Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு நகரை அழகுப்படுத்தும் திட்டத்தின்கீழ் பௌத்தலோக மாவத்தையில் இருந்து ஒரு தொகுதி மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் புதிய தூதரகம் அமையவுள்ள இடத்தில் உள்ள மக்களே இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த இடத்தில் உள்ள 9 ஏக்கர் காணியை அரசாங்கம், ரஷ்யாவுக்கு விற்பனை செய்துள்ளது. இதற்காக குறித்த பிரதேசத்தை முழுமையாக சன நடமாட்டம் அற்ற பிரதேசமாக உருவாக்கி தருவதற்கும் இலங்கை அரசாங்கம் ரஷ்யாவுக்கு உறுதியளித்துள்ளது. அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுமானால், ரஷ்ய தூதரகத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றப்படும் ஆபத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குடும்பங்களின் பரம்பரையினர் பௌத்தலோக மாவத்தையில் சுமார் 1…

  2. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இனவழிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் எனவும் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவிக்குமாறும் வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையில் இன்று இடம்பெற்ற மாகாணசபை அமர்வின்போது சபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். திட்டமிட்ட இனவழிப்பை சர்வதேச விசாரணைகள் மூலம் அனைத்துலக சமூகத்திற்கும் வெளிப்படுத்த முன்வரவேண்டும் எனற பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்து இருந்தார். இதன் போதே இனவழிப்பு என்ற சொல்லை பாவிக்காமல் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவியுங்கள் இனவழிப்பு என்ற சொல்லி…

  3. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தின் போது பொதுமக்கள் உயிரிழந்தமைக்கான தகவல்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை இராணுவத்தினர் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தவில்லை எனவும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கடுமையான ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதனை மறுப்பதற்கு இல்லை என அவர்…

  4. விடு­தலைப் புலி­களை அழித்­த­போதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னையும் அர­சாங்கம் தடை செய்­தி­ருக்க வேண்டும் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பே அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களைக் கொடுக்­கின்­றது .அர­சாங்­கத்­திற்கு பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­மாயின் அது முழு நாட்­டையும் பாதிக்கும். இதை அனைத்துக் கட்­சி­களும் புரிந்­துக்­கொள்ள வேண்டும். ஜெனீவா அழுத்­தங்­க­ளையும் நாட்டில் பிரி­வினை வாதத்­தி­னையும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பே ஏற்­ப­டுத்­து­கின்­றது. சர்­வ­தேச பிரச்­சி­னை­களைத் தூண்டி இலங்­கையில் தனித்­தமிழ் ஈழத்­தினை உரு­வாக்­கவே சம்­பந்தன் கூட்­டணி முயற்சி செய்து வரு­கின்­றது என அவர் குற்றஞ…

  5. வடக்கு முலமைச்சர் அரசாங்கத்துடன் இணைந்து மாகாண சபையினை நடாத்தி மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தரவேண்டும் என சபையின் எதிர்க்கட்சித் தவைலர் கமலேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மாகாண சபை அமர்வுகள் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் எதிர்க்கட்சித் தலைவர் கமல் வைக்கப்பட்டுள்ளார். எனினும் சபை அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கமல் சட்டத்தரணி ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். அதனையடுத்து குறித்த கோரிக்கையினை பரிசீலித்த நீதிமன்றம் சந்தேக நபரான கமல் மக்களின் ஆணையினைப் பெற்று வடமாகாண சபைக்கு தெ…

  6. ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு அமோக ஆதரவைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு வரும் பிரிட்டன், வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் காணி சுவீகரிப்புக்கு எதிராக சர்வதேச மாநாடு ஒன்றையும் லண்டனில் நடத்தவுள்ளது. பிரிட்டன் சர்வகட்சி நாடாளுமன்றக் குழுவும் பிரிட்டன் தமிழர் பேரவையும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு சர்வதேச நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூவர் அடங்கிய குழு இன்று லண்டன் ச…

  7. மட்டக்களப்பு பனிச்சையடிக் கடலில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி காணாமற்போன மூன்று இளைஞர்களில் இருவரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. மட்டக்களப்பைச் சேர்ந்த 19, 20 ,23 வயதான மூன்று இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(26) மாலை நண்பர்கள் 7 பேருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது மூன்று பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். கடலில் குளித்துக்கொண்டிருந்த ஏனைய நண்பர்கள் திரும்பி கரைக்கு வந்துள்ள நிலையில், குறித்த மூவரும் கடலில் மூழ்கியதாக ஏனைய நண்பர்கள் தெரிவித்திருந்தனர். கடலில் மூழ்கியவர்களை பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து தேடும் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் இருவரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. http://…

  8. சிறிலங்கா இராணுவம் புதிதாக உருவாக்கிய 24வது டிவிசனின் புதிய தலைமையகம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மல்வத்தையில் சிறிலங்கா இராணுவத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு படைத் தலைமையகத்தின் கீழ் சிறிலங்கா இராணுவத்தின் 24வது டிவிசன் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருகோணமலையில் 22வது டிவிசனும், மட்டக்களப்பு குடும்பிமலையில் (தொப்பிகல) 23வது டிவிசனுமாக சிறிலங்கா இராணுவத்தின் இரண்டு டிவிசன்கள் கிழக்கில் நிலைகொண்டிருந்தன. இந்தநிலையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள மல்வத்தையில் புதிதாக உருவாக்கப்பட்ட 24வது டிவிசனின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று வெலிகந்தையில் உள்ள கிழக்குப் படைத் தலைமையகம், குடும்பிமலையில் (தொப்பிகல) உள்ள 23வது டிவிசன் தலைமையகம் ஆகியவற்று…

  9. அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கைக்கு தற்போது விஜயம் செய்துள்ள அவுஸ்ரேலிய நாடாளுமன்றக் குழுவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. நேற்றுக்காலை இந்தக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தது.இதன்போது போருக்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்தக்குழு தமது மகிழ்ச்சியை வெளியிட்டது. அத்துடன், இலங்கைக்கு, அவுஸ்ரேலியா தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என்று இந்தக்குழு தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களான விக்டோரியா எலிசபெத், ஜீன் பெற்றி, ஜோன் பண்டாசொபொலஸ் மற்றும் மார்ஸா ரோஸ் தோம்சன் ஆகியோரே தற்போது இலங்கையில் விஜயத்தை மேற்கொண்டுள…

  10. போர் முடிவடைந்தும் வடக்கிலும் கிழக்கிலும் வலி.வடக்கு மற்றும் சம்பூரைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் சொந்த வாழ்விடங்களில் குடியேற்றப்படாமல் உள்ளனர். அவர்களை குடியேற்றுவதாகப் பலமுறை அரசு நாடாளுமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் தெரிவித்தும் அதனை நிறைவேற்றாமல் உள்ளது. அந்தப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள், கோயில்கள், வீடுகள் என்பன இடித்து அழிக்கப்பட்டு இராணுவ ஆக்கரமிப்புக்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகர சபையின் கேட்போர் கூடத்தில் முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30 மணிவரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் …

  11. இலங்கையில் பயங்கரவாதத்தை முழுதாக தோற்கடித்த மனிதாபிமான நடவடிக்கையின் போது இராசாயன ஆயுதங்கள் உட்பட மரபல்லாத ஆயுதங்களை ஆயுதப்படைகள் பயன்படுத்தின என பல தரப்பினராலும் ஊடகங்கள் வழியே பல அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஆதாரமற்ற தவறான குற்றச்சாட்டுகளாகும் என்று இராணுவப்பேச்சாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பில், பாதுகாப்பு தலைமை அதிகாரி அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்ச்சியாக மரபு அல்லாத பல வழிகளில் இராணுவத்துக்கும் இலங்கை சிவிலியன்களுக்கும் எதிராக தாக்குதல்களை நடத்திய போதிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது ஆயுதபடைகள் குறைந்தபட்ட அளவிலான மரபு ரீதியான வழிகளை மட்டும் தேவையின் நன்மை கருதி பயன்ப…

  12. ஐ.நா மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணை குறித்து ஜப்பான் இன்னமும் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் வெளியான பின்னரே பிரேரணை குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிதொ ஹொபொ தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான பிரேரணை நகல் வெளியாகிய பின்னர், அது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், இதுதொடர்பில் டோக்கியோ அதிக கரிசனை செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைக்கு ஜப்பானிய அரசாங்கம் 160 மில்லியன் ரூபாவை அ…

  13. அதிகாரப்பகிர்வு என்பது ஒரு விடயம், 13 வது திருத்தச் சட்டம் என்பது இன்னொரு விடயம். வடக்கு, கிழக்கு அச் சட்டத்தின் கீழ் மாகாணசபையாக உருவாக்கப்பட்டது என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான அரசியலமைப்புக் கற்கை கருத்தரங்கு நேற்று பிற்பகல் 2 மணியளவில் யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற போது முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந் நிகழ்வு வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதன் போது உரையாற்றிய முதலமைச்சர், மாகாணசபைக்கான எந்தவொரு அதிகாரங்களும் இதுவரை வழங்கப்படவில்லை. மாறாக 13 ஐ திருத்தியமைக்க முயல்கின்றனர். இதற்கு இந்தியாவும், பல அரசியல் கட்சிகளும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. அதிகாரப் ப…

  14. யாழ்ப்பாணத்தில் படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக இலங்கை இராணுவத் தலைமையகம் குற்றம்சுமத்தியுள்ளது. 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் படையினரின் எண்ணிக்கை பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 8420 கட்டிடங்களில் இருந்து படையினர் வெளியேறியுள்ளனர். தனியார் கட்டிடங்களும் பலாலியில் உள்ள கட்டிடங்களும் இதில் அடங்கும்.அதிலும் கடந்த வாரத்தில் சுமார் 200 சிறிய படைமுகாம்கள் மூப்பட்டு அதில் உள்ள படையினர் பிரதான முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இந்தநிலையில் படையினரின் கண்காணிப்புகள் யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக இலங்கை இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. http:/…

  15. கிளிநொச்சியிலுள்ள பாடசாலைகளில் உள்ள ஆளணியினரை சிறிலங்கா படையினர் மீண்டும் பதிவு செய்து வருவதால் இங்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விபரங்களை சிறிலங்கா படையினர் பதிவு செய்கின்றனர். இதனால் ஆசிரியர்கள் மட்டுமன்றி மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். படையினரின் இந்த நடவடிக்கையானது சுதந்திரமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு தடையாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பதிவு நடவடிக்கையின்போது அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளரின் பெயர், நிரந்தர முகவரி, தற்காலிக முகவரி, தொலைபேசி இலக்கம், அவர்களின் மேலதிக செயற்பாடுகள் போன்ற விபரங்களை உள்ளடக்கியதாக இந்தப் பதிவு இடம்பெறுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தைப்…

  16. பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த பொழுது யாழ்ப்பாணத்துக்கும் வந்து வடக்கு மாகாண மக்கள் தொடர்பாக கரிசனையுடன் அவர்களின் நலன்களில் கவனம் செலுத்தியமைக்காக வடக்கு மாகாணசபை அவரைப் பாராட்டி வரவேற்கும் தீர்மானம் ஒன்றை நேற்று சபை அமர்வின்போது நிறைவேற்றப்பட்டது. வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பெற்ற தீர்மானத்தில் பின்வரும் விடயம் அடங்கியிருந்தது. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் வெளிநாட்டு அரசுத் தலைவர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த முதல் நிகழ்வாக அமைந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனின் வரலாற்று முக்கியத்துவமிக்க வருகையை இந்தச் சபை வரவேற்கின்றது. பிரிட்டன் பிரதமர் தமது யாழ்ப்பாணப் பயணத்தின் போது காட்டிய உணர்வு…

  17. இராஜவரோதயம் சம்பந்தன். இலங்கைத் தமிழர்களின் அரசியல் குரல். வடக்கு மாகாணத்தை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். போருக்குப் பின் இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் சர்வதேசம் எடுத்துக் கொண்டிருக்கும் அக்கறைக்கு முக்கிய காரணம், எண்பதைத் தொடும் நிலையிலும் அசராமல் ஓடிக்கொண்டிருக்கும் சம்பந்தனின் முயற்சிகள். ஒருபுறம் தமிழர்களிடம் சாத்வீகத்தையும் சிங்களர்களிடம் நல்லிணக்கத்தையும் போதித்துக் கொண்டே மறுபுறம் பேரினவாத இலங்கை அரசுக்கு எதிரான தம்முடைய அறப் போராட்டங்களை எல்லைகள் தாண்டி எடுத்துச் செல்கிறார் சம்பந்தன். *போருக்குப் பிந்தைய ஐந்தாண்டுகள், கால் நூற்றாண்டுக்குப் பின் நடந்த தேர்தல்… இலங்கையில் தமிழர்கள் நிலைமை எப்படி இருக்கிறது? தமிழர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இழப்பை ஏற்பட…

  18. மன்னார் புதைகுழியில் தமிழ் மக்கள் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். இவர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றே நாமும் சந்தேகப்படுகின்றோம் என ஜேவிபி தெரிவித்துள்ளது. வடக்கில் உள்ள இராணுவத்தினர் தொடர்ந்தும் மனிதஉரிமை மீறல்களை செய்கின்றனர் என்பதை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் வடக்கில் ஒட்டுமொத்த தமிழர்களும் அழிந்து விடுவார்கள் எனவும் அக்கட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்- மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி சம்பவம் இன்று இலங்கையில் மட்டுமின்றி சர்வதேச ரீதியில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. இன்றும் தொடர்ந்து எலும்புக்கூடுகள் கிடைத்த வண்ணமே உள்ளன. இன்னும் பல எலும்புக்கூடுகள் எடுக்கப்படலாம். எனினும்…

    • 1 reply
    • 494 views
  19. ஒவ்வொரு குழந்தையையும் சிறந்த, ஆற்றலுள்ள, பண்பான மனிதனாகப் புடம் போட்டு, சமூகத்துடன் இணைக்கும் மிக அற்புதமான பணியினைச் செய்வது பாடசாலைகள், கல்லூரிகள். ஒவ்வொரு மனிதனும், தனது வாழ்நாள் முழுவதும் பெருமையாகவும், இனிமையாகவும் நினைத்துக்கொள்வதும் தான் கற்ற பாடசாலை, கல்லூரிகளைத்தான். பெற்ற தாயையும், தந்தையையும் போற்றும் கணங்களில் எல்லாம், தனக்குக் கல்வியூட்டிய பெருந்தகைகளையும் ஒவ்வெரு மனிதமும் நினைத்துக் கொள்கின்றான். அதனால், புலம்பெயர்ந்த பின்னரும் தமிழீழத்து மனிதர்கள் தாம் கல்விகற்ற பாடசாலையை மறக்காமல், பழைய மாணவர் சங்கங்கள் அமைத்து, அந்தக் கல்வி நிலையத்திற்கும், அங்கு பயிலும் மாணவர்களுக்கும் பெரும் தொண்டாற்றி வருகின்றனர். இந்த நன்றி மறவாத பண்பினையும், தான் கல்வி…

  20. சர்வதேச சமூகம் ஒரு பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரச படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக மட்டுமே சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் உதாசீனப் போக்கைப் பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல்கள், பௌத்த பிக்குகள் மீதான தாக்குதல்களை சர்வதேச சமூகம் மனித உரிமை மீறல்களாக கருதாது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கம் எந்தவிதமான அழுத்தங்களையும் எதிர்நோக்கத் தயார் எனவும், கிராமத்தைச் சேர்ந்த மக்களின் ஆதரவு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் தெரிவித்த…

  21. இலங்கையில் 2012 ஆம் ஆண்டின் இறுதியிலும் 2013 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் விண்கற்கள் விழுந்த இடத்தை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக பாதுகாக்குமாறு விஞ்ஞானி கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரிட்டன் விஞ்ஞா னியான சந்திரா விக்ரமசிங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து அதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதனையடுத்து பொலநறுவையை அண்டிய அரலகங்வில பிரதேசம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடமாக பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துள்ளார் என்று விஞ்ஞானி சந்திரா விக்கிரமசிங்க தெரிவித்தார். முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையில் கிடைத்த விண்கற்கள், பூமியை கடந்தும் உயிர்கள் வாழக் கூடும் என்பதற்கு நிரூபணம் என்று சந்திரா விக்கிரமசிங்க கூறினார். இ…

  22. புலம்பெயர் தமிழர்கள் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதனை முதன்மை நோக்கமாகக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கேகாலையில் பாடசாலையொன்றின் நீச்சல் தடாக ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நாட்டுக்கு எதிரான பிரச்சாரங்களை செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், போலிப் பிரச்சாரங்களை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை கைவிட்டு நாட்டு மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய வகையில் சேiவாயற்றுவதே தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கடமையாகும் என அவர் சுட்ட…

  23. வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சொகுசுக் கார்கள் வழங்கும் நடவடிக்கைகள் இந்தியத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. விரைவில் இந்தக் கார்கள் சகல உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவுள்ளன. வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இந்தியாவே பிரதான காரணம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபையைக் கொண்டு நடத்துவதற்கு இந்தியா உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது. இவ்வாறானதொரு நிலையில், வடக்கு மாகாண சபைக்குத் தெரிவான உறுப்பினர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடிய துணைத் தூதுவர் வி.மகாலிங்கம், சொகுசுக் கார்கள் வழங்குவது தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளார். இதற்க…

  24. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபி அமைப்பது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இதன்போது ‘வன்னிப் பகுதியில் நடைபெற்ற யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவ்வாறு கொல்லப்பட்டவர்களுக்கு இன்றுவரை அவர்களை நினைவுகொள்வதற்கு நினைவுத்தூபி ஒன்று இல்லாத காரணத்தினால் இந்த மக்களை நினைவுகூறும் வகையில் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும்’ என்று வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சபையில் பிரேரணை ஒன்றை முன்வைத்தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.