Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்கா, பிரித்தானியாவின் வேண்டுகோள்களை நிராகரித்தது இலங்கை! [Thursday, 2014-02-13 09:23:36] அமெரிக்காவும் பிரித்தானியாவும் விடுத்திருந்த வேண்டுகோள்களை இலங்கை அரசாங்கம் நிகராரித்துள்ளதாக, சிங்களப் பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. மார்ச் மாதம் 3ம் திகதிக்கு முன்னர் வடமாகாணசபைக்கு 13வது திருத்தச் சட்டத்திலுள்ள அனைத்து அதிகாரங்களையும் வழங்க வேண்டுமென அமெரிக்காவும், பிரித்தானியாவும் விடுத்திருந்த வேண்டுகோளை இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ளது. அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் 400 சிபார்சுகளையும் நடைமுறைப்படுத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களும், சர்வதேச அமைப்புகளும் சுதந்திரமாகச் செல்வதனை அனுமதித்தல் போன்ற மேலும் …

  2. ஆதவன் கொக்கிளாய் முகத்துவாரப் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை மேலும் அபகரித்து இந்திய வீட்டுத் திட்டத்தையும் வழங்கும் நோக்கம் நடைமுறைப்படுத்தும் சாத்தியம் குறித்து பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி காணி உரிமையாளர்களான தமிழ் மக்கள் தன்னிடம் தெரியப்படுத்தியுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். கொக்கிளாய் முகத்துவார நிலை பற்றி மேலும் தெரியவருவதாவது, சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்தே சிங்கள மீனவர்கள், கொக்கிளாய் பகுதியின் மீன்பிடி காலத்தின்போது தெற்கில் இருந்து வந்து கடற்றொழிலை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 1983க்கு முன்பு சுமார் 15 குடும்பங்கள் அங்கு இருந்தபோதும், மாதிரிக் கிராமம் என்கிற பெயரில் தமிழரின் …

  3. யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பமான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைக்கு சாட்சியமளிக்க வருகை தந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த றேகா (ரேகன்) என்பவரை இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினரிடம் தாம் ஒப்படைந்ததாக அவரது மனைவி தெரிவித்தார். இன்று காலை ஆரம்பமான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைக்கு சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், யுத்தத்தின் இறுதிக்கட்ட இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம் விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களை சரணடையுமாறு தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி முல்லைத்தீவு வட்டுவாக…

  4. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டியது அவசியம் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹணே கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள் எமது நாட்டின் அபிவிருத்திக்கும் நன்மதிப்பிற்கும் மக்களே பாடுபட வேண்டும். அத்துடன் எமக்கு சர்வதேசத்தில் இருந்து வரும் சவால்களை எதிர்கொள்வதற்கும் நாம் அனைவரும் ஒன்றுபடுவது அவசியம். இதேவேளை சர்வதேச ரீதியாகவும் உள்ள அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=392702647914804612

  5. ரஜனி சுப்ரமணியம் நாடு கடத்தல் தொடர்பில் ராதிகா பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்: [Wednesday, 2014-02-12 23:49:18] 2008 இல் கனடாவில் அகதியாக விண்ணப்பம் கோரிய 39 வயதான ரஜினி சுப்ரமணியம் அவருடைய அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டதோடு கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டமை யாவரும் அறிந்ததே. இது தொடர்பில் கனடா ஸ்கார்பரோ தொகுதி எம்.பி ராதிகா சிற்பசேன் நாடாளுமன்றத்தில் பேசிய போது கனடிய அரசாங்கத்தின் கொள்கையால் குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுவதாக கூறியதோடு, டொராண்டோவைச் சேர்ந்த ரஜினி சுப்ரமணியம் என்ற இளவயது தாய் கருணை மனு விண்ணப்பித்திருந்தும் நாடுகடத்தப்பட்டார். இவர் தனது 4 மற்றும் 5 வயது குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்டார். தற்பொழுது இவரது …

  6. கடந்த வாரம் வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிசை இலங்கை கருதினால் மல்கம் ரன்சித் ஆண்டகை தலமையிலான குழுவினர் சந்தித்ததுடன் அங்கு திருப்பலி ஆராதனையிலும் கலந்து கொண்டர் இதில் இத்தாலி நாட்டில் வசிக்கும் உறவுகள் மற்றும் இலங்கையில் வசிப்பவர்கள் கலந்து கொண்டனர் இதில் கல்வி மற்றும் பணி நிமிர்த்தம் இத்தாலியில் தங்கியிருக்கும் வட-கிழக்கின் அருட்தந்தையர்கள் தமது எதிர்ப்பை காட்ட முற்பட்ட வேளையில் தமிழ் அருட்தந்தையர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டு வடகிழக்கு ஆயர்களை மதிக்காமல் பலர் அச் சந்திப்பில் கலந்து கொண்டதுடன் ஆயர்கள் தர்ம சங்கடத்தில் இருப்பதாக அற்யக்கிடைக்கிறது. வடகிழக்கு ஆயர்களை கைது செய்ய தயாராகும் அரசாங்கம் அவ் அரசாங்க பிரதிநிதிகளுடன் இந்தாலியிலுள்ள அருட்தந்தையர்கள் செ…

  7. (Priya Rasa) இரணைமடுக்குளத்தில் இருந்து நீரை யாழ் குடாநாட்டிற்க்கு கொண்டுவர வேண்டும் என்ற துடித்து நிற்பது யாழ் குடாநாட்டு மக்களின் நன்மை கருதி அல்ல இங்குள்ள இராணுவ முகாம்கள் மற்றும் எதிர் காலத்தில் இடம் பெற அரசு திட்டம் தீட்டியுள்ள சிங்கள குடியேற்றத்திற்கும் குடி நீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இன்று நடைபெறும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என்பதை தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,…

  8. புலிகள் அமைப்பால் மக்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு மின்விளக்கு கம்பத்துடன் ரயர்களால் கட்டப்பட்டு தீ மூட்டப்பட்டனர். நாங்கள் அவர்களது பாதி எரிந்த உடலங்களைப் பார்த்தோம். நான் இவற்றைப் பார்த்த போது பிரபாகரனின் தலைமைத்துவம் மற்றும் இவரது ஈழம் தொடர்பான கருத்தியல் மீது நான் கொண்டிருந்த மிகக் குறைந்த ஆர்வத்தையும் இழந்தேன் என்று கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்தார். இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை பணியில் ஈடுபட்ட போது இந்திய இராணுவப் புலனாய்வுத் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட கேணல் ஆர்.ஹரிகரன், தான் பெற்றுக் கொண்ட அனுபவம் தொடர்பாக விரிவாக விளக்குகிறார். இது இங்கு செவ்வி வடிவில் வழங்கப்படுகிறது. கேள்வி: நீங்கள் எங்களுடன் இணைந்து கொண்டமைக்கு நன்றி. நீங்கள் கிட்டத்தட்ட முப்பது பத்…

  9. எதிர்வரும் 26ம் திகதி தாயகம் ,தமிழகம் , பிரித்தானிய மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் ஒருமித்த மாபெரும் எழுச்சிப்போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .பிரித்தானியாவில் மாலை நேரம் No 10 downing street பிரித்தானிய பிரதமர் டேவிட் கமேரோன் இல்லத்துக்கு முன்பாக எழுச்சிப்போராட்டத்தை நடத்த பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத நடவடிக்கைகள், இன படுகொலைகள் , நில அபகரிப்புக்கள் மற்றும் 2009 ஆண்டு மே மாதம் முல்லிவாய்க்காலில் 70,000 மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யபட்டமை போன்றவற்றிக்கு சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டி உணர்வுபூர்வமான எழுச்சியுடன் உலகம…

  10. நாங்கள் உண்மையைக் கண்டறியும் போராட்டத்திலிருந்து ஒருபோதும் விலகி விடக்கூடாது என்று மாந்தை புனித லூர்துத் தேவாலயத்தில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல்ப்போனவர்களுக்காக நடத்தப்பட்ட விசேட ஆராதனையில் கலந்துகொண்டு மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய ராயப்பு யோசேப் அவர்கள் கூறினார். மாந்தை மனிதப் புதைகுழியினருகே நடத்தப்பட்ட இந்த ஆராதனை அங்கே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 61 மனித எழலும்புக்கூடுகள் மற்றும் இதுவரை காணமால்ப் போனவர்களுக்காக இந்த ஆராதனை நடைபெற்றது. அங்கே மேலும் பேசிய ஆயர், காணாமல்ப் போனவர்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை மீண்டும் வலியுறுத்தியதோடு, முக்கியமாக மாந்தை மனிதப் புதைகுழி தொடர்பாகவும் பேசினார். உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் முன்னால் தான் கூறிய இறுதி யுத்தத்தில் காணாமல்ப் …

  11. காணாமல் போணவர்கள்,எங்களுக்கு முன்பாக பிடித்துக் கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது எமக்குத்தெரியாது.ஆனால் நாம் கண்டிருக்கின்றோம் யார் அவர்களை எங்கே கொண்டு சென்றார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்கூறிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தெரிவித்தார். -மாந்தை லூர்து அன்னை ஆலயத்தின் கொடியேற்றம் நேற்று (11-02-2014) புதன் கிழமை மாலை இடம் பெற்றது.இதன் போது காணமல் போன,கடத்தப்பட்டவர்களுக்காக விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதன் போது உரையாற்றுகையிலேயே மன்னார் ஆயர் அவ்வாறு தெரிவித்தார்.,,, -அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,,, மருதமடு தாயின் தொடக்ககால உறைவிடமாகிய இந்த புனித பூமியில் நாம் ஒன்று கூடி அன்னையின் கண்களுக்கு முன்னபாக இப்பகுதியில் க…

  12. தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் - கனடியத் தமிழர் தேசிய அவை அழைப்பு [Thursday, 2014-02-13 21:13:01] தொடர்ச்சியான போராட்டம் ! அனைவரும் ஒன்றிணைந்து ஈழ விடுதலை நோக்கிப் போராடுவோம் ! வாருங்கள் ! நான்காவது போராட்டம் இடம்: பிரித்தானியா துணைத் தூதரகத்திற்கு முன்பாக (777 Bay Street, TORONTO – College & Bay, College Subway’ க்கு அருகாமையில் ) காலம்: வெள்ளிக்கிழமை February 14th, 2014 நேரம்: மாலை பி.ப. 3:00 மணி தொடக்கம் மாலை 7:00 மணி வரை அடுத்து வரும் கவனயீர்ப்புக்கான விபரங்கள் • வெள்ளி Feb 21st - Indian Consulate • வெள்ளி Feb 28th - University Ave • ஞாயிறு March 9th - மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் உலகெங்கும…

  13. இலங்கைக்குள் அமெரிக்காவுக்கு சாதகமான அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க முயற்சிகள் இடம்பெறுவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவிருக்கின்ற பிரேரணை நாட்டுக்கு எதிரானது அல்லது அரசாங்கத்திற்கு எதிரானது என்று பலர் கூறுகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.அவர்கள் கூறுவதில் அர்த்தம் எதுவும் இல்லை. ஜெனீவாவில் கொண்டுவரப்படுகின்ற பிரேரணையானது கடந்த 30 வருட காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிப்பகுதியில் ஏற்பட்டதாக கூறப்படும் சம்பங்களை பற்றியது. எனில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட படையினர், அதிகாரிகள் நாட்டுக்கு உரியவர்கள் அன்றி அரசாங்கத்திற்கு உரியவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்ட…

  14. சுவிற்சர்லாந்தில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு, சிறிலங்கா உள்ளிட்ட நாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அந்த நாட்டு அரசாங்கம் தொடர்ந்து நீடித்துள்ளது. அதேவேளை, குரோசியா, மொன்ரனிக்ரோ நாட்டவர்களுக்கு ஆயுதங்களை வைத்திருக்க விதிக்கப்பட்டிருந்த தடையை சுவிஸ் அரசாங்கம் நீக்கியுள்ளது. சுவிசில், ஆயுதங்களை வைத்திருக்கவும் வாங்கவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய உறுப்பு நாடுகளான குரோசிய மற்றும், மொன்ரனிக்ரோ நாட்டவர்களும் விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்று ஆளும் சமஸ்டி சபை தெரிவித்துள்ளது. மோதல் சூழல் நிலவும் குறிப்பிட்ட நாட்டவர்கள் சுவிசில் மோதிக் கொள்வதை தடுப்பதற்கும், மோதல் பகுதிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதற்கு சுவிஸ் பயன்படுத்தப்படுவ…

  15. இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என இ;ந்தியா அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதா அல்லது எதிராக வாக்களிப்பதா என்பதனை இன்னமும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. உத்தேச தீர்மானத்தின் வரைவு நகல் ஒன்றை பெற்றுக்கொண்டதன் பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இலங்கை ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தீர்மானம் தொடர்பிலான இறுதி நகல் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே எவ்வாறான தீர்மானம் எடுப்பது என்பது ந…

  16. கனடாவில் நடைபெறவுள்ள - போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அன்புக்கரங்கள் நிகழ்வு. [Thursday, 2014-02-13 22:11:59] போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கிராமிய சமுக அபிவிருத்தி திட்டத்தை கனேடிய தமிழ் மக்களின் நிதியுதவிகயுடன் முன்பள்ளி சமூகநூலக, நீர் விநியோகம் மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அபிவிருத்தி திட்டத்திற்கு படுத்தப்படவுள்ளது அன்புக்கரங்கள் நிகழ்வின் ஊடாக தார்மீக பணிக்கு உங்கள் நிதி யுதவிகளை வழங்கி உதவுமாறு வேண்டுகின்றோம். http://www.seithy.com/breifNews.php?newsID=103584&category=TamilNews&language=tamil

  17. உலகமயமாகும் கோத்தாவின் கொலைப்படைகள் : நிவேதா நேசன் இலங்கை இராணுவம் உலக அளவிலான பல்தேசிய நிறுவனங்களதும், மாபியா பாணியிலான பாதுகாப்பு நிறுவனங்களதும், ஏகாதிபத்திய நாடுகளதும் கூலிப் படையாகச் செயற்படுகின்றது என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் பல்தேசிய நிறுவனங்களின் அடியாள் படைகள் போன்று செயற்படும் பல்வேறு பாதுகாப்புப் படைக் குழுக்கள் தோன்றியுள்ள்ன. தனியார் பாதுகாப்புப் படைகள் என்றால் குறி-சுடும் சிறிய ரக துப்பாக்கிகளையும், கத்தி பொல்லு போன்ற பாரம்பரிய ஆயுதங்களைம் கொண்ட கூலிக்கமர்த்தப்பட்ட சில தனி நபர்கள் என்று பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். தரைப்படை, கடற்படை, விமானப்படை என்று பாரிய ஆயுதத்தளங்களையும், ஆயிரக்கணக்க்கான பயிற்சிபெற்ற இராணுவத்தினரைய…

  18. பழைய முறிகண்டி கோயில் அருகில் இடம்பெற்ற விபத்தில் பலியானவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான வானில் இருந்து சிதைந்த நிலையில் காணப்பட்ட உடற்பாகங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பழைய முறிகண்டி கோயில் அருகில் விபத்து ; 6 பேர் பலி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வான் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன் மோதியதில் சம்பவ இடத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஏழு வயது சிறுவனும், ஏழு வயது சிறுமியும் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்…

    • 17 replies
    • 1.8k views
  19. இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை! – அவுஸ்ரேலிய செனெட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. [Thursday, 2014-02-13 17:16:40] இலங்கை மீது சுயாதீன சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அவுஸ்திரேலிய செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பசுமைக் கட்சி இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. ஐ.நா மனிதஉரிமை பேரவை கூட்டத்தில் இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய அரசாங்கத்தை பசுமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது. சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளித்து ஐ.நா சபைக்கு அவுஸ்திரேலிய பசுமைக் கட்சி செனட் சபை மூலம் வலுவான செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக பசுமைக் கட்சித் தலைவர் கிறிஸ்டின் …

  20. ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆனந்த சங்கரி மீண்டும் கடிதம் எமுதியுள்ளார். [Thursday, 2014-02-06 15:21:39] தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் முழு வடிவம் பின்வருமாறு, மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை ஜனாதிபதி, அலரி மாளிகை, கொழும்பு – 3. மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே, 59ஆவது சுதந்திர தினநிகழ்வில் நீங்கள் உறுதியளித்தபடி எதுவித தாமதமுமின்றி மிகமுக்கியமான இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணுவீர்கள் என்ற நம்பிக்கையோடு பெப்பிரவரி 4ஆம் நாளாகிய இன்றைய தினத்தை தெரிவுசெய்து தங்களுக்கு இக்கடிதத்தை எழு…

    • 9 replies
    • 874 views
  21. தமிழர் பகுதிகள் எங்கும் மனிதப் புதைகுழிகள்! – நேரம் வரும்போது அம்பலப்படுத்துவோம் என்கிறார் சம்பந்தன். [Thursday, 2014-02-13 17:09:28] மன்னாரில் மட்டும் மனிதப் புதைகுழி இல்லை. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் எல்லாவற்றிலும் இவ்வாறான புதைகுழிகள் இருக்கின்றன. அதற்குரிய தரவுகளும் எம்மிடம் இருக்கின்றன. இதனைப் பகிரங்கப்படுத்த வேண்டிய இடங்களில் - சந்தர்ப்பம் வரும் வேளையில் நாம் உரிய வகையில் எடுத்துக் கூறுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் தெரிவித்தார். மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு, கிழக்கு யுத்த வன்முறைகளினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்க…

  22. முகவலைப் பதிப்பில் படம் - அதிபர் கண்டிப்பு - மாணவி தற்கொலை! நடந்தது என்ன? [Thursday, 2014-02-13 12:52:15] இலங்கையில் கடந்த வாரம் Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தியின் புகைப்படங்கள் இவை. Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள். 10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் ச…

  23. மாகாணசபைத் தேர்தல் – ஆளும்கட்சி வேட்பாளர்கள், அமைச்சர்களை இன்று சந்திக்கிறார் மகிந்த! [Thursday, 2014-02-13 07:44:54] மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆளும்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், அமைச்சர்கள், வேட்பாளர்கள் அனைவரையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சந்திக்கவுள்ளதாக,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் தேர்தல் பிரசாரங்களை தேர்தல் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு முன்னெடுப்பது குறித்தும் தேர்தல் காலத்தில் கட்டுக் கோப்புடனும் ஒழுங்குடனும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவது பற்றியும் வழிகாட்டல்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தலில் முறையாக நடந்துகொள்ளும…

  24. ஜெனீவா தீர்மானத்தை தோற்கடிக்க சகல மட்டங்களிலும் நடவடிக்கை! – அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறுகிறார். [Thursday, 2014-02-13 07:59:11] இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டு வரப்பட உள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்கு சகல மட்டங்களிலும் பெருமெடுப்பிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக,அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. அங்கு ஜெனீவா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:- ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள பிரேரணையை தோற்கடிக்க தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. நா…

  25. Started by தமிழரசு,

    மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் உதய கம்பன்விலவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரசார நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. (படங்கள்: கித்சிறி டி மெல்) http://tamil.dailymirror.lk/--main/100000-2014-02-13-08-50-35.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.