Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவுமென ஏற்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுத் திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இது குறித்து மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு உதவும் பொருட்டு அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களுக்கென அமெரிக்க அரசாங்கம் இந்த வருடம் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க எதிர்பார்த்துள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல் பாடசாலையை விட்டு விலக நேரிடும் சிறுவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறும் சிறுவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு வலுவூட்டு…

    • 4 replies
    • 603 views
  2. 2009ல் இருந்து தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான பிரதிநிதித்துவத்துக்கூடாக ஒவ்வொரு வருடமும் பிரித்தானிய தமிழர் பேரவைச் செயல்ப்பாட்டளர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கியமான கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் உச்சமட்ட மன்றமான நாடு தழுவிய "தேசிய அவைக்கு" 2014 க்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யும் தேர்தல் நடைமுறை ஆரம்பித்துள்ளது. ஐக்கிய ராச்சியம் எங்கும் உள்ள 21 உள்ளூர் தமிழர் பேரவைகளுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தல் ஆரம்பித்துள்ளது. பரந்துபட்ட மக்களின் ஜனநாயகரீதியான ஆணையைப் பெற்று இக்கட்டமைப்புக்கள் செயல்ப்பட்டு வருகின்றன. மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூர் தமிழர் பேரவைகள் ஒவ்வொன்றும் "தேசிய அவைக்கு" தமது பிரதிநித…

  3. எமக்கு களங்கம் ஏற்படுத்த முனைகிறது இலங்கை அரசு! – அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் குற்றச்சாட்டு. [Thursday, 2014-04-03 07:58:08] தமது அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முனைப்புடன் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினர் சாம் பாரி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் நற்பெயருக்கு களங்கத்தை உண்டு பண்ணும் நோக்கில் இவ்வாறு போலிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. நாம் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் மிகச் சிறந்த உறவினை பேணி வருகிறோம். அதனை சீர்குலைக்கும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங…

  4. கனடாவில் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் தமிழக நடிகை திரிஷா கலந்த கொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்களின் படுகொலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கண்டிக்கும் விதமாக, இலங்கைக்கு தமிழக நடிகர் நடிகைகள் போவதில்லை என ஏற்கனவே முடிவு எடுத்துள்ளனர். அத்துடன் இலங்கையில் நடக்கும் இசை விழாக்களிலும் கலந்து கொள்ளாது பின்னணி பாடகர்கள் புறக்கணித்து வருகின்றனர். அதேபோலவே வெளிநாடுகளிலும் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் நடத்தும் விழாக்களை தமிழ் திரையுலகினர் புறக்கணித்து வருகின்றனர். இதனை மீறி செல்வோருக்கு எதிராக கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக நடிகை திரிஷா தடையை மீறி மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவாளர்கள் கனடாவில் நடத்திய விழாவ…

    • 3 replies
    • 1.1k views
  5. சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்னெடுப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று சிறிலங்கா அதிபரின் மனிதஉரிமை விவகாரங்களுக்கான சிறப்புப் பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனைத்துலக விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயாரில்லாத நிலையில், நவநீதம்பிள்ளையினால் விசாரணைகளை பலவந்தமாக எம்மீது திணிக்க முடியாது. அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கு நாடுகளால் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்பு அரசாங்கம் எந்த நிலைப்பாட்டில் இருந்ததோ அதே நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கிறது. அனைத்துலக விசாரணையில் எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை. உள்ளக விசாரணைகளை நாம் தீவிரப்…

    • 5 replies
    • 777 views
  6. வெளிநாட்டு தலையீடுகள் கடும்போக்குவாத்தை போசிக்குமே தவிர இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் காத்திரமான தீர்வுதுத் திட்டமொன்றை எட்ட முடியும் என்பதனை அரசாங்கம் உறுதியாக நம்புகின்றது. இனத்துவ கடும்போக்குவாதங்கள் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். சிங்கள பௌத்த, தமிழ் அல்லது முஸ்லிம் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தேசிய அடையாளங்களுடன் கட்டியெழுப்பப்பட வேண்டியது அவசியமானது. உலகின் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பு ஒன்றை இல்லாதொழித்த நாடு என்ற வகையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது அவ…

  7. யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இராணுவத்தினரால் குடும்ப விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. முதற்கட்டமாக சங்கானை, சித்தங்கேணி மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குடும்ப விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் உள்ளிட்ட குடும்ப தகவல்களை திரட்டும் சுமார் 42 வினாக்கள் அடங்கிய விண்ணப்ப படிவம் மூலம் இராணுவத்தினரால் பொது மக்களின் விபரங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாழ். மாவட்ட படைத்தரப்பிடம் உதயன் இணையத்தளம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்ட போது இது தொடர்பாக குறித்த பிரதேச ராணுவ அதிகாரியிடம் கேட்டு விட்டு பதில் வழங்குவதாக தெரிவித்துள்ளார். http://www.onlineuthayan…

  8. கைது செய்யப்பட்ட 14 பல்கலைக்கழக மாணவர்களையும் விடுவிக்கக் கோறி மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோது பிடிக்கப்பட்ட படங்கள் (படங்கள்:கித்சிறிடிமெல்) http://tamil.dailymirror.lk/--main/105668-2014-04-03-09-51-08.html

  9. நடிகை அனார்கலியை தன் மடியில் அமர்த்தி புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியும் என தென் மாகாண சபையின் ஆளும் கட்சியின் முன்னாள் மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த அவர் மேலும் தெரிவிக்கையில், கொள்ளையிட்டு அந்த பணத்தை தேர்தலில் செலவிட்டிருந்தால் என்னால் வெற்றி பெற்றிருக்க முடியும். எதிர்காலத்தில் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் வங்கிகளில் கொள்ளையிட்டு பிரபலமாகினால் போதுமானது. அதிகளவில் சுவரொட்டியும், கட்அவுட்களை வைக்கும், பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை செய்யும் மற்றும் குடை மற்றும் செல்போன்களை வழங்கும் வேட்பாளர்களுக்கே மக்கள் வாக்களிக்கின்றனர். இது காலிய…

  10. இறுதிப்போருக்காக படையில் சேர்க்கப்பட்டவர்களால் இராணுவத்துக்கு களங்கம்! – என்கிறார் இராணுவப் பேச்சாளர். [Thursday, 2014-04-03 07:20:02] விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது அவசர அவசரமாக இணைத்துக் கொள்ளப்பட்ட இராணுவத்தினரால், தற்போது இராணுவம் சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கேகாலை பகுதியில் 27 இலட்சம் ரூபா பெறுமதியான, ஐயாயிரம ரூபா போலி நாணயதாள்கள் 520 ஐ வைத்திருந்த இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இதுதொடர்பாக இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்த இராணுவ தளபதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கிய இராணுவ பேச்சாளர், இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ ஒழுக்கங்கள…

  11. உடையார்கட்டு “இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள்” பாரிய வெடிப்பு சம்பவம்! இராணுவ ஆயுத களஞ்சியமாக இருக்கலாம் என பிரதேசவாசிகள் ஊர்ஜிதம்! முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு குரவயல் பக்கமாக காடுகளை அண்மித்துள்ள பகுதியில் நேற்று மாலை 6.42 மணியளவில் பாரிய வெடிப்புச்சத்தம் ஒன்றை கேட்க முடிந்ததாகவும், வெடிப்புச்சத்தத்தை அடுத்து அப்பகுதியில் கரிய புகை படலங்கள் மேலெழுந்ததை அவதானிக்க முடிந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். மக்கள் நடமாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்தே குறித்த வெடிப்புச்சத்தத்தை உணர முடிந்ததாகவும், வெடிப்புச்சத்தத்தின் அதிர்வுகள் பல நூறு மீற்றர்கள் வரை எதிரொலித்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். வெடிப்புச்சம்பவ…

  12. பயங்கரவாதச் செயல்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை நிரூபிப்பது சிறீலங்கா அரசாங்கத்தின் பொறுப்பு என்று பிரித்தானியா சவால் விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மறு முக அமைப்புக்கள் என முத்திரை குத்திப் புலம்பெயர் தேசங்களில் இயங்கும் பதினைந்து அமைப்புக்களை தடைசெய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை சிறீலங்கா அரசாங்கம் தயாரித்து வரும் பின்புலத்தில் இன்று இது தொடர்பாக இலண்டனில் இருந்து வெளிவரும் தமிழ் கார்டியன் இணைய இதழிற்கு கருத்துரைத்த பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பலவற்றுடன் தமது அரசாங்கம் தொடர்பைப் பேணி வருவதாகவும், கருத்துச் சுதந்திரத்தையும், நியாயபூர்வமான விமர்சன உரிமையைய…

  13. தீவக கரையோரங்களிலும் முளைக்கும் காவலரண்கள்! – பொதுமக்கள் பீதி. [Thursday, 2014-04-03 07:25:52] யாழ்ப்பாணத்தில், தீவக கரையோரப் பகுதிகளில் மீனவர்கள் தொழில் புரியும் இடங்களுக்கு அண்மையில் அவசர அவசரமாக காவலரண்கள் அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். தீவகத்தின் புங்குடுதீவு, வேலணை, ஊர்காவற்றுறை பிரதேசங்களின் கரையோரப் பகுதிகளிலேயே பாதுகாப்பு செயற்பாடுகள் மற்றும் கண்காணிப்புக்களை அதிகரிக்கும் நோக்குடன் இக் காவலரண்களை அமைக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர். வேலணை அராலி சந்திக்கு அருகில் பாரிய படைமுகாம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து கரையோரப் பகுதிகளில் காவலரண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியான கண்காணிப்புக்களும் …

  14. புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் குடும்பங்களைக் குறிவைக்கிறது இலங்கை அரசு! – 61 வயது வடமராட்சிப் பெண் கைது. [Thursday, 2014-04-03 06:41:14] விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புக்களை தடைசெய்து இலங்கை அரசு, புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் குடும்பங்களை தாயகத்தில் வேட்டையாடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. கரவெட்டி அல்வாய் தெற்கைச் சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழு பிள்ளைகளின் தாயாரான கணபதிப்பிள்ளை யோகராணி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பிள்ளைகள் அனைவரும் புலம்பெயர் தேசங்களில் வசித்து வருவதாகவும் அவர்களை தொடர்புபடுத்தியே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாகவும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. …

  15. இன்று முல்லைத்தீவுக்கு செல்கிறார் கோத்தாபாய! – 100 ஏக்கர் காணியை விடுவிப்பாராம். [Thursday, 2014-04-03 07:49:09] முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. அத்துடன், குறித்த வீடுகளுக்கு அண்மித்த பிரதேசத்தில் விமானப்படை முகாமுக்கு உட்பட்டிருந்த 100 ஏக்கர் விவசாய நிலம், பொதுமக்களின் விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளது. முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு செயலாளர், மேற்படி வீடுகள் மற்றும் காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதோடு இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட வீடுகள் சிலவற்றையும் …

  16. இலங்கை ராணுவத்திடம் பாலசந்திரன் சிக்கியது எப்படி.....???? ‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே ஈழத்தமிழர் படுகொலை குறித்து பரபரப்பான பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு: கே: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது? ப: பாலச்சந்திரன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்டவை. 2009 மே மாதம் 19-ம் தேதி காலை அந்த வீடியோ எடுக்கப்பட்டது. இலங்கை ராணுவத்தில் இருக்கும் படைப் பிரிவுகளிலேயே 53ம் படைப் பிரிவுதான் மிகவும் கொடூரமானது. அவர்கள்தான் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எதிர் கொண்டவர்கள். கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவர்கள். உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் எந்த தகவல்ம்களும் நான் நேரடியாகப் பார்த்தவை கிடையாது. அந்த …

    • 8 replies
    • 1.7k views
  17. தேசிய விடுதலைக்காகப் போராடிய போராளிகளும், போராளிகளுக்கு உறுதுணையாக நின்ற மக்களும் தமிழீழத்தில் வேலை வாய்ப்புக்கள் இன்று பட்டினியால் வாடும் நிலையில் இலண்டனில் விசுவநாதன் உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த அரசு என்ற குழுவினரால் குத்தாட்ட நிகழ்வொன்று நடாத்தப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில் நடைபெற்ற இந்தக் குத்தாட்ட நிகழ்வில் நாடுகடந்த கும்பலின் இலண்டன் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சம்பேய்ன், உவைன் போன்ற மதுபானங்களை அருந்தித் திழைத்தும், நடனமாடியும் குத்தாட்டத்தை மேற்கொண்டதை உறுதிசெய்யும் நிழற்படங்கள் வெளிவந்துள்ளன. நாடுகடந்த அரசு என்ற கும்பலின் தாயக அபிவிருத்தி அமைச்சராக விளங்கும் பாலாம்பிகை முருகதாஸ் என்பவரும், அவரது அமைச்சுச் செயலாளரான தாம…

  18. -சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத் யாழ். கோப்பாயினைச் சேர்ந்த ஒருவரினால் 300,000 ரூபா செலவில் யாழ். கல்வியங்காட்டு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரனின் 6 அடி உருவச்சிலை புதன்கிழமை (2) திறந்து வைக்கப்பட்டது. யாழ். கல்வியங்காடு வைரவர் ஆலயத்திற்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புரட்சி தலைவரின் சிலையினை யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா திறந்து வைத்தார். இந்தச் சிலையினை இந்திய சிற்பக்கலைஞர் புருசோத்தமன் நிர்மாணித்திருந்தார். இந்நிகழ்வில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/105570-300000-.html

  19. ஜெனிவாவில் மோதல், கொழும்பில் கூடல்! – அமெரிக்காவின் இரட்டை அணுகுமுறை. [Tuesday, 2014-04-01 07:53:49] அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைத் தலைமையகம், இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு பிரதானி அலுவலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'டெம்பஸ்ட் எக்ஸ்பிரஸ் - 24' எனும் சர்வதேச கருத்தரங்கு கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் வரும் 9ம் திகதி வரை கொழும்பு, கலதாரி நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச கருத்தரங்கில் அமெரிக்கா உட்பட 16 நாடுகளைச் சேர்ந்த 46 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். வியட்நாம், கனடா, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, நேபாளம், மாலைத்தீவு, கம்போடியா, இதோனேசியா, மலேசியா, மொங்கோலியா, சிங்கப்பூர், தாய்ல…

    • 8 replies
    • 502 views
  20. தேவ அச்சுதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைக்காலபோக நெற் செய்கையினை அதிகரிக்கச் செய்யும் நோக்கோடு மீளமைக்கப்பட்ட மியாங்குளம் ஜனாதிபதியின் ஆலோசகரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தனால் திங்;கட்கிழமை (31) பரிட்சார்த்தமாக திறந்துவிடப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு கமநல திணைக்கள உதவிப்பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/79--image/105420-2014-04-01-12-38-21.html

  21. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கும் அங்கிருந்து இங்குமாக கடலால் போக்குவரத்துச் செய்கிறார்களென புதிய விளக்கமொன்றினை அளித்துள்ளது இலங்கை அரசு. வடக்கே உள்ள மீனவர்கள் இனிமேல் கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதற்கு கடற்படையினரிடம் அல்லது இராணுவத்தினரிடம் பாஸ் பெறும் நடைமுறை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட உள்ளது. போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் படிப்படியாகவே, மிக மெதுவாகவே மீன்பிடிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இப்போது ஜெனிவாவில் இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள்சபை விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படுவதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகையில் மீன்பிடிக்கான பாஸ் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்தப் போவதாகப் படையினர் தம்மிடம் தெரிவித்தனர் என்று மீனவ அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. இதனி…

    • 0 replies
    • 436 views
  22. 8ஆவது தடவையாக முல்லை நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு: யுத்த வீரனாக மாறிய அரசசட்டத்தரணி சிகான்டீசில்வா - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- சரணடைந்தவர்களை தேடி அலையும் குடும்பங்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு 8 ஆவது தடவையாக முல்லைத்தீவு நீதிமன்றில் இன்று (02.04.14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே வவுனியாவில் 4 தடவையும் இன்றுடன் முல்லைத்தீவு நீதிமன்றில் 4ஆவது தடவையாகவும் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது. தம்மால் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்பதற்காக 12 நேரடி உறவுகளால் கொண்டுவரப்பட்ட இந்த ஆட்கொணர்வு மனுவில் 5 பேருடைய மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டு பின்னர் 3 எனக் கூறப்பட்டு இறுதியாக ஒருவருடைய மனுவே விசாரணை…

    • 0 replies
    • 435 views
  23. தேவைப்படுகிறார் என்று தலைப்பிடப்பட்ட மேலும் ஒரு சுவரொட்டி யாழ்.குடாவின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி நல்லூர் பகுதியில் அதிகளவில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதிகளவிலான குற்றங்களுடன் தொடர்புடைய தெய்வீகன் அல்லது பகீரதன் என்று அழைக்கப்படுபவர் தேவைப்படுகின்றார் என அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த நபர் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 5இலட்சம் ரூபா பெற்றுத் தருவதற்கு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தகவல்களை வழங்குவதற்கும் 2 தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இவ்வாறு தேவைப்படுகின்றனர் என தொடர்ந்தும் பலரின் பெயர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. …

  24. திருகோணமலையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வர கோவிலின் வருடாந்தத் தேர் திருவிழா புதன்கிழமை (02) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன்போது, திருக்கோணேஸ்வர நாதர் மாதுமை அம்பாள் சகிதம் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். (படங்கள்: வடமலை ராஜ்குமார்) http://tamil.dailymirror.lk/--main/105488-2014-04-02-06-41-23.html

    • 0 replies
    • 398 views
  25. பல்தேசிய திட்டமிடல் விரிவாக்கல் குழுவின் 'Tempest Express - 24' என்ற பெயரிலான, அதிகாரிகளுக்கான திட்டமிடல் பயிற்சிப் பட்டறை ஒன்றை, அமெரிக்க பசுபிக் கட்டளைப் பீடமும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்புத் தலைமை அதிகாரி பணியகமும் இணைந்து கொழும்பில் நடத்தி வருகிறது. கலதாரி விடுதியில் நேற்று ஆரம்பமான இந்த பயிற்சிப் பட்டறையை சிறிலங்காவின் பாதுகாப்புத் தலைமை அதிகாரி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆரம்பித்து வைத்தார். வரும் 9ம் நாள் வரை தொடர்ந்து நடக்கவுள்ள இந்த பயிற்சிப் பட்டறையில், அமெரிக்க பசுபிக் கட்டளை பீடத்தின் பல்தேசிய பயிற்சி விரிவாக்கற் குழுவின் அதிகாரி பீட் டி பெலிஸ் ஆரம்ப உரை நிகழ்த்தினார். இந்தக் கருத்தரங்கில், சிறிலங்கா படைகளை சேர்ந்த 23 அதிகாரிகளும், சம்பந்தப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.