Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத்தமிழர்கள் புலிகளோடு தொடர்புவைத்தாலும் பிரச்சனை - அரசோடு தொடர்புவைத்தாலும் பிரச்சனைதான்! - பிரான்ஸ் தமிழரது குடியுரிமை ரத்து! [sunday, 2014-01-12 09:09:29] News Service இலங்கை அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டதற்காக, ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அகதி தகுதி நிலையை பிரான்ஸ் மீளப்பெற்றுக்கொண்டுள்ளது. 2007 ம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அந்த ஈழத்தமிழர் 2008ம் ஆண்டு அகதியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தனது மனைவியை பிரான்சுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவிக்கு தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.இந்த குழந்தைகளுக்கு கடவுச் சீட்டு எடுப்பதற்காக அவர் பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு மூன்று தடவைகளுக்கு மேல்…

  2. சர்வதேச சட்டங்களுக்கு மாறாக இலங்கை போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு? சர்வதேச வர்த்தக சட்டங்களுக்கு மாறாக இலங்கை அரசாங்கம் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக அமெரிக்கா நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனி உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் அமெரிக்கா இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் என கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. ஐரோப்பிய நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதற்கு கொழும்பை தளமாக பயன்படுத்த இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளது என்றும் அரச உயர் அதிகாரிகள் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை இராஜதந்திரிகள் கூட இத…

  3. சீன கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்த கப்பல்களில் ஒன்றும் சீனன்குடா அஷ்ரப்பு துறைமுகத்திலும் மறற்றையது வெளித்துறைமுகத்திலும் நங்கூரமிட்டுள்ளன.Gin Chang Shang, Heng Suie ஆகிய சீன கப்பல்களே திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்த கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தபோது அங்கு ஏற்கனவே நங்குரமிடப்பட்டுள்ள லோஹோஸ் ஹோப் கப்பலில் சேவையாற்றும் தொண்டர்கள் சீன நாட்டு கொடிகளை அசைத்து குறித்த கப்பல்களை வரவேற்றனர். இந்த கப்பல்கள் மூன்று தினங்களுக்கு திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=101315&category=TamilNews&language=tamil

  4. 'மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் எடுக்கும் வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு செல்லாது' என்;று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார். பேச்சுவார்த்தை விடயத்தில் நாங்கள் பல தடவைகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு சென்றால் உலகத்திலேயே அதுபோன்ற முட்டாள் தனமான செயல் இல்லை என்றே கூறவேண்டும' என்றும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு, காந்திபுரம் கிராமத்தின் பத்தினி அம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு ஆலயமுன்றலில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும…

  5. கொழும்பு, வெலிக்கடை மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டோம். இந்நிலையில், அந்த கைதிகளின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிகின்றோம் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வெலிக்கடை மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேற்று சென்று பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட நால்வரடங்கிய குழு, கைதிகளுக்கான பொங்கல் பரிசுகளையும் கையளித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டது. அதன் பின்னர் அச்சந்திப்பு தொடர்பில் சிறைச்சாலைக்கு வெளியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இச்சந…

  6. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் ஈடுபட்டு வருவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரு-மான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்க-ளத்தினால் யுத்த பாதிப்புக்கள் தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டவுடன் உண்மைகள் வெளிவந்துவிடும் என்பதாலேயே இவ்வாறு குறித்த திணைக்களத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்க இந்தத் தரப்பினர் முயற்சிக்கின்றனர் என்றும் அவர் கூறினார். தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சியில…

  7. சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்க வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் மேற்கொண்ட முயற்சியை வெலிக்கடைச் சிறைச்சாலை அதிகாரிகள் முறியடித்து விட்டதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், சி.வி.விக்னேஸ்வரன், வெலிக்கடை,மகசின் சிறைச்சாலையிலும், பூசா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து வருகிறார். அரசியல் கைதகளை சந்தித்துப் பேசிசுவதற்காக முதல்வர் விக்னேஸ்வரன், நேற்று வெலிக்கடை மகசின் சிறைச்சாலைக்குச் சென்றார். பொங்கலை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்குவதற்காக அவர் உடை மற்றும் இனிப்புப் பலகாரங்கள் அடங்கிய பரிசுப் பொதிக…

  8. புலிகளின் இணக்கப்பாட்டுடன் இலங்கைக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு, போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராயும் அமெரிக்க பிரதிநிதி ஸ்டீபன் ராப் செயற்படுகின்றமை கேவலமான செயல் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். புலி ஆதரவுள்ள மதத் தலைவர்களையும், அரசியல் கட்சிகளையும் சார்ந்தோரையும் இரகசியமாகச் சந்தித்த ஸ்டீபன் ராப் தயாரித்துள்ள அறிக்கைகளை அவர்களைக் கொண்டே அதனை உறுதிப்படுத்திக் கொண் டுள்ளார் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. புலிகள் உபயோகித்த ஆயுதங்களையும் இலங்கை இராணுவம் தான் உபயோகித்தது என்றும் குற்றம்சாட்டியிருப்…

    • 15 replies
    • 1.6k views
  9. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் பிற்போடப்பட்டுள்ளது. முன்னதாக, இவர் கடந்த 10ம் நாள் சிறிலங்கா வருவார் என்று கூறப்பட்டது. பின்னர், அவர் இன்று கொழும்பு வரலாம் என்று தகவல்கள் வெளியாகின. எனினும், அவர் இன்று கொழும்பு வரமாட்டார் என்றும், அவரது பயணம் பிற்போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா வருவதற்கு முன்னர், அமெரிக்க உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், இந்தியா செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர முறுகலை அடுத்து, அவரது இந்தியப் பயணம் தாமதமடைந்துள்ளது. இதனால் நிஷா தேசாய் …

  10. ஹிக்கடுவையிலுள்ள தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 8 பிக்குகள் உள்ளிட்ட 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார். ஹிக்கடுவைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு தேவாலயங்கள் மீது 200 பேர் கொண்ட குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலின் போது பிக்குகளும் உடனிருந்துள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான அறிக்கை இன்று காலி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். எனினும், அடையாளம் காணப்பட்டுள்ள எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த அவர், நீதிமன்றின் உத்தரவுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவுக்கமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மே…

  11. கவிழ்ந்தது கூட்டமைப்பின் வலி.கிழக்கு பிரதேசசபை!! தமிழ் தேசியக்கூட்டமைப்பு வசமுள்ள வலி.கிழக்கு பிரதேசசபையின் வரவு-செலவுத்திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் இரண்டாம் வாசிப்பிற்குள்ளாக்கப்பட்ட நிலையில் ஆதரவாக தற்போதைய தவிசாளர் உள்ளிட்ட ஒன்பது பேர் வாக்களித்திருந்தனர். எதிராக கூட்டமைப்பு உறுப்பினர்கள் எழுவரும் ஈபிடிபி சார்பு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜந்து உறுப்பினர்களுமாக பன்னிருவர் எதிராக வாக்களித்திருந்தனர். முன்னதாக வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையினில் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்களிப்பினை எதிர் தரப்புகளிற்கு அழைப்பிதழ் ஏதும் அனுப்பாது நடத்தியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களையடுத்து இன்று …

  12. பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்: வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மகஸின் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அத்துடன் தனது பொங்கள் வாழ்த்துக்களையும் கைதிகளுக்கு தெரிவித்திருக்கிறார். வட மாகாண சபைத் தேர்தல் காலத்தில் தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வட மாகாண சபை குரல் கொடுக்கும் என்பதுவும் ஒன்றாகும். ஆந்த வகையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் கைதிகளை சந்தித்த முதல் நிகழ்வாக மகசீன் சிறைச்சாலைச் சந்திப்பு அமைகிறது. http://www.globalta…

  13. மாகாண சபைத் தேர்தலில் களம்இறங்குவதன் மூலம் தனது கோபாவேசத்தை தணித்துக்கொண்டார்- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மத்தி அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வழங்கியுள்ளார். ஜனாதிபதியுடனான விசேட சந்திப்பில் இந்த நியமனத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளார். தனது தந்தையின் கொலைக்கு பரிசாக மக்கிய கொழும்பு அமைப்பளர் பதவியையும், மாகாயண சபை வேட்பாளர் தெரிவையும் பெற்று அரசாங்கத்திற்கு எதிரான தனது கோபத்தை தணித்துக் கொண்டார். இந்த நிலையில் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தல்களிலும் ஹிருனிகா பிரேமசந்திர போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. http://www.globaltamiln…

  14. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிக்கொண்டுள்ள ஆனந்தசங்கரி மற்றொரு புதிய கூட்டமைப்பினை உருவாக்க முற்பட்டுள்ளார். அவரது முன்னாள் அரசியல் எதிரிகளுள் ஒருவரான டக்ளஸ் தேவானந்தா தரப்பு உள்ளிட்ட வௌ;வேறு கட்சிகள் கூட்டு சேர்ந்து இப்புதிய கூட்டமைப்பினை உருவாக்க ஏற்பாடாகியுள்ளது. புதிய கூட்டமைப்புத் தொடர்பான முதலாவது கலந்தாய்வுக் கூட்டம் நல்லூரினில் இன்று இடம்பெற்றிருந்த போதும் நீண்ட இழுபறிகளுடன் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் ஈபிடிபி சார்பில் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டிந்தனர். தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் அதன் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரியும் சிறீடெலோ சார்பினில் அதன் செயலாளர் நாயகம் உதயராசா மற்றும் யாழ்.மாவ…

  15. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா: சுட்டணி அமைப்பது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கட்சிகளின் கூட்டத்தில் பேசவே இல்லை என சிறிடெலோ கட்சியின் செயலதிபர் ப. உதயராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நான்கு தமிழ் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இவ் விடயம் தொடர்பாக தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி, தமிழர் விடுதலைக்கூட்டணி, சிறிடெலோ கட்சி ஆகிய நான்கு கட்சிகளின் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது உண்மையான விடயமே. ஆனால் அந்த சந்திப்பின் போது கூட்டணி அமைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டவில்லை. அது தொடர்பில் கலந்துரையாடுவது தொடர்பாக எவரும் கருத்தை முன்வைக்கவும் இல்லை. …

  16. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்கற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க மேற்கொள்ள முயற்சி தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திங்கட்கிழமை அதிகாலை கொழும்பு சென்ற ஸ்டீபன் ராப் நேற்று வரையான ஆறு நாட்கள், சிறிலங்காவில் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இவர் சிறிலங்காவுக்கு செல்வதற்கு முன்னரே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க நேரம் ஒதுக்கித் தரும்படி, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு மூலமாக கோரியிருந்தார். எனினும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடைசி வரை ஸ்டீபன் ராப்பை சந்திக்க நேரம் ஒதுக்கிக் கொடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. …

  17. இலங்கையை பிறப்படமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர்:- ஏழு மாத ஆண் குழந்தை, மற்றும் ஒரு ஐந்து வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு இளம் குழந்தைகளின் சடலங்களையும் அவர்களின் தாயாரது சடலத்தையும் பிரித்தானிய பொலிசார் மீட்டுள்ளனர். நேற்றைய தினம் வியாழக்கிழமை (09.01.14) பிற்பகல் லண்டன் நேரம் 5.20ற்கு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து வடமேற்கு லண்டன் Woodgrange Close பகுதிக்கு சென்ற பொலிசாரே இந்த சடலங்களை மீட்டுள்ளனர். இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட 33 வயதுடைய ஜெயவாணி வாகேஸ்வரன் என்ற இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த பின் தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும், தாயினுடைய மரணம்…

  18. இலங்கை ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்தியாவின் ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் வாரம் அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் இயங்கும் தேசிய மீனவர்கள் சம்மேளனம், சுப்ரமணியன் சுவாமியை சந்தித்து மனு ஒன்றை கையளித்துள்ளது. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் பிரதான கட்சிகளாக அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மற்றம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பன, மீனவர்களின் விடயத்தை அரசியல் நலனுக்காக பயன்படுத்துகின்றன. இந்த நிலையிலேயே மீனவர்கள் ச…

  19. நாட்டின் உத்தியோகப்பற்றற காவல்துறையாக இயங்கப் போவதாக சிங்கள ராவய அமைப்பு அறிவித்துள்ளது. ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்படும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக பேரணி ஒன்றை நடாத்த உள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் அக்மீமமன் தயாரட்ன தேரர் தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையிலிருந்து கொழும்பு வரையில் விசேட பேரணியொன்று நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பாரியளவிலான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க நிறுவனங்கள் பாரியளவில் நட்டமடைவதற்கு வீண் விரயம் மற்றும் ஊழல்…

  20. – TNA யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்நாட்டு பொறிமுறைமையிலான தீர்வுத் திட்டமொன்றின் மூலம் நியாயம் கிட்டும் என்பதில் நம்பிக்கை கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யுத்தத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு அரசாங்கத்தின் உள்ளகத் தீர்வுத் திட்டம் பொருத்தமாகும் என்பதில் நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நம்பகமானதும் பக்கச்சார்பானதுமான உள்ளக விசாரணைகளை அரசாங்கம் நடாத்தும் என்பதில் நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தக் காலச் சம்பவங்கள் தொடர்பில் அறிந்து கொள்ளும் உரி…

  21. கடவுச் சீட்டுக்களில் கைவிரல் அடையாளம் பதியப்பட உள்ளது கடவுச் சீட்டுக்களில் கை விரல் அடையாளம் பதியப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் வழங்கப்படும் கடவுச் சீட்டுக்களில் கைவிரல் அடையாளம் பதியப்பட உள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூளாந்த பெரேரா தெரிவித்துள்ளார். பயோமெற்றிக் தகவல்களை திரட்டும் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் ஆரம்பமாகும் என குறிப்பிட்டுள்ளார். கைவிரல் அடையாளங்களை கடவுச் சீட்டுக்களில் உள்ளடக்கும் யோசனைத் திட்டம் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த திட்டத்திற்கான விலை மனுக்கோரல் கோரப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடவுச் சீட்டு தயாரிக்கப்பட உள்ளத…

  22. எதிர்வரும் மாகாணசபை தேர்தலில், எதிர்கட்சி வரிசையில் இருக்கின்ற பிரபல கட்சிகளான சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி, ஜேவிபி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்து போட்டியிடலாம். இதற்காக யானை சின்னத்தை கைவிட்டு பொது சின்னத்தை ஏற்றுக் கொள்ள நாம் தயார். ஆனால், சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி, ஜேவிபி ஆகிய கட்சிகள் இந்த யோசனைக்கு இதுவரையில் உடன்படுவதாக தெரியவில்லை. இந்த கட்சிகளும் நம்முடன் கூட்டிணைவார்களாயின், நாம் ஒன்று சேர்ந்து இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கலாம். நீங்கள் இந்த கட்சிகளுடன் இதுபற்றி உரையாட வேண்டும். இது நடக்குமானால் 2010ஆம் வருட ஜனாதிபதி தேர்தல் காலத்தை காலத்தையொட்டிய எதிரணி கூட்டணியை ஏற்படுத்தலாம் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் வி…

  23. நீதி வேண்டும் என்றால் போராட வேண்டும், அந்த போராட்டத்தில் உலக மக்களையும் இணைத்து கொண்டு செல்ல வேண்டும் - மக்கள் போராட்டங்கள் விடுதலைக்கான பாதையை அகல திறந்து விடும் என்ற கருத்திற்கு இணங்க இன்று பாரிஸில் குர்திஸ்தான் மக்களின் நீதிக்கான போராட்டம் உதாரணமாக இருந்தது. 9 ஜனவரி 2013யில் பாரிஸ் நகரில் படுகொலை செய்யப்பட்ட 3 பெண் குர்திஸ்தான் அரசியல் செயல்பாட்டாளர்கள், சக்கின், ரோச்பின், லைலா ஆகியோரின் ஒரு ஆண்டு நினைவு இன்று நடைபெற்றது. 50,000க்கும் மேற்பட்ட மக்கள், எழுச்சியுடன் பங்குபற்றிய இந்த ஊர்வலத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், மனிதநேய அமைப்புகள், விடுதலை அமைப்புகள் பங்கு பற்றினர். குர்திஸ்தான் மக்கள் பிரதிநிதிகளின் படுகொலை செய்யப்பட்டது போல், பார…

  24. டுவிட்டரில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசனை அழைத்து கண்டிக்கும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் கைவிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரணைப்பாலை சென்.அந்தனீஸ் மைதானத்தை, 2009 ஜனவரியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று அமெரிக்கத் தூதரகத்தினால், டுவிட்டர் பதிவு ஒன்று கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தப் பதிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, அமெரிக்க தூதரகத்தின் அதிகாரபூர்வ வலைப்பதிவில் இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்…

  25. வீடுகளின் மீது கல்லெறிந்த படையினருடன் மக்கள் நியாயம் கேட்டுத் தர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் பெரும் களேபரம் மூண்டது. இதனையடுத்துப் பொலிஸாரின் முன்பாகவே கொலை செய்துவிடுவோம் என்று இராணுவத்தினர் தம்மை மிரட்டினர் என்று மக்கள் தெரிவித்தனர். வட்டு வடக்கு, பிளவத்தைப் பகுதியில் நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பெரும் அச்சநிலை தோன்றியுள்ளதுடன், இரவு முழுவதும் பதற்மான சூழலே நிலவியது. பின்னனி குறித்த பகுதியிலுள்ள கேணியடியின் பின்பாக இராணுவ முகாம் அமைந்துள்ளது. குறித்த முகாமைச் சுற்றிலும் பொது மக்களின் வீடுகள் காணப்படுகின்றன. முகாமிலுள்ள இராணுவச் சிப்பாய்கள் அயலிலுள்ள வீடுகளில் பெண்கள் குளிக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.