ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
எங்களுக்கு எதுவுமே வேண்டாம். எம்மையும் எமது சொந்த நிலங்களில் குடியிருக்க அனுமதித்தால் மட்டும் போதும் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான விசேட அறிக்கையாளர் சாலோகா பெயானியிடம் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்த ஐ.நா. பிரதிநிதி, இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கேப்பாபிலவு, சீனிமா மோட்டைப் பகுதியிலுள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடும்போதே இந்த மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கு மக்கள் அவரிடம் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் கடந்த நான்கு வருடங்களாக இடம்பெயர்ந்து சொல்லொணாத் துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றோம். எங்களை எமது சொந்த…
-
- 0 replies
- 383 views
-
-
பொதுநலவாய மாநாட்டின் போது, சிறிலங்கா அரசாங்கம் வடக்கிற்கான வான்வழிப் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்ததாகவும், இதனால், எட்டு மணிநேரம் தரைவழியாகப் பயணம் செய்தே யாழ்ப்பாணம் சென்றதாகவும், கனடாவின் வெளிவிவகார மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய் குற்றம்சாட்டியுள்ளார். “யாழ்ப்பாணத்துக்கான வான்வழிப் பாதை மூடப்பட்டதால், எட்டு மணிநேர தரைவழிப் பயணத்தின் மூலம் யாழ்ப்பாணத்தை அடைவதை தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை. அங்கே யாழ்ப்பாண ஆயரையும், வடக்கு மாகாண முதல்வரையும் சந்தித்ததுடன், உதயன் நாளிதழ் பணியகத்துக்கும் சென்றிருந்தேன். யாழ்.ஆயர், வட மாகாண முதல்வர், உதயன் பணிப்பாளர் தவிர்ந்த வேறு யாரை யாரை சந்தித்தேன் என்பதை வெளியிட முடியாது. அதனால் அவர்களி…
-
- 0 replies
- 549 views
-
-
வடக்கு மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அமைந்துள்ள நிலையில் இந்த மாகாணத்தில், அதுவும் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்குகின்ற ஈ.பி.டி.பியிடம் ஆயுதங்கள் இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையானது மக்கள் மத்தியில் அச்ச உணர்வைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக, ஈ.பி.டி.பி வசம் ஆயுதங்கள் இருக்கின்றமையாது வடக்கில் தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளதாகவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் யாழ்.குடாநாடு உட்பட தமிழர் தாயகம் எங்கும் ஈ.பி.டி.பி நாசகாரச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தது. சிறிலங்கா படையின் நெருங்கிய ஒட்டுக்குழுவாகச் செயற்பட்ட இந்த ஈ.பி.டி.பி…
-
- 0 replies
- 343 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம்வரை பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் 46 பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன் தெரிவித்தார். மன்னாரில் இன்று வியாழக்கிழமை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து பிரசாரமும் எதிர்ப்புப் பேரணியும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். '2013ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம்வரையான 10 மாதங்களில் மன்னார் மாவட்டத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் 46 பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில் 6 பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களும் 16 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் 24 சிறுமி…
-
- 0 replies
- 314 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பெளத்த பிக்கு ஒருவரின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள விகாரை அமைந்துள்ள ஆதனத்தின் உரிமையாளர் தனது ஆதனத்திற்குரிய அறுதி உறுதியை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட அறிக்கையிடலாளர் சலோகா பெயானியிடம் காண்பித்து தனது ஆதனத்தை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அது அறுதியுறுதியா என வினாவிய ஐ.நா. பிரதிநிதி அந்த உறுதியின் நகல் பிரதி ஒன்றினையும் பெற்றுச் சென்றுள்ளார். நேற்றுப் பிற்பகல் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட அறிக்கையிடலாளர் பிரதிநிதி முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்ற பொழுது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இவ்…
-
- 0 replies
- 360 views
-
-
ஜெனிவாவை இலக்கு வைத்து உருவாக்கபபடும் கெலும் மக்ரேயின் புதிய ஆவணப்படத்தில் புலிகள் பற்றிய தகவல்களும் வெளியாகுமா? எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா மகாநாட்டில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பிரித்தானியாவே இதில் முதன்மை நாடாக இருந்து செயற்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கங்கள் கூறுகின்றன. அன்மையில் பிரித்தானிய வெளியுறுவுச் செயலர் விடுத்த அறிக்கையிலும் இலங்கைக்கான காலக்கெடுவுக்குள் அந்த நாடு நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிடின் பிரித்தானியாவே மனித உரிமைப் பேரவையில் கடுமையான அழுத்தத்தைக் கொடுக்கும் என தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியிலேயே இலங்கைக்கு எதிரான தனது ப…
-
- 0 replies
- 326 views
-
-
இலங்கை வந்துள்ள உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவிசேட பிரதிநிதி சலோகா பெயானி, முள்ளிவாய்க்கால் மற்றும் கேப்பாபுலவுக்கு திடீரெனச் சென்று அதிர்ச்சி அளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்ற பெயானி மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனைச் சந்தித்தார். மாவட்டத்தின் யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றம், மேம்பாடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக அவருக்கு விளக்கம் அளித்தாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். பெயானியின் பயணத்தில் முள்ளிவாய்க்கால் மற்றும் கேப்பாபுலவு விஜயம் என்பன இடம்பெற்றிருக்கவில்லை. எனினும் அதிரடியாக அந்தப் பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார். இறுதியுத்தம் நடந்தமுள்ளி…
-
- 0 replies
- 351 views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரச படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து, இலங்கை அரசாங்கம் சொந்தமாக விசாரணை நடத்தத் தவறினால், அனைத்துலக விசாரணைக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்கும் என்று மீண்டும் எச்சரித்துள்ளது. நேற்றுமுன்தினம் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்யூ இந்த எச்சரிக்கையை மீண்டும் விடுத்துள்ளார். “நாம் இந்த விவகாரத்தை வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் எழுப்புவோம். இலங்கை அரசாங்கம் ஒரு விசாரணையை நடத்தாது போனால், அவர்கள் அதைச் செய்ய மறுத்தால், நாம், சுதந்திரமான, நம்பகமான, அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம். ஐ.நா மனிதஉரிமைக…
-
- 0 replies
- 266 views
-
-
இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பவற்றின் துறைமுகங்கள் இலங்கைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக, நாடாளுமன்றத்தில் துறைமுகங்கள் செயற்திட்ட அமைச்சர் றோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் கேள்விக்கு பதிலளித்த போதே, இதுதொடர்பான விவரங்களை அவர் வெளிப்படுத்தினார். இந்திய உப கண்டத்திலிருந்து வரும் கப்பல் மாற்றியேற்றும் சரக்குகளை ஓமானிலுள்ள சலலா துறைமுகம் கவர்ந்து வருகின்றது. இந்திய கிழக்குக்கரை சரக்கு பங்களாதேஷ் மற்றும் மியன்மார் சரக்குகளை கவரும் சிங்கப்பூர் துறைமுகமும் இலங்கைக்கு சவாலாக உள்ளது.ஓமான் துறைமுகங்களான ஜெபெல் அலி, ஹோபக்கன் துறைமுகங்களும் இலங்கைக்கு போட்டியாக உள்…
-
- 0 replies
- 358 views
-
-
வட மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்த்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தவராஜா நியமிக்கப்படலாம் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கடந்த மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வட மாகாண சபையின் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் தொடர்பு பட்டிருப்பது உறுதியாகி இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.12.13) நெடுந்தீவினைச் சேர்ந்த லண்டன் சசிந்திரன் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று (03.12.13) நள்ளிரவு வடமாகாண சபை எதி…
-
- 1 reply
- 765 views
-
-
போர்க்குற்ற விசாரணை: இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை வாஷிங்டன், டிச. 4– ‘‘போர்க்குற்ற விசாரணை நடத்தாவிட்டால் பொறுமை இழக்க நேரிடும்’’ என இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். எனவே, இலங்கை சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க்குற்றம் இழைத்ததாக ஐ.நா. மனித உரிமை கமிஷனில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. அதை தொடர்ந்து ராணுவத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதிபர் மகிந்த ராஜபக்சே சர்வதேச நாடுகளின் …
-
- 1 reply
- 431 views
-
-
நாம் புலிகளுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை அரசியல் இணக்கப்பாட்டுக்கான தொடர்பையே கொண்டிருந்தோம் கே. அசோக்குமார் - ஸாதிக் ஷிஹான் நானோ அல்லது நாமோ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்க வில்லை. அரசியல் தீர்வொன்றுக்கான இணக்கப்பா டொன்றை ஏற்படுத்திக்கொள்வதன் நிமித்தமான தொடர்புகளை மட்டுமே விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்டிருந்தோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. இரா. சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த தொடர்பு மட்டுமே தவிர வன்முறைச் சம்பவங்களுடன் எமக்கு எந்த தொடர்பும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். வரவு- செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசு தான் விடுதலைப் ப…
-
- 1 reply
- 451 views
-
-
கொலைக்காண பணிப்புரையை வழங்கிய அனிதாவும் கைது:- 2ஆம் இணைப்பு:- நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை செய்யுமாறு பணித்தது அவருடைய மனைவியே கொலை குறித்து விசாரணை நடத்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். தனது கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முன்னர் அவரது மனைவி பொலிஸாருக்கு அறிவித்திருந்தார். ஆனால் தனது கணவனை கொலை செய்யுமாறு அவர் பணிப்பு விடுத்ததை அடுத்து வட மாகாண சபை எதிர்கட்சித் தலைவரும் ஈபிடிபி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் மற்றும் அவரது அலுவலகத்தில் பணிபுரியும் லண்டன் சசிந்திரன் ஆகியோர் இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொலைக்கு பயன்படுத…
-
- 6 replies
- 1.8k views
-
-
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காவது நாளாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது கடும் மழையுடன் காற்றும் வீசிவருவதால் கடல் கொந்தளிப்பும் காணப்படுவதுடன் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு மீனவர்கள் செல்லாத காரணத்தால் மீன்களுக்கு அதிகம் தட்டுப்பாடு நிலவுவதுடன் மீன்களின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, கல்லடி , காத்தான்குடி, புதிய காத்தான்குடி, ஏத்துக்கால், கர்பலா, பாலமுனை, கிரான், கல்லாறு, பெரிய கல்லாறு, துறைநீலாவணை, களுவாஞ்சிக்…
-
- 2 replies
- 611 views
-
-
'17 ஏசிஎப் நிறுவன ஊழியர்களை கொன்றது ராணுவமே'-- குற்றச்சாட்டு பிரெஞ்சு தொண்டு நிறுவனமான, ஏ.சி.எப் 2006ல் இலங்கையில் தனது உள்ளூர் ஊழியர்கள் 17 பேரைக் கொன்றது இலங்கைப் பாதுகாப்புப் படையினர்தான் என்று குற்றம் சாட்டியிருக்கிறது. தனது ஊழியர்கள், முழங்காலிட வைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், இவர்களைக் கொன்ற கொலையாளிகளை இலங்கை அரசு இது வரை பாதுகாத்து வருகிறது என்றும் கூறுகிறது. இந்தத் தகவல் நேரில் கண்டவர்களிடமிருந்தும், ரகசிய ஆவணங்களிலிருந்தும், ராஜிய வட்டாரங்களிலிருந்தும் தனக்குக் கிடைத்துள்ளதாக அது கூறுகிறது. இந்தத் தகவலை இது வரை இந்த நிறுவனம் வெளியிடாமல் வைத்திருந்ததன் உள்நோக்கங்களை இலங்கை ராணுவத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கேள்விக்குள்ளாக்கியிருக…
-
- 23 replies
- 1.6k views
-
-
இலங்கையில் பிரெஞ்சு தொண்டு நிறுவனமான ஏசிஎப் நிறுவனத்தின் உள்ளூர் ஊழியர்கள் 17 பேர் 2006ல் படுகொலை செய்யப்பட்டது குறித்து, இலங்கை பாதுகாப்புப் படைகள் மீது குற்றம் சுமத்தியிருக்கும் அந்த நிறுவனம், இந்த விவகாரத்தில் தமக்குக் கிடைத்த சாட்சியங்களை, சர்வதேச விசாரணை நடந்தால் , கையளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறது. ஏசிப் நிறுவனத்தின் உள்ளூர் ஊழியர்கள் இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதூரில் 2006 ஆகஸ்டு 4ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் முழங்காலிடப்பட்டு விசாரணையின்றி சுடப்பட்டனர் , இவர்களைச் சுட்டவர்கள் இலங்கையின் பாதுகாப்புப் படையினர்தான் என்பதற்கு தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாக நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த நிறுவனம் கூறியிருந்தது. இந்த அறிக்கை பற்றி ப…
-
- 0 replies
- 518 views
-
-
இலங்கைப் பிரதமர் தனது அனுமதியில்லாமல் தனது அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் யாரும் தன் பெயரில் எந்த ஒரு கடிதத்தையும் தரக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார். ஹெராயின் போதைப் பொருள் வந்த ஒரு சரக்குப் பொதியை அனுமதிக்க எடுக்கப்பட்ட முடிவில் அவரது அலுவலகத்திலிருந்து வந்த கடிதம் ஒன்று துணையாக இருந்ததாக கூறப்பட்ட சம்பவத்துக்குப் பின் இந்த உத்தரவு வந்திருக்கிறது. இந்த சரக்குப் பொதி, பாகிஸ்தானில் இருந்து வந்தது. இது கொழும்பில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் கைப்பற்றப்பட்டது. குளியலறையில் பயன்படுத்தப்படும் செராமிக் பொருட்கள் அடங்கிய இந்தப் பொதியில் இருந்த ஹெராயினின் எடை மட்டும் 130 கிலோவுக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு பல மிலியன் டாலர்களாகும். இந்த சரக்குப் பொ…
-
- 0 replies
- 361 views
-
-
மூதூர் படுகொலைகள் நிகழ்ந்து ஏழு ஆண்டுகளாக ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் இருந்தது ஏன் என்று அக்செய்ன் பெய்ம் என்ற பிரெஞ்சு தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் இராணுவப் பேச்சாளர் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு மூதூரில் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் தன்னார்வ தொண்டு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் படையினருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. சம்பவம் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் வரையில் ஆதாரங்களை சமர்ப்பிக்காமை சந்தேகத்தை உருவாக்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றிருந்தால் அதனை ம…
-
- 2 replies
- 659 views
-
-
"புலிகளின் மாவீரர் நினைவுத் தூபிகள் இந்த நாட்டில் எந்த மூலையிலும் இருக்கக்கூடா. அவை அழிக்கப்பட்டே ஆக வேண்டும். அத்துடன், இராணுவத்தினரின் நினைவுத் தூபிகளைத் தமிழர்களும் வழிபட வேண்டும்" என சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு: போரினால் வடக்குக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கிலும், தெற்கிலும் மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், இன்று மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்கின்றனர். நகர அபிவிருத்தி அமைச்சால் இன்று நகரங்கள் புதுவடிவம் பெறுகின்றன. இதற்கு உத…
-
- 1 reply
- 364 views
-
-
போர் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் எதிர்கால நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எந்தவொரு விடயத்தை எடுத்துக்கொண்டாலும், விடுதலைப்புலிகள் என்ற பெயரைப் பயன்படுத்தும் முறையை அரசாங்க தரப்பினர் கைவிட வேண்டும் அதேவேளை, வடக்கின் வசந்தம் மூலம் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள எனினும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதத்தில் வடக்கில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதேநேரம் மு…
-
- 0 replies
- 627 views
-
-
அவுஸ்திரேலியா தமது குடிவரவு சட்டங்களை நேற்று முதல் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத குடியேற்றங்களை தவிர்ப்பதற்கே சட்டதிட்டங்களை கடுமையாக்கியுள்ளதாக குடிவரவு மற்றும் வலய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு வரும் சட்டவிரோத குடியேறிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு நுழைவு அனுமதி வழங்கப்படமாட்டாது என அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் தெரிவித்துள்ளார். அதன்படி, மேலும் சில திருத்தங்கள் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, சட்டவிரோத படகுகளில் வருபவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் வசிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10359:2013-…
-
- 0 replies
- 352 views
-
-
மகளின் மரணச் செய்தியைக் கேட்ட தாய் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவமொன்று யாழ். அளவெட்டிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. http://www.newjaffna.com/fullview.php?id=MzMxMzI= தாய்க்கும் மகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!
-
- 2 replies
- 611 views
-
-
இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 45 தமிழ்ப் பெண்கள் தென் பகுதிக்கு சுற்றுலா விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இராணுவத்தில் இணைத்து கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்களின் தெற்கிற்கான இந்த பயணத்தை வன்னி இராணுவத் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது. வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான நட்புறவு தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த பெண்களை தென் பகுதிக்கு சுற்றுலாவுக்காக அனுப்பி வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்த பெண்கள் தமது வாழ்நாளில் கண்டிராத தென்பகுதி நகரங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கதிர்காமம், திஸ்ஸமஹாராம, மகாகம்புற சர்வதேச மாநாட்டு மண்டபம், மகிந்த ராஜபக்ச துறைமுகம், மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் உட்பட …
-
- 0 replies
- 541 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான காணிகள் உட்பட எந்த சொத்துக்களையும் அரசுடமையாக்க இடமளிக்க போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முடிந்தால் விடுதலைப் புலிகளின் தலைவரது வீட்டையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கி காட்டட்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டையோ சொத்துக்களையோ சுவீகரிக்க இடமளிக்க போவதில்லை. முடிந்தால் அரசாங்கம் சுவீகரித்து காட்டட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீட்டை அரசுடமையாக்க போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இது குறித்து …
-
- 0 replies
- 331 views
-
-
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீளக்குடியேற்றுமாறு தேசிய சுதந்திர முன்னணி, மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரகோனிடம் கோரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம் சகோதரத்துவம் என்ற அந்த கட்சியின் அமைப்பின் பேரில் அதன் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் கடிதம் மூலம் அந்த கோரிக்கையை விடுத்துள்ளார். முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு 2013 ஒக்டோபர் 30 ஆம் திகதியுடன் 23 மூன்று வருடங்கள் பூர்த்தியானது. மூன்று தசாப்தங்களாக வடக்கில் இருந்து வந்த விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் தோற்டிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் மேல் கடந்துள்ளது. வடக்கின் இனவாத பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்த சகலரையும் அரசாங்கம் முதலில் …
-
- 0 replies
- 319 views
-