Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழுவின் விசாரணைகளை த.தே.கூ முற்றிலும் நிராகரிப்பதாக தீர்மானம்- எம்.ஏ.சுமந்திரன் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரிப்பதாக கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் யாழ். பொது நூலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்த வெளியிட்ட சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, …

  2. -எம்.எம்.அனாம் இலங்கையில் கடந்த 03 தசாப்தங்களாக இருந்த இனப் பிரச்சினை தீர்த்துவைக்கப்பட வேண்டுமென உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுவதால் மாத்திரம் பிரச்சினைகள் முடிந்து விடுவதில்லையெனவும் அவர் கூறினார். கல்குடாத் தொகுதி ஐக்கிய முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு விழாவும் புதிய காரியாலயத் திறப்பு விழாவும் புதன்கிழமை (26) வாழைச்சேனையில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'சிறுபான்மையின மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதை அனைவரும் ஒத்துக்கொள்கின்றனர். இப்பிரச்சினைக…

    • 2 replies
    • 385 views
  3. அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த உடுகம ரத்னபால ஸ்ரீ புத்ஹரகித மஹாநாயக்க தேரரிடம் நல்லை ஆதீன முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான பயணம் மேற்கொண்டிருந்த உடுகம ரத்னபால ஸ்ரீ புத்ஹரகித மஹாநாயக்க தேரர் நல்லூருக்கான பயணம் மேற்கொண்டு நல்லை ஆதீன முதல்வரை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன் போது கருத்துத் தெரிவித்த நல்லை ஆதீனம் முதல்வர், மஹாநாயக்க தேரரின் யாழ்.வருகை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டதுடன், நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும், உண்மையான சமாதானம் ஏற்படுத்த வலியுறுத்தவேண்டும், இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் நிலங்களை விடுவிக்க வலிய…

  4. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதியை வரவேற்கிறது கூட்டமைப்பு! [Thursday, 2014-02-27 18:35:20] இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது வரவேற்புத் தெரிவித்துள்ளது. கட்சியின் பேச்சாளரும் பாராளு-மன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார். அ.தி.மு.க வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அதிமுக உறுதிபூ…

  5. “நம் கையைக்கொண்டே நம் கண்ணை குத்த வைக்கும்” சிறீலங்கா அரசின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டு விடாமல் இருப்போம்! – வைத்தியகலாநிதி சி.சிவமோகன் வேண்டுகோள். [Thursday, 2014-02-27 21:27:58] தமிழக மீனவர்களினால் எமது மக்களின் மீன்வளம் சூறையாடப்படுவதாக பூதாகாரமாக செய்திகளை வெளியிடும் சிறீலங்கா அரசு, தொப்புள் கொடி உறவு வழி முறையாக தொடரும் தமிழக – தாயக குடும்பப்பிணைப்பை அறுத்தெறிந்து விடும் சூட்சுமமான சூழ்ச்சியில் இறங்கியுள்ளது. முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக எம் மக்கள் செத்து மடிந்த போது, தம் உயிரை மாய்த்தாவது போரை நிறுத்தி எம் மக்களின் உயிரை காப்பாற்றி விட வேண்டும் என்று, தம் உடலை தீயிட்டுக்கொழுத்தி, தம்மை ஈகிகள் ஆக்கிக்கொண்ட எமதருமை தமிழக வாழ் மக்கள், எங்கள் மீன்வளத்தை வ…

  6. திருவனந்தபுரத்தில், சிறிலங்காவின் கௌரவத் தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட கேரள முதலமைச்சர், உம்மன் சாண்டி நேற்று அந்த நிகழ்வைப் புறக்கணித்ததால், சிறிலங்காவுக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவினால், கௌரவத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜோமன் ஜோசப், மீது கிரிமினல் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாலும், அவர் பிணையில் வெளிவந்த ஒருவர் என்ற விபரம் வெளியானதாலும், இந்த நிலை ஏற்பட்டது. கேரளாவைத் தளமாக கொண்ட சிறிலங்கா வர்த்தகரான ஜோமன் ஜோசப், திருவனந்தபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறிலங்காவின் கௌரவத் தூதுவராக நியமிக்கபட்ட விவகாரத்தினால், கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த கௌரவத் தூதுரகத்தை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்ட, கேரள முதல்வர் உம்மன் சாண்டி நிகழ்வைப் பு…

  7. மியான்மாரில், மன்மோகன்சிங் - மகிந்த சந்திப்பு! – அடுத்தவாரம் நடக்கிறது. [Thursday, 2014-02-27 07:16:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை, அடுத்த வாரம் மியன்மாரில் சந்தித்துப் பேசவுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காத நிலையில், இரு நாட்டுத் தலைவர்களும் முதல் தடவையாக சந்திக்க உள்ளனர். மார்ச் மாதம் 4ம் திகதி மியன்மாரில் பிம்ஸ்டெக் மாநாடு நடைபெறவுள்ளது. இதன்போதே, பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானத்துக்கு ஆதரவளிக…

  8. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனித உரிமை சபைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், இறுதிப்போரின் போது படைகளிடம் சரணடைந்த போராளிகள், புலிகளின் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன், கேணல் ரமேஷ், புலிகளின் ஊடக தொடர்பு பிரிவு பணியாளர் இசைப்பிரியா மற்றும் பலர் கொலையுண்ட விடயங்கள் தொடர்பாக சனல்-4 வெளியிட்ட ஆவணப்படங்கள், அவைகள் தொடர்பான இலங்கை அதிகாரிகளின் பிரதிபலிப்புகள் குறித்தும் தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பான இலங்கை அரசின் செயற்பாடுகள் திருப்தியில்லாமையால் சர்வதேச விசாரணை பொறிமுறையயான்று அமைக்கப்படும் பட்சத்தில் இவை பற்றியும் விசாரணைகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே அறிக்கையில் இவை சேர்க்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது. சிறைக் கைதிகள் மற்றும் சரணடை…

  9. மாவிலாறு விவகாரத்தை தீர்த்து வைப்பதில் இலங்கை அரசு ஆர்வமோ அக்கறையோ கொண்டிருக்கவில்லை. இதுவே பிரச்சினை முற்றுவதற்கு காரணம் என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் யஹன் றிசன் குறிப்பிட்டுள்ளமைக்கு நன்றி சொல்வதாகத் தெரிவித்துள்ள திருமதி அனந்தி சசிதரன் இதன்மூலம் தனது கணவர் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுக்கள் அம்பலப்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: விடுதலைப்புலிகள் மாவிலாறை பூட்டியமையே மீண்டும் போர் ஆரம்பமாக காரணமாக இருந்ததாக பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது. இந்த விவகாரங்களில் தொடர்புபட்டவராக எனது கணவரும் அப்போதைய திருமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்ப…

  10. மோசடிகளைத் தவிர்க்கும் முகமாக யாழ்.மாநரக சபையிலுள்ள வாகனங்களில் ‘ஜி.பி.எஸ் டிரக்கர்’ கருவி பொருத்துவதற்காக யாழ்.மாநகர முதல்வரினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம், சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் மாதாந்தப் பொதுக்கூட்டம் கடந்த புதன்கிழமை மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் கருத்துக் கூறுகையில், ‘யாழ். மாநகர சபையின் வாகனங்களில் இடம்பெறும் டீசல் திருட்டுக்கள், வாகனம் பாவிக்கப்படும் விதம், அத்துடன் வாகனங்களில் பயணம் செய்தவர்கள் யார் என கண்டு பிடிப்பதற்காக இந்தக் கருவி பொருத்தப்படவுள்ளதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. மாநகர சபையின்…

  11. தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் ஒழுங்கமைக்கப்பட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. அதன்படி இன்று காலை 10மணிக்கு யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகிய இந்த விசேட கலந்துரையாடல் பிற்பகல் வரை இடம்பெறவுள்ளது. மேலும் இந்த விசேட பொது கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். எனினும் குறித்த விசேட கலந்துரையாடலானது இரணைமடு நீர்விநியோகத்திட்டம் தொடர்பில் தீர்வுகளை எட்டுவதற்காகவே கூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் கிளிநொச்சிக்கு சென்று விவசாயிகளை நேரடியாக சந்தித்து க…

  12. இலங்கையை நம்ப முடியவில்லை! – பிரித்தானியா மீண்டும் தெரிவிப்பு. [Thursday, 2014-02-27 07:31:02] இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள், மற்றும் காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகள் என்பன உரிய முறையில் இடம்பெறுவதாக தம்மால் நம்பமுடியவில்லை என்று, பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதம் ஒன்றில் பதிலளித்த வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹியூகோ ஸ்வைர், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, புதிதாக மெச்சத்தக்க முன்னேற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. விசாரணைகளை நடத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் விசாரணைகளை நம்பமுடியவ…

  13. சிவராத்திரி விரத நன்நாளில் ஆலயங்கள், அறநெறிப்பாடசாலைகள், வீடுகள் தோறும் சிவனது வாகனமான நந்தி பொறித்த சைவர்களின் நந்திக் கொடியை ஏற்றி வழிபாடு செய்யுங்கள். இவ்வாறு அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக சைவப் புலவர் சங்கச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை சிவபூமியாகும். இதற்கு ஆதாரமாக இன்றும் பல பழைமை வாய்ந்த சிவாலயங்களைக் காண்கின்றோம். சிவ வழிபாட்டில் விரதங்கள் இன்றியமையாதவை. சைவசமயத்தவரின் வாழ்வில் முக்கியமான விரதங்களில் ஒன்று சிவராத்திரியாகும். ஒரு நாள் முழுவதையும் இரவு பகலாக சிவவழிபாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் நாம் வேண்டிய பல பலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். சிவனைக் குறிக்கும் அடையாளங்கள் நமக்கு சிவசிந்தனையை ஏ…

  14. புலிகள் மீதான தடையை நீக்கக்கோரும் வழக்கை விசாரணைக்கு ஏற்றது ஐரோப்பிய நீதிமன்றம்! [Thursday, 2014-02-27 07:25:45] தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நெதர்லாந்து சட்டத்தரணி விக்டர் கோப் ஐரோப்பிய நீதிமன்றில் 2011ம் ஆண்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் உள்ளவர்கள், கேட்டுக்கொண்டதற்கு அமைவாகவே தாம் புலிகளின் சார்பில் வாதாட வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். பல காரணங்களை காட்டி, இந்த வழக்கை நடத்த, நீதிமன்றம் முன்வரவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த வழக்கை விசாரிக்க ஐரோப்பிய நீதிமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=104519&category=TamilNews&a…

  15. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானம், சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் என்று பிரித்தானியா உறுதிப்படுத்தியுள்ளது. உள்ளூராட்சி, வெளிவிவகார, கொமன்வெல்த் பணியக, மூத்த இணை அமைச்சர், பரோனெஸ் வர்சி, நேற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின், பிரபுக்களின் சபையில், நடந்த விவாதத்துக்குப் பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். “சிறிலங்கா தொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு பிரித்தானியா இணை அனுசரணை வழங்கியது. இந்த தீர்மானம், அவற்றுக்கு அப்பால் சென்று, சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுவதாக, இருக்கும். இது கருத்துடன் உள்ள நாடுகளுடன்…

  16. இந்தியாவில் எந்த அரசாங்கம் வந்தாலும் இலங்கை தொடர்பான வெளிவிவகார கொள்கையில் மாற்றங்கள் வரப்போவதில்லை. நட்பு நாடு என்ற வகையில் அதிகாரப் பரவலாக்கலுக்காக அழுத்தங்களை முன்னெடுக்குமே தவிர வேறு எதனையும் முன்னெடுக்காது என்று, இந்தியாவிலிருந்து வெளியாகும் த இந்து ஆங்கில நாளிதழின் ஆசிரியர் என். ராம் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள என்.ராம் கொழும்பில் இனத்துவ கற்ககைளுக்கான சர்வதேச நிலையம் நேற்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது- இந்தியா ஒரு காலத்தில் இலங்கை விடயத்தில் ஆழமாக ஈடுபட்டு வந்தது. எனினும் 1991ம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொ…

    • 6 replies
    • 997 views
  17. Started by தமிழரசு,

    -எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன் யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை (26) விஜயம் செய்த கண்டி அஸ்கிரிய உடுகம ஸ்ரீபுத்தரகித்த மகாநாயக்க தேரர், நல்லை திருஞானசம்பந்த முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை யாழ். நல்லை திருஞான சம்பந்த ஆதீன மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து யாழ். ஆரியகுளம் நாகவிகாரையில் இவர் வழிபாட்டில் ஈடுபட்டார். இவருடன் அநுராதபுர ஜெயந்தி விகாரநுகேதன்ன பஞ்சானந்த தேரர், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர்.ஜெனரல் உதயபெரேரா, செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் ஆகியோர் உடனிருந்தனர். http://tamil.dailymirror.lk/--main/101424-2014-02-26-10-21-46.html

  18. காட்டுப்பகுதியில் இடம் பெறுக்கின்ற குற்றங்களை கண்டுப்பிடிப்பதற்காக கடந்த 23 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட ஆளில்லா விமானம் ‘கேலமா’ இன்று வரையிலும் திரும்பவில்லை என்று வனஜீவராசிகள் அமைச்சர் விஜித்த விஜய முனி சொய்சா தெரிவித்துள்ளார் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்த நடைபெற்ற காலப்பகுதியில் புலிகள் இருந்த வனாந்தரங்களுக்கு மேலே சென்று தரவுகளை சேகரித்து வந்து இராணுவத்திற்கு உதவி வழங்கிய ஆளில்லா விமானம் ‘கேலமா’ இவ்வாறு காணமல் போயுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது உடவளவ காட்டில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கண்டறிவதற்காக இந்த விமானம் காட்டுப்பகுதிக்கு மேலாக ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்ட போதிலும் இதுவரையிலும் திரும்பவில்லை. சிங்கபூர் பல்கலைக்கழகம்,கொழும்பு பல்கலைக்கழக…

  19. சர்வதேச விசாரணை கோருமளவிற்கு நாட்டில் என்ன தவறு நடந்தது? – கேள்வி எழுப்புகிறார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா. [Wednesday, 2014-02-26 07:51:16] நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஏற்குமாறு விஷ்வநாதன் ருத்ரகுமார் விடுத்த கோரிக்கையை தென் ஆபிரிக்கா நிராகரித்துள்ளதோடு, இலங்கையை பிளவுபடுத்தும் எந்த முயற்சிக்கும் தென் ஆபிரிக்கா ஒத்துழைக்காது என தென் ஆபிரிக்க தலைவர்கள் தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பெந்தர - எல்பிட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா- எமது நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படுத்தவும் நாம் அடைந்துள்ள பொருளாதார அபிவிருத்தியை குழப்பவும்,…

  20. ராஜீவ் பெயரில் நிகழும் பச்சைப்படுகொலையை தடுத்து நிறுத்துவோம், ஒன்று திரள்வோம்: மே 17 இயக்கம் [Wednesday, 2014-02-26 21:08:13] ராஜீவ் கொலை வழக்கு முறையாக விசாரிக்கப்படாமல் விசாரணை அதிகாரிகளால் புனையப்பட்ட ஆவணங்களை கணக்கில்கொண்டு உச்சநீதிமன்றம் நிரபராதிகளான முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி எஸ். நளினி,எஸ்.ஜெயக்குமார்,இராபர்ட் பயஸ், இரா.பொ.இரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது.ஜெயின் கமிஷன் அறிக்கையின் படி குற்றம் சாட்டப்பட்ட சுப்ரமணிய சாமி இதுவரையில் விசாரிக்கப்படவில்லை. நிரபராதிகளான இந்த ஏழ்வரும் 23 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் இருந்து வருகின்றனர். முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோர் தமக்கு வழங்க…

    • 2 replies
    • 587 views
  21. தடைகளை தாண்டி ஜெனீவாவில் சிறிலங்காவுக்கு எதிராக நிச்சயமாகக் குரல் கொடுப்பேன்: - சவால் விட்டுள்ளார் விக்கிரமபாகு கருணாரத்ன [Wednesday, 2014-02-19 11:49:15] நான் ஜெனீவாவுக்குச் சென்று மனித உரிமைகள் பேரவையில் அரசுக்கு அதிராக கருத்துகளைத் தெரிவிப்பேன் என்ற அச்சம் காரணமாகவே சிறிலங்கா அரசு தன்னை பல்வேறு தொந்தரவுகள், அச்சுறுத்தலுகளுக்கு உள்ளாக்கி வருகிறது என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் தொடர்பில் தற்போது எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டவையே என்றும் அவர் கூறியுள்ளார். மார்ச் மாத மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசின் யுத்தக…

  22. அண்மையில் சீன மீனவர்களுடன் மீன் பிடிப் படகொன்றை இலங்கை கடற்படையினர் பிடித்திருந்தனர். இலங்கையின் வடகடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு முடியாதுள்ள நிலையில், சீன தேசத்து மீனவர்களும் தமது கடற் பரப்பில் வந்து தொழில் செய்வதாக வடபகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் புதிய தொல்லை யாழ் குடாநாட்டின் வடமராட்சி கடற்பகுதியிலேயே ஏற்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை கூறுகின்றார்.இது குறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கின்ற போதிலும் ந…

  23. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரம் மியன்மாரில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது. பொதுநலவாய நர்டுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரதமர் மன்மோகன் சி;ங் பங்கேற்காமையைத் தொடர்ந்து, முதல் தடவையாக இரு நாட்டுத் தலைவர்களும் சந்திக்க உள்ளனர். மார்ச் மாதம் 4ம் திகதி மியன்மாரில் பிம்ஸ்டெக் மாநாடு நடைபெறவுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக இந்திய வெளிவிவகார் செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து சிங் எவ்வித கருத்துக்க…

  24. எதிர்வரும் மார்ச்மாதம் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் அடுத்த கூட்டத்தொடரில் இலங்கையரசிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாமென்ற நம்பிக்கைகள் ஏற்படும் நேரமிது.வளமைபோல இலங்கையரசு உலகின் கவனத்தையும் கருணையையும் பெற்றுக் கொள்வதற்கு பல திருகுதாளங்களைச் செய்து கொண்டிருப்பது போல இம்முறை அருண் தம்பிமுத்துவை பின்னணியாக வைத்து ஆவணப்படமொன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசகருமான அருண்தம்பிமுத்துவும் அவரது குழுவினரும் கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அரசால் தயார்படுத்தப்பட்டவர்களைக் கொண்டு இவ் ஆவணப்படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 24.02.2014 தன்னாமுனை ,மயிலம்பாவெள…

  25. லக்மால் சூரியகொட மாதம்பையில் காணியொன்றை பெற்றுத்தருவதாக கூறி வர்த்தகர் ஒருவரிடமிருந்து 3 மில்லியன ரூபாவை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கின்போது நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க தவறியமைக்காக மாளிகாவத்தை போதிராஜராமய பிரதம குருவும்,நடைபாதை வியாபாரிகள் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்; தேசிய அமைப்பின் தலைவருமான வணக்கத்துக்குரிய உவத்தன சுமன தேரரை கைது செய்வதற்கான ஆணையை கொழும்பு கோட்டை நீதவான் பிறப்பித்தார். முறைப்பாட்டாளருக்கு மாதாந்த கொடுப்பனவாக மாதாந்தம் 3 இலட்சம் ரூபாவை பல தடவை தேரர் செலுத்தியிருந்தார்.ஆயினும் இன்று இந்த கொடுப்பனவுக்காக வழக்கு எடுக்கப்பட்ட போது அவர் ஆஜராகி இருக்கவில்லை. இதனையடுத்தே தேரரை கைது செய்வதற்கான பிடியாணையை நீதவான் பிறப்பித்தார். பணத்தை தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.