Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடமாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்னுத்துரை ஐங்கரநேசனை தமது கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டமை காரணமாக கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்துடன் இருக்கும் வரை கொலைக்கலாசார பாவங்கள் தன்னுடனும் ஒட்டிக்கொண்டிருந்ததாகவும் இனிமேல் அந்த பாவங்கள் தன்னை தொடராது என ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது தம்பி சர்வேஷ்வரனுக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சியிடம் ஏற்கனவ…

    • 12 replies
    • 1.2k views
  2. இன்று அதிகாலை தமிழீழத்தின், வடமராட்சி கிழக்கு ,முல்லைத்தீவு கடலோரப்பகுதிகளில் கடல்கொந்தழிப்புடன் பாரியஅலைகள் எழுந்து கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களுடன் கூடிய படகுகள்அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், இவ் அனர்த்தம் தொடர்பான மேலதிக தகவல்கள்,சேதவிபரங்கள் உடனடியாக பெறமுடியமையால் முழுமையான செய்தி பின்னர் வெளியிடப்படும்-எமது இருப்புச்செய்தியாளர். http://irruppu.com/?p=37808

  3. ஹெரோயின் போதைப் பொருட்கள் அடங்கிய கப்பலொன்று இலங்கை நோக்கிப் பயணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கப்பல் அரேபிய கடற்பரப்பில் காணப்படுவதாக தகவல் கிட்டியுள்ளது என இலங்கை சுங்கத் திணைக்கள பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார். சில நாடுகள் இந்தக் கப்பல் குறித்து அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் போதைப் பொருள் ஏற்றப்பட்டதாகவும் பாகிஸ்தான் வழியாக இலங்கை நோக்கி பயணிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கராச்சியில் வைத்து இந்த ஹெரோயின் போதைப் பொருள் பொதியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கைக் கடற்பரப்பிற்குள் இந்தக் கப்பல் பிரவேசித்தால் உரிய நடவடிக்கை எடுக்ப்படும் என அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/t…

  4. மட்டக்களப்பு நகரில் காவல் நிலையத்துக்கு அருகில் உள்ள பிரபல இலத்திரனியல் விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு வர்த்தக நிலைய கதவின் பூட்டுகள் வெட்டபட்டு இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது வர்த்தக நிலையத்தில் இருந்து பெறுமதி வாய்ந்த இலட்சக்கனக்காண பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை மட்டக்களப்பு காவல் நிலையத்துக்கு முன்பாக அதிக பாதுகாப்பு உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த கொள்ளை சம்பவம் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. http://www.sankathi24.com/news/34292/64//d,fullart.aspx

  5. மீனவர் கைது விவகாரம்: இந்தியாவும் பதிலடி;தூத்துக்குடியில் 26 இலங்கையர்கள் நேற்று இந்தியக் கடற்படையால் கைது தமது மீனவர்கள் மீதான அத்துமீறல்களை நிறுத்துமாறு இலங்கையிடம் தொடர்ச்சியாக கோரி வந்த இந்தியா, தனது கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாததையடுத்து அதற்குப் பதிலடியான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக புதுடில்லி வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. இதன் ஒரு அங்கமாக இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி இலங்கை மீனவர்கள் 26பேரை தூத்துக்குடி கடலோரக் காவற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்த நான்கு விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் நேற்று இரவு …

    • 5 replies
    • 663 views
  6. வடமாகாணசபையினை எமது ஈ.பி.ஆர்.டில்.எப். கட்சி புறக்கணிக்கவில்லை. மாறாக, இன்று நடைபெற்ற பதவியேற்பு வைபவத்தினையே நாங்கள் புறக்கணித்தோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். இன்று யாழில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் மாகாணசபைக்கான பதவியேற்பு வைபவத்தில், மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் பங்குபற்றாமை தொடர்பில் அக்கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்... “கூட்டமைப்பு என்பதன் பதம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஒரு கூட்டமைப்பில் உள்ளவர்களின் முடிவுகள் எப்படி அமையவேண்டும் என்பது …

    • 22 replies
    • 1.4k views
  7. எதிர்கட்சி உறுப்பினர்களும் சீ.வீ.விக்கினேஸ்வரன் முன்னிலையினில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர். 11 அக்டோபர் 2013 வடமாகாணசபையின் அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் முன்னிலையினில் சத்தியப்பிரமாணம் செய்ய தீர்மானித்திருப்பதாக கூறப்படுகின்றது. நட்புணர்வை வெளிப்படுத்துமொரு நடவடிக்கையாகவே தமது பதவி பிரமாண நிகழ்வினை அவர்கள் முதல்வர் சீ.வீ.விக்கினேஸ்வரன் முன்னிலையினில் நடத்த தீர்மானித்திருப்பதாக கூறப்படுகின்றது. முன்னதாக நேற்று கொழும்பில் தமது சத்தியப்பிரமாணத்தை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் அது தடுக்கப்பட்டு முதமைச்சர் முன்னிலையினில் சத்தியப்பிரமாணம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு அங்கத்தவர்களது பதவி பிரமாணச்சர்ச்கை முடிவ…

  8. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் ந.திருலிங்கநாதன் ஈ.பி.டி.பி கட்சியின் முகவராக செயற்படுவதாகவும், சாதி பிரச்சினையை தூண்டும் வகையில் பேசி வருகிறார் என்றும் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற பணிகளை தனது அடியாட்களை வைத்து மோசடி செய்து வருவதாகவும் குற்றம் சாட்டி வடராட்சி கிழக்கு மக்கள் இன்று மருதங்கேணியில் உள்ள வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் கவனஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 2010ம் ஆண்டு மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ள போதும் வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எவையும் வழங்கப்படாத நிலையில் உதவி அரசாங்க அதிபரினால் தாம் தொடர்ந்தும் அநாகரீகமாக நடத்தப்படுவதாகக்கூறி பிரதேச மக்கள் இப்போராட்டத்தை நடத்தினர். சுனா…

  9. மாபெரும் நீதிக்கான பேரணி. கேணல் பரிதியின் படுகொலைக்கு நீதியான, விரைவான, விசாரணை கோரி மாபெரும் பேரணி http://irruppu.com/?p=37757

  10. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தனது சகோதரருக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றார்” என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட மாகாணசபைக்கு தெரிவான அமைச்சர்கள், இன்று வெள்ளிக்கிழமை வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் வைத்தே இந்த நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டார். வடமாகாண அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறத்து, இந்நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த முதலமைச்…

  11. போராட்டங்களை நடாத்துவதற்கு எவ்வித தடையும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்ற தகவல்கள் போலியானவை எனத் தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமாவு நடைபெறும் காலப்பகுதியில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், பாதாகை இடுதல், கறுப்பு கொடியிடல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இவ்வாறான எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பேச்சாளர் அனுராத ஹேரத் தெரிவித்துள்ளார். இதேவேளை, போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்…

  12. இந்தியாவில் பிரதமராகுவதற்கு ராகுல் காந்திக்கு சகல தகுதிகளும் இருப்பதாக இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கிய இலங்கை கடற்படையின் முன்னாள் வீரர் விஜித ரோஹண விஜிதமுனி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1987 ஆம் ஆண்டு இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கிய இலங்கைச் சிப்பாய் தற்போது ஜோதிடராகவும், இசைக் குறுந்தகடுகளை விற்பவராகவும் தொழில் புரிந்து வருகிறார். கொழும்பு அருகில் உள்ள சூப்பர்மார்க்கெட் ஒன்றில் இரண்டு கணினிகளுக்கு முன் அமர்ந்து, சுற்றிலும் இசைத் தட்டுகள் அடுக்கப் பட்டுள்ள நிலையில் தாடியுடன் காணப் படும் அவரைப் பார்ப்பவர்கள் அவர் சில ஆண்டுகளுக்கு முன் ராஜீவைத் தாக்க முற்ப…

  13. எமது மண்ணின், மக்களின் பிரட்சனைகளை உலகக் கண்முன் கொண்டு சென்று நிறுத்துபவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள்தான். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைப் பலப்படுத்த வேண்டியது புலத்து வாழ் தமிழர்களின் கடமையாகும். பிரான்ஸில் தேர்தல் நடைபெறுகின்ற ஒவ்வொரு தொகுதியிலும் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரும் வாக்குகளைப் பதிவு செய்யத் தவறிவிடக் கூடாது. இந்தத் தேர்தலில் வெற்றியடைபவர்கள் எமது மண்ணில், மக்களின் வாழ்வில் புது வெளிச்சம் பாய்ச்சுபவர்கள். ஆகையால் தேர்தல்க் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகத்திற்கும், புன்னகைக்கும் வாக்குகளைப் பதிவு செய்து எமது எதிர்கால வெளிச்சத்தை இருளாக்கிவிடக் கூடாது. நம்மில் பலர் சிறந்த பேச்சாளர்கள் ஆகுவதிலேயே கவனம் செலுத…

  14. வட மாகாணத்தில் பாலியல் தொழில் மிகுந்த முனைப்புடன் வளர்ச்சியடைந்துள்ளதாக ஐ.ஆர்.ஐ.என். தகவல் வெளியிட்டுள்ளது. முன்னைய யுத்த வலயத்தின் பெரும்பான்மையான பெண்கள் குடும்பத் தலைமைப் பொறுப்பை வகித்து வருகின்றனர். யுத்ததினால் கணவனை இழந்த, காணாமல் போன அல்லது கைது செய்யப்பட்ட பல பெண்கள் குடும்பச் சுமையை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. போதியளவு வாழ்வாதார வழிகள் இல்லாமை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வடக்கில் சுமார் 7000 பெண்கள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. யுத்தத்தில் கணவனை இழந்த அல்லது காணாமல் போன பல குடும்பத் தலைவிகள் விருப்பிமின்றியேனு…

  15. -எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா 'அரசியலில் பிரவேசிப்பது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தாகாட்டுவதற்கும் என்ற நிலை இனிமேல் மாற வேண்டும். தங்கள் தங்கள் சுயலாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் தள்ளக்கூடாது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களிற்கான பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தமிழ் மக்கள் போருக்குப் பின்னரான காலகட்டத்தில் அனைத்தையும் இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். பலவற்றால் அடிபட்டு …

  16. வட பகுதியிலிருந்து அநுராதபுரம் ஊடாக கொழும்புக்குச் செல்லும் தனியார் பஸ்வண்டிகளில் கப்பம் கோரும் கும்பலொன்று சூட்சுமமான முறையில் செயற்பட்டுவருவதாக முறைப்பாடொன்று கிடைத்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் புதிய பஸ்தரிப்பு நிலையம் மற்றும் பழைய பஸ் தரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் வைத்தே இச்செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் மேலும் கூறினார். இவ்விடயம் குறித்து பொலிஸார் தெரிவிக்கையில், தனியார் பஸ்வண்டிகளில் கப்பம் கோரும் கும்பலொன்று ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் முறைப்பாடு செய்துள்ளனர். ஆகவே, அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். கெக்கிராவ நகரில் பஸ் வண்டியில் கப்பம் பெற்ற இருவரை கெக…

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் முரண்பாடுகளுக்கு மத்தியில் வட மாகாண சபைக்கான உறுப்பினர்களும், அமைச்சர்களும் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொள்கின்றனர். பதவிப் பிரமாணத்திற்கு முன்னதாக இன்று காலை 8.30 அளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து கௌரவித்து, பின்னர் அருகிலுள்ள வீரசிங்கம் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறுவதாக தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வட மாகாண அமைச்சரவைப் பட்டியல் நேற்று வட மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. எனினும், பட்டியல் குறித்து ஏனைய பங்காளிக்கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், சத்தியப் பிரமாண நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த ஏ…

    • 26 replies
    • 1.7k views
  18. இலங்கை விவகாரங்களில் இந்தியா தேவையின்றி தலையீடு செய்கின்றது – ஜாதிக ஹெல உறுமய 11 அக்டோபர் 2013 இலங்கை விவகாரங்களில் இந்தியா தேவையின்றி தலையீடு செய்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இராஜதந்திர ரீதியிலான தலையீடுகளின் மூலம் இலங்கையில் இரட்டை ஆட்சியை ஏற்படுத்த இந்தியா முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளது. இதனை பாரதூரமான நிலைமையாகக் கருதப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. வட மாகாணசபை முதலமைச்சரை சந்தித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் வடக்கு முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், இது சரியானதல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. முதலமைச்சர…

  19. Started by SUNDHAL,

    வடக்கில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 59000 அதிலே சும்மார் 7000 பேர் அளவில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதாக செய்தி ஓன்று கூறுகின்றது அதுவும் குறிப்பா தெற்கில் இருந்து வரும் கட்டிட தொழிலாளர்களே இந்த மாதிரி பாலியல் தொழில் அதிகரிப்பிற்கு காரணமாக இருப்பதாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ற அமைப்பின் தலைவி விசாகா தர்மசேன குறிப்பிட்டுளார்

    • 0 replies
    • 515 views
  20. கிளி­நொச்சி மாவட்­டத்தில் தினமும் இரவு வேளை­களில் ஆயு­தங்­க­ளுடன் ரோந்து நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் இரா­ணு­வத்­தி­னரால் மக்கள் அச்­ச­ம­டைந்­துள்­ளனர். வட­மா­காண சபைத் தேர்­த­லின்­போது அதி­க­ள­வி­லான இரா­ணு­வத்­தினர் சகல பகு­தி­க­ளிலும் ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­தனர். இந்த நட­வ­டிக்­கைகள் தற்­பொ­ழுதும் இடம்­பெற்று வரு­கின்­றது. அதி­க­ள­வி­லான இரா­ணு­வத்­தி­னரின் ரோந்து நட­வ­டிக்­கை­யினால் இப்­ப­குதி மக்கள் அச்­ச­ம­டைந்த நிலையில் உள்­ளனர். கிளி­நொச்­சியில் இரவு வேளை­களில் வீதி­யோ­ரங்­களில் ஆய­தங்­க­ளுடன் மறைந்து நிற்கும் இரா­ணு­வத்­தினர் வீதியில் செல்­வோ­ரிடம் சோத­னை­யிடும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளனர். பிர­தான வீதி­களில் பொலி­ஸா­ருடன் …

  21. அமெரிக்­காவின் அய­ன­மண்­டல பிர­தே­சத்தில் உரு­வாக்கம் பெற்ற பப்­பாசி செய்கை இன்று பல்ே­வறு நாடு­க­ளிலும் பயிரி­டப்­பட்டு வரும் நிலையில் மருத்­துவ குணம் நிறைந்­த­தா­கவும் காணப்­ப­டு­கின்­றது. அந்த வகையில் வவு­னியா மாவட்­டத்தில் தற்­போது பப்­பாசி செய்கை சிற­ப்பு பெற்று விளங்­கு­வ­துடன் மீள்­கு­டி­யே­றிய பிர­தேச மக்­களின் வாழ்­வா­தார தொழி­லா­கவும் காணப்­ப­டு­கின்­றது என வவு­னியா மாவட்ட பிரதி விவ­சாய பணிப்­பாளர் ஏ.சகி­லா­பாணு தெரிவித்தார். வவு­னியா மாவட்­டதின் பப்­பாசி செய்கை தொடர்பில் அவரிடம் கேட்­ட­போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து ெதரி விக்­கையில், வவு­னியா மாவட்­டத்தில் மீள்­கு ­டியே­றிய பகு­தி­களை இலக்­காக கொண்டு நாம் பப்­பாசி செய…

  22. பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரித்தானியத் தமிழர் பேரவையின் போராட்டம் பாராளுமன்ற கதவுகளை தொடர்ந்து தட்டுகிறது. நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் கமரூன், இளவரசர் சார்ள்ஸ் ஆகியோரை கலந்து கொள்ள வேண்டாமென்று, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுபினர்களை, அந்தந்தத் தொகுதி மக்களின் கையெழுத்துக்களுடன் சந்தித்து, பிரதமருக்கு அழுத்தத்தினை பிரயோகிக்குமாறு வேண்டிக் கொள்ளும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் போராட்டம் மக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தொழிற்கட்சியைச் சேர்ந்த Hayes and Harlington தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மெக்டனெல் (John McDonnell) மற்றும் Tooting தொகுதி பாராளுமன்ற …

  23. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். (படங்கள்: எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா, ரொமேஸ் மதுசங்க, பிரியந்த ஹெவகே) http://tamil.dailymirror.lk/--main/85432-2013-10-11-06-18-36.html

  24. இந்திய வீட்டுத்திட்ட வீடுகள் மண்டைதீவில் கையளிப்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க செம்பிறைச் சமாசத்தால் மண்டைதீவில் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இரண்டு வீடுகள் நேற்று முன்தினம் புதன்கிழமை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட செஞ்சிலுவைச் சங்க செம்பிறைச் சமாசத்தின் ஆசியப் பகுதி பிராந்திய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜெ.வை.சாம்பபைல், இலங்கைக்கான பிரதிநிதி எச்.ஓ.டி.இகோல் ஆகியோர் வீடுகளைத் திறந்து வைத்து உரிமையாளர்களிடம் கையளித்தனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=254042355011822766#sthash.7bVzr8FO.dpuf

  25. இராணுவத்தை அவமானப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர் – தயா ரட்நாயக்க 11 அக்டோபர் 2013 இராணுவத்தை அவமானப்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். சில நபர்களும் சில அமைப்புக்களும் உள்நாட்டு, பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் இராணுவத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சித்து வருவதாகக் குறிப்பி;ட்டுள்ளார். இந்தச் சவால்களை வெற்றிகரமாக எதிர்நோக்க வேண்டுமாயின் படையினர் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். சமயோசிதத்துடனும், புத்தி சாதூரியத்துடனும் படையினர் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறுகிய நோக்கத்துடன் இவ்வாறான சக்திகளுக்கு எதிராக செயற்பட்டால் இராணுவத்தையும், தனிப்பட்ட ரீதியிலும் பாதிப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.