Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை அந்த அமைப்பில் உள்ள நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசை வென்ற தென்னாப்பிரிக்கர் டெஸ்மன் டுட்டு வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கையில் ஒற்றுமைகளை ஏற்படுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளையும் அந்நாட்டு அரசு மேற்கொள்ளவில்லை. மனித உரிமைகளை மீறியுள்ள இலங்கையை கண்டிக்கும் வகையில் உலக நாடுகள் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் இலங்கை செல்லக் கூடாது. மேலும் அவர்களை இந்தியாவில் இருந்தும், தமிழர்கள் செல்வதைப்போல அல்லாமல் இலங்கையில் இருக்கம் தமிழர்கள் கூறுவது போல செயல்பட வலியுறுத்துவேன். காமன்வெல்த் மாநாட்டை உலக நாடுகள் புறக்கணிப்பதன…

  2. மனித உரிமை சார்ந்து சிறீலங்காவுடன் நெருங்கிய தொடர்புகளை முன்னெடுக்கவுள்ளோம் - கமலேஷ் சர்மா மனித உரிமைகள் சார்ந்த செயற்பாடுகளில் சிறீலங்காவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டு முன்னெடுத்து செல்லவிருப்பதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் பொது செயலாளர் கமலேஷ் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் பெறுமதிகளை அங்கத்துவ நாடுகளிடேயே பேணும் பொறுப்பு அனைத்த தரப்புக்கும் இருக்கிறது. இந்த வகையில் மனித உரிமைகள் சம்பந்தமாகவும் பொதுநலவாய நாடுகள் அமைப்பு அக்கறை கொண்டுள்ளது. இது சம்பந்தமான சிறீலங்காவின் செயற்பாடுகளில் அந்த நாட்டு அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்பட வேண்டுமே தவிர, அதனை புறக்கணிக்க முடியாது என்றும் அ…

  3. பொதுநலவாய உச்சிமாநாடு - ஒத்திகை நிகழ்வு இம்மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சிமாநாட்டின் ஆரம்ப நிகழ்வுக்கான ஒத்திகை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். நன்றி - வீரகேசரி http://www.virakesari.com/?q=node/358925

    • 0 replies
    • 475 views
  4. அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது மாநாடு, கொழும்பில் கசினோ சூதாட்டம் மற்றும் தலைநகரிலிருந்து மக்களை வெளியேற்றுதல் ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த பாரிய ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை மாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. (pics by : J.Sujeewakumar) நன்றி - வீரகேசரி

    • 0 replies
    • 378 views
  5. இசைப்பிரியா படுகொலையைக் கண்டித்து தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் இசைப்பிரியா படுகொலையைக் கண்டித்தும், காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வலியுறுத்தியும் தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி பாளை ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். பிரஸ் மீடியா அசோசியேஷன் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ராமசந்திரன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் வழக்கறிஞர் சந்தணசேகர், ஐஜேக மாவட்ட பொருளாளர் இசக்கிராஜா உட்பட பலர் கண்டன உரியாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்த போது…

    • 0 replies
    • 486 views
  6. பிரித்தானிய செனல்4 ஊடகவியலாளர் கலம் மக்ரேவிற்கு இலங்கை ஒன் அரைவல் வீசா வழங்கியுள்ளது. எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் மக்ரே பங்கேற்க உள்ளார். நோ பயர் ஸோன், கில்லிங் பீல்ட் போன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணப்படங்களை வெளியிட்ட கலம் மக்ரேவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 30 பிரித்தானிய ஊடகவியலாளர்களுக்கு வீசா வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் கலம் மக்ரேவும் அடங்குவதாகவும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஒன் அரைவல் முறையில் மக்ரேவிற்கு வீசா வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஊடகவிலாளர் குழுவுடன் மக்ரே விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், பிரதமரின் இந்திய …

  7. மண்டைதீவு எந்நேரமும் துண்டிக்கப்படலாம்! சிறீதரன் பகிரங்க எச்சரிக்கை!! மண்டைதீவுக்கு செல்லும் பிரதான பாதை எந்நேரமும் மூழ்கிப்போகலாமெனவும் அதனால் தரை வழி தொடர்புகள் துண்டிக்கப்பட்ட கிராமமாக அது அமையலாமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற அங்கத்தவர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தினில் மேலும் தெரிவிக்கப்படுகையனில் வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய, யாழ்ப்பாண நகருக்கு மிக அண்மையில் உள்ள த மண்டைதீவுக்கிராமத்தில் தற்பொழுது அறுநூற்றுப்பத்து குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து இருபத்து ஒரு பேர் வசிக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வரும் தொண்ணூறு சத வீதமான ஆசிரியர்களை நம்பி இரண்டு பிரதான பாடசாலைகள் இயங்க…

    • 0 replies
    • 580 views
  8. இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும். எனவே, உரிய விசாரணைகளை முன்னெடுத்து அதைச் செய்யவேண்டியது இலங்கை அரசின் கடமையாகும். இதைத் தட்டிக்கழித்தால் பாரதூரமான விளைவுகளை இலங்கை அரசு சந்தித்தே தீரும்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்றுத் தெரிவித்தார்.இசைப்பிரியா தொடர்பில் சனல்4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள காணொலியை இலங்கை அரசும் இராணுவமும் நிராகரித்துள்ளன. இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.சனல்4 வில் இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் வெளிவந்த காட்சிகள் அனைத்தும் உண்மை…

    • 25 replies
    • 1.7k views
  9. காணொளி : சணல் 4 இன்று (7/11/2013) வெளியிட்ட சில காட்சிகள்.. காணொளி.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9904:---4--7112013---&catid=1:latest-news&Itemid=18

  10. பொதுநலவாய மாநாடு காலத்தில் சட்டத்தரணிகளின் மாநாட்டுக்காக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனப் பிரதிநிதிகள் இலங்கை செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தைச் சேர்ந்த உயர் மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கை செல்வதற்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்துக்கான சிறப்புத்தூதுவர், கபிரியெல்லா நவுல், நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்துக்கான ஐநாவின் முதல் சிறப்புத்தூதுவர் பரம் குமாரசாமி ஆகியோரும் இந்த பிரதிநிதிகள் குழுவில் அடங்குகிறார்கள். இந்தக் குழுவுக்கு முன்னதாக வழங்கப்பட்ட விசா பின்னர் பொதுநலவாய மாநாட்டு காலகட்டத்துக்கு…

  11. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்குமாறு ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரதமர் கேள்வி எழுப்ப வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்த நிiமையை சீர் செய்வதற்கு இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசிய மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே நாட்டில் நிரந்தர நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட முடியம் என தெரிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின்…

  12. டெல்லி: இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைகளை வீடியோ காட்சிகள் மூலம் வெளி உலகுக்குக் கொண்டு வந்த சேனல் 4 தொலைக்காட்சியின் இயக்குநர் கல்லம் மேக்ரேவுக்கு இந்திய விசா மறுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நவம்பர் 7ந் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நவம்பர் 6ந் தேதி இந்தியா வர கல்லம் மேக்ரே திட்டமிட்டிருந்தார். ஆனால் கல்லம் மேக்ரேவின் விசாவை மத்திய அரசு நிராகரித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் கொல்லப்பட்டது முதல் இறுதியாக விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பு பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியா இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டது வரை இலங்கை போர்க்குற்றங்களை வீடியோக்கள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது சேனல் 4 தொலைக்காட்சி. தற்போது அதன் இயக்குநரான கல்லம் மேக்ரே…

  13. யாழ்ப்பாணம், கைதடி முதியோர் இல்லத்திலுள்ள தாயொருவர் லண்டனில் பொறியியலாளராக கடமையாற்றும் தன் மகனை பார்க்க வேண்டுமென்று முதியோர் இல்ல அதிகாரிகள் மற்றும் உறவினர்களிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளார். கைதடி முதியோர் இல்லத்தில் கடந்த பத்து வருடங்கலாக வசித்து வரும் வயோதிபத் தாயான பூவேந்திரம் தவபோசனம் (வயது 61) என்பவரே இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளார். இவர் நெல்லியடி, வதிரியைச் சேர்ந்தவராவார். இவர் தொடர்பில் தகவலளித்த கைதடி முதியோர் இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன் கூறியதாவது, 'குறித்த பெண் திருமணமான ஒரு மாத காலத்தில் கணவனை இழந்ததாகவும் இவருக்கு ஒரே ஒரு மகன் இருப்பதாகவும் எமக்கு தெரிவிக்கப்பட்டது. கணவனின் இழப்பு காரணமாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 10 வருடங்களக்…

  14. பிறந்தவுடனேயே கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ஆண் சிசுவொன்றின் சடலத்தினை வவுனியா, கல்மடு, பூம்புகார் பிரதேசத்திலிருந்து பொலிஸார் தோண்டி எடுத்துள்ளனர். இன்று (07) அதிகாலை 4 மணியளவில் புதைக்கப்பட்ட மேற்படி சிசுவின் சடலம் இன்று பிற்பகல் பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிசுவைப் பிரசவித்த தாய் மற்றும் பாட்டி ஆகியோரே அச்சிசுவை கொன்று புதைத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பூம்புகார் பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் வேலாங்கன்னி (வயது 25) என்ற பெண்ணே மேற்படி சிசுவை பிரசவித்துள்ளார். அப்பெண், தனது தாயாரான தங்கவேலு காளியம்மா (வயது 63) என்பவருடன் இணைந்தே சிசுவை கொன்று புதைத்துள்ளார். சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சிவகுமார் வேலாங்கன்னி, …

  15. இலங்கையின் முக்கிய இணைய தளங்கள் ஹெக் செய்யப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை கணனி அவசர பாதுகாப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இலங்கை அரசாங்க இணைய தளங்களின் மீது ஊடுறுவித் தாக்கக் கூடிய அபாயம் அதிகளவில் காணப்படுவதாக பிரிவின் பிரதம பொறியியிலாளர் ரொஹான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார். சைபர் பாதுகாப்பு குறித்து போதிய விளக்கம் இன்மையே இவ்வாறான தாக்குதல்களுக்காக பிரதான ஏதுவெனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, எகிப்து, சிரியா போன்ற நாடுகளின் இணைய தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.அடிக்கடி மாற்றியமைக்கப்படாத காரணத்தினால் அரசாங்க இணைய தளங்களை இலகுவில் ஹெக் செய்ய முடிவதாகக் குறிப்பிட்டுள்ளா…

  16. வலி. வடக்கு மக்களின் வீடுகள் படையினரால் இடித்தழிக்கப்படுவதை கண்டித்தும்; மீள் குடியேற்றத்தினை வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தினை கூட்டமைப்பு பிரமுகர் தம்பிப்பிள்ளை தம்பிராசா இன்று வியாழக்கிழமை ஆரம்பித்துள்ளார். வலிகாமம் வடக்கிலிருந்து கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து முகாhம்களில் வாழும் மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றன. அவற்றினை எதிர்க்கும் விதமாக யாழ். நகரில் உள்ள முனியப்பர் ஆலயத்தின் முன்பாக இன்று தனது போராட்டத்தின ஆரம்பித்துள்ளார். அதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை மாலை இந்த உண்ணாவிரதத்தை நிறைவுசெய்வதுடன், வலி.வடக்கு மக்களின் வீடுகளை இடித்து அழிப்பதை உடனடியாக நிறுத்துமாறும், அப்பகுதி மக்களை மீள்குடியேற்றம் செய்யுமாறும் வலியுறு…

  17. விசாரணை நடாத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய முறையில் விரிவான விசாரணை நடாத்துமாறு இலங்கை அரசாங்கத்தை, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் வலியுறுத்துவார் என தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார். ஈராக்கைத் தவிர இலங்கையில் அதிகளவில் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் 5676 முறைப்பாடுகள் விசாரணை செய்யாமல் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எட…

  18. தமிழகம், நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பிரதேசத்திலிருந்து இலங்கையைச் சேர்ந்த மூன்று சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தேயிலை குறித்த ஆராய்ச்சிக்காக குன்னூர் சென்றிருந்த மூவரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் தொடர்பில் தகவலறிந்த பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்தே இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. குன்னூரிலிருந்து இன்று வியாழக்கிழமை அதிகாலை வெளியேற்றப்பட்;ட இவர்கள் மூவரும் பெங்களுருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்திய செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு குன்னூருக்கு பயிற்சி பெறச் சென்ற இவங்கை இராணுவ அதிகாரிகள் பலரும் போராட்டங்கள் காரணமா…

  19. "போர்க்குற்ற விசாரணைகள் மூடி மறைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு தடை ஏற்படும்" பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறுவதனால் போர்க்குற்ற விசாரணைகள் மூடி மறைக்கப்படுவதாகவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு தடை ஏற்படும் எனவும் வலிறுத்தி கொழும்பில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று டைபெற்றுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இடதுசாரி கட்சிகள் ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் சில பொது அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. ஒரு மணி நேரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. பொதுநலவாய நாடுகளின் மாந…

  20. முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை நினைவு கூறும் விதமாக உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் தஞ்சை விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் தொடங்கிய காலத்தில் இருந்தே தடைகள் ஏற்பட்டது. இப்போது கட்டுமானப்பணிகள் முடிவுற்ற நிலையில் நவம்பர் 8ந் தேதி மாலை 5 மணிக்கு திறப்பு விழா நடைபெறும் என்றும், பழ.நெடுமாறன் திறக்கிறார் என்றும் அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டது. இந்த முற்றம் திறப்பதில் சில சிக்கல்கள் உருவான நிலையில் செவ்வாய்க்கிழமை மதுரை உயர்நீதிமன்ற கிளை முற்றம் திறக்க அனுமதி அளித்தது. இந்த நிலையில் மேலும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் வேறு தடைகள் வந்து திறப்பு விழாவை தடை செய்து விடலாம் என்று எண்ணிய விழாக் குழுவினர், …

  21. இலங்கை அரசின் கொடியை தீ வைத்து எரித்த நாம் தமிழர் கட்சியினர் கைது! -------- காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து மதுரை விமானநிலையத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோரது உருவ படங்களை தூக்கிலிட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்தனர். பின்னர் நாம் தமிழர் கட்சியினர் இலங்கை அரசின் கொடியை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செந்தில் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். facebook

  22. பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி சென்னையில் மாணவர்கள் மூவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நேற்று காலை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில்காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது ,பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், இலங்கையில் தனி தமிழீழம் உருவாகுவதற்கு தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடாத்த வேண்டும், இலங்கை தூதரகங்களை இந்தியாவில் இருந்து அகற்ற வேண்டும் மற்றும் பொதுநலவாய மாநாடுட்டிற்கு எதிராக போராட்டம் நடாத்தி …

    • 0 replies
    • 403 views
  23. இசைப்பிரியா இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படுகின்ற காணொலியை இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரே தனக்குத் தந்தார் என சனல் - 4 இயக்குநர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார். இந்தக் காட்சிகளை ஏற்கனவே இலங்கை அரசு பார்த்திருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படும் காணொலியை சனல் - 4 ஊடகம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. இசைப்பிரியா கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகளையும் கடந்த வருடம் சனல் - 4 ஊடகமே வெளியிட்டிருந்தது. இந்தக் காட்சிகள் மற்றும் இலங்கையி…

    • 2 replies
    • 1.8k views
  24. ஓய்வுபெற்ற மாத்தறை நிர்வாகசேவை அதிகாரி வட மாகாண ஆளுநராக வரலாம்? - குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர். வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதராக நியமனம் பெற்று செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினது கோரிக்கையின் பேரில் எதிர்வரும் பொதுநலவாய மாநாடு வரையிலும் வடக்கின் ஆளுநராக நீடித்திருக்க அவர் முடிவு செய்துள்ளதாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறவுள்ள வட மாகாணசபையினது அமர்வில் கலந்து கொண்டு ஆளுநர் உரையினை ஆற்ற அவருக்கு வடக்கு முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். உத்தியோகபூர்வ இவ்வழைப்பினை கருத்தில் கொண்டு அங்கு கலந்து கொண்டு அங்கு அவர் உரையாற்றவுள்ளார். அதுவே அவ…

  25. தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி :- பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், இசைப் பிரியா போன்றவர்களைக் கொடுமையாக சிங்கள ராணுவம் கொலை செய்ததை ஆதாரப் பூர்வமாக வீடியோ எடுத்த சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குநருக்கு இந்தியா; விசா வழங்க மறுத்து விட்டதாகச் செய்தி வந்திருக்கிறதே? பதில் :- இனவாத இலங்கையின் சுய உருவத்தைத் தோலுரித்துக் காட்டிய நிறுவனத்தின் இயக்குனர் கெல்லம் மெக்ரே இந்தியாவிற்கு வருவதற்காக எட்டு மாதங்களுக்கு முன்பே விசா வழங்கக்கோரி விண்ணப்பம் கொடுத்ததாகவும், ஆனால் இந்திய அரசு மறுத்துவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார். தற்போது மீண்டும் இசைப்பிரியா கொலை செய்யப்பட்ட காட்சிகளை டெல்லியிலே வெளியிடுவதற்காக நவம்பர் 6…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.