Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியில் மகிந்த ராஜபக்சவின் அடியாட்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த ஆறாம் திகதி வர்த்தகர் ஓருவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். வெண்சுருட்டு (சிகரட்) கேட்ட ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கு அதனை வழங்க மறுத்தமையாலேயே மேற்படி வர்த்தகரைக் கடுமையாகத் தாக்கிய மேற்படி ஆதரவாளர்கள் அவரது சட்டைப் பையில் இருந்த 43 ஆயிரம் ரூபா பணத்தையும் அபகரித்துச் சென்றுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த மேற்படி வர்த்தகர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி இரத்தினபுரம் பகுதியில் கடந்த 6 ஆம் திகதி இரவு இரண்டு வ…

  2. ஐ.நா முன்றலில் தமிழர்கள் அனைவரும் இணைந்து நடத்தும் ஒன்று கூடல் சிறீலங்காவிற்கு ஒரு எச்சரிக்கையாக மாறவேண்டும் அந்தளவிற்கு ஜரோப்பா வாழ் மக்கள் ஐ.நாவில் திரளவேண்டும் என்று இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அழைப்புவிடுத்துள்ளார். இனப்படுகொலை நடந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலம் அதற்கான நீதி கிடைக்கவில்லை இரண்டரை இலட்சம் உயிர்களுக்கு இன்னம் பதில்சொல்லப்படவில்லை சீரழிக்கப்பட்ட 90ஆயிரம் சகோதரிகளுக்கு நியாயம் இன்றும் கிடைக்கவில்லை அந்த நீதிக்காக நாங்கள் தொடர்ந்தும் பாடுபட்டு வருகின்றோம். ஆனால் இன்றுவரை நீதிகிடைக்கவில்லைஇன்னிலையில் ஐ.நாவில் மனிதஉரிமைகள் கூட்டதொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது சிறீலங்கா ஒரு மிகப்பெரிய மனிதகுல பகைவன் என்பதை எடுத்துக்காட்டுகின்றது நவீம்பிள்ளையின…

  3. கூட்டமைப்பு மற்றும் வடக்கின் மீதான ஜனாதிபதியின் அதீத கரிசனையால் எழுந்த கேள்வி இது... விக்னேஸ்வரனை ஏன் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்தார்கள்? ஜனாதிபதி ஓய்வு பெற்ற நீதவான் சீ.வீ.விக்னேஸ்வரனை ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராக நியமித்தது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் ஊடகவியாளர்களின் பிரதானிகளுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். விக்னேஸ்வரன் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும், அவருக்கு வடக்கு கள நிலவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாவை சேனாதிராஜா அல்லது சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோரில் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கு…

  4. ஊடகவியலாளர்களிடம் காட்டிய ஜனாதிபதி இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் அரபு நாடுகளில் சஞ்சிகைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் நன்மதிப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் சில அரபு நாடுகளின் விமான நிலையங்களில் சஞ்சிகைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பில் கண்காணிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஊடகவியலாளர்களை ஜனாதிபதி சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் முஸ்லிம் பெண்களை தாக்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். விநியோகம் செய்யப்படும் சஞ்சிகையை ஜனாதிபதி, ஊடகவியலாளர்களிடம் காண்பித்துள்ளார். http://globaltamilnews.net…

  5. விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான ஆரம்ப விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருக்கின்றது. இறுதி யுத்தத்தின்போது கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி எழிலன் உட்பட பெரும் எண்ணிக்கையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அராசங்கத்தின் பாதுகாப்பு உறுதி மொழியை ஏற்று இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தாங்கள் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை இராணுவத்தினரிடம் கையளித்ததாகவும், இராணுவத்தினர் அவர்களைப் பொறுப்பேற்று, தமது பஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்றதாகவும்,அவர்கள் இன்னமும் தி…

  6. இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவின் மூன்று பேர் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் இரகசிய நடவடிக்கை ஒன்றுக்காக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இருந்து சென்று லண்டனில் நேற்றிரவு இறங்கிய விமானத்தில் இவர்கள் சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, லண்டன் ஹித்ரோ விமான நிலையத்திற்கு சென்ற இவர்களை வரவேற்க லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் சிலர் சென்றிருந்தனர். இவர்கள் எந்த வகையான இரகசிய நடவடிக்கைக்காக லண்டன் சென்றனர் என்ற தகவல் வெளியாகவில்லை. இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி ( ஆர்.டி.எப்) தற்போது எல…

  7. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் அவர்களால் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போய்விடும’ என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். ‘எதிர்கால சந்ததியினர் துப்பாக்கியும் சயனைட்டும் ஏந்தும் நிலைக்கு அவர்களை தள்ளாதீர்கள். அவர்களின கைகளில் புத்தகமும் கொப்பியும் கொடுத்து வளவான எதிர்கால சந்ததியினரை உருவாக்க முன்வாருங்கள்’ என்றும் அவர் வேண்டுகோள் விடுததார். வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடம் சுபியான் மௌலவியின் ஏற்பாட்டில் யாழ். மாணிப்பாய் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிய…

  8. பிரிவினைவாதத்தை தூண்டும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என விமல் தமிழர்களிடம் கோரிக்கை 12 செப்டம்பர் 2013 பிரிவினைவாதத்தை தூண்டும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என, அமைச்சர் விமல் வீரவன்ச தமிழ் வாக்காளர்களிடம் கோரியுள்ளார். இனவாத கோட்பாடுகளை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் தமிழ் வேட்பாளர்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தேசியக் கொடியில் சிங்கத்திற்கு பதிலாக புலியை பொறிக்க வேண்டுமென கோரியதாகவும் அவ்வாறானவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரத்தின் பின்னர் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்…

  9. மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள சிறுதோப்பு கிராமத்தில் அமைந்துள்ள சிறுதோப்பு ஆலயம் ஒன்றிற்குச் சொந்தமான 17 ஏக்கர் காணியில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை குறித்த காணியை விட்டு வெளியேறுமாறு கோரி சிறுதோப்பு கிராம மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இன்று காலை 9 மணியளவில் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள சிறுதோப்பு ஆலயத்திற்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள கஜபா கடற்படை முகாமிற்கு முன் அமைதியான முறையில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமிம் சம்பவ இடத்திற்கு வருகைதந்து மக்களுடன் கலந்…

  10. மலையக மக்கள் இருநூறு ஆண்டுகால வரலாற்றின் மக்கள். மலையக தேசத்தை உருவாக்கிய சிற்பிகள். வியர்வையே நமது முதலீடு. நாம் அடைந்தது என்ன? இன்று வடக்கு கிழக்கு பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டு உலக நாடுகள் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வரும் நிலையில் மலையக மக்கள் சர்வதேச அரங்கில் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள ஒரு துரதிஸ்டவசமான காலப்பகுதியில் மலையக அரசியல் தலைவர்களை நோக்கி பகிரங்க கடிதம் ஒன்றை எழுதுவதை மலையக சிவில் சமூகம் தமது தலையாய கடமையாக கருதுகிறது. அதனால் மலையக சிவில் அமைப்புகளான மலையக சமூக ஆய்வு மையம், அடையாளம், மலையக பாட்டாளிகள் கழகம் ஆகியன மலையக தலைவர்களை நோக்கி காலத்தின் கட்டாயத்தில் திறந்த மடல் ஊடாக கேள்விக் கணைகளை தொடுக்கின்றன. அறிமுகம் பிரித்தானியர்களின் தேவைக்…

  11. இலங்கைக்கு யுத்தக் கப்பல்களை வழங்க வேண்டாம் என ஜெயலலிதா, மன்மோகனிடம் கோரிக்கை 12 செப்டம்பர் 2013 இலங்கைக்கு யுத்தக் கப்பல்களை வழங்க வேண்டாம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இரண்டு யுத்தக் கப்பல்களை இலங்கைக்கு வழங்க இந்திய மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள், இனச் சுத்திகரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடே தமிழகம் முழுவதிலும் பரவலாகக் காணப்படுகின்றது என ஜெயலலிதா சுடு;டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள…

  12. விக்னேஸ்வரன் கொழும்புக்குத் திரும்ப முடியாது - ராவண பலய எச்சரிக்கை [ வியாழக்கிழமை, 12 செப்ரெம்பர் 2013, 00:55 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்று, சிறிலங்கா தேர்தல் ஆணையாளரிடம் சிங்கள அடிப்படைவாத அமைப்பான ராவண பலய கோரிக்கை விடுத்துள்ளது. ராவண பலயவின் பொதுச்செயலர் வண.இத்தேகண்டே, சத்ததிஸ்ஸ தேரர் கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, “எனது தலைமையிலான ராவண பலய அமைப்பினர் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்து, வடக்கு மாகாணசபைத் தேர்தலை சட்டபீர்வமாக நடத்தும்படி கேட்டுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறும் வகை…

  13. புளத்சிங்கள ஏகல்ஓயா விஹாரைக்கு இன்று அதிகாலை வேளையில் தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் விஹாராதிபதி தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புளத்சிங்க பொலிஸார் தெரிவித்தனர். கிராமத்திற்கு இரண்டு விஹாரைகள் தேவையில்லை என்று புளத்சிங்கள பிரதேச சபைத்தலைவர் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். http://www.seithy.com/breifNews.php?newsID=92661&category=TamilNews&language=tamil

  14. "தமிழ்க்கூட்டமைப்பு வெற்றிபெற்றாலும் ஆட்சியமைக்க அனுமதியோம்" ஹெல உறுமய எச்சரிக்கை 12 செப்டம்பர் 2013 வட மாகா­ண­சபை தேர்­தலில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வெற்றி பெற்­றாலும் ஆட்­சி­ய­மைக்க இட­ம­ளியோம். அர­சி­ய­ல­மைப்பை மீறிச் செயற்­ப­டு­வ­தோடு மாத்­தி­ர­மின்றி சம்­பந்தன் குழு­வினர் நாட்டின் இறை­யாண்­மையை அச்­சு­றுத்தும் வகையில் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தையும் வெளி­யிட்­டுள்­ளனர். இதற்கு எதி­ராக நீதி­மன்­றத்­திற்கு செல்­வ­துடன் பாரா­ளு­மன்­றத்­திலும் நட­வ­டிக்கை எடுப்போம் என்று ஜாதிக ஹெல உறு­மய அறி­வித்­துள்­ளது. அப்­பாவி தமிழ் இளை­ஞர்­களை தூண்டி விட்டு மீண்டும் பலி­க்க­டா­வாக்கும் செயற்­பாட்­டி­லேயே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இரத்­த­வெறி கொண்டு அலை­கின்­றது. சிங்­கள…

  15. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முரண்பாட்டு அரசியலை ஊக்குவிக்கின்றது – சஜித் 12 செப்டம்பர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டில் முரண்பாட்டு அரசியலை ஊக்குவித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். சூரியவௌ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளவும் பிரிவினைவாத கோட்பாடுகளை கொள்கைகளை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் வெற்றியீட்டினால் நேரடியாக வடக்கிற்கு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்வதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாகவும் இது சட்டவிரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தன…

  16. பிரித்தானிய செனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலம் மெக்ரே இலங்கை வரவுள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவே அவர் இலங்கை வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கெலம் மெக்ரே ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்டிருந்தார். இதனால் இலங்கையிலும் உலகம் முழுவதும் பாரிய சர்ச்சை கிளம்பியது. இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்த செனல் 4 ஆவணப்படங்களே உந்துதலாக இருந்தன என்றும் கூறலாம். ‘‘யுத்த சூனிய வலயம்‘‘, ‘‘இலங்கை கொலைக்களங்கள்‘‘, ‘‘இலங்கை கொலைக்களங்கள் தண்டிக்கப்படாத குற்றங்கள…

  17. இலங்கையில் தமிழர்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர ஆசைப்படுகிறார். விரைவில் சென்று வருவார். தமிழர் களின் வாழ்நிலை நன்றாக இருக்கும் என்று மத்திய இணையமைச்சர் சுதர்சனநாச்சியப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோஜா இல்லத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கச்சத்தீவில் இந்தியா - இலங்கை இணைந்து தொழில் மையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கச்சத்தீவை இந்தியா கேட்டு பெறும் பட்சத்தில் இந்தியாவின் அனுபவத்தில் உள்ள …

  18. வடமாகாண சபைத் தேர்தலை கண்காணிக்க இரு சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு நாளை இலங்கை செல்ல உள்ளது 12 செப்டம்பர் 2013 வடக்கு மாகாண சபைத் தேர்தலை கண்காணிக்க இரண்டு சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு நாளைய (13) தினம் இலங்கை செல்ல உள்ளது. தெற்காசிய நாடுகளை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவும் பொதுநலவாய அமைப்பு நாடுகளை சேர்ந்த 07 பேர் அடங்கிய குழுவும் நாளை இலங்கை செல்ல உள்ளன. இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் வீ. கோபாலசாமி தலைமையிலான தெற்காசிய நாடுகளின் கண்காணிப்பு குழுவில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த தலா 05 பேரும் பங்களாதேஷ், நேபாளம், மாலைத்தீவு, பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் நாளை மறுதினம் இலங்கை தேர்தல் ஆணையாளர் …

  19. நியுயோர்க்கில் கொமன்வெல்த் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டம் – பீரிசுக்கு காத்திருக்கும் நெருக்கடி [ வியாழக்கிழமை, 12 செப்ரெம்பர் 2013, 01:23 GMT ] [ தா.அருணாசலம் ] கொமன்வெல்த் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம், வரும் 26ம் நாள் நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், சிறிலங்காவில் நடக்கவுள்ள கொம்ன்வெல்த் மாநாடு தொடர்பாக, உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விளக்கிக் கூறவுள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க கொமன்வெல்த் வெளிவிவகார அமைச்சர்கள் நியுயோர்க் செல்கின்றனர். இதன்போது ஐ.நா தலைமையகத்தில் கொமன்வெல்த் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில், கொமன்வெ…

  20. வடமேல் - வட மாகாண ஆளுநர்களை அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகுமாறு தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு : 12 செப்டம்பர் 2013 வடமேல் மாகாணம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர்கள் தமது பதவியின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், அந்த அரசியல் பணிகளில் இருந்து உடனடியாக விலகுமாறு தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சிகளின் செயலாளர் ஊடாக அறிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ பலல்ல ஆகியோர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் மேடைகளில் ஏறி பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன. இலங்கையின் அரசியல் அமைப…

  21. சிறிலங்காவில் பத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத முஸ்லிம் அமைப்புகள்! - பொதுபலசேனா குற்றச்சாட்டு!! இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளான ஹமாஸ் மற்றும் அல் குவைதா அமைப்புகளுக்கு பெரும் நிதியுதவி வழங்கிவரும் யூசுப் அல் கர்த்தாவுடன் முக்கியமான சிறிலங்காவின் முஸ்லிம் அமைச்சர் ஒருவரும் முஸ்லிம் அமைப்பொன்றின் தலைவரும் தொடர்பினை மேற்கொண்டு வருவதாகவும், தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்துவரும் யூசுப் அல்கர்த்தாவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் இவர்கள் தொடர்பிலான தகவலை தேவை யேற்படின் வெளியிடுவோமென சிறிலங்காவின் இனவாத அமைப்பான பொதுபலசேனா தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டில் இஸ்லாமியத் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பில் தாம் வழங்கிய தகவல்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு செயற்பட்ட சிறிலங்க…

  22. விடுதலைப்புலிகளின் உதவியுடனேயே 2005இல் அரசாங்கம் ஆட்சி அமைத்தது: ஐ.தே.க 12 செப்டம்பர் 2013 ஐக்­கிய தேசி­யக்­கட்சி அர­சாங்­கத்­தினை அமைக்கும் என்­பது வெறும் வார்த்­தை­யல்ல அடுத்த ஆண்டில் அர­சாங்­கத்­தினை அமைப்­ப­தற்­கான ஒரு ஆரம்­ப­மா­கவே இம்­முறை மாகாண சபைத் தேர்­தல்கள் அமையப் போகின்­றன என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார். வடக்கில் விடு­தலைப் புலி­க­ளுடன் இணைந்து ஆட்­சி­ய­மைக்க ஐக்­கிய தேசி­யக்­கட்சி முயல்­கின்­ற­தென அர­சாங்கம் குறிப்­பி­டு­கின்­றது. ஆனால் கடந்த தேர்­தலில் புலி­களின் உத­வி­யோடே அர­சாங்கம் ஆட்சி அமைத்­தது என்­ப­தையும் மறந்து விடக்­கூ­டாது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்…

  23. தம்மைப்பற்றியும் ஏனைய அரசியல் வாதிகளைப்பற்றியும் விமர்சிப்பதற்கு யாழ்ப்பாண பாதுகாப்பு கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவிற்கு எவ்வித உரிமையும் கிடையாது என வடமாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்ணேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொக்குவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யாழ் பாதுகாப்பு இராணுவ கட்டளைத் தளபதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் யாழ்ப்பாணத்தில் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தலையிடுவது குறித்து மனோகணேசன் முன்வைத்த விமர்சனம் தெரிவித்தமைக்கும், வடக்கிலுள்ள அரசியல் வாதிகள் தொடர்பாக வெளியிட்டுள்ள…

    • 0 replies
    • 476 views
  24. சிவில் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளிடமிருந்து அறவிடும் 972/- ரூபாவுக்கு என்ன நடக்கிறது என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிவில் பாதுகாப்புப் பிரிவுடன் தொடர்புபட்டு கடமையாற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் ஊழியர் நம்பிக்கை நிதியம் எனக் கூறி 972 ரூபா அறவிடப்படுவதாகவும் இதுவரை அதற்கான பீ காட் பத்திரம் வழங்கப்படவில்லையென அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அந்த அதிகாரிகள் குறித்த தொழில் திணைக்களத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, அவ்வாறான நிதி தமக்கு கிடைக்கப்படவில்லையென தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. என்றபோதிலும் தேர்தல் காலத்தில் மாத்திரம் தமது சேவையை நிரந்தரமாக்குவதாக கூறுவதாக தெரிவித்த போதிலும் தேர்தலின் பின்னர் அந்த கதையைப் பற்றியே கவனத்திலேயே எடுத்துக் கொள்ளவில்லை. தற்போ…

    • 0 replies
    • 289 views
  25. விக்கினேஸ்வரனுக்கு பயப்படும் மகிந்த சகோதரர்களும் வடக்கு மக்களில் காட்டும் திடீர் பாசமும் 11 செப்டம்பர் 2013 வடபகுதியில் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் வேட்பாளர் இல்லை: பஷில் அபிவிருத்திமீது தமிழ் தேசியக்கூட்டமைப்பு அக்கறை கொண்டிருந்தால் வடக்கில் உள்ள ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பு தெரிவுசெய்திருக்கும் எனத் தெரி­வித்த பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷஇ வட­மா­கா­ணத்தில் அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்ற அபி­வி­ருத்திப் பணி­களை மேலும் விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு சகல மக்­களும் ஒன்­றி­ணைந்து இந்த அர­சாங்­கத்­துக்கு ஆணையை வழங்க வேண்டும் எனவும் வேண்­டுகோள் விடுத்தார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு அக்­க­றை­யின்­மை­யா­லேயே இந்த நிலை காணப்­ப­டு­கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.