Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொலைக் குற்றவாளியாக இந்திய அரசால் தேடப்படும் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களுக்காகக் குரல்கொடுத்தால் தனக்குப் பொது மன்னிப்புக்கிடைக்கும் என்ற நப்பாசையில் நாடகமாடுகிறார். இவரது கபட நாடகத்தை எவரும் நம்பமாட்டார்கள், இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். வல்வெட்டித்துறையில் நடை பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: அண்மையில் நான் இந்தப் பிரதேசத்திற்கு வந்தபோது, டக்ளஸ் தேவானந்தா ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். இந்திய மீனவர்கள் மீது தனக்கு கரிசனை உள்ளது போல் காட்டிக் கொள்வதாக அந்தச் செயற்பாடு இருந்தது. இப்படிச் செய்தாலாவது தன்னைக் கொலைக்…

  2. "அப்படியானால் காணாமல் போன தந்தையை தேடி அழுது கொண்டிருக்கும் 3 பெண் குழந்தைகளின் தாய் என்ற வகையில் கணவரது வருகை எனக்கு சுயநலம் மிக்கது ஒன்றே" இலங்கை அரசு ஒரு புறம் நீதியானதும் நேர்மையானதுமானதேர்தல் பற்றி கதைக்கின்றது.அரசின் முக்கிய அமைச்சரானபஸில் ராஜபக்ஸவோ காணாமல் போனோர் பற்றி கதைக்கவேண்டாமென்கிறார். எங்கள் குடும்பத் தலைவர்களை எங்கள்குடும்ப உறவுகளை பற்றி கதைப்பது சுயநல அரசியல்நோக்கமென்கிறார். இவ்வாறெல்லாம் ஞானோபதேசம்செய்துவிட்டு இரவு ஆட்களை விட்டுத்தாக்குகிறார்கள்.இதுவோ அவர்களது ஜனநாயக அரசியல் என கேட்கவிரும்புகின்றேன். நாங்கள் எவருமே காணாமல் போனவர்களிற்காக தேர்தல்காலத்தில் மட்டும் குரல் எழுப்பவில்லை. யாழ்.குடாநாடுபடையினரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட 1996 ம்ஆண…

  3. கிளிநொச்சியில் யாழ்தேவி

  4. இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செந்தூரனை நாடு கடத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு எடுத்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் செந்தூரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செந்தூரனை நாடு கடத்துவது குறித்து எடுக்கப்பட்ட முடிவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். இதேபோல் ஐகோர்ட்டில் செந்தூரன் மற்றொரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “இலங்கைக்கு என்னை நாடு கடத்துவது குறித்து தமிழக அரசு 3.7.2013 அன்று அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அதனை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் செந்தூரன் மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் ராஜேஸ்வரன், ஆறுமுகசாமி ஆகியோர் கொண்ட அமர்வில் நடைபெற்றது. அப்போது, செந்தூரனை …

  5. இலங்கையில் நடக்கவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை கண்காணிக்க காமன்வெல்த் பார்வையாளர்களும் அங்கு செல்லவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமைச் செயலர் கமலேஸ் சர்மா கூறியுள்ளார் . அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான கென்யாவைச் சேர்ந்த ஸ்டீபன் கலொன்சோ முஸ்யோகா இந்தக் குழுவுக்கு தலைமை தாங்குவார். அனைத்தும் தேர்தல் நடைமுறைகளுக்குள் நடக்கின்றனவா என்பதை இந்த பார்வையாளர் குழு பார்வையிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குழுவில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண முன்னாள் தேர்தல் அதிகாரியான ஜென்னி மக்முல்லன், வங்கதேசத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான டாக்டர். சம்சுல் குடா மற்றும் செயிண்ட் லூசியாவின், கரீபியன் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைப்பின் செயலர் எஸ்ஸமின் பில்பேர்ட் ஆகியோ…

  6. மஹிந்த ராஜபக்ஷ மன்னார் சென்று அங்கு தேர்தலில் ஆளும் தரப்பிற்கு ஆதரவு வழங்கும் முகமாக தேர்தல் பரப்புரைக்கூட்டத்தை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள குறித்த தேர்தல் பரப்புரைக்கூட்டத்திற்கு மஹிந்த கலந்து கொள்ளவுள்ள நிலையில் நேற்று மதியம் முதல் மன்னார் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்காண இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்திற்கு செல்லும் சகல பாதைகளிலும் விசேட விதமான வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனணி சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற 8 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து பரப்புரையை மஹிந்த ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெ…

  7. நாட்டை துண்டாடுவதற்கு பிரபாகரனுக்கு இடம்கொடுக்கப்படாதது போல வேறு எந்த தரப்பினருக்கும் இடமளிக்கப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; 'இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஆட்சி நடத்த ஏனைய மாகாணங்களுக்கு வழங்கிய அதிகாரங்களே இந்த மாகாணத்திற்கும் (வட மாகாணம்) வழங்கியுள்ளோம். இன்று சிலரது தேர்தல் விஞ்ஞாபனங்களை எடுத்துப் பார்க்கும்போது நான்கு வருடங்களுக்கு முன் இருந்த கோரிக்கைகளே மீண்டும் விடுக்கப்படுகிறது. அவர்களுக்கு நான் விசேடமாக ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நாட்டை துண்டு துண்டாக பிரிக்க பிரபாக…

  8. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை தேர்தலிற்கான பெண் வேட்பாளரும் விடுதலைப்புலிகளது திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்து காணாமல் போயுள்ள எழிலனினது மனைவியுமான அனந்தி தாக்குதல் முயற்சி ஒன்றிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளார். வழமை போன்று பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு விட்டு சுழிபுரத்திலுள்ள தனது வதிவிடத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போதே யாழ்.நகரின் ஜந்து சந்தியில் வைத்து இன்றிரவு அவர் தாக்கப்பட்டுள்ளார். தமது வாகனத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த படையினரது பாதுகாப்பு வாகனமொன்று தங்களது வாகத்தினை தாண்டிச்சென்ற சில நொடிகளில் அதனை பின்தொடர்ந்து சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளிலிருந்தே கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்ப…

  9. 13ம் திருத்தச் சட்டத்தின் நன்மைகளை கூட்டமைப்பினால் வழங்க முடியாது – தவராசா 10 செப்டம்பர் 2013 13ம் திருத்தச் சட்டத்தின் நன்மைகளை கூட்டமைப்பினால் வழங்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டினாலும் மக்களுக்கு நன்மைகளை வழங்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈ.பி.டி.பி. கட்சி அரசாங்கத்தின் வெற்றிக்காக ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி கட்சியினால் மட்டுமே மாகாணசபை முறைமை மற்றும் 13ம் திருத்தச் சட்டத்தின் நன்மைகளை மக்களுக்கு வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்…

  10. அமைச்சர் ரவூப் ஹக்கீமை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்க வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அமைச்சராக பதவியேற்ற தினத்தில் இருந்து பெற்றுக் கொடுத்த முஸ்லிம் பதவி உயர்வுகளின் எண்ணிக்கைகளை வெளியிடுவேன் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அனைத்து விடயங்களிலும் தனித்து செயற்பட முயற்சிக்கும் முஸ்லிம் பழைமைவாதிகள் உணவுகளில் கூட தனித்து செயற்பட முயற்சித்துள்ளதுடன், இறுதியாக ஹலாலை முற்றாக அகற்றும் வரை சாகும் வரையான உண்ணாவிரதத்திற்கு தமது அமைப்பு ஈடுபடுவதாக தேரர் மேலும் தெரிவித்தார். இந்த நாட்டில் முஸ்லிம் பழைமைவாதம் என்ற ஒன்று இல்லையெனவும் த…

  11. வடமாகாண சபை தேர்தல் குறித்து மக்கள் மத்தியில் தமிழ் கூட்டமைப்பு பிழையாக வழி நடத்திவருகின்றது. கிழக்கு மாகாண சபையின் ஆட்சி ஆளும் அரசாங்கத்திடம் இருக்கின்றது. அதே போன்று தான் வட மாகாணத்தின் ஆட்சியினையும் அரசாங்கம் பெறுகின்றபோது சமாந்தரமான அபிவிருத்திகளை இலகுவாக செய்ய முடியும் என்று வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று காலை ஜனாதிபதி கலந்து கொண்ட ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றுகையில்; போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் துன்பப்படும் போது அப்பாவ…

  12. சத்துருக்கொண்டான் படுகொலையின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்படுகிறது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் அரசுத்தலைவர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார். கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என …

  13. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பிரதேச அபிவிருத்திக்கும் என சர்வதேச நாடுகளால் வழங்கப்பட்ட அன்பளிப்புப் பொருள்களும், 2012ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான விவசாய உபகரணங்களும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அரச களஞ்சியசாலைகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அமைச்சர்கள் இப்போது வழங்க ஆரம் பித்துவிட்டனர். இன்னும் சில நாள்களில் ஜனாதிபதியும் இந்தப் பொருள்களை ஏதோ தாமே கொடுப் பது போல் வழங்கி வாக்குப் பிச்சை கேட்பார். இதை மக் கள் நன்கறிவர். இவ்வாறு தெரிவித்தார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். தென்மராட்சியில் இடம் பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உர…

  14. சிறீலங்கா மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன். இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வந்திருந்தார். அதன்படி நேற்று ராமேசுவரம் விவேகானந்தர் மடம் அருகில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு கலந்து கொள்வதற்காக சீனித்தம்பி யோகேஸ்வரன் வந்தார். ஊர்வலம் தொடங்கும் போது அதில் பங்கேற்க வந்த சீனித்தம்பி யோகேஸ்வரனை ராமேசுவரம் டி.எஸ்.பி. மோகன்ராஜ், ஊர்வலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கு மறுத்து விட்டார். இதனை தொடர்ந்து அவர் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது அங்கு வெளியில் நின்றிருந்த பாதுகாப்பு போலீசார் முதலில் கோவிலுக்கு செல்ல அவருக்கு…

  15. கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து ஒன்று இன்று அதிகாலை மரதன்கடவல பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளது. இரும்பு கம்பிகளை எடுத்துச் சென்ற வன்முறை குழு பஸ்சை தாக்கி சேதப்படுத்தியுள்ளது. இதனால் பேரூந்து கண்ணாடிகள் உடைந்து தெறித்ததில் 12 பேர் வரை காயமடைந்துள்ளனர். சேவையில் ஈடுபடும் தவணை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையே இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய குழுவினர் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்த பொலிஸார் அவர்களை கலாவெவ பகுதியில் வைத்து கைது செய்தனர். வாகனத்தில் இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்த இரும்பு கம்பிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்க…

  16. தன்னாட்சி உரிமையில் உறுதியாக உள்ளதை வாக்குகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும் - சித்தார்த்தன் [ புதன்கிழமை, 11 செப்ரெம்பர் 2013, 08:22 GMT ] வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய வெற்றியை அளிப்பதன் மூலம், நாம் ஒரு தோற்றுப்போன இனமல்ல என்பதையும், தன்னாட்சி உரிமையில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர் சிறிலங்கா அரசுக்கும், எம் மீது அக்கறை காட்டுகின்ற நாடுகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு என்று புளொட் சார்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் சங்க கேட்போர் கூடத்தில், கொழும்பில் வாழும், யாழ்.மாட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களுடனான கலந்துரையாடல…

  17. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதாக அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டொனி அபொட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது புதிய பிரதமரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்தியுள்ளார். கடைசி பொதுநலவாய தலைவர்களின் மாநாடு கடந்த 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெற்றது. இந்நிலையில் இது தொடர்பில் இலங்கைக்கு உதவிசெய்யும் பொருட்டு கடைசி மாநாட்டின் ஏற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் ஜூன் மாதம் இங்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=6990

  18. ஆண்டாண்டு வாழ வேண்டும்: நானாட்டானில் சம்பந்தன் 11 செப்டம்பர் 2013 ஆயுதப் போராட்டம் முடி­வ­டைந்து விட்­டது. அது உண்மை ஆனால் நமது போராட்டம் ஆயுதப் போராட்டம் போன்று முடி­வ­டைய முடி­யாது. எமது போராட்டம் ஒரு நியா­ய­மான போராட்டம், நீதி­யான போராட்டம். இந்த மண்ணில் நாம் வாழ வேண்டும். நீங்கள், உங்கள் பிள்­ளைகள், உங்கள் பேரப்­பிள்­ளைகள் ஆணடாண்டு இந்த மண்ணில் வாழ வேண்டும் என்றால் நீங்கள் அர­சாங்­கத்தை ஆத­ரிக்கக் கூடாது. தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் செயற்­பா­டு­களில் ஈடு­படும் போது நீங்கள் அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க மாட்­டீர்கள் என நம்­பு­கின்றேன் என்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்புத் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். மன்னார் மாவட்­டத்தில் நானாட்டான் அடம்பன் பிர­தே­ச…

  19. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரன் பயணம் செய்த வாகனத்தின் மீது நேற்றிரவு யாழ்.நகரப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அனந்தி சசிதரன் பயணம் செய்த வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த இராணுவ வாகனம் ஒன்றுக்குப் பின்னால் வந்த, உந்துருளியில் இருந்தே, கற்கள் வீசப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரைகளை முடித்து விட்டு சுழிபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நேற்றிரவு யாழ். ஐந்து சந்திப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் வந்த மர்மநபர்களால் வீசப்பட்ட கற்கள் அனந்தியின் வாகனத்தின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்திய போதிலும் அவர் எந்தவித காயமுமின்றி தப்பினார். அண்மையில் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்து காணாமற்போன…

  20. தென்மராட்சி கொடிகாமத்தில் தன் மனைவி - மகளை வெட்டிக் கொலை செய்த தந்தை 11 செப்டம்பர் 2013 யாழ்.மாவட்டத்தின் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை இளம் தாயொருவரும் அவரது மகளும் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம் கச்சாய் வீதியிலுள்ள அவர்களது வீட்டிலிருந்தே இவ்விருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். 38 வயதுடைய லோகேந்திரன் ஜெயசோதி மற்றும் மகளான 15 வயதுடைய லோகேந்திரன் நிவேஜினி ஆகிய இருவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொலை சம்பவம் தொடர்பில் தந்தையாரான லோகேந்திரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட குடும்ப பிணக்கே படுகொலைக்கு காரணமென கூறப்படுகின்றது. குறித்த நபர் தனது மனைவியான ஜெயசோதியினை பிரிந்து வாழ்ந்து வந்திருந்ததாக கூறப்படுகின்றது. இ…

  21. தமிழ் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - ரணில் 11 செப்டம்பர் 2013 தமிழ் மக்களின் மனித உரிமைகள்; பாதுகாக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறிப்பாக வடக்க தமிழ் மக்கள் சுய கௌரவத்துடன் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு தெற்கு கடும்போக்குவாதம் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாக அமையப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் எந்தவொரு இனமும், மதமும் தங…

  22. பிரித்தானிய மஹாராணி பங்கேற்காத முதலாவது அமர்வாக கொழும்பு பொதுநலவாய நாடுகள் அமர்வு அமையும் 11 செப்டம்பர் 2013 பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் பங்கேற்காத முதலாவது அமர்வாக, எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரித்தானிய மஹாராணி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தடவையாக மஹாராணி இம்முறை அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என பக்கிங்ஹாம் மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய மஹாரணிக்கு பதிலாக இளவரசர் சார்ள்ஸ் அமர்வுகளில் பங்கேற்க உள்ளார். இதேவேளை, இம்முறை அமர்வுகளில் பங்கேற்கப் போவதாக அவுஸ…

  23. ஐ.நாவின் மனித உரிமைச் சபையில் Liberation மனித உரிமை அமைப்புக்கான பிரதிநிதி, உலகத் தமிழர் பேரவைத் தலைவர் இம்மானுவேல் அடிகளாரும், Lawyer�s Rights Watch Canada அமைப்பினைச் சேர்ந்த கரி ஆனந்தசங்கரி அவர்களும், இலங்கைத்தீவில் தமிழர்கள் சந்தித்து வருகின்ற மனித உரிமை நெருக்கடிகள் குறித்து சுட்டிக்காட்டி உரையாற்றியிருந்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=92582&category=TamilNews&language=tamil

  24. தெற்கில் ராஜபக்ஷ அரசை விரட்டி அடிக்க மக்கள் தெருவில் இறங்க தயாராகவுள்ள நிலையில் வடக்கில் நீங்கள் இந்த அரசுக்கு ஒட்சிசன் வழங்க வேண்டாம் என எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க யாழ். மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக நேற்று மாலை நல்லூர் சங்கிலியன் மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எந்த விதமான அச்சுறுத்தல்களுக்கும் அடி பணியாது வடக்கு மாகாண மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி தான் இந்த மாகாண சபை முறைமையை அறிமுகப்…

  25. அப்பாவி தமிழ்மக்கள் பதைக்க பதைக்க படுகொலை செய்தவர்களை கூண்டில் ஏற்றி பன்னாடு விசாரிக்க வேண்டும் என்பதற்காக ஜெனீவா முன்றலில் முருகதாசன் திடலில் எதிர்வரும் 16ஆம் நாள் அணிதிரள்கின்றார்கள் அனைத்து புலம்பெயர் மக்களும் இதில் கலந்துகொள்ளவேண்டும் இது திருப்பு முனையினை ஏற்படுத்தபோகும் போராட்டம்.. துயரத்தின் கடலில் மூழ்கி தவிக்ககூடிய தமிழர்களை கரையேற்றுவதற்காக உலசமுதாயம் அந்த முயற்சியில் உடனடியாக ஈடுபட்டாக வேண்டும் என்பதற்கா இந்த போராட்டம் ஐ.நா முன்றலில் நடைபெறுகின்றது. இதில் அனைத்து புலம்பெயர் தமிழர்களும் கலந்துகொண்டு எங்கள் குரலினை ஓங்கி ஒலிக்க செய்யவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு அந்த கடமையினை செய்ய எதிர்வரும் 16 ஆம் நாள் ஜெனீவா நகருக்கு வாருங்கள் . ஐ.நா முன்றலில் அலைஅ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.