ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்யுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உத்தரவிட்டதாக, புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். இந்தியா தம்மை கொலை செய்யப்போவதாக பிரபாகரன் உணர்ந்ததாகவும், இதனால் ராஜீவ் காந்தியை கொலை செய்யுமாறு உத்தரவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியா அமைதி காக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்பி வைத்ததன் பின்னர் இந்தியாவும் புலிகளும் விரோதிகளாக மாறியதாகக் குறிப்பிட்டுள்ளார். 2001ம் ஆண்டு செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுரம் மற்றும் பென்டகன் மீதான தீவிரவாதத் தாக்குதல்கள், சர்வதே…
-
- 8 replies
- 1k views
-
-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் 13 பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை முதல் இரண்டு வருட காலத்திற்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது. கலைப்பீடத்தில் கல்வி பயிலும் இரண்டு மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினைத் தொடர்ந்து நான்காம் வருட மாணவர்கள் ஆறு பேர், மூன்றாம் வருட மாணவர்கள் ஏழு பேர் உள்ளடங்கலாக 13 மாணவர்களுக்கு யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்றுப் பிரிவினரால் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் அனைவரும் விடுதி உட்பட கற்றல், பல்கலைக்கழக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரையும் மீள பல்கலைக்கழக வளாகத்திலுள் சேர்க்குமாறு வலுயுறுத்தி கலைப்பீட மாணவர்கள் கால வரையற்ற பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்…
-
- 0 replies
- 315 views
-
-
இலங்கை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளை மீறிச் செயற்பட்டு வருவதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பிரித்தானியா பங்கேற்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்யுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சாரா சம்பியான் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=92796&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 685 views
-
-
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் சுவீகரிக்கப்பட்ட காணிகள் எதிர்காலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் அமைப்பதற்குப் பாவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவயிலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரையில் தற்போது மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது. கூட்டமைப்பின் வெற்றிக்காக அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு மக்கள் வந்துள்ளதாக …
-
- 0 replies
- 412 views
-
-
கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை! [Friday, 2013-09-13 20:19:52] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் வழங்கப்படுவதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் வேரவில் பிராந்திய அரச மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. வலைப்பாடு, வேரவில், கேரஞ்சி ஆகிய கரையோர கிராமங்களில் வசிக்கும் பெண்களே இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 30ம் திகதி வேரவில் பிரதேச மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்கள், தொண்டர்கள் ஆகியோர் குறித்த மூன்று கிராமங்களுக்கு சென்று அங்குள்ள குடும்பங்களில் 5 வயதான குழந்தைகளில் எடை குறைந்து காணப்பட்டால் கட்டாயம் மருத்துமனை…
-
- 0 replies
- 562 views
-
-
- சுதந்திரமான அனைத்துலக விசாரணையை வேண்டியும், - ஜெனீவாவில் எதிர்வரும் செப்ரம்பர் 16.2013இல் நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டனப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், - இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டியும், கனடியத் தமிழர் தேசிய அவை மாபெரும் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. கனடா வாழ் அனைத்துத் தமிழ் மக்களையும் இப்பேரணியில் உணர்வுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது. இடம்: அமெரிக்கத் துணைத்தூதரகம் காலம்: திங்கட்கிழமை 16 செப்ரம்பர் 2013 நேரம்: மதியம் 3:00 மணிதொடக்கம் மாலை 7:00 மணிவரை தொடர்புகளுக்குக் கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) தொலைபேசி :1 866 263 8622 -416 830 7703 மின்னஞ்சல் : info@ncctcanada.ca இணையத்தளம் : WWW.ncctc…
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருவதாக அமெரிக்க செனட்டர் ஜோன் மெக்கேன் தெரிவித்துள்ளார். பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்கா காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்யுள்ளார். சிறுபான்மை, பெரும்பான்மை இன சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு ஆதரவளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையுடன் அமெரிக்கா சுமூகமான உறவுகளைப் பேணி வருவதாகத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சரியான உள்…
-
- 0 replies
- 446 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கான தீர்வுகள் வலையமைப்பினால் நடாத்தப்பட்ட 2013ஆம் ஆண்டுக்கான உலகில் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளின் வரிசையில் இலங்கை 137 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. அதன்படி நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கான தீர்வுகள் வலையமைப்பு நாடுகளில் 156 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இலங்கை இறுதி 20 நாடுகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் உலகில் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளில் முதலிடத்தை டென்மார்க்கும் இறுதியில் மாலி, உகண்டா, பலஸ்தீனம், சூடான், சிம்பாவே மற்றும் கெயிட்டி ஆகிய நாடுகளும் காணப்படுகின்றன. இதேவேளை, இலங்கையில் உள்ள மக்கள் சுனாமி மற்றும் உள்நாட்டு யுத்தங்கள் என்பனவற்றினால் ப…
-
- 3 replies
- 412 views
-
-
நாட்டைப் பிரிக்கச் சொல்லி ஒரு போதும் கூட்டமைப்பு கோரவில்லை. நாங்கள் கேட்பதெல்லாம் நம்மை நாமே ஆளக் கூடிய சமஷ்டி ஆட்சியைத்தான். அது எங்களின் சுய நிர்ணய உரிமையும்கூட. பிரிவினை வாதத்துக்கும் சமஷ்டிக்குமான வித்தியாசம் சட்டம் பயின்றவரான ஜனாதிபதிக் குக்கூட தெரியவில்லையா? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன். கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டம் அராலி தெற்கு மாவத்தை மைதானத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவான் தலைமையில் நடைபெற்றது. இதில் முலமைச்சர் வேட்பாளர் மேலும் தெரிவித்தாவது: வவுனியாவுக்கு வந்த மஹிந்த ராஜபக் அங்கு வைத்து "பிரபாகரன் கேட்டதைப் போலவே நாட்டைப் பிரிக்கச்சொல்லி கூட்டமைப்பும் கேட்கிறது'' என்று…
-
- 0 replies
- 603 views
-
-
பசில் கொடுத்த அடியால்!! தர்மசங்கடத்தில் தினறிய தாயமாஸ்ர் …?? விடுதலைப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தி வரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னால் ஊடக இணைப்பாளர் தாயா மாஸ்ரருக்கு பசில் ராஜபக்ச பெரும் அவமானத்தை யாழில் உண்டுபண்ணியுள்ளதாக யாழிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் வடமாகாணசபை தேர்தல் பிரச்சார நடடிக்கைகளிற்காக யாழ்ப்பாணத்தினில் தங்கியுள்ள பசில் ராஜபக்சவை சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள தயாமாஸ்டர் மேற்கொண்ட முயற்சி பிசுபிசுத்துப்போயுள்ளது. அவரது கையினை தட்டிவிட்டு பசில் அங்கிருந்து வேகமாக வெளியேறிய அவமானகரமானதும் பரிதாபமும் அங்கு அரங்கேறியது. வடக்கு தேர்தல் தொடர்பான ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரச்சார பத்திரிகையாளர் மாநா…
-
- 1 reply
- 569 views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்ட பாதுகாப்பு மாநாட்டில் லண்டனில் இருந்து சென்ற ஈழவாதியான கண்ணன் என்பவர் எப்படி கலந்து கொண்டார் என்பது குறித்து இராணுவப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இணையத்தளம் ஒன்றின் உரிமையாளரான இவர் பாதுகாப்பு மாநாட்டில் இருக்கையில் அமர்ந்திருந்தமை குறித்து லண்டனில் உள்ள புலிகளுக்கு எதிரானவர்கள் ஆச்சரியமடைந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. மாநாட்டில் கலந்து கொண்ட இராணுவ அதிகாரிகளும் கண்ணன் யார் என்பது தெரியவரவில்லை. எனினும் மாநாட்டில் எடுக்கப்பட்ட இராணுவத்தினரின் வீடியோ படங்களில் அவர் இருப்பது தெரியவந்துள்ளது. கண்ணனின் ரகசிய இலங்கை விஜயம் தொடர்பில் பிரித்தானியாவின் இல…
-
- 0 replies
- 341 views
-
-
முன்னாள் விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட அரசியல் தலைவராக செயல்பட்ட ரொபட் என்றழைக்கப்படும் பேரின்ப மூர்த்தி சிவநாதன் ராஜா உள்ளிட்ட 25 பேர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்துகொண்டுள்ளதாக மகிந்த அரசாங்கத்திற்குச் சார்பான கொழும்பு ஊடகவமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மன்னார் பொது விளையாட்டரங்கில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டத்திலேயே இவர்கள் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரப்பினர் எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கூட்டமைப்பிற்கு பூரண ஆதரவு வழங்குவதற்கு இவர்கள் தீர்மானித்துள்ளதாக அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனைத் தவிர ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பிரன்க…
-
- 1 reply
- 460 views
-
-
பிரபாகரன் கேட்டதையே தமிழ்தேசிய கூட்டமைப்பும் கேட்பதாக சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து மிகவும் வெட்கத்திற்குரியது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சட்டம் படித்ததாக கூறிக்கொள்ளும் ஒருவருக்கு தனிநாட்டு கோரிக்கைக்கும், சமஷ்டிக்கும் வித்தியாசம் தெரியாதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் சீ.வி.விக்னேஸ்வரன். யாழ்.நாவாந்துறை முத்தமிழ் கலையரங்க அரங்கில் நடைபெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னதாக யாழ்.மாவட்டத்தில் வீரம் செறிந்த நாவாந்துறை மண்ணில் வந்து மறவர்கள் முன்னிலையில் உரையாற்ற கிடைத்த சந்தர்ப்பத…
-
- 0 replies
- 410 views
-
-
ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களால், தேர்தல் காலத்தில் எவருக்கும் அரச காணிகளோ வேறெந்த சலுகைகளோ வழங்கப்படாது என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே அரச நிர்வாகத்தால் வவுனியாவில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட தினத்தின் பின்னர் தேர்தல் ஒழுங்கு விதிகளை மீறி இறம்பைவெட்டி தமிழ்க் கிராமத்தில் காணிகள் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபைத் தேர்தலின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், பூர்வீகத் தமிழ்க் கிராமமான இறம்பைவெட்டி, 'அக்போபுர' என தனிச் சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரின் ஊடக அறிக்கை…
-
- 0 replies
- 206 views
-
-
கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிலிருந்து 120 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 1996ஆம் ஆண்டு பயங்கரவாத சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றிலிருந்தே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. லொறியில் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 கிலோ கிராம் எடையுடைய ரீ.என்.ரீ. வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பழுந்தடைந்த லொறியை பெக்கோ ஒன்றில் அகற்றும் போது இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பு நகரில் தாக்குதல் நடத்த இந்த வெடிபொருட்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. http://tamilworldtoday.com/home
-
- 1 reply
- 466 views
-
-
இலங்கையின், யாழ்ப்பாணம் பகுதியில், சீன வர்த்தக நிறுவனங்கள் முழுவீச்சில் கால்பதிக்க உள்ளன. இலங்கையில், எதிவரும் நவம்பர் மாதம், காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல் நடைபெறுவதால், இந்த மாநாட்டை கனடா நாடு புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இதேபோல், இந்தியாவும் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என, தமிழகத்தில் உள்ள கட்சிகள், பிரதமர் மன்மோகன் சிங்கை வற்புறுத்தி வருகின்றன. இந்த மாநாட்டையொட்டி, காமன்வெல்த் நாடுகளின் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், காமன்வெல்த் அமைப்பில், உறுப்பினர்களாக இல்லாத நாடுகளும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சீனா, தங்கள் நாட்டைச் சேர்ந்த, 120 வர்த்தக நிறுவன பிரதி…
-
- 0 replies
- 408 views
-
-
யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தி பற்றி அரசாங்கம் பேசினா லும் மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. கைப்பற்றப்பட்ட பொதுமக்களுடைய காணிகள் அவர்களிடம் இன்னும் கையளிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க, அரச ஆதரவாளர்களுக்கும் அடிவருடிகளுக்கும் காணிகளை அரசாங்கம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே, பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தகுதி வாய்ந்த ஐக்கிய தேசிய கட்சிக்கே வடபகுதி மக்கள் இந்த மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று நேற்று வவுனியா மதகுவைத்தகுளத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரி…
-
- 2 replies
- 638 views
-
-
கொழும்பில் இடம்பெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்குமாறு அத்துரலியே ரதண தேரர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள தேசிய இயக்கங்களில் ஒன்றியதின் ஏற்ப்பாட்டில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பொது நலவாயம் என்பது உலகில் மக்களின் சுதந்திரத்தை இல்லாமல் செய்து, அடிமைத்தனத்தை ஏற்படுத்திய மேலாதிக்க வாத கொள்கைகளை கொண்ட அமைப்பு என்றும் இந்த அமைப்பு ஒன்று கூடுவதில் ஒரு பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார் பொதுநலவாய நாடுகளை பகைத்துக் கொண்டால் பிரச்சினை என்று சிலர் கூறுவது தவறு என்றும் பொதுநலவாய நாட்டு தலைவர்கள் வரும் போது அவர்களுக்கு எதிராக பதாதைகளை ஏந்தி நிற்கவேண்டும் என்றும் அவர்…
-
- 1 reply
- 444 views
-
-
யாழ் மாநகர சபை மற்றும் வட மாகாண சபையினால் 22 மில்லியன் ரூபா செலவில் யாழ் கொம்பயன்மணல் மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மின் தகன இந்து மாயானம் இன்று புதன்கிழமை யாழில் திறந்துவைக்கப்பட்டது. அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினால் மின்தகன மாயனம் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, மாநாகர சபை ஆணையாளர் பிரணவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர். http://www.ilankainet.com/2013/09/blog-post_7613.html
-
- 6 replies
- 830 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை தேர்தல் விஞ்ஞாபனம் கவலையளிப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அன்று முன்வைத்த கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்று தேர்தல் விஞ்ஞாபனமாக வெளியிட்டுள்ளனர். இதற்கு எதிராக வழக்கு தாக்கல்கள் செய்ய சில அமைப்புக்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மேலும் வடமாகாண தேர்தல் பிரச்சார பணிகள் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல த…
-
- 0 replies
- 556 views
-
-
இலங்கை யுத்தம் குறித்த அறிக்கை மீளாய்வு செய்யப்படுவதாக ஐக்கிய நர்டுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து அண்மையில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர், பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். மீளாய்வின் பின்னர் முழு அறிக்கையும் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தே கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்…
-
- 2 replies
- 651 views
-
-
நாட்டை துண்டாடுவதற்கு எந்த தரப்பினருக்கும் இடமளிக்கப்படாது என மஹிந்த தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ´இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஆட்சி நடத்த ஏனைய மாகாணங்களுக்கு வழங்கிய அதிகாரங்களே இந்த மாகாணத்திற்கும் (வட மாகாணம்) வழங்கியுள்ளோம். இன்று சிலரது தேர்தல் விஞ்ஞாபனங்களை எடுத்துப் பார்க்கும்போது நான்கு வருடங்களுக்கு முன் இருந்த கோரிக்கைகளே மீண்டும் விடுக்கப்படுகிறது.அவர்களுக்கு நான் விசேடமாக ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நாட்டை துண்டு துண்டாக பிரிக்க இடமளிக்கப்படாதது போன்று உங்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாது. அதனை தெளிவ…
-
- 2 replies
- 909 views
-
-
வடமாகாண சபையின் உறுப்பினர்கள் ஆவதன் முன்பே கட்டுக்கடங்காத அடாவடித்தனம் என்றால் உறுப்பினரானால்??? இலங்கைத் தொலைத் தொடர்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்களினால் தாக்கப்பட்டு உள்ளார். இன்று வியாழக்கிழமை (12.08.13) காலை யாழ்.கஸ்தூரியார் வீதியில் தொலைபேசித் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த கட்சி சார்பாக சார்பாக யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் அங்கஜனின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் அவர் தாக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொலைத் தொடர்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த இந்த ஊழியர் எதுவித காரணமுமின்றி அங்கஜனின் அடியாட்களால் தாக்கப்பட்டுள்ளதை தொடர்புடைய அவரது அலுவலக வட்டாரங்கள் குளோபல் தமிழ்ச்…
-
- 1 reply
- 804 views
-
-
மாத்தளை மாவட்டம் தம்புள்ள புனித பூமி அபிவிருத்தி திட்டம் தொடர்பாக புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வரை படத்திலும் தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலை அகற்றுவதற்கு அடையாளமிடப்பட்டுள்ளதாக நிர்வாகம் கவலை வெளியிட்டுள்ளது. அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி, பெருநிலப்பரப்புப் பகுதியொன்று புனித பூமியாக தற்போது நாடு நகர அபிவிருத்தி அதிகார வாரியத்தினால் அடையாளமிடப்பட்டுள்ளதாகப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர். கடந்த வருடம் பௌத்த கடும்போக்காளர்களினால் இந்த பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாகியிருந்தது. ஏற்கனவே அடையாளமிடப்பட்ட பகுதியில் மக்கள் குடியிருப்புகளும், கட்டிடங்களும், நாடு நகர அபிவிருத்தி அதிகார வாரியத்தினால் சில வாரங்களுக்கு முன்னர் அகற்றப…
-
- 0 replies
- 412 views
-
-
கடந்த மே மாதம் 22ஆம் திகதி படகு மூலம் ஒஸ்ரேலிய புறப்பட்டு காணாமல் போனவர்களில் சிலர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. 3 படகுகளில் புறப்பட்ட 240பேர் பற்றிய தகவல் தெரியாத நிலையில் அவர்களின் குடும்பத்தினர் கவலையடைந்திருந்தனர். காணாமல் போனவர்களில் ஒரு தொகுதியினர் சோமாலிய கடல் படையினரால் கைது செயப்பாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்களை காப்பாற்றுமாறு மன்னரை சேர்ந்த ஒருவர் தொலைபேசி மூலமாக தொடர்பு ஏற்படுத்தி தகவலை தெரிவித்துள்ளார். http://www.thinakkathir.com/?p=52350#sthash.JIHKB1Ig.dpuf
-
- 0 replies
- 337 views
-