ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை நாளை மூடப்படும் - பாதை திறந்த முதல் நாளில் சுமார் 7000 பேர் பயணம் PrashahiniJuly 10, 2024 வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை நாளை (11) மூடப்படும் என்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார். நாளை பிற்பகல் 2.30 மணியளவில் இவ்வருட பாதயாத்திரைக்கான காட்டுப் பாதை மூடப்படவுள்ளது. அதேவேளை களுதாவளையிலிருந்து ஒருநாள் பாதை திறப்பை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. …
-
- 0 replies
- 152 views
-
-
பாதுகாப்புக்கு உத்தரவாதம் கேட்கிறார் சிறிதரன் என்னையும் எனது குடும்பத்தையும் இலக்கு வைத்து அச்சுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் எனதும் எனது குடும்பத்தின் பாதுகாப்புக்கும் சபாநாயகர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற இலங்கை தொலைத்தொடர்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்த அவர் மேலும் பேசுகையில், இந்துக்கல்லூரி ஒழுங்கை, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள எனது வதிவிட இல்லத்திற்கு முன்னால் கடந்த 28 ஆம் திகதி கருப்புத்துணியால் …
-
- 2 replies
- 386 views
-
-
நவாலி சென். பீற்றர்ஸ் படுகொலைகள்; 29ஆவது நினைவேந்தல் நேற்று உணர்வுபூர்வம்! நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீதான விமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின், 29ஆவது ஆண்டு நினைவுதினம் சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நேற்று மாலை நினைவுகூரப்பட்டது. பங்குதந்தை சந்திரபோஸ் தலைமையில் வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, தேவாலயத்தின் அருகில் அமைக்கபட்டுள்ள நினைவுதூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பகீரதன், ஜெயந்தன், றமணன், அனுசன் மலரஞ்சலி செலுத்தி ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர் 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் ந…
-
- 0 replies
- 310 views
-
-
உ திரு. ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கட்கு, நிர்வாக இயக்குனர், “உதயன்” பத்திரிகை, யாழ்ப்பாணம். 08.06.2024 உங்களை எப்படி விளித்து இக் கடிதத்தை ஆரம்பிப்பது என்று எனக்குப் புரியவில்லை. ஒரு காலத்தில் நீங்கள் எங்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர்தான் என்றாலும், இப்போது உங்களை நண்பர் என்று விளித்து எழுத என் உள்ளம் மறுத்து நிற்கிறது. காரணம், இப்போது நீங்கள் எங்களுக்கு மட்டும் அல்ல எவருக்குமே உண்மையான நண்பராக இல்லை என்பதுதான்!. நீங்கள் எப்படியும் இருந்துவிட்டுப் போங்கள்! நான் எங்களின் பழைய நட்பை நினைந்து உங்களை இடித்துரைப்பதற்காகவே இக் கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன். எனது இந்த முயற்சியால், எந்தப்பயனும் விளையப் போவதில்லை என, என் அறிவுக்குத் தெரிந்தாலும், என் கடமை…
-
-
- 11 replies
- 1k views
-
-
Published By: RAJEEBAN 09 JUL, 2024 | 03:39 PM ரொய்ட்டர்ஸ் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச பிணைமுறிபத்திர உரிமையாளர்களுடன் முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகளை அடுத்த சில வாரங்களில் இலங்கை பூர்த்தி செய்யும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். அயல்நாடுகளான இந்தியா, சீனாவை கையாளும் விதத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதை உறுதிசெய்வதற்காக இலங்கை தனது உறவுகளை சமநிலைப்படுத்த முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். ஆசியாவில் தங்களுக்குள் போட்டியிடும் இரு பெரும் நாடுகளும் இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கியுள்ளதுடன் முக்கிய முதலீட்டாளர்களாக காணப்படுகின்றநிலையில், இலங்கையில் புவிசார் அர…
-
-
- 3 replies
- 321 views
- 2 followers
-
-
Published By: DIGITAL DESK 7 09 JUL, 2024 | 02:16 PM சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் என யாழ். சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கிராமிய கூட்டுறவு அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் கனகசபை ரவீந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். சுழிபுரத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது சீன வீட்டுத்திட்டம் தொடர்பில் கடற்றொழிலாளர்களாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொருத்து வீட்டு திட்டம் எமக்கு உகந்தது அல்ல நாங்கள் கடற்கரையினை அண்டிதான் வாழ்ந்து வருகின்றோம். சூறாவ…
-
- 7 replies
- 529 views
- 1 follower
-
-
09 JUL, 2024 | 12:34 PM இலவச இணைய வசதி வழங்கப்படுவதாக கிடைக்கப் பெறும் குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக இலவச இணைய வசதி வழங்கப்படுவதாக கூறி வாட்ஸ் அப் , முகநூல் மெசன்ஜர் மற்றும் கையடக்க தொலைபேசிகளுக்கு பல குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறான குறுஞ்செய்திகளை அணுகுவதன் மூலம் எமது சமூக ஊடக கணக்குகள் மற்றும் கையடக்க தொலைபேசியின் தரவுகளை வேறு தரப்பினர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாற…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
08 JUL, 2024 | 06:44 PM (நா.தனுஜா) பொலிஸ் அதிகாரமின்றி 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்துக் கலந்துரையாடிவருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவதை முற்றாக நிராகரிப்பதாகவும், அது ஒருபோதும் தமிழர் விரும்பும் அரசியல் தீர்வாக அமையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் மத்தியில் அவருக்குப் பாரிய பின்னடைவையே தேடித்தரும் எனத் தெரிவித்துள்ளார். மறைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் பிரிக்கப்படாத ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வைக் கோரியதாகவும், தற்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது த…
-
- 3 replies
- 443 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 09 JUL, 2024 | 10:40 AM (நா.தனுஜா) காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளை விரைவுபடுத்தவும், அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கவுமென ஜனாதிபதி செயலாளர் தலைமையில் விசேட செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இச்செயலணியில் முக்கிய அரச நிறுவனங்களும், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட அரச சார்பற்ற கட்டமைப்புக்களும் உள்ளடங்குவதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் தெரிவித்தார். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள ஆணையை இலகுபடுத்தல், அதன் செயற்பாடுகளை விரைவுபடுத்தல் மற்றும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான …
-
- 1 reply
- 202 views
- 2 followers
-
-
08 JUL, 2024 | 06:35 PM (நா.தனுஜா) இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் எஸ்.சிறிதரன் தலைமையிலான குழுவினருக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் வடக்கு - கிழக்கு இணைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் இந்தியாவின் ஆளுந்தரப்பான பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலையும் கலந்துகொண்டிருந்தார். அதன்படி இலங்கைத் தமிழரச…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
தேர்தல் தொடர்பில் அரச நிறுவன பிரதானிகளுக்கு அழைப்பு! அரச அச்சகமா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் அஞ்சல் மா அதிபர் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகள் சிலர் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் எதிர்வரும் 17 ஆம் திகதியின் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடைக்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/305538
-
-
- 185 replies
- 10.1k views
- 2 followers
-
-
Mayu / 2024 ஜூலை 08 , மு.ப. 11:10 - 0 - 73 ஏ எம் கீத் கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இந்திய தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலை இலங்கை தமிழரசுக்கட்சி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் மற்றும் திருகோணமலை தமிழரசு கட்சி நகரசபை பிரதேசசபை தலைவர் உறுப்பினர்களுக்கிடையை கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, எதிர்கால அரசியல் களநிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. Tamilmirror Online || அண்ணாம…
-
- 0 replies
- 234 views
-
-
வ.சக்தி ஜனாதிபதியின் பதவி நீடிக்கப்படா விட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டன. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவர் ஜெயா.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமை…
-
- 0 replies
- 218 views
-
-
08 JUL, 2024 | 04:43 PM மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவதியின் காதலனான பிரதான சந்தேக நபர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று (8) மூதூர் நீதிமன்றின் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நாளை வரை (9) பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படுகொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (5) ஆறு சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, கடந்த சனிக்கிழமை (6) மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை அந்த ஆறு பேருக்கும…
-
- 0 replies
- 408 views
- 1 follower
-
-
இலங்கையிலுள்ள மத்திய கல்லூரிகள் மற்றும் தேசியப் பாடசாலைகள் செயற்கை நுண்ணறிவு பாடசாலைகளாக மேம்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி ஹால் டி கோல் விடுதியில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். தற்போது உலகம் நவீனத் தொழில்நுட்பத்துடன் முன்னேறி வருகிறது அதற்கமைய, இலங்கையின் கல்வி முறையும் நவீனத் தொழில்நுட்பத்துடன் நடத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் அமைச்சினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பாடசாலைகளில், செயற்கை நுண்ணறிவுக் கழகங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப கல்…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
மலையக பெருந்தோட்டங்களில் உள்ள 3,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு 20,000 ரூபாய் பெறுமதியான போஷாக்கு உணவுப் பொருட்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் நேற்று (06) இடம் பெற்ற கூடத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார். சுமார் 1,500 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள 26,000 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள காலை உணவு வழங்கும் புதிய வேலைத்திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு ஊடாக இவை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/305474
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெறும் வாள்வெட்டு வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் தெரிந்த போதும் அவர்களை கைது செய்ய முடியவில்லை என யாழ். பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டு வன்முறை தொடர்பாக பொலிஸ் தரப்பிடம் வினவப்பட்டது. இதன்போது, ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனை மிரட்டிய வன்முறை கும்பல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வீட்டிற்கு முன்னால் வாள்களுடன் பயணித்த வன்முறைக் கும்பல் தொடர்பில் ஏன் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என அபிவிருத்தி குழுவினரால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பொலி…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்க்கையின் 27வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “இந்தக் கட்சியை முன்னோக்கி நகர்த்துவதற்கு நாங்கள் அரசாங்கத்தின் அங்கமாகச் செயற்படும் போதெல்லாம், எவ்வித பயமுமின்றியே ஜனாதிபதிக்கு உதவி செய்தோம். அதேபோன்று எங்களுக்கு அச்சமும் இல்லை, கடனும் இல்லை என்பதை நாங்கள் பெருமிதத்துடன் கூறுகிறோம். எங்கள் கட்சியில் உள்ள அனைவரும் அந்த நேரத்தில் இந்த நாட்டைக் காப்பாற்றும் திறன் உங்களிட…
-
- 1 reply
- 312 views
- 1 follower
-
-
அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஊவா மாகாண சமூக பொலிஸ் குழுக்களை வலுவூட்டுவதற்கான முதல் அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெல்லவாய பொது மைதானத்தில் (06) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கொண்டவாரு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவே சம்பளத்தை அதிகரிக்க முடியும் என சுட்டிக்காட்டினார். https://thinakkural.lk/article/305450
-
- 1 reply
- 150 views
- 1 follower
-
-
2022ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளை தொடர்வதற்கு வட்டியில்லாக் கடன் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைக்காத உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்காக இந்த வட்டியில்லாக் கடன் திட்டம், 2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் முன்மொழிவுகளின்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், அதிகபட்சமாக 8 இலட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட 17 அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் 100 பட்டப்படிப்புகளை கற்பதற்கு 7 மாணவர் …
-
- 0 replies
- 84 views
- 1 follower
-
-
ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள்-சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிப்பு! அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்பது தெளிவாக உள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு இன்று அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா இதனைத் தெரிவித்தார். மேலும் சம்பந்தப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யக் கோரி பூர்வாங்க ஆட்சேபனைகள் எழுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இவேளை இந்த மனுவை பரிசீலிப்பதற்காக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய ஐந்து பேர் கொண்…
-
- 0 replies
- 285 views
-
-
08 JUL, 2024 | 10:59 AM சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. வீதியை மறித்து போராடுவது சட்டவிரோதமானது என பொலிஸார் வேண்டுகோள் அறிவித்தல் விடுத்தமைக்கு இணங்க, பொதுமக்கள் வீதியை விட்டு விலகி வீதியோரமாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸாருடன் இணைந்து கலகமடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரும் வைத்தியசாலையில் குவிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
08 JUL, 2024 | 10:41 AM நாடளாவிய ரீதியில் 200க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்றும் (08) நாளையும் (09) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால், விவசாய ஒழுங்குமுறை, நில அளவையாளர், அபிவிருத்தி அதிகாரிகள், கிராம அலுவலர்கள், சமூர்த்தி அதிகாரிகள் உட்பட பல்வேறு அரச துறையினர் வேலை நிறுத்தப் போட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்றும் நாளையும் அரச ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் | Virakesari.lk
-
- 5 replies
- 513 views
- 1 follower
-
-
Published By: VISHNU 07 JUL, 2024 | 07:42 PM மறைந்த இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உரிமைகளுக்காகவும் முன் நின்ற தலைவர் என்றும் சம்பந்தனும் தானும் எப்போதும் பிரிக்கப்படாத இலங்கைக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இரா.சம்பந்தனுடன் உடன்பாட்டுடன் முன்நோக்கி கொண்டு வந்த அந்தக் கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். திருகோணமலையில் அன்னாரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) பிற்பகல் நடைபெற்ற சம்பந்தனின் இறுதி கிரியையில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்…
-
-
- 5 replies
- 513 views
- 2 followers
-
-
07 JUL, 2024 | 10:05 AM இஸ்ரேலின் வடபகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்கள் அதிகரிப்பது குறித்து அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களிற்கு இஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் வடபகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்கள் அதிகரிப்பதால் அப்பகுதியில் உள்ள இலங்கையர்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என இஸ்ரேலிய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதியொருவர் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக கொல்லப்பட்டதை தொடர்ந்து ஹெஸ்புல்லா அமைப்பு மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 150000 ஏக்கர் வறண்ட புல்வெளியும் விளைநிலமும் முற்றாக கருகி அழிந்துள்ளதாக இஸ்ரேலிய அதி…
-
- 0 replies
- 384 views
- 1 follower
-