Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பேஸ்புக்கில் வெளியான படத்தால்,11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை! [Thursday, 2014-02-06 16:28:04] பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட புகைப்படம் ஒன்றினால் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் குருநாகலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குருநாகல் பாடசாலை ஒன்றில் 11ம் தரத்தில் கல்வி பயிலும் விதூசா என்ற மாணவி தொடர்பான புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த மாணவி ஒரு ஆணுடன் நிற்பது போன்றே அப்புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஆண், மாணவியின் காதலன் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த புகைப்படத்தை அவதானித்த பாடசாலை அதிபர் மாணவியை அழைத்து கடுமையாக திட்டி எச்சரித்துள்ளதுடன் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்து வரும்படி பணித்துள்ளார். நேற்று மா…

  2. ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ச மற்றும் மஹிந்த சிந்தனையை பாதுகாப்பதற்காக உயிரைப் பணயம் வைத்து செயற்படப் போவதாக பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். கம்பளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகால யுத்தத்தை ஜனாதிபதி முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கின்றனர். நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதியையும், மஹிந்த சிந்தனையையும் பாதுகாப்பதற்கு உயிர்த் தியாகம் செய்ய காத்திருக்கின்றனர். உலகின் மிகக் கொடிய பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை ஜனாதிபதி தோற்கடித்தார். மனித உரிமைகள் மற்றும் போர்…

  3. சிறிலங்காவுக்கு எதிராகத் தடைகளை விதிக்குமாறு கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள். [Wednesday, 2014-02-05 23:17:58] தனது 66ஆவது சுதந்திர நாளைச் சிறிலங்கா கொண்டாடும் இந்த வேளை சிறிலங்காவிலும் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைதியையும் நீதியையும் சம உரிமையையும் நிலைநாட்ட சர்வதேயத்தின் ஆதரவை வேண்டி நிற்கின்றனர். எதிர்வரும் மார்ச் மாதம் யெனீவாவில் சிறி லங்காவுக்கு எதிராகப் போர்க் குற்றங்கள், மாந்த நேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழின அழிப்புத் தொடர்பாகச் சர்வதேய சுயாதீன விசாரணை மேற்கொள்ளும் பயனுள்ள தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என நம்புகின்றனர். சிறிலங்கா சுதந்திரம் பெற்ற காலம் முதலே தமிழருக்கெதிரான திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைக…

  4. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்திற்கு எதிராக, ஒரு இலட்சம் கையெழுத்துக்களைப் பெறும் போராட்டம் ஒன்று இலங்கை அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் இலங்கையின் சுதந்திர தினமான நேற்று முதற்கட்டமாக வெல்லம்பிட்டியவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒரு இலட்சம் கையெழுத்துகளைப் பெற்று, அதன் பிரதி ஐநா மனிதஉரிமைகள் பேரவைக்கு இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்படவுள்ளது. கடந்தமுறை பத்து இலட்சம் கையெழுத்துக்களை ஜெனிவாவுக்கு அனுப்பும் போராட்டம் அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=102960&category=TamilNews&language=tamil

  5. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு, பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் பொறுப்பு பிரான்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கும் பிரித்தானியாவே, பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் ஆதரவைத் திரட்டித் தருமாறு பிரான்சிடம் கேட்டுள்ளது. அதேவேளை, கொமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் பிரித்தானியா ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தில், சிறிலங்கா விவகாரங்களைக் கையாளும் அதிகாரியான விக்கி மொரேலி இந்தவாரம் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்…

  6. அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா பிஸ்வாலை சந்திக்க, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை நிஷா பிஸ்வால், சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கு, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்கத் தூதரகம் சந்திப்புக்கான அனுமதியைப் பெறுவதற்கு திரும்பத் திரும்ப பலமுறை முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அது தோல்வியில் முடிந்தது. நிஷா பிஸ்வாலை சிறிலங்கா அதிபர் சந்திக்காமைக்கு, கடந்தவாரம் அவர் இறுக்கமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்ததே காரணம் என்று, அதிபர் செயலக வட்டாரங்கள் கூறின. எனினும், கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள…

  7. ஐநா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தால் இஸ்ரேலை எதுவும் செய்ய முடியவில்லை:- பாதுகாப்புச் சபைக்கு செல்லாத வரை பயமில்லை:- ஐநாவின் தீர்மானத்தை தோற்கடிக்க ஆரபுதேசத்தை நாட வேண்டும் என்கிறார் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர்:- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கையின் மீது இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினாலும் அவை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு அனுப்பப்படாது விடின் நாட்டுக்கு பாதிப்பு அல்லது கெடுதி ஏற்பட இடமில்லையென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மகாநாமஹேவா கூறினார். கொழும்பில் நடத்தப்பட்ட மனித உரிமை விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக…

  8. கணிகையர் இல்லங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றுக்காக நாதியற்ற இளம் தமிழ்ப் பெண்கள் கொண்டு செல்லப்படுகின்றனர் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். "இளைஞர்களது உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்ய இன்று பல பிழையான நடவடிக்கைகள் அவர்களுக்கு ஊட்டப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் உணர்வுகள், தங்களுக்குப் பாதகமாக ஆற்றுப்படுத்தப்பட்டுவிடுமோ (வழிப்படுத்தப்பட்டு) என்று எண்ணும் சிலரால் போதைப் பொருள்கள் இளைஞர், யுவதிகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. வடமாகாணத்தில் இதுவரை காலமும் இல்லாத இந்தப் பழக்கம் தற்போது பரவிவருகின்றது. இந்தப் பொறிக்குள் அகப்படாமல் நீங்கள் தப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் கணிகையர் இல்லங்கள் (விபசார விடுதிகள்) அறிமு…

  9. இலங்கை இராணுவப் படைவீரர்களுக்கு பிரேஸில் பயிற்சி அளிக்க உள்ளது. பிரேஸில் தேசிய யுத்தக் கல்லூரி, பிரித்தானிய இராணுவ உயர் கல்வியகம், பிரேஸி;ல் அமைதி காக்கும் செயற்பாட்டு நிறுவனம் மற்றும் வனயுத்த மத்திய நிலையம் ஆகியனவற்றில் இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிரேஸிலின் பல்வேறு பயிற்சி நிலையங்களில் இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும், இராணுவத் தளபதி தயா ரட்நாயக்கவும் பிரேஸிலுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த பயிற்சிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யுத்த கால அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினரும் இணங்கியிர…

  10. அரசியல் உரிமைகளை கொச்சைப்படுத்தும் கலாச்சார செயற்பாடுகள்? நவீன தகவல் தொழில்நுட்பங்களின் வருகைதான் இளைஞர்களின் தவறான செயற்பாடுகளுக்கு காரணம் என்று கூறமுடியாது. மேற்குலக நாடுகளில் அது அறிவு வளர்ச்சிக்கு பன்படுகின்றது. தூனீசியாவில் சா்வாதிகாரத்தை நீக்க சனநாயகத்தை நிலைநிறுத்த தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியே புரட்சி நடந்தது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சமீபகாலமாக இடம்பெறும் சமூகச் சீரழிவுகள் மனவேதனை தருகின்றன. வாள்வெட்டு அடிதடி, காதல் தோல்வியால் தற்கொலை, சினீமா நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்தல் என்று முறைகேடான செயற்பாடுகளில் இளைஞர்கள், யுவதிகள் ஈடுபடுகின்றனர். கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பெயர் பெற்ற யாழ்ப்பாணத்தில் இப்படியும் சீரழிவா என்ற…

  11. சுதந்திரதினம் யாருக்கு??? பெப்ருவரி மாதம் 4ம் திகதியானது (4.2.2014) சிறிலங்காவின் 66வது சுதந்திரதினமாகும். மிகப்பெரிய நம்பிக்கைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் 66ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1948ம் ஆண்டு பெப்ருவரி மாதம் நான்காம் திகதியன்று காலி முகத் திடலில் டச்சுப்பீரங்கிகள் இருபத்தியொரு வெடி முழக்கங்களை தீர்த்துக்கொண்டிருக்கையில், கொழும்பு ரொரிங்டன் சதுக்கத்தில் பிரித்தானிய அரசர் ஆறாவது ஜோர்ஜ் அவர்களின் சொந்தச் சகோதரரான, டியுக் குளஸ்டர், இலங்கைத்தீவின் (அன்றைய சிலோன்) சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். பின்னர் இலங்கையின் முதலாவது பிரதமந்திரியான டொன் Stephen செனநாயக்கா இலங்கையில் அப்போதைய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இலங்கையின் (Ceylon) அன்றைய தேசியக்கொடி கண்டியின் கடைசி …

  12. யாழ்ப்பாணத்திலுள்ள பனைவளத்தின் அடையாளங்களினுள் ஒன்றாகவுள்ள திக்கம் வடிசாலையினை அங்குள்ள சுமார் ஜந்து கோடி மதுசாரத்துடன் தெற்கினை சேர்ந்த தனியார் நிறுவனமொன்றிற்கு தாரை வார்க்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முற்பட்டுள்ளதாக கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.பனை அபிவிருத்தி சபையின் கீழுள்ள குறித்த வடிசாலை பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களது கொத்தணியின் கீழிருந்தது.அதன் பலாபலன்கள் வறிய சீவல் தொழிலாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களே அனுபவித்து வந்திருந்த நிலையினில் அதை தற்போது பனை அபிவிருத்தி சபை வசம் எடுத்துக்கொண்டுள்ளதுடன் தெற்கு சிங்கள தனியார் நிறுவத்திற்கு தாரை வார்க்க முற்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தான் இக்கோரிக்கையினை பகிரங்கமாக முன்வைப்பதாக தெரிவித்த அவ…

  13. இலங்கை விவகாரம் குறித்து கமலேஷ் சர்மாவிற்கும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் இடையில் பேச்சுவார்த்தை இலங்கை விவகாரம் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மாவிற்கும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்;பட்டுள்ளது.சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சாலீல் ஷெட்டி, கமலேஷ் சர்மாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கை நிலைமைகள் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் கமலேஷ் சர்மா முதல் தடவையாக பேச்சுவார்த்தை நடத்துகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சில நாடுகள் கோரி வருகின்ற போதிலும், அமைப்பு இதுவரையில் சர…

  14. ஜெனிவா பிரேரணையை இந்தியா நீர்த்துப் போகச் செய்யும்; வாசு­தேவ நாண­யக்­கார நம்பிக்கை இலங்­கைக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் பிரே­ர­ணையை இந்­தியா ஆத­ரிக்கப் போவதும் இல்லை, எதிர்க்கப் போவ­து­மில்லை. மாறாக நீர்த்துப் போகச் செய்யும் என அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தம் தொடர்­பான விசா­ர­ணை­களை நடத்த அமெ­ரிக்காவோ, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினரோ குழுவை நிய­மிக்க முடி­யாது? இதனை சிங்­கள மக்கள் ஏற்­றுக்­கொள்­ள­ மாட்­டார்கள் கடந்த பல மாதங்­க­ளாக எமக்கு எதி­ராக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் பிரே­ர­ணையை கொண்டு வரு­வ­தற்கு அமெ­ரிக்கா முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது என அவர் சுட்டிக்காட்டியதுடன், இதனை முழு உல­கமே அறியும். அமெ­ரி…

  15. வட மாகாண தமிழ் பேசும் மக்கள் இன வேறு­பா­டின்றி மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் வாழ்ந்து வரு­ப­வர்கள் என உலகம் எம்மை போற்றும் அள­விற்கு எமது நட­வ­டிக்­கைகள் இருக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நகரசபையில் அமைய அடிப்படையில் பணியாற்றிய அட்ட வணைப்படுத்தப்படாத பதவி அணி யினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடை பெற்றது;. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையற்றுகையில்: அமைச்சர் ரிசாட்டும் அவ­ரது இளைய சகோ­தரர் பாணியில் எம் எல்­லோ­ருக்கும் நல்­லதோர் எடுத்­துக்­காட்­டாக இருப்பார் என எண்­ணு­கின்றேன். கத்­தோ­லிக்க – ம…

  16. இலங்கை அதிகாரிகளால் உயிருக்கு அச்சறுத்தல்: அனந்தி சசிதரன் யாழ்ப்பாணம்: தமது உயிருக்கோ, பாதுகாப்புக்கோ உத்தரவாதம் இல்லை என்பதால் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று இலங்கை வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தமக்கு கடும் அச்சுறுத்தல் இருப்பதால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமது அரசியல் நிலைப்பாடு காரணமாக தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை அரசின் ப…

  17. இறுதி யுத்தத்துக்குப்பின்னரான மீளக்குடியமர்த்தல் செயல்பாடுகளின் போது, கேப்பாப்புலவு மக்களின் 400 ஏக்கர்; காணிகளை இராணுவத்தினர் சுவீகரித்து விட்டு, அக்காணிகளுக்கு உரித்துடையவர்களுக்கு மாற்று நிலங்களை இராணுவத்தினர் வழங்கியிருந்தனர். “மாற்று நிலங்கள் தமக்கு வேண்டாம், தமக்கு தமது பூர்வீக நிலங்கள் தான் வேண்டும்.” என்று இன்று வரை தமது நிலத்துக்காக அப்பகுதி மக்கள் போராடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்நிலையில் குறித்த 400 ஏக்கர் காணிகளும் உரித்துடைய மக்களுக்கு மீள கையளிக்கப்படுவதாக கடந்த 25.01.2014 அன்று கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் 59வது டிவிசனுக்கு பொறுப்பான பிரிகேடியர் தர அதிகாரி கூறியிருந்தார். இந்த அறிவிப்பையடுத்து, கேப்பாப்புலவு பிரத…

  18. அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நீஷா பீஸ்வால், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சரியான ஆய்வினை மேற்கொள்ளாமல் கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.அரசாங்கம் இலங்கையின் ஒருங்கிணைப்புக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.ஆனால் இந்த விடயங்களை சரியாக ஆய்வு செய்து விளக்கம் பெறாமல், நீஷா பீஸ்வால் கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டுக் …

  19. வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் இராணுவக் குடியிருப்பு என்பது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிராக மக்களை அணி திரட்டி மீண்டும் போராட்டங்களைமுன்னெடுக்க தயாராவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழர் பிரதேசங்களில் இராணுவக் குடியிருப்பானது, தமிழ் மக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்துவதாகவே அமையும். ஏனெனில், இராணுவக் குடியிருப்பு மற்றும் புற்றுநோய் ஆகிய இரண்டும் உள்ளுக்குள்ளிருந்தே காலப்போக்கில் அழிவை ஏற்படுத்துமென்றும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலையே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்…

  20. ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், தாம் பங்கேற்கபது தொடர்பினில் எந்தவொரு முடிவினையும் இது வரை தான் எடுத்திருக்கவில்லையென வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எமது இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.தான் ஜெனீவா செல்லப்போவதில்லையென கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை பற்றி கேள்வி எழுப்பிய வேளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், தாம் பங்கேற்கபது தொடர்பினில் எந்தவொரு முடிவினையும் இது வரை தான் எடுத்திருக்கவில்லையென்றே தெரிவித்ததாகவும் ஆனால் வழமை போன்றே அவ்வூடகம் திரிபு படுத்தி செய்திகளை வெளியிட்டிருந்ததாகவும் தெரிவித்தார். http://www.pathivu.com/news/29462/85//d,article_full.aspx

  21. வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின் கடைசி ஒரு வருடத்தில் இராணுவமே அதிகளவான போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்று மற்றுமொரு சர்வதேச அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை அழிப்பதிலும் இராணுவம் ஈடு பட்டுவருவதாகவும் அனைத்துலக குற்றவியல் ஆதாரத் திட்டம் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. இராணுவத்தினர் போரின் இறுதி ஒரு வருடத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதை நிரூபிக்கும் வகையில், "தீவுகளின் தண்டனை' என்னும் தலைப்பில் இந்த புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. பொது நல ஆலோசனை மையத்தின், அனைத்துலக குற்றவியல், ஆதாரத் திட்டம் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த அறிக்கையில், போர்க்குற்றங்கள் குறித்து ஒளிப்படங்கள் தொடர்பான தடயவியல் ஆய்வு, செய்மதி…

  22. இராணுவ உடையுடன் வெள்ளை வானில் ஒருவரை கடத்திச் சென்று 350 இலட்சம் ரூபாகப்பம் கோரிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டை - செட்டியார்தெரு சாரங்கா ஜூவலரிக்கு அருகில் கடந்த ஆண்டு ஓகஸ்ட்16ம் திகதி இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று குருநாகல் பகுதியில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, மூன்று ரவைகள், கப்பம் பெற்ற பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட வான், வாரியபொல பகுதியில் திருடிய மோட்டார் சைக்கிள் என்பவை மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் கொழும்பு குற்றத் தடுப்புப் ப…

  23. இலங்கைக்கு எதிரான தீர்மானம்: நிதியுதவி வழங்குகிறது அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்க அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கிலே இவ்வாறான நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளது. இலங்கையில் இயங்கி வரும் ஐந்து அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் பத்து அரச சார்பற்ற நிறுவனங்கள் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளன. மேலும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு இலங்கை பற்றிய தகவல்களை வழங்கும் ஐந்து அரச சார்பற்ற நிறுவனங்களே இவ்வாறு நிதி உதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: ht…

  24. 2014 இல் 4.5 பில்லியன் வருமானத்தை ஈட்டும் வட்டவளை ப்ளான்டேஷன் வட்டவளை பெருந்தோட்ட நிறுவனம் 2013 டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் 4.5 பில்லியன் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் 2014ம் ஆண்டிற்கான நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நூற்றுக்கு 8.8% அதிகரிப்பு என்பதுடன் நிறுவனத்தின் தேறிய வருமானம் கடந்த வருடத்தில் 589 மில்லியனில் இருந்து 311 மில்லியன் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஒன்பது மாதகாலத்திற்குள் நூற்றுக்கு 20.0% வரை அதிகரித்த சம்பள உயர்வானது இந்த வருமானம் வீழ்ச்சியடைவதற்கு பிரதான காரணமென நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்பாராத சீரற்ற காலநிலை காரணமாக தேயிலைச் செடிகள் நாசமாகியமையும் இ…

  25. அனைவரும் உறக்கத்தில் இருக்கையில் விழித்திருந்த எமக்கு மக்கள் வாக்களிப்பர்: மனோ கணேசன் கொழும்பில் தமிழ் பேசும் மக்கள் துன்பப்பட்ட போது விழித்திருந்து நாம் மக்களுக்காக போராடினோம். அந்த போராட்டம் இன்றும் சுறுசுறுப்பாக தொடர்கிறது. நாம் மக்களுடன் இருந்தபோதும், இருக்கும்போதும் எப்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களுக்கும், துன்பம் விளைவித்த கூடாரத்தை சேர்ந்தவர்களுக்கும் மனசாட்சியுள்ள மக்களால் ஒருபோதும் வாக்களிக்க முடியாது. ஆகவே எதிர்வரும் தேர்தலில், நமது ஜனநாயக மக்கள் முன்னணி மென்மேலும் பலம்வாய்ந்த ஒரு கட்சியாக வெற்றி பெறுவது உறுதியாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று, கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.