலைபேசி மூலம் இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக உறுப்பினர்கள் தன்னிடம் முறையிட்டுள்ளனர் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையில் உள்ள 38 உறுப்பினர்களில் சிலருக்கு இனந்தெரியாத நபர்களினால் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக என்னிடம் முறையிட்டுள்ளனர். அதன்படி அச்சுறுத்தல்தொடர்பில் உரிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாட்டினை பதிவு செய்யுமாறும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். மேலும் முறைப்பாடு செய்யப்படும் இடத்து உறுப்பினர்கள் தமக்கு தனி…
-
- 0 replies
- 242 views
-
-
இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்துமாறு வலியுறுத்தப்படும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மீண்டும் தெரிவித்துள்ளார். சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன மிகவும் முக்கியமானது. உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த கால தவறுகளுக்கு தண்டனை விதித்தல் அவசியமாகின்றதுஎன அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பிலான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முன்னதாக பல நாடுகளுடன் இலங்கை நிலைமைகள் குறித்து கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார் http://www.onlineuth…
-
- 0 replies
- 199 views
-
-
இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இறந்தவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தடைசெய்யப்பட்ட 16 அமைப்புகள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய 424 நபர்கள் என்றொரு அறிவித்தலை கடந்த மார்ச் மாதம் 21 ம் திகதி வர்த்தமானியில் இலங்கை அரசு வெளியிட்டிருந்தது. நபர்களின் முகவரி, பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம் கடவுச்சீட்டு இலக்கம் என்பவையும் அதில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த பட்டியலின் 11 -A பக்கத்தில் இந்த நபர் குறித்த விபரங்களுள்ளன: *பெயர் :- கருணாநிதி துரைரத்தினம் அல்லது துரை, தொ.பே. இல :-0664656395, கடவுச் சீட்டு இல :F 750320938 ,பிறந்த திகதி:-05.03.1969, விலாச…
-
- 1 reply
- 449 views
-
-
வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்களுக்கும் தடைவிதிக்க அரசு திட்டம்! [saturday, 2014-04-05 20:48:37] வெளிநாடுகளில் இயங்கி வரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கு தடை விதித்த இலங்கை அரசாங்கம் அடுத்ததாக, வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்களுக்கும் தடைவிதிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான இரகசிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலம் பெயர்ந்த மக்களின் தமிழ் தேசிய செயற்பாடுகளில், வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்கள் பெரும் பங்கினை வகித்து வருகின்றன. இதன்அடிப்படையில் ஏற்கனவே குறிப்பிட்ட சில இணையத்தள செய்தி ஊடகங்களை இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் தடை செய்துள்ளது. இந்த நிலையில் மேலும் பல ஊடகங்களை உத்தியோகபூ…
-
- 2 replies
- 340 views
-
-
யுத்தம் காரணமாக வவுனியா வடக்கு வலயத்தில் 14 ஆயிரம் மாணவர்களில் 8 ஆயிரம் மாணவர்களே உள்ளனர் - 05 ஏப்ரல் 2014 வவனியா வடக்கு கல்வி வலயத்தில் பதின்நாலாயிரம் மாணவ மாணவிகள் இருந்ததாகவும் தற்போது எட்டாயிரம் மாணவ மாணவிகளே உள்ளதாகவும் நான் அறிகின்றேன் இது யுத்தம் காரணமாகவே என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலய மட்ட விளையாட்டுப்போட்டியில் இன்று (5.4) பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், போரின் பின்னர் எமது மாணவர் சமூகம் பெரும் அல்லல் பட்டு மிகவும் அவலமான நிலையில் இருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.அது துரதிஸ்டவசமான விடயம். போரின் காரணமாக உ…
-
- 0 replies
- 333 views
-
-
மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கிராமத்தில் குத்தகைக்கு வழங்கப்பட்ட காணியில் ஹோட்டல் அமைக்கப்பட்டதையும், மக்கள் செல்லும் வீதியை தடுக்க முற்படுவதையும் தடுத்து நிறுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காயாங்கேணி கிராமத்தில் கடற்கரையை அண்டிய காணித் துண்டொன்று கடந்த 1942ம் ஆண்டு வாழைச்சேனையைச் சேர்ந்த ஒரு நபருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. உண்மையிலே குத்தகைக்கு வழங்கப்பட்டது அரச காணியாகும். இதனைக் கைமாற்றுவதற்கோ, உறுதி வழங்குவதற்கோ சட்ட ரீதியாக இடமில்லை. ஆ…
-
- 0 replies
- 341 views
-
-
சுவிஸ் வங்கியில் புலிகளின் 1 பில்லியன் டொலர் சொத்து! – முடக்கும் முயற்சியில் இலங்கை அரசு. [saturday, 2014-04-05 07:41:12] சுவிட்சர்லாந்து வஙகியொன்றில் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான விடுதலைப் புலிகளின் சொத்துக்களை அரசுடமையாக்கும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்து விபரங்கள் தொடர்பில் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத முகவர் குமரன் பத்மநாதன் தகவல்களை வழங்கியுள்ளார். சுவிட்சர்லாந்தின் பேர்ண் நகரில் அமைந்துள்ள தூதரகத்தின் ஊடாக அரசாங்கம் சொத்துக்களை அரசுடமையாக்குவது குறித்து அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=106947&category=TamilNews&language=tamil
-
- 4 replies
- 900 views
-
-
முல்லைத்தீவு கேப்பாபிலவு பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்களுக்காக இராணுவத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 101 வீடுகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (03) இடம்பெற்றது.(படங்கள்:ரொமேஷ் மதுசங்க) http://tamil.dailymirror.lk/--main/105712-2014-04-03-15-43-09.html
-
- 14 replies
- 751 views
-
-
இலங்கைத்தீவில் தமிழினத்தின் மீது போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட சிறிலங்கா அரச தலைவர்கள் , இராணுவ தளதிகள் ஆகியோரது பெயர்ப்பட்டியலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிடுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தடுப்பும் விசாரணை முயற்சிகளுமான மையத்தினால் வெளியிடப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் 2001ம் ஆண்டு அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட 1373ம் இலக்க பிரேரணையின் தீர்மானத்தின் விதிகளுக்கு புறம்பாக, ஒர் இனத்தின் மீது திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசாங்கம் போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்டுள்ளது. இச்செயலில் ஈடுபட்பட்ட சிங்கள அரச தலைவர்கள் மற்றும் சிறிலங்கா இராணுவ தளதிகள் ஆகியோர…
-
- 6 replies
- 891 views
-
-
-நவரத்தினம் கபில்நாத் விவசாயத்தை மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் வயல் விழா வவுனியா முருகனூர் விவசாய பண்ணையில் வெள்ளிக்கிழமை (4) இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் நிலை காரணமாக, வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன் போது விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கான விளக்கங்களையும் மற்றும் தொழில்நுட்ப யுக்திகளை ஆராய்ந்து கொள்ளவதற்கான வழிவகைகளையும் விவசாய விரிவாக்கல் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வட மாகாண விவசாய பணிப்பாளர், வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண பணிப்பாளர் அ. சகிலாபானு உட்பட பலர் கலந்துகொண்டிர…
-
- 1 reply
- 527 views
-