ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
நந்திக்கடலுக்கு அருகே உரப்பையில் கட்டப்பட்ட மண்டையோடு! – நெற்றிப் பொட்டில் குண்டு துளைத்த துவாரம். [Thursday, 2014-03-06 07:32:48] News Service முள்ளிவாய்க்காலுக்கு தெற்காக உள்ள நந்திக்கடலுக்கு அருகில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளன. பச்சை உரப்பை ஒன்றில் கட்டியவாறு நெற்றிப் பகுதியில் குண்டு துளைத்த துவாரத்துடன் மண்டையோடு ஒன்று இருப்பதாக அப்பகுதி தொழிலாளியொருவரினால் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனுக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து எச்சங்கள் இருப்பதை ரவிகரன் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், தகவலை அடுத்து நேரில் சென்று பார்வையிட்ட போது அப்பிரதேசங்களில் பெருமளவு மனித எச்சங்கள் காணப்பட்டன. இவை உரப்பைகளில் கட்டப்பட்ட நிலையிலேயே இ…
-
- 0 replies
- 791 views
-
-
இலங்கை விவகாரத்தில் இலங்கை மக்களினாலேயே அடைந்துகொள்ளக்கூடிய நிரந்தர தீர்வுக்கு தென்னாபிரிக்கா ஆதரவு வழங்குவதாக தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் தொடர்பான அமைச்சர் என்கோனா மாஷாபானி தெரிவித்தார். ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய இரண்டாம் நாள் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் தொடர்பான அமைச்சர் என்கோனா மாஷாபானி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில் இலங்கை விவகாரத்துக்கு இலங்கை மக்களினாலேயே அடைந்துகொள்ளக்கூடிய நிரந்தர தீர்வுக்கு நாங்கள் ஆதரவு வழங்குகின்றோம். இலங்கை விவகார…
-
- 3 replies
- 714 views
-
-
றோகன் குணரத்தின அவர்களுக்கு எதிரான அவதூறு வழக்கில் கனடிய தமிழர் பேரவைக்கு 53,000 டொலர்கள் இழப்பீடு:நீதிமன்றம் உத்தரவு [Wednesday, 2014-02-19 12:52:47] மே 2009 இல் வட சிறீலங்காவில் அரசு மேற்கொண்ட இறுதி இராணுவத் தாக்குதலில் அய்யன்னா சபையின் மதிப்பீட்டின்படி 40,000 - 70,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கு முன்னர் சிறீலங்கா அரசு எல்லாத் தமிழர்களையும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களையும் மற்றும் தங்களுடன் கருத்து மாறுபட்ட அல்லது எதிராகப் பேசியவர்களையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியது. சிறீலங்கா அரசு தனக்குள்ள பரந்துபட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்குலக அரசுகளதும் பொது மக்களதும் ஆதரவை வென்றெடுக்க இந்தத் தந்திரத்தை மேற்கொண்டது. அதன் நிமித்த…
-
- 18 replies
- 1.5k views
-
-
நாளை அமெரிக்கா செல்கிறது கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழு! [sunday, 2014-03-02 09:17:28] தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு நாளை அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதன்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய மேலதிகமான சில விடயங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக காணி அபகரிப்பு, மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள், அதிகாரப் பகிர்வு, இராணுவ குறைப்பு போன்ற விடயங்களும் அமெரிக்காவின் பிரேரணையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கோரப்படவுள்ளது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில், இது த…
-
- 3 replies
- 529 views
-
-
'நேர்மையாகவும் விசுவாசமாகவும் செயற்படக்கூடிய ஒரு குழுவினரையே மனித உரிமை அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்திக்க ஜெனீவாவுக்கு அனுப்புங்கள். ஜெனீவா விஜயத்தின்போது அனுபவமற்றவர்களிடம் கையளியாது நீங்களே அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெனீவா விடயம் தொடர்பில் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே ஆனந்தசங்கரி மேற்கண்ட கோரிக்கையினை முன்வைத்துள்ளார். அக்கடிதத்தில், சில பிரச்சினைகள் பற்றி நடவடிக்கை எடுக்கும்போது கத்துக்குட்டிகளிடம் விட்டுவிடாது நீங்களே தலையிட்டு நடவடிக்கை எடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்…
-
- 5 replies
- 483 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரின் முன்மொழிவிற்கு இணங்க இலங்கையில் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களும், மனிதநேயச் சட்டங்களும் மீறப்பட்டமை தொடர்பான அனைத்துலக விசாரணையைக் கொண்டு வருவதற்கான முழு முயற்சிகளையும் தமது அரசாங்கம் எடுத்து வருவதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் உறுதியளித்துள்ளார். ஈழப்பிரச்சினை தொடர்பாக இன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு வில்லியம் ஹேக் அவர்கள் தெரிவித்துள்ளார்: 'We are pursuing the issue actively at the Human Rights Council to secure an international inquiry of the type recommended by the United Nations High Commissioner for Human Rights…
-
- 6 replies
- 691 views
-
-
அமெரிக்கா தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்மானத்தை வெளியிட்டுள்ளது: - பழ. நெடுமாறன் [Tuesday, 2014-03-04 21:08:37] அமெரிக்காவின் தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா, பிரிட்டன், மாண்டிநீக்ரோ, மாசிடோனியா, மொரிசீயஸ் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக கொண்டு வந்திருக்கும் தீர்மானம் புதிய மொந்தையில் தரப்படும் பழைய கள்ளே ஆகும். மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்தப்படி சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்படுவதற்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசே நம்பகத்தன்மையும் உருப்படியான நடவடிக்கைகளும் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து செயற்பட தவறினால் சுதந்தி…
-
- 2 replies
- 436 views
-
-
அமெரிக்க தீர்மான வரைவை அரசாங்கம் நிராகரிப்பு! – தேவையற்றது என்கிறார் ரம்புக்வெல. [Wednesday, 2014-03-05 09:11:56] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்றுமுன்தினம் அமெரிக்கா முன்வைத்த தீர்மான முன் வரைவை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்ட இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, போரின் பின்னர் நல்லிணக்கம் போன்றவற்றுக்கு இலங்கை அரசாங்கம் தானே உரிய நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இப்படியான ஒரு தீர்மானத்துக்கு அவசியமே கிடையாது என்று கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=104951&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 482 views
-
-
முன்னாள் யுத்தப் பிரதேசங்களுக்கும் சிறுநீரக நோய்கள் மெதுவாக நகர்ந்துவருகின்றன இலங்கையில் சிறுநீரக நோயாளிகள் அதிகரிக்க காரணமாகியுள்ள விவசாய இரசாயன உர வகைகள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளின் பாவனை தொடர்பான கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டின் சில பிரதேசங்களில் கடந்த 20 ஆண்டுகளாக மர்மமாக இருந்துவரும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மண்ணில் கலக்கும் விவசாய இரசாயனப் பொருட்களே காரணம் என்று தமது ஆய்வுகள் உறுதிசெய்துள்ளதாகவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களினால் ஏற்படும் சிறுநீரக நோய்களிலும் வித்தியாசமான காரணங்களால் சிறுநீ…
-
- 0 replies
- 654 views
-
-
அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் தொடர்பில் திருப்தி இல்லை: - GTF [Tuesday, 2014-03-04 21:21:33] அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட உள்ள உத்தேச தீர்மானம் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நிகரான வகையிலேயே தற்போதைய தீர்மானமும் அமைந்துள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது…
-
- 2 replies
- 544 views
-
-
இங்கிலாந்தில் கல்வி வாய்ப்பினை பெற்றுத் தருவதாகக் கூறி ரூபா 80 இலட்சம் மோசடி செய்து 9 வருடங்களாக தலைமறைவாகியிருந்த நபர் ஒருவரை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு, பம்பலப்பிட்டியில் 'ஜி.டி.இன்டர்நெஷனல்' என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வந்த அப்துல் அசாக் மொஹமட் ரிமாஸ் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கண்டி மாவில்மட பகுதியைச் சேர்ந்த இந்த நபர் இங்கிலாந்தில் கல்வி வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி 2005 ஆம் ஆண்டுவரை பலரிடம் பணமோசடி செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர் வெளிநாட்டுக்கு தலைமறைவாகியுள்ளார். அதன்பின்னர் சந்தேக நபர் இவ்வ…
-
- 1 reply
- 352 views
-
-
குற்றங்கள் குறித்து ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் விசாரிக்க வேண்டும்! - ஜெனிவாவில் அமெரிக்கா அறிவிப்பு. [Wednesday, 2014-03-05 10:17:05] இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் விசாரிக்க வேண்டுமென்று கோரும் பிரேரணையை அமெரிக்கா முன்வைத்துள்ளதாக, ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 வது அமர்வின் உரையாற்றிய அமெரிக்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விடயங்களுக்குப் பொறுப்பான கீழ்நிலைச் செயலாளர் சாரா சிவல் தெரிவித்தார். அவர் தமது உரையில் இலங்கை குறித்து மேலும் கூறியவை வருமாறு: உண்மைகளைக் கண்டறியும் விடயத்தில் கடும் தீவிரமான- ஒழுங்குபடுத்தப்பட்ட - நடவடிக்கை, பிணக்க…
-
- 0 replies
- 320 views
-
-
யாழ்.குடநாட்டில் இருந்து சிறிலங்காப் படையினரைக் குறைக்கும்படி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளார். நேற்று மியான்மர் தலைநகர் நேபிடோவில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சுமார் 25 நிமிட சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே, யாழ்.குடாநாட்டில் படைக்குறைப்பை மேற்கொள்ளுமாறு மன்மோகன்சிங் வலியுறுத்தியதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். நேபிடோவில் இருந்து நேற்று மாலை இந்தியப் பிரதமருடன் புதுடெல்லி திரும்பும் வழியில், விமானத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், “யாழ்.குடாநாட்டில் படைக்குறைப்பை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவதற்கு…
-
- 0 replies
- 234 views
-
-
தமிழ் யுவதிகள் இராணுவத்தில் சேர்வதனை தடுத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு நீதிமன்றம் குறித்த மூவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இரண்டு மகள்களையும் இராணுவத்தில் இணைக்க விரும்பிய தந்தையை மூ தாக்க முற்பட்டதாகவும் அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தில் சேர்வதற்கு மகள்களுக்கு அனுமதி வழங்கிய தந்தையை குறித்த மூன்று பேரும் அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட சாட்சியொருவரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் 10ம் திகதி மீண்டும் நடத்தப்பட உள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/…
-
- 3 replies
- 745 views
-
-
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபிகிரோ கோபே இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரனைச் சந்தித்து பேச்சுவார்த்தை ஒன்றினை மேற்கொண்டார். அதன்படி யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட தூதுவர் நொபிகிரோ கோபே இன்று காலை 10.30 மணிக்கு முதலமைச்சரை வடமாகாண உள்ளூராட்சி திணைக்களத்தில் சந்தித்து கலந்துரையாடினார். சந்திப்பினையடுத்து ஊடகவியலாளர்களிடம் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில், இன்றைய சந்திப்பின் போது வடக்கு மாகாண அபிவிருத்தி, போரினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதார தேவைகள் , அபிவிருத்தியில் எமக்குள்ள பிரச்சினைகள் மற்றும் ஜப்பான் ,ஜெய்கா நிறுவனத்தினால் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் தூதுவர் என்னிடம் கேட்டு அறிந்து கொண்டார…
-
- 0 replies
- 217 views
-
-
வடமாகாணத்தில் அரசியலை விட அபிவிருத்தியே தற்போது முக்கியமாக உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபிகிரோ கோபே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார். அதனையடுத்து ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போது, அரசியல் தொடர்பில் ஏதாவது கலந்துரையாடப்பட்டதா என ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்ததார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட போரினால் பொருளாதாரம் உட்பட பல்வேறு வழிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரத்தை அத…
-
- 0 replies
- 270 views
-
-
இலங்கையில் எந்த ஒரு இனத்துக்கும் - அது தமிழ் இனமாக இருந்தாலும் சரி சிங்களவர்களாக இருந்தாலும் சரி- தனியான ஒரு பகுதியை ஒதுக்கவே முடியாது. அரசியல் நோக்கங்களைக் கொண்டு சில நாடுகளே இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு இன்றைய தினம் உறையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் யுத்தம் முடிந்து இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேசிய செயற்திட்டம் என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்…
-
- 0 replies
- 510 views
-
-
இலங்கைக்கு மேலும் ஒரு ஆண்டு காலஅவகாசம் அளிக்கும் அமெரிக்கத் தீர்மான நகல்! - மனிதஉரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சி. [Tuesday, 2014-03-04 17:40:37] இலங்கை தொடர்பாக அமெரிக்காவும் பிரிட்டனும் கூட்டுச்சேர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ள பிரேரணையின் நகல் வடிவம் நேற்று மாலை வெளியிடப்பட்டது.அந்த வடிவத்தைப் பார்த்து மனித உரிமை ஆர்வலர்களும், நோக்கர்களும், இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினரும் அதிர்ந்து போயுள்ளனர். இழைக்கப்பட்ட கொடூரங்கள் தொடர்பில் தீவிரமான விசாரணை நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான வடிவத்தில் இந்தப் பிரேரணை இருக்கும் என்று பல தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இலங்கையில் நடைபெற்றவை தொடர்பில் விசாரிக்கச் சர்வதேச விசாரணைகளை பொறிம…
-
- 15 replies
- 1.1k views
-
-
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் ஏறாவூரில் அறபுக் கல்லூரியும் பல்கலைக்கழகமும் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, காட்டுப்பள்ளி வீதியில் அமைந்துள்ள குல்லியத்துதாறில் உலூம் அறபுக் கல்ல}ரியில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றது. மாகாண அமைச்சர் நஸீர் அஹமட்டின் இணைப்பாளர் யூ.எல்.முஹைதீன்பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அத்துடன், அறபு நாட்டு நன்கொடையாளர்களான அப்துல் றப் அல் ஈஸாயி தலைமையிலான ஐவரடங்கிய குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். சுமார் 16 கோடி ரூபா மதிப்பீடு கொண்டதாக இந்த அறபுக் கல்லூரியும் உத்தேச பல்கலைக்கழகத…
-
- 2 replies
- 349 views
-
-
இலங்கையின் பெண் சாதனையாளர் பட்டியல் – சந்திரிக்கா, ஷிராணி பெயர்களை நீக்கியது அரசாங்கம்! [Monday, 2014-03-03 18:45:08] இலங்கையின் பெண் சாதனையாளர் பட்டியல் ஒன்றை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சினால் இந்த உத்தியோகபூர்வ ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சாதனையாளர் பட்டியலில் இலங்கையின் முதல் பெண் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பெயரும், இலங்கையின் முதலாவது பெண் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் பெயரும் உள்ளடக்கப்படவில்லை. பெண்கள் என்ற ரீதியில் சந்திரிக்காவும், ஷிரானியும் இலங்கை வரலாற்றில் சாதித்து காட்டியவர்கள் என ஐ.தேக. பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்து…
-
- 5 replies
- 3.1k views
-
-
ஆனந்தி சசிகரனை புகழ்ந்து, அவர் போன்ற துணிச்சலுள்ள தலைவர்களே முஸ்லிம்களுக்கு தேவை என்று யாழ் முஸ்லிம் இணையத்தில் ஒரு ஆக்கம் பிரசுரமாகி இருக்கிறது. http://www.jaffnamuslim.com/2014/03/blog-post_9196.html "ஆனந்தியின் அரசியல் வழிமுறையை அல்லது கருத்துக்களை சரி, பிழை காணவோ, அதற்கு வக்காளத்து வாங்கவோ நான் முனையவில்லை. மாறாக அவரது துணிச்சலையே இங்கு குறிப்பிடுகின்றேன். தான் நம்பிக்கை கொண்ட தனது நோக்கத்தில், அவர் இதய சுத்தியோடும், அர்ப்பணத்தோடும் உழைத்து வருகிறார். அவர் எதிர்கொள்கின்ற துன்பங்கள் யாரும் அறியாததல்ல. அவருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது. அவரது கணவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அவரது பிள்ளைகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பில் அவர் இருக்கிறார். இத்தனை இருந்தும், யாழ…
-
- 0 replies
- 798 views
-
-
ஐநா தீர்மான வரைபில் சர்வதேச விசாரணை குறித்து தெளிவில்லை ஜெனிவாவில் தொடங்கியுள்ள ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைப் போரின் இறுதிக்கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நில நாடுகள் கொண்டுவரவிருக்கும் முன்வரைவின் நகல்கள் கசிந்திருக்கின்றன. இலங்கை தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையை கோரும் தீர்மானம் முன்வைக்கப்படும் என்ற பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் இந்த முன்வரைவு, இது குறித்து தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், இலங்கைப் போரில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டளவில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த வழிமுறை மூலமாக தெளிவாகத் தெரியும் பலன் ஏதும் க…
-
- 0 replies
- 394 views
-
-
மட்டக்களப்பில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கெவிலியாமடுவில் தற்போதுள்ள சிங்கள குடும்பங்களுக்கு வதிவிடம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பன உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று மட்டக்களப்பு நகரில் பௌத்த பிக்குமார்கள் மற்றும் பெண்கள் உட்பட சிங்கள மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பட்டமொன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரையின் பிரதம குரு அம்பிட்டியே சுமனரத்ன தேரோ தலைமையில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் சிங்கள ராவய அமைப்பை சேர்ந்த பௌத்த பிக்குமார்களும் கலந்து கொண்டார்கள். மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய விகாரையின் முன்பாக கூடிய பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களும் தமது கோரிக்கைகள் அடங்கிய வாசக அட்டைகளுடன்…
-
- 0 replies
- 407 views
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பாக, நவநீதம்பிள்ளை தலைமையில் விசாரணை! – அமெரிக்கத் தீர்மான வரைவு கோருகிறது. [Tuesday, 2014-03-04 10:01:16] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படும் குற்றச்செயல்கள் தொடர்பாக சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விடவும் இந்த தீர்மானம் வலுவானத…
-
- 3 replies
- 834 views
-
-
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயனித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பேரூந்து இன்று நள்ளிரவு காடையர்களால் இடை மறித்து தாக்கப்ட்டது.இருப்பினும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. பயணிகளுடன் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அளவெட்டியை சேர்ந்த தனியார் பேரூந்தே இவ்வாறு காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பில்.. குறித்த பேரூந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருக்கையில் இன்று நள்ளிரவு 11 மணியளவில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் கத்தி மற்றும் தடிகளுடன் வந்த இனம் தெரியாத காடையர்களால் இடை மறித்து தாக்கப்ட்டுள்ளது.காடையர்கள் பயணிகளை அச்சுறுத்தியுள்ளதுடன் அவர்களை பேரூந்தில் இருந்து கீழ் இறக்கி ஓட ஓட கலை…
-
- 1 reply
- 734 views
-