ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
11 JUN, 2024 | 03:05 PM யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலாலி இராணுவ முகாமை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த, இராணுவத்தினருக்கு சொந்தமான பௌசர் வாகனம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.vir…
-
- 0 replies
- 461 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 11 JUN, 2024 | 02:00 PM தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழ் அரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை யாழில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் மாவை சேனாதிராசா தலைமையிலான தமிழ் அரசுக் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை இச் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது பிரதானமாக ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டன. இச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சி சார்பி…
-
- 2 replies
- 404 views
- 1 follower
-
-
11 JUN, 2024 | 12:58 PM கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பிரதான வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையினை பாதுகாப்பான ரயில் கடவையாக புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று செவ்வாய்க்கிழமை காலை (11) முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள் குடியேற்ற கிராமமான முகமாலை இந்திராபுரம் மக்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ளனர் . இந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையானது இதுவரை புன…
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
11 JUN, 2024 | 01:11 PM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, துணைவி பகுதியில், வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் வன்முறை கும்பல் இந்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர். வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185812
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
-
-
- 7 replies
- 594 views
-
-
11 JUN, 2024 | 03:24 PM மட்டக்களப்பு வீதி தளங்குடா பிரதேசத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோன் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் உள்ளிட்ட 3 பேர் சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை பொத்துவில் அறுகம்பையில் இருந்து வவுனியா நோக்கி வாகனத்தில் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
13வது திருத்தம் தொடர்பில் சஜித்தின் கருத்து! தாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி – பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் பிரபஞ்சம் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக வகுப்பறை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் தெரிவித்தார். அதன்படி நீங்கள் சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும், பேகராக இருந்தாலும் ஒரு தாயின் பிள்ளைகளாக கைகோர்த்து நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும். இதேவேளை 13வது திருத்தம் குறித்து பேசும் போது பல்வேறு தலைவர்கள் பயப்படுவதாகவும் அவர்கள் அரசியல் சந்தர்ப்பவா…
-
- 2 replies
- 219 views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 JUN, 2024 | 01:35 AM யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி விடுதி இலக்கம் 7 இலக்க விடுதியில் நுழைந்து அங்கு கடமையிலிருந்த தாதிய உத்தியோகத்தரை தாக்க முற்பட்ட சம்பவத்தை கண்டித்து மதியம் 12 மணி முதல் ஒரு மணிவரையன தமதி உணவு வேளையில். வைத்தியசாலையின் தாதிய உத்தியோகஸ்தர்கள் சிற்றூழியர்கள், தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். உத்தியோகத்தர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்து, ஆயுதம் தாங்கிய பொலிசாரை கடமையில் ஈடுபடுத்து, சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய், போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டம் முன்னெட…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 JUN, 2024 | 01:29 AM அராலி வடக்கு பகுதியில் 10ஆம் திகதி திங்கட்கிழமை இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்துத் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சிவகரன் மயூரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் தந்தையும், அண்ணாவும் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அவர் இன்று இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். சடலம் மீதான பிரேதப் பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/185792
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
Published By: VISHNU 10 JUN, 2024 | 08:44 PM யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை தமிழரசு கட்சியினரை சந்தித்தனர். இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு திங்கட்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது. கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் கட்சியின் சிரேஸ்ட தலைவர் சிவிகே சிவஞானம், நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தலைமையிலான குழுவினர் சந்திப்பை மேற்கொண்டனர். https://www.virakesari.lk/article/185789
-
- 2 replies
- 290 views
- 1 follower
-
-
10 JUN, 2024 | 12:49 PM தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு நாம் இறங்கி செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு தான் வேண்டும் என்பதனை இனியும் நிறுவ தேவையில்லை. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவி விட்டோம். திரும்ப திரும்ப அதனை நிறுவ தேவையில்லை. பொது வேட்பாளர் என்பது விஷ பரீட்சை என சொல்வதனை விட உதவாத விஷ பரீட்சை என்று கூட சொல்ல முடியாது. இது தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்யும் …
-
-
- 86 replies
- 6.4k views
- 1 follower
-
-
10 JUN, 2024 | 04:58 PM மக்களவைத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் தான் அதிமுக தோல்வி தழுவியதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரையில் மதுரை 293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியாவின் 3 ஆம் முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், அமைச்சர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களே கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என மன வருத்தம் உள்ளது. இந்த காரணத்திற்காகவே காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆள முடியவில்லை, வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கை…
-
- 2 replies
- 286 views
-
-
10 JUN, 2024 | 07:00 PM (எம்.நியூட்டன்) மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் குருநகரில் உயிரிழந்த மீனவர்களின் நினைவுத்தூபி அமைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள், மதகுருமார்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மீனவர்களுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டு, அஞ்சலி செலுத்தினர். 1986ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி குருநகர், இறங்குதுறையில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்கள் 31 பேரும் மண்டைதீவு கடலில் வைத்து கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். …
-
- 0 replies
- 242 views
-
-
ஓமந்தை, பனிக்கர் புளியங்குளத்தில் 235 ஏக்கர் காணி வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்துள்ளார். ஓமந்தை, பனிக்கர் புளியங்குளம் பகுதிக்கு விஜயம் செய்து காணிகளை பார்வையிட்ட பின் திங்கட்கிழமை (10) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பனிக்கர் புளியங்குளம் பகுதியில் வாழ்ந்த மக்கள் பலர் வாழ்வாதார பயிற் செய்கைக்கு நீண்ட காலமாக காணியின்றி அவதிப்பட்டனர். இந்நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்ற வகையில் வனவளத் திணைக்களத்துடன் பல தடவை பேசி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய தற்போது அம் மக்களுக்கான காணி விடுவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, ஓமந்தை, பனிக…
-
- 0 replies
- 194 views
-
-
Published By: VISHNU 10 JUN, 2024 | 07:33 PM கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பேருந்து அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்றுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தின் பிரேக் பழுதானதால் குறித்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதி விபத்து | Virakesari.lk
-
- 0 replies
- 164 views
-
-
10 JUN, 2024 | 12:16 PM (புதுடில்லியிலிருந்து லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள ஜனாதிபதி ரணல் விக்கிரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது. இன்று திங்கட்கிழமை (10) புதுடில்லியிலுள்ள ஐ.டி.சி. ஹோட்டலில் இந்த இரு தரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கூடிய விரைவில் கைச்சாத்திடப்படும் என ஜனாதிபதி ரணில் பங்களாதேஷ் பிரதமருக்கு தெரிவித்தார். அத்துடன் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இந்தக் கலந்துரையாடலில…
-
-
- 5 replies
- 393 views
- 1 follower
-
-
10 JUN, 2024 | 12:57 PM (புதுடில்லியிலிருந்து லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள ஜனாதிபதி ரணல் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (10) டில்லியிலுள்ள ஐ.டி.சி. ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
IMF இன் கடப்பாடுகளை அரசாங்கம் உரியவாறு நிறைவேற்றவில்லை! அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் மூன்றாவது கொடுப்பனவை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை எதிர்வரும் 12 ஆம் திகதி அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இலங்கை அதன் பொருளாதார மீட்சிக்கு அடித்தளமாக இருக்கும் நிர்வாக மேம்பாடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளதாக வெரிட்டே ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, 2023 டிசம்பரில் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள் 25 வீதக் கடப்பாடுகளை நிறைவேற்ற இலங்கை தவறியுள்ளதுடன், நிறைவேற்ற வேண்டிய 63 பொறுப்புகளில் 32 பொறுப்புக்கள் நிறைவேற்றியுள்ளதுடன், 16 பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என…
-
- 0 replies
- 145 views
-
-
முன்பள்ளி ஆசிரியைகளுக்கான 2,500 ரூபாய் கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய முன்பள்ளி ஆசிரியைகளின் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் முன்பள்ளி ஆசிரிய பணியில் சுமார் 34,000 பேர் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/303474
-
- 1 reply
- 475 views
- 1 follower
-
-
10 JUN, 2024 | 01:52 PM யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் வாள் என்பவற்றுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நான்கு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து சுமார் ஆயிரம் போதை மாத்திரைகளும் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/185736
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
தரமற்ற சோப்புகளை பயன்படுத்துவதால் சிசுக்களின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சோப்பை பயன்படுத்துவதாகவும், அதன் விளைவு எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் அதன் பொருளாளர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்தார். “இந்த நாட்களில் நாங்கள் குழந்தைகளுக்கு சில ஒவ்வாமைகளைப் புகாரளித்துள்ளோம். இதை ஆராய்ந்தபோது ஒரு விஷயம் புரிந்தது, தரமற்ற குழந்தை சோப்பை பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, தாய்மார்கள் குழந்தைகளுக்கான சோப்பைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய விடயம் இலங்கை தர ந…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 10 JUN, 2024 | 10:12 AM பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பிய தேர்தல்கள் ஜூன் 6 முதல் 9 வரை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் நடைபெற்றது. அதில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனின் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/185714
-
- 1 reply
- 275 views
- 1 follower
-
-
ஜேவிபியின் நேற்யை மாநாட்டில் சிஐடியின் முன்னாள் இயக்குநர் - சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் - பல முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் - மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிப்பு Published By: RAJEEBAN 10 JUN, 2024 | 11:13 AM தேசிய மக்கள் சக்தியின் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமைப்பின் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் சிஐடியின் முன்னாள் அதிகாரிகள் உட்பட ஓய்வு பெற்ற பல பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் நேற்றைய மாநாட்டில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற பொலிஸ், இராணுவ அதிகாரிகள், நீதித்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஓய்வுபெற்ற…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 09 JUN, 2024 | 08:11 PM தமது இரண்டு மாத சந்தோஷம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் பறிபோகப்போவதாக யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கவலை தெரிவித்துள்ளார். யாழில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவில் மீன் பிடி தடைக்காலம் கடந்த இரண்டு மாதங்களாக இருந்தமையால், வடபகுதி கடற்றொழிலாளர்கள் மிகவும் சந்தோஷமாக தொழில் மேற்கொள்ளக் கூடியதாகவிருந்தது. எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவில் மீன்பிடித் தடைக் காலம் முடிவடையவுள்ளது, அதனால் மீண்டும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையலாம். எனவே இந்திய…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 09 JUN, 2024 | 04:55 PM யாழ்ப்பாணம் கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அடியார்களின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகளை திருடிய பெண்ணொருவர் ஞாயிற்றுக்கிழமை (9) கைது செய்யப்பட்டார். கைதான பெண் வவுனியா பூந்தோட்டத்தில் வசிக்கும் கொழும்பு - வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். அப்பெண்ணை கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்தியபோது, திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் தங்க நகைகள் பெண்ணின் உள்ளாடைக்குள்ளிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்பெண், மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கபட…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-