ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
கிளிநொச்சி (Kilinochchi) - A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று (2.8.2024) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் விசாரணை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்தி பயணித்துள்ளது. இதன்போது, அதே திசையில் பயணித்த லொறி ஒன்று குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. …
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
2023 மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையில் ஜனாதிபதியும், நிதியமைச்சரும் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பெஃப்ரல் அமைப்பு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பின் போதே, மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் …
-
-
- 9 replies
- 586 views
- 1 follower
-
-
சீன(china) கடற்படைக்கு சொந்தமான போலன் என்ற கப்பல் இம்மாதம் இறுதி வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை(sri lanka), வியட்நாம்(vietnam), இந்தோனேசியா(indonesia) ஆகிய நாடுகளுடன் கடற்படை ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த கப்பலின் வருகை அமையவுள்ளது. சீனாவின் வடகிழக்கில் உள்ள டேலியன் மாகாணத்தில் இருந்து தனது பயணத்தை குறித்த கப்பல் ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் வசதி 85 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் 18நொட்ஸ் வேகத்தில் பயணிக்கக் கூடியது. 50 கடற்படை கேடட்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் வசதியும் உள்ளது. கடற்படை அதிகாரிகளிடைய…
-
-
- 14 replies
- 724 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 AUG, 2024 | 01:02 PM கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்தைப் புனரமைப்புச்செய்வதற்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் அனுசரணையுடன் வீதிக்கட்டமைப்பு அபிவிருத்திக்கருத்திட்டத்தின் கீழ் பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்தில் எஞ்சியுள்ள நிதியின் மூலம் கிண்ணியா - குறிஞ்சாக்கேணி வீதியின் குறிஞ்சாக்கேணி பாலத்தைப் புனரமைப்புச்செய்வதற்கான ஒப்பந்தத்தை தனியாக கட்டம் தனியான கடித உறை முறைமையின் கீழ் விலைமுறிகோரப்பட்டது. அதற்காக, 09 …
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு மற்றும் தமிழ் பொது வேட்பாளர் குறித்த சாதகத் தன்மைகள் குறித்தும், ஈழத்தமிழர்கள் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது, காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள தென்னாபிரிக்கா, ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப் படுகொலைக்கும் சர…
-
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 27 AUG, 2024 | 11:00 AM கொழும்பிலுள்ள தூதரங்களிற்கு இடையிலான தொடர்பாடல்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அமோக வெற்றிபெறுவார் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை இந்திய தூதரகம் அவ்வாறான தகவல்கள் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது. பல வழிமுறைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இரகசிய கருத்துக்கணிப்புகள் அனுரகுமாரதிசநாயக்க இலகுவான வெற்றியை பெறுவார் என தெரிவித்துள்ளமை இராஜதந்திர மட்ட தொடர்பாடல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக சமூக ஊடக தகவலொன்று தெரிவித்துள்ளது. தேர்தல் இடம்பெறுவதற்கு 30 நாட்களிற்கு முன்னராக மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் அனுரகுமாரவின் அதிகரித்…
-
- 1 reply
- 290 views
- 1 follower
-
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன? எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களுடைய பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், இலங்கை சுயாதீன ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவினா் வேட்பாளர்கள் தொடர்பான தொடர் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கண்டி, நுவரெலியா, மாத்தளை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், புத்தளம், குருநாகல், மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, மொனராகல, பதுளை, பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில்இ அனைத்து மாவட்டத்திலும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலிடத்தில் இருப்பது…
-
-
- 31 replies
- 1.6k views
- 2 followers
-
-
பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரம்! ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் இன்று தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார பயணத்தின் ஒரு கட்டமாக அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன்படி யாழ். நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் இருக்கும் திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியிருத்தார். இவ் அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசி…
-
- 0 replies
- 256 views
-
-
முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை! முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனையும் 10 வருட காலத்திற்கு பணி இடைநிறுத்தமும் செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார். இதில் ஏ. எச். . எம் ஃபௌசி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் 4 இலட்சம் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2010 இல், ஏ. எச். எம் ஃபௌசி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய போது, நெதர்லாந்திலிருந்து சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக தனது தனிப்பட்ட பாவ…
-
- 0 replies
- 143 views
-
-
சுயலாபத்துக்காக போலி தகவல்களை தலைவர்கள் வழங்கி வருகின்றனர்-மெல்கம் ரஞ்சித்! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து அவற்றை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும் தலைவர்களைத் தெரிவு செய்வதனால் பாதிப்பே ஏற்படக்கூடும் எனக் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ராகம – தேவத்த – பெசிலிக்கா தேவாயலத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் தெரிவித்தார் தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தயவுசெய்து விழிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தங்களது சுயலாபத்துக்காக பல்வேறுபட்ட உறுதிமொழிகள் மற்றும் போலியான தகவல்களை எமது தலைவர்கள் வழங்கி வருவதாகவும், கடந்த 75…
-
- 0 replies
- 272 views
-
-
வைத்தியர் கேதீஸ்வரன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் நியமனம் தொடர்பில் பெரும் சர்ச்சைநிலை ஏற்பட்டிருந்தது. இதற்கு பதிலடி வழங்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவானது யாழில், இடம்பெறும் அரச வைத்தியதுறையின் ஊழல் செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தெற்கிலிருக்கும் சிங்கள அரசாங்கம் வடக்கு மக்களுக்கு ஒழுங்கற்ற விதத்தில் மருத்துவ வசதிகளை வழங்குகிறது என்ற பொய்யை நிரப்புவதற்காகவே யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் பகடைக்காயாக செயற்படுவதாகவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். சாவகச்சேரி, மற்றும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகளில் ம…
-
-
- 195 replies
- 19.3k views
- 3 followers
-
-
இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை! மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியப் படையினர் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே பரஸ்பர நட்புறவை மென்மேலும் விருத்தி செய்யும் முக்கிய படிமுறையாக, வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகின்ற இந்த மித்ரசக்தி போர்ப் பயிற்சியானது, எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை மாதுரு ஓயா பிரதேசத்தில் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய இராணுவ வீரர்களே நேற்று மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர். இந்திய இராணுவ படையினரை காலாட்படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, மித்ர சக்தி இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தினேஷ் உடுகம, இலங்கை…
-
-
- 8 replies
- 878 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 10:55 AM “வளமான நாடு - அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்காவினால் இன்று கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தேர்தல் விஞ்ஞாபனத்தை மத தலைவர்களுக்கு வழங்கினார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு பதிலாக மாற்று முறைமையை செயற்படுத்தும் திட்டங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் தேர்தல் விஞ்ஞா…
-
- 2 replies
- 382 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 04:54 PM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (26)அதிகாலை உயிரிழந்துள்ளார். காரைநகரை சேர்ந்த ப.ஐங்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார். தனது மகனை தனியார் வகுப்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த வேளை, பிறவுண் வீதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
ஐ.நா உயர்ஸ்தானிகரின் குற்றச்சாட்டுகளை இலங்கை மறுப்பு! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஐநா மனித உரிமைகள் பேரவையின் இந்த அறிக்கை வெளியாகியிருந்தது. மனித உரிமைகள் பாதுகாப்பு முறையை சீர்திருத்துவதாக உறுதியளித்த போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை இன்னும் செய்யாமல் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், 2023 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் மசோதாக்கள் மூலம் பாதுகாப்புப் படைகளுக்கு பரந…
-
- 0 replies
- 174 views
-
-
Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 09:08 AM மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஊர்காவற்துறை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (24) இரவு மது போதையில், குறிகட்டுவான் பகுதியில் கடமையில் இருந்திருந்தார். இதன்போது, வீதியால் சென்ற பொதுமகனிடம் இலஞ்சம் பெற முயன்றதோடு அவர்மீது தாக்குதலும் மேற்கொண்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். அந்தவகையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை ஊர்காவற்துறை பொலிஸார் கை…
-
- 1 reply
- 270 views
- 1 follower
-
-
26 AUG, 2024 | 08:55 AM களுத்துறை, அவித்தாவ, இஹலகந்த பிரதேசத்தில் அத்தாவெட்டுனுவல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த இருவரும் தென் பகுதியில் கடமையாற்றிய மட்டக்களப்பு மற்றும் யாழ்பாணத்தைச் சேர்ந்த சுகாதார பரிசோதகர்கள் ஆவர். மொரட்டுவ பிரதேசத்தின் டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் குழுவினர் மற்றும் நான்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த பகுதிக்கு நீராடச் சென்ற போதே இருவரும் இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய எஸ். கௌதம் (வயது -26) மற்றும் எஸ். ஹர்ஷநாத் (வயது -28…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 03:13 PM மன்னார் வங்காலையிலுள்ள தேசியப் பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றக் கோரி இன்று திங்கட்கிழமை(26) காலை பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு முன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர். பிள்ளைகளின் கல்வியை பாழாக்காதே, ஒழுக்கம் இல்லாத உன்னால் எப்படி ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்க முடியும்?. ஒரு குடும்பத்திற்காக ஊரை அழிப்பதா? உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார் வங்காலை புனித ஆனாள் தேசியப் பாடசாலை கடந்த பல வருடங்கள…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
யாழில் கணவனால் தீயிட்டு மனைவி வைத்தியசாலையில் அனுமதி Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 12:45 PM யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குடும்பத்தில் பிரச்சினை அடிக்கடி இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பின்னர் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து தீயினை மூட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த ச…
-
- 0 replies
- 282 views
-
-
மன்னார் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு. மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 26 வயதுடைய எஸ்.சுதன் என்பவரே வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் நேற்று இரவு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மன்னார் வைத்தியசாலையில் இளம் பட்டதாரி பெண் சிந்துஜா, குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் இரத்த போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களால் கவனிக்கப்படாத நிலையில…
-
-
- 7 replies
- 910 views
- 1 follower
-
-
அரசியல்வாதிகள், அதிகாரிகள், மற்றும் அரசியல் கையாட்கள் சிலர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் இருந்து விசா பெற்றுள்ளதாகவும் சிலர் விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த அரசாங்கங்களின் போது தமது அரசியல் பலத்தை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி எண்ணற்ற பணம் சம்பாதித்த அரசியல்வாதிகள் இலங்கையில் (Sri Lanka) உள்ள தமது சொத்துக்களை இரகசியமாக விற்பனை செய்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கூட்டுத் தொழில் குறிப்பாக, கூட்டு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வந்த இவ…
-
- 2 replies
- 561 views
- 1 follower
-
-
25 AUG, 2024 | 06:38 PM கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான குளங்களை பாதுகாக்கும் பொருட்டு அவற்றிற்கு எல்லை கற்கல் இட்டு அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எல்லை கற்கள் கொள்வனவு செய்யப்பட்டு தயாராக உள்ளபோதும் அவற்றினை கொண்டு குளங்களுக்கு எல்லையிடுவதற்கு நீர்ப்பாசனத் திணைக்களம் தயாராக இல்லாதிருப்பது கவலையளிக்கிறது என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் சில குளங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதில் கிளிநொச்சி குளம் அதன் பின்பகுதியில் பெருமளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டு மதில்கள் அமைக்கப்பட்டு கட்டடங்களும் கட்டப்பட்டுவிட்டன. கனகாம்பிகைகுளம் அதன் பின்பகுதியில் ஒட்டுசுட்டான…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
25 AUG, 2024 | 06:09 PM சதாரணமான கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தராத ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வினை தரப்போகின்றார்களா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் கலந்துரையாடல் மட்டக்களப்பு செட்டிபாளையத்தி அமைந்துள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை(24) மாலை நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, உள்ளுராட்சி…
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
25 AUG, 2024 | 06:02 PM கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்துக்குட்பட்ட பெரியகுளம் கனகராயனாற்றுப் பகுதியில் உள்ள பல ஏக்கர் காணிகளில் பொலிஸாரின் முழுமையான ஒத்துழைப்போடு சட்டவிரோத மணல் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனகராயன் ஆற்றினை அண்டிய பெரிய குளம் பகுதியிலும் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் சுமார் 25 அடி ஆழத்துக்கும் மேலாக அதிகளவில் கனரக வாகனங்கள் மூலம் மணல் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்தில் தொடர்ந்து மணல் அகழ்வுப் பணிகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் பல்வேறு முறைப்பாடுகளை அளித்து வருகின்றனர். இந்த பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
மூன்று பிரதான வேட்பாளர்களையும் சமதூரத்தில் வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் Posted on August 25, 2024 by தென்னவள் 6 0 பாராளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும் என கூற முடியாது தற்போது ஜனாதிபதி தேர்தல் வருகின்றது. இதில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை (24) மாலை பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை வரவேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பலர் என்னிடம் வினவும் ஒ…
-
- 0 replies
- 325 views
-