Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த அமைப்புகளின் வன்முறைகள் குறித்து ஜெனிவாவில் உள்ள மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறையிடுவதற்கு சர்வதேச வை.எம்.எம்.ஏ அமைப்பின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். கொழும்பு ரோஸ்மிட் பிளேசில் உள்ள அஸ்ரப் ஹுசைன் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்திற்கு சட்டத்தரணி கௌசுல் அமீன் மற்றும் வைத்தியர் யூசுப் அஸ்ரப் அசீஸ், என்.எம்.அமீன், மௌலவி இஜ்லான் போன்ற 30இற்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், 1. 2012ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராகக் தொடுக்கப்பட்ட சம்பவங்களை பட்டியலிட்டு மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடல். 2. ஏனைய மத அமைப்புக்களோடு குறிப்பாக கிறிஸ்துவ, கத்தோலிக்க ஹிந்…

  2. ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவரும் கடைசியாக ௦இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனுமான விக்கிரம ராஜசிங்கர் வம்சத்தின் கடைசி வாரிசு பிருதிவிராஜ் வேலூரில் மரணமடைந்தார். இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்கிரம ராஜசிங்கர் 26 ஆண்டுகள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தார். போரின் இறுதியில் மன்னரும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவானார்கள். அவர்களை சிறைபிடித்த ஆங்கிலேயர்கள் வேலூர் கோட்டையில் 16.5 ஆண்டுகள் சிறை வைத்தனர். 1832ல் விக்கிரம ராஜசிங்கர் மரணம் அடைந்தார். அவர் புதைக்கப்பட்ட இடத்தில் பாலாற்றங்கரையில் 1990ல் முத்து மண்டபம் கட்டபட்டது. இலங்கையில் கடைசி வரை ஆங்கிலேயரை எதிர்த்த தமிழ் மன்னரின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த மண்டபம் கம்பீர சின்னமாக நிற்கிறது. மன்னரின் வம்…

  3. மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடை மழையினால் உன்னிச்சை மற்றும் உறுகாமம் ஆகிய குளங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குளத்தின் வான்கதவு வியாழக்கிழமை திறக்கபட்டதன் காரணமாக ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புருட்டுமான் ஓடை, பள்ளக்காடு, வண்ணாத்தியாறு மற்றும் மாவடி ஓடை ஆகிய பிரதேசங்களில் வெள்ளநீர் பெருகியுள்ளது. அத்தோடு மாவடி ஓடை பாலமும் வெள்ளநீரால் உடைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களை மீட்கும் பணியில் ஏறாவூர்பற்று பிரதேச செயலகம், பிரதேச சபை, தொப்பிகலை இராணுவத்தினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உறுப்பினர்கள் இணைந்து பொதுமக்களை பாதுகாப்பான இடத்திக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். http://www.virakesari.lk/…

  4. ஆலி - எல மொர­கொல்ல தோட்­டத்தின் மத்­தியில் பல­வந்­த­மாக புத்தர் சிலை ஒன்­றினை வைப்­ப­தற்கு முற்­பட்ட வேளையில் ஏற்­பட்ட மோதலில் இருவர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்­துடன் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் மேலும் இருவர் தேடப்­பட்டு வரு­கின்­றனர். மேற்­படி தோட்ட மத்­தியில், கிரா­மிய இளை­ஞர்கள் சிலர் புத்தர் சிலை­யொன்­றினை வைக்க முற்­பட்­டனர். இத­னை­ய­றிந்த தோட்ட மக்கள் எதிர்ப்­பினை தெரி­வித்த வேளையில் இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையே மோதல் ஏற்­பட்­டுள்­ளது. இம்­மோ­தலில் மொர­கொல்ல தோட்­டத்தைச் சேர்ந்த இருவர் காய­ம­டைந்­துள்­ளனர். இது தொடர்­பாக பதுளைப் பொலிஸ் நிலை­யத்தில் செய்­யப்­பட்ட புகா­ரை­ய­டுத்து, ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். மேலும் இ…

  5. அனந்தியை விட புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள் அரசாங்கத்துக்குள் நிறைய பேர் இருக்கின்றார்கள் - மனோ கணேசன் பிரிவினை உணர்வுகளை தூண்டும் விதத்தில் பரப்புரை செய்தார் என்று குற்றம் சாட்டி,மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வு அளிக்கும் யோசனையை முன் வைத்த நபருக்கு அங்கொடை வைத்தியசாலையில் மனநோய் மருத்துவம் செய்விக்க வேண்டும். இது சர்வதேச கண்டனத்தை தேடி கேட்டு வாங்கி பெறும் முட்டாள் யோசனையாகும். ஜனநாயக நடைமுறைகள் பற்றிய எந்தவித அறிவும் இல்லாத இராணுவ நபர்களை ஆலோசனை சொல்ல பக்கத்தில் வைத்து கொண்டால் அவர்கள் இப்படித்தான் யோசனை சொல்வார்கள். மேல்மாகாணத்தில் தேர்தல் நடத்த போகின்றீர்கள். வடக்கில் நடத்திய தேர்…

  6. பல்கலைக்கழக விடுதித் தாக்குதல், சிறிரெலோ அலுவலகத் தாக்குதல்களுக்கும் ஆவா குழுவுக்கும் தொடர்பு? இலங்கை இராணுவப் புலனாய்வு பிரிவினது, ஏவல்குழுவாக செயற்பட்டு வந்ததாக கருதப்படும் ஆவாக்குழுவினருக்கான விளக்கமறியல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்.கோப்பாய் பொலிஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்களெனக் கூறப்பட்ட 13பேர் இன்று யாழ்.மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் பன்னிருவர் தமது குற்றச்சாட்டுக்களை ஏற்க மறுத்ததால் அவர்களுக்கான பிணை மறுக்கப்பட்டதுடன் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட பதில் நீதிபதி திருநாவுக்கரசு முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் இலங்கை இராணுவத்தின் புலனாய்வ…

  7. அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் செய்தி தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில், 2009 ஜனவரியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிறிலங்கா படையினரின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று சென். அந்தனிஸ் மைதானம் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதுகுறித்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. எனினும் அது அமெரிக்காவின் அதிகாரபூர்வ நிலைப்பாடே என்று அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் கூறியிருந்தார். இந்தநிலையிலேயே, இது நியாயமற்றது என்றும், சோடிக்கப்பட்ட, …

  8. வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வு அளிக்க முற்பட்டால் அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பில் வெளியான செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இன்று இதனை அவர் தெரிவித்தார். அடுத்த மாதம் nஐனீவா கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கம் அச்சம் கொள்ளத்தொடங்கியுள்ளது. இதனாலேயே இங்குள்ளவர்களை அச்சுறுத்துகின்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது இதனொரு செயற்பாடாகவே இனத்திற்காக போராடி வருகின்ற அனந்தி சசிதரன் போன்றோரை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்கு முயற்சிகளை ம…

  9. ஐந்தாவது யாழ்ப்பாணச் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் இந்தியத் துணைத்தூதுவர் ஆற்றிய உரை. யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் ஐந்தாவது தடவையாகவும் பங்காளி நாடு என்ற தனித்துவத்தோடு கலந்துகொள்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இருநாடுகளிடையிலும் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தலில் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்படும் உயர் முன்னுரிமையை இது குறிக்கிறது. இலங்கையிலுள்ள இந்திய நிறுவனங்களின் பரந்துபட்ட இருப்பினால் இலங்கைப் பொருளாதாரம் பல நன்மைகளைப் பெற்றுள்ளது என்பது திண்ணம். அண்மைக் காலங்களில் பரந்து செல்லும் முதலீடு மற்றும் வர்த்தகத்துறைகளுள்ளிட்ட சுறுசுறுப்பான பொருளாதார வணிகத் தொடர்புகளை இலங்கையும் இந்தியாவும் பேணுகின்றன. 2000 ஆ…

  10. சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களை கைது செய்ய அவுஸ்திரேலியா உதவி சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களை கைது செய்ய அவுஸ்திரேலியா உதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் வியட்நாம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் வியட்நாம் காவல்துறையினர் முக்கிய சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களை கைது செய்துள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மூன்று இலங்கையர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த வாரத்தில் அவுஸ்திரேலியாவிற்கு எந்தவ…

  11. ஐந்தாவது தடவையாக நடைபெறும் யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, வடமாகாண முதலமைச்சர் அலுவலகம், கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சு, யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றம், இந்திய துணைத்தூதரகம், யாழ்.மாநகர சபை, இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் என்பன இணைந்து இக்கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தன. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்.மாவட்ட கிளையின் இந்திய துணைத்…

  12. முருகதாசன் நினைவு நாளில் ஐ.நாவின் துரோகத்தினை உலகிற்கு அம்பலப்படுத்துவோம் முத்துக்குமாரும் முருகதாசனும் தமிழ்ச் சமூகத்தின் இணையற்ற போராளிகள் இவர்கள் தினத்தில் களத்தில் நிற்போம். தொடந்து ஐ.நா செய்து வரும் துரோகம், இலங்கைக்கு மறைமுகமாக செய்துவரும் ஆதரவு ஆகியவற்றினை 2009, பிப் 12இல் உலகிற்கு உணர்த்தும் வகையில் ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சில் முன்பு தன்னைக் கொடுத்து உலகிற்கு உரைத்த வீரனின் தினத்தில், தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்லாமல் உலகின் ஒடுக்கப்ப்டுகிற இனங்களுக்காக குரல் கொடுத்த வீரனின் தினத்தில் முற்றுகை இடுவோம். கடந்த வருடம் தோழமை அமைப்புகளுடன் சென்னை, மும்பை (விழித்தெழு நண்பர்கள் இயக்கம்) , தில்லி , பெங்களூர், நியூயார்க், பாரீஸ் என பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி…

  13. விடுதலைப் புலிகளின் போரிடும் அணிகளிடம் இருந்து வெளிப்படையாக விலகியே இருந்தாலும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், போர்க் காலத்தில் மட்டுமன்றி போருக்குப் பிந்திய காலகட்டத்தில் அவரது பங்கு தொடர்பாகவும் தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக ஏதாவது குறிப்பிடத்தக்க தகவலின் அடிப்படையில் அனந்தி சசிதரன் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, அவரது கணவன் திருகோணமலை மாவட்ட அரசியல் தலைவராக இருந்தார் என்ற அடிப்படையிலேயே விசாரணை…

  14. சகோதர இனத்தின் உரிமைகளை பறித்து எடுப்பவர்களும், சகோதர மதத்து மக்களின் வழிபாட்டு உரிமைகளையும் மறுப்பவர்களும்தான் உண்மையான பிரிவினைவாதிகள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பிரிவினை உணர்வுகளை தூண்டும் விதத்தில் பரப்புரை செய்தார் என்று குற்றம் சாட்டி,மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வு அளிக்கும் யோசனையை முன் வைத்த நபருக்கு அங்கொடை வைத்தியசாலையில் மனநோய் மருத்துவம் செய்விக்க வேண்டும். இது சர்வதேச கண்டனத்தை தேடி கேட்டு வாங்கி பெறும் முட்டாள் யோசனையாகும். ஜனநாயக நடைமுறைகள் பற்றிய எந்தவித அறிவும் இல்லாத இராணுவ நபர்களை ஆலோசனை சொல்ல பக்கத்தில் வைத்து கொண்டால் அவர்கள் இப்படித்தான் யோசனை சொல…

  15. வடக்கின் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி இன்று காலை 10 மணியளவில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இக் கண்காட்சியில் யாழிலிருந்து 30 உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும் மற்றும் வெளியிலிருந்து 180 நிறுவனங்களும் பங்குபற்றவுள்ளதுடன் அனைத்து துறைகள் தொடர்பான பொருட்களும் காட்சிக்குட்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வாக கலந்துரையாடலொன்று இன்று காலை 9 மணியளவில் யாழ் பொதுசன நூலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம், வட மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், யாழ் மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் வங்கி முகாமையாளர்கள் வர்த்தகர்க…

  16. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து மாகாண சபை நிருவாகம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.தெல்லிப்பளையில் 300 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் வைத்தியசாலையை ஜனாதிபதி திறந்துவைக்கவுள்ளார். அத்துடன் புற்று நோய் புதிய சிகிச்சை கூடம் அமைப்பதற்கான அத்திவாரக் கல்லையும் ஜனாதிபதி நட்டவுள்ளார். மாத்தளை தொடக்கம் யாழ்.பருத்துறை வரையான நடைபயணத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியின் மூலம் புற்றுநோய் வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=890332…

  17. வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அவர் பரப்புரை செய்து வருவதாகவும், அதனைத் தடுப்பதற்காகவே அவருக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து ஆராயப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து தகவல் வெளியிடுகையில், “2009 மே மாதம் போரின் முடிவில் கைது செய்யப்படாதவர்கள் அல்லது சரணடையாதவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் புனர்வாழ்வு திட்டத்தை தவறவிட்டுள்ளனர். புனர்வாழ்வுத் திட்டத்தில் இருந்து த…

  18. லைக்கா குழுமம் தொடர்பாக தீபம் தொலைக்காட்சியில் வெளியான செய்தி ஜன 15, 2014 லைக்கா குழுமம் தொடர்பாக தீபம் தொலைக்காட்சியில் வெளியான செய்தி http://www.youtube.com/watch?feature=player_embedded&v=I4F6Ma73q_4 http://www.sankathi24.com/news/37505/64//d,fullart.aspx

    • 4 replies
    • 1.2k views
  19. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சு பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் வெளியுறவு அமைச்சராக,மஹிந்த சமரசிங்க நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனீவா மனித உரிமை பேரவை, மற்றும் தென், மேல் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மைத்திபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஆகியோருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதுபற்றிக் கலந்துரையாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய பிரதமர் …

  20. சில அரசியல் குழுக்களுடன் யாழ்நகரில் உள்ள யூரோவில் மண்டபத்தில் கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வு உண்மையானதேயாகும். ஆனால், அதன் நோக்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாறான ஓர் அமைப்பை உருவாக்குவதல்ல என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மிகக் குழப்பமான நிலையில் உள்ள யாழ்ப்பாணத் கள நிலைபற்றிக் கலந்துரையாடும் நோக்கில் சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய உட்படப் பல்வேறு அரசியல் கட்சிகளைச்சேர்ந்த பிரமுகர்களின் கூட்டமே அன்று நடைபெற்றது. இதில், ஈ.பி.டி.பியைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா, சிறி ரெலோவைச்சேர்ந்த உதயராசா, தமிழர் விடுதலைக்கூட்டணியைச…

  21. சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா திரட்டிய சாட்சியங்களைத் தம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் திரட்டிய தகவல்களை சிறிலங்காவுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்கத் தூதரக பேச்சாளர் ஜுலியானா ஏ ஸ்பவன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள பலதரப்பட்டவர்களுடனும், அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பரந்துபட்டளவில் தொடர்ச்சியான சந்திப்புகளை மேற்கொள்கின்றனர். நாம் அந்தச் சந்திப்புகளை வகைப்படுத்துவதில்லை. தூதுவர் ஸ்டீபன் ராப்பின…

  22. வியாங்கொடை நகரில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை திறந்துவைத்த போது பிடிக்கப்பட்ட படங்கள்: (பட உதவி: ஜனாதிபதி ஊடகப்பிரிவு) http://tamil.dailymirror.lk/--main/96980-2014-01-16-14-56-52.html

  23. மனிதாபிமான பிரச்சினைகளை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணிபுரிய அமெரிக்கா ஆர்வமாகவே இருந்தது என வெளியுறவுத்துறை துணை செய்தி பெண்தொடர்பாளர் மேரி ஹர்ப் கூறினார். மனிதாபிமான சீர்திருத்தங்கள் தொடர்பிலான இலங்கையின் நிலைப்பாடு குறித்து தனது கொள்கையை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யவேண்டும் என இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புதன்கிழமை நடைபெற்ற வெளியுறவுத்துறை செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த சிக்கல்கள் தொடர்பில் நாங்கள் ஒன்றாக வேலை செய்வதற்கு ஆர்வமாக இந்தோம்' என்றும் கூறியுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/96994-2014-01-16-17-23-12.html

  24. "எந்தவிதமான அரசியல் நிகழ்வுகளிலும் நான் பங்கேற்கவில்லை" இனந்தெரியாத நபர்கள் இலங்கை விஜயத்தின் போது பின் தொடர்ந்தனர் என கனேடிய எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிள்களில் இனந்தெரியாத நபர்கள் தாம் செல்லும் இடங்களை பின்தொடர்ந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை சென்றிருந்த போது வாகனத்தில் அழைத்துச் சென்ற சாரதியே, மோட்டார் சைக்கிளில் சிலர் பின் தொடர்வதனை அடையாளம் கண்டு அறிவித்தார் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஒர் நிலைமையை எதிர்பார்க்கவில்லை எனவும் இதனால் முதலில் பின்தொடர்வது குறித்து தாம் கவனத்திற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தம்மை கைது செய்ய வேண்…

  25. திருகோணமலை, உப்புவெளி பிரதேசசபை எதிர்கட்சித் தலைவரால் தாக்கப்பட்டு, காயமடைந்த உப்புவெளி காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நூலக கண்காட்சி கப்பல் திருகோணமலையில் நங்கூரமிட்டுள்ளது. இதனை பார்வையிடும் காலம் நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது. எனினும் நேற்று உப்புவெளி பிரதேசசபை எதிர்கட்சித் தலைவர் அத்துமீறி சென்று பார்வையிட முற்பட்ட போது காவற்துறையினருக்கும் அவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த காவற்துறை அதிகாரி மீது அவர் தாக்குதல் நடத்தினார். இதில் காயமடைந்த உப்புவெளி காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதேவேளை, உப்புவெளி பிரதேசசபையின் எதிர்கட்சித் தலைவர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.