Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையானது, குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பது தொடர்பிலான செயன்முறைகளுக்கு தடையாக அமைந்துள்ளது. ஏனெனில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர்கள் குழு அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் விபரங்கள் 2031ம் ஆண்டு வரையில் இரகசியமாகப் பேணப்பட உள்ளது. இதனால் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி தாரூஸ்மான் தலைமையிலான …

  2. அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்னும் காலவரையற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நேற்றுமுன்தினம் நடைபெற்றது. விக்டோரியா மாநிலத்தின் மெல்பேர்ண் மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் விலாவுட்டிலும் இப்போராட்டம் மாலை ஐந்து மணிக்கு இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பல ஆயிரக்கணக்கான அகதிகளில் 46 அகதிகள் நான்கு ஆண்டுகளாக காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 42 பேர் ஈழத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியா அல்லது இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அரசாங்கத்தினால் இவர்கள் கால வரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள…

  3. விடுதலைப் புலிகளை படுகொலை செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் எத்தகைய திட்டம் வகுத்ததோ, அதையொத்த திட்டத்துடன், பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் [balochistan] மாகாணத்தில் வாழும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் பலூச் [baloch] செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்வதற்கு பாகிஸ்தான் இாணுவம் பாகிஸ்தான் அமைச்சரவையின் அனுமதி கோரப்படவுள்ளமை தொடர்பில் தனது அதிருப்தியை பாகிஸ்தான் கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் கலாநிதி நசீர் எஸ் பாற்றி வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானின் பாதுகாப்புத் தொடர்பில் இரு வெவ்வேறு திட்ட வரைபுகள், அடுத்து இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது கையளிக்கப்படவுள்ளதாகவும், மத அமைப்புக்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அயர்லாந்துத் திட்டம் மற்றும் விடுதலைப் புலிகளை அழித்தொ…

  4. கடந்த 1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது யாழ்ப்பாணம் பொதுநுலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்தத் தீவைப்புடன் அரசின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தொடர்புபட்டிருந்ததாகவும் குடிபோதையில் இருந்த சிங்கள சிப்பாய்கள் சிலரும் இதனுடன் தொடர்புபட்டிருந்ததாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கால கட்டத்தில் 16 மொழிகளில் புலமை வாய்ந்த தாவீது அடிகளார் யாழ். நூலகத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். எனினும் ஆராய்ச்சி முடிவில் நூலகம் எரிக்கப்பட்டதால் மனமுடைந்த அவர் உயிரிழந்தார். இவ்வாறு தெரிவித்தார் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தால் யாழ்ப்பாணம் பொது நுலகத்துக்கு ஒரு தொகுதி நுல்கள் கையளிக்கும் நி…

  5. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கொலை செய்தமைக்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரவீந்திரன் கிருஸ்ணபிள்ளை என்பவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியப் பிரஜையுடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தைத் தொடர்ந்து வாகனத்தில் குறித்த பிரஜையை மோதிக் கொன்றதாக இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இன்று காலை சார்ஜாவில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. துப்பாக்கியினால் சுட்டு குறித்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நட்டஈடு வழங்கி தண்டனையைக் குறைத்துக் கொள்ள ரவீந்திரனின் குடும்பத்தினர் முயற்சித்த போதிலும், கொலையுண்டவரின் குடும்பத்தினர் அ…

  6. யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழாவின் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தனது பாதணிகள் இரண்டையும் கழற்றிவைத்து மரியாதை செலுத்தியதை அவதானிக்க முடிந்தது. 300 மில்லியன் ரூபா நிதியில் 120 கட்டில்களைக் கொண்ட இந்த புற்றுநோய் வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக நேற்று ஞாயிற்றுகிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நாட்டில் 5 புற்றுநோய் வைத்தியசாலைகள் இருக்கின்றன. அதில் 5 ஆவதாக யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த வைபவத்தில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன,டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடா…

  7. மன்னார் மனிதப் புதைகுழியின் எல்லை எதுவரை உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளோம். புதைகுழியில் இருந்து தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் மட்டுமே மீட்கப்பட்டு வருகின்றன. பெரிய அளவிலான தடயப்பொருள்கள் எவையும் இதுவரை மீட்கப்படவில்லை. இதனால் இது குறித்த விவரங்களைக் கண்டறிய நீண்ட நாள்கள் எடுக்கும் இவ்வாறு தெரிவித்துள்ளார் மன்னார் மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள அனுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி டி.எல்.வைத்தியரட்ன. மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணி நேற்று செவ்வாய்க்கிழமை காலையும் மன்னார் நீதிவான் முன்னிலையில் இடம்பெற்றது. அனுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி டி.எல். வைத்தியரட்ன தலைமையிலான கு…

  8. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட தான் விருப்பத்துடன் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஏ.வி.சுரவீரவின் இறுதிக் கிரியைகள் மினுவங்கொட பொது மயானத்தில் நடைபெற்ற போது, அங்கு சென்றிருந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவரிடம் சந்திரிக்கா இதனை கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி உட்பட பல அமைச்சர்கள் இந்த இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்தனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி போட்டியிட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் சிரேஷ்ட ஆளும்கட்சி அமைச்சர் சந்திரிக்காவிடம் வினவியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலி…

  9. தேவ அச்சுதன், மாணிக்கப்போடி சசிகுமார் 'அன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்போது தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பலர் கையை கீறி இரத்த திலகம் இட்டார்கள். அவர்கள் எல்லாம் இன்று எங்கே சென்றார்கள்? அவர்களின் தற்போதைய நிலைதான் என்ன?' என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் கிழக்கு மாகாண ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். இதேவேளை, 'வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றுகின்றபோது மேடையின் முன்னால் அமர்ந்து இருந்து உணர்ச்சிவசப்பட்டு கையைக் கீறி இரத்த திலகம் இட்ட மட்டக்களப்பு மக்களுக்கு கிடைத்த பரிசு தியாகிகள் மற்றும் மாவீரர்கள் என்ற சொற்பதங்கள் மாத்திரம்தான்' என்றும் அவர் தெரி…

  10. ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜயவர்தன பியகம தொகுதி அமைப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க கொழும்பு மேற்கு தொகுதி அமைப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கொழும்பு தெற்கு தொகுதி அமைப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈரான் விக்ரதுங்க கொழும்பு கிழக்கு தொகுதி அமைப்பாளராகவும் கோட்டை தொகுதி அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் ஸ்ரீனாத் பெரேரா ரத்மலானை தொகுதி அமைப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மாத்தறை தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். (படங்கள்: பிரதீப் பத்திரன) http://tamil.dailymirror.lk/--main/…

  11. யாழ்., தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்துவைக்கப்பட்டது. படங்கள்: சுமித்தி தங்கராசா, ரொமேஷ் மதுசங்க http://tamil.dailymirror.lk/--main/97296-2014-01-19-11-21-37.html

    • 16 replies
    • 1.1k views
  12. "ஒரு உண்மைச் சம்பவம் காலத்தின் அவசியத்தினால் மிக அவசரமாக எழுத்துக்களால் மீண்டும் உயிர் பெறுகின்றது...!" ( உயிருக்குப்போராடிக் கொண்டிருக்கும் ஒரு நல் உள்ளத்தினை காப்பாற்றுவதற்காக ஒரு உண்மைச் சம்பவம் காலத்தின் அவசியத்தினால் மிக அவசரமாக எழுத்துக்களால் மீண்டும் உயிர் பெறுகின்றது...! ) கனடாவின் கரையைத்தொட்ட கடற்சூரியன் (MV SUNSEA) என்ற கப்பல் பற்றி யாவரும் அறிந்திருப்பீர்கள். அதன் எதிரொலி, அதில் சென்ற ஏதிலிகள் பற்றி அறிந்த யாவருக்கும் அதன் தொடுகையால் வாழ்வினை தொலைத்தவர்களை பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை. கடலில் கொந்தளிப்பு பற்றி அறிந்த உங்களுக்கு கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பால் கரையைத்தொட்டு பின் தரையில் அடங்காமல் இருக்கும் கொந்தளிப்பு பற்றி தெரியுமா...? இன்னும்…

  13. தேவாலயங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தேவாலயங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபடுவோர் குற்றச் செயல்களிலிருந்து தப்பித்துக் கொள்வதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் ஹிக்கடுவை பிரதேசத்தில் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன், தேசிய கிறிஸ்தவ தேவாலய பேரவை உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தூதரகப் பேச்சாளர் ஜூலியானா ஸ்பவன் தெரிவித்துள்ளார். …

  14. இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல என்ற கருத்தை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் தனித் தமிழ் ஈழத்திற்கான பயணத்தை ஆரம்பித்து விட்டார் என தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவர் ர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல. எனவே வரலாற்றை புதிதாக எழுத வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதற்கு இலங்கையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளும் சர்வதேச தேசிய அரச சார்பற்ற நிறுவனங்கள் விக்னேஸ்வரனுக்கு உதவிபுரிய ஆரம்பித்து விட்டது. இதற்காக இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல பல்லினங்கள் வாழும் நாடு என்ற வரலாற்றை எழுத அரச சார்பற்ற சக்திகள் ஆரம்பித்து விட்டன. இது கால வரையும் ஈழராஜ்ஜியத்தை ஆதரித்தவர் விக்னேஸ்வரன். அன்று நீதித்துறையில் இருக…

  15. யாழ் பொது நூலகத்திற்கு 1.2 மில்லியன் பெறுமதியான நூல்கள் கையளிப்பு - யாழ் பொது நூலகத்திற்கு ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தால் இன்று காலை 9.30 மணிக்கு ஒரு தொகுதி நூல்கள் கையளிக்கப்பட்டன. ஏசியா பவுண்டேசன் நிறுவனம் நூலகங்களை வலுப்படுத்தும் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில் இந்த வருடத்தின் ஆரம்பமாக யாழ் பொது நூலகத்துக்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள 284 புத்தகங்களை வழங்கியது. இந் நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர், யாழ் பொதுநூலகம் எரிக்கப்படுவதற்கு முன் 95 ஆயிரம் நூல்களை தன்னகத்தே கொணடடிருந்தது. ஆனால் 1981 ஆம் ஆண்டு துரதிஸ்ட வசமாக பெறுமதி வாய்ந்த பல நூல்கள் தீயினால் எரியுண்டன. இப்போது சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து வரும் யாழ் நூலகத்தின் வளர்ச…

  16. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால், இலங்கையைக் காப்பாற்றும் அரணாக சீனா இருக்கும் என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் வூ ஜியன்காவோ தெரிவித்துள்ளார். உள்ளக முரண்பாடுகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார மாற்றங்களை சீனா வரவேற்கிறது. இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். சீனா, இலங்கையின் நேச நாடு. என்றென்னும் நட்புடன் திகழும். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=101863&category=TamilNews&langu…

  17. நாவிதன்வெளி பிரதேசசபையின் உப தவிசாளர் அமரதாஸா ஆனந்தவை இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கும் கட்சியின் தீர்மானத்திற்கு கல்முனை மாவட்ட பதில் நீதவான் தாஹா செய்னுதீன் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.' கட்சி உறுப்புரிமையில் இருந்து அமரதாஸா ஆனந்த நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவினால் 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் 24 திகதியிட்டு அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருக்கும் உறுப்பினருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கட்சி அங்கத்துவ நீக்கத்திற்கு எதிராக அமரதாஸா ஆனந்த கல்முனை மாவட்ட நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவென தெரிவிக்கப்படாமலும் எந்…

  18. யாழ், மன்னார் ஆயர்களின் கருத்துகள் மற்றும் கத்தோலிக்க சபை வெளியிட்ட மேய்ப்பனின் அறிக்கையும் இலங்கையில் பிரிவினைவாதத்திற்கு துணை போவதாக தேசத்துரோகமானதாகவுமே அமைந்துள்ளன. எனவே, கத்தோலிக்க சபை பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் இல்லாவிட்டால் கத்தோலிக்க மக்களே நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கும் தர்மபால பரம்பரா (தர்மபால பரம்பரை) அமைப்பு வடக்கில் கத்தோலிக்க இராஜ்ஜியத்தை உருவாக்குவதற்காகவே எதிர்க்கட்சியில் உள்ளோரும் கத்தோலிக்க சபை முக்கியஸ்தர்களும் அரச தலைவருடன் நெருக்கத்தை ஏற்டுத்திக் கொண்டுள்ளனர். இந்த ஆபத்தை அரசு புரிந்துகொள்ள வேண்டுமென்றும் அவ்வமைப்பு தெரிவித்தது. கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள சௌசிரிபாய மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தர்மப…

  19. ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு உதவத் தயாராக உள்ளது என அந்நாட்டின் பிரதமரும் உதவித் தலைவரும் டுபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹமட் பின் ராஷித் அல் மக்தூம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமரிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் நிலைமைகளையும் கள யதார்த்தங்களையும் தாம் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளதாக ஷேக் முஹமட் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். இலங்கையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலீடுகளை அதிகரிப்பதற்கும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் Nஷக் முஹமட் தனது விருப்பத்தை தெரிவித்தார். ஜனாதிபதி ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை பா…

  20. -சுமித்தி தங்கராசா அமெரிக்காவினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் த ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி யாழ்.பொது நூலகத்திற்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான 284 நூல்கள் கையளிக்கப்பட்டன. இந் நூல்களை த ஏசியன் பவுன்டேசன் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஆர்.மகோர்ஸ் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் யாழ்.பொதுநூலக சிறுவர் பிரிவில் வைத்து செவ்வாய்க்கிழமை (21) கையளித்தார். இந்நிகழ்வில், யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, மாநகர ஆணையாளர் செ.பிரணவநாதன், த ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் டேவிட் ஆர்னோல்ட், த ஏசியன் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி டினேசா விக்கிரமநாயக்க, த ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் அமெரிக்க பிரதிநிதிகள், யாழ…

  21. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 42 பேர் ஈழத் தமிழர்கள் பல வருடங்களாக காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் விடுதலை வேண்டி நேற்றைய தினம் பல நாடுகளில் ஆஸ்திரேலிய அலுவலகங்கள் முன்னால் போராட்டம் இடம்பெற்றது. அந்தவகையில் யேர்மனியில் உள்ள ஆஸ்திரேலியா தூதரகத்தில் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையால் மனு கையளிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் இருந்து தொலைவில் நாம் வாழ்ந்தாலும் கடும் குளிரிலும் பனிமழை மத்தியிலும் எமது உறவுகளின் விடுதலைக்கு குரல் கொடுப்போம் எனும் உறுதியே இன்றைய கவனயீர்ப்பு நிகழ்வு அடையாளமாக அமைந்தது . தமிழ்நாட்டிலும் மனுக்கள் கையளிக்கப்பட்டன. அதேபோல லண்டனிலும் தமிழ் இளையோர் அமைப்பினர் மனுவினை கையளித்து தமிழ் அகதிகளின் விடுதலையை துரிதப்படுத்த…

  22. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏராளமான தமிழ் அகதிகளை ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு அனுப்பியதால், அவர்களுள் பலர் துன்பத்திற்கு ஆளாகி மடிந்தனர். எனவே, தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள 46 தமிழ் அகதிகளையும் அங்கிருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்ப விடாமல் தடுத்து, அவர்கள் உயிர்களைப் பாதுகாக்க உரிய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் ஆஸ்திரேலியா தூதரகத்தில் கோரிக்கை மனுவை கையளித்தனர். அங்கு சிறையில் வாடும் 46 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். மனுவை பெற்றுக் கொண்ட தூதரக அதிகாரி உடனடியாக ஆஸ்திரேலிய அரசுக்கு இது பற்றி எடுத்துக் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் . பொதுவாக வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் இன்னல் நீங…

  23. நேற்று திங்கட்கிழமை மாலை 4.30மணிக்கு லண்டனில் உள்ள ஆஸ்திரேலியாவின் அலுவலகத்திற்கு முன்னால் கனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பல ஆயிரக்கணக்கான அகதிகளில் 46 அகதிகள் சில ஆண்டுகளாக காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 42 பேர் ஈழத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அரசாங்கத்தினால் இவர்கள் கால வரையரையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவருக்குமே சிறிங்கா நாட்டில் உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அகதிகளுக்கான அந்தஸ்து என்ற நிலையை வழங்கியிருக்கின்றது. மேற்குறிப்பிட்டவர்களுள் குழந்த…

  24. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வகுப்புத் தோழியான பமேலா கே ஹமாமோடோ அம்மையாரே சமர்ப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த பெற்றி கிங் அம்மையார் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தூதுவராக பமேலா கே ஹமாமோட்டோ அம்மையாரின் பெயரை ஒபாமா பரிந்துரைத்துள்ளார். இவர் ஹவாயில் ஒபாமாவுடன் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்த தோழி என்பதுடன், இரண்டாவது பதவிக்காலத்துக்காக அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது நிதி சேகரித்தும் கொடுத்தவராவார். இவரை ஜெனிவாவுக்கான தூதுவராக ஒபாமா நியமித்துள்ள போதும், செனட் அங்கீகாரம் கிடைத்த பின்னரே அவர் பதவியேற்றுக் கொள்ள முடியும். இதற்கு முன்னதாக, 2012, 2013ம் ஆண்டுக…

  25. வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் ஏற்படும் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் இந்த மாதம் ஜெனிவாவிலும், புதுடெல்லியிலும் இரண்டு முக்கிய நகர்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 25வது அமர்வு வரும் மார்ச் 3ம் நாள் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு சிறிலங்கா இரண்டு முனைகளின் ஊடாக இந்த மாத இறுதியில் நகர்வுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. முதல் நகர்வாக சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.