ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
இலங்கையில் ஐ.நா முறைமையானது முழுமையான தோல்வியை கண்டதென ஐக்கிய நாடுகள் கூறியிருக்கின்றது. 'இலங்கை பற்றிய உள்ளக மேற்பார்வைக்குழு ஐ.நா முறைமையானது முழுமையாக தோல்வி கண்டுள்ளதெனவும் நாம் கூடுதல் நெகிழ்ச்சித் தன்மையுடன் இயங்கி விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறியது உங்களுக்கு ஞாபகமிருக்கும்' என பிரதி செயலாளர் நாயகம் ஜன் எலியன்ஸன் நியூயோர்கில் ஐ.நாவின் புதிய 'நேருக்கு நேர்' ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். ஐ.நாவுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை செயற்படுத்த தேவையான ஆதரவு ஐ.நா செயலகத்துக்கும், அதன் நிதி மற்றும் திட்டங்களுக்கும் வழங்கப்படவில்லை என சென்ற வருடம் வெளிவந்த இந்த உள்ளக மேற்பார்வை குழு அறிவித்திருந்தது என அவர் தூதுகுழுவினர…
-
- 0 replies
- 450 views
-
-
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிட முடியாது. கத்தோலிக்க திருச்சபை அதனை முழுமையாக எதிர்க்கிறது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். கத்தோலிக்க ஆயர் பேரவை ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாட்டு மக்களுக்கான நத்தார் செய்தியை உத்தியோகபூர்வமாக வெளியிட்ட பேராயர் இக்காலகட்டங்களில் மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் தொடர்பிலும் பதிலளித்தார். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இது தொடர்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவிக்கையில்: சில நாடுகளில் பிரச்சினைகளை உருவாக்கி அந்நாடுகளில் தலையிடுவதற்கு வாய்ப்பாக்கிக் கொள்ளும் கைங்கரியமான நடவடி…
-
- 0 replies
- 410 views
-
-
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியின் தன்னிச்சையான - மாகாணசபை சட்டங்களை மீறிய செயற்பாடுகளால் அங்கு எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் அடுத்த கட்டநகர்வுக்கான முடிவை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் எதிர்வரும் 24ஆம் திகதி வவுனியாவில் ஒன்றுகூடவுள்ளனர். இதன்போது, தமிழர் தாயகத்தில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, அரசியல் தீர்வு நடவடிக்கையில் அரசு காட்டும் அசமந்தப் போக்கு ஆகியவை உட்பட முக்கிய விடயங்கள் தொடர்பிலும் தீர்க்கமான முடிவு ஒன்று எடுக்கப்படும் என்றும் கூட்டமைப்பு வட்டா ங்கள் தெரிவிக்கின்றன. வவுனியா நகரசபை மண்டபத்தில் காலை 9 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த முக்கிய சந்திப்பில் …
-
- 0 replies
- 674 views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போர் முடிவுற்ற நிலையில் இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தமிழ் கட்சி கூட்டணி வெற்றி பெற்று மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது, அக்கட்சியின் முன்னணி தலைவரான விக்னேஸ்வரன் முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். வடக்கு மாகாணத்தின் கவர்னராக ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ உள்ளார். அவர் வடக்கு மாகாண நிர்வாகத்தில் நேரடியாக தலையிட்டு வருகிறார். இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்னேஸ்வரன் பணியாற்ற முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கவர்னருக்கும் முதல்–அமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் அதிருப்தி அடைந்த விக்னேஸ்வரன் முதல்–அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இது குறித்து …
-
- 5 replies
- 1.1k views
-
-
பலாலி விமானநிலையத்தை வர்த்தக நடவடிக்கைக்காக திறக்க வேண்டும் - இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை! [Friday, 2013-12-20 10:37:24] பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன் துறை துறைமுகம் என்பவற்றை வர்த்தக நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறந்து விட வேண்டும் இலங்கை அரசாங்கத்திடம் யாழ்.வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு பலாலியில் இருந்து இந்தியாவிற்காக விமான சேவையினையும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமாகாண வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண வர்த்தக அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. பலாலியில் இருந்து இந்தியாவிற்காக விமான சேவையினை ஆரம்பிப்பதன் மூலம் வர்த்தகர்கள் தமக்கு தேவையான வர்த்தகப் …
-
- 0 replies
- 552 views
-
-
மத்திய அரசுடன் மட்டுமல்லாது மாகாண அரசுடனும் இணக்க அரசியலை முன்னெடுக்கவே விரும்புகின்றோம். இணக்க அரசியல் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென்பதை நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம். அதனொரு கட்டமாகவே யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களுக்கு வடக்கு மாகாண முதலமைச்சருக்கு நாம் அழைப்பு விடுத்திருந்த போதிலும் தவறான புரிந்துணர்வு காரணமாக அவர்கள் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லையென தெரிவித்துள்ளார் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.இன்றைய தினம் இடம் பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதனிடையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை இன்றைய தினம் தமது தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடி…
-
- 0 replies
- 509 views
-
-
கொழும்பின் புறநகர் பகுதியான தேஹிவளையில் தொழுகை நடத்தப்படக் கூடாது என்று காவல்துறையால் எச்சரிக்கப்பட்ட மூன்று பள்ளிவாசல்களில் ஒன்று கல்வீச்சுக்கு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது தெஹிவளையிலுள்ள மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடத்த வேண்டாம் என்று காவல்துறையினர் கூறியிருந்தனர். கடந்த செவ்வாய் காலை தொழுகை நேரத்துக்கு சற்று முன்னர் காவல்துறையினர் அந்த குறிப்பிட்ட பள்ளிவாசல்களில் தொழுகையை நடத்த வேண்டாம் என்று சொல்லியதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பள்ளிவாசல்கள் முறையான அனுமதியை பெறவில்லை என்று காவல்துறையினர் கூறியதாகவும், ஆனால் தாம் முறையான அனுமதியை பெற்றிருப்பதாகவும் தெஹிவளை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளரான முஹமட் தாஹிர் மௌலவி தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 542 views
-
-
இலங்கையின் இனத்தவர்கள் உலகத்தின் முன்னால் ஆபத்தான சீர்கெட்ட இனத்தவராக மாறி வருகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் இனத்தவர்கள் என்றும் உலகத்தினருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வந்தனர். ஹெரோயின் போதைப் பொருள் போன்ற ஒழுக்க கேடான நடத்தைகள் நாட்டில் சடுதியாக பரவி வருவதால் உலகத்தினர் முன்னால் சீர்கெட்ட இனமாக மாறியுள்ளனர். இலங்கையில் ஹெரோயின் போதைப் பொருள் என்ற தொற்று நோய் பரவியுள்ளமையானது இலங்கையை ஆசியாவின் ஹெரோயின் போதைப் பொருளின் அதிசயமாக மாற்றியுள்ளது. உலக நாடுகளுக்கு ஹெரோயின் போதைப் பொருளை விநியோகிக்கும் நிலையமாக இலங்கை முத்திரை குத்தப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளின்…
-
- 1 reply
- 658 views
-
-
(ஜே.ஜி.ஸ்டீபன் - ப.பன்னீர்செல்வம்) இராவணேஸ்வரன் தமிழனா - சிங்களவனா? இலங்கை இந்து நாடா? பௌத்த நாடா? என்பது தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான சீ.யோகேஸ்வரனுக்கும் இடையில் இன்று சபையில் கடும்வாதம் ஏற்பட்டது. இலங்கை இந்து நாடு என்றும் சிவபக்தனான இராவணேஸ்வர மன்னன் இலங்கையை அரசாட்சி புரிந்ததாகவும் கூறி வரலாறுகளை எடுத்துக்காட்டிப் பேசினார். இதன்போது யோகேஸ்வரன் எம்.பி.யின் எடுத்துக்காட்டல்களை உடனடியாக மறுத்துரைத்த அமைச்சர் மேர்வின் சில்வா, யோகேஸ்வரன் எம்.பி.யின் கருத்துக்கு மாறான வாதத்தை முன்வைத்து இதிகாசங்களையும் சுட்டிக்காட்டினார். இதன்போது இராவணேஸ்வரன் மன்னன் சிங்களவன் என்றும் இலங்கை பௌத்த நாடு என்றும்…
-
- 13 replies
- 3.7k views
-
-
இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது இஸ்ரேல்; பிரதிநிதிகள் இலங்கையில் தங்கியிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். என்ன காரணத்திற்காக இஸ்ரேலிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்தார்கள் என அவர் கேள்வி எழுபியுள்ளார். விசேட தனியார் விமானமொன்றில் குறித்த இஸ்ரேலிய முக்கிய பிரபுக்கள் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடைபெற்ற காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்து தங்கியிருந்தனர் எனவும், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று பிரித்தானியாவின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தன…
-
- 0 replies
- 717 views
-
-
இரணைமடு குளம் கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர்த் தேவைக்காகத் தண்ணீரைக் கொண்டு செல்லுகின்ற பல மில்லியன் ரூபா செலவிலான திட்டமானது பல வழிகளிலும் கிளிநொச்சி மாவட்டத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தில் காணப்படுகின்ற கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்குப் பாதகமான பல விடயங்கள் குறித்து வடமாகாண சபை கவனத்தில் கொள்ளவில்லை என்று கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் சம்மேளத் தலைவர் செ.சிவப்பிரகாசம் புதனன்று கிளிநொச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குற்றம் சுமத்தியிருக்கின்றார். 'இந்தத் திட்டம் பற்றி கிள…
-
- 2 replies
- 867 views
-
-
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசு தடை செய்ய வேண்டும். வடக்கில் கூட்டமைப்பு ஆட்சியிலிருக்கும் வரை அங்கிருந்து இராணுவத்தை அகற்றவே கூடாது'' என்று நாடாளுமன்றில் நேற்று வலியுறுத்தினார் பிரதியமைச்சர் சரத் வீரசேகர. புலிகளை அழித்த கையோடு கூட்டமைப்பையும் தடை செய்யாதது தாம் விட்ட தவறு என்றும் முன்னாள் போராளிகளைப் போல் இவர்களையும் கைதுசெய்து புனர்வாழ்வு அளித்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று நடை பெற்ற தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அமைச்சுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரபாகரனைத் "தேசிய வீரன்' என்று கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர் ஒருவர் இந்தச் சபையில் பேசுகின்றார். குறிப்பாக, ஹிட்லர்…
-
- 0 replies
- 550 views
-
-
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சேவையினைப் பெறும் போது மொழி பிரச்சினை ஏற்படுவதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண மக்களின் மொழி உரிமையை உறுதிப்படுத்தும் வகையிலேயே பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர். கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை 892 தமிழ் பொலிஸ் அதிகாரிகள் வடக்கு கிழக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் 1,500 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் வடக்கு-கிழக்கில் பணியாற்றி வருகின்றனர். மேலும் தமிழ் மொழி மூலம் பொலிஸ் நிலையங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 240 உதவி பொலிஸ் அதிகாரிகள் களுத்துறை பொலிஸ் பயிற்சி நிலை…
-
- 0 replies
- 437 views
-
-
‘கடும் முறுக்கு தெறிக்கும்’ என்பது முதுமொழி. மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் செய்யும் பித்தலாட்டத்திற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டமாதிரியான ஒரு உணர்வு பாதிக்கப்பட்ட தமிழர்களிடையே துளிர்விட்டுள்ளதை அவதானிக்கலாம். இதற்கு, ஜேர்மனியில் மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணையின் இறுதியில் ‘ஈழத்தில் நடைப்பெற்றது இனப்படுகொலையே, இந்தியா உதவியது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல’ என ஜேர்மனியில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வழங்கியுள்ளமை ஒவ்வொரு தமிழரையும் நெஞ்சாறச் செய்துள்ளது. அதிலும், தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பில், 1) சிங்கள அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது. 2) தமிழீழ இனப்படுகொலைக்கு அ…
-
- 2 replies
- 945 views
-
-
அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புகைப்படங்கள் இருப்பின், ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என ஆட்பதிவு திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார். நேற்று (13.12.13) மாலை மட்டக்களப்பு – கல்லடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்படி புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முஸ்லிம்கள், கிறிஸ்தவ அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் தமது மதத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பி மற்றும…
-
- 16 replies
- 1.2k views
-
-
-சுப்புன் டயஸ் ஐந்து வருடங்களில் சகல பொலிஸ் நிலையங்களிலும் பொதுமக்களுடன் தமிழ், சிங்கள மொழிகளில் கருமமாற்றுவது தங்களுடைய இலக்காக உள்ளதென பொலிஸ் திணைக்களம் நேற்று புதன்கிழமை கூறியது. 2008 ஆம் ஆண்டிலிருந்து 1500 சிங்கள மொழி பொலிஸ்காரர்களும் 892 தமிழ் மொழி பொலிஸ்காரர்களுக்கும் மொழிப்பயிற்சி வழங்கபபட்டதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது. மக்களுக்கு சிறந்த சேவையற்றுவதற்கு மொழி தடையாக அமைவது யுத்தம் முடிவதங்கு முன்னரே இனங்கானப்பட்டது. இந்நிலையில் யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் மொழி தெரிந்த பொலிஸார் கூடுதலாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் நியமிக்கப்பட்டனர். இப்போது வடக்கு கிழக்கில் மக்களின் முறைப்பாடுகள் தமிழில் பதியப்படுகின்றன இது பெரிய சாதனையாகும். இன்னும் 5 வருடங்களில் சகல பொல…
-
- 2 replies
- 442 views
-
-
ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரான தம்மிக்க பிரேமலால் ரைகம என்பவர் ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ மேஜர் மற்றும் வர்த்தகர் ஒருவர் ஊடாக 35 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த தங்க கிரீடத்தை உடனடியாக தன்னிடம் கொண்டு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 800 வருடங்கள் பழமையானது எனக் கூறப்படும் இந்த கிரீடத்தை ஜப்பான் பிரஜை ஒருவருக்கு விற்பனை செய்ய முயன்ற போது பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அதனை கைப்பற்றியதுடன் முன்னாள் இராணுவ அதிகாரி உட்பட இரண்டு பேரை கைது செய்தனர். மாணிக்க கற்கள் பதிக்கப்பட்ட அந்த கிரீடத்தை தான் பார்க்க வேண்டும் எனவும் உடனடியாக அதனை எடுத்து வரு…
-
- 1 reply
- 556 views
-
-
ஒலுவில் துறைமுக அபிவிருத்தி நிர்மாணப் பணிக்காக சட்டப்படி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களில் இருவருக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட காசோலைகளுக்கான பணம் நிறுத்தப்பட்டுள்ளது. ஒலுவில் துறைமுக திறப்பு விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த செப்டெம்பர் முதலாம் திகதி நடைபெற்றது. இதன்போதே குறித்த இரண்டு உரிமையாளர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்; காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. 31.08.2013ஆம் திகதியிடப்பட்ட மக்கள் வங்கி கிளையின் இந்த காசோலைகளில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் மற்றும் நிதி உதவியாளர் ஆகிய இருவரும் கையொப்பமிட்டுள்ளனர். எனினும், குறித்த காசோலைகளை வங்கியில் வைப்பிலிட்டபோது குறித்த காசோலைக்கான பணம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 417 views
-
-
யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் வருகைதர மாட்டார்கள் என யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி பல்கலை நிர்வாகத்தினருக்கு உறுதியளித்துள்ள நிலையில் இன்று ஆயுதம் தரித்த சீருடையினர் இருவர் பல்கலை வளாகத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்று மதியம் 2.30 மணியளவில் ஆயுதம் தரித்த சீருடையினர் இருவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருகை தந்ததுடன் கைலாசபதி அரங்கத்திற்கு முன்னால் உள்ள நினைவுத்தூபியினையும் சுற்றிப்பார்த்து விட்டு சென்றுள்ளனர். சம்பவம் குறித்து உடனடியாக பதிவாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன் குறித்த சீருடையிரிடம் வளாகத்திற்குள் ஏன் நுழைந்தீர்கள் என்று கேட்ட போது மேலிடத்து உத்தரவின் பேரிலேயே தாங்கள் வந்ததாக கூறிவிட்டு சென்ற…
-
- 8 replies
- 1.3k views
-
-
மலேசியாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வொன்றை ஒழுங்கு செய்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் 5 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். சரணடைந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக 1948 ஆம் ஆண்டு தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக மலேசிய பொலிஸ் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபுபக்கர் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை அனுஷ்டிக்க இந்த அரசசார்பற்ற நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தாக அவர் குறிப்பிட்டார். வன்முறை சார்ந்த நடவடிக்கைக்கு மக்களின் செல்வாக்கை இந்த அமைப்பு பெற முயற்சித்துள்ளது. நாட்டு மக்களுக்கு பயங்கரவாதம் மீது நம்பிக்கை கொள்ள வைப்பதற்கான முயற…
-
- 2 replies
- 535 views
-
-
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி கல்வி அமைச்சினால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு றோயல் மற்றும் விசாகா கல்லூரிகளுக்கு நுழைவதற்கான வெட்டுப்புள்ளிகளே அதிகமாகும். கொழும்பு-7 டி.எஸ்.சேனாநாயக்கான வெட்டுப்புள்ளி 175 ஆகும். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/93542-2013-12-17-11-01-07.html
-
- 9 replies
- 833 views
-
-
எம்.டி.லூசியஸ் சட்டவிரோதமான முறையில் எத்தனோல் அடங்கிய கொள்கலன்களை இறக்குமதி செய்த சம்பவத்துடன் பிரமதர் டி.டிம்.ஜயரட்னவின் அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றது. எனினும் பிரதமரை பதவி விலக்குவது தொடர்பில் அரசாங்க மட்டத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தார் பெரல்கள் அடங்கிய கொள்கலன்கள் என அடையாளப்படுத்தப்பட்டு கடந்த மாதம் 27ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்டிருந்த 82 மில்லியன் ர…
-
- 2 replies
- 347 views
-
-
இராணுவத்திற்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் வடமாகாண சபைக்கு இல்லை - ஜெனரல் உதய பெரோ:- இணைப்பு 2 02:12 வடமாகாண சபையின் கட்டளைகளை இராணுவம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என கிளிநொச்சி இராணுவ கட்டளை தளபதி ஜெனரல் உதய பெரோ கூறியுள்ளார். போருக்கு பயன்படுத்தப்பட்ட இராணுவத்தை தற்போது அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். சிங்கள நாளேடு ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் கருத்து வெளியிட்டுள்ள ஜெனரல் உதய பெரேரா முப்படைகளின் நடவடிக்கைகள் சுதந்திரமானவை எனக் கூறியுள்ளார். தளபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முப்படைகளுக்கும் தளபதியாக இருக்கும் நிலையில் வடமாகாண சபை கட்டளைகளை பிறப்பிக்க முடியாது. தேவையான காணிகளை எடுப்பதற்கும் முகாம் அமைப்பதற…
-
- 3 replies
- 712 views
-
-
ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வீசா வழங்க கனடாவும் மறுப்புத் தெரிவித்துள்ள விவகாரம் தற்போது தெரியவந்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், 58வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, போர்க்குற்றங்களை புரிந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவராவார். போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரை, இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடி உத்தரவுக்கமைய, இவரது படைப்பிரிவினர் படுகொலை செய்ததாக, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐ.நாவுக்கான பிரதித் தூதுவராக அவரை இலங்கை அரசாங்கம் நியமித்து கௌரவ…
-
- 3 replies
- 562 views
-
-
வடக்கு மாகாண ஆளுநருக்கும் அண்மையில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபைக்கும் இடையில் தற்போது முறுகல்நிலை வலுத்துவரும் நிலையில், செப்ரெம்பர் மாதத்தில் இடம்பெற்ற தேர்தல் மூலம் தமிழ் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து சிறிலங்காவின் மத்திய அரசாங்கமும் மாகாண ஆளுநரும் நடந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. வடக்கு மாகாண சபையானது தனது நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநரான முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தடுத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. "தமிழ் மக்கள் செப்ரெம்பர் மாதத்தில் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமது தீர்ப்பை வழங்கியுள்ளனர். மக்களின் இந்தத் தீர்ப்பானது மதிக்கப்பட வேண்டும். தேர்தலுக…
-
- 1 reply
- 314 views
-